Friday, 1 August 2014

விளாம்பழம் - எல்லா நோய்க்கும் இது ஒன்றே மருந்து..அரிய தகவல்..!

By: Unknown On: 21:15
  • Share The Gag
  • தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தானப் பழம் விளாம்பழம், இதனால் ரத்தம் விருத்தி அடைவதோடு, ரத்தத்தை சுத்திகரிப்பும் செய்கிறது.

    * விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுடையச் செய்கிறது.

    * தயிருடன் விளாம் காயை பச்சடிபோல் செய்து சாப்பிட்டால் வாய்ப்புண், அல்சர் குணமடையும்.

    * வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டுவர... நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.

    * விளாம்பழத்துடன் பனங்கற்கண்டைக் கலந்து சாப்பிட, பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலைச் சுற்றல் நீங்கும்.

    * தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்துவர நினைவாற்றல் அதிகரிக்கும்.

    * விளாம் மர இலையை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க, வாயுத் தொல்லை நீங்கும்.

    * விளாங்காயை அரைத்து மோரில் கலந்து குடிக்க, நாள்பட்ட பேதி சரியாகும்.

    * விளாம்பழ மரத்தின் பிசினை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

    * விளாம் மரப் பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க, வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை குணமாகும்.

    * சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட ஜீரண சக்தி

    முதல் மாணவன் - திரைவிமர்சனம்..!

    By: Unknown On: 18:34
  • Share The Gag
  • கிராமத்து ஏழை மாணவன் கோபி. 12-ம் வகுப்பு படிக்கும் இவர் தந்தையை இழந்து, உடல்நிலை சரியில்லாத தாயுடன் வாழ்ந்து வருகிறார். படித்துக் கொண்டே சிறு சிறு வேலைகளையும் செய்துகொண்டு தன் தாய்க்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். வகுப்பில் முதல் மாணவனாக திகழும் இவர், மாநிலத்திலேயே முதல் மாணவனாக வரவேண்டுமென்று கடினமாக உழைத்து வருகிறார்.

    இந்நிலையில், இவருடைய படிக்கும் சகமாணவரான பண்ணையாரின் மகன் இந்த பள்ளியின் மாணவ தலைவராக வேண்டுமென்று ஆசைப்படுகிறான். தனது ஆசையை அப்பாவிடம் கூறும் அவனுக்காக, அந்த பண்ணையார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் துணையோடு தன் மகனை மாணவர்கள் தலைவராக்க பார்க்கிறார்.

    ஆனால் பள்ளியின் தலைமையாசிரியரோ நன்றாக படிக்கும் கோபியைத்தான் மாணவர்கள் தலைவராக்க வேண்டும் என்று சொல்கிறார். இதனால் பண்ணையார் கோபிக்கு நிறைய தொந்தரவுகளை கொடுக்கிறார். கோபி வேலை செய்யும் இடங்களில் எல்லாம் தலையிட்டு கோபிக்கு வேலை தரவேண்டாம் என்று சொல்கிறார். கோபியின் படிப்பையும் கெடுக்க பார்க்கிறார். ஒருகட்டத்தில் கோபியை கொல்லவும் முயற்சி செய்கிறார்.

    இதையும் மீறி மாநிலத்தின் முதல் மாணவராக கோபி வந்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

    கோபிகாந்தி படத்தை தயாரித்து, இயக்கி நடித்திருக்கவும் செய்திருக்கிறார். முதல் படத்திலேயே தனக்கு 3 கதாநாயகிகளுடன் நடித்திருக்கிறார். இவர் படத்தில் காலில் செருப்புகூட போடாமல் நடித்திருக்கும் இவர் படம் முழுக்க முகத்தில் மேக்கப்புக்கு மட்டும் ஒரு குறையும் வைக்கவில்லை. குறிப்பாக, சூளையில் சேறு மிதிக்கும்போதுகூட புல் மேக்கப்பில் இருப்பது இவருக்கே உரிய சிறப்பு. படம் முழுக்க சீரியசாக எடுத்திருந்தாலும் திரையில் பார்ப்பவர்கள் அனைவரையும் சிரிக்க வைக்க மறக்கவில்லை. பாடல் காட்சிகளில்கூட நடனம் ஆடி அனைவரையும் சிரிக்க வைத்தது சிறப்பு.

    கதாநாயகிகளாக ஐஸ்வர்யா, தனு, ரம்யா என மூன்று நாயகிகள் இருந்தாலும் ஐஸ்வர்யாதான் நாயகனுடன் இணைந்து டூயட்டெல்லாம் பாடியிருக்கிறார். பண்ணையார் மகளாக வரும் இவருக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். மற்ற நாயகிகளான தனு, ரம்யா ஆகியோருக்கு கதையில் முக்கியத்துவம் இல்லாவிட்டாலும் வெறுமனே வந்து போகிறார்கள்.

    நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் சுகி, படம் முழுக்க இறுமிக்கொண்டே இருந்தாலும் லிப்ஸ்டிக் போட மறவாமல் இருந்தது கதாபாத்திரத்திற்கு மேலும் வலுவூட்டியிருக்கிறது. கல்வியில் சாதிப்பதற்கு வறுமையும்-பகையும் தடை கற்களாக இருக்கவே முடியாது என்கிற சமுதாய சிந்தனையை இதில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் கோபிகாந்தி. அந்த கருத்துக்கு நடுவே காதல், மோதல், தாய்ப்பாசம், நகைச்சுவை என கமர்ஷியல் படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் குமரன்ஜியின் ஒளிப்பதிவு சுமார் ரகம். ஜெஸ்ஸியின் இசையில் பாடல்கள் கேட்கும்படியாக இல்லை.

    லிங்கா... ஹைதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. அடுத்து சென்னையில்!

    By: Unknown On: 17:40
  • Share The Gag
  •  
    சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்காவின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்புக்கு சென்னையில் முகாமிடுகிறார்கள் ரஜினி மற்றும் குழுவினர்.

    கோச்சடையான் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி, கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் 'லிங்கா' படத்தில் நடித்து வருகிறார்.

    கதாநாயகிகளாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்கள் தவிர பிரபு, ராதாரவி, விஜயகுமார், ஆர்.சுந்தர்ராஜன், சந்தானம், கருணாகரன், தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, தேவ் கில் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

    மைசூரில்

     இந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பை மைசூரில் 40 நாட்கள் நடத்தினர். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் சரித்திர கால செட் அமைத்து படமாக்கி வந்தனர்.

    ஹைதராபாத்

    இந்நிலையில் நேற்றுடன் ஹைதராபாத் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதையடுத்து படக்குழுவினர் அங்கிருந்து புறப்படுகிறார்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளனர்.

    சென்னையில்

    இந்த மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவிருப்பதாகத் தெரிகிறது.

    ஏமாற்றம் வேண்டாம்

     லிங்கா படப்பிடிப்பு ஆரம்பம் முதல் தமிழ்நாட்டில் படமாகாமல் வேறு மாநிலங்களிலேயே படமாக்கப்பட்டு வந்தது. இது இங்குள்ள திரைப்படத் தொழிலாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏமாற்றம் அளிப்பதாகவே இருந்தது. தற்போது அந்தக் குறையைப் போக்குவதற்காக அடுத்த கட்டப் படப்பிடிப்பை சென்னையில் நடத்துவதென முடிவெடுத்திருக்கிறாராம் ரஜினி.

    ரசிகர்கள்

    தமிழகத்தில் ரஜினியின் ஷூட்டிங் என்றால் ரசிகர்கள் படையாகத் திரண்டு வந்துவிடுவது வழக்கம். இந்த முறையும் அப்படி நடக்கும் என்பது தெரிந்திருப்பதால், ரசிகர்களுக்கென ஒரு நேரம் ஒதுக்கவும் முடிவு செய்துள்ளாராம் சூப்பர் ஸ்டார்.



    வீட்டிலேயே தயாரிக்கலாம் கூந்தல் வாசனை திரவியம்..!

    By: Unknown On: 17:01
  • Share The Gag
  • வீட்டிலேயே ஹென்னா தயாரித்துத் தடவிக் கொள்வதன் மூலம், முடிக்கு நல்ல கண்டிஷனைத் தருவதுடன், வளர்ச்சியையும் குளிர்ச்சியையும் தரும்.

    மருதாணி பவுடர் ஒரு கப்,
    ஒரு முட்டையின் வெள்ளைக்கரு,
    டீ டிகாக்ஷன் ஒரு கப்,
    ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறு

    இவற்றுடன் மொட்டான முல்லை, ஜாதி, இருவாச்சி மல்லி மூன்றையும் அரைத்த விழுது ஒரு கப் சேர்த்து கலந்துகொள்ளுங்கள். ஹென்னாவைத் தலைக்குப் போடுவதால் முட்டை வாசனை மறைந்து பூக்களால் தலை வாசம் வீசும். மகிழம்பூ 50 கிராமுடன், கால் கிலோ நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, இதனுடன் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் தலா 25 கிராம் கலந்துகொள்ளுங்கள். இந்தத் தைலத்தை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து ஊறவைத்துக் குளிக்கலாம்.

    ஒரு பிடி மகிழம்பூவை தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து ஆறவிடுங்கள். மகிழம்பூ தைலம் தேய்த்துக் குளித்து முடித்ததும், ஆறவைத்துள்ள மகிழம்பூ தண்ணீரில் அலசுங்கள். கூந்தல் வாசம் வீசும்.

    ஒரு கப் மருதாணி இலை,
    கடுக்காய் தோல் 4,
    டீ டிகாக்ஷன் ஒரு கப்,
    நல்லெண்ணெய் ஒரு கப்,
    துளசி இலை ஒரு கப்,
    கொட்டை நீக்கிய நெல்லிக்காய்

    இவற்றை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். வாரம் ஒரு முறை தலையில், சிறிது நல்லெண்ணெய் தடவிவிட்டு, இந்த பேஸ்ட்டை தலை முழுவதும் போட்டு, ஒரு மணி நேரம் கழித்து அப்படியே அலசலாம். தலைமுடிக்கு நல்ல கண்டிஷனரையும், கலரையும், வாசனையையும் கொடுப்பதுடன் பளபளப்பாக வைத்திருக்கும். ஃப்ரெஷ் பன்னீர் ரோஜா 100 கிரா முடன் மரிக்கொழுந்து, வெட்டிவேர், செண்பகப்பூ, துளசி தலா 50 கிராம் சேர்க்கவும். அடுப்பை சிம் மில் வைத்து தேங்காய் எண்ணெய்விட்டுக் காய்ச்சி, பூக்களை அதில் போட்டு மூடி வைக்கவும். இந்த எண்ணெயைத் தினமும் தடவினால், தலை முடி பளபளக்கும். கூந்தல் வாசனை மனதை மயக்கும். புத்துணர்ச்சியை உணர முடியும்.

    பிரசவ காலத்தை கணக்கிட ஒரு “சூத்திரம்”

    By: Unknown On: 08:17
  • Share The Gag
  • ‘கர்ப்ப காலம்’ என்பது கடைசி மாதவிடாய் திகதியிலிருந்து 280 நாட்கள் மற்றும், கரு உற்பத்தி ஆனதிலிருந்து 266 நாட்கள் எனவும் கணக்கிடப்பட்டிருக்கிறது.

    குழந்தை பிரசவம் ஆவதைக் கணக்கிட ஒரு சாதாரண ‘சூத்திரம்’ இருக்கிறது. அதாவது கடைசி மாதவிடாயின் முதல் நாளிலிருந்து ஏழு நாட்களைக் கூட்டிய பின் மூன்று மாதங்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

    உதாரணத்திற்கு, கடைசி மாத்தீட்டு யூன் மாதம் முதல் திகதியில் ஆரம்பித்திருந்தால், அதோடு ஏழு நாட்களைக் கூட்டினால் யூன் எட்டாம் திகிதி வரும். அதிலிருந்து மூன்று மாதங்கள் பின்னோக்கிச் சென்றால் மார்ச் மாதம் வரும்.

    ஆக, குழந்தை பிரசவிப்பதை நாம் தோராயமாக ‘மார்ச் எட்டாம் திகதி’ எனக் கணக்கில் கொள்ளலாம். ஒரு சிறு சதவீத தாய்மார்களே அந்தக் கணக்கிடப்பட்ட திகதியில் பிரசவிப்பார்கள்.

    அறுபது சதவித தாய்மார்கள் கணக்கிடப்பட்ட திகதியில் ஒரு வாரம் முன்னரோ அல்லது பின்னரோ பிரசவிப்பார்கள்.

    கர்ப்பப்பையில் குழந்தை எந்த நிலையில் இருக்கும் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். முதுகுத் தண்டு முன்புறமாக வளைந்து, தலை வளைந்து, தாடை மார்பு எலும்பின் மேல் பட்டுக்கொண்டும், கைகள் வளைந்து மார்பின் குறுக்காக மடிந்து, கால்கள் வளைந்து தொடைகள் வயிற்றின் மீதும், முழங்கால்கள் வளைந்து தொடைகளின் மீதும் இருக்கும்.

    நீரிழிவு நோயாளிகளுக்கான காலிபிளவர் சப்பாத்தி!

    By: Unknown On: 07:26
  • Share The Gag
  • கால்சியம் சத்து அதிகம் கொண்ட காலிபிளவர் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாக உள்ளது.

    மேலும், அதிக எடை போடாமல் இருக்க உதவுகிறது. இதோ அந்த காலிபிளவரில் சப்பாத்தி செய்து சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்

    சிறிய காலிஃபிளவர் - 1

    கோதுமை மாவு - 2 கப்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    பச்சைமிளகாய் - 5

    உப்பு - தேவையான அளவு

    மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    கொத்தமல்லி - ஒரு கப்

    எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்

    செய்முறை

    * காலிபிளவரை நன்றாக கழுவி நறுக்கி கொள்ளவும்.

    * பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

    * துருவிய காலிபிளவர், பச்சைமிளகாய், சீரகம், உப்பு, மஞ்சள்தூள் ஆகியனவற்றைக் கோதுமை மாவுடன் சேர்த்துக் கைகளால் கிளறி சுடுதண்ணீரைச் சேர்த்து மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.

    * இதனுடன் நறுக்கிய கொத்தமல்லியையும் சிறிது எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்து மீண்டும் பிசைந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

    * பிறகு உருண்டைகளாக்கி சப்பாத்தி வடிவில் வட்டமாக இட்டு சப்பாத்திக்கல்லில் போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    * சுவையான காலிபிளவர் சப்பாத்தி ரெடி.

    இதில் எல்லாம் நாம்தான் கடைசி...அவசியம் படிக்கவும்..!

    By: Unknown On: 00:00
  • Share The Gag
  • இதில் எல்லாம் நாம்தான் கடைசி

    தற்போது சுமார் 25-30 வயதிருக்கும் நபர்கள் பல விஷயங்களை கடைசியாக செய்த, பார்த்த தலைமுறையாக இருப்பார்கள். அது ஒரு சில விஷயங்களை நினைக்கும் போது வேதனையாகவும் இருக்கிறது.

    அது என்ன கடைசி…

    பெண்களாக இருந்தால், பள்ளியில் பாவாடை தாவணியை பள்ளிச் சீருடையாக அணிந்த தலைமுறை நாமாகத்தான் இருப்போம்.

    தலைக்கு சீகக்காயும், முகத்துக்கு மஞ்சளும் தேய்ச்சி குளித்த இளம் பெண்களாக இருந்தவர்களும் நாம்தான் கடைசி.
    பள்ளி விடுமுறையில் நண்பர்களுக்கு கடிதம் எழுதிய தலைமுறையும் நாம்தான்.

    மயில் இறகை புத்தகத்தில் வைத்து அது வளர்ந்துவிட்டதற்கு மகிழ்ச்சியும், காணாமல் போயிருந்தால் துக்கமும் அடைந்ததும்;

    தந்தி வந்து மரணச் செய்தியை அறிந்து கொண்டவர்களும், தந்திக்கே மூடு விழா நடந்து அதிர்ந்தவர்களும் நாம்தான்.
    சைக்கிள் டயரிலும், நுங்கு மட்டையிலும் சைக்கிள் ஓட்டியவர்களில் கடைசி நபர் நாமாகவே இருக்கும்.

    பள்ளி விடுமுறையில் ஊருக்குப் போய், மரத்தில் ஏறி கை மூட்டை உடைத்துக் கொண்டவர்கள் நாமாகவோ, நமது நண்பர்களாகவோ தான் இருப்பார்கள்.

    கேலண்டர் அட்டையில் துணிக் கிளிப்பை வைத்து தேர்வெழுதியவர்களும், சிலேட்டில் வீட்டுப் பாடம் எழுதி அதனை அழியாமல் எடுத்துச் செல்ல அதிக பிரயத்தனம் செய்தவர்களும் நாமேதான்.

    மண்ணில் விளையாட்டுச் சொப்புகள் செய்து அடுப்பில் சுட்டு விளையாடியவர்களும்;

    காதலிக்கு பயந்து பயந்து கடிதம் எழுதி புத்தகத்தில் வைத்துக் கொடுத்து மாட்டிக் கொண்டவர்களும், மாட்டாதவர்களும் நாமாகவே இருக்கும்.
           
    உள்ளூர் நபர்களுக்கே, தொலைபேசி பூத்களில் ஒருவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்து நாம் பேசி அதற்கான காசை கொடுத்துவிட்டு வந்ததும் நாமாகத்தான் இருக்கும்.

    போன் நம்பர் கேட்டால் பக்கத்து வீட்டு அல்லது அடுத்த தெருவில் இருக்கும் ஒருவரின் தொலைபேசி எண்ணைக் கொடுத்தவர்களும் நாம்தான்.

    தெருவிலேயே ஒரே ஒரு வீட்டில் இருக்கும் தொலைக்காட்சியில் இடம் பிடித்து உட்கார்ந்து ஒலியும்-ஒளியும் பார்த்தவர்களும் நாம்தான் கடைசி.

    இதுபோல பல விஷயங்களை இந்த தலைமுறையே இறுதியாகக் கண்டுள்ளது. அடுத்த தலைமுறை இதுபோல இழக்கும் பல விஷயங்களை பட்டியலிட்டால் அது முடியவே முடியாது என்றே தோன்றுகிறது.

    இதுபோல நாம் இழந்த பல விஷயங்கள் உள்ளன. அவை உங்களுக்கும் தெரியுமா?