Friday, 8 August 2014

இடுப்பு வலியால் அவதியா… விடுபடுவது எப்படி. பெண்களுக்கான டிப்ஸ்..?

By: Unknown On: 17:49
  • Share The Gag
  • வெந்நீர் குளியல் மாதவிலக்கு பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களையும் எளிமையான முறையில் தீர்க்கிறது. வயது வித்தியாசமில்லாமல் பல பெண்களையும் தொல்லைபடுத்திக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் மாதவிலக்கு பிரச்சனை!

    அதிலும் சில பெண்களுக்கு அந்த மூன்று நாட்களின் போது இடுப்பும், வயிறும் அப்படியே விட்டுப் போவது போல் வலிக்கும். பல பெண்கள் துடித்துப் போவார்கள். இதற்காக வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக் கொள்வார்கள். இந்த மாத்திரைகள் வலியைக் குறைத்து வேறு பல புதிய நோய்களை நமக்குத் தந்து கொண்டிருக்கும்.

    இந்த இடுப்புக் குளியல், மாதவிலக்கு நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளைச் சரி செய்கிறது. அது மட்டுமல்ல, பெண்கள் வயதுக்கு வரத் தாமதமாவது, வெள்ளைப்படுதல், அல்சர், மற்றும் மலச்சிக்கல், இடுப்பு எலும்புக்கட்டு வலி, ஏன்…

    உடலுறவு தொடர்பான சில குறைகளை நீக்குவது என்று பல பிரச்சனைகளுக்கும் இக்குளியல் மிக உபயோகமாக இருக்கிறது! இடுப்புக் குளியல் என்றால் என்னவோ ஏதோ என்று நினைத்துவிட வேண்டாம். நமது உடம்பில் இடுப்புப் பகுதி தண்ணீரில் அமிழ்ந்து இருக்கும்படி உட்கார்ந்து இருந்து, குறிப்பிட்ட சில பகுதிகளை அழுத்தம் கொடுத்து, நமக்கு நாமே மசாஜ் செய்து கொள்வதுதான் இடுப்புக் குளியல்!

    இயற்கை மருத்துவம் செய்யும் பல டாக்டர்கள் இந்த முறையை சிபாரிசு செய்கிறார்கள். ‘‘இடுப்புக் குளியலை வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம். வீட்டில் பாத்டப் உள்ளவர்கள் அதை உபயோகித்து இந்த இடுப்புக் குளியலை எடுத்துக் கொள்ளலாம்.

    இல்லாதவர்கள், நீள அகலம் அதிகமான, பெரிய பிளாஸ்டிக் டப் ஒன்றைக் கூட இதற்குப் பயன்படுத்தலாம். இடுப்புக் குளியலை குளிர்ந்த நீர் சாதாரணத் தண்ணீர், வெந்நீர் என்று மூன்று விதமான நீரைக் கொண்டு செய்யலாம். ஒவ்வொரு வகை நீர் உபயோகித்து குளிக்கும்போதும் ஒவ்வொரு வகை எஃபெக்ட் கிடைக்கும்.

    பொதுவாகவே இதை வெறும் வயிற்றுடன், அதிகாலை மற்றும் மாலையில் செய்வதே நல்லது. முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம்… இடுப்புக் குளியலில் எந்தவிதமான பின்விளைவுகளும் கிடையாது என்பதுதான்! உங்களுடைய தலையும் பாதமும் மட்டும் வெளியே இருக்கும்படி, பாத்டப்பில் அல்லது பிளாஸ்டிக் டப்பில் அல்லது தொட்டியில் அமர்ந்து கொள்ளுங்கள்.

    உயரம் அதிகமான தொட்டி அல்லது டப்களில், டப்பின் உட்புறம் ஒரு சிறு ஸ்டூல் போட்டு, அதில் உங்கள் உட்காரும் பாகத்தை (Back) வைத்துக் கொண்டால் குளிப்பதற்கு சுலபமாக இருக்கும். பாதங்களை, டப்புக்கு வெளியே மற்றொரு ஸ்டூலில் வைத்துக் கொள்ளுங்கள். முதலில் உங்களது மார்பகங்களுக்குக் கீழே இருந்து, தொடைகள் வரை வரும்படி குளிர்ந்த நீரை ஊற்றிக் கொள்ளுங்கள்.

    பின்னர், நீரில் அமிழ்ந்தபடி உங்கள் அடி வயிற்றுப் பகுதியை சின்னச் சின்ன வட்டங்களாக, மென்மையாக தேய்த்துவிட வேண்டும். சிறிது நேரத்தில் வேகத்தை சற்றே அதிகப் படுத்தித் தேயுங்கள். இதனால், அந்தப் பகுதிகளில் இரத்த ஓட்டம் சீராகும்.

    இப்படி தேய்க்கும்போது அடிவயிற்றுப் பகுதி மட்டுமல்ல… பிறப்புறுப்பின் பகுதிகளையும், தொடையின் ஆரம்பப் பகுதிகளையும் நன்றாகத் தேய்த்து விடுங்கள். இந்தவகை இடுப்புக் குளியல் வெள்ளைப் படுதல், அல்சர், மலச்சிக்கல், போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைக் கொடுக்கும்.

    கத்தி படத்தின் கதை கசிந்தது!

    By: Unknown On: 17:18
  • Share The Gag
  • ஆக்ஷன் ஹீரோ படம் என்றால் மக்களுக்காக போராட வேண்டும். அப்படி தான் தமிழ் சினிமாவில் ஆக்ஷன் படங்களை பார்த்து வருகிறோம்.

    துப்பாக்கி படக்குழுவினர் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடி மக்களைக் காக்கும் ஒரு ராணுவ வீரரின் கதையைச் சொ

    இப்போது கத்தி படம் ஒரு பன்னாட்டு குளிர்பான தொழிற்சாலையை எதிர்த்து விஜய் போராடுவது போன்ற கதை என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அந்த தொழில்சாலையால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த மக்களுக்காக விஜய் களத்தில் இறங்கி போராடுகிறார்.

    மக்களுக்காக போராடும் விஜய் திடீரென காணாமல் போய் விடுகிறார். அப்போது வேறு ஒரு விஜய்யைப் பார்க்கும் மக்கள், இவர்தான் அவர் என நினைத்து இந்த விஜய்யை அழைத்து வந்து போராட்டத்தை மீண்டும் நடத்துகிறார்கள்.

    பின் இரண்டு விஜய்யும் சந்திக்கிறார்களா? இல்லை இருவரும் மோதிக் கொள்கிறார்களா என்பது கதையாம்.

    ல்லி அந்த படத்தை வெற்றிப் படமாக்கினர்.

    பழசை மறந்து செல்வராகவனையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய தனுஷ்!

    By: Unknown On: 08:17
  • Share The Gag
  • தன் தரமான படைப்பால் எல்லோரையும் கவர்ந்தவர் செல்வராகவன். என்ன தான் இன்று தனுஷ் இந்தியாவே வியந்து பார்க்கும் நடிகர் என்றாலும் இவரின் முழு வளர்ச்சிக்கும் காரணம் செல்வா தான்.

    அனைவரும் வேண்டாம் என்று ஒதுக்கினாலும் தன் தம்பியை எப்படியாவது ஹீரோ ஆக்குவேன் என்று பிடிவாதமாக நின்று ஜெயித்துக் காட்டியவர்.

    ஆனால் தற்போது இவருடைய மார்க்கெட் டல் அடிக்க, தனுஷுடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார், அவரும் கதையை கேட்டு, நான் நடிக்கும் எல்லா படங்களும் முடிந்த பிறகு தான் கால்ஷிட் தருவேன்.

    மேலும் இதை நானே தயாரிக்கிறேன், படத்தில் வரும் லாபத்தில் தான் உனக்கு சம்பளம் என்று சொல்ல, ஏதும் பேச முடியாமல் அதிர்ச்சியுடன் தலையாட்டியுள்ளார் செல்வராகவன்.

    உங்கள் குழந்தைகள் சீக்கிரம் பேச வேண்டுமா?

    By: Unknown On: 07:28
  • Share The Gag
  • குழந்தைகள் பிறந்த பின்னர் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பேசுவது. ஏனெனில் அனைத்து குழந்தைகளும் சீக்கிரம் பேசிவிடமாட்டார்கள். சில குழந்தைகள் பேசுவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகும். சொல்லப்போனால் தாமதமான பேச்சு என்றால், எப்போது குழந்தை ஒரு வார்த்தை கூட பேசாமல், ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேசுகிறதோ, அதைத் தான் சொல்வார்கள்.

    மேலும் சில குழந்தைகள் 2 வயதாகியும் பேசமாட்டார்கள். அப்போது உடனே குழந்தைகளை குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். அடுமட்டுமின்றி அத்தகைய குழந்தைகளை விரைவில் பேச வைப்பதற்கான முறைகளையும் தெரிந்து கொண்டு, அதனை குழந்தைகளில் நடைமுறைப்படுத்தி, விரைவில் பேச வைக்க வேண்டும். இப்போது அந்த மாதிரியான குழந்தைகளை விரைவில் பேச வைப்பதற்கான சில வழிகளைப் பார்ப்போமா!!!

    * குழந்தை 2 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதாகியும் பேசவில்லையெனில் அதற்கு காரணம் அவர்களுக்கு சரியாக எழுத்துக்கள் புரியவில்லை என்று அர்த்தம். ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு எதுவும் சரியாக பேசத் தெரியாது. அதனால் சில குழந்தைகள் பேசுவதற்கு பயந்து பேசாமல் இருப்பார்கள். ஆனால் அவர்கள் பெற்றோர் சொல்வதை அப்படியே நினைவில் வைத்து பேசும் திறன் கொண்டவர்கள். எனவே அவர்களின் பேச்சுத்திறனை அதிகரிக்க, அவர்களிடம் பெற்றோர் நன்கு பேச வேண்டும். அவ்வாறு அவர்கள் பேசும் போது, அவர்களை உற்சாகப்படும் படியாகவும், அவர்களை அதிகமாக பேச வைப்பது போலும் பேச வேண்டும்.

    * ஏதாவது ஒரு புதிய சொல்லை சொல்லித் தரும் போது, அவர்களுக்கு அதை போட்டோவில் காண்பிக்காமல், முடிந்த வரையில் அந்த பொருட்களை அவர்களுக்கு நேரில் காண்பிப்பது நல்லது. அதே நேரம் அந்த பொருள் எதற்கு உதவுகிறது என்றும் அவர்களுக்கு புரியும் வகையிலும் சொல்ல வேண்டும். முக்கியமாக எந்த ஒரு பொருளை பார்க்கும் போதும், அதை அவர்களிடம் திரும்ப திரும்ப சொன்னாலும், அவர்கள் மனதில் பதிந்துவிடும். அவர்களும் எந்த பயமுமின்றி பேசுவார்கள்.

    * குழந்தைகளுக்கு படங்களுடன் கூடிய புத்தகங்களை காண்பித்து, அதை அவர்களுக்கு அடிக்கடி காலை அல்லது மாலை நேரங்களில் சொல்லிக் கொடுக்க வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், அவர்கள் மனதில் எந்த ஒரு விஷயமும் எளிதில் பதிந்துவிடும். அதுமட்டுமின்றி, அந்த சொற்களை திரும்ப திரும்ப சொல்லும் போது, அவர்கள் அதை எப்போதும் மறக்காமல் இருப்பார்கள்.

    * குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுப்பதன் மூலமும் அவர்களை விரைவில் பேச வைக்கலாம். அதையும் ராகத்துடனும், அசைவுடனும் சொல்லிக் கொடுத்தால், அவர்களுக்கு ஆர்வம் அதிகரிப்பதோடு, மனதில் உற்சாகம் அதிகரித்து, அவர்களை எளிதில் பேச வைக்கலாம்.

    * சில குழந்தைகள் விரைவில் பேசாமல் இருப்பதற்கு, அவர்களது வெட்கமும் காரணம் என்று சொல்லலாம். ஆகவே அவர்களின் வெட்கத்தை போக்குவதற்கு அவர்களை வெளியே அழைத்துச் சென்று, மற்ற குழந்தைகளுடன் விளையாட வைப்பதன் மூலமும், அவர்கள் வெட்கத்தை விட்டு, மற்றவர்கள் எப்படி பேசுகின்றனர் என்பதைப் புரிந்து பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

    மழலை மொழி என்பது ஒரு இனிமையான ஒரு மொழி. அந்த இனிமையான மொழியை உங்கள் குழந்தைகளிடம் விரைவில் கேட்க வேண்டுமென்று ஆசைப்பட்டால், அவர்களை விரைவில் பேச வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, பேச வைக்க வேண்டும். ஆகவே மேற்கூறிய ஒரு சிலவற்றை பின்பற்றுவதன் மூலம் அவர்களை விரைவில் பேச வைக்கலாம். வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்குத் தெரிந்தால், அதை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

    நீங்கள் ப்ரெட் பிரியர்களா ! இங்க வந்து படிங்க முதலில்..?

    By: Unknown On: 00:35
  • Share The Gag
  • உடலில் உப்பின் அளவு அதிகரித்தால் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே உணவில் உப்பின் அளவை குறைக்க டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தினசரி 0.5 மில்லி கிராம் அளவுக்குதான் உணவில் உப்பு சேர்க்க வேண்டும் என்கின்றனர். இந்நிலையில், ப்ரெட் அதிகம் சாப்பிட்டால் உடலில் உப்பு அதிகரிக்கும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) தெரிவித்துள்ளது.

    இந்த மையம் மக்களின் உணவு பழக்கம் குறித்து விரிவான கருத்து கணிப்பு நடத்தி உள்ளது. அவர்களை பரிசோதனை செய்ததில் 10 பேரில் 9 பேருக்கு உப்பின் அளவு மிக அதிகமாக இருந்தது தெரிய வந்துள்ளது. அதற்கு ப்ரெட்தான் காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தினமும் சிற்றுண்டியாக ப்ரெட், உருளைக் கிழங்கு சிப்ஸ், பாப்கார்ன் போன்றவற்றை அவர்கள் சாப்பிட்டு வந்துள்ளனர். இதுவே உடலில் உப்பு அதிகரித்துள்ளதற்கு காரணம் என்பதை உறுதிப்படுத்தினர்.

    உருளைக் கிழங்கு சிப்ஸ், பாப்கார்ன் போன்றவற்றுடன் ஒப்பிடும் போது ப்ரெட்டில் மட்டுமே உப்பு அதிகம் உள்ளது. இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ஒரு ஸ்லைஸ் ப்ரெட்டில் 230 மி.கிராம் உப்பு உள்ளது. தவிர பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பிட்சா, பவுல்ட்ரி சூப்கள், சான்ட்விச், சீஸ், பாஸ்தா உணவுகளிலும் உப்பின் அளவு அதிகம். இவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் உப்பின் அளவு அதிகரித்து உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படும். எனவே, இவற்றை தொடர்ந்து சாப்பிட கூடாது என்று அறிவுறுத்தி உள்ளனர்.இதனால் உங்களுடைய பிள்ளைகளுக்கு அதிகம் கொடுக்காமல் தவிர்த்து கொள்ளுவது நல்லது