Thursday, 31 July 2014

சுக‌ப்பிரசவத்திற்கான குறிப்புகள்…!

By: Unknown On: 23:19
  • Share The Gag
  • காரமான உணவு உண்பது சுகப்பிரசவத்தை எளிதாக்குகிறது. ஆனால் இது போன்ற உணவை சாப்பிடுவதன் மூலம் குமட்டல் அல்லது நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் காரமான உணவை சாப்பிடும் முறையை தவிர்க்கவும்.

    தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்கவும்.அவ்வாறு அதிகமாக தண்ணீரை குடிப்பது கருப்பையில் நீரை தக்கவைத்து கொள்கிறது.

    அன்னாசி, பப்பாளி, மாம்பழம் போன்ற பழங்களை சாப்பிட வேண்டும். இவற்றில் ப்ரோமிலெய்ன் அதிகமாக இருக்கிறது, இவை கருப்பை வாயில் ஏற்படும் பாதிப்பை நீக்கி மென்மையாக்குகிறது.

    தினமும் சில சிறிய உடற்பயிற்சிகளை செய்யவும். உடற்பயிற்சி செய்யாதவர்கள்,தினமும் படிகட்டுகளில் அரை மணிநேரம் ஏறி இறங்கலாம்.

    தினமும் காலையிலும் மாலையிலும் நடக்கவும். இவ்வாறு செய்வதால் உடல் சீரான நிலையுடனும் நெகிழும் தன்மையோடு மாறுவதால் சுகப் பிரசவம் எளிதாக இருக்கும்.

    உங்களை எப்போதும் மனஅழுத்தமில்லாமல் சந்தோஷத்தோடு வைத்துக் கொள்ளவும். பிடித்த பாடல்களைக் கேட்கலாம்.

    மாதுளை பழத்தை தினமும் சாப்பிடவும். இது உங்கள் உடம்பில் மற்றும் உங்கள் குழந்தையின் உடம்பில் உள்ள இரத்த அணுக்களை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் மாதுளத்தை சாப்பிடுவதால் உங்கள் குழந்தை சிவப்பாகவும் அழகாகவும் பிறக்கும்.

    7 மாதத்திற்கு பிறகு பாலில் சில பூண்டுகளைப் போட்டு கொதிக்க வைத்து குடிக்கவும்.

    தினமும் தூங்கவதற்கு முன் இளஞ்சூடான நீரில் குளிக்கவும். இவ்வாறு குளிப்பதால் மனஅழுத்தம் மற்றும் உடல் சோர்வுகள் நீங்கும்.

    இவ்வாறு செய்வதன் மூலம் சுகப்பிரசவத்தில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்று எடுக்கலாம்.

    சின்னச் சின்ன தடுமாற்றங்கள்…யோசித்துப்பாருங்கள்..!

    By: Unknown On: 22:35
  • Share The Gag
  •      பல அனுபவங்களைக் கொண்டதுதான் வாழ்க்கை. சின்னச் சின்ன தடுமாற்றங்களால் கூட பல நேரங்களில் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடும்.

    சாவியை மறந்து வைத்துவிட்டு செல்வது, சீப்பை தலையில் வைத்துக் கொண்டு தேடுவது போன்றவைதான் சின்னச் சின்ன தடுமாற்றங்கள். இதை கவனக் குறைவு என்றும் சொல்லலாம். எதையும் முறையாக செய்து பழகாதவர்களுக்கும், ஞாபகமறதி கொண்டவர்களுக்கும் இதுபோன்ற தடுமாற்றங்கள் நிறைய ஏற்படும்.

    குடும்பத்தில் பலரும் புழங்கும் சூழல் இருப்பதாலும் பல தடுமாற்றங்கள் ஏற்படும். அதாவது நீங்கள் பயன்படுத்தும் பொருளை மனைவியோ, குழந்தைகளோ இடம் மாற்றி வைத்துவிட்டாலும் குழப்பமும், தடுமாற்றமும் வரும்.

    இப்படி சின்னச் சின்ன தடுமாற்றங்களால் ஏற்படும் இழப்புகள் சாதாரணமானவை அல்ல. பர்ஸை மறந்துவிட்டு பஸ் பயணம் கிளம்பினால் சிக்கல் தானே! பள்ளிக்கு சென்ற பிறகு `ஐடென்டி கார்டு’ இல்லாவிட்டால் தண்டனை கொடுப்பார்கள் தானே, இப்படித்தான் சின்னச் சின்னத் தடுமாற்றங்கள் அதைத் தொடர்ந்து சில பிரச்சினைகளையும், இழப்புகளையும் தந்துவிடும்.

    அது சில நேரங்களில் பெரிய இழப்பாகவும் இருக்கும். வேலைக்கு நேர்முகத் தேர்வுக்கு சென்ற இடத்தில் `ஒரிஜினல்’ சான்றிதழ் கொண்டு செல்ல மறந்ததால் கிடைக்க இருந்த வேலையை இழந்தவர்கள் உண்டு. தெரியாத இடத்தில் பணம், சான்றிதழை தொலைத்துவிட்டு தடுமாறியவர்களும் உண்டு.இப்படி தடுமாற்றங்கள் வராமல் இருப்பதற்கு சிறந்த வழி, சீராக செயல்படுவதுதான். அதாவது செல்போன், ஐ.டி. கார்டு, பைக் சாவி போன்ற சின்னச் சின்ன பொருட்கள் யாவற்றையும் ஒரே இடத்தில் வைத்துப் புழங்குவது எதையும் மறக்காமல் எடுத்துச் செல்ல உதவியாக இருக்கும்.

    குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு வேலையை முடிக்காவிட்டாலும் அது அடுத்த வேலையில் தாமதத்தையும், தடுமாற்றத்தையும் தரும். அப்புறம் இன்னொரு விஷயம், இப்படி ஒரு வேலையை செய்து முடிக்காததால் ஏற்படும் மனஅழுத்தத்தைப்போல் வேறு பிரச்சினை எதுவுமில்லை. அதாவது ஒரு வேலையை முடிக்காவிட்டால் அது தொடர்ச்சியாக வரும் அடுத்த வேலையில் எதிரொலிக்கும். இடையில் புகும் நபர்களின் மீது எரிச்சலைக் கொட்ட வைக்கும். அதனால் வேலையையும், நன்மதிப்பையும் பாதிக்கும். கோபம், மன அழுத்தம் போன்றவற்றையும் கொண்டு வந்துவிடும். எனவே எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்யுங்கள். ஞாபகமறதி, தடுமாற்றங்களை தவிர்த்திடுங்கள்!

    இனி எந்த படத்திலும் ஆபாச காட்சிகள் இருக்காது! தனிக்கை குழு அதிரடி!

    By: Unknown On: 21:44
  • Share The Gag
  • தமிழக மக்களுக்கு இருக்கும் பெரிய பொழுதுபோக்கு சினிமா தான், ஆனால் இன்றைய கால கட்டத்தில் தியேட்டரில் வந்து படம் பார்க்கும் குடும்பங்கள் குறைவு.
    அப்படியே வந்தாலும் தற்போது வரும் பல படங்களை குழந்தைகளோடு பார்க்க முடியுமா என்றால் கேள்விக்குறி தான். இது குறித்து மத்திய தணிக்கை குழு முதன்மை செயல் அதிகாரி ராகேஷ் குமார் ’திரைப்படங்களில் ஆபாச காட்சிகள், வசனங்களை முற்றிலும் நீக்க முடிவு செய்திருக்கிறோம். குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தயவுதாட்சண்யமின்றி நீக்கப்படும்.
    வசனங்களை மௌனமாக்கினாலும், காட்சிகளை மங்கலாக்கினாலும் படம் பார்க்கும் ஆடியன்சுக்கு அது புரிந்து விடுகிறது. அதனால் இனி மௌனமாக்கல், மறைத்தல் இன்றி நேரடியாக காட்சிகளை நீக்க இருக்கிறோம். அப்படி நீக்கினால் மட்டுமே யு சான்றிதழ் வழங்கப்படும். ’ என்று அதிரடியாக கூறினார்.
    - See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/106841/#sthash.xmt4I0Gu.dpuf
    தமிழக மக்களுக்கு இருக்கும் பெரிய பொழுதுபோக்கு சினிமா தான், ஆனால் இன்றைய கால கட்டத்தில் தியேட்டரில் வந்து படம் பார்க்கும் குடும்பங்கள் குறைவு.

    அப்படியே வந்தாலும் தற்போது வரும் பல படங்களை குழந்தைகளோடு பார்க்க முடியுமா என்றால் கேள்விக்குறி தான். இது குறித்து மத்திய தணிக்கை குழு முதன்மை செயல் அதிகாரி ராகேஷ் குமார் ’திரைப்படங்களில் ஆபாச காட்சிகள், வசனங்களை முற்றிலும் நீக்க முடிவு செய்திருக்கிறோம். குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தயவுதாட்சண்யமின்றி நீக்கப்படும்.

    வசனங்களை மௌனமாக்கினாலும், காட்சிகளை மங்கலாக்கினாலும் படம் பார்க்கும் ஆடியன்சுக்கு அது புரிந்து விடுகிறது. அதனால் இனி மௌனமாக்கல், மறைத்தல் இன்றி நேரடியாக காட்சிகளை நீக்க இருக்கிறோம். அப்படி நீக்கினால் மட்டுமே யு சான்றிதழ் வழங்கப்படும். ’ என்று அதிரடியாக கூறினார்.

    நாள் முழுவதும் ஏசியில் இருப்பவர்களா? இதோ பிரச்சனைகள்..!

    By: Unknown On: 21:08
  • Share The Gag
  • பலர் தங்கள் வீடுகளில் ஏசிக்களை அமைத்து, வீட்டின் சுற்றுச்சூழலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கின்றனர்.

    அதுமட்டுமின்றி, தற்போது பெரும்பாலான அலுவலகங்களில் ஏசிக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி நாள் முழுவதும் ஏசியில் இருந்தால், நன்கு குளிர்ச்சியாக இருந்தாலும், அதனால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

    ஆம், ஏசியினால் நல்ல குளிர்ச்சி கிடைத்தாலும், அதனால் பல பிரச்சனைகளை நாம் சந்திப்போம்.

    இதோ நாம் சந்திக்கும் பிரச்சனைகள்,

    நுரையீரல் பாதிப்பு

    ஏசியில் இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் நுரையீரல் பாதிப்பு. ஏனெனில் திடீரென்று வெப்பநிலை மாறுவதால், அது நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

    சரும பாதிப்பு

    அதிக நேரம் ஏசியில் இருந்தால், அது சருமத்தில் வறட்சியை ஏற்படுத்துவதுடன், சளி சவ்வுகளிலும் வறட்சியை ஏற்படுத்திவிடும்.

    சுவாசக் கோளாறு

    மற்றொரு பிரச்சனை என்றால், சுத்தமான காற்றினை சுவாசிக்க முடியாமல் போவதுடன், மிகவும் குறைவான காற்று சுழற்சியினால், சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.

    அலர்ஜி

    ஏசி அறையில் சுற்றும் தூசிகள் மற்றும் பூஞ்சைகள் இருப்பதால், அவை அலர்ஜிகளை ஏற்படுத்தி, தும்மலை அதிகரிக்கும்.

    எரிச்சல்

    ஏசியினால் சருமத்தில் மட்டுமின்றி, தொண்டையிலும் அரிப்புடன் கூடிய எரிச்சல்கள் ஏற்படக்கூடும்.

    சளி

    ஒரே அறையில் காற்றானது அடைக்கப்பட்டிருப்பதால், ஒருவருக்கு சளி வந்தால், அது மற்றவரை எளிதில் தொற்றக்கூடும். அதிலும் வைரஸ் தொற்றுகள் ஏசி அறையில் எளிதில் பரவக்கூடும்.

    கண் பிரச்சனைகள்

    ஏசியினால் விழி வெண்படல அழற்சி மற்றும் கண் இமை அழற்சிகள் ஏற்படக்கூடும். அதிலும் காண்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பவர்களுக்கும் இத்தகைய அழற்சி ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

    தல 55வது படத்தின் பெயர் இதுதானா?

    By: Unknown On: 20:53
  • Share The Gag
  • நாளுக்கு நாள் தல பற்றியும், தலயின் 55வது படத்தை பற்றியும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

    தற்போது தலயின் 55வது படத்தை பற்றிய ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது கௌதம் மேனன் படத்தில் அஜீத்திற்கு சத்யதேவ் பெயர் என்பதால் படத்திற்கும் அப்பெயரே இருக்கும் என வதந்திகள் வந்தன.

    ஆனால் தற்போது தல படத்திற்கு சத்யா என்று பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதேபெயரில் 1988ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் சத்யா என்ற படம் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.


    உடல் சூட்டைத் தணிக்கும் முருங்கைப்பூ...!

    By: Unknown On: 19:29
  • Share The Gag
  •               முருங்கைப்பூ நமது நாட்டில் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் கிடைக்கக்கூடிய அற்புதமான மருந்து மூலப்பொருளாகும். முருங்கை மரத்தின் இலை, பட்டை, வேர், காய் அனைத்தையுமே ஒவ்வொரு வகையில் மருத்துவச்சிறப்பு பெற்றுத் திகழ்கின்றன. கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டால் முருங்கைப்பூவையும் பிரண்டையையும் வகைக்கு ஒரு படி வீதம் சேகரித்து கொள்ள வேண்டும். சிறு துண்டு தேங்காயை அவற்றுடன் சேர்த்து புட்டு அவிப்பது போல் அவிக்க வேண்டும்.

    பின்னர் இதை பிழிந்து கொடுக்க வயிற்று வலி குணமாகும். நன்கு காய்ச்சிய பசுவின் பாலில் நாலைந்து முருங்கைப் பூக்களைப் போட்டு நாள்தோறும்- சாப்பிட்டு வந்தால் தாது நல்ல புஷ்டி பெறும். முருங்கை பூவுடன் கற்றாலைச்சாறு, பசு வெண்ணெய், ஆகியவற்றை சம அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் மேகநோய் எனப்படும் பெண் சீக்கு குணமாகிவிடும். மேநோய்க்கு வேறொரு பக்குவமும் செய்து சாப்பிடலாம். முருங்கைப்பூவை சாறெடுத்துக்கொள்ள வேண்டும்.

    இந்தச் சாற்றில் அரைக்கால் படி அளவு எடுத்து அதே அளவு நல்லெண்ணெய் கூட்டி நூறு கிராம் அளவுக்கு வெல்லம் சேர்த்து மூன்று நாட்கள் சாப்பிட்டாலே மேகநோய் தணிந்து விடும். உடல் சூட்டினை தணிப்பதற்கு முருங்கைப்பூ நல்ல முறையில் பயன்படும். முருங்கைப்பூவை கஷாயம் முறையில் பக்குவம் செய்து சாப்பிட்டால் உடல்சூடு உடனேயே சரிபடும். பெண்களுக்கு பெரும்பாடு என்னும் உதிரப்போக்கு ஏற்படுவதுண்டு. உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிராபத்து ஏற்படக்கூடும்.

    இதற்கு முருங்கைப்பூ பெரிதும் பயன்படுகிறது. முருங்கைப்பூவை நன்றாக அரைத்து ஒரு தேங்காய் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். பசுவின் பாலும் தேங்காய் பாலும் படிக்கு அரைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் 25 கிராம் வெல்லத்தை கூட்டி எல்லாவற்றையும் சேர்த்து காய்ச்சி இலேகிய பதத்தில் இறக்கிவிடவேண்டும். இந்த லேகியத்தை எலுமிச்சை அளவு எடுத்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிடவேண்டும். இவ்வாறு ஒரு வருடம் சாப்பிட்டால் பெரும்பாடு என்னும் உதிரப்போக்கு குணமாகிவிடும்.

    அழகான போன்சாய் ( bonsai tree care ) மரங்கள் பராமரிப்பது சுலபம்..!

    By: Unknown On: 18:11
  • Share The Gag
  •          போன்சாய் என்பது இயற்கையான மரத்தைப் போலவே சிறியதாக உள்ள மரம். இதனை வீட்டில் அழகிற்காக வளர்க்கலாம். இதனை பராமரிப்பது என்பது மிகவும் கடினமான விஷயமல்ல. நீர் ஊற்றுவது, உரமிடுவது, தொட்டி மாற்றுவது போன்ற ஒரு சில விஷயங்கள் மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது அழகான, ஆரோக்கியமான போன்சாய் மரங்களை வளர்க்கலாம்.

    கோடை காலத்திலும், வசந்த காலத்திலும் போன்சாய் மரங்களை பால்கனி போன்ற இடங்களில் வளர்க்கலாம். அப்பொழுது சூரிய ஒளி செடிகளுக்கு நன்றாக கிடைக்கும். அதேசமயம் குளிர்காலத்தில் வீட்டிற்குள் தெற்குப் பகுதியில் வைத்து வளர்க்கவேண்டும். இல்லையெனில் கிழக்கு அல்லது மேற்குப் பகுதிகளில் வைக்கலாம். வடக்குப் பகுதி ஏற்றதல்ல என்கின்றனர் தோட்டக்கலை நிபுணர்கள். தினசரி போன்சாய் மரங்களுக்கு நான்கு முதல் 6 மணிநேரம் சூரிய ஒளி கிடைக்குமாறு வைக்கவேண்டும்.
           
    நீர் ஊற்றுதல்

    முதலில் நீர் ஊற்றுவது. நீர் ஊற்றுவது என்பது மரத்தில் வகையைப் பொறுத்து மாறுபடும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் நீரூற்ற வேண்டியது இல்லை. நாம் விரலை மண்ணில் விட்டுப் பார்த்தால், ஒரு அரை இன்ச் ஆழம் வரை காய்ந்து போய் இருந்தால் நீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் ஊற்ற மதிய நேரம் ஏற்றதல்ல. காலையிலோ அல்லது மாலை நேரத்திலோ தண்ணீர் ஊற்ற வேண்டும்.

    தண்ணீரை அப்படியே தொட்டியினுள் கொட்டக்கூடாது லேசாக தெளிப்பது போல சிறிது சிறிதாக ஊற்ற வேண்டும். இல்லாவிட்டால், நீரின் வேகத்தில் மண் அடித்து செல்லப்பட்டு விடும். அதே சமயம், நீரானது, எல்லா வேர்களும் நனையும் வகையில், அதிகப்படி நீர் வெளியேறும் ஓட்டை வழியாக வெளியேறும் வரை ஊற்ற வேண்டும். மழை நீரை சேகரித்து வைத்து ஊற்றினால் நல்லது.
       
    உரமிடுதல்

    இயற்கையாக வளரும் மரங்களில் வேர்கள் அதற்கான சத்து கிடைக்கும் இடம் நோக்கி வளர்ந்து கொள்ளும். ஆனால் போன்சாயானது, நாம் சிறு தொட்டியில் வளார்ப்பதால், உரமிடுவது மிக அவசியம். நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் என மூவகை உரங்கள் மரத்துக்கு முக்கியம். நைட்ரஜன் இலை, கிளை வளர்ச்சிக்கும், பாஸ்பரஸ் வேர்களின் ஆரோக்கியத்துக்கும், பொட்டாசியம் பூக்கள் காய்களின் காய்ப்புக்கும் மிக அவசியமானது. நாம் வருடத்தின் எக்காலத்தில் உரமிடுகிறோமோ, அதைப் பொறுத்து, நாம் உரமிடும் கலவை மாறுபடும்.

    இலையுதிர் காலத்தில் நைட்ரஜன் அளவு குறைவாகவும், வசந்த காலத்தில் நைட்ரஜன் அளவு கூடுதலாகவும் இட வேண்டும். வெயில் காலத்தில் சரிவிகிதமாக உரமிட வேண்டும். மரம் சற்று முதிர்ந்து விட்டால், வளர்ச்சிக்கான நைட்ரஜன் விகிதத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் பூப்பூக்கும் பருவத்தில் பொட்டாசியம் அளவைக் கூட்டிக் கொள்ளவேண்டும்.
           
    தொட்டி மாற்றுதல்

    போன்சாய் மரத்திற்கு ஒரு வருடத்திற்கு ஒருமுறை தொட்டி மாற்றுவது அவசியம். தொட்டி மாற்றுவதால், நம் போன்சாய் மரம் சிறியதாகாது, மாறாக, அது புது சத்துக்கள் கிடைக்க உதவுகிறது. ஆரம்பத்தில் வேகமாக வளரும் மரமாக இருந்தால், இரு வருடம், இன்னும் சொல்லப்போனால் ஒரு வருடத்துக்கொரு முறை தொட்டி மாற்ற வேண்டும். வசந்த காலம் ஆரம்பிக்கும் முன் தொட்டி மாற்றிவிட வேண்டும். அப்போ தான் அதனால் ஏதும் சேதம் ஏற்பட்டால் கூட விரைவில் வளர்ந்து விடும். மரத்திற்கு வயதாகி விட்டால் 3 அல்லது 5 வருடத்துக்கொரு முறை மாற்றினால் போதும்.

    தொட்டி மாற்றும் போது, வேர்களில் இருக்கும் மண்ணை லேசாக உதிர்த்து விடவேண்டும். பின்னர் வேறொரு தொட்டியில் மக்கிய உரம், மணல், மற்றும் செம்மண் கலவையில் அதை ஊன்ற வேண்டும். மண் கலவை நீரை நன்கு உறிஞ்சும் தன்மையதாக இருக்க வேண்டும். சிறிது மண்ணை தொட்டியில் போட்டு, பின் அதில் மரத்தை வைத்து, அதன் மேல் மீதி மண்ணைப் போட வேண்டும். மண்ணில் ஊன்றும் முன், அதன் வேர்களை வெட்டிவிட வேண்டும். மிக நீளமான வேர்கள் மற்றும் அழுகிப் போன வேர்களை லேசாக நறுக்கிவிட வேண்டும். தொட்டி மாற்றிய பிறகு, இரு மாதங்களுக்கு, அம்மரத்தை கடுமையான காற்று மற்றும் கடுமையான வெப்பத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்.

    மரங்களை அதிக அளவில் பெரியதாக விடக்கூடாது. அவ்வப்போது நறுக்கிவிடவேண்டும். அப்பொழுதுதான் கண்ணுக்கு அழகான மரம் கிடைக்கும். போன்சாய் மரங்களை பூச்சித்தாக்குதலில் இருந்தும் நோய் தாக்குதலில் இருந்தும் பாதுகாத்து வளர்க்கவேண்டும். இம்முறைகளை பின்பற்றி நாம் பராமரித்தால், எவ்வகை மரத்தை வேண்டுமானால் போன்சாயாக வீடுகளில் வளர்க்கலாம்