Saturday, 19 July 2014

தாம்பத்ய உறவால் விளையும் நன்மைகளின் பட்டியல்!

By: Unknown On: 23:46
  • Share The Gag
  •            தாம்பத்ய உறவின் மூலம் உடலிலுள்ள அத்தனை நரம்புகளும், அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன என்றும்,புற்று நோய் வரும் வாய்ப்பைக் கூட தாம்பத்ய உறவு குறைக்கிறது என்றும் சமீப கால ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன .தற்போது தாம்பத்ய உறவு என்பது உடலுக்கு பல நன்மைகளைத் தரக்கூடிய மிகச்சிறந்த உடற்பயிற்சி என்றே கூறுகின்றனர. உறவின் போது ஏற்படும் அசைவுகளினால் அந்தப் பகுதியில் உள்ள தசைகள் மட்டுமல்லாமல் முதுகுத்தண்டுவடப் பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறுகின்றன. அதோடு முதுகுத் தண்டுவடப் பகுதியில் உள்ள சிறிய முட்கள்போன்ற எலும்பு அமைப்புகளும் சிதைவு மாற்றங்களுக்கு ஆளாகாமல் தடுக்கப்படுகின்றன.

    அத்துடன் உடலுறவினால் ஜலதோஷம், உடல்வலி போன்ற சிறு சிறு பலவீனங்கள் வரும் வாய்ப்பும் குறைகிறதாம். எலும்புகளுக்கும், தசைகளுக்கும் கூட வலிமை கூடுவதாகவும் அச்சமயம்அதிக கலோரிகள் கரைக்கப்படுவதால் தேவையற்ற கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் குண்டாவதும் தடுக்கப்படுகிறது. எது எப்படியோ, இந்த உற்சாகமான இந்த உடற்பயிற்சியினை காதலர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை.

    இதற்கிடையில் தாம்பத்ய உறவிற்கு மிக முக்கிய எதிரி மன அழுத்தம் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சமீப காலமா மூடு சரியா இல்லைன்னு உங்களவர் சொல்கிறார் என்றால் எதற்காக இப்படி சொல்கிறார் என்று பாருங்கள். மனரீதியான சிக்கல்கள், மனச்சோர்வு, உடல்சோர்வு இவற்றில் ஏதாவது ஒரு காரணத்தினால் பாதிக்கப் பட்டிருக்கிறாரா என்பதை கண்டறிந்து அதனை தீர்க்க முயலுங்களேன்.


    மேலும் புகைப் பழக்கமும், மதுப்பழக்கமும் தாம்பத்யத்தின் முக்கிய எதிரி. இந்த பழக்கங்கள் இருந்தால் உறவின் போது ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனால் உற்சாக உறவு ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே மூச்சுவாங்கி உங்கள் துணையிடம் திட்டு வாங்கவேண்டியிருக்கும். எனவே தாம்பத்ய உறவின் மிக முக்கிய எதிரியாக உள்ள புகை, மது பழக்கங்களை உடனடியாக நிறுத்த முடியாவிட்டாலும் படிப்படியாக நிறுத்துங்கள்.


    பொதுவாக மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது. காம உணர்வுகள் அளவிற்கு அதிகமாக இருந்து அதை அடக்க முடியாமல் போகும் பட்சத்தில் பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், கொள்ளைகள் போன்றவைகள் நடக்கின்றன.

    செக்ஸ் உணர்வுகளை அதிகமாக கட்டுப்படுத்தினால் அது வெடித்து வெளிக்கிளம்புமாம். எனவே செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். மனிதர்கள் உணர்ச்சிக்குவியலால் ஆனவர்கள். கோபம், அழுகை, ஆனந்தம், ஆசை, வெறுப்பு, காமம் என பலவித உணர்வுகளுக்கு ஆட்பட்டவர்கள். ஆணும், பெண்ணும் திருமணத்திற்குப் பின்னர் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக இணைந்து காம உணர்வுகளை பகிர்ந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை.


    அதேசமயம் காம உணர்வுகள் அதிகமாகி அதை அடக்கமுடியாத பட்சத்தில் அதை தவறான முறையில் வெளிப்படுத்துவதன் மூலம்தான் குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன. டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்முறை சம்பவம் தொடங்கி பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவது வரை நடைபெறுவதற்குக் காரணம் காம உணர்வுகளை சரியான முறையில் கையாளத் தெரியாத காரணத்தினால்தான் என்கின்றனர் நிபுணர்கள்.


    காம உணர்வுகளை அடக்கி வைப்பதன் மூலம் மனநோய், தலைவலி போன்றவை வருமாம். திடீர் ஜுரம், மூட்டுக்களில் வீக்கம், இடுப்புவலி, உடல்பலவீனம், நடுக்கம், மார்புவலி, மயக்கம், போன்றவைகளோடு திடீரென இருதய நோய் கூட வரும் என்கின்றனர் நிபுணர்கள். முருங்கைக்கீரை, முருங்கைக்காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் காம உணர்வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அது எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லையாம். அதேபோல முட்டைக்கோஸ், கொத்தமல்லி, புதினா போன்ற உணவுகளுக்கு செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.


    செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் ஹார்மோன்களை உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்த முடியுமாம். ஏனென்றால் உடல் உழைப்பு இன்றி உண்டு கொழுப்பவர்களுக்குத்தான் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கிறதாம். ஆன்மீக நூல்கள் வாசிப்பது, நல்ல இசையை கேட்பது என அனுபவிப்பதன் மூலம் காமத்தை கரைக்கச் செய்யலாமாம். காம உணர்வுகளை குறைக்க மது, போதையில் மூழ்க வேண்டாம். அது காம உணர்வுகளை அதிகரிக்குமாம்.


    அடிக்கடி காம உணர்வுகள் ஏற்பட்டாலோ, அதீத காம வயப்பட்டாலோ மனதிற்கு மிகவும் நெருக்கமான நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். அதற்கு கூச்சப்பட்டால் செக்ஸாலஜிஸ்ட்களை சந்தித்து ஆலோசனை கேட்கலாம்.

    ஹாலிவுட் படம் தயாரிக்கும் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரன்..!

    By: Unknown On: 23:37
  • Share The Gag
  • பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரன் பிரபாகரன் ஹரிகரன் ஹாலிவுட் படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பிரபாகரன் ஹரிகரன் மறைந்த நடிகர் எம்.ஆர்.ஆர். வாசுவின் பேரனாவார். இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அங்குள்ள ஹாலிவுட் ஸ்டூடியோவில் சினிமா கற்றிருக்கும் அவர் பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து படம் தயாரிக்க உள்ளார்.

    ஹாலிவுட் படம் தயாரிக்கும் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரன்

    இதுபற்றி பேசிய பிரபாகரன் ஹரிகரன், நான் ஹரிகேன் ஸ்டூடியோ என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். சினிமா பரம்பரையில் இருந்து வந்ததால் என்னிடம் சினிமா ரத்தத்திலேயே ஊறி இருக்கிறது. சர்வதேச அளவில் படம் தயாரிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என்று கூறியுள்ளார்.

    ஹாலிவுட் படங்களை தயாரிக்க இருக்கிறேன். முதல் கட்டமாக பிரமென் டவுன் மியூசிசியன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து ஒரு அனிமேசன் மியூசிக்ல் சினிமா எடுக்க இருக்கிறோம். இது 45 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது.

    இசை சம்பந்தமான படம் என்பதால் உலக புகழ்பெற்ற இசை அமைப்பாளர் இசை அமைக்க பேச்சு நடந்து வருகிறது.

    இதுதவிர வோல்பெல் என்ற அனிமேஷன் படத்தை தயாரிக்க இருக்கிறோம். இதில் இந்திய நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். இரு படங்களும் உலக அளவில் பேசப்படுகிற படமாக இருக்கும். என்கிறார் பிரபாகரன்.

    ஹாலிவுட் பட உலகில் பெரிய தாத்தா எம்.ஆர்.ராதாவின் பெயரை பதிவு செய்வார் பிரபாகரன் ஹரிகரன்.

    முதலிரவு வீடியோ வெளியானாதா? அதிர்ச்சியில் அமலா பால்!

    By: Unknown On: 23:31
  • Share The Gag
  • தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை அமலா பால். இவர் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

    இவர்கள் தேனிலவுக்கு சென்ற இடத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு, பின் அதை தன் தன் வலைப்பக்கத்தில் இருந்து நீக்கினார். தற்போது இவர்களின் முதலிரவு வீடியோ இணையத்தில் வெளியானது என யாரோ சொல்ல, அமலா பால் கதிகலங்கிவிட்டாராம்.

    ஆனால் யாரும் பயப்படும் படி ஏதும் இல்லை, இவர்கள் மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களை வீடியோவாக யாரோ வெளியிட்டுள்ளனர். இதனால் இந்த வதந்தியை பரப்பியது யார் என்று? நெருங்கிய காவல்துறை உறவினர் மூலம் விசாரிக்க சொல்லியுள்ளதாக நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றது.


    சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை..!

    By: Unknown On: 18:04
  • Share The Gag


  • சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை


     காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள்.


    எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது.
    மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய்,


    முத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய்,

    எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.


    எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும்.


    எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது.

    மனதை கவர்ந்த நடிகர்களின் மாஸ் டையலாக்ஸ்!

    By: Unknown On: 17:59
  • Share The Gag
  • தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் வந்து போயிருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர் தான் நம் மனதில் நீங்காது இருப்பர், இதற்கு காரணம் அவர்கள் நடிப்பை விட அவர்கள் பேசிய வசனங்கள் தான் , ஒரு நடிகர் பெயர் சொன்னாலே, அந்த நடிகர் பேசிய பன்ச் டையலாக் தான் நம் மனதில் தோன்றும், அப்படி நம் மனதை விட்டு நீங்காத உங்கள் ஆதர்ஸ நாயகனின் பேமஸ் பன்ச் டையலாக்ஸ் இதோ....

    ரஜினி

    பன்ச் டையலாக்கின் குருநாதர் இவர் தான், இவர் பேச ஆரம்பித்த பிறகு தான் குச்சி ஐஸ் சாப்பிடும் குழந்தையே பன்ச் பேச ஆரம்பித்தது. அதில் ‘ நா 1 தடவ சொன்னா 100 தடவ சொன்ன மாதிரி’, ‘என் வழி தனி வழி’, ‘ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்’ போன்றவை இன்றும் பட்டையை கிளப்பும் வசனம்.

    கமல்

    இவர் பேசுவது நமக்கு புரியவில்லை என்றால் கூட பரவாயில்லை, அவருக்கே புரியுமா என்றால் அதுவும் கேள்விக்குறி தான், ’ கடவுள் இல்லைனு நா எங்க சொல்றேன், இருந்தா நல்லா இருக்கும்ன்னு தான் சொல்றே’னு சொன்ன வசனத்தை பாப்கார்ன் சாப்பிட்டு 10 மணி நேரம் யோசித்தாலும் யாருக்கும் புரியாது.

    அஜித்

    இவர் திரையில் தோன்றி பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் பன்ச் தான், அந்த வகையில் ’ நாம வாழனும்னா யார வேணாலும், எத்தன பேர வேணாலும் கொல்லலாம்’, ‘ஆசை இல்லை அண்ணாச்சி பசி’, ‘உடம்பில் கை இருக்கும், கால் இருக்கும், மூக்கு இருக்கும், முழி இருக்கும், ஆனா உயிர் இருக்காது’ போன்ற வசனங்கள் எல்லாம் இன்றளவும் இவரின் மாஸ்டர் பீஸ்.

    விஜய்

    ரஜினிக்கு பிறகு தன் பன்ச் டையலாக் மூலம் குழந்தைகளை கவர்ந்தவர் இளைய தளபதி தான் ‘வாழ்க்கை ஒரு வட்டம் டா, இங்க ஜெய்க்கிறவன் தோற்பான், தோற்கிறவன் ஜெய்ப்பான்’, ‘ஒரு தடவ முடிவு பண்ணிடன்னா என் பேச்ச நானே கேக்க மாட்டேன்’ போன்ற பன்ச் எல்லாம் இன்றும் பொறி தெரிக்கும்.

    சூர்யா

    ’மண்ணென்ன ஊத்துனா மங்கலா எறியும், சீமண்ணெய் ஊத்துனா சிலுத்துக்கிட்டு எறியும்’ அப்படின்னு இவர் பேச ஆரம்பிச்சா ஸ்கூல்ல விட்ட குழந்தைய வீட்ல போய் விட்டுட்டு வர வரைக்கும் பேசிகிட்டே இருப்பாரு, இதையும் தாண்டி நம்மை ரசிக்க வைத்த வசனங்கள் ‘கஷ்டப்பட்டு உழைக்காதீங்க, இஷ்ட்டப்பட்டு உழைங்க’ என்ற வசனம் இளைஞர்களின் மோட்டிவேட் லிஸ்டில் உள்ளது.

    தனுஷ்

    ’சுள்ளான் சூடு ஆன’ ..ஷப்பா கையில சாவிய கொடுங்கடா என்று கமண்ட் சொல்லும் அளவிற்கு இருந்தவர், பின் தன் வெற்றியின் பாணி தெரிந்து சிம்பிளான வசங்களில் நம்மை கவர்ந்தார். அதில் ‘என்ன மாதிரி பசங்கள பார்த்தா பிடிக்காது, பார்க்க பார்க்க தான் பிடிக்கும்’, ’ சார் நீங்க தான் இறங்குனாதான் லோ கிளாஸ், நாங்கல்லாம் இருக்கிறதே லோ கிளாஸ்’ போன்ற வசனங்கள் சுட்டி பசங்களின் டிக்ஸ்னரி வேர்ட்ஸ்.

    சிம்பு

    இவர் என்ன தான் பன்ச் டையலாக் பேசினாலும் ஸ்கூல் குழந்தைங்க ரைம்ஸ் சொல்ற பீலிங் தான் வரும், ‘ நா பொண்ண காதலிச்சுருக்கனும், உன்ன காதலிச்சுருக்க கூடாது’, ‘ஜீன்ஸ் போட்டவெல்லாம் நல்லவளும் கிடையாது, சுடிதார் போட்டவெல்லாம் கெட்டவளும் கிடையாது’ என்று பெண்களை திட்டும் வெட்டி சீன் பாய்ஸின் தேசிய கீதங்கள்.

    பவர் ஸ்டார்

    தமிழ் இளைஞர்களின் வருங்கால நாடித்துடிப்பு பவர் பேசின வசனங்கள் தான். இவர் பேசினால் நரம்பு புடைக்கும், ‘கொலை கொலையா முந்திரிக்கா, பவர் ஸ்டார் அடிச்சா கத்திரிக்கா’ ஷப்பா கண்டிப்பா நாடி, நரம்பு, இரத்தம், சதை எல்லாம் பன்ச் வெறி பிடிச்சவனால தான் இப்படி ஒரு பன்ச் பேச முடியும்.

    இது மட்டுமில்லை, இதுபோல் பல நடிகர்கள் பன்ச் நம் மனதை விட்டு நீங்காது நிற்கும், அத்தனையும் குறிப்பிட முடியாது என்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறோம். ஆனால் இதில் தவற விட்ட வசனங்களை நீங்கள் கமண்டுகளில் கூட தெரிவிக்கலாம்.


    இன்சுலின் சுரக்க ‘வாழைப்பூ’! அற்புதமான தகவல்..!

    By: Unknown On: 15:14
  • Share The Gag


  • வாழை முழுவதுமாக மனிதர்களுக்கு பயன்படக்கூடியது. வாழை யின் தண்டு, பூ, காய், பழம், இலை, நார், பட்டை எல்லாவற்றை யும் நாம் பயன்படுத்துகிறோம்.


    பெரும்பாலானவற்றில் அதிக சத்து இருக்கிறது. வாழைப்பூவில் நார்ச்சத்து அதிகம். மொந்தன் வாழைப்பூ, நாட்டு வாழைப்பூ, ரஸ்தாளி வாழைப்பூ ஆகியவை ரொம்பவும் துவர்க்காது.


    அவை அதிக சுவையாகவும் இருக்கும். ஆரோக்கியத்திற்கும் அவை ஏற்றதாக இருப்பதால்தான் வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, வாழைப்பூ அடை, வாழைப்பூ தோசை என்று பல விதங்களில் தயாரித்து சுவைக்கிறோம். வாழைப்பூ குருத்தை பச்சையாகவே சாப்பிடலாம்.


    வாழைப்பூவில் இருக்கும் மருந்துவ குணங்கள்:


     * வாழைப்பூ சாப்பிட்டால் கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.


     * பெண்களுக்கு மாதவிடாய் சீராகும்.


     * உடல் சூடு குறையும். குடல் புண் ஆறும்.


     * மூலநோய் கட்டுக்குள் வரும்.


     * வாழைப்பூவில் உப்பு போட்டு அவித்து அதன் சாறை குடித்தால் வயிற்றுவலி நீங்கும்.

     * ஆண்களுக்கு தாது விருத்தி அடையும்.


     * மலட்டுத்தன்மையை போக்கும் சக்தி வாழைப்பூவில் இருக்கிறது. வாழைப்பூவை வாழையில் இருந்து முறித்து எடுத்த இரண்டு நாட்களுக்குள் சாப்பிடவேண்டும்.

    அனல் பறக்கிறது - சதுரங்க வேட்டை - திரை விமர்சனம்

    By: Unknown On: 13:18
  • Share The Gag
  • சதுரங்க ஆட்டத்தில் எதிரில் இருக்கும் அறிவாளியின் ஆசை தூண்டி ஒரு சிப்பாயை வெட்டு கொடுத்து பெரிய காய்யை வெட்டி வீழ்த்துவது போல மக்களின் ஆசையை தூண்டி அவர்களிடம் இருந்து மொத்தமாக வாரிக்கொண்டு ஒடுவதையே தொழிலாக செய்யும் காந்திபாபு (நட்டி என்கிற நட்ராஜ்). அவரது வாழ்க்கையில் வரும் பானு (இஷாரா) எப்படி மாற்றுகிறார், இதனால் காந்திபாபு சந்திக்கும் விளைவு என்ன என்பது ஃக்ளைமேக்ஸ்.

    அபார்ட்மெண்ட் வாடகையிலேயே மாதம் பல லட்சங்களை சம்பாதிக்கும் செட்டியாரருக்கு (இளவரசு) கோடிகளை சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை, (ஒருத்தன ஏமாத்தனும்னா அவனோட ஆசையை தூண்டனும்) என்பது போல் இவரை ஏமாற்றி பல லட்சணங்களை பறித்து கொண்டு ஓடும் காந்திபாபு , அடுத்து மக்கள் சமீபகாலமாக அதிகம் ஏமாந்த எம்.எல்.எம் என்ற கம்பெனியை ஆரம்பித்து மக்களிடம் பொய்யான பொருட்களை வித்து பணம் சம்பாதிக்கிறார். அப்போது அங்கு வேலை கேட்டு வரும் கிராமத்து பெண்ணான பானுவிற்கு வேலை கொடுக்கிறார் (உடனே காதல்னு நினைக்காதீங்க) அப்புறம் எதுக்காக வேலை தராறுனு தான கேக்குறீங்க.

    இவரை வைத்து அந்த பொருட்களை எல்லாம் நாசுக்காக பேசி விற்கிறார், இப்படி இருக்க அங்கு ஆட்களை சேர்த்தவர்களுக்கெல்லாம் கமிஷன் தர பொய்யான செக் கொடுக்கிறார்கள். இதை அறிந்தவர்கள் கம்பெனியை சுற்றி வளைக்க மொத்த பணத்தோடு மறைமுகமாகிறது காந்திபாபு கும்பல்.

    இவர்களை தேடி போலீஸ் அழையும் போது சிக்கிறான் காந்திபாபு, அப்போது தான் தெரிகிறது அவன் மேல் இருக்கும் பல வழக்குகள் எண்ணிக்கையில் அடங்காதவை. சும்மா விடுவாங்களா போலீஸ் வெளுத்து வாங்குகிறது அவனை பணம் எங்கே என்று கேட்டு, ஆனால் துளி கூட வாயயை திறந்து பணம் இருக்கும் இடத்தை சொல்லாத காந்திபாபுக்கு வாய்தா வாய்தா என அதுவே சதமே அடிக்கிறது. (நமக்கு தான் தெரியுமே கோர்ட்க்கு போன வாய்தா வாய்தா) அவன் சம்பாதித்த பணத்தை வைத்து ஜாமினில் எளிதாக வெளியில் வருகிறான்.

    ஜாமினில் வந்தவனை கடத்துகிறது வளவனின் கும்பல், ஏன் இந்த கடத்தல் என்றால் இவனால் பாதிக்கப்பட்ட ஒருவன் வளவனை வைத்து காந்திபாபுவிடன் இழந்த பணத்தை பெறுவதற்காக, ’உன்னை ஏமாத்துரவன் ஒரு வகைல உனக்கு குரு ஏன்னா பிழைக்குற தந்திரத்தை சொல்லிதரான்னு நினைச்சுகோன்னு’ காந்திபாபு சொல்லி வந்த வசனத்தை சொல்லி இவனுக்கு ஆப்பு வைக்கிறார்கள் கூட்டாளிகள், பணத்தை இழந்த வளவன் இவனை கொலை செய்ய முடிவு செய்யும் போது அவர்களின் ஆசையை தூண்டி ஒரு திட்டம் தீட்டுகிறான்.

    அதை செயல்படுத்துவதாக சொல்லி அவர்களிடம் இருந்து தப்பித்து பானுவை கல்யாணம் செய்து கொண்டு கிராமத்தில் திருந்தி வாழ்கிறான். இவனால் ஏமாற்றப்பட்ட அந்த வளவன் இவனை தேடி கிராமத்திற்கு வர அவர்களிடன் இருந்து இவன் தப்பித்தானா..?? பானுவின் நிலைமை என்ன என்பது மீதிக்கதை.

    காந்திபாபுவாக நடித்திருக்கும் நட்டியின் யதார்தமான முகத்தோற்றம், அலட்டிக்கொள்ளாத நடிப்பு, ஏமாற்ற அவன் போடும் திட்டம், அதை செயல்படுத்தும் விதம், டயலாக் டெலிவிரி என அனைத்திலும் அசத்திருக்கும் நட்டிக்கு பாராட்டு கலந்த கைத்தட்டல்கள். அதே போல் கதானாயகியாக நடித்திருக்கும் பானுவின் நடிப்பும் அற்புதம். இளவரசுவின் நடிப்பும், வில்லனின் தூய தமிழும் நமக்கு காமெடியை ஏற்ப்படுத்துகிறது.

    ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் எல்லாம் ஒகே ரகம் தான், பின்னனி இசையில் காட்சியின் விறுவிறுப்பை மெறுகேற்றி இருக்கும் இவருக்கு விசிலே போடலாம்.

    நாம் அனைவரும் பார்த்து ஏமாந்த ஒரு விஷயத்தை கதையாக எடுத்துக்கொண்டு, அதை அற்புதமான, விறுவிறுப்பான திரைக்கதையாக அமைத்திருக்கும் புதுமுக இயக்குனர் வினோத்துக்கு பாராட்டுக்கள் பின்னி எடுத்துடீங்க பாஸூ.

    நடிகர், இயக்குனர் என இருந்த மனோ பாலா இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார், முதல் படத்திலேயே கல்லாவை நிரப்பும் அவருக்கும் வாழ்த்துக்கள். இந்த வருடத்தில் இரண்டு மெகா ஹிட் வெற்றி படங்களை வெளியிட்ட லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இந்த படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றி பெறுவது உறுதி.

    மொத்தத்தில் சதுரங்க ஆட்டத்தை போல மெதுவாக இல்லாமல் சரக்கு ரயில் போல அனல் பறக்கிறது இந்த சதுரங்கவேட்டை.

    வெட்டி படமா..? வேலையில்லா பட்டதாரி - திரைவிமர்சனம்

    By: Unknown On: 11:28
  • Share The Gag
  • நடிகர் தனுஷின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் அனிருத்தின் அட்டகாசமான பாடல்களுடன்  வெளியாகியிருக்கும் படம், வேலையில்லா பட்டதாரி.

    எஞ்சினியருக்குப் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் தனுஷிற்கு, ஒரு பெரும் போராட்டத்திற்குப் பின் ஒரு வேலை கிடைக்கிறது. அதையும் கெடுக்க ஒரு வில்லன் குறுக்கே வர, தனுஷ் எப்படி வெல்கிறார் என்பதே கதைன்னு வச்சுக்கலாம்! வீட்டில் தண்டச்சோறு என திட்டும் அப்பா, எப்போதும் ஆதரவளிக்கும் அம்மா, வேலைக்குப் போய் கார் வாங்கி வெறுப்பேற்றும் தம்பி, அடுத்த வீட்டு ஃபிகர் அமலா பால் என ரகளையான சூழலில் வாழ்கிறார் வி.ஐ.பி. தனுஷ். உண்மையில் இண்டர்வெல்வரை செம ரகளை.

    இமேஜ், பஞ்ச் டயலாக் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சாதாரண இளைஞனாக, வீட்டில் இருக்கும் நாய்க்குச் சமமாக நடத்தப்பட்டாலும் அசராத டேக் இட் ஈஸி பார்ட்டியாக பட்டையைக் கிளப்புகிறார் தனுஷ். பட்டாசாக வெடிக்கும் வசனங்களும் சேர்ந்துகொள்ள, இடைவேளைவரை காமெடியில் பின்னிவிட்டார்கள்.

    முதல் பத்து நிமிடத்தில் என்ன கதை நடந்ததோ, அதே தான் இடைவேளை வரை. கதை அங்கேயே டெக்ட் அடித்து உட்கார்ந்து கொண்டாலும், அப்பாவிடம் திட்டு வாங்குவது, ஓட்டை மோட்டார் சைக்கிளை வைத்துக்கொண்டே அமலா பாலை ரூட் விடுவது, இருவருக்கும் நடக்கும் ரகளையான முதல் சந்திப்பு என ரசிக்க வைக்கும் காட்சிகள்.

    1980களில் வந்த படங்களில் வேலை இல்லாத் திண்டாட்டம் பற்றிய புலம்பல்கள் அதிகம் இருக்கும். மாணவர் சக்தி, புரட்சி போன்ற உட்டாலக்கடி விஷயங்களும் படம் முழுக்க தூவப்பட்டிருக்கும். தற்பொழுது டாஸ்மாக் ரேஞ்சிற்கு இஞ்சினியரிங் காலேஜையும் திறந்து, பி.ஈ டிகிரிக்கு உள்ள மதிப்பையே காலி செய்துவிட்டார்கள்.

    இடைவேளைக்குப் பின் படம் அந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசுகிறது. தனுஷின் அம்மா இறந்துவிட, அதன் காரணமாக தனுஷ்க்கு வேலை கிடைக்கிறது. ஒரு கவர்மெண்ட் புராஜக்ட்டுக்கு தலைமை இஞ்சினியராக தனுஷ் போக, அதை வில்லன் குரூப் கெடுக்கப் பார்க்கிறார்கள். அதை தனுஷ் மாணவர் சக்தி(VIPs) மற்றும் மக்கள் சக்தி துணையுடன் எப்படி வெல்கிறார் என்று யூகிக்க முடியும் திருப்பங்களுடன் இரண்டாம்பாதியில் காட்டுகிறார்கள்.

    முதல்பாதியில் இருந்த விறுவிறுப்பும் குறும்பும் மிஸ்ஸிங் என்பதால், சீக்கிரம் கட்டடத்தை கட்டி முடிங்கப்பா எனும் மனநிலைக்கு நாம் வந்துவிடுவது தான் சிக்கல்!

    ரொம்ப நாளைக்கு அப்புறம் பழைய, ரகளையான தனுஷைப் பார்க்க முடிகிறது. திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் செய்த அதே ஜாலியான ‘டோண்ட் கேர்’ கேரக்டர். இரண்டு மூன்று இடங்களில் பஞ்ச் டயலாக் பேசிவிட்டு ஸ்லோமோசனில் நடந்தாலும், தனுஷை ரசிக்க முடிகிறது. முதல்பாதியில் எவ்வளவு கேவலத்தையும் தாங்கும் காட்சிகளிலும், இரண்டாம்பாதியில் வில்லனுடன் பேசும் காட்சிகளிலும் கைதட்டல்களை அள்ளுகிறார்.

    திருமதி.அமலா பால் கடைசிப்படம்(?) என்பதாலோ என்னவோ, டீசண்டாகவே காட்டியிருக்கிறார்கள். தனுஷ் கேரக்டரைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக லவ் ஆவது அழகு. தனுஷ்க்குப் பொருத்தமான(!) ஜோடியாகத் தெரிகிறார். டூ லேட் தனுஷ்!

    அப்பாவாக வரும் சமுத்திரக்கனி முதிர்ச்சியான நடிப்பு. ஒரு பாசமிக்க கண்டிப்பான தந்தையை கண்முன் கொண்டுவருகிறார். அம்மாவாக சரண்யா. அவங்க நடிப்பைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இடைவேளைக்குப் பின் விவேக் வந்தாலும், பெரிதாக காமெடி ஏதும் இல்லை. அவரும் இல்லையென்றால், பின்பாதியில் படம் ரொம்ப டல் ஆகியிருக்கும் என்பதும் உண்மை. வில்லனாக அறிமுகமாகியிருக்கும் அமிதாஷ், நிறைய எதிர்பார்க்க வைத்து ஏமாற்றுகிறார். ’இவன் வேற மாதிரி’ஹீரோயின் சுரபி, இதில் சும்மா வந்துபோகிறார்.

    நெகடிவ் :
    - பெரிய திருப்பங்கள் இல்லாத இரண்டாம்பாதி
    - தனுஷ்க்கும் அமலா பால்க்கும் இடையே லவ் வந்தபின், என்ன செய்வது என தெரியாமல் திரைக்கதை டீம் முழித்திருக்கிறார்கள். இடைவேளைக்குப் பின் சும்மா வந்துபோகிறார்.
    - கட்டடம் கட்டுவது தான் குறிக்கோள் என்பது டிராமடிக்காக இல்லை
    - அதில் ஏற்படும் பிரச்சினைகளும் தீர்வுகளும் குழந்தைகூட யூகித்துவிடும் பாஸ்.
    - தனுஷின் கேரக்டரைசேசன் பிரமாதம். ஆனால் அதுமட்டுமே போதும் என்று நம்பியது தான் பலவீனம்!

    பாஸிடிவ் :
    - தனுஷ்
    - செம காமெடியான முதல்பாதியும், வசனங்களும்
    - இயக்குநர் வேல்ராஜின் ஒளிப்பதிவு
    - அனிருத்தின் இசையில் துள்ளாட்டம் போட வைக்கும் பாடல்கள்

    கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்! அவசியம் படியுங்கள்!

    By: Unknown On: 10:24
  • Share The Gag
  • கற்றாழை

    கற்றாழைச் சாற்றினை முகம், கன்னங்கள் மற்றும் மூக்கு பகுதிகளில் தடவி ஊற வைத்து கழுவினால், கரும்புள்ளிகளில் இருந்து விடுபடலாம்.

    தக்காளி சாறு

    தக்காளிச் சாற்றினை முகத்தில் 20 நிமிடங்களுக்கு ஊற வைத்தால், கரும்புள்ளிகளில் இருந்து விடுபடலாம்.

    உப்பு நீர்

    கருவளையங்கள் வராமல் இருக்க, முகத்தை தினமும் உப்பு நீரால் சுத்தம் செய்யவும்.

    ரோஸ் வாட்டர்

    ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை தினமும் சுத்தம் செய்யவும். இது கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் வராமல் தடுக்கும்.

    ஆயில் மசாஜ்

    ஆலிவ் எண்ணெயை கொண்டு முகத்தை அடிக்கடி மசாஜ் செய்து வரவும். இது கரும்புள்ளிகள் வராமல் தடுக்க உதவும். அதனால், முகத்தில் ஆலிவ் எண்ணெயை தடவி கரும்புள்ளிகள் வராமல் தடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக முகத்தில் ஆலிவ் எண்ணெயை தடவி, சூடான நீரில் நனைத்த துணியை முகத்தில் மூடி 15 நிமிடங்கள் காய வைக்கவும். இதனால் இந்த வெதுவெதுப்பான துணி சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கி, கரும்புள்ளிகளை தளர்வடையச் செய்யும்.

    ஆலிவ் ஆயில்

    சிறு துளி ஆலிவ் எண்ணெயுடன், எலுமிச்சை சாறு சேர்த்து உபயோகித்தால், அது கரும்புள்ளிகளை நீக்கும். அதற்கு இதனை முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது சில நிமிடங்கள் தடவி காய வைக்கவும். பின்னர் முகத்தை அலம்பவும்.

    தயிர்

    2 மேஜை கரண்டி தயிருடன், 2 மேஜைகரண்டி ஓட்ஸ் பொடி மற்றும் 2 மேஜை கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இதனை கரும்புள்ளிகள் மீது தடவி 10 நிமிடங்கள் காய விடவும். பின்னர் முகத்தை அலம்பவும். இது நல்ல பலனைத் தரும்.

    சர்க்கரை

    ஒரு மேஜை கரண்டி சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து, அதனை மூக்கிலும் கன்னத்திலும் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவினால், அவை குறையக்கூடும். அதுமட்டுமின்றி இந்த கலவை சருமத்தை பளிச்சிட செய்யவும் உதவும்.

    எலுமிச்சை சாறு

    எலுமிச்சை சாற்றினை முகத்தில் தடவினா,ல் கரும்புள்ளிகளை நீக்குவது மட்டுமல்லாமல், அதிகப்படியான எண்ணெய்ப் பசை சருமத்தில் இருந்தும் விடுபடலாம்.

    உருளைக்கிழங்கு

    கரும்புள்ளிகளை நீக்குவதற்கு முதலில் தேவைப்படுவது உருளைக்கிழங்கு தான். அதில் கருப்பு மற்றும் பச்சை நிறப் புள்ளிகள் இல்லாதவாறு இருக்க வேண்டும். பின் உருளைக்கிழங்கை சீவிக் கொள்ளவும். பின்பு அதனை கரும்புள்ளிகள் மீது 10 நிமிடங்கள் தேய்க்கவும். காய்ந்த பின்பு முகத்தை கழுவவும்.

    யார் தான் தலையுடன் இணைவது..? ஏன் இந்த குழப்பம்..?

    By: Unknown On: 10:16
  • Share The Gag
  • கௌதம் மேனன் இயக்கத்தில் தல தன்னுடைய 55வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு தல அஜீத், அடுத்து வீரம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பது நமக்கு தெரியும்.

    தல 56வது படத்தின் கதாநாயகி முதலில் வித்யா பாலன் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதை மறுத்த சிவா சமந்தாவை நாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்தன.

    தற்போது சமந்தாவையும் நீக்கப்பட்டுள்ள நிலையில், அஜீத்திற்கு ஏற்றமாதிரி ஒரு நாயகியை சிறுத்தை சிவா மும்முரமாக தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.