Friday, 1 August 2014

Tagged Under: ,

வீட்டிலேயே தயாரிக்கலாம் கூந்தல் வாசனை திரவியம்..!

By: Unknown On: 17:01
  • Share The Gag
  • வீட்டிலேயே ஹென்னா தயாரித்துத் தடவிக் கொள்வதன் மூலம், முடிக்கு நல்ல கண்டிஷனைத் தருவதுடன், வளர்ச்சியையும் குளிர்ச்சியையும் தரும்.

    மருதாணி பவுடர் ஒரு கப்,
    ஒரு முட்டையின் வெள்ளைக்கரு,
    டீ டிகாக்ஷன் ஒரு கப்,
    ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறு

    இவற்றுடன் மொட்டான முல்லை, ஜாதி, இருவாச்சி மல்லி மூன்றையும் அரைத்த விழுது ஒரு கப் சேர்த்து கலந்துகொள்ளுங்கள். ஹென்னாவைத் தலைக்குப் போடுவதால் முட்டை வாசனை மறைந்து பூக்களால் தலை வாசம் வீசும். மகிழம்பூ 50 கிராமுடன், கால் கிலோ நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, இதனுடன் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் தலா 25 கிராம் கலந்துகொள்ளுங்கள். இந்தத் தைலத்தை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து ஊறவைத்துக் குளிக்கலாம்.

    ஒரு பிடி மகிழம்பூவை தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து ஆறவிடுங்கள். மகிழம்பூ தைலம் தேய்த்துக் குளித்து முடித்ததும், ஆறவைத்துள்ள மகிழம்பூ தண்ணீரில் அலசுங்கள். கூந்தல் வாசம் வீசும்.

    ஒரு கப் மருதாணி இலை,
    கடுக்காய் தோல் 4,
    டீ டிகாக்ஷன் ஒரு கப்,
    நல்லெண்ணெய் ஒரு கப்,
    துளசி இலை ஒரு கப்,
    கொட்டை நீக்கிய நெல்லிக்காய்

    இவற்றை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். வாரம் ஒரு முறை தலையில், சிறிது நல்லெண்ணெய் தடவிவிட்டு, இந்த பேஸ்ட்டை தலை முழுவதும் போட்டு, ஒரு மணி நேரம் கழித்து அப்படியே அலசலாம். தலைமுடிக்கு நல்ல கண்டிஷனரையும், கலரையும், வாசனையையும் கொடுப்பதுடன் பளபளப்பாக வைத்திருக்கும். ஃப்ரெஷ் பன்னீர் ரோஜா 100 கிரா முடன் மரிக்கொழுந்து, வெட்டிவேர், செண்பகப்பூ, துளசி தலா 50 கிராம் சேர்க்கவும். அடுப்பை சிம் மில் வைத்து தேங்காய் எண்ணெய்விட்டுக் காய்ச்சி, பூக்களை அதில் போட்டு மூடி வைக்கவும். இந்த எண்ணெயைத் தினமும் தடவினால், தலை முடி பளபளக்கும். கூந்தல் வாசனை மனதை மயக்கும். புத்துணர்ச்சியை உணர முடியும்.

    0 comments:

    Post a Comment