Tuesday, 29 July 2014

இந்த வாரம் ரசிகர்களுக்கு செம்ம விருந்து!

By: Unknown On: 23:27
  • Share The Gag
  • கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்புக்கு என்றும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் இந்த வாரம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிற அனைத்து டீசர் மற்றும் ட்ரைலர் வெளிவரயிருக்கிறது.

    இதில் ‘இது நம்ம ஆளு, காவியத்தலைவன், நாய்கள் ஜாக்கிரதை, திருடன் போலிஸ், நீயெல்லாம் நல்லா வருவடா, சிகரம் தொடு’ படங்களின் டீசர் மற்றும் ட்ரைலர்கள் வரவுள்ளது.

    மேலும் அஜித் திரையுலகிற்கு வந்து இந்த ஆகஸ்ட் 3 தேதியோடு 22 ஆண்டுகள் ஆகிறது, அதனால் தல ரசிகர்களும் கௌதம் படத்தின் பர்ஸ்ட் லுக்கை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    ஃபிட்டான வயிற்றைப் பெறுவதற்கான சில டயட் டிப்ஸ்...

    By: Unknown On: 22:46
  • Share The Gag

  • நாம் ஒவ்வொருவரும் நமது உடல் நலத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருக்கின்றோம். அதிலும் குறிப்பாக சினிமா ஹீரோக்கள் போன்று சிக்ஸ் பேக் அடைவதற்கு இன்றைய ஆண்கள் பெரிதும் ஆசைப்படுகின்றனர். அதற்காக அவர்கள் தங்களை மிகவும் வருத்தி, சரியாக சாப்பிடாமலேயே, அதனை அடைய முற்படுகின்றனர். அவ்வாறு இல்லாமல் சிறந்த எளிய வகையில் தொப்பையை குறைத்து பிட்டாக மாறுவதற்கு பல வழிகள் இருக்கின்றன.


    இது சிக்ஸ் பேக் காலமாக மாறிவிட்டாலும், நம்மை நேர்த்தியாக காண்பிப்பது ஆரோக்கியமான பிளாட் ஆப்ஸ் (Flat Abs) தான். நமது உடலை ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் வைப்பதற்கும், தட்டையான வயிற்றை பெறுவதற்கும் அதிக முயற்சி தேவைப்படும். மேலும் உடல் மொழியை நேர்மாறான முறையில் மாற்றும் தட்டையான வயிற்றை அடைவதற்கு டயட், வாழ்க்கை முறை, உடல்நலப் பொருத்தம் போன்றவற்றில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.

    ஆரோக்கியமான உடல் நலத் தகுதியான ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புவார்கள். தொப்பை வயிறு பெண்கள் மத்தியில் உங்கள் மதிப்பைக் குறைக்கச் செய்யும். உங்கள் பிளாட் ஆப்ஸ் உங்களின் அதிக உழைப்புத் தன்மையையும் அழகாக காண்பிக்கும் விருப்பத்தையும் வெளிப்படுத்தும்.
    நீங்கள் திருமணமானவராக இருந்தாலும், இது உங்களின் உடல்நலத்தின் உறுதியையும் உங்கள் மனைவியுடன் செல்லும் போது அழகாகக் காண்பிக்கத் தூண்டும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தும். பல கணக்கெடுப்புகளின் படி, பெண்கள் தொப்பை வயிறு உள்ளவர்களை விட, ஒல்லியான உடம்புள்ள ஆண்களையே பெரிதும் விரும்புகின்றனர் என்று தெரிவிக்கின்றது.

    நீங்கள் இந்த பிளாட் ஆப்சை பெறுவதற்காக தசைகளை வருத்தியோ அல்லது தினமும் உடற்பயிற்சி கூடத்திற்கோ செல்ல வேண்டாம். உங்கள் வாழ்க்கையில் சில எளிதான ஊட்டச்சத்து நிரம்பிய உணவை சேர்த்து வந்தால், உங்களின் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். கார்போஹைட்ரேட் மற்றும் எண்ணெய் கொழுப்பை குறைத்து, ஊட்டச்சத்து நிரம்பிய உணவை உட்கொள்ள வேண்டும். நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் நிறைந்துள்ள உணவை தண்ணீருடன் சேர்ந்து தினமும் உட்கொள்ள வேண்டும். தொப்பையை குறைக்க உங்கள் உணவில் தினமும் பச்சை காய்கறிகளும், நிறைய பழங்களும் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வயிற்றில் சேரும் செரிமானமாகாத கொழுப்பை தடுக்க எளிதாக செரிமானமாகும் உணவு வகையை சாப்பிட வேண்டும்.


    முட்டையின் வெள்ளைக்கரு

     புரோட்டீன் மற்றும் தேவையான அமினோ அமிலங்களின் மூலமாக இருப்பது முட்டையாகும். முட்டையின் வெள்ளை கருவை உங்கள் காலை உணவில் தினமும் சேர்த்து வந்தால், உங்கள் உடலில் புரோட்டீன் அதிகமாவதோடு, நாள் முழுவதும் பசியைக் கட்டுப்படுத்தும்.

    க்ரீன் டீ

     நாள் முழுவதும் சர்க்கரை அல்லாத க்ரீன் டீயை பருகவேண்டும். கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் அது உங்கள் மெட்டபாளிசத்தை அதிகரித்து கொழுப்பை குறைக்கச் செய்யும். நீங்கள் எவ்வளவு கொழுப்பை குறைகின்றீர்களோ அவ்வளவு குறைவான உடற்பயிற்சியை செய்தால் போதுமானதாகும்.

    பாதாம்

     தசை வளர்ப்பிற்கும் பராமரிப்பிற்கும் தேவையான அதிகமான புரோட்டீன், நார்ச்சத்துடன் கூடிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் பாதாமில் உள்ளது. மேலும் இது பசியை சிறந்த முறையில் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தது.

    கெட்டித்தயிர்

     கெட்டித்தயிர் வயிற்றில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கான உணவு வகைகளில் சிறந்தது ஆகும். கெட்டித்தயிரில் உள்ள ப்ரோபயோடிக் பாக்டீரியா உங்கள் செரிப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து வயிற்றில் தங்கும் கொழுப்பையும் குறைக்கும்.

    கைக்குத்தல் அரிசி

     தொப்பையை குறைக்க நீங்கள் தசை வலுப்படுத்தும் புரோட்டீன் நிறைந்த கார்போஹைட்ரேட்களையும் வைட்டமின்களையும் கொண்ட கைக்குத்தல் அரிசியை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இதில் நிறைந்துள்ள வைட்டமின் பி கொழுப்புச்சத்தை குறைக்க உதவும்.

    கீரைகள்

     தொப்பையை குறைக்க தினமும் உங்கள் உணவில் கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பசலைக்கீரை, கேல் மற்றும் லெட்யூஸ் வகைகளில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் நார்ச்சத்து உங்கள் பசியை கட்டுப்படுத்தும்.

    ஓட்ஸ்

     ஓட்ஸில் அதிக நார்ச்சத்தும் குறைவான கலோரிக்களும் உள்ளது. உங்கள் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிட்டால் அது நாள் முழுவதும் உங்கள் பசியை கட்டுப்படுத்தி அதிகம் சாப்பிடாதவாறு தடுக்கும்.

    தேன் மற்றும் எலுமிச்சை சாறு

     உடலை வலிமையாக்கவும், கொழுப்பைக் குறைக்கவும் தினமும் ஒரு க்ளாஸ் வெந்நீருடன் எலுமிச்சை சாரையும் தேனையும் கலந்து பருக வேண்டும்.

    தக்காளி

     உடம்பு எரிச்சல்களை குறைக்கவும், நீர்ச்சத்தை தக்க வைக்கவும் தக்காளி பெரிதும் உதவுகின்றது. லெப்டின் எனப்படும் புரோட்டீன் நிரம்பியுள்ளதால் உங்கள் மெட்டபாலிக் அளவை சரிசெய்து பசியையும் கட்டுப்படுத்த உதவும்.

    பூண்டு

     இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. உங்கள் வயிற்றை சுத்தமாகவும் கொழுப்புச்சத்து சேர்ந்து விடாமல் தடுக்கவும், செரிமான மண்டலம் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.

    ரேஸ் வார்ஸ் - அஞ்சான் கேம் அறிமுகம்!

    By: Unknown On: 21:36
  • Share The Gag
  • சமீபகாலமாக ஒரு படத்தோடு அந்த படம் சம்பந்தமான விளையாட்டுகளையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர் சினிமா துறையினர். பெரியவர்களை மட்டுமல்லாது குழந்தைகளையும் சினிமா கவர வேண்டும் என்பதற்காக இது போன்ற விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கிரிஸ்-3, கோச்சடையான் போன்ற படங்களோடு வந்த விளையாட்டை போன்று, இப்போது சூர்யா நடித்துள்ள அஞ்சான் படத்திற்கும் புதிதாக ஒரு கேம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அஞ்சான் ரேஸ் வார்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விளையாட்டு கார் ரேஸை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. கிரிஷ்-3, கோச்சடையான் போன்ற படங்களுக்கு கேம் வடிவமைத்த ஹங்கம்மா நிறுவனம் தான் இந்த விளையாட்டையும் உருவாக்கி உள்ளது. இதனை அபிளிகேஷனாக டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

    அஞ்சான் ரேஸ் வார்ஸ் கேம் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் நடிகர் சூர்யா, லிங்குசாமி, யுடிவி தனஞ்செயன், வசனகர்த்தா பிருந்தா சாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். அஞ்சான் கேமை அறிமுகம் செய்து வைத்து பேசிய நடிகர் சூர்யா, பொதுவாக வீட்டில் நான் எனது பசங்களோடு அதிகமாக கேம் விளையாடுவேன். இப்போது எனது படத்தின் பெயரிலேயே ஒரு விளையாட்டு உருவாகி இருப்பது சந்தோஷம் அளிக்கிறது. அஞ்சான் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப்படத்திற்காக நிறையவே உழைத்து இருக்கிறோம். அஞ்சான் படத்தின் டீசர் போன்று அஞ்சான் கேமும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெறும். அஞ்சான் படம் நாளை சென்சாருக்கு செல்கிறது. சென்சார் முடிந்தவுடன் சொன்ன தேதியில், அதாவது ஆகஸ்ட் 15ம் தேதி படத்தை உறுதியாக ரிலீஸ் செய்கிறோம் என்றார்.

    லிங்குசாமி பேசுகையில், சினிமாவே ஒரு விளையாட்டு மாதிரி தான். இங்கு யார் முந்தி செல்கிறார்களோ அவர்களே ஜெயிக்கிறார்கள். சூர்யா போன்ற பெரிய ஹீரோக்களை வைத்து படம் பண்ணும்போது அதற்கு இதுபோன்ற விளம்பர யுக்திகள் தேவைப்படுகிறது. சூர்யா சூப்பர் ஹீரோ என்பதால் அஞ்சான் படத்திற்கு அவர் மட்டுமல்லாது எல்லோரும் நிறைய உழைப்பை கொடுத்துள்ளார்கள். இந்தப்படம் நிச்சயம் வெற்றி பெறும், ஓடுகிற குதிரையில் சூர்யா, முதல் குதிரையாக வருவார் என்றார்.

    கருவில் இருக்கும் குழந்தை ஆரோககியமாக வளரணுமா?

    By: Unknown On: 19:50
  • Share The Gag
  •  nov 18 - health -baby-in-womb.

    பெரும்பாலும் 70 சதவீத பெண்களுக்கு தங்கள் குழந்தை ஆரோக்கியமாக பிறக்குமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. நீரிழிவு, தைராய்டு போன்ற நோய் இருக்கும் தாயின் கருவில் இருக்கும் குழந்தைக்கு குறைபாடு ஏற்படலாம். மனித உடல 46 குரோம்மோசோம்களால் உருவாக்கப்பட்டது. இதில் பாதி தாயிடமிருந்தும் மீதி தந்தையிடமிருந்தும் வருகின்றன.
    மேலும் நமது உடலில் 25 முதல் 35 ஆயிரம் ஜீன்கன் இருப்பது தெரிய வந்துள்ளது. இவற்றில் எந்தவொரு மரபணுவில் சிறிய கோளாறு இருந்தாலும் அது சிசுவை பாதிக்கும் வாய்ப்புள்ளது. தாய், தந்தை இருவருக்கும் ஆரோக்கியமான ஜீன்கள் இருந்தாலும் சில சமயம் குழந்தைக்கு நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

    இதற்கான காரணம் கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளும் சில மருந்துகள் தான். இது ஜீன்களில் மாறுதல்களை ஏற்படுத்தக்கூடும். அதனால் சில நோய்கள் குழந்தைக்கு குறைபாட்டை ஏற்படுத்தும்.

    அவற்றில் சில: சிகில் செல் அனீமியா, நுரையீரல் சிஸ்டிக் பைப்ரோசிஸ், பேமிலியில் டிஸ்டோனியா, மெனிங்கோசீல்(மூளை லேயரில் இருந்து மூளை வெளியே வந்து விடுதல்), தலை சிறியதாக இருத்தல், தலை உருவாகாமல் இருப்பது, முதுகுத்தண்டு பகுதியில் கட்டி ஏற்படுவது. வயிற்றில் குடல்பகுதி வெளியே இருப்பது, இரண்டு தலை உருவாகுதல், ஹீமோபீலியா, தலசீமியா போன்றவை.

    35 வயதுக்கு மேல் கருவுறும் பெண்கள், முதல் மூன்று மாதங்களுக்கு ஏதேனும் மருந்து சாப்பிட்டவர்கள், கர்ப்பம் தரிக்கும் முன்பே நீரிழிவு நோய் உள்ளவர்கள், அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டவர்கள் மரபணு சோதனையை அவசியம் செய்ய வேண்டும்.

    கர்ப்பகாலத்தில் போது முறையான பரிசோதனைகள் செய்வதன் மூலம் கருவில் உள்ள குழந்தையின் முறையான வளர்ச்சியை மட்டுமல்லாமல் குழந்தைக்குள்ள பிறவிக்குறைபாடுகளையும் தெரிந்து கொள்ள முடியும்.

    * இதற்கிடையில் முதலில் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லக் பெயரை வைத்து பேசலாம். நிறைய பெற்றோர்களுக்கு என்ன குழந்தை என்று தெரியாமல் எப்படி பெயர் வைப்பதென்று ஒரு சந்தேகம் வரும். ஆனால் இதற்கு ஒரு வழி இருக்கிறது. அது தான் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லப் பெயரை, அதாவது இரு பாலினத்திற்கும் பொதுவான ஏதேனும் ஒரு செல்லப் பெயரை வைத்து அழைக்கலாம். வேண்டுமென்றால் இந்த பெயரை பிறந்த பிறகு மாற்றிக் கொள்ளலாம்.

    * தாயானவள் முதலில் குழந்தையிடம் பேச வேண்டும். இது ஒரு பழைய நம்பிக்கை தான், இருப்பினும் குழந்தைக்கு தாயின் குரலானது மிகவும் பிடிக்கும். அப்படி பேசுவதால் குழந்தையானது அமைதியுடன், தாயின் குரலைக் கேட்டுக் கொண்டு நிம்மதியாக இருக்கும். மேலும் இப்படி பேசுவதால் பிறக்கும் போது அழும் குழந்தை கூட தாயின் குரலை கேட்டதும் அழுகாமல் இருக்கும்.

    * கர்ப்பமாக இருக்கும் பெண் பாட்டு கேட்டால் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு மென்மையான பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே வீட்டில் ஏதேனும் ஒரு மென்மையான பாட்டை ப்ளேயரில் போட்டு, ஹெட் செட்டை வயிற்றில் வைக்கலாம். அப்படி பாட்டுக்களை கேட்கும் போது குழந்தை வயிற்றில் உதைத்தால் அது சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறது என்று அர்த்தம் ஆகும்.

    * மேலும் குழந்தை கருவில் இருக்கும் போது எப்போதும் பாசிடிவ்-ஆகவே யோசித்து பேச வேண்டும். இதனால் குழந்தையானது பிறந்த பின்னும் எப்போதும் பாசிட்டிவ்-ஆகவே யோசிக்கும். மேலும் தாயானவள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதனால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.

    * அனைத்து தாய்க்கும் குழந்தை வயிற்றில் உதைக்கும் போது கணவர் அதை உணர வேண்டும் என்று நினைப்பர். அப்படியே அவர்களது கணவரும் ஆசைபடுவர். ஆகவே அப்படி உதைக்கும் போது, குழந்தையின் தந்தையும் குழந்தையிடம் அடிக்கடி பேச வேண்டும். அப்போது தான் தாய்க்குப் பின் தந்தை தூக்கினாலும் குழந்தை இது தான் தந்தை என்பதையும் புரிந்து கொள்ளும். மேலும் இவ்வாறு அந்த குழந்தை உதைக்கும் போது தந்தை அதை நன்கு உணர, அவருக்கும் அந்த பிரசவத்தின் அற்புதமும் நன்கு புரியும்.எனவே, இப்படியெல்லாம் நடந்து பாருங்கள், குழந்தை ஆரோக்கியமாக புத்திக்கூர்மையுடன் பிறக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

    வடிவேலுடன் கைகோர்க்கும் ஸ்ருதிஹாசன்!

    By: Unknown On: 18:40
  • Share The Gag
  • தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தற்போது பூஜை படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

    சில நாட்களுக்கு முன் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குனர் கோகுலுடன், நடிகர் கார்த்தி இணைவதாக இருந்தது. அதற்கு தற்போது நேரம் வந்துவிட்டது.

    கொம்பன் படத்தை முடித்தவுடன் இப்படத்தில் நடிப்பாராம், மேலும் இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும் மேலும் நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு நகைச்சுவை பாத்திரத்தில் கலக்கவுள்ளார், இதில் ஸ்ருதிஹாசனை ஒரு தலையாக வடிவேலு காதலிப்பது போல் காட்சிகள் வருமாம்.

    கெட் அவுட் - கரப்பான்பூச்சி, எலி, பல்லி, எறும்பு...

    By: Unknown On: 17:40
  • Share The Gag
  • இல்லத்தரசிகளுக்கு தீராத தலைவலிகள் என்று பெரிய பட்டியலே இருக்கும்... அதில் பூச்சிகள் உள்ளிட்டவற்றுக்கும் கட்டாயம் இடமுண்டு. ஆம்... கரப்பான்பூச்சி, பல்லி, எலி, எறும்பு, மூட்டைப்பூச்சி என வீட்டில் வாழும் 'ஜீவன்'களின் தொல்லை... தாங்க முடியாத தொல்லையே.

    'அடச்சே... என்ன செய்தாலும் இதையெல்லாம் ஒழிக்க முடியலையே' என்று புலம்பிக்கொண்டே இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு, அவற்றை விரட்டி அடிக்கும் வழிகள்

    கெட் அவுட் கரப்பான்பூச்சி!

    ''பொதுவாக ஈரம், இருட்டுள்ள இடங்களிலும், சமையலறையிலும் கரப்பான்பூச்சியின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். பூச்சிக்கொல்லி ஸ்பிரே உள்ளிட்ட ரசாயன பொருட்களை உபயோகித்து விரட்ட முயற்சிக்கும்போது, அந்த ரசாயனங்கள் காற்றில் கலந்து... அரிசி, மாவு, மசாலா பொருட்கள் போன்றவை திறந்திருந்தால், அதில் கலந்துவிட அதிக வாய்ப்பு உண்டு. காற்றை கிரகிக்கும் தன்மையுள்ள மாவுப்பொருட்கள், இந்த ரசாயனங்களின் தன்மையை இழுத்துக் கொள்ளும் அபாயமும் இருக்கிறது. எனவே, கரப்பான்பூச்சிகளை அழிக்க... ரசாயன ஸ்பிரேக்கள் வேண்டாம்.

    தற்போது புதிய வகை ஜெல், சந்தைக்கு வந்துள்ளது. கரப்பான்பூச்சிகளின் நடமாட்டம் இருக்கும் இடங்களில் இதை பொட்டு போல ஆங்காங்கே வைக்க வேண்டும். நேரம் ஆக ஆக இது இறுகும். உணவு வேட்கையில் வரும் கரப்பான்பூச்சிகளை இந்த ஜெல்லின் நறுமணம் ஈர்க்க, இறுகி இருக்கும் இந்த ஜெல்லை தன் எச்சிலால் அவை இளக்கி சாப்பிட, அந்த நிமிடமே இறந்துபோகும். உடைந்த கடலைப்பருப்பு, துவரம்பருப்பு போன்ற பொருட்களை அரைத்து, ஊசிப்போக வைத்து, அதனுடன் ரசாயனங்களைக் கலந்து உருவாக்கப்படும் இந்த ஜெல், நம் கிச்சன் பொருட்களைப் பாதிக்காது. மேலும், இதை சாப்பிட்ட உடனேயே கரப்பான்பூச்சி இறந்துபோவதால், மற்ற பொருட்களிலும் ரசாயனங்கள் கலந்துவிடுமோ என்கிற கவலையும் இல்லை.

    பை பை பல்லி!
    கடைகளில் விற்கும் கெமிக்கல் ஸ்பிரேக்களை பல்லியின் மீது அடித்து, அதை அழித்துவிடலாம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அதை உபயோகிக்கும் நுணுக்கம் அறிந்துகொள்வது அவசியம். பல்லியின் மேல் தோலானது, மெழுகு போன்ற தன்மை கொண்டது என்பதால், நாம் அடிக்கும் ஸ்பிரே அதனை பாதிக்காது. மாறாக, பல்லியின் முகத்துக்கு நேராக கெமிக்கல் ஸ்பிரேவை அடிக்கும்போது, பல்லியின் நாக்கில்பட்டு உட்செல்லும்போது, அது இறந்துபோகும்.

    ஒழிக எலி!

    சுண்டெலி, மளிகைக் கடைகளில் இருக்கும் எலிகள், பெருச்சாளி என்று எலிகளில் மூன்று வகைகள் உள்ளன. இதில் மளிகைக் கடைகளில் இருக்கும் வகையறா எலிகள், குட்டி போடும் சமயத்தில் மட்டும்தான் ஒரே இடத்திலோ... அல்லது வீட்டிலோ இருக்கும். மற்றபடி எந்த ஓர் இடத்திலும் நிரந்தரமாக இருக்காது. சுண்டெலி, எந்த வீட்டில் இருக்கிறதோ அங்கு மட்டும்தான் நிரந்தரமாகக் குடியிருக்கும். அந்த வீட்டின் ஓர் அறையில் இருந்து மற்றோர் அறைக்கு தாவிக்கொண்டே இருக்கும். பெருச்சாளி வீட்டுக்குள் வராது. வீட்டைச் சுற்றி ஓடும் அல்லது சாக்கடைப் பொந்துகளில் குடியிருக்கும்.

    வீட்டில் குடியிருக்கும் சுண்டெலியை விரட்ட, 'கம் பேட்' (Gum pad) என்கிற புதுவித பொறி கடைகளில் கிடைக்கிறது. நோட்டுப் புத்தகத்தை விரித்து வைத்ததுபோல இருக்கும் இந்த பேட். அதன் மேல் வெள்ளை நிறத்தில் கம் இருக்கும். எலி நடமாட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் இந்த பேடை வைத்துவிடுங்கள். ஓடி வருகிற எலி இதில் கால் வைக்கும்போது, நகர முடியாத அளவுக்கு ஒட்டிக் கொண்டுவிடும். காலையில் அப்படியே தூக்கி வெளியே போட்டுவிடலாம். ஒருவேளை இந்த பேடில் உள்ள கம் கீழே கொட்டிவிட்டால்... கெரசின் கொண்டுதான் துடைத்தெடுக்க முடியும். தப்பித் தவறி இதில் கை, கால் என்று நம்முடைய உடல் பாகங்கள் பட்டாலும் ஒட்டிக்கொள்ளும். அப்படி ஒட்டிக்கொண்டு விட்டால்... நெயில் பாலிஷ் ரிமூவரை பயன்படுத்தி நீக்கிவிடலாம். பிறகு, சோப்பு கொண்டு உடல்பாகத்தை சுத்தமாக கழுவிவிடுவது முக்கியம். இந்த கம் பேட், இரவு நேர உபயோகத்துக்குத்தான் நல்லது. ஆட்கள் அதிகம் நடமாட்டமிருக்காது என்கிற நிலையில், பகலிலும் பயன்படுத்தலாம். என்றாலும் வீட்டில் உள்ள அனைவருக்கும் அதைப்பற்றி அறிவித்துவிடுவது நலம்.

    அடுத்ததாக, மளிகைக் கடையில் இருக்கும் எலிகள் வீட்டில் இருந்தால், ஸ்பிரிங் எலிப்பொறி (மர எலிப்பொறியைவிட இது சிறந்தது) வைத்துப் பிடிக்கலாம். ஆனால், எலிகளுக்கு ஞாபகசக்தி அதிகம். முதல் நாள் எலிப்பொறியை பார்த்து அதில் மாட்டாமல் தப்பிவிட்டால், மறுநாள் அந்தப் பக்கம் செல்லாது. எனவே, எலிகள் அதிகம் புழங்கும் இடத்தில் ஒன்றுக்கும் அதிகமான எலிப்பொறிகளை வைத்து, அது எந்தப் பக்கம் நகர்ந்தாலும் மாட்டுவது போல ஏற்பாடுகள் பலமாக இருக்க வேண்டும்.

    பெருச்சாளிகள் வீட்டுக்குள் வருவது அபூர்வமே. அதேசமயம், கடைகளையட்டி சர்வசாதாரணமாக நடமாடும். பெருச்சாளிகளைப் பொறுத்தவரை எலி பாஷாணம் ஒன்றுதான் தீர்வு. விஷம் தோய்ந்த சின்ன கேக் வடிவத்தில் இது விற்கப்படுகிறது. பெருச்சாளி நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இதை வைத்துவிட்டால்... உணவுப் பொருள் என்று நினைத்து சாப்பிடும் பெருச்சாளிகள், இறந்துவிடும்.
       
    எறும்புத் தொல்லை நீங்க..!

    எறும்புத் தொல்லையைத் தவிர்க்க, சாப்பாடு அயிட்டங்கள் கீழே சிதறாமல், இனிப்பு அயிட்டங்களை இறுக மூடி வைத்து, குப்பைக் கூடையை உடனுக்குடன் சுத்தம் செய்து, மில்க் மெயிட், நெய் என பாட்டிலைச் சுற்றி வழிந்திருப்பவற்றை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து... இப்படி கிச்சனை பராமரித்தாலே போதும். ஒருவேளை அதிகமான எறும்புத் தொல்லை இருந்தால், எறும்பு சாக்பீஸ் பயன்படுத்தலாம். கெட்டுப் போன உணவு வகைகளைத் தேடி ஈக்கள், கொசுக்கள் குழுமும் என்பதையும் மனதில் வையுங்கள்.

    மூட்டைப்பூச்சியை நசுக்கலாமா?

    மூட்டைப்பூச்சியை நசுக்கும்போது, அதன் வயிற்றில் இருக்கும் முட்டைகள் வெடித்து, குட்டிகள் வெளிவந்துவிடும். இதெல்லாம் நம் கண்களுக்குத் தெரியாது. எனவே, மூட்டைப்பூச்சியைக் கண்டால் அதை எடுத்து தண்ணீரில் அல்லது எண்ணெயில் போட்டுவிடுங்கள். மூச்சுத் திணறி இறந்துவிடும். பொதுவாக சினிமா தியேட்டர் போன்ற இடங்களில் மூட்டைப்பூச்சி அதிகம் இருக்கும். அதுபோன்ற இடங்களுக்கு சென்று வந்த உடன், அந்த உடைகளை வெந்நீரில் மூழ்க வைத்து, துவையுங்கள். மூட்டைப்பூச்சிக்கு ஒரே தீர்வு, அதற்குண்டான ஸ்பிரே மட்டுமே.''

    உங்கள் துணை எப்படிப்பட்டவர் - அவசியம் படிக்கவும்!

    By: Unknown On: 10:45
  • Share The Gag
  • காதல்! உலகத்தில் இருபது முதல் அறுபதுவரை அத்தனைபேரையும் கட்டிப்போடும் மந்திர சக்தி. காதலில் ஜெயிப்பது தோற்பதை விட அதை கடந்து வராதவர்கள் ஒருசிலர். அப்படி கடக்காதவர்கள் பிறவிப்பயன் அற்றவர்களே. ஒவ்வொருவருக்கும் காதல் வந்தபின் அவரவர் துணையை
    பற்றி அறிய ஆவலாக இருக்கும். அவர் தன் மேல் அன்பு எவ்வளவு வைத்திருக்கின்றார், தனக்காக என்ன எல்லாம் செய்வார் இப்படி பல. அப்படியானவர்களுக்கு இந்த பதிவு
    (திருமணமானவர்களும் தங்கள் துணை பற்றி அறியலாம்.)

    இதை நானாக சொல்லவில்லை நான் இன்னொரு இடத்தில் படித்ததை உங்களிடம் பகிருகின்றேன்.
    (யான் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறவேண்டும்.)

    முதலில் உங்கள் பிறந்த ஆண்டு, மாதம், திகதி ஆகியவற்றை கூட்டி எடுங்கள். அதுதான் உங்கள் காதல் எண்.(இதேபோல உங்கள் துணையின் எண்ணையும் கூட்டி எடுங்கள்) உதாரணம்: பிறந்த திகதி 8 பிறந்த மாதம் 8 ஆண்டு 1988 என்றால் 8+8+1+9+8+8=42 பின் 4+2 அதையும் கூட்டுங்கள். 6 என்பது தான் காதல் எண்.

    எண் ஒன்று.

    ஆண்.


    உங்கள் துணையிடம் விசுவாசமாகவும், பெருந்தன்மையோடும், நன்றிமிக்கவர்களாகவும் இருக்கும் நீங்கள் மனைவியின் செயலை குறை சொல்வதை தவிர்ப்பது நல்லது. அதன் பின் உங்கள் வாழ்க்கை சொர்க்கம்தான்.

    பெண்.

    வாழ்க்கையின் இறுதிவரை அனுபவித்து வாழும் நீங்கள் தன் துணை தன்னைவிட எல்லா விடய்த்திலும் உயர்ந்து நிர்க்கவேண்டும் என எதிர்பார்ப்பவர்.(சமையலிலுமா தெரியவில்லை.) அப்படிப் பட்டவர் கிடைத்து விட்டால் பாராட்டவும் தவறமாட்டார். லட்சியவாதி ஆனா நீங்கள் நகைச்சுவை உணர்வோடு புத்திசாலிகளாகவும் இருப்பீர்கள்.

    எண் இரண்டு.

    ஆண்.

    காதல் மன்னன் பட்டம் உங்களுக்குத்தான். உங்கள் துணையை அனுசரித்து போவதில் நீங்கள் தான் கில்லாடிகள். அவரின் எத்தகைய பிரச்சனைகளையும் இலகுவாக அணுகி தீர்த்து வைப்பீர்கள்.

    பெண்.

    கணவர் எள் கொண்டு வா என்றால் என்னை கொடுப்பவர் நீங்கள். உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் தொட்டால்சினுங்கிகளான நீங்கள், நீங்கள் செய்யும் எல்லா விடயங்களையும் உங்கள் அழகையும் உங்கள் துணை பாராட்ட வேண்டுமென எதிர்பார்ப்பவர். சுற்றி இருப்பவர்களை கலகலப்பாக வைத்திருப்பீர்கள்.

    எண் மூன்று.

    ஆண்.


    இந்த காலத்து ராமனுங்க நீங்க. இன்னொருபுறம் வாரி வழங்கும் கர்ணன். எல்லா விடயங்களையும் விளையாட்டாக எடுக்கும் நீங்கள் சிறந்த பேச்சாளர். பொறாமை என்றால் அது என்ன விலை என கேட்பவர்கள்.

    பெண்.

    ஆண்மை நிறைந்த ஒருவரை எதிர்பார்க்கும் நீங்கள் அழகை பெரிதாக பார்க்கமாட்டீர்கள். நாகரிகம் பிடிக்காது. எல்லா கருமமும் உங்களுக்கு தூசு. எதற்கும் அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள்.

    எண் நான்கு.

    ஆண்.


    உங்கள் துணையை அதிகமாக நேசிப்பீர்கள். தூர சிந்தனையோடு பெருந்தன்மையான நீங்கள் உங்களவருகாக உயிரைக்கூட கொடுப்பீர்கள். பூரண சுதந்திரம் கொடுக்கும் நீங்கள் தான் கணவராக வரவேண்டுமென எல்லோரும் எதிர்பார்ப்பர்.

    பெண்.

    உங்களை யார் நேசித்தாலும் அவரிடம் விசுவாசமாக இருப்பீர்கள். உங்களை நேசிப்பவர் சந்தோசமாக இருக்க நீங்கள் தான் காரணமாக இருப்பீர்கள்.

    எண் ஐந்து.

    ஆண்.


    பெண்களிடையே உங்களுக்கு மவுசு அதிகம். உங்கள் கடைக்கண் பார்வைக்கு பலர் ஏங்குவர். ஆனால் உங்கள் போக்கு அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் அதேசமயம் சந்தோசத்தையும் கொடுக்கும். புரியாத புதிரான நீங்கள் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்வீர்கள்.

    பெண்.

    இவள் தான் பெண் என சொல்லவைக்கும் நீங்கள் பேராசையும் கொண்டவர்கள். ஆனால் உங்களை மனைவியாக அடைந்தவர்களுக்கு வாழ்க்கை சொர்க்கம்தான்.

    எண் ஆறு.

    ஆண்.


    கடவுளும் காதலும் வேறு இல்லை என வாழ்பவர். பெண்களை மதிக்க தெரிந்தவர்கள். அழகாய் போற்றும் நீங்கள் கவிதைகள் எழுதுவதில் கில்லாடிகள்.

    பெண்.

    குப்பைமேட்டை கூட கோவிலாக்கும் நீங்கள் உங்கள் துணைதான் உலகம் என வாழ்வீர்கள். தாய்மை உணர்வு மிக்க நீங்கள் அது எல்லோரிடமும் இருக்கவேண்டும் என எதிர்பார்பதோடு நல்ல வாழ்க்கை வாழ்வீர்கள்.

    எண் ஏழு.

    ஆண்.


    கற்பனையிலேயே காலத்தை கடத்தும் நீங்கள் காரியத்தில் கண்ணானவர்கள். உங்கள் துணை உங்களை காதலிக்கும் போதே அவள் ஏன் என்னை காதலித்தாள், என்னிடம் எதை எதிர்பார்க்கின்றாள் என தேவை அற்றவர்ரை யோசித்தே உங்கள் வாழ்க்கையை நாசமாக்கி விடுவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கை வெற்றி உங்கள் கையிலேயே.

    பெண்.

    உங்களுக்கு சாப்பிடுவது, உடை அணிவது ஏன் தூங்குவது கூட ஏனோ தானோ தான். பணம், உதவி எல்லாமே உங்களுக்கு அனாவசியம். அபூர்வப்பிரவிகளான நீங்கள் யாருக்கும் அடங்கா தனிக்காட்டு ராணிகள். ஆனால் வெளிவேசம் போடத்தெரியாதவர்கள்.

    எண் எட்டு.

    ஆண்.


    பொறாமையாலே அழியும் நீங்கள் சமூக அந்தஸ்திலும், பொருளாதார ரீதியாகவும் பெரியவர்கள். சொர்க்கமான வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும். வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் ஆனால் மனம் தளர மாட்டீர்கள். வெற்றியின் சிகரம் உங்களுக்காக காத்திருக்கும். பிறக்கும்போதே சாமர்த்தியமும் புத்திசாலித்தனமும் உங்களுடன் வந்துவிடும்.

    பெண்.

    கலை, கவர்ச்சி நிறைந்த நீங்கள். முதலில் அகம்பாவம் பிடித்தவர் போல இருப்பீர்கள். ஆனால் பழகிப்பார்த்தால் நீங்கள் தான் தேன். நினைத்ததை அடைய தவறமாட்டீர்கள். அதிகாரமும், பணமும் கொண்ட ஒருவர்தான் உங்கள் துணையாக வருவார். அதை எதிர்பார்ப்பவர் நீங்கள்தான். உங்களுக்கு உணர்ச்சி கூடினால் ஒருவரை உச்சத்திலும் ஏற்றுவீர்கள் அங்கிருந்து தள்ளியும் விடுவீர்கள்.

    எண் ஒன்பது.

    ஆண்.


    சுறுசுறுப்போடு, உறுதியோடு செயற்பட்டு எல்லாவற்றையும் அடைவீர்கள். எதை கொடுத்தாலும் சிறப்பாக செய்யும் நீங்கள் அரசியலில் நுழைந்தால் அதிரடிதான்.

    பெண்.

    உங்களோடு வாழ்வது தான் வாழ்க்கை என துணையை ஏங்கவைக்கும் சாமர்த்திய சாலிகள்.

    இப்போ, உங்கள் துணையையும் உங்களையும் ஒப்பிட்டு இருப்பீர்கள். இது உங்களுக்கும் பொருந்துகிறதா என சோதித்து விட்டு உங்கள் வாழ்க்கையை சந்தோசமாக வாழுங்கள். நம்பவேண்டியத்தை நம்புங்கள் தேவை அற்றத்தை நம்பாதீர்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.

    புதியவர்கள் ஒரு முறை மீட்டுக்கொள்ளட்டும்

    பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க! இதை முயற்சித்துப் பார்க்கலாம்..!

    By: Unknown On: 09:11
  • Share The Gag

  • • மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வயிற்று வலியும், இடுப்பு வலியும் ஏற்படுவது இயற்கை. இந்த வலிகளைப் போக்க வெந்தயத்துடன் நூறு கிராம் அளவுக்கு வெந்தயத்தை நன்றாக பொடியாக்கி, அதில் இருநூறு கிராம் சர்க்கரையை கலந்து சாப்பிட வயிற்றுவலி, இடுப்பு வலி நீங்கும்.


    • வெள்ளைப் பூண்டுடன், கருப்பட்டியை கலந்து சாப்பிட இடுப்புவலி பெருமளவு குறைந்துவிடும்.


    • நீங்கள் ஹைஹீல்ஸ் அணியும் பழக்கமுள்ளவர் எனில் அதன் மூலம் கூட உங்களுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும். ஹைஹீல்ஸ் அணிந்து நீண்ட நேரம் நடந்து செல்வதால் உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்தப்படுவதால் முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி ஏற்படும்.


    மிளகை பொன் வறுவலாக வறுத்து அதில் எள் எண்ணையை கலந்து சாப்பிட இடுப்பு வலி குறையும். தளுதாளி இலையுடன் பூண்டு, எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) சேர்த்து துவையல் செய்து சாப்பிட இடுப்பு வலி குணமாகும்.

    கத்தி இசை வெளியீட்டு விழாவில் விஜய், சமந்தா நடனம்!

    By: Unknown On: 08:04
  • Share The Gag
  • ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள ஷெட்யூல்தான் கடைசி ஷெட்யூல். சுமார் இருபது நாட்கள் தொடர்ச்சியாய் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

    தீபாவளி பண்டிகை அன்று படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதால், கடைசி ஷெட்யூல் படப்பிடிப்பை முடித்த உடன் போஸ்ட் புரடக்ஷன் வேலைகளை தொடங்கி ஒரே மூச்சில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை லண்டனில் பிரம்மாண்டமான முறையில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த விழாவை ஒளிபரப்பும் உரிமையை தமிழ் டிவி சேனல் ஒன்று பல கோடிகள் கொடுத்து வாங்கி உள்ளது. செப்டம்பர் 20-ஆம் தேதி லண்டனில் நடக்க உள்ள இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கத்தி படத்தில் நடித்த அத்தனை நட்சத்திரங்களும் லண்டன் செல்ல இருக்கிறார்கள்.

    இந்த விழாவில் கத்தி படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு விழா மேடையில் படத்தில் நடித்த கலைஞர்கள் நடனம் ஆட இருக்கிறார்கள். அதாவது, விஜய் உடன் இணைந்து சமந்தாவும், கத்தி படத்தின் இசையமைப்பாளரான அனிருத்தும் நடனம் ஆட இருக்கிறார்களாம்.

    அபார்ஷன் பயத்திலிருந்து விடுபட...அவசியம் படிக்கவும்..!

    By: Unknown On: 07:49
  • Share The Gag
  • Free from the fear of abortion ...

    தாய்மை என்பது ஒரு வரம். திருமணமான ஒவ்வொரு பெண்ணும் தாய்மைக்காக தவம் இருக்கின்றனர். கடந்த காலகட்டங்களில், ஒரு பெண் 10  குழந்தைகளைக் கூட எந்த பிரச்னையுமின்றி எளிதாக ஈன்றெடுத்தாள். ஆனால் இன்றோ மரபணு பிரச்னை, மாறி வரும் உணவுப்பழக்கம், ஓய்வில்லாத  வேலை, மன அழுத்தம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட காரணங்களால் கருவுற்றதில் இருந்து குழந்தையை பெற்றெடுக்கும் வரை பல்வேறு இன்னல்களை  சந்திக்க வேண்டியிருக்கிறது. 

    குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்களில் பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்பவர்களாகத்தான் இருக்கின்றனர். இதில், வேலைப்பளு,  டென்ஷன், சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமை, ஓய்வின்மை, தூக்கமின்மை போன்ற காரணங்களால் 20 சதவீதம் பேருக்கு கரு கலைந்து  அபார்ஷன் ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஒருமுறை அபார்ஷன் ஆனால், மறுமுறை கர்ப்பம் தரிக்கும் போது, 2வது முறையும் அபார்ஷன்  ஆகிவிடுமோ என்ற பயத்திலேயே பெண்கள் இருக்கின்றனர்.

    இவ்வாறு கருச்சிதைவு இல்லாமல் பாதுகாப்பாக சிசுவை பெற்றெடுப்பது குறித்து பெரம்பூரில் உள்ள அபிஜெய் கருத்தரிப்பு மையத்தின் மகாலட்சுமி  சரவணன் கூறியதாவது...

    பெண்களின் கர்ப்ப காலத்தை 3 கட்டமாக பிரித்துக் கொள்ளலாம். முதல் வாரத்திலிருந்து 12 வாரம் வரை முதல் கட்டமாகவும், 13 முதல் 26வது  வாரம் 2ம் கட்டமாகவும், 27 - 40வது வாரம் வரை 3ம் கட்டமாகவும் உள்ளது. இதில், முதல் கட்டத்தில் கர்ப்பிணிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க  வேண்டும். ஏனெனில், இந்த காலகட்டத்தில்தான் கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

    இதற்கு காரணம், மரபணு குறைபாடு, குடும்பம், அலுவலக பிரச்னையால் மன அழுத்தம், உணவு பழக்க வழக்கம் மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி  இல்லாமையே.  இத்தகைய காரணங்களால் இயற்கையான முறையில் மட்டுமில்லாமல் செயற்கை முறையில் கருத்தரிப்பவர்களுக்கும் கருச்சிதைவு  ஏற்பட வாய்ப்புள்ளது.

    அவ்வாறு கருச்சிதைவு ஏற்பட்டால், அடுத்த முறை எந்த பிரச்னையுமின்றி குழந்தையை பெற்றெடுக்க வேண்டுமெனில், கருச்சிதைவு ஏற்பட்ட கருவை  மரபணு சோதனைக்கு உட்படுத்தி, அதன் மூலம் பெற்றோருக்கு ஏதாவது குறை உள்ளதா அல்லது கருவில் பிரச்னையா என்பது கண்டறிந்து,  அதற்கான தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், 2வது முறையாக கருத்தரிக்கும் போது, அபார்ஷன் இல்லாமல்  தடுக்க முடியும்.

    13 முதல் 26 வார கால கட்டத்தில் அபார்ஷன் வாய்ப்புகள் குறைவு. இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகள் ஸ்கேன் எடுத்துப் பார்ப்பதன் மூலம்  குழந்தையின் வளர்ச்சியை தெளிவாக அறிய முடியும். குழந்தைக்கு ஊனம், மனவளர்ச்சி குன்றுதல் போன்ற குறைபாடு இருக்கிறதா என்பதையும்  தெரிந்து கொள்ளலாம்.

    3வது காலகட்டத்தில் கர்ப்பப்பையின் வாய் இறுக்கமாக இருக்க வேண்டியது அவசியம். தற்போது பெண்கள் டூவீலர், சைக்கிள் ஓட்டுகின்றனர்.  அதிகளவில் மாடிப்படி ஏறுகின்றனர். இதனால், கர்ப்பப்பை வாய் போதிய அளவில் இறுக்கமாக இருப்பதில்லை. இப்படிப்பட்ட நிலையில், உடலில்  சத்துக்கள் குன்றியவர்களுக்கு குறைபிரசவம், குழந்தை இறந்து பிறப்பது, குழந்தை போதிய அளவு சக்தி இல்லாமல் பிறந்தவுடன் இறப்பது போன்றவை  நடக்க வாய்ப்புள்ளது.

    இதனை தவிர்க்க, 3வது கால கட்டத்தில் மருத்துவரின் ஆலோசனைப்படி, கர்ப்பப்பை வாயில் தையல் போட்டுக் கொள்ளலாம். 10 மாதம்  முழுமையானதும், பிரசவ காலம் வரும் போது, தையலை பிரித்து குழந்தையை வெளியில் எடுக்கலாம். இதன் மூலம் குறைபிரசவமும், குழந்தை  இறந்து பிறப்பதும் தடுக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.