Friday, 12 September 2014

பிரச்னைகளுடன் உறங்கச் செல்லுங்கள்! தீர்வுகளுடன் எழுந்து வாருங்கள் !

By: Unknown On: 20:16
  • Share The Gag
  •  என்னங்க இது? தூக்கம் வரலீங்கறதே ஒரு பிரச்னை; அதோடு பல பிரச்னைகளையும் நெனச்சுப் பார்த்து, தூங்கப்போனா தூக்கம் வருங்களா?’ இது பலரது கேள்வி. நியாயமானதுதான்.
    எந்தவிதமான பிரச்னைகளுடன் தூங்கச்செல்வது என்பது மிக முக்கியம். நமது உடல் பலம், மனோசக்தி இரண்டுமே பெரும்பாலான பிரச்னைகளுக்கு சுமுகமான தீர்வுகளைக் கொடுத்துவிடும். இதற்கும் மேலாக, தீர்வுகளே தெரியாத பிரச்னைகள் எல்லோருக்குமே உண்டு. ஒரு சிலவற்றைமற்றவர்களிடம் கூறி, ஆலோசனை பெறலாம். சிலவற்றையாரிடமும் கூறமுடியாது.

    பிரச்னைகள்
    பிரச்னைகள் நிறைந்ததுதான் வாழ்க்கை. பிரச்னைகளைப் பெரிதாக நினைத்துக் கொண்டால், தைரியம் குறைந்து, பயம்வந்து வாழ்க்கை மோசமாகிவிடும். பிரச்னைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம். ஒருவருக்குப் பிரச்னையாக இருப்பது வேறொருவருக்கு பிரச்னையாக இருக்காது.
    ஒருவர் தமது பேச்சாலும், செயல்பாட்டாலும் தமக்கு உருவாக்கிக் கொள்ளும் பிரச்னைகள் ஒருபக்கம். மற்றவர்களாலும், இயற்கையாலும் உண்டாகும் பிரச்னைகள் மறுபக்கம்.
    இவற்றுள் சிறிது எச்சரிக்கையாக விழிப்புநிலையில் இருந்தால், தாமே உண்டாக்கிக் கொள்ளும் பிரச்னைகள் வராமல் காத்துக் கொள்ள முடியும். அதையும் மீறி, பிரச்னைகள் வந்தால், முதலில் அவைகளை ஒப்புக்கொள்ளும் மனநிலை தேவை. அதன்பின் ஆராய்ந்து பார்த்து, என்ன பிரச்னை எனக் கண்டறிந்து, நீக்குவதற்குத் திட்டமிட்டு செயல்பட வேண்டும். அப்பிரச்னை முடிவுக்கு வரும்.

    சேகர் தன் பெற்றோருடன் கோவையிலிருந்து டெல்லிக்கு ரயிலில் செல்கிறான். அவனுக்கு ரயிலில் சைடு லோயர் பெர்த் டிக்கெட் வாங்கியிருந்தனர். தான் நன்றாகத் தூங்க வேண்டுமென்று, மேல் (அப்பர்) பெர்த் பயணியிடம் கேட்டு, இடத்தை மாற்றிக்கொண்டான். இரவுப்பயணம் சுகமாய்க் கழிந்தது. பகல் பயணத்தில் மிகுந்த சிரமப்பட்டான்; தன் பெற்றோரின் உதவியை நாடினான். அவர்களும் அந்தப் பயணியிடம் பக்குவாய் பேசி, பகலில் அவர்கள் மகன் கீழ் பெர்த் இரவில் மேல் பெர்த் என்று பயணம் செய்ய உதவுமாறு ஏற்பாடு செய்தனர். யோசித்தால், இந்த பெர்த் மாற்றமே அவசியமில்லாதது என அறியலாம். இரண்டு நாட்கள் பயணம், கிடைத்த இடத்தை ஏற்றுக்கொள்வது தான் பிரச்னைகளைத் தராது.
    மற்றவர்களாலும், இயற்கையாலும் வரும் பிரச்னைகளுக்குத் தமது அனுபவம், அனுபவசாலிகள், பெரியோர்களது ஆலோசனை ஆகியவற்றின் உதவியால் தகுந்த தீர்வு பெறமுடியும். சில சமயங்களில் ஒரு பிரச்னைக்குப் பல தீர்வுகள் கிடைக்கும். எதை ஏற்றுக்கொள்வது என்று குழப்பமாயிருக்கும். இதுபோன்றபிரச்னைகளை ஆழ்மனதுக்கு அனுப்பிவிட்டால், சரியான தீர்வு கிடைக்கும்.

    நம்மால் தீர்க்கக்கூடியவை, நம்மால் தீர்க்க முடியாதவை என்றவகையில் பிரச்னைகளைப் பிரித்துவிட்டால், மிகச்சுலபமாக அவைகளைக் கையாள முடியும். உதாரணமாக ஊழல் என்பது பெரிய, முக்கிய பிரச்னைதான். தனி ஒருவரால் ஒன்றும் செய்ய முடியாது. நமது கைகளுக்கு அப்பாற்பட்டது என இதை இனம் கண்டு, ஆதரவு மட்டும் தெரிவிப்பதால், நமக்கு பாதிப்பு வராது.

    தூக்கம்
    ஒரு பயிற்சியின்போது, “எதற்காகத் தூங்குகிறோம்” எனக்கேட்டதற்கு, “தூக்கம் வருகிறது; அதனால் தூங்குகிறோம்” என்று பலர் கூறினர்.
    நம் உடல் செல்கள் சோர்வடைந்த தம்மைப் புதுப்பித்துக்கொள்ளவும், சக்தி ஓட்டப் பாதைகளில் (Meridians) உள்ள நரம்புகளைப் பழுது நீக்கவுமே தூக்கம் வருகிறது.
    எவ்வளவு நேரம் தூங்குகிறோம்? அதில் ஆழ்ந்த தூக்கம் எவ்வளவு நேரம், அதிகாலைத்தூக்கம், பகல் நேரத்தூக்கம் எனப் பலவகையாகப் பிரித்து அறிய வேண்டும். பகல் நேரத்தூக்கம், தூக்கமாக இல்லாமல், ஓய்வாக இருப்பது நல்லது. அதிகாலைத் தூக்கம் (4 முதல் 6 மணி) தவிர்க்கப்பட வேண்டும். இரவு 11 மணிமுதல் காலை 3 மணிவரை ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க வேண்டும்.
    தூங்குவதற்கு 2 மணிநேரம் முன்பே இரவு உணவை முடித்திருப்பதும், குறைந்தது 1 மணிநேரம் முன்பே தொலைக்காட்சியை அணைப்பதும் சிறந்தது. நல்ல புத்தகங்கள் படித்து, அந்த நினைவுகளுடன், அல்லது தீர்வு தேவைப்படும் முக்கியமான பிரச்னைகளின் நினைவுகளுடன் தூங்கச் செல்வது ஏற்புடையது.

    கனவுகள்
    “”நமது எண்ணங்கள்தான் கனவுகளாகத் தெரிகின்றன” – இது சிலர் கூற்று;
    “”நம் ஆழ்மனதின் வெளிப்பாடே கனவுகள்”
    - இது ஆராய்ச்சியாளர்களின் முடிவு;
    “”உறக்கத்தில் மனதில் அனுபவம். உருவம், சப்தம், உணர்ச்சி இவற்றின் தொடர்காட்சிகளே கனவுகள்” – இது ஆன்மீகவாதிகளின் அறிவிப்பு.

    பொதுவாக நமது எண்ணங்கள்தான் உறக்கத்திலே காட்சிகளாக வடிவம் பெற்று கனவுகள் என்று பெயர் பெறுகின்றன.
    ‘கனவு என்பது தூக்கத்தில் வருவதல்லÐ உன்னைத் தூங்கவிடாமல் செய்வது’ என்றார் இன்றைய இளைஞர் இயக்கத்தின் நிறுவனர் முன்னாள் பாரத குடியரசுத்தலைவர் திரு. அடஒ அப்துல்கலாம் அவர்கள்.
    ஒரு மனிதனின் சராசரியான வாழும் காலத்தில் 10ல் 1 பங்கு கனவுக்காலமாய் கழிகிறது.
    தினமும் சுமார் 2 மணிநேரம் கனவு காண்கிறோம்.

    ஒரு மணி அல்லது ஒன்றரை மணிநேர இடைவெளியில் 5 முதல் 15 நிமிட நேரம் நீடிக்கும். காட்சிகளைக் கனவாய் காண்கிறோம். அதிகாலைக் கனவுகள் 15 நிமிடங்களுக்கும் அதிக நேரம் நீடிக்கும்.
    ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிக அளவில் கனவுகள் வருகின்றன.
    நேர்மறையானதைவிட எதிர்மறையான காட்சிகளே அதிகம் வருகின்றன (பல பிரச்னைகளில் சிக்கித் தடுமாறுவது, உயிருக்கு பயந்து ஓடுவது போன்றவை).
    Rapid Eye Movement (REM) மிக வேகமான கண் அசைவு கனவை உருவாக்கும். நம் மூளையின் முன்பகுதியும் நடுப்பகுதியும் தூண்டப்படுவதே, கண் அசைவுக்குக் காரணம். பெரும்பாலும் தஉங தூக்கத்தில் தோன்றும் கனவுக்காட்சிகள் மறந்துவிடும். கனவின் மொத்த சதவீதத்தில் இவை 90 சதவிகிதத்திற்கும் கூடுதலாகும்.
    சர்ய் – Rapid Eye Movement (NREM) கண் அசையாமல் தூங்கும்நிலை. இந்நிலையில் காட்சிகளாய் காணும் கனவுகள். காலை எழும்போது நினைவில் நிற்கும்.

    ஆழ்மனம்
    நமது மனத்தை மூன்று நிலைகளாகப் பிரித்து வைத்துள்ளனர்.
    மேல் அல்லது புறமனm Conscious Mind
    நடுமனம் Sub-Conscious Mind
    ஆழ்மனம் Super Conscious Mind
    மேல் மனம் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் செயல்படும்; அவற்றைப் பதிவு செய்யும்.
    நடுமனம் பழக்கத்தின் அடிப்படையில், விருப்பத்தின் அடிப்படையில் செயல்படும்; அவைகளைப் பதிவு செய்யும்.
    ஆழ்மனம் விருப்பு வெறுப்பின்றி, நியாய உணர்வுடன், தெய்வீக சிந்தனையுடன் செயல்படும்; அவைகளைப் பதிவு செய்யும். தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கான சரியான தீர்வைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும்.

    தீர்வுகள்
    ஒரு பூட்டு தயாரிக்கும்போதே, அதற்குப் பல சாவிகள் தயாரிப்பது போல, எந்தப் பிரச்னையும் வரும்போதே, பலவிதமான தீர்வுகளுடனேயே வருகின்றது. நபருக்கு நபர் பிரச்னையா, இல்லையா என்பதும், தீர்வுகளும் வேறுபடும்.
    ஒருவருக்குள்ள பிரச்னை தீர ஒருவிதமான செயல்பாடு தேவையென்றால், வேறொருவருக்கு இதே பிரச்னைக்கு இதே செயல் தீர்வாக அமையாமலும் போக வாய்ப்புண்டு.

    ஒருவருக்குத்தம் 60வது வயதில் கண்பார்வையில் கோளாறு, நண்பர்கள், உறவினர்கள் எனப்பலரும் அக்கறையுடன் பல ஆலோசனைகள் கூறுகின்றனர். எல்லாமே நல்லவைதான். ஆனால், எந்த ஆலோசனையைச் செயல்படுத்துவது என்பதில் இவருக்கு குழப்பம். காரணம் ஆலோசனை கூறிய அனைவருமே உண்மையிலேயே இவர் மீதுள்ள அன்பினால்தான் கூறியுள்ளனர்.

    இந்நிலையில் இவற்றுள் எந்த ஆலோசனைப்படி செயல்பட்டால், பிரச்னை சரியாகும் என்று எண்ணி உறங்கச் செல்ல வேண்டும். தொடர்ந்து எண்ணும்போது சரியானதீர்வு அவருக்கு ஏதோ ஒரு காட்சி மூலம் கனவாகத் தெரியும்.

    தையல்மிஷின் ஊசி

    கையால் தைக்கும் ஊசியில் நூல்கோர்க்கும் துவாரம், கூர்மையான பகுதிக்கு எதிர்ப்பகுதியில் இருக்கும். ஆனால் தையல்மிஷினில் உள்ள ஊசியில் கூர்மையான பகுதியிலேயே நூல்கோர்க்கும் துவாரம் இருக்கும். இதைக்கண்டு பிடித்தவர் பல நாட்களாக முயன்றும் தீர்வு கிடைக்காத நிலையில், இதே நினைவாக உறங்கும்போது, அவர் கண்ட கனவிலிருந்து, கூர்மையான பகுதியில் துவாரமிட்டு ஊசியை வடிவமைத்தார்.

    உறக்கத்தில் கண்ட கனவில் இவர் ஆதிவாசிகள் வாழும் காட்டுப்பகுதிக்குச் சென்றுவிட்டார். அவர்கள் இவரைத் தம் தலைவனிடம் அழைத்துச் செல்கின்றனர். தலைவனோ, இவரை கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் போட்டு, வேகவைத்து, விருந்துண்ணுமாறு ஆணையிட்டான். மகிழ்ச்சியில் ஆதிவாசிகள் கையிலிருந்த ஈட்டி போன்றகூர்மையான ஆயுதத்தால் நிலத்தைத் தொட்டுதொட்டு, இவரைச் சுற்றி ஆடிவந்தனர்.

    கூர்மையான பகுதி கீழே மேலே சென்று வருவதைக் கண்ட இவருக்கு, அந்தப்பகுதியில் துளைபோட்டு நூலைக்கோர்க்கும் எண்ணம் வந்தது. தூக்கம் கலைந்தது. கனவு முடிந்தது. தையல் ஊசி கண்டுபிடிக்கப்பட்டது.
    இதுபோல் பலவற்றைக் கூறலாம்.

    எனவே, எந்தப் பிரச்னையாலும் தீர்வுகள் இல்லாமல் வருவதேயில்லை எனத்திடமாக நம்ப வேண்டும்.
    அந்தத் தீர்வுகளைத் தேடித்தாகத்துடன் உறங்கச் செல்ல வேண்டும்.
    முழுமன ஈடுபாடு, கட்டாயம் தீர்வுகளுடன் உறக்கத்திலிருந்து நம்மை எழுப்பும்.

    முன் பாதி சவ சவ பின் பாதி பர பர - சிகரம் தொடு - திரைவிமர்சனம்!

    By: Unknown On: 19:48
  • Share The Gag
  • ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர் . நகர்ல ஆங்காங்கே ஏ டி எம் செண்ட்டர்களில் கொள்ளை நடக்குது. நவீனமான கொள்ளை.அதாவது ஏ.டி.எம்., செண்ட்டர்ல நம்ம ஏ.டி.எம்., கார்டு பாஸ் வோர்டை திருடி, போலி கார்டு ரெடி பண்ணி ரத்தம் இன்றி, யுத்தம் இன்றி சாத்வீகமா சாமர்த்தியமான திருடல்.

    இந்தப் பிரமாதமான சப்ஜெக்டை எவ்வளவு த்ரில்லிங்கா பண்ணி இருக்கலாம்? ஒரு பரபரப்பான த்ரில்லர் கம் ஆக்ஷன் பேக்கேஜ் கதையை வெச்சுக்கிட்டு பின் பாதியில் பட்டையைக் கிளப்பும் திரைக்கதை வேகத்தை வெச்சுக்கிட்டு எதுக்குதான் இயக்குநர் அவ்வளவு தடுமாறினாரோ முன் பாதியில்?

    ஜில்லாவில் வருவது போல் அப்பாவுக்கு போலீஸ் பதவியில் மகனைப்பார்க்க ஆசை.ஆனா மகனுக்கு அது பிடிக்கலை. காதலிக்கும் போலீஸ் காதலன்னா பிடிக்காது.சம்பந்தமே இல்லாம ஹரித்வார் டூர்ல 4 ரீல் என முன் பாதியில் ஏகப்பட்ட தடுமாற்றங்கள்.

    ஹீரோவா விக்ரம் பிரபு. ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்தவர்.நூல் இழையில் அந்த வெற்றியைத்தக்க வெச்சுக்கிட்டார். கொஞ்சம் ஏமாந்திருந்தா இது ஒரு தோல்விப்படம் ஆகி இருக்கும். ஆனாலும் செம ஹிட் படத்தை சாதா ஹிட் படமாக்கிட்டாங்கன்னு தான் சொல்லனும்.போலீஸ் ஆஃபீசர் கெட்டப்பில்
    எக்ஸ்ட்ரா கம்பீரம் காணோம்.மழு மழு அமுல் பேபி போல் இருக்கார்.

    ஹீரோயினா மோனல் கஜ்ஜர். ஆந்திரா ஸ்வீட் ஆப்பம். மொழு மொழு கன்னங்கள்.பஞ்சு மிட்டாய் குட்டி உதடு,துக்ளியூண்டு கண்கள் என முதலுக்கு
    மோசம் இல்லை (இவன் டிக்கெட்க்கு கொடுத்த 100 ரூபா தான் மொதலாம். அதுக்கு மோசம் இல்லையாம்,அடேய் ;-))பாடல் காட்சிகளில் இவர் கிளாமர் காட்டாதது அதிர்ச்சி அளிக்கிறது.நாம எதுக்கு தான் ஜெர்க் ஆகலை?

    ஹீரோவோட அப்பாவா சத்யராஜ். நல்ல கேரக்ட்ர் ரோல்.வில்லனின் காலை விடாமல் பிடிப்பது எல்லாம் ஊமை விழிகள்லயே பாத்துட்டோம் பாஸ்.
    ஆனாலும் கண்ணியமான நடிப்பு.

    ஈரோடு மகேஷ் இந்தப்படத்துல சப் இன்ஸ்பெக்டரா வர்றார்.யார்யா அங்கே நக்கலா சிரிக்கறது?

    வில்லன்களாக வரும் அந்த 3 பேரும் இன்னும் மிரட்டலான நடிப்பை வழங்கி இருக்கலாம்.

    இசை அண்ணன் இமான்.கூச்சமே இல்லாம சுட்டிருக்கார். எதுக்காக கூச்சப்ப்படனும்? யாரும் செய்யாததையா அவர் செஞ்சுட்டார்?

    பின்னணி இசை சுமார் ரகம்.2 பாட்டு ஹிட் ஆகிடும்.

    ஆக்சன் காட்சிகள்,ஃபைட் காட்சிகள் நம்பகத்தன்மையோட இருக்கு. சினிமாத்தனம் இல்லை. க்ளைமாக்சில் நல்ல விறுவிறுப்பு.

    சிகரம் தொடு - முன் பாதி சவ சவ பின் பாதி பர பர.ஏ.டி.எம்., கொள்ளையர் கதை - ஏ பி சென்ட்டரில் சுமாரா ஓடிடும்

    கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் பற்றிய ருசிகர தகவல்

    By: Unknown On: 18:57
  • Share The Gag
  • ஜிகர்தண்டா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் என்ன என்பது கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்.

    ஜிகர்தண்டா படத்தின் ரிலீஸ்க்கு பிறகு அவர் அளித்த சில பேட்டியில் "என்னுடைய அடுத்த படம் முழுக்க முழுக்க காதல் கதை கொண்ட ஒரு படமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

    தற்போது இயக்குனர் தரப்பிலிருந்து ஒரு புது செய்தி வந்துள்ளது, அதாவது அவர் இயக்க போகும் அடுத்த படத்தின் பெயர் இறைவி என்றும் இதை தவிர வேறு சில தலைப்புகளும் பரிசீலனையில் உள்ளது எனவும் தெரிவித்தனர்.

    இந்நிலையில் இப்படத்தை சி.வி குமார் தயாரிக்க உள்ளதாகவும் ஏறக்குறைய பாபி சிம்ஹா தான் ஹீரோவாக நடிப்பார் என தகவல் கசிந்து உள்ளது.

    காஷ்மீருக்காக பெருந்தன்மையுடன் நிதி அளிப்பீர்..!

    By: Unknown On: 18:38
  • Share The Gag
  • ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாட்டு மக்கள் பெருந்தன்மையுடன் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

    "எனது சக மக்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், ஜம்மு - காஷ்மீரில் எதிர்பாராத அளவுக்கு பெருவெள்ளம் ஏற்பட்டு, அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நிறைய எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது, பலர் தங்கள் இருப்பிடத்தை இழந்துள்ளனர்.

    கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்துக்களும் உள்கட்டமைப்புகளும் அழிந்து போயுள்ளன. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் வாழும் நமது சகோதரர்களுக்கு இத்தகைய நெருக்கடி நிலையில், அவர்கள் வாழ்க்கை மீண்டும் புனரமைக்கப்பட நமது உதவி பெரிதும் தேவைப்படுகிறது.

    எனவே, பாதிக்கப்பட்ட நமது சகோதரர், சகோதரிகளுக்கு இத்தகைய நெருக்கடி தருணத்தில் தோள் கொடுப்பது நமது கடமையாகும். ஆகவே, பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதிக்கு நாட்டு மக்கள் அனைவரும் பெருந்தன்மையுடன் நிதியளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார் மோடி.

    இதற்கான தொகையை காசோலை, டிராஃப்ட் அல்லது ரொக்கம் ஆகிய முறைகளில் அனுப்பலாம். பிரதமர் அலுவலக இணையதளம் மூலமும் நிதியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வங்கிகளில் இதற்காக டிராஃப்ட் எடுத்தால் எந்த விதக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்று பிரதமர் அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் அலுவலகப் பணியாளர்கள் தங்கள் ஒருநாள் சம்பளத்தை ஜம்மு - காஷ்மீர் நிவாரணத்திற்காக அளித்ததையடுத்து, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

    ‘பர்மா’ வேகமே இல்லை ... திரைவிமர்சனம்

    By: Unknown On: 17:02
  • Share The Gag
  • கடன் வாங்கி கார் வாங்கியவர்கள், வாங்கிய பணத்தை திரும்ப கட்டமுடியாமல் போகும் நிலையில், அவர்களுடைய காரை பறிமுதல் செய்து, கடன் கொடுத்தவரிடம் ஒப்படைக்கும் பணியை (கார் சீசிங்) செய்து வருகிறார் கோத்ரா சேட்டு (அதுல் குல்கர்னி). இவரிடம் உதவியாளாக இருந்து வருகிறார் குணா (சம்பத்). குணாவிடம் பர்மா (மைக்கேல்) மற்றும் பூமர் (கார்த்திக் சபேஸ்) இருவரும் வேலை பார்க்கிறார்கள்.

    சேட்டு சொல்லும் வேலையை குணா, தனது உதவியாளர்களான பர்மா மற்றும் பூமரிடம் ஒப்படைக்கிறார். அவர்களும் குணா சொன்ன வேலையை செய்து முடிக்கிறார்கள். இதனால் குணாவுக்கு நிறைய பணம் கிடைக்கிறது. ஆனால், குணாவோ பர்மா மற்றும் பூமருக்கு குறைந்த ஊதியமே கொடுக்கிறார்.

    இதனால் கோபமடைந்த பர்மாவும், பூமரும் குணாவை பலிவாங்க அவனை போலீசில் மாட்டிவிடுகின்றனர். போலீசும் குணாவை கைது செய்து சிறையில் அடைக்கிறது.

    இதற்கிடையில், பர்மாவும் கல்பனா(ரேஷ்மி மேனன்)வும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர். இவர்களுடைய காதல் கல்பனாவின் பெற்றோருக்கு தெரிய வரவே அவளை கண்டிக்கின்றனர். ஆனால், பர்மாவைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று சொல்லி, வீட்டை விட்டு வெளியேறி பர்மாவுடனேயே தங்குகிறாள் கல்பனா.

    குணா ஜெயிலுக்கு சென்றுவிட்ட நிலையில், சேட்டுவிடம் நேரிடையாக பணியை வாங்கி செய்து வருகின்றனர் பர்மாவும், பூமரும். ஒருநாள் இவர்களுக்கு 28 காரை பறிமுதல் செய்யவேண்டும் என்ற பணி வருகிறது. இந்த பணியை பூமர், பர்மா, கல்பனா மூன்று பேரும் இணைந்து செய்கின்றனர்.

    27 கார்களை பறிமுதல் செய்துவிட்ட நிலையில், 28-வது காரை பறிமுதல் செய்துவிட்டு திரும்பி வருகின்றனர். அப்போது, கொள்ளைக் கும்பல் ஒன்று வங்கியில் பணத்தை திருடிக்கொண்டு வந்து, இவர்கள் பறிமுதல் செய்த காரில் ஏறி தப்பிச் சென்றுவிடுகின்றனர்.

    சேட்டுவிடம் சென்று மூவரும் இதுபற்றி முறையிடுகிறார்கள். சேட்டுவோ, நாயகி கல்பனாவை பிடித்து வைத்துக் கொண்டு, காரை திரும்பக் கொண்டு வந்தால்தான் அவளை உயிரோடு விடுவேன் என்று இருவரையும் மிரட்டுகிறான். இதையடுத்து, பர்மாவும், பூமரும் காரைத் தேடி அலைகின்றனர்.

    அப்போது, இவர்களுக்கு மாறன் (மது ரகுராம்) என்பவரின் அறிமுகம் கிடைக்கிறது. அவர், தன்னை போலீஸ் என்று இவர்களிடம் அறிமுகம் செய்து கொள்கிறார். மேலும், அந்த கார் எங்கிருக்கிறது என்பது தனக்கு தெரியும் என்றும், அந்த காரை பறிமுதல் செய்தால், அந்த காரில் இருக்கும் பணத்தையெல்லாம் தன்னிடம் ஒப்படைத்துவிட்டு காரை அவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறான்.

    இதற்கிடையில், பர்மா-பூமரால் பழிவாங்கப்பட்ட குணா சிறையில் இருந்து வெளியே வந்து இவர்களை பழிதீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

    இறுதியில் பர்மாவும் பூமரும் திருடுபோன காரை மீட்டு கல்பனாவை மீட்டார்களா? குணா, பர்மாவையும் பூமரையும் பழிவாங்கினாரா? என்பதே மீதிக்கதை.

    பர்மா கதாபாத்திரத்தில் மைக்கேல் தங்கதுரை அந்த கதாபாத்திரத்திற்கு சற்றும் பொருந்தவில்லை. தானும் மாஸ் ஹீரோவாக வேண்டும் என்று நினைத்து களமிறங்கியுள்ள இவருக்கு, அதற்கேற்ற நடிப்பும், பொருத்தமான முகமும் இல்லாதது வருத்தமே. காதல் காட்சிகளில் மட்டும் ஓரளவுக்கு நடித்திருக்கிறார்.

    ரேஷ்மி மேனன் திரையில் அழகாக தெரிகிறார். இவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு குறைவுதான் என்றாலும், அவருடைய கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். மைக்கேல் நண்பராக வரும் கார்த்திக் சபேஸ் கதாநாயகனுக்கு இணையாக படம் முழுக்க வருகிறார். என்றாலும், ஒரு சில காட்சிகளில் மட்டுமே இவர் செய்யும் காமெடியை ரசிக்க முடிகிறது.

    குணாவாக வரும் சம்பத்தை இந்த படத்தில் வீணடித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். குறைவான காட்சிகளே வருகிறார். மிடுக்கான தோற்றம், கலர் கலராய் உடைகள் என அசத்துகிறார். படத்தில் வரும் ஒரு குத்து பாடலுக்கு நடனமாடும் இவருக்கு ஜோடி கொடுக்காதது அவருக்கு வருத்தமாக இருந்ததோ என்னவோ, நமக்கு வருத்தம்தான்.

    சேட்டுவாக வரும் அதுல் குல்கர்னி நடிப்பில் வில்லத்தனம் காட்டுகிறார். பார்வையாலேயே மிரட்டும் இவரது நடிப்பு அபாரம்.

    கேங்ஸ்டர் படமாக உருவாக்கியிருக்கும் இயக்குனர் தரணிதரன், கேங்ஸ்டர் படங்களுக்கே உண்டான விறுவிறுப்பை திரைக்கதையில் உருவாக்க தவறியிருக்கிறார். மேலும், படத்தின் எந்தவொரு கதாபாத்திரத்தையும் சுவாரஸ்யம் இல்லாமல் உருவாக்கியிருப்பது மேலும் பலவீனம். இவருடைய வசனங்கள் படத்தை கொஞ்சம் தூக்கி நிறுத்துகிறது.

    யுவனின் ஒளிப்பதிவு படத்திற்கு மெருகூட்டியிருக்கிறது. இடத்திற்கு தகுந்தாற்போல் லைட்டிங் அமைத்து படமாக்கியிருப்பது அருமை. சுதர்சன் எம்.குமாரின் பின்னணி இசையில் மட்டுமே வேகம் தெரிகிறது. பாடல்கள் மனதில் நிற்கவில்லை.

    மொத்தத்தில் ‘பர்மா’ வேகம் இல்லை

    பாலியலுக்கு அடிமைப்படுதல் என்பது என்ன? மீள்வது எப்படி?

    By: Unknown On: 07:44
  • Share The Gag

  •  "உளவியல் நோக்கில் பாலியல் அடிமையாவதை எப்படித் தடுக்கலாம்?" என்ற கேள்விக்குப் பதில் தேடும் பதிவாக இதனைக் கருதிக்கொள்ளவும்.

    உள்ளத்தை நாம் நமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மட்டுமே ஆக்க முயற்சிகளில் ஈடுபடமுடிகிறது. நாம் தூங்கிவிட்டால், உள்ளம் தன் விருப்பம் (சுதந்திரமாக) போலச் செயற்படுகிறது. கனவு காண்கிறோம்; விழித்துக் கொள்கிறோம். ஆயினும், தூங்காமலே சற்றுச் சோர்வுற்றாலும் கூட உள்ளம் தன் விருப்பம் (சுதந்திரமாக) போலச் செயற்படும். எதையெதையோ நினைப்போம்; திடுக்கிட்டு விழிப்போம். இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்த உண்மையே!
     உணர்வற்ற உள்ளம்(Unconscious Mind); உணர்வு உள்ளம்(Conscious Mind) செயற்படாத வேளை தனது முழுப்பலத்தையும் காட்டத் தொடங்கிவிடும். அதனால் தான் கனவுகள், கற்பனைகள், பாலியல் (Sex) இச்சைகள் தோன்ற வாய்ப்பு ஏற்படுகிறது.

     உணர்வற்ற உள்ள(Unconscious Mind)த்தை Carl Jung (Sigmund Freud இன் மாணவர்) அவர்கள் Id, Libido என இரண்டாக வகுத்து Id அறிவு சார்ந்த செயலுக்கும் Libido பாலியல் (Sex) இச்சைகள் சார்ந்த செயலுக்கும் காரணம் எனத் தெரிவித்தார். ஆயினும், பாலியல் (Sex)சார்ந்த இச்சைச் செயலை வேறு பக்கங்களில் (கதை எழுத, கவிதை எழுத எனப் படைப்பாக்க) திருப்பிவிடுவதனால் சிறந்த படைப்பாளியாக முடியுமென்கிறார். பாலியல் அடிமை(Sexual Addiction)யாகாமல் Carl Jung அவர்களின் வழிகாட்டலின் படி உள்ளத்தை ஆக்க வழிகளில் திருப்பிச் சாதனை படைக்கலாம் வாருங்கள்.
     பாலியல் உணர்வு (Sex Feelings) பெண்ணுக்குப் பூப்படைந்த பின்னும் ஆணுக்கு மீசை அரும்பிய பின்னும் ஏற்படும். அதாவது, 11-13 அகவைக் காலத்தில் பாலியல் ஓமோன்கள்(Sexual Hormones) சுரக்கத் தொடங்குவதாலேயே இந்நிகழ்வுகள் ஏற்படுகின்றன. படிப்பு, உழைப்பு, மக்களாய(சமூக) ஒழுக்கம் என்பவற்றைக் கருத்திற் கொண்டே நம்மாளுகள் பாலியல் பக்கம் நாட்டம் குறைவு எனலாம். அதாவது, பாலியல் இச்சைச் செயல்களைக் கட்டுப்படுத்தி ஆக்க வழிகளில் உள்ளத்தைப் பயன்படுத்துவதனாலேயே நாம் ஒழுக்கசீலர்களாகவும் வெற்றியாளர்களாகவும் வாழ்கின்றோம். இல்லையேல் மனிதனும் மிருகமாகலாம். இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்த உண்மையே!

     நேரத்தைத் திட்டமிட்டுச் செலவழிக்க இயலாதவர்கள், பொழுதுபோக்கை விரும்பாதவர்கள், படிப்பு, உழைப்பு எதிலும் அக்கறை இல்லாத உள்ளங்களில் தான் பாலியல் இச்சைச் செயல்கள் வலுவூன்ற இடமுண்டு. இவ்வாறானவர்கள் பாலியல் சார்ந்த நூல்களைப் படிப்பர்; திரைப்படங்களைப் பார்ப்பர்; இணையத் தளங்களைப் பார்ப்பர்; இல்லையேல் ஆண்-பெண் பால் வேறுபாட்டை ஆய்வு செய்து அரட்டை அடிப்பர். இதனால் தான் பாருங்கோ, இவர்கள் சுயஇன்ப (Masturbation) முயற்சிகளிலும் தகாத உறவுகளில் ஈடுபடும் முயற்சிகளிலும் இறங்குகின்றனர். இவ்வாறானவர்களுக்குப் பாலியல் சார்ந்த இணையத் தளங்களே பின்னூட்டியாக இருப்பதும் உங்களுக்குத் தெரிந்த உண்மையே! இவை காலப்போக்கில் வழக்கப்பட்டுவிட; இவையின்றி வாழமுடியாத நிலையே தோன்றும். இந்நிலையையே பாலியல் அடிமை (Sexual Addiction) என்கிறார்கள்.

     பாலியல் சார்ந்த நூல்கள், வணிக ஏடுகள், பாலியல் சார்ந்த திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பாலியல் சார்ந்த இணையத் தளங்கள் போன்ற எல்லாமே நம்மாளுகளின் பாலியல் உணர்வுகளைக் (Sex Feelings) கூட்டிப் பெருக்கிப் பாலியல் சார்ந்த தவறுகளைச் செய்யத் தூண்டுகின்றன. இவற்றின் பக்கம் நாடியோர், எப்படி இவற்றிற்கு அடிமையாகாமல் மீளமுடியும்? நல்ல நல்ல சுயமுன்னேற்ற நூல்களைப் படிக்கலாம்; கதை, கவிதை என ஏதாவது எழுதி நல்ல படைப்புகளை ஆக்கி வெளியிடலாம்; இன்றைய திரைக் கலைஞர்களான வடிவேலு, விவேக், சந்தானம் போன்றோரின் நகைச்சுவைக் கட்டங்களைப் பார்க்கலாம்; இவ்வாறு பாலியல் எண்ணங்களைத் தூண்டாத, உள்ளத்தில் நல்ல எண்ணங்களைத் தோற்றுவிக்கும் செயல்களில் இறங்குவது நலமே! அதாவது, Carl Jung அவர்களின் வழிகாட்டலின் படி உள்ளத்தை ஆக்க வழிகளில் பயன்படுத்தலாம்.

    எடுத்துக்காட்டாக:
    பாலியல் எண்ணம் தோன்றும் போது
    உள்ளத்தில் நீ வருவாய்
    ஆனால்,
    உன்னுடன் AIDS உம் வருவதை
    எண்ணிப்பார்க்கையிலே
    எனக்கோ
    வயிற்றாலை அடிக்கிறதே!

    என்றவாறு கதைகளைப் பாக்களைப் புனையலாமே!

    எதிர்பாராத வழியில் பாலியல் அடிமை (Sexual Addiction) ஆகிவிட்டீர்  என உணர்ந்துகொண்டால், பாலியல் மருத்துவரை(Sexologist) அல்லது உளநல மதியுரைஞரை(Counsellor) ஐ நாடலாம். ஆயினும், இணையத்தளங்களை நம்பி மதியுரை கேட்கச் செல்லாதீர்கள். பெரும்பாலும் அத்தளங்களில் பாலியல் அடிமை (Sexual Addiction) ஆவதிலிருந்து விடுதலை பெற்றுத்தருவதாய்க் கூறி, பாலியல் உணர்வுகளைத் (Sex Feelings) தூண்டும் படங்களை இட்டிருப்பர். இத்தளங்கள் பாலியல் உணர்வுகளைத் (Sex Feelings) தூண்டவும் வழிகாட்டுகின்றன என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே, பாலியல் மருத்துவரை(Sexologist) அல்லது உளநல மதியுரைஞரை(Counsellor) நேரில் சந்தித்து பாலியல் அடிமை (Sexual Addiction) ஆவதிலிருந்து விடுதலை பெறுவதையே வரவேற்கிறேன்.

     நான் சந்தித்த மதியுரைநாடிகள் பலரது கேள்விகள், சுயஇன்பம் (Masturbation) பற்றியதாகவே இருந்தது. தோன்றும் பாலியல் உணர்வுகளைக் (Sex Feelings) கட்டுப்படுத்த இயலாத போது, குறிப்பிட்ட ஆள்கள் சுயஇன்பத்தை (Masturbation) நாடுவதாகத் தெரிவித்திருந்தனர். பாலுறுப்புகளைச் செயற்கை முறைகளில் தூண்டி மகிழ்வடையும் இச்செயலை ஆண், பெண் இருபாலாருமே மேற்கொள்கின்றனர். இது உடலளவில் மகிழ்ச்சியடைய உதவாமல், உள்ளத்தில் மகிழ்வடைவதாக எண்ணி எண்ணி மகிழ்வடைய உதவலாம். சுயஇன்பம் (Masturbation) என்பது உடனடிப் பாலியல் உணர்வுகளைக் (Sex Feelings) கட்டுப்படுத்தினாலும் பின்விளைவாகப் பெரும் பாதிப்புகளை அள்ளித்தரும்.

     நம்மாளுகள் ஒரு தடவை சுயஇன்பம் (Masturbation) மேற்கொண்டால் 200கிலோ கலோரிக்கு மேல் உடலிலுள்ள சக்தியைச் செலவு செய்கின்றனர். இதனை அடிக்கடி மேற்கொண்டு வந்தால் சக்தியிழப்புக் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்படலாம். ஆயினும், உள்ளத்தோடு தொடர்புபட்ட செயலாகையால் உள(மன) நோய் ஏற்படவாய்ப்பு உண்டு. மேலும், இயற்கை உறுப்புகளைச் செயற்கை வழிகளில் கையாள்வதால் பாலியல் குறைபாட்டு நோய்களும் வருமே! சுயஇன்பத்தால் (Masturbation) ஏற்படும் பின்விளைவை எண்ணியாவது இப்பக்கம் தலையைக் காட்டாமல் இருப்பது நலமே!
     மணமாகாத இருவர் கூடுவதையும் மணமுடித்தவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற எல்லையை மீறிப் பலருடன் கூடுவதையும் தகாத பாலியல் உறவென்று கூறிக்கொள்ள முடியும். இதனால் முறையற்ற வழியில் பெண்கள் கருத்தரிக்கிறார்கள். இச்செயலால் ஒருவர் உடலிலுள்ள தொற்றுக்கிருமி மாற்றார் உடலுக்குள் செல்லவும் வாய்ப்புண்டு. இவ்வாறு தான் AIDS நோயும் பரவுகின்றது. இச்செயல் பெரும்பாலும் களவாக இடம்பெறுவதால் மக்களாயம்(சமூகம்) கண்டுபிடித்தால் குறிப்பிட்டவர்களை ஒதுக்கியே வைத்துவிடும்.

     மேலும், தகாத பாலியல் உறவால் பெண்கள் கருவுறலாம். மக்களாய(சமூக)த்திற்கு அஞ்சி பாட்டி மருத்துவமோ, மருந்துக் கடைகளில் வேண்டிய மருந்தோ பாவித்து வீட்டிலேயே கருக்கலைப்புச் செய்து சாகவேண்டி வரலாம். பெண் வயிற்றில் குழந்தை கருவுற்று 90 நாட்களுக்குப் பிந்திக் கருக்கலைப்புச் செய்தும் சாவைச் சந்திக்கின்றனர். இச்செயல்களினால் பெண்ணுக்கு அதிக செந்நீர்(குருதி) வெளியேறுவதனாலேயே சாவு ஏற்படுகிறதாம். கருக்கலைப்பு என்பது மருத்துவரின் வழிகாட்டலின் படியே மேற்கொள்ள வேண்டும். மாதவிலக்கு வரவில்லை என்றறிந்ததும் மகப்பேற்று மருத்துவரை நாடுவது நலமே! தகாத பாலியல் உறவால் ஏற்படும் பின்விளைவை எண்ணியாவது இப்பக்கம் தலையைக் காட்டாமல் இருப்பது நலமே!

     பாலியல் என்பது தலைமுறைகளைத் தோற்றுவிக்கவும் ஊடலின் பின் கூடல் என்றவாறு கணவனும் மனைவியும் இணைந்து மகிழ்வான, நம்பிக்கையான, அன்பான குடும்ப வாழ்வை அமைக்கவும் உதவும் கருவியாகவே இருக்கவேண்டும். எனவே ஒழுக்கம் பேணுவதால், உள்ளத்தை ஆக்கவழியில்   ஈடுபடுத்துவதால், பாலியல் உணர்வுகளைக் (Sex Feelings) கட்டுப்படுத்துவதால் பாலியல் அடிமை (Sexual Addiction) ஆகாமல் குடும்பத்தில் நல்லுறவு ஓங்க நீண்ட ஆயுளுடன் வாழ முடியுமே!

    விஜய்க்கு போட்ட செட்டில் நட்டி நட்ராஜ்..!

    By: Unknown On: 06:59
  • Share The Gag
  • குத்துப் பாட்டுக்கு டான்ஸ் ஆட 'சதுரங்க வேட்டை’ நட்ராஜை லவட்டிக்கொண்டு போயிருக்கிறார், சுசீந்திரன். விஷ்ணு ஹீரோவாக நடிக்கும் 'ஜீவா’ படத்தில்தான் நட்டு கழட்டும் நட்டியின் நடனம்.

    ஏற்கெனவே மோகன் ஸ்டுடியோவில் போடப்பட்ட 'ஜில்லா’ பட மார்க்கெட் செட்டில் நட்டி ஆடும் குத்துப் பாட்டைப் படமாக்கி, தயாரிப்புச் செலவை மிச்சப்படுத்தி இருக்கிறார்கள்.

    பெண்களைப் பார்க்கும் ஆண்களின் மோக பார்வை ?

    By: Unknown On: 00:23
  • Share The Gag
  • பெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் பார்வை முற்றிலும் நீங்கவில்லை. பெண்களின் உடல் உறுப்புகளை செக்ஸ் அப்பீலுக்காக மட்டுமே பார்க்கும் பார்வைகளே இங்கு அதிகம்.

    அதிலும் பெண்களின் மார்பகங்கள் மீது ஆண்கள் மத்தியில் பெரும் மோகமே உண்டு. செக்ஸ் விளையாட்டில் ஒரு அங்கமாக மார்பகங்கள் பார்க்கப்பட்டாலும் கூட தாய்மையின் சின்னமாக அதை மதிப்பவர்கள், சிலரே.

    மார்பகங்கள் செக்ஸுக்கா, குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கா என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. இரண்டுக்கும் என்பதுதான் இதுவரை கிடைத்து வரும் பதிலாக உள்ளது.

    ஆனால், குழந்தைப் பிறப்பின்போதுதான் பெண்களின் மார்பகங்கள் கெளரவமாக பார்க்கப்படுகின்றன என்பது கசப்பான உண்மைதான். பிற நேரங்களில் அதை செக்ஸ் விளையாட்டில் ஒரு அங்கமாகவே பார்க்கிறார்கள் பெரும்பாலான ஆண்கள்.

    ஒரு பெண்ணுக்கு எப்படி கால்கள், கைகள், கண்கள் இருக்கிறதோ அதுபோலத்தான் மார்பகங்களும். ஆனால் மார்புகளை மட்டும் வித்தியாசமாக கையாளுவது காலம்காலமாக இருந்து வருகிறது. பெண்களைப் பார்க்கும் ஆண்களின் பார்வை மார்பகங்களின் மீதுதான் முதலில் படுகிறது. இது இயல்புதான்.

    சினிமாக்களிலும், விளம்பரங்களிலும் கூட மார்பகங்களை கவர்ச்சிப் பொருளாக காட்டி காட்டியே அதன் உண்மையான அவசியத்தை மாசுபடுத்தி வைத்துள்ளனர். பெண்களின் மார்புகளைக் காட்டி எடுக்கப்படும் காட்சிகள் இல்லாத சினிமாக்களே இல்லை எனலாம்.

    அதற்காக செக்ஸில் மார்புகளுக்கு வேலையே இல்லையா என்று கேட்கலாம். நிச்சயம் இருக்கிறது. ஆனால் அதற்காக மட்டும் மார்பகங்கள் இல்லை. அதையும் தாண்டி புனிதமான வேலையை அவை செய்கின்றன.

    பெண்கள் உறுப்புகளில் மிகவும் முக்கியமானது மார்பகங்கள். பெண்களுக்கு எழில் தருவதாக மட்டுமல்லாமல் மிகவும் சென்சிட்டிவான ஒரு உடல் பாகமாகவும் அது திகழ்வதால் மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப்பட வேண்டியது அவசியம்.

    மார்பகப் பராமரிப்பி்ல் பெண்கள் கவனம் செலுத்தாவிட்டால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

    பிரா அணிவது முதல் மார்பகங்களின் அளவு, அதில் தென்படும் மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து பெண்கள் தொடர்ந்து கவனத்துடன் இருந்து வர வேண்டியது அவசியம்.

    தங்களது மார்பக அளவுக்கேற்ற பிராக்களை அணிவது மிகவும் முக்கியம். அதிலும் கர்ப்ப காலத்தின்போதும், மாதவிடாயின்போதும் பெண்களின் மார்பகங்கள் பல மாற்றங்களை சந்திக்கும். அப்போது அதற்கேற்ற வகையில் உள்ளாடைகளை அணிய வேண்டும்.

    சிலருக்கு இரவு நேரங்களில் பிராக்கள் அணிய வேண்டுமா என்ற சந்தேகம் வரலாம். பெரியஅளவிலான மார்பகங்களை உடையவர்கள் இரவிலும் கண்டிப்பாக பிராக்களை அணிவது அவசியம் என்கிறார்கள் டாக்டர்கள். அப்போதுதான் சீக்கிரமே மார்புகள் தளர்ந்து போவதை தடுக்க முடியும் என்பது அவர்களது அறிவுரை.

    கர்ப்ப காலத்தில் மார்புகள் பெருக்கும். எனவே அதற்கேற்ற பிராவை அணிவது அவசியம். மேலும் இறுக்கமான பிராக்களை அணிவதையும் தவிர்க்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள், பாலூட்டுவதற்கு முன்பும், முடிந்த பின்னரும், சுடுநீரில் மென்மையான துணியை நனைத்து அதைக் கொண்டு மார்புக் காம்புப் பகுதிகளை துடைத்துக் கொள்வது அவசியம். இல்லாவிட்டால் குழந்தைக்கும், தாய்மார்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

    சிலருக்கு மார்பகங்களின் அளவில் திருப்தி இல்லாமல் இருக்கலாம். எனது வயதுப் பெண்களுக்குப் பெரிதாக உள்ளது. எனக்கு அவ்வாறு இல்லையே என்று வருந்தலாம். அதற்காக செயற்கையான முறையில் மார்பகங்களைப் பெருக்கிக் கொள்ள முயலுவதில் ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்வது நல்லது. அப்படிச் செய்யப் போய் உடல்நலக் கேடுகளை விலைக்கு வாங்கிக் கொண்டு வந்து விட நேரிடும்.

    அதற்குப் பதில் மார்பழகை எடுப்பாக்கிக் காட்டும், உடலுக்கு ஆபத்தை விளைவிக்காத சிறப்பு பிராக்களை அணியலாம். அதுபோன்ற அபாயமில்லாத வழிகளை நாடலாம்.

    மார்பக புற்றுநோய் இப்போது படு சாதாரணமாக காணப்படுகிறது. இதை நாமே வீட்டில் கண்டுணர முடியும். முழு நீள கண்ணாடி முன்பு நின்று கொண்டு இரு கைகளையும் மேலே உயர்த்தித் தூக்கிக் கொண்டு இரு மார்பகங்களும் சரியான அளவில் உள்ளதா என்பதைப் பார்க்கலாம். மேலும் மார்பின் மையப் பகுதியை சுற்றுவது போல கையால் அழுத்திப் பார்க்கலாம். வலி இல்லாமல் கனமான கட்டி போல தென்பட்டால் டாக்டரைப் பார்க்க வேண்டும். மேமொகிராம் மூலம் அது என்ன என்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துக் கூறுவார்கள்.

    சில பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் கட்டிக் கொள்ளும் அல்லது நீர் கட்டிக் கொள்ளும். பாலூட்டுவதை நிறுத்தும்போதும் இதுபோல ஏற்படும். எனவே அதை வைத்துக் கொண்டு மார்பகப் புற்றுநோயோ என்று பயந்து விடக் கூடாது.

    மார்பக புற்று நோய் வந்தால் அதை அகற்ற வேண்டிய அவசியம் இப்போது இல்லை. ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால், மார்பகத்தை அகற்றாமலேயே கேன்சரை சரி செய்யும் வழிகள் இப்போது வந்து விட்டன.

    இப்படி மார்பகங்கள் ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியமான உறுப்பாக இருப்பதால் அது குறித்து கவலைப்பட வேண்டியதும், பாதுகாப்பதும், கவனமுடன் இருப்பதும் மிக மிக அவசியமாகும். மாறாக அதை ஒரு கவர்ச்சிப் பொருளாக மட்டுமே, ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் கூட பாராமல், முக்கிய உடல் உறுப்பாக கருதி விழிப்புடன் இருப்பது நல்லது.