Sunday, 10 August 2014

அமிதாப்,தனுஷ் நடிக்கும் ஷமிதாப் ரிலீஸ் தேதி!

By: Unknown On: 22:38
  • Share The Gag
  • பால்கி இயக்கத்தில் அமிதாப், தனுஷ், அக்‌ஷரா நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஷமிதாப்'. 'ராஞ்சனா' படம் மூலம் இந்தியில் கால் பதித்த தனுஷ் நடிக்கும் இரண்டாவது படம் 'ஷமிதாப்'

    அமிதாப் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வரும் இப்படத்தில் தனுஷ் வாய் பேச முடியாதவராக நடித்துள்ளர். மேலும் அக்‌ஷரா இந்தப் படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகிறார்.

    பால்கி இயக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

    பல சிறப்புகள் அடங்கிய இப்படத்தின் வரவுக்காக இந்தி திரையுலகம் மட்டுமல்லாது இந்திய திரையுலகமே காத்திருக்கிறது. தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ள இந்த 'ஷமிதாப்' 2015 பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

    சளி-இருமல் விலக-பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்!!

    By: Unknown On: 21:53
  • Share The Gag
  •  பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்!!

    குழந்தைகளின் சளிக்கு: ஆடாதொடை இரண்டு இலை, தும்பைப்பூ 10 எண்ணிக்கை. தாளிசபத்திரி (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) கால் ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு. இதெல்லாத்தையும் நசுக்கி, சாறெடுக்கணும். இதுல 8 சொட்டு சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து, 3 மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தையோட நாக்குல தடவி வந்தா, சளி கட்டுக்குள்ள வரும். பிறந்த குழந்தைகள் முதல் 2 வயசுக் குழந்தைகள் வரை இந்த மருந்தைத் தரலாம்.

    பெரியவர்களுக்கு ஏற்படும் நெஞ்சு சளிக்கு: இதுக்கு பூண்டுப் பால் நல்ல மருந்து, பெரிய சைஸ் முழு வெள்ளைப் பூண்டை தோல் உரிச்சுக்கணும். 100 மில்லி பசும்பால்ல தண்ணி கலந்து, இதுல பூண்டை நல்லா வேக வைக்கணும். அடுப்புலருந்து இறக்கறதுக்கு முன்னால ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகுப்பொடி போட்டு இறக்கிடணும். இதை நல்லாக் கடைஞ்சு, தேவையான அளவு, பனங்கற்கண்டு சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி சாப்பிட்டா, நல்ல பலன் கிடைக்கும்.

    இருமல் விலக: அதிமதுரம் 100 கிராம் எடுத்து நசுக்கி, 200 மில்லி தண்ணியில வெறுமனே ஊறவச்சு, காலையில எடுத்து வடிகட்டி, சூடாக்கி (கொதிக்க வைக்க தேவையில்லை) பனங்கற்கண்டு சேர்த்துக்குடிச்சு வந்தா இருமல் ஓடியே போயிரும்.

    மாந்தம் போக்க: ஒரு வயது நிரம்பிய குழந்தைகளுக்கு ஒரு டீஸ்பூன் துளசிச்சாறை கொடுத்தால்... மாந்தம், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஓடியே போகும். குழந்தையும் அழுகையை நிறுத்தி நிம்மதியாகத் தூங்கும்.

    மூச்சு விடத் திணறுபவர்கள் துளசி இலையை காயவைத்து அரைத்து, அவ்வப்போது முகர்ந்து வந்தால், சுவாசம் நீங்கும். துளசி இலையை தண்ணீரில் போட்டுக்குடித்தால், தொடர் இருமல் தொல்லை நீங்கும். சுடுநீரில் துளசி இலையைப் போட்டு ஆவிபிடித்தால், சளி, மண்டைக் குத்தல் குணமாகும். பேறுகாலம் முடிந்த பெண்கள் துளசி விதையை அரைத்து, தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வேண்டாத அழுக்கு நீங்கும்.

    அடிவயிற்றுக் குத்தல், வலி சரியாகும். ஒரு கைப்பிடி துளசிக் கொழுந்தை இஞ்சி சேர்த்து அரைத்து, மாத்திரை போல் உருட்டி, காயவைத்து எடுத்து, தேனில் கலந்து கொடுத்தால், வறட்டு இருமல் காணாமல் போகும். கட்டிகள் இருந்தாலோ, வெட்டுக்காயம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது வண்டு கடித்திருந்தாலோ அந்த இடத்தில் துளசியை அரைத்துப் பூசினால், உடனடி குணம் கிடைக்கும். துளசியை ரசமாக செய்து சாப்பிட்டால் வாய்கசப்பு முற்றிலும் நீங்கி, ஜூரமும் வந்த வேகத்தில் ஓடிவிடும்.

    வாஷிங் மெஷின்’ செயல்படும் விதம்!--உபயோகமான தகவல்கள்..!

    By: Unknown On: 21:08
  • Share The Gag
  • இன்று நடுத்தர வர்க்க வீடுகளிலும் அதிகமாக இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது, `வாஷிங் மெஷின்’ எனப்படும் துணி துவைக்கும் எந்திரம். இது எவ்வாறு செயல்படுகிறது என்று தெரியுமா?

    வாஷிங் மெஷினில் துவைக்க வேண்டிய துணி, பல துளைகள் கொண்ட இரும்பு உருளைக்குள் போடப்படும். இது சுமார் நாலே கால் கிலோ எடையைத் தாங்கக்கூடியது.

    இந்த இரும்பு உருளைக்கு வெளியே மற்றொரு பாத்திரம் உருளையைத் தாங்கும். கதவை மூடிவிட்டு, எலக்ட்ரோ மெக்கானிக்கல் நேரங்காட்டியில் தேவையான நேரத்தை `செட்’ செய்து வைத்துவிட வேண்டும்.

    இந்த எலக்ட்ரோ மெக்கானிக்கல் நேரங்காட்டி, பல்வேறு வேலைகளைச் செய்யும். அதாவது, துணியை நனைப்பது, நீரின் சூட்டை நிலைநிறுத்துவது, அலசப்பட வேண்டிய, பிழியப்பட வேண்டிய அளவு, துணியின் தரத்தைப் பொறுத்து சுழல வேண்டிய நேரத்தைக் கணக்கிடுவது போன்று பல வேலைகள் உண்டு.

    வாஷிங் மெஷினின் பொத்தானை அழுத்தியதும் தண்ணீரானது தானியங்கி வால்வு வழியாகச் செலுத்தப்படும். நீரை நிறுத்திச் செலுத்த ஒரு பிரஷர் சுவிட்ச் உள்ளது. இது சிக்னலை அனுப்பும். பிரஷர் சுவிட்சில் உள்ள டயாபிரம், நீர்மட்டத்தில் உள்ள காற்றின் விசையால் மேலே தள்ளப்படுகிறது. பிறகு மைக்ரோ சுவிட்சு மூலம் தடுக்கப்பட்டு, மின் சுற்று முடிந்து வால்வு மூடிக்கொள்ளும். தண்ணீரின் மட்டம் சில்க், சிந்தெட்டிக் போன்ற வழவழப்பான துணிகளுக்கு அதிகமாகவும், பருத்தி போன்ற முரட்டுத் துணிகளுக்குக் குறைவாகவும் இருக்கும். இந்த நீர்மட்டத்தை குறிப்பாக அதிகரிக்க, குறைக்க மைக்ரோ சுவிட்சுகள் உண்டு.

    சலவை உருளையை உருளச் செய்வதற்கு என்று ஒரு மோட்டார் உள்ளது. இது சலவை செய்ய, காய வைக்க, அலச என்று எல்லாவற்றுக்கும் காரணமாகிறது. 1100 ஆர்.பி.எம். வேகத்தில் இது ஓடும். அலசிப் பிழிந்த தண்ணீரை அகற்ற ஓர் உறிஞ்சும் பம்பு உதவுகிறது. எலக்ட்ரோ மாக்னெட்டின் உதவியால் வேலை ஆரம்பிக்கும்போது கதவு மூடும்.

    வேலை முடிந்ததும் ஆட்டோமேட்டிக்காக கதவு திறக்கவும் செய்யப்படுகிறது. உருளை போன்ற சுழலும் பாகங்களின் இயக்கத்தைச் சமன் செய்து, அதிர்வைக் குறைக்க அதற்கேற்ற ஸ்பிரிங்குகள், அதிர்வுத் தடை உறிஞ்சிகள் உள்ளன.

    தாயாவதில் பிரச்சினையா? `பி.சி.ஓ.எஸ்’ இருக்கலாம்!

    By: Unknown On: 19:56
  • Share The Gag
  • `பி.சி.ஓ.எஸ்’ எனப்படும் `பாலிஸிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்’ பாதிப்பு பெண்களிடம் தற்போது பெருகிக் கொண்டிருக்கிறது. இதனால் பெண்களிடையே குழந்தையின்மை பிரச்சினைகளும் பெருகிவருகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.

    தாய்மையடைய முடியாமல் தவிக்கும் பெண்களில் 60 சதவீதம் பேர் `பி.சி.ஓ.எஸ்` பாதிப்பிற்குள்ளானவர்களாக இருக்கிறார்கள், என்கிறது சமீபத்திய ஆய்வு. பி.சி.ஓ.எஸ். என்றாலே மாதவிலக்கு கோளாறு ஏற்பட வேண்டும் என்பதில்லை. சினைப்பையில் கட்டி இருக்க வேண்டும் என்பதில்லை. இவை இரண்டும் சரியாக இருந்தாலும், பி.சி.ஓ.எஸ். பாதிப்பு இருக்கும். பி.சி.ஓ.எஸ். பாதிப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும், அது தாய்மைக்கு தடையாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பி.சி.ஓ.எஎஸ் நோயின் அறிகுறிகளை உணர்ந்து சிகிச்சை செய்து கொள்கிறவர்கள் 40 சதவீதம் என்றால், 60 சதவீதம் பேர் அறிகுறியை உணராமல் அந்த நோய்த்தன்மையுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்ற நோய்களைப் போல் இதையும் தொடக்கத்திலே கண்டறிந்தால், எளிதாக கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம்.

    இந்த நோயாளிகளில் 30 சதவீதத்திற்கு குறைவானவர்களுக்கு மட்டுமே மாதவிலக்கு கோளாறு ஏற்படுகிறது. 9-10 வயது சிறுமிகளாக இருக்கும்போதே பெற்றோர், அவர்களை கவனித்தால், பி.சி.ஓ.எஸ். பாதிப்பை தொடக்கத்திலே கண்டறிந்து விடலாம். நோய் பாதிப்பை கண்டுபிடித்து, கட்டுப்படுத்தாமலே விட்டால் அது இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் உருவாகும் சூழலை அதிகரிக்கும். குழந்தையின்மைக்கும் இது முக்கிய காரணமாகும்.

    சிறுமிகளாக இருக்கும்போதே மார்பக வளர்ச்சி அதிகமாக இருப்பது பி.சி.ஓ.எஸ் ன் முக்கிய அறிகுறியாகும். மேலும் சிறுவயதிலே பூப்படைவது, அதிக எடை, அளவுக்கு அதிகமாக மெலிந்து போதல், எப்போதும் படுக்க வேண்டும் என்று தோன்றுதல், படுத்தால் தூக்கம் வராத நிலை ஏற்படும். பின் கழுத்து, கை மூட்டுகள், கையை மடக்கும் பகுதிகளில் கறுப்பு நிறம் படருதல், முகத்தில் கறுப்பு படை தோன்றுதல், முகத்தில் எண்ணைத் தன்மை அதிகரித்தல். காலை நேரங்களில் மூக்கில் மட்டும் அதிக எண்ணைத்தன்மை தோன்றுதல், ஒற்றைத் தலைவலி போன்றவையும் பி.சி.ஓ.எஸ் ன் அறிகுறிகளாகும்.

    இவை அனைத்தும் இன்சுலின்- லெப்டின் ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மையால் தோன்றுவதாகும். முகத்தின் கீழ் பாகம் மட்டும் குண்டாகுதல், பற்கள் முன்நோக்கி துறுத்துதல், மார்பு பகுதியும்- தோள் பகுதியும் மட்டும் பெரிதாகுதல், கழுத்து குண்டாகுதல் போன்றவை ஸ்டீராய்ட் ஹார்மோனால் ஏற்படும் பாதிப்பாகும்.

    ஆறு மாதங்கள் வரை மாதவிலக்கு வராமல் இருத்தல், வந்தாலும் ஒன்றிரண்டு நாட்களில் முடிந்து போதல், அல்லது நிற்காமல் வெளியாகிக் கொண்டிருப்பது, குழந்தையின்மை, 90 நாட்களுக்குள் அபார்ஷன் ஆவது, மீசை வளர்தல், தாடி வளர்தல், உடலில் தேவையற்ற இடங்களில் எல்லாம் முடி வளர்தல், மிக அதிகமாக தலை முடி உதிர்தல் போன்றவைகளும் பி.சி.ஓ.எஸ். அறிகுறிகளாகும்.

    பி.சி.ஓ.எஸ் பிரச்சினைக்கு சரியான சத்தான உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தினசரி 1200 கலோரி அளவுள்ள உணவுகளை சரிவிகிதமாக உட்கொள்ள வேண்டும். அதில் 40 சதவிகிதம் கார்போஹைடிரேட் உணவுகள் எடுத்துக்கொள்வது நலம் என்கின்றனர் நிபுணர்கள். பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மதிய நேரத்தில் கொழுப்பு குறைந்த உணவுகளை உட்கொள்ளவேண்டும். அதனுடன் இனிப்பு சேர்க்காத யோகர்டு எடுத்துக்கொள்ளலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    இரவு நேரத்தில் பழுப்பு அரிசி, வேகவைத்த மீன், ஆலிவ் ஆயில் சேர்த்துக்கொள்ளலாம். இரவு நேரத்தில் மொத்தம் 330 கலோரி உணவுகளை மட்டுமே உட்கொண்டால் போதும் என்கின்றனர் நிபுணர்கள். இதன் மூலம் பி.சி.ஓ.எஸ் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    பரிவிருத்த திரிகோணாசனம் இது என்ன செய்யும்..?

    By: Unknown On: 19:02
  • Share The Gag
  • செய்முறை:

    முதலில் நேராக நின்று கொண்டு கால்களை ஒரு மீட்டர் அளவு நன்றாக அகட்டி வைத்து உள்ளங்கைகள் கீழ்நோக்கக் கைகளைப் பக்க வாட்டில் நேராக வைத்து நின்று மூச்சை இழுக்கவும். பின்னர் இடுப்பை வளைத்து வலது பக்க உள்ளங்கையை இடது காலுக்குப் பக்கத்தில் தரையில் பதிக்கவும்.

    உயர்த்திய இடது கையின் மேல் பார்வையிருக்க மூச்சை வெளியில் விடவும். இதே நிலையிலிருந்து மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும். இதே போன்று மறுபுறமும் செய்ய வேண்டும். இந்த ஆசனத்தை 3 முதல் 5 முறை செய்யவும்.

    பலன்கள்:

    இந்த ஆசனத்தை செய்வதால் வயிற்றுப் புற உள்ளுறுப்புகள் சீரடைகின்றன. சிறுநீரகச் செயல்பாடு அதிகரிக்கிறது. வயிற்றுக் கோளாறுகள் அகல்கின்றன. மூச்சுப் பிடிப்பு அகல்கிறது.


    ஏராளமான மருத்துவகுணம் கொண்ட கல்யாண முருங்கை...!

    By: Unknown On: 17:55
  • Share The Gag
  • கல்யாணமுருங்கையில் ஏராளமான மருத்துவகுணம் உள்ளது. இது துவர்ப்பும், கசப்பும் கலந்த சுவையுடையது. இலை சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, தாய்பால் பெருக்கி, வாந்தி, வயிற்றுவலி, பித்த சுரம், உடல் வெப்பம், வாய் வேக்காடு, வயிற்றுப்புழு ஆகியவற்றை நீக்கும். மாதவிலக்குத் தூண்டல் செய்கையும் உடையது.

    பூ கருப்பைக் குறை நீக்கியாகவும், விதை மலமிளக்கி, குடற்பூச்சிக் கொல்லியாகவும் செயற்படும். இலைகள் பேதி மருந்து சிறுநீர்க்கழிவை அதிகரிக்கும், பால் உற்பத்திக்கு நல்லது. மாதவிடாய் போக்கை அதிகப்படுத்தும். தண்ணீர் கட்டிகளுக்கும், மூட்டுவலிக்கும் பற்றாகப் பயன்படும்.

    இலையை வதக்கி இளஞ்சூட்டுடன் வைத்து நாளும் கட்டிவர அரையாப்புக் கட்டி, வீக்கம் கரையும். மாதவிலக்கில் கடுமையான வலி இருப்பவர்கள் கல்யாண முருங்கையின் இலைச்சாறு 50 மில்லியை 10 நாள் சாப்பிட வலி தீரும். இதன் இலைச்சாறு 15 மி.லி., ஆமணக்கு நெய் 15 மி.லி. கலந்து இரு வேளை மூன்று நாள் குடிக்க வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

    இலைச் சாறு 50 மி.லி., தேன் 20 மி.லி. கலந்து சாப்பிட மலக் கிருமிகள் வெளியேறும். இதன் இலைச்சாற்றை தினமும் குடித்து வர பெண் மலடு நீங்கி கருதரிக்கும். நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். உடலும் இளைக்கும். இலையை நறுக்கி, வெங்காயம் போட்டு தேங்காய் நெய் விட்டு வதக்கி 5 முறை சாப்பிட பருவமடையும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.

    இலைச் சாறுடன் தேங்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து மேல் பூச்சாகப் பூசி குளிக்க சொறி, சிரங்கு தீரும். 60 மி.லி. இலைச்சாற்றுடன் 15 கிராம் உப்பு சேர்த்து காலையில் அருந்தினால் பேதியாகும். பேதியில் பூச்சி வெளியேறும்.

    கல்யாண முருங்கை இலைச் சாறு 30 மில்லியுடன் பூண்டுச்சாறு 30 மில்லி சேர்த்து அரிசி கஞ்சியில் கலந்து 30 நாள் சாப்பிட ஆஸ்துமா குணமாகும். புலால், புகை, போகம் தவிர்க்கவும். இலைச்சாறு 10 மில்லியுடன் வெந்நீர் 10 மில்லி கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க கீரிப்பூச்சி வெளியேறும்.

    கபம், இருமல் தீரும். ஒரு தேக்கரண்டி மோரில் இலைச்சாற்றினை கலந்து குடிக்க நீர்தாரை அலர்ஜி, நீர் எரிச்சல் தீரும். இலைச்சாற்றில் 5 அரிசி எடை விதைப்பருப்பு, சூரணம் சேர்த்து சாப்பிட குடற் பூச்சிகள் வெளியேறும்.

    கல்யாண முருங்கையின் பட்டை மற்றும் இலைகள் மருத்துவ பயன் கொண்டவை. பட்டை துவர்ப்புள்ளது. ஜுரத்தைப் போக்கும், பூச்சிகளை அகற்றும், பாம்புகடிக்கு மருந்தாகும். ஈரல் கோளாறுகளுக்கு, கண் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும்.

    வயிற்றுக் கடுப்புத் தீர 10 கிராம் மரப்பட்டையை 100 மில்லி பாலில் ஊறவைத்து ஒரு மணிக்கு 20 மில்லி வீதம் கொடுக்க நிற்காத வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

    இப்படியா செய்வார்! அமீர் கான் மீது வழக்கு!

    By: Unknown On: 17:00
  • Share The Gag
  • பாலிவுட் பாக்ஸ் ஆபிஸின் செல்லபிள்ளை அமீர் கான் தான். இவர் படங்கள் மட்டுமின்றி பல சமூகநல நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.

    தற்போது இவரின் மீது வழக்கு கொடுக்கப்போவதாக சில அமைப்புகள் கூறி வருகின்றனர். எதற்கு என்று விசாரித்தால் பி.கே படத்தில் அவர் நிர்வாணமாக நின்ற போஸ்டரால் தானாம்.

    இதை எதிர்க்கும் வகையில் அப்போஸ்டர்களுக்கு ஆடை அணிவிக்கும் போராட்டம் நடத்தப் போவதாக எம்.எல்.ஏ. கிருஷ்ணா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

    விஜய், முருகதாஸ் இருவரும் தமிழ் பிள்ளைகள்! சீமான் ஆதரவு!

    By: Unknown On: 10:30
  • Share The Gag
  • கத்தி படம் குறித்து நாளுக்கு நாள் சர்ச்சைகள் வந்துக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாகவே முருகதாஸ் தமிழ் நாட்டில் உள்ள முன்னணி தலைவர்களை சந்தித்து விளக்கம் அளித்து வருகிறார்.

    ஆனால் நாங்கள் படத்தை வெளியிட விடமாட்டோம் தெரிவிக்க, தற்போது நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தன் கருத்தை வெளியிட்டுள்ளார்.

    இதில் விஜய், முருகதாஸும் நம் பிள்ளைகள், அவர்கள் படத்தை நாங்கள் ஏன் எதிர்க்கவேண்டும், மெட்ராஸ் கபே, இனம் போன்ற தமிழ் மக்களுக்கு எதிரான படத்தை தடைவிதித்தோம்.

    ஆனால் கத்தி படம் வெளிவந்தால் தெரியும், மேலும் ஒரு போதும் தம்பி விஜய்யும், தம்பி முருகதாஸும் இது போன்ற வேலைகளில் ஈடுபடமாட்டார்கள் என்று தன் ஆதரவை தெரிவித்துள்ளார்.

    எனக்கு இசையமைக்க தெரியவில்லை! அனிருத் வருத்தம்!

    By: Unknown On: 09:56
  • Share The Gag
  • அனிருத் என்றாலே தற்போதைக்கு உற்சாகம் என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு இளைஞர்களின் பல்ஸ் தெரிந்து அதிரடியாக இசையமைத்து குறுகிய காலத்தில் பெயர் பெற்றவர்.

    ஆனால் சமீபத்தில் மிகவும் வருத்ததுடன் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். இதில் ‘என்னால் டி.இமான் போன்று கிராமத்து இசையை செய்ய முடியவில்லை.

    அவரின் கும்கி, மைனா பாடல்களுக்கு நான் இன்றும் அடிமை என்று தெரிவித்துள்ளார்.

    பூனை ரோமம் போயே போச்சு!

    By: Unknown On: 08:53
  • Share The Gag
  •  பார்க்கப் போனால் ரொம்பச் சின்ன விஷயம்... ஆனால், அதுதான் பெண்ணை மனதளவில் வீழ்த்தி தன்னம்பிக்கையைக் கெடுக்கும். கை கால்களில் முளைத்திருக்கும் பூனை ரோமங்கள்தான் அவை. என்னதான் அழகாக இருந்தாலும் கைகளையும் கால்களையும் ஆமை போல மறைத்துக்கொண்டே வாழும் பெண்கள் அநேகம்பேர் இருக்கிறார்கள். பூனை ரோமங்கள் வெளியே தெரியும் என்று வெட்கப்பட்டுக்கொண்டே பலர் குட்டைக் கை வைத்த சுடிதாரோ பிளவுஸோ அணியத் தயங்குகிறார்கள். ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டே வெளியே போக யோசிப்பார்கள். இதற்காக கடைகளில் விற்கிற ‘ஹேர் ரிமூவிங் க்ரீம்’களைப் பயன்படுத்தினாலும் சில நாட்களில் முன்பைவிட வேகமாகவும் முரடாகவும் ரோமங்கள் வளர்ந்துவிடும். அவற்றின் அடர்த்தியும் கூடியதுபோல இருக்கும். இந்தச் சிக்கலுக்குத் தீர்வு சொல்கிறார் சித்தமருத்துவர் செல்வ சுப்பிரமணியன்.

    “கெமிக்கல் கலந்த் க்ரீம்களைப் பூசி பூனை ரோமத்தை நீக்குவதால் அப்போதைக்கு மட்டும்தான் தீர்வு கிடைக்கும். அதிலும் இந்தக் க்ரீம்கள் சிலருக்கு ஸ்கின் அலர்ஜியை ஏற்படுத்தும். அதனால் இதைத் தவிர்த்துவிடுவது நல்லது. அதற்குப் பதிலாக, உங்களுக்கு எளிதாகக் கிடைக்கக் கூடிய பொருட்களை வைத்து இயற்கையான முறையில் பக்க விளைவுகள் இல்லாமல் பூனை ரோமங்களை நீக்கலாம்.

    வழிமுறை - 1

    குப்பை மேனி இலையையும் வேப்பந்துளிரையும் கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு அதோடு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைக்கவும். அந்தக் கலவையில் சிறிது பன்னீர் ஊற்றிக் குழைத்துக்கொள்ள வேண்டும். இரவு தூங்கும் முன் பூனை ரோமங்கள் இருக்கும் இடத்தில் இந்தப் பேஸ்டைத் தடவி மறுநாள் கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இப்படிச் செய்துவந்தால் நாளடைவில் பூனை ரோமங்கள் காணாமல் போகும்.

    வழிமுறை - 2

    கருந்துளசி கைப்பிடி அளவு, மாதுளம் பழத் தோல் இரண்டையும் இரண்டு நாட்களுக்கு நிழலில் உலர்த்த வேண்டும். நன்றாக உலர்ந்ததும் இவற்றுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்துப் பொடியாக்கி டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளவும். இரவு தூங்கும் முன் முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து, இந்தப் பொடியை அதில் குழைத்து ரோமப் பகுதிகளில் தடவி மறுநாள் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்துவந்தால், பூனை ரோமங்கள் நீங்கும். தோலும் பளபளவென்று ஆகிவிடும்.

    வழிமுறை - 3

    கடலை மாவு, பயத்த மாவு, சீயக்காய் பொடி மூன்றையும் சம அளவு எடுத்துக்கொள்ளவும். இவற்றுடன் இரண்டு எலுமிச்சம் பழத் தோல், வேப்பங்கொழுந்து கைப்பிடி அளவு சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையில் மூன்றில் ஒருபங்கு கஸ்தூரி மஞ்சள் தூள் கலந்து, தினமும் குளிப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் பூசி ஊறவைத்துக் குளித்தால், பூனை ரோமம் படிப்படியாகக் குறையும். தோலும் மென்மையாகும், நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும். எந்தத் தோல் நோயும் வராது.”