Tuesday, 22 July 2014

சமையல் எண்ணை ஓர் தெளிவு! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே..!

By: Unknown On: 23:09
  • Share The Gag

  • சமையல் எண்ணையில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது. கொழுப்புச் சத்துக்களை இரண்டுவகையாகப் பிரிக்கலாம்.


    1) முழுமையடையாத கொழுப்பு (Poly unsaturated Acid)


    2) முழுமையடைந்த கொழுப்பு (Saturated Fatty Acid)


    இதில் முதல்வகைக் கொழுப்பில் அதிக தீங்குகள் இல்லை. இவை இரத்தக் குழாயில் படியாது. இதிலுள்ள Linolic Acid கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையுடையது.

    இரண்டாம் வகைதான் மிக ஆபத்தானது. இதில் உள்ள கொழுப்புக்கள் இரத்தக் குழாயில் படிந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.

    எனவே முழுமையடைந்த கொழுப்புக்கள் அதிகமாக உள்ள தேங்காய் எண்ணெய், நெய், பாம் ஆயில் போன்றவற்றை தவிர்த்துக் கொள்வதோடு சபோலா கார்டி ஆயில், கார்ன் ஆயில், சன் ஃபிளவர் போன்ற சமையல் எண்ணைகளை பயன்படுத்தி ஆரோக்கிம் காப்பீர்.

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
    மனித வாழ்க்கையில் மரணம் என்பது தடுத்து நிறுத்த முடியாத ஒன்று, எனினும் நாம் உடல் நலத்துடன் வாழ முயற்சித்தல் வேண்டும். இவ்வளவு விஷயங்களை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவது சாத்தியம் தானா? முயன்றால் நம்மால் முடியும். அதே நேரம் மார்க்கக் கண்ணோட்டத்தோடு நோக்கினால் நிச்சயம் முடியும்.

    ஐந்துக்கு முன் உள்ள ஐந்தினைப் பேணிக் கொள்ளுங்கள்.

    1) முதுமைக்கு முன் உள்ள வாலிபம்

    2) வறுமைக்கு முன் உள்ள செல்வம்

    3) நோய்க்கு முன் உள்ள ஆரோக்கியம்

    4) வேலைக்கு முன் உள்ள ஓய்வு

    5) மரணத்திற்கு முன் உள்ள வாழ்வு


    எனவே மேலே கூறியது போன்று நோய்க்கு முன் உள்ள ஆரோக்கிய வாழ்வினைப் பெற்று அதனைத் தக்க வைத்துக் கொள்ள மரணத்திற்கு முன் உள்ள வாழ்வில் வேலைக்கு முன் உள்ள ஓய்வினை உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே பயன்படுத்தாது நமக்கும், நம் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், படைத்த இறைவனுக்கும் ஆற்ற வேண்டிய நற்செயல்களை கருத்தில் கொண்டு உணவுக் கட்டுப்பாட்டுடன் கூடிய உடற்பயிற்சி செய்து நோயற்ற வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவன் நமக்கு உதவி செய்வானாக!

    குஷ்பு தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமானுடன் சிவகார்த்திகேயன்..!

    By: Unknown On: 21:04
  • Share The Gag
  • குஷ்புக்கு இப்போ அதிஷ்டகாற்று வீசுதுபோல. அஜீத்தை வைத்து குஷ்பு படம் தயாரிக்க விரும்பியதாகவும், இது தொடர்பாக அஜீத்திடம் கூறியதாகவும் செய்திகள் வெளியாயின.ஆனால் குஷ்புக்கு கால்ஷீட் கொடுத்தால் தேவையில்லாத பிரச்னைகள் வருமோ என்று அஞ்சிய அஜீத்
    காலம் தாழ்த்தியதாகவும் கூறப்பட்டது.காரணம் அவர் சார்ந்திருந்த கட்சியே.இதனால்தான் குஷ்பு கட்சியை விட்டு வெளியேறியதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனாலும் அஜீத்தின் பார்வை தங்கள் பக்கம் இல்லை என்பதை உணர்ந்த குஷ்பு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தாராம்.

    தற்போதைக்கு நல்ல வரவேற்பில் உள்ள சிவகார்த்திகேயனை அணுகினால் என்ன என்று யோசித்தாராம். அவரது கனவிற்கு புத்துயிர் கொடுத்துள்ளார் ஹன்சிகா. இந்த விசயத்தில் ஹன்சிகா ரிஸ்க் எடுக்க காரணம் குஷ்புடன் நல்ல நெருக்கமே காரணம்.நான் பார்த்துக்குறேன் இந்த விசயத்தை என்று கூறியது மட்டுமல்லாமல், சிவகார்த்திகேயனிடம் அதனை தெரிவித்தாராம்.ஹன்சிகா சொல்லி மாட்டேன் என்பாரா? சம்மதம் தெரிவித்தாராம் அவர். ஆனால் ஒரு நிபந்தனையுடன்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவேண்டும் என்றாராம்.

    தங்க புதையலே கையில் கிடைக்கபோகுது. இந்த ரிஸ்க நான் எடுக்குறேன் என்ற குஷ்பு இது குறித்து ராஹ்மானிடம் பேச, சிவா மீது தனி பட்ட முறையில் நல்ல மரியாதை வைத்திருக்கும் ரஹ்மான் உடனே சம்மதம் தெரிவித்தாராம். இனி ஒரு சுயோக தினத்தில் பூஜை போட்டு படப்பிடிப்பை துவங்க வேண்டியதுதான் பாக்கி. கதாநாயகி குஷ்புவுக்கு இந்த வாய்ப்பை பெற்றுதந்த ஹன்சிகாவாகத்தான் இருக்கும்.

    வைரமுத்து, பாரதிராஜா சண்டை முற்றியது!

    By: Unknown On: 19:28
  • Share The Gag
  • தமிழ் திரையுலகில் தன் எழுத்துகளால் எல்லோர் மனதையும் கவர்ந்தவர் வைரமுத்து, அதேபோல் செட்டுக்குள் இருந்த தமிழ் சினிமாவை கிராமங்களுக்கு கொண்டு வந்தவர் பாரதிராஜா.

    சமீபத்தில் கவிஞர் வைரமுத்து மணிவிழாவை, கவிஞர்கள் திருநாள், கலை இலக்கியத் திருவிழாவாக, கோவையில், கடந்த 12, 13 தேதிகளில் கொண்டாடினர். அப்போது பாரதிராஜாவை பேச அழைத்தபோது, அவர் வழக்கம் போல் வாய்க்கு வந்தது எல்லாம் பேச, வைரமுத்து கோபமாகிவிட்டாராம்.

    பின் வைரமுத்து பேசிய போது பாரதிராஜாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேச, உடனே பாரதிராஜா மைக் அருகில் வந்து ’உனக்கு வித்தை தெரியும். எனக்கு உன் அளவுக்குத் தெரியாது. நான், ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்துதான் பேசினேன்; தவறு என்றால், மன்னித்துக்கொள்’ என்று சொல்லிவிட்டு கோபமாக மேடையை விட்டு கீழே இறங்கிவிட்டாராம்.

    குழந்தைகளுக்கு ஏற்படும் காதுவலி பற்றிய தகவல்கள்..!

    By: Unknown On: 19:01
  • Share The Gag
  •                       ஜலதோஷம் (சளி), காய்ச்சலுக்கு அடுத்து குழந்தைகளை அதிக அளவில் பாதிப்பது காது வலி, பொதுவாக, பிறந்து ஆறு முதல் இருபது வாரங்கள் ஆன குழந்தைகளுக்கு இந்தக் காது வலி அதிக அளவில் வருகிறது.

    இந்தக் காது வலியை உடனடியாக குணப்படுத்தாவிட்டால் மீண்டும் வலி ஏற்பட வாய்ப்புகள் மிக மிக அதிகம். மேலும், காதில் சீழ் வடிதல், காது கேளாமல் போதல் போன்ற பிரச்னைகளும் ஏற்படும். இதனால், குழந்தைகளின் பேச்சுத் திறன் கூட பாதிக்கப்படும். சில சமயங்களில், காது வலி தானாகவே சரியாகிவிடும்.

    காரணங்கள்


     குழந்தைகளுக்கு ஜலதோஷம் (சளி) பிடிக்கும்போது, தொண்டை முழுவதும் புண்ணாகி வீங்கிவிடும். அதனால், தொண்டையில் இருந்து காது வரை செல்லும் யூஸ்டேஷியன் குழாயின் ஒரு முனையானது (தொண்டையில் இருக்கும் குழாய்) அடைபட்டுவிடும். மேலும், காற்று உறிஞ்சப்பட்டு, காதுப்படலமானது உள்நோக்கி நகருவதால், வலி ஏற்படுகிறது.
    பாதிக்கப்படுபவர்கள்

    * வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ஒருமறையாவது காது வலி வந்துவிடும். இரண்டு வயதுக்குப் பிறகு இந்த வலி வருவது குறைந்துவிடும்.
     * பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள்தான் காது வலியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

     * பெற்றோர்கள் காது வலியால் அவதிப்பட்டால், அவர்களுடைய குழந்தைகளுக்கும் காது வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

     * சத்துணவு சாப்பிடாத குழந்தைகள், உடனடியாக மருத்துவ உதவி கிடைக்காத குழந்தைகள், சிறிய வீட்டில் நிறைய பேருடன் வசிக்கும் குழந்தைகள், சுற்றுப்புறச் சூழல் மிகவும் மோசமாக உள்ள பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்குக் காது வலி அடிக்கடி ஏற்படும்.

     * பிளவுபட்ட அன்னம், மரபியல் கோளாறுகள் உள்ளவர்களுக்கு யூஸ்டேஷியன் குழாய் சரியாக வேலை செய்யாதால் காது வலி வருகிறது.

     * அடிக்கடி ஜலதோஷத்தால் (சளி) பாதிக்கப்படும் குழந்தைகளுக்குக் காது வலி ஏற்படும்.

    அறிகுறிகள்


     காது வலிக்கான அறிகுறிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும். காது வலியால் குழந்தைகள் எரிச்சலுடனும், ரியாகத் தூங்க முடியாமலும் அவதிப்படும். குழந்தைகள் சரியாகச் சாப்பிடமாட்டார்கள். அடிக்கடி காதுகளை பிடித்து தேய்த்துக் கொண்டோ, காதுகளை இழுத்துக் கொண்டோ இருப்பார்கள். ஒரு சில குழந்தைகளுக்குக் காயச்சல் இருக்கும். காதில் இருந்து சீழ் வடியலாம். இருமல், சளித் தொல்லை போன்றவை இருக்கும். காது சரியாகக் கேட்காமல் இருக்கும்.

    சிகிச்சை

     பிறந்து ஒரு மாதம்கூட நிறைவடையதாக குழந்தைகளுக்குக் காது வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை அளிக்க வேண்டும். இரண்டு வயதுக்கு உள்பட்ட குழந்தையாக இருந்தாலும் டாக்டரிடம் காண்பித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

    தவிர்க்கும் முறைகள்

    * குழந்தைகளைக் காது வலி தொல்லையில் இருந்து காப்பாற்ற தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

     * வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வீட்டுக்குள்ளேயே சிகரெட், பீடி பிடிக்கக்கூடாது.

     * குழந்தைகளுக்குச் சத்தான உணவு வகைகளைக் கொடுக்க வேண்டும்.

     * ஜலதோஷம்(சளி), இருமல் இருந்தால் உடனடியாகச் சிகிச்சை அளிக்க வேண்டும்.

     * வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

     * குழந்தைகளை விரல் சூப்ப விடக்கூடாது.

     * நிமோக்கஸ் , இன்ஃப்ளூயன்சா போன்ற நோய்கள் வராமல் இருக்க தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும்.

    தந்தையின் நண்பரை நடிக்க வைத்த கமல்..!

    By: Unknown On: 17:15
  • Share The Gag
  • கமல் தற்போது உத்தம வில்லன் படத்தில் நடித்து வருகிறார். பூஜாகுமார், ஆண்ட்ரியா, பாமா நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் தன் குருநாதர் பாலச்சந்தரையும் நடிக்க வைத்திருக்கிறார். அதேபோல தனது தந்தை சீனிவாச அய்யங்காரின் நண்பரும், எழுத்தாளருமான அரு.நாகப்பனையும் நடிக்க வைத்திருக்கிறார்.

    உத்தம வில்லன் படத்தில் கமல் கோவை பகுதி பேச்சு வழக்கில் பேசி நடிக்கிறார். இதற்காக அந்த பேச்சு வழக்கை நன்றாக கற்றுக் கொள்வதற்காக அதில் தேர்ந்த அரு.நாகப்பனை அணுகியவர் அப்படியே அவரை நடிகராகவும் ஆக்கிவிட்டார். ஆரம்பத்தில் நடிக்க மறுத்த அரு.நாகப்பன் அதன் பிறகு சம்மதித்து நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பில் 15 நாட்கள் நடித்திருக்கிறார்.

    இதுகுறித்து அரு.நாகப்பன் கூறியதாவது: கமலை நான் குழந்தையாக இருப்பதில் இருந்து அறிவேன். பரமக்குடியில் கம்பன் விழாவில் சீனிவாச அய்யங்கார் தலைமையில் நடந்த கருத்தரங்கில் நான் பேசியிருக்கிறேன். மறுநாள் நடந்த கவியரங்கில் கலந்துகொண்டு அவர் என்னை பாராட்டினார் அன்று முதல் நாங்கள் நல்ல நண்பர்களானோம். அவர் பெரியவராக இருந்தாலும் அப்போது இளைஞனாக இருந்த என்னுடன் அவர் நட்பு பாராட்டினார்.- காங்கிரஸ் நூற்றாண்டு விழாவுக்கு அவருடன் சென்று நிதி திரட்டியிருக்கிறேன்.
    கமல் என்னை கோயம்புத்தூர் கொங்கு தமிழை செம்மைப்படுத்தத்தான் அழைத்தார் திடீரென நடிக்க வைத்துவிட்டார். அந்த அனுபவம் நன்றாக இருந்தது. என்கிறார் அரு நாகப்பன். விருமாண்டி படத்தில் எழுத்தாளரும் பேச்சாளருமான ஞானசம்பந்தனை அறிமுகப்படுத்தியவரும் கமல்தான்

    பணத்தை மிச்சப்படுத்த சில டிப்ஸ்... படித்துப் பாருங்களேன்..!

    By: Unknown On: 16:49
  • Share The Gag

  • சேமிப்பு என்று ஒன்று இருந்துவிட்டால், வீட்டில் எழும் பல்வேறு பொருளாதார பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கிடைத்துவிடும். உங்கள் உழைப்பை சேமிப்பாக மாற்ற சில டிப்ஸ்…

    * தினமும் நீங்கள் செலவழித்ததை, இரவில் எழுதிப் பாருங்கள். அதில் தேவையற்ற செலவு எனத் தோன்றுவதை அடுத்த முறை தவிர்த்துவிடுங்கள்.

    * மணிக்கு ஒரு முறை காபி, டீ குடிக்கும் பழக்கம் உடையவராக இருந்தால், வீட்டிலிருந்தே ஒரு பிளாஸ்கில் டீ எடுத்துப் போய்விடுங்கள்.

    * புத்தகங்கள் குறித்து முன்பின் அறியாமலேயே வாங்கிக் குவிக்கிறீர்களா? வாடகை புத்தகங்கள் கிடைக்கும் நூலகங்களில் அதனை வாங்கிப் படித்துவிட்டு, அந்த புத்தகத்தை சேர்க்க விரும்பினால் மட்டும் வாங்கிக் கொள்ளலாமே.

    * வீட்டில் தேவைக்கு அதிகமான அலங்காரப் பொருள்கள் அல்லது ஃபர்னிச்சர் பொருள்களை வாங்க நினைத்தால், அந்த திட்டத்தை பத்து நாள் தள்ளிப்போட்டுப் பாருங்கள். அதற்குப் பின்னும் தேவையென்று தோன்றினால் வாங்குங்கள்.

    * நீங்கள் வாங்கவிருக்கும் அல்லது செலவழிக்கப்போகும் பொருளை மூன்று விதமாகப் பிரியுங்கள். அவசியம், அத்தியாவசியம், அனாவசியம். “அத்தியாவசியம்’ என்று தோன்றுவதை மட்டும் செய்யுங்கள்.

    * தபால் நிலையம், வங்கி, அலுவலக சேமிப்பு என நம்பகமான இடங்களில் சிறு சிறு தொகையை சேமியுங்கள். அவசரத் தேவைக்கு அது உதவும்.

    *கிரெடிட் கார்டு உபயோகிப்பதை பெரும்பாலும் தவிர்த்துவிடுங்கள். கையில் பணத்தை வைத்துக் கொண்டு, வட்டியையும், முதலையும் சேர்த்து செலுத்த வேண்டாமே!

    மீண்டும் பிரியாணி பரிமாறிய அஜித்! தல தலதான்..!

    By: Unknown On: 16:40
  • Share The Gag
  • நடிகர் அஜித் கார்,பைக் ரேஸ், சமையல் , மற்றும் புகைப்படக்கலை ஆகியவற்றில் அதீத ஆர்வம் உடையவர்.

    விருந்தோம்பலுக்கு மிக எடுத்துக்காட்டாக இருக்கும் அஜித் தன் வீட்டிற்கு யார் வந்தாலும் தன் கையாலேயே காபி , டீ  கொடுத்து உபசரிக்கும் பழக்கம் உடையவர். ஷூட்டிங் இடைவெளியின் போது பிரியாணி செய்து படக்குழுவினருக்கு பரிமாறும் பழக்கம் உடையவர்.

    தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலும் பிரியாணி செய்து படக்குழுவினருக்குப் பரிமாறி உள்ளார் அஜித். சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்  பிரியாணி சாப்பிட்டு மகிழ்ந்துள்ளனர்.

    ஒண்ணுமே இல்ல..! ‘இருக்கு ஆனா இல்ல’ - திரைவிமர்சனம்!

    By: Unknown On: 08:08
  • Share The Gag

  • என்ஜினியரிங் முடித்து ஒரு ஐ,டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் நாயகன் விவாந்த். யாரிடமும் சகஜமாக பழகாத இவருக்கு ஒரேயொரு நண்பனாக ஆதவன். இவர்களுடன் நாயகி மனிஷா ஸ்ரீயும் அதே கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    வாழ்க்கையில் எவ்வித சுவாரஸ்யம் இல்லாமலும், எந்தவொரு பிடிப்பும் இல்லாத நாயகன் நண்பனுடன் சேர்ந்து தினமும் குடியும், கும்மாளமுமாக இருக்கிறார்.

    ஒருநாள் நாயகன் பாரில் தண்ணியடித்துவிட்டு பைக்கில் தனிமையில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது ஒரு லாரி இவரின் பைக்கையும், அருகில் சென்ற ஆட்டோவையும் உரசி விபத்து ஏற்படுத்திவிட்டு சென்றுவிடுகிறது.

    இதில் ஆட்டோ கவிழ்ந்துவிடுகிறது. அதில் பயணம் செய்த மற்றொரு நாயகி ஈடன் சம்பவ இடத்திலேயே இறந்துபோகிறாள். இதைப் பார்த்ததும் நாயகன், அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பி போய்விடுகிறார். வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் இவர் அருகில் யாரோ படுத்திருப்பதுபோல் உணர்கிறார்.

    இதனால் பயந்துபோய் வீட்டுக்கு வெளியே வந்து படுத்து தூங்கி விடுகிறார். மறுநாள் அவரது வீட்டுக்கு வரும் ஆதவனிடம் நடந்தவற்றை கூறும் போது அவன் நாயகனிடம் இதெல்லாம் பொய் என்று கூறுகிறான்.

    மறுநாளும் அதே போல் ஒரு உருவம் தன் கூடவே உலாவுவது போல் தோன்றுகிறது நாயகனுக்கு. இதனால் பயந்து போன அவன், மறுநாள் ஆதவனை அழைத்துக் கொண்டு மனோதத்துவ டாக்டரான ஒய்.ஜி.மகேந்திரனிடம் செல்கிறான். அவர் பேய் இருப்பதெல்லாம் உண்மை தான். நிறைவேறாத ஆசைகளுடன் இறக்கின்ற ஆன்மாக்கள் பேயாக நம் கூடவே பயணம் செய்யும் என்று அவர்களிடம் விளக்குகிறார்.

    நாயகனுடைய கண்ணுக்கு மட்டுமே தெரியும் அந்த ஆவி, அவனிடம் பேச்சுக் கொடுக்கிறது. அது, இறந்துபோய்விட்டதால் நான் யாரென்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய வீட்டில் உள்ளவர்கள் யாரென்றும் தெரியவில்லை.

    ஆகையால், அவர்களை கண்டுபிடித்துக் கொடுத்தால் உன்னை விட்டு சென்றுவிடுவேன் என்று கூறுகிறது. இதை ஒய்.ஜி.மகேந்திரனிடம் சென்று நாயகனும் ஆதவனும் சொல்கிறார்கள். அவரும் அந்த ஆவியின் ஆசையை நீ நிறைவேற்றிவிட்டால் அது உன்னை விட்டு சென்றுவிடும் என்று கூறுகிறார்.

    அதன்படி, ஆவியின் ஆசையை நிறைவேற்ற அவளுடைய வீட்டு முகவரியை தேடி அலைகிறான் நாயகன். அப்போது, இரட்டை குழந்தைகளில் இறந்து போன ஈடனின் அக்காவான மற்றொரு ஈடன் ஆஸ்பத்திரியில் கோமா நிலையில் இருப்பதை கண்டுபிடிக்கிறான். இந்நிலையில், நாயகன் வேலை செய்யும் கம்பெனியில் அவனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வருகிறது.

    ஆனால், ஈடனின் அக்காவுக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்காக அந்த வாய்ப்பை உதறித் தள்ளுகிறான். இதற்கிடையில், ஈடனின் அக்காவுடைய இருதயத்தை எடுத்து மற்றொருவருக்கு பொருத்த அந்த மருத்துவமனையின் டாக்டர் நினைக்கிறார்.

    இறுதியில், நாயகன் அந்த மருத்துவரின் திட்டத்தை முறியடித்தாரா? ஈடனின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றி வைத்தாரா? என்பதே மீதிக்கதை.

    நாயகன் விவாந்த் புதுமுகமாக இருந்தாலும் சில இடங்களில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சில இடங்களில் இவர் பேசும்போது நடிகர் ஜெய்யை நினைவுபடுத்துகிறார். அப்பாவித்தனமான முகத்தோற்றத்தில் பளிச்சிடுகிறார். ஈடன் படம் முழுக்க ஆவியாக வந்தாலும் அழகாக இருக்கிறார்.

    படம் ஆரம்பித்தவுடனேயே இவர் இறந்துவிடுவதால் படத்தில் நடிக்க ரொம்பவும் வாய்ப்பு குறைவு. எமோஷனலான காட்சியில் நடிக்க கொஞ்சம் திணறியிருக்கிறார். ஆதவன் முழு நீள காமெடியனாக வந்து போயிருக்கிறார். மனிஷா ஸ்ரீ ஒருசில காட்சிகளே வந்தாலும் பளிச்சிடுகிறார். ஒய்.ஜி.மகேந்திரன் மனோதத்துவ மருத்துவராக மனதில் பதிகிறார்.

    விறுவிறுப்பு இல்லாத காட்சிகளாக படத்தை இயக்குனர் எடுத்திருப்பதால் படம் ரொம்ப நீளமாக இருப்பதுபோல் தெரிகிறது. ஷமீர் இசையில் பாடல்கள் பரவாயில்லை.

    பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பாடல் காட்சிகளில் மட்டும் கிரிஷ் ஏ.சந்தரின் ஒளிப்பதிவு பளிச்சிடுகிறது.

    மொத்தத்தில் ‘இருக்கு ஆனா இல்ல’ ஒண்ணுமே இல்ல.

    'காக்கி சட்டை' ஆக மாறியது 'டாணா'

    By: Unknown On: 07:48
  • Share The Gag
  • தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வந்த 'டாணா' படத்திற்கு 'காக்கி சட்டை' என தலைப்பு மாற்றியுள்ளனர்.

    சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிக்க, 'எதிர் நீச்சல்' இயக்குநர் துரை.செந்தில்குமார் இயக்கி வரும் படம் 'டாணா'. தனுஷ் தயாரிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை வாங்கியிருக்கிறது.

    'டாணா' என்ற தலைப்பு 'காக்கி சட்டை' என மாற்றப்படலாம் என்று செய்திகள் வெளியானாலும், அதனை படக்குழு யாரும் உறுதிப்படுத்தவில்லை.

    இந்நிலையில் 'வேலையில்லா பட்டதாரி' படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அனிருத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது "உங்களது அடுத்த படங்கள் என்ன?" என்ற கேள்விக்கு "காக்கி சட்டை, கத்தி, ஆக்கோ" என்று கூறியிருக்கிறார்.

    இதன் மூலம் 'டாணா' என்ற படத்திற்கு 'காக்கி சட்டை' என தலைப்பு மாற்றியிருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது.