Wednesday, 24 September 2014

கமலின் உத்தமவில்லன் நவம்பர் 7-ல் வெளியீடு

By: Unknown On: 20:16
  • Share The Gag
  • கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘உத்தமவில்லன்’. இப்படத்தை கமலின் நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். கதாநாயகிகளாக ஆண்ட்ரியா, பூஜா குமார் நடித்துள்ள இப்படத்திற்கு கதை, திரைக்கதையை கமலஹாசனே எழுதியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை வரும் நவம்பர் 7-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    ‘உத்தமவில்லன்’ படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இரண்டு காலக்கட்டங்களில் நடக்கும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் ஜெயராம், நாசர், இயக்குனர் கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத், பார்வதி மேனன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

    இப்படத்தை தொடர்ந்து கமல் தற்போது ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னதாக, கமல் நடித்து முடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தை அடுத்த வருடம் ஜனவரியில் வெளியிடவுள்ளனர். 

    பாதியில் ஓடியவர் எல்லாருக்கும் கடிதம் அனுப்புகிறார்..!

    By: Unknown On: 20:07
  • Share The Gag
  • சமீபத்தில் நடந்த ஐ படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் சந்தித்து பேசி உரையாடினார்.

    பின்னர், ஐ ஆடியோ வெளியீட்டில் கலந்துகொண்டு தாயகம் திரும்பிய அர்னால்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மக்கள் பணிகளை பாராட்டி முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில் நான் சென்னை வந்தபோது எனக்கு சிறப்பான பாதுகாப்பு வசதி செய்து தந்ததற்கும், என்னை சந்திக்க நேரம் ஒதுக்கியதற்கும் உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடன் அமர்ந்து நீங்கள் சந்தித்த சவால்கள் பற்றியும், உங்களது சாதனைகள் குறித்தும் விவாதித்தது அருமையான சந்தர்ப்பமாக அமைந்தது.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நீங்கள் செய்துவரும் சேவை என் மனதை தொட்டது. தமிழக மக்கள் உங்களை அம்மா என்று அழைப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. அனைத்து பெண்கள் காவல் நிலையம் என்பது மிகவும் சிறப்பான திட்டம். இதுபோன்ற செய்தியை நான் எங்கும் கேட்டதுகூட இல்லை.

    இந்தியாவில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தில் தமிழகம் 39 சதவிகித உற்பத்தி செய்ய நீங்கள் எடுத்துள்ள முயற்சி மிகவும் பாராட்டுதற்குரியது. காற்று மாசுபடுவதை தடுக்கும் உங்கள் முயற்சியில் நாங்களும் இணைய விரும்புகிறோம். நீங்கள் செய்துள்ள இம்முயற்சியை நான்கு வருடங்களுக்கு முன் நான் சார்ந்துள்ள கலிபோர்னியா மாகாணத்திலும் தொடங்கியுள்ளேன்.

    எனது இந்த முயற்சியில் 560 நகரங்களும் பல்வேறு மாகாணங்களும் இணைந்துள்ளன. எங்களுடன் நீங்களும் இணைந்து செயல்பட விரும்புகிறேன். எனது அதிகாரிகளை உங்கள் சுற்றுச்சூழல் துறை அமைச்சரை தொடர்பு கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளேன். ஏனென்றால் நமது செயல்பாடு வெறும் பேச்சோடு நின்று விடக்கூடாது.

    இதுபோன்ற தொடர்புகள் மூலம் நாம் தொடர்ந்து சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். அதைத்தான் நான் பெரிதும் விரும்புகிறேன். மிகவும் நன்றி. உங்களது சிறப்பான பணிகள் தொடர வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். 

    கோயல் கட்டலாம..? வேணாமா..? நயன்தாரா காரசார விளக்கம்..!

    By: Unknown On: 11:30
  • Share The Gag
  • தமிழ் ரசிகர்கள் குஷ்புக்கு ஏற்கனவே கோவில் கட்டி அன்பை வெளிப்படுத்தினர். அக்கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் பூசாரியை வைத்து பூஜை அர்ச்சனை வழிபாடுகளும் நடத்தப்பட்டன. நக்மாவுக்கும் கோவில் கட்டினர். இது போல் நயன்தாராவுக்கு கோவில் கட்ட தற்போது ஏற்பாடுகள் நடக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள நயன்தாரா ரசிகர்கள் இணைந்து இக்கோவிலை கட்டிடுகிறார்கள். இடம் தேர்வு நடக்கிறது.

    கோவில் கட்டுவதற்கு நயன்தாரா விடமும், அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் நயன்தாரா இதற்கு சம்மதிக்க வில்லை. கோவில் கட்ட வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து நயன்தாரா கூறும்போது:–

    ரசிகர்களின் அன்பும் ஆதரவும் எனக்கு போதுமானது. இதற்கு மேல் எதையும் நான் எதிர் பார்க்க வில்லை.

    எனக்கு கோவில் கட்டும் செயலில் ஈடுபடாதீர்கள் என் வேண்டுகோளையும் மீறி கோவில் கட்டினால் அது மன அமைதியை கெடுப்பதாக இருக்கும் என்று ரசிகர்களுக்கு தெரிவித்து உள்ளார்.

    தமிழ், தெலுங்கு, திரையுலகில் நயன்தாரா தொடர்ந்து முன்னணி நடிகையாக இருக்கிறார். புது கதாநாயகிகளை வரத்து அவர் மார்க் கெட்டை அசைக்க வில்லை.

    விஞ்ஞானி பார்த்தியின் புது சோதனை வெற்றி பெறுமா..? காத்திருப்போம்..!

    By: Unknown On: 10:44
  • Share The Gag
  • நடிகர் பார்த்தி விஞ்ஞானி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகிறார். இந்த பொழுது போக்கு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன், படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து இயக்கியும் உள்ளார். பார்த்திக்கு சொந்த ஊர் சேலம். சென்னையில் கல்லூரிப் படிப்பு. அழகப்பா செட்டியார் தொழில் நுட்ப கல்லூரியில் அறிவியல் பட்டம் பெற்றவர். அறிவியல் மீது தீராத ஆர்வம் கொண்ட பார்த்தி, தனது உயர் கல்வியை இந்திய அறிவியல் நிறுவனத்தில் பயின்று, அங்கு விண்வெளித் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.

    பார்த்தியின் கனவுகள் அனைத்தும் மிகப்பெரியது. சர்வதேச புகழ்பெற்ற அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்ற விரும்பினார். அந்த பெருமைமிகு நிறுவனத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்த விரல்விட்டு எண்ணக்கூடிய விஞ்ஞானிகளில் பார்த்தியும் ஒருவர்.

    நாசாவில் பார்த்தியும் அவரது குழு உறுப்பினர்களும் ஓசோன் படலம், பருவ நிலை மாற்றம் போன்றவை குறித்து  தீவிர ஆய்வு மேற்கொண்டதோடு, புற விண்வெளியில் உயிரினம் வாழ்வது தொடர்பான கண்டுபிடிப்பிலும் இறங்கினர். இந்தியாவுக்கு திரும்பிய பின்னர், பார்த்தி, பயோடெக்னாலஜி ஆய்வுத் துறையில் வர்த்தக ஆலோசகராக செயல்பட்டார். அதனைத் தொடர்ந்து சென்னை ஐஐடியில் 2008 ஆம் ஆண்டு அறிவியல் ஆய்வு அடிப்படையிலான சொந்த நிறுவனத்தை உருவாக்கினார்.

    அறிவியல் ஆய்வுத்துறையில் இருந்த பார்த்தி தனது நீண்டகால கனவான கலைத்துறைக்கு மாற முடிவு செய்தார்.
    தனது பள்ளி நாட்களில் பார்த்தி நடிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தவர். கல்லூரி காலகட்டத்தின்போது, கலை நிகழ்ச்சிகளில் தன்னை முன்னிறுத்திக் கொண்டவர். அமெரிக்காவில் ஜூம்பா நடனம் கற்றுக்கொண்டு தனது திறமையை வளர்ப்பதில் தொடர்ச்சியாக ஆர்வம் காட்டியவர்.

    இந்த புது முயற்சியில் அறிவியலையும், நடிப்பையும் ஒன்றாக இணைக்க முடிவு செய்தார். விஞ்ஞானி தொடர்புடைய கதையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதன் காரணமாகவே, அவரது திரைப்படத்துக்கு விஞ்ஞானி என்று பெயர் சூட்டினார். தமிழ் திரையுலகில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு வெற்றி பெறுவதே தன்னுடைய நோக்கம் என்று கூறுகிறார்.

    ‘விஞ்ஞானி’ திரைப்படம் அனைவரும் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிப்பவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான நடிகர்கள். நடிகை மீராஜாஸ்மின் பட நாயகி. நடிகர்கள் விவேக், தலைவாசல் விஜய், போஸ் வெங்கட், தேவதர்ஷினி போன்றோரும் இதில் நடித்துள்ளனர். நடிகை சஞ்சனா சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கிமாயா சினேகா இந்த படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.

    மாரிஸ் விஜயின் இசையில், பார்த்தி உருவாக்கி உள்ள இந்த திரைப்படத்தின் இசை வரும் இன்று பிரசாத் ஸ்டுடியோவில் வெளியிடப்படுகிறது. 

    பாரதிராஜா பாராட்டால் துள்ளி குதிக்கும் இளம் இசை புயல்..!

    By: Unknown On: 10:19
  • Share The Gag
  • சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஜிகர்தண்டா’. இப்படத்தை கார்த்திக் சுபாராஜ் இயக்கியிருந்தார். சித்தார்த்-லட்சுமி மேனன் ஜோடியாக நடித்திருந்த இப்படத்தில் சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் அனைவரிடையே அதிகம் பேசப்பட்டது. ஆக்‌ஷன் கலந்த காமெடி படமாக உருவாகிய இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

    இப்படம் வெளியான நாளில் இருந்து, படம் குறித்த நல்ல கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக திரையுலக பிரபலங்கள் பலர் படத்தை பாராட்டியும் கார்த்திக் சுபாராஜுக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் மணிரத்னம் படத்தைப் பார்த்து பாராட்டுக்களை தெரிவித்தார்.

    இந்நிலையில் தற்போது பாரதிராஜா, கார்த்திக் சுபாராஜை அழைத்து ஜிகர்தண்டா படம் சிறப்பாக இருந்தது என்றும் எனக்கு மிகவும் பிடித்திருந்தாகவும் கூறி அவரை பாராட்டினார்