Monday, 8 September 2014

கத்தி விவகாரத்தில் விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் மோதல் வெடித்தது!

By: Unknown On: 22:28
  • Share The Gag
  • கத்தி படத்தை வரும் தீபாவளி அன்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறனர். இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவல் ஒன்று ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

    இப்படத்தை ஆரம்பித்த போது தயாரிப்பு பணி ஐங்கரன் கையில் தான் இருந்ததாம், ஆனால் அவர்களின் பணக்கஷ்டத்தால் படம் லைகாவிற்கு கைமாறியுள்ளது.

    இந்த விஷயம் சிறிதளவும் விஜய்க்கு தெரியவில்லை, இதை மறைக்க முருகதாஸ்க்கு கூடுதலாகவும் லைகா பணம் கொடுத்துள்ளது.

    தற்போது தலைக்கு மேல் கத்தி வந்ததும் தான், விஜய்யிடம் நடந்ததை எல்லாம் கூற, கோபத்தின் உச்சிக்கு சென்று விட்டாராம் இளைய தளபதி.

    இதன் காரணமாக சமீபத்தில் படப்பிடிப்பில் கூட இருவரும் முகம் கொடுத்து பேசவில்லையாம்.

    பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள்

    By: Unknown On: 21:27
  • Share The Gag
  • பசலை ஒரு கொடிவகைத் தாவரம். இந்த கீரையை வீட்டில், தோட்டத்தில் வளர்க்கலாம். ஆறு அங்குல நீளமுள்ள இதன் கொடித்தண்டை நறுக்கி, வேலி ஓரத்தில் அல்லது மரங்களின் அருகில் நட்டு வைத்தால், விரைவில் துளிர்விட்டு கொடியாக வளரும். பந்தலிலும் படர விட்டு வளர்க்கலாம்.

    கொடிப்பசலைக் கீரையின் இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து, பொடியாக அரிந்து சமைத்து சாப்பிடலாம். இலைகளை அவித்து, வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், உப்பு சேர்த்து கடைந்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

    இதில் புரதம், கொழுப்பு, மாவுப் பொருட்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின், ரைபோபிளாவின், நியாசின், வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளன.

    இக்கீரை உடல் சூட்டை தணித்து, உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். கோடை காலத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால், கோடை நோய்கள் நம்மை அண்டாது.

    ஏதாவது ஒரு வழியில் இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படாது. நன்கு பசி உண்டாகும். இக்கீரையில் இரும்புச்சத்து இருப்பதால் ரத்த விருத்தி ஏற்படும். இதன் இலைகளை அவித்து, பூண்டு, சீரகம், பெருங்காயம், உப்பு, மிளகு சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் குடல் கோளாறுகள் சீராகும்.

    கொஞ்சம் பசலை இலையோடு மாதுளம் பிஞ்சை வைத்து அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு வீதம், மூன்று வேளையும் சாப்பிட்டு வர சீதபேதி நன்கு குணமாகும். இதன் இலையுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து அரைத்து வேக வைத்துச் சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு மாறும், குரல் வளம் பெறும்.

    மேலும் இக்கீரையில் `வைட்டமின் சி' சத்து உள்ளதால் கண்பார்வை அதிகரிக்கும். இக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர காமம் அதிகரிக்கும். ஆண், பெண் இருவருக்கும் உள்ள சாதாரண மலட்டுத் தன்மையை நீக்கும் ஆற்றலும் கொண்டது. சளித் தொல்லை உள்ளவர்கள் இக்கீரையை தவிர்க்கவும்.

    கடந்த 2 மாத தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட்!

    By: Unknown On: 20:16
  • Share The Gag
  • கோலிவுட்டிற்கு இந்த வருடம் ஆரம்பமே தலதளபதி படங்களின் ஹிட் வரிசையில் தொடங்கியது. அதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் நடிப்பில் கோச்சடையான் வெளிவந்து ஓரளவு பாக்ஸ் ஆபிஸை நிரப்பியது.

    அதிலும் குறிப்பாக கடந்த 2 மாதங்களில் பல படங்கள் திரைக்கு வந்துள்ளன. அதில் தனுஷ், சூர்யா போன்ற பெரிய படங்களும் அடங்கும். இந்த படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் இதோ உங்களுக்காக..
    1) வேலையில்லா பட்டதாரி - ரூ 6.64 கோடி
    2) அஞ்சான் - ரூ 4.74 கோடி
    3) ஜிகர்தண்டா -ரூ 2.94 கோடி
    4) கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ரூ 83 லட்சம்
    5) இரும்பு குதிரை - ரூ 76 லட்சம்

    கூந்தல் உதிர்ந்து தலை வழுக்கை ஆகிவிட்டதா? இதை படிங்க...

    By: Unknown On: 19:35
  • Share The Gag
  • அதிகமாக இருக்கிறது. வழுக்கை வந்துவிட்டால் அந்த இடத்தில் மறுபடியும் கூந்தல் வளராது என்று நினைப்பது தவறு. தலையில் வழுக்கை ஏற்படுவதற்கு காரணமே போதிய இரத்த ஓட்டம் இல்லாததே ஆகும். கூந்தல் பெரும்பாலும் உதிர்வதற்கு புரதச் சத்து குறைவு, சரியான பராமரிப்பு இல்லாததும் முக்கிய காரணங்களாகும். கூந்தலானது படிப்படியாக உதிர்ந்து நாளடைவில் தலையானது வழுக்கை ஆகிறது. இதற்கு வழுக்கை ஏற்பட்ட இடத்தில் இயற்கை முறையிலான மருந்துகளை தடவினாலே கூந்தலானது வளரும் என்கின்றனர் நிபுணர்கள் அவர்களின் ஆலோசனையை படியுங்களேன்.

    வலுக்கையை போக்க...

    எலுமிச்சை-மிளகு விதைகள் : இது வழுக்கை ஏற்பட்ட இடத்தில் முடி வளர்வதற்கு ஏற்ற ஒரு சிறந்த இயற்கை மருத்துவம். அதற்கு முதலில் எலுமிச்சை விதைகளையும், மிளகு விதைகளையும் நன்கு அரைத்து, நீரில் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அதனை வழுக்கை ஏற்பட்ட இடத்தில் தடவ வேண்டும். அப்போது சற்று எரிச்சலாகத் தான் இருக்கும். ஆனால் அது வழுக்கை உள்ள இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, அங்கு கூந்தலை வளரச் செய்யும். இதனை வாரத்தில் இரண்டு நாட்கள் செய்ய வேண்டும். இதனால் கூந்தலானது வழுக்கை ஏற்பட்ட இடத்தில் வளரும்.

    அதிமதுரம் : அதிமதுரத்தை நன்கு அரைத்து, அதோடு பால் மற்றும் குங்குமப்பூவைக் கலந்து வழுக்கை ஏற்பட்ட இடத்தில் தடவ வேண்டும். அதனை இரவில் படுக்கும் முன் தடவிக் கொண்டு படுக்க வேண்டும். பிறகு காலையில் எழுந்து அதனை குளிர்ந்த தண்ணீரில் அலசி விடலாம்.

    வெங்காயம் : வெங்காயமும் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதனை வழுக்கை ஏற்பட்ட இடத்தில் காலை மற்றும் மாலையில் சிவப்பு நிறத்தில் ஆகும் வரை தேய்க்க வேண்டும். பிறகு அந்த இடத்தில் தேனைத் தொட்டு தேய்க்க வேண்டும்.

    துவரை : துவரம் பருப்பை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து தினமும் வழுக்கை ஏற்பட்ட இடத்தில் தடவி ஊறவைத்து குளிக்கலாம். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

    ஆரோக்கியமாக கூந்தல் வளர...

    1. தேங்காய் எண்ணெயை எலுமிச்சை சாற்றில் கலந்து, கூந்தலுக்கு தடவி குளித்து வந்தால், கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம். மேலும் கூந்தலும் நன்கு வளரும்.

    2. உளுந்து மற்றும் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து பேஸ்ட் போல செய்து தலைக்கு தடவி ஊறவைத்து குளிக்கலாம். இதனால் கூந்தலானது நீளமாக வளரும்.

    3. ஆமணக்கெண்ணெயை தினமும் கூந்தலுக்கு தடவ வேண்டும். இதனால் கூந்தலானது அழகாக, அடர்த்தியாக வளரும்.

    சமூக வலைத்தளங்களில் தொடரும் விஜய்யின் ஆதிக்கம்!

    By: Unknown On: 18:50
  • Share The Gag
  • விஜய்யின் ரசிகர் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. அதிலும் குறிப்பாக பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

    சமீபத்தில் தான் அவரது பேஸ்புக் பக்கம் 2 மில்லியன் லைக்ஸ் பெற்றது, தற்போது டுவிட்டரிலும் ஒரு சாதனை படைத்துள்ளது.

    விஜய் அவர்களின் கண்காணிப்பில் இயங்கும் அவரது டுவிட்டர் பக்கம் 1 லட்சம் பாலோவர்ஸை எட்டியுள்ளது. இதற்கு அந்த பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆண்மைக் குறைபாட்டை போக்கும் சக்தி கொண்ட தயிர் சாதம்..

    By: Unknown On: 17:12
  • Share The Gag
  •  புளிப்பை ரொம்ப சேர்த்துக்காதே… உடம்புக்கு ஆகாது!” என்று பாட்டி காலத்தில் இருந்து நம் அம்மாக்கள் சொல்லி வரும் அட்வைஸ்.
    ஆனால், பாலை, தயிராக்கிச் சாப்பிடும்போது அதே புளிப்பு, நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது ஆச்சர்யம் தானே.
    நம்மில் பலரும் தயிர்சாதம் என்றாலே, ஏதோ ஏழைகளின் உணவு என்பதுபோல, இளக்காரமாக நினைக்கிறோம்.
    அதிலும் இனிவரும் அடைமழைக் காலத்தில், ”இந்த க்ளை மேட்ல போய் தயிர்சாதம் சாப்பிடு வாங்களா?” என்று தோள் குலுக்கித் தவிர்த்து விடுவோம்.

    ஆனால், அதில் நம் உடலுக்குத் தேவை யான முக்கியமான சத்துக்கள் இருக்கின்றன.
    அதை ‘ப்ரோபயாடிக்’ உணவு என்று சொல்வோம்.” இவ் வாறு,
    ப்ரோபயாடிக் உணவின் மகத்துவத்தை விளக்குகிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள் காந்தி மதி மற்றும் பவானி.

    ப்ரோபயாடிக் உணவு என்றால் என்ன?

    ”இரண்டு வகையான நுண்ணுயிரிகள் (மைக்ரோ ஆர்கா னிசம்ஸ்) நம் உடலில் உள்ளன.
    ஒருவகை நுண்ணுயிரி யானது, நம் உடல் நலத்துக்கும், உயிர் வாழ்தலுக்கும் அவசியம்.
    மற்றொரு வகை நுண்கிருமி, நோய்களை ஏற்படுத்தி உடலுக்குக் கெடுதல் விளைவிக்கக் கூடியது.
    இப்படி நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை ப்ரோபயாடிக் என்று சொல்வோம்.
    நம் உடல் நலத்தை மேம்படுத்த உதவும் பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற நுண்ணுயிரிகள் தயிர், இட்லிமாவு போன்ற நம்முடைய உணவுகளில் அதிக அளவில் காணப்படும். இவற்றையே ப்ரோபயாடிக் உணவு என்கிறோம்.

    நம்முடைய செரிமான மண்டலத்தில் மட்டும் 500 வகையான பாக்டீரியா உள்ளன.
    இவை உணவு செரித்தலுக் குப் பெரிதும் உதவியாக இருப்பதுடன், செரிமான மண்டலத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கும் உதவுகிறது.
    நன்மை தரும் பாக்டீரியா, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
    வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் தன்மையும் நல்ல பாக்டீரியாவுக்கு உண்டு.
    இந்த நன்மை செய்யும் பாக்டீரியா பாதிக்கப்படும் போது, வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்படும்.
    நோய்த் தொற்று, ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போது இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
    ப்ரோபயாடிக் உணவு இயற்கையாக இருப்பது மிகவும் நல்லது.

    பாலை உறைவிட்டு சிலமணி நேரங்கள் கழித் துப் பார்த்தால், தயிராக உறைந்து இருக்கும்.
    இந்தச் செயல்தான், முதல் நாள் அரைத்துவைக்கும் இட்லி மாவை, அடுத்த நாள் காலையில் புளிக்கவைத்து, பொங்கி நுரைத்து வரச்செய்கிறது.
    இதற்குள் தான் ‘பைஃபைடோ’ மற்றும் ‘லாக்டோ’ என்ற நல்ல பாக்டீரியா உருவாகி இருக்கும்.
    இதைத் தவிர ப்ரோபயாடிக் என பிராண்ட் செய்து கடைகளில் விற்கப்படும் பானங்களில் கூட நன்மை செய்யும் பாக்டீரியா கிடைக்கும்.
    தயிரில் ப்ரோபயாடிக் இருப்பதால், தினமும் உணவில்
    சேர்த்துக்கொள்ளலாம்.

    தயிர், மோர் தவிர, இட்லி, தோசை, ஆப்பம், முளை கட்டிய பீன்ஸ், முட்டைக்கோஸில் உப்பு சேர்த்து ஊறவைத்து எடுப்பது, யோகர்ட் போன்றவை நல்ல ப்ரோபயாடிக் உணவு.

    நன்மைகள்‬:
    வயிற்றுப் பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகள், மந்தம்,
    ஆண்மைப் பிரச்னைகள் போன்றவற்றுக்கு ப்ரோபயாடிக் உணவுகள் மிகவும் நல்லது.
    உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
    இதய நோயைத் தவிர்க்க வல்லது. தாகத்துக்கு ஏற்ற பானம் மோர்.
    இது உடனடியாக உடல் சோர்வை நீக்கி, சக்தி தரும்.
    உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் ப்ரோபயாடிக் உணவு மிகவும் நல்லது.
    கற்றாழையுடன் சேர்த்து ப்ரோபயாடிக் உணவுகளைக் கலந்து தந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
    உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்துவிடும்.
    சமீபத்திய ஆய்வுகள் மூலம் ப்ரோ பயாடிக் உணவுகளில் கான்சரைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.
    கர்ப்பமான பெண்களுக்கு, தயிர் மிகவும் நல்லது.
    நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் இருப்பதால், பிறக்கும் குழந்தைக்கு நல்லது.

    சினிமா உலகில் 17 வருடங்களை கடந்த சூர்யா

    By: Unknown On: 08:18
  • Share The Gag
  • தமிழில் ‘நேருக்கு நேர்’ படம் மூலம் அறிமுகமானவர் சூர்யா. இப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்திருந்தார் சூர்யா.  இப்படத்தை மணிரத்னம் தயாரித்திருந்தார். இயக்குனர் வஸந்த், சூர்யாவை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். இப்படம் 1997-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யா, நடித்த முதல் படத்திலேயே சில நெகட்டிவ்வான கருத்துக்கள் தான் முதலில் வந்தன. பிறகு சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த ‘நந்தா’ படம் இவருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.

    அதன்பிறகு வெளிவந்த ‘பிதாமகன்’, மௌனம் பேசியதே’ ஆகிய படங்கள் நடிப்பில் முதிர்ச்சியடைந்தவராகவும் தேர்ச்சியடைந்தவராகவும் சூர்யாவுக்கு அடையாளம் கொடுத்தது. படத்துக்குப் படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கிய சூர்யாவிற்கு கவுதம் மேனன் இயக்கிய ‘காக்க காக்க’ படம் சிறந்த படமாக அமைந்தது. இதில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். மேலும் கவுதம் இயக்கத்தில் வாரணம் ஆயிரம் படத்தில் தன் உடலை வருத்தி சிக்ஸ் பேக்கிலும் வயதான கதாபாத்திரத்திலும் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

    மேலும் ஹரி இயக்கத்தில் வெளி வந்த படங்களான ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்கள் ஆக்‌ஷன் ஹீரோவிற்கான அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தது. மேலும் அதிக வசூலிலும் சாதனை படைத்தது. அயன் படத்தில் பல கெட்-அப்களிலும், கஜினி படத்தில் மொட்டை, பேரரழகன் படத்தில் கூன் விழுந்த மனிதன், ஏழாம் அறிவு படத்தில் போதி தர்மன், மாற்றான் படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் என வித்தியாசமான கெட்-அப்களில் நடித்துள்ளார்.

    சமீபத்தில் வெளியான அஞ்சான் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது வெங்கட் பிரபு இயக்கிவரும் ‘மாஸ்’ படத்தில் நடித்து வரும் சூர்யா, இதுவரை 30 படங்களில் நடித்து 17 ஆண்டுகளை கடந்துள்ளார்.

    தொப்பை குறைக்க உதவும் அன்னாசிப்பழம்..!

    By: Unknown On: 07:08
  • Share The Gag
  • எல்லோரும் விரும்பி உண்ணக் கூடிய பழம் அன்னாசிப்பழம் . பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. இப்போது எல்லா நாடுகளிலும் உற்பத்தி ஆகிறது .

    அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் இரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது .

    எல்லா பழங்களிலுமே இயற்கையாகவே அதிக சக்தியளிக்கும் தன்மை உண்டு.
    100 கிராம் அன்னாசி பழத்தில் 88 சதவீதம் ஈரப்பதம் 0.6 சதவீதம் புரதம், 10.8 சதவீதம் மாவுச்சத்து, 17 சதவீதம் கொழுப்புச்சத்து, 63 மில்லிகிராம் விட்டமின் மற்றும் கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புகளும் அடங்கியுள்ளது. அன்னாசிப் பழத்தில் உள்ள புரோமெலினிக்கு செரிமான சக்தி உண்டு

    நல்ல குரல் வளம் பெறவும், தொண்டைப்புண், தொண்டைக்குள் வளரும் சதை குணமடையவும், அன்னாசிப் பழச்சாறு மிகவும் பயனுடையதாகும். இச்சாற்றால் நன்கு வாயை கொப்பளித்தால் தொண்டை அழற்சி நோயில் இருந்து விடுபடலாம்.இரத்தசோகை ,மஞ்சள்காமாலை, வயிற்றுவலி, இதய வலி ஆகிய நோய்களையும் குணப்படுத்தும் தன்மையும் இப்பழத்திற்கு இருக்கின்றது என்றால் பாருங்களேன் இதன் சக்தியை .

    அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம்,அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை இருக்காது .இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.....

    தேகத்தில் போதுமான இரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்து . நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

    இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அதன் பயன்களை நீங்களே அறிவீர்கள் .

    அன்னாசிப் பழத்தில் ஜாம் , ஜூஸ், வற்றல் என்பன தயாரிக்கப்படுகிறது . அன்னாசி பாயாசம் ரொம்பவும் ருசியாக இருக்கும் . அன்னாசி பழம் சப்பிடாதோர் ஒருமுறை சாப்பிட்டு தான் பாருங்களேன் .