Friday, 22 August 2014

அழகாகணுமா. அழ கூடாது....!

By: Unknown On: 20:29
  • Share The Gag
  • சீரியலில் வரும் பெண்களை போல எப்போதும் அழுது கொண்டே இருந்தால் அழகு குறையும் என்று சமீபத்திய ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற பெண்களை ஆண்களுக்கு அறவே பிடிக்காது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு இரக்க குணம் அதிகம். எப்போதும் அதிகளவு உணர்ச்சி வசப்படுவார்கள். சின்ன கஷ்டம் என்றால் கூட உடனே அழுது விடுவார்கள். தனது பிரச்னை மட்டுமின்றி பிறரின் துன்பத்துக்காகவும் அழுது விடுவார்கள்.

    இந்நிலையில் இஸ்ரேலை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பான ஆய்வொன்றை மேற்கொண்டனர். இதில் ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர். அவர்களில் பெண்களை மட்டும் தனிக்குழுவாக பிரித்து பரிசோதனை செய்தனர். அந்த குழுவின் மொத்தம் 60 பெண்கள் இருந்தனர்.பெண்கள் அமர்ந்திருந்த தனி அறையில் மிகவும் மோசமான அழுகை காட்சிகள் கொண்ட திரைப்படம் திரையிடப்பட்டது. சுமார் அரை மணி நேரம் படம் ஓடியது. இதனால் பெண்களுக்கு கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது.

    அப்போது அறைக்குள் நுழைந்த ஆராய்ச்சியாளர்கள் படம் பார்த்து கண்ணீர் வடித்த பெண்களின் கண்ணீரை சோதனைக் குழாய்களில் சேகரித்தனர். கண்ணீர் வராத பெண்களுக்காக மற்றொரு சோதனைக் குழாயில் உப்பு கலந்த நீரை தயார் செய்தனர். பின்னர் கண்ணீர் வடிந்த பெண்களின் முகத்தில் உண்மையான கண்ணீரையும், கண்ணீர் வராத பெண்களின் முகத்தில் உப்புநீரையும் பேசியல் செய்து போல் அப்ளை செய்தார்கள். இப்போது யாருக்கு உண்மையான கண்ணீர், யாருக்கு பொய்யான கண்ணீர் என்பது ஆய்வாளர்களை தவிர மற்றவர்களுக்கு தெரியவில்லை.

    இந்நிலையில் வெளியே இருந்த ஆண்கள் சிலரை உள்ளே அழைத்து அந்த பெண்களின் அருகில் சென்று பேசச் செய்தார்கள். அப்போது ஆண்களின் முகத்தில் ஏற்படும் மாறுதல்களை துல்லியமாக பதிவு செய்தனர். அதே வேளையில் ஆண்களுக்கு காதல் உணர்வை தோற்றுவிக்கும் டெஸ்ட்ரோஜன் ஹார்மோன் அவர்களது உடலில் எந்தளவு சுரக்கிறது என்பதையும் ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் கண்ணீர் வடிக்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது என்றும், அவர்களது அழகு குறையும் என்றும் தெரியவந்தது. எனவே பெண்களே, அழுவது அழகல்ல. சிரித்த முகத்துடன் இருங்கள். துன்பம் எப்போதும் உங்களை நெருங்காது...

    படப்பிடிப்பில் சுருதிஹாசனை எட்டி உதைத்த குதிரை: காயமின்றி தப்பினார்

    By: Unknown On: 20:02
  • Share The Gag
  • ‘தேவார்’ என்ற இந்தி படத்தில் சுருதிஹாசன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடுகிறார். இந்த படத்தில் நாயகனாக அர்ஜூன் கபூர் நடிக்கிறார். இவர் போனிகபூரின் மகன் ஆவார்.

    குத்தாட்ட பாடலுக்காக படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடிந்தது. சுற்றிலும் குதிரைகளை நிற்க வைத்து நடுவில் சுருதிஹாசனும், அர்ஜூன் கபூரும் ஆடுவது போன்று இக்காட்சியை எடுத்தனர்.

    அப்போது ஒரு குதிரை சுருதிஹாசனை நோக்கி வேகமாக வந்தது. திடீரென காலால் எட்டி உதைத்தது. இதனை பார்த்த அர்ஜூன் கபூர் பாய்ந்து சென்று சுருதிஹாசனை பிடித்து இழுத்து காப்பாற்றினார். இதனால் காயமின்றி சுருதிஹாசன் தப்பினார்.

    தன்னை காப்பாற்றிய அர்ஜூன் கபூருக்கு சுருதி நன்றி தெரிவித்தார்.

    சுருதிஹாசன் தமிழில் ‘பூஜை’ படத்தில் விஷால் ஜோடியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. நான்கு இந்தி படங்களிலும் நடிக்கிறார்.

    கூவம் நதியை சுத்தப்படுத்தினால் நாம் சரித்திரத்தில் இடம் பிடிப்போம் - கமல்ஹாசன்

    By: Unknown On: 18:24
  • Share The Gag
  • இன்று 375வது பிறந்தநாளை கொண்டாடும் சென்னைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், இரண்டு நதிக்கரைகளைக் கொண்ட சென்னையை இரண்டு சாக்கடைகள் கொண்ட சென்னையாக நாம் மாற்றிவிட்டோம், இந்த அவப்பெயரை மாற்றும் விதத்தில், இந்த சாக்கடைகளை சுத்தப்படுத்தினால் நாம் சரித்திரத்தில் இடம் பிடிப்போம், என்று கூறியுள்ளார்.

    சென்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில் வீடியோ ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள கமல்ஹாசன் அதில் கூறியிருப்பதாவது:

    ஈஸ்ட் இந்தியா கம்பெனி, டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என்று யார் யாரோ படையெடுத்த சென்னையை ஆங்கிலேயர்கள் பிடித்தார்கள். கடற்கரை கிரமமான சென்னையும் ஒரு தீவு தான். இரண்டு நதிக்கரை கிராமம் என்று ஸ்ரீ ரங்கத்தை சொல்வார்கள். ஆனால், சென்னையும் இரண்டு நதிக்கரை நகரம் தான். இங்கு ஓடிய இரண்டு நதிகளை நாம், இரண்டு சாக்கடைகளாக்கியுள்ளோம்.

    இதை சாக்கடையாக மாற்றிய நம்மால், இதை மீண்டும் தூய்மைப்படுத்தி நதியாகவும் மாற்றும் திறன் உண்டு. அப்படி நாம் செய்தால், நமது பெயர் சரித்திரத்தில் இடம் பெறும். இழந்ததை மறந்து, பெற்றதைக் கொண்டு நாம், 375 வயதாகும் இளம் தாயான சென்னையின் பிறந்தநாளை கொண்டாடுவோம்.

    இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    குழந்தை வளர்ப்பதில் சில தவறான பழக்க வழக்கங்கள் !

    By: Unknown On: 17:17
  • Share The Gag
  •   
    1. குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும். வேறு எந்தப் பொருளும் என்ன காரணம் கொண்டும் ஊட்டக்கூடாது.


    *
    2. பிறந்த சில குழந்தைகளுக்கு மார்பகத்தில் பால் கட்டி தடித்து இருக்கும். இதை குழந்தை வீறிட்டு அழுவதையும் பொருட்படுத்தாது நசுக்கி விட்டு பாலை வெளியே எடுக்கும் பழக்கம் உள்ளது. இது நல்லது அல்ல. மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.


    *
    3. பச்சிளங்குழந்தை அழுவதற்கு காரணம் ‘உரம் விழுந்து இருக்கிறது’ என்று எண்ணி ‘உரம் எடுத்தல்’ என்று செய்கிறார்கள். இது தவறான பழக்கம். இப்படியொரு ‘நோய் நிலை’ இல்லை.


    *
    4. அடிக்கடி பேதியாகும் குழந்தைகளுக்கும் தொக்கம் எடுக்கிறார்கள். அப்படி ஒன்று கிடையாது. பேதியின் காரணம் என்ன என்று அறிந்து அதற்கான வைத்தியம் செய்ய வேண்டுமே தவிர தொக்கம் எடுப்பது தவறு - சில சமயம் விபரீதம் ஏற்படக் கூடும்.



    பேதியை உடனே நிறுத்தும் மாத்திரையை கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது. வயிற்றில் ஏதோ ஒரு பொருள் ஒதுங்கி உள்ளது என்று ‘தொக்கம் எடுத்தல்’ என்று சொல்கிறார்கள். இது இல்லாத ஒன்று. அது போல் குடல் ஏற்றம் என்று ‘குடல் தட்டல்’ என்று செய்கிறார்கள். இது தவிர்க்கப்படவேண்டும்.


    *
    5. சில குழந்தைகளுக்கு பிறந்து சில மாதங்களுக்கு தொப்புள் சிறிது வெளியே தள்ளிக் கொண்டு இருக்கும். அதை அமுக்கி காசு வைத்து கட்டும் பழக்கம் கூடாது. மாறாக தொப்புளைச் சுற்றி உள்ள பகுதியில் விரலை வைத்து சிறிது சிறிது அமுக்கி அமுக்கி விடலாம்.


    *
    6. சாம்பிராணி, கொமஞ்சான் புகை போடுவதால் சில குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படும் வாய்ப்பு உண்டு. அவை அவசியமில்லை; பயனுமில்லை.


    *
    7. சில பெரியவர்கள் மூக்கில் ஊதி சளியை எடுக்க முயல்கிறார்கள். இது தவறான பழக்கம். இதனால் இவர்களின் வாயில் உள்ள நுண்கிருமிகள் எளிதில் குழந்தைகளுக்குப் பரவும்.


    *
    8. தலைக்கு குளிக்க வைக்கும் முன் தலையில் எண்ணெய் தடவும் பழக்கம் உள்ளது. இதனால் எண்ணை தண்ணீருடன் முகத்தில் இறங்கி மூக்கு துவாரம் அருகே வரும்போது மூக்கு அனிச்சை செயலாக அதை உறிஞ்சி உள்ளே இழுத்து அதனால் சளி, நிமோனியா போன்ற நோய் வர வாய்ப்பு உள்ளது.



    *
    9. தோலில் சிலசமயம் நுண்கிருமிகளின் பாதிப்பால் சிறுசிறு சீழ் வைத்த பரு போன்று கூட்டாக ஏற்படுவதை ‘அக்கி’ என்று சொல்லி அதற்கு அக்கி எழுதுவதாக சிலர் நம்புகிறார்கள். மருந்தை உட்கொண்டாலே ஒழிய வெறும் அக்கி எழுதுவதால் போய் விடாது.

    அமுக்குவான் பேய் - உண்மையா?....

    By: Unknown On: 17:16
  • Share The Gag

  • இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்ணைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம் கழித்துத்தான் உங்களால் எதுவும் செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள். என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய்.


    உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமான பேய் இல்லை என்றாலும், இதுவும் ஒரு முக்கியமான பேயாக கிரேக்கப் புராணங்களில் கூறப்படுகிறது. பொதுவாய் அமுக்குவான் பேய்கள் மற்ற பேய்கள் போல் புளியமரத்திலோ வேப்பமரத்தின் உச்சியிலோ இருக்காது. பூச்சிகளின் இராஜாவான இது உங்கள் வீட்டின் சிலந்திகளின் கூட்டிற்குள், எறும்புகளின் குறிப்பாக சிவப்பு எறும்புகளின் புற்றில், கரப்பான் பூச்சிகளின் பொந்துகளில் தான் வாழும். இது உலவும் நேரம் பெரும்பாலும் சூரியன் உதிப்பதற்கு சற்று முன்பாக மூன்று மணியில் இருந்து நாலு மணி வரை ஆனால் சில சமயம் அவை பகலில் கூட வரும். என்றெல்லாம் சுவாரஸ்யமாக த்ரில்லாக கதை எழுத ஆசைதான் ஆனால் அது உண்மை இல்லையே, என்ன செய்வது? நம்மூரில் அமுக்குவான் பேய் என்று சொல்லப்படுவது உண்மையில் தூக்க பக்கவாதம் என்கிற கோளாறு.


    சில சமயம் உங்கள் மூளை விழித்துக்கொண்ட பிறகும் உங்கள் உடல் தூங்கிக் கொண்டே இருக்கும். அதனால்தான் உங்களால் எழவோ, பேசவோ, கண்களைத் திறக்கவோ முடியாது. இந்தக் கோளாறு தூக்கத்தில் ஏற்படும் இடையூறினால் இது வருகிறது. துயில் மயக்க நோய், ஒற்றைத் தலைவலி, ஏக்க நோய்கள், மற்றும் தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஆகிய கோளாறுகளுக்கும் இதற்கும் தொடர்புகள் உண்டு. இதை தனிமைத் தூக்க பக்கவாதம், தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள்.


    இதில் தனிமைத் தூக்க பக்கவாதம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் எப்போதாவது இரு நிமிடங்களுக்கும் குறைந்த நேரத்தில்தான் நிகழும். இது ஒன்றும் பிரச்னைக்குரியது அல்ல. தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் பேருக்கு ஏற்றபடி அடிக்கடி ஏற்படும். மேலும் இது ஒரு மணி நேரம் வரைக்கும் கூட இருக்கும். சில சமயம் அந்தரத்தில் பறப்பது போல்கூட தோன்றும். இதற்கு மருத்துவர்களிடம் (மந்திரவாதிகளிடம் அல்ல) சென்றே ஆகவேண்டும். துயில் மயக்க நோய் உடையவர்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களில் 50 சதவீதம் பேருக்கு இப்பிரச்னை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


     ஆனால், இன்றும் பெரும் அளவில் மக்கள் இது ஏதோ பில்லி சூனியத்தின் வேலை என்று நினைத்துக் கொண்டு மந்திரவாதிகளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரி மூட நம்பிக்கைகளில் இருந்து மக்கள் விடுபடும் காலம் என்றுதான் வருமோ?

    கருவுற்ற பெண்களும் கொசுக்களும்...?

    By: Unknown On: 08:17
  • Share The Gag

  • கருவுற்ற பெண்களின் உடலில் ஏற்படும் பலவிதமாற்றங்களால் கொசுக்கள் அதிக அளவில் அந்த பெண்களை தேடி வந்து கடிக்கும் வாய்ப்புள்ளது என்று ஆப்பிரிக்காவில் காம்பியா நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதன் காரணமாக கருவுற்ற பெண்களுக்கு மலேரியா போன்ற கொசுக்கடி தொடர்பான நோய்கள் அதிகமாக வரும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. கருவுற்ற பெண்களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் எப்பொழுதும் சுவாசிப்பதை விட வேகமாக அதிக அளவில் சுவாசிப்பார்கள்.

    அவர்கள் வெளிவிடும் மூச்சுக் காற்றில் கலந்துள்ள சில ரசாயனங்கள் கொசுக்களை கவர்ந்திழுக்கும் தன்மை வாய்ந்தவை. மேலும் கருவுற்ற பெண்களின் உடல் வெப்பம் அதிகரிக்கும். அதனால் உடல் வெப்பத்தை தணிப்பதற்காக தோலின் மேற்பரப்பு வரையில் ரத்தம் பாயும்.

    இதனை கொசுக்கள் தங்கள் மோப்ப சக்தியின் மூலம் அறிந்து கொள்கின்றன. கருவுற்ற பெண்களை லேசாக கடித்தால் ரத்தம் வரும் என்று அறிந்து ,கருவுற்ற பெண்களை அதிகளவு கடிக்கின்றன.

    இரவு நேரங்களில் கொசுக்கடிக்கு பாதுகாப்பாக கொசுவலை கட்டிக் கொண்டு தூங்குவது பொதுவாக வழக்கம். கருவுற்ற பெண்கள் இரவு நேரங்களில் அடிக்கடி இயற்கையின் உந்துதலுக்காக கொசுவலையில் இருந்து எழுந்து கழிமுறை செல்ல வேண்டியதாக இருக்கும்.

    அந்த சமயங்களிலும் கருவுற்ற பெண்கள் கொசுக்கடிக்கு ஆளாகின்றனர். இவ்வாறு ஆப்பிரிக்காவில் கருவுற்ற பெண்களின் மலேரியா காய்ச்சலுக்கு ஆளாகும் பெண்கள் அதிகம். இதனால் குறைபிரவசம், குழந்தை இறந்தே பிறப்பது, எடை குறைவான குழந்தைகள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    எப்போதும் கொசுக்களிடம் இருந்து நம்மை தற்காத்துகொள்வது நல்லது. கொசுக்கள் அடியோடு ஒழிக்க சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வீட்டை சுற்றிலும் குப்பை, கழிவு நீர் போன்றவை தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

    காக்கா முட்டைக்கு கிடைத்த அங்கீகாரம்...! அப்படி அதில் என்ன இருக்கிறது..!

    By: Unknown On: 07:32
  • Share The Gag
  • தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் எம்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் படம் 'காக்கா முட்டை'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்  இசையமைத்திருக்கிறார்.

    இப்படத்தின் சில போஸ்டர்கள் மட்டும் வெளிவந்தன. படத்தின் டீஸர், டிரெய்லர் எதுவும் வெளியாகவில்லை. ஊடக வெளிச்சம் அதிகம் படாமலிருந்த நிலையில் இப்படத்திற்குத் தற்போது பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

    கனடாவில் நடைபெறும் 2014க்கான டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் 'காக்கா முட்டை' படம் திரையிடுவதற்குத் தேர்வாகியுள்ளது. செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள இவ்விழாவில் 5,6 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இத்திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

    ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் பீட்சா விளம்பரத்தைப் பார்த்து அதை ஒரு முறையாவது சாப்பிட வேண்டும் என ஆசைப்படுகிறார்கள், அவர்கள் ஆசை நிறைவேறியதா? என்பதே இப்படத்தின் கதை.

    இப்படத்தை வுண்டர்பார் ஃபிலிம்ஸ், கிராஸ் ரூட் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

    எம்.ஜி.ஆர் ,ரஜினிக்கு பிறகு விஜய் தான் - சீமான் பேச்சு!

    By: Unknown On: 07:07
  • Share The Gag
  • எம்.ஜி.ஆர் ,ரஜினிக்கு பிறகு விஜய் தான் - சீமான் பேசிய வீடியோ உள்ளே


    கத்தி படத்துக்காக கோடம்பாக்கத்தில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் கார்த்திருகின்றனர்.

    இன்றைய தேதில் படம் வெளிவருமா வாரதா என்ற கேள்விக்கு பதில் இல்லை என்றாலும் ஆதரவு கை நீட்ட பல சமுக அமைப்புகள் முன் வந்து உள்ளனர் , அதில் முக்கியமானவர் சீமான்.

    கத்தி படத்தை தடை செய்வது தவறு என்றும் எம்.ஜி.ஆர் ,ரஜினிக்கு பிறகு விஜய் போன்ற ஒரு கலைஞனை வளர விடாமல் தடுப்பது தவறு என்று  குறிப்பிட்டு உள்ளார்