Tuesday, 19 August 2014

சிம்புவைத் தப்பாகக் கணித்த மீடியாக்கள்..!

By: Unknown On: 19:44
  • Share The Gag
  • இது நம்ம ஆளு படத்தில் நடிக்காமலிருப்பதற்காக தனது ஹேர் ஸ்டைலை சிம்பு மாற்றினார், அதைப் பார்த்த பாண்டிராஜ் அதிர்ச்சியடைந்தார் என இரு வாரங்கள் முன்பு மீடியாக்கள் பரபரப்பு செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

    அப்போது சைலண்டாக இருந்த சிம்பு இப்போது பொங்கியிருக்கிறார்.

    என்னவாம்?

    இது நம்ம ஆளு படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இந்த ஷெட்யூல்டில் கதைப்படி சிம்புவின் ஹேர் ஸ்டைல் ஒட்ட வெட்டப்பட்டிருக்க வேண்டும்.

    படத்தின் ஒரு பகுதியில் அவர் இந்த ஹேர் ஸ்டைலுடன் நடிக்க வேண்டும் என்பது ஸ்கிரிப்டில் பாண்டிராஜ் எழுதியது. அதன்படிதான் தனது ஹேர்ஸ்டைலை சிம்பு மாற்றினார். ஆனால் அதனை வேறு விதமாக மீடியா ஃபோகஸ் செய்தது.

    இது நம்ம ஆளு என்னுடைய படம். உங்களுக்கு என்னடா அது பற்றி கவலை என்று கோபம் தெறிக்க கேட்டுள்ளார் சிம்பு.

    நியாயம்தான். சிம்புவின் படம் குறித்து அவர்தான் பேச வேண்டும். பிறகு ஏன் மீடியாவுக்கு ஸ்டில்களும், படம் குறித்த செய்திகளும் தருகிறார்?

    அஞ்சான் படத்தில் பிரமானந்தம் காமெடி கட்…!

    By: Unknown On: 18:58
  • Share The Gag
  • சூர்யா - சமந்தா ஜோடியாக நடித்த அஞ்சான் படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தை லிங்குசாமி இயக்கியுள்ளார். யு.டி.வி. மோஷன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. ஆக்‌ஷன் படமாக வந்துள்ளது. நண்பனை கொன்ற தாதாக்களை நாயகன் தேடி பிடித்து அழிப்பதே கதை.

    பெரும்பகுதி படப்பிடிப்பை மும்பையில் நடத்தி உள்ளனர். இடைவேளைக்கு பிறகு படத்தின் காட்சிகள் நீளமாக இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பின. சில காட்சிகளை குறைக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டன. இதையடுத்து அஞ்சான் படத்தில் 6 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு நீளம் குறைக்கப்பட்டது.

    அஞ்சான் படத்தில் பிரமானந்தம் காமெடி கட்…

    இது குறித்து கூறிய யு.டி.வி படநிறுவன நிர்வாகி தனஞ்செயன், அஞ்சான் படத்தில் இடைவேளைக்கு பிறகு காட்சிகள் நீளமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். எனவே அதை குறைக்க முடிவு செய்தோம். தற்போது 6 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டு உள்ளன.

    பிரம்மானந்தம் தொடர்பான நகைச்சுவைக் காட்சியொன்று படத்தில் உள்ளது. அது கதையோடு சார்ந்து இல்லாமல் இருந்ததால் அந்த காமெடி நீக்கப்பட்டு உள்ளது. ஆனால் தெலுங்கு படத்தில் இந்த நகைச்சுவைக் காட்சி இருக்கும் என்று கூறியுள்ளார்.

    பட்டினியால் மீசை தாடி ..!

    By: Unknown On: 18:12
  • Share The Gag
  • பெண்களுக்கு ஒரு வார்த்தை!

    தனது உடலை மெலிய வைத்துக் கொள்வதுதான் அழகு என்று எண்ணிப் பல பெண்கள் பட்டினி கிடக்கிறார்கள். பட்டினி கிடந்தால் உடல் பாரம் குறைகிறதாம். அப்படிகிடந்தால் உடல் பருமன் குறையலாம்; ஆனால் உள்ளபாரம் ஏறிவிடும் நிலை இருக்கிறது.

    ஆம்!

    அதிகப் பட்டினி கிடக்கும் பெண்களுக்கு மீசை முளைக்கிரதாம். ஏன், இன்னும் அதிகமாய் போனால் தாடி கூடத் தலைக் காட்டுமாம். இப்படிப் பட்டினி கிடந்து தன்னை மெலிவாக வைத்துக்கொள்ள விரும்பும் வியாதிக்கு 'அனாரேக்சிய நெர்வோஸா' என்று பெயர்.

    யாராவது தன்னைப் பட்டினி போட்டு வருத்தக் கொள்வார்களா என்றுதானே கேட்கத் தோன்றுகிறது.

    ஆனால் அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேல் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவிலும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் புள்ளி விவரம் கிடைக்கவில்லை.

    விரதம் என்பது வேறு; பட்டினி கிடப்பது என்பது வேறு. அது ஓரிருநாள் விவகாரம். ஆனால் 'அனாரேக்சிய நெர்வோஸா' என்ற மனோவியாதியால் பட்டினி கிடப்பதால் மெலிகின்ற உடல்; உடல் கொழுப்பை இழப்பதனால்; இழந்த வெப்பத்தைச் சமநிலைப்படுத்திக் கொள்வதற்காக உடம்பில் உரோமம் அதிகமாகத் தோன்றச் செய்கிறது என்று சொல்கிறார் ஆங்கில மருத்துவர் ஹூபர்ட் லேசி.

    அதிகமாக உண்டால் உடல் பெருக்கலாம். பட்டினி கிடந்தால் அழகு கெட்டு விடலாம் எனவே அளவோடு உண்பது அனைவர்க்கும் நல்லது.

    மீண்டும் விஜய்யுடன் மோதும் தனுஷ்!

    By: Unknown On: 17:50
  • Share The Gag
  • வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு தனுஷ் மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது. இதை காரணம் காட்டியே தற்போது அவர் நடித்து வரும் அனேகன் படத்தை பெரிய தொகைக்கு வாங்க பல விநியோகஸ்தர்கள் போட்டி போடுகின்றன.

    இப்படம் பாடல்களை தவிர படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தீபாவளிக்கு படத்தை கொண்டு வர பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

    தீபாவளிக்கு கத்தி படமும் வெளிவருவதால் இந்த வருடம் ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான். விஜய்-தனுஷ் படங்கள் 3 முறை மோதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது..!

    By: Unknown On: 17:17
  • Share The Gag
  • ‘ஆண்களிடம் உங்களுக்கு பிடிக்காத பழக்கங்கள் என்னென்ன இருக்கின்றன?’ என்று பெண்களிடம் கேட்டால், அதற்கும் ஒரு பெரிய பட்டியல் போட்டுவிடுகிறார்கள். அவை என்னென்ன என்று தெரிந்துகொள்ள கீழே தொடர்ந்து படியுங்கள்..

    நகம் கடித்தல்:

    நகம் கடிப்பதில் எப்போதும் பெண்கள்தான் முன்னணி. பயம், பதட்டம், பாதுகாப்பின்மை, ஆழ்ந்த சிந்தனையின்போது பெண்கள் நகத்தை கடித்துக்கடித்து துப்பிவிடுவார்கள். தெரிந்தோ, தெரியாமலோ தங்களிடம் இருக்கும் இந்த தேவையற்ற பழக்கம், ஆண்களிடமும் ஒட்டிக்கொள்ளக்கூடாது என்பதில் பெண்கள் கவனமாக இருக்கிறார்கள். “நகம் கடிப்பது பயத்தாலும், அசவுகரியத்தாலும் ஏற்படுகிறது.

    நகம் கடிக்கும்போது அது அவர்கள் வயிற்றில் போய் பலவிதமான உபாதைகளை ஏற்படுத்தும். மேலும் நகத்தை பெரும்பாலும் கடித்துவிடுவதால், விரலுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் விரல் நுனியில் சில பாதிப்புகளும் தோன்றும். மேலும் நகம் கடிக்கும் ஆண்கள் மனதளவில் பலகீனமானவர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.

    காது குடைதல்:

    ஆண்கள் ரசித்து ரசித்து காது குடைவதை பெண்கள், ‘ச்.. சீ.. இது மோசமான பழக்கம்’ என்று சொல்கிறார்கள். ஏன் தெரியுமா? கையில் கிடைப்பதைவைத்து காது குடைந்தால், காது ஜவ்வுகளை கிழித்து விடும். அதனால் கிருமித்தொற்று ஏற்பட்டு, கேள்வித்திறன் பாதிக்கும் சூழ்நிலைகூட ஏற்பட்டுவிடுவதுண்டு. காதில் அழுக்கு சேர்ந்தால் நமச்சல் ஏற்படும். அப்போதுதான் காது குடையத் தோன்றும். அதனால் காதில் அழுக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். சிலர் காதுகுடையும்போது கிடைக்கும் இனம்புரியாத ஒருவித சுகத்திற்கு ஆசைப்பட்டு அதை செய்துகொண்டிருப்பார்கள்.

    அதிகமாக சாப்பிடுதல்:

    இப்போது நமக்கு பெரும்பாலும் உடல் உழைப்பு இல்லை. அதனால் சாப்பாட்டை எவ்வளவு குறைத்துக்கொள்கிறோமோ அவ்வளவு நல்லது. சாப்பாட்டு ராமன் போன்ற ஒருவரை தன்னோடு அழைத்துச்செல்லவோ, தனக்கு அவர் நெருக்கமானவர் என்று காட்டிக்கொள்ளவோ பெண்கள் விரும்புவதில்லை. அதிகமாக சாப்பிடுகிறவர்களால் சுறுசுறுப்பாக இயங்க முடியாது என்றும் பெண்கள் சொல்கிறார்கள்.

    போதுமான தூக்கமின்மை:

    தூக்கமின்மையை யாரும் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் உடலின் பலவித கோளாறுகளுக்கு தூக்கமின்மைதான் முக்கிய காரணமாக இருக்கிறது. சரியாக தூங்காத ஆண்களின் முகம் பொலிவிழந்து போகிறது. பொலிவிழந்த முகத்தை பெண்கள் ரசிப்பதில்லை. போதுமான தூக்கம் இல்லாவிட்டால் நாள் முழுவதும் உடல் சோர்வு, அசதி, கவனக் குறைவு, வேலையில் ஈடுபாடுஇல்லாமை, கோபம், எரிச்சல் போன்ற பல தொந்தரவுகள் ஏற்படும். இத்தனை பிரச்சினைகளோடு இருப்பவரை எந்த பெண்ணுக்குத்தான் பிடிக்கும்.

    அதிகமாக காபி பருகுவது:

    இது வெகுகாலமாகவே தொடர்ந்து வரும் பழக்கம். நட்பு, உறவை உபசரிக்கிறேன் என்ற பெயரில் ஆண்கள் பெரும்பாலும் காபி கப்போடு அலைவதாக பெண்கள் கூறுகிறார்கள். அது அவர்கள் உடல் நலத்திற்கு கேடு. காபியில் இருக்கும் ‘காபின்’ என்ற நச்சுப்பொருள் உடலில் சேரச் சேர உள்உறுப்புகள்பாதிக்கும். மயக்கம், தூக்கமின்மை, குமட்டல், வயிற்று உபாதைகள் வரும். அப்படி இந்த கெட்டப் பழக்கத்தை நிறுத்த முடியாவிட்டால் குறைத்துக் கொள்ளவாவது முயற்சிக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள்.

    வெகுநேரம் விழித்திருப்பது:

    பெண்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு தூக்கம்போட்டு, பளிச்சென்று இருக்க விரும்புகிறார்கள். அதனால் அவர்களுக்கு இரவில் வெகுநேரம் கொட்டக் கொட்ட விழித்திருக்கும் ஆண்களை பிடிப்பதில்லையாம். அப்படி விழித்திருக்கும் நேரத்தில் ஆண்கள் தேவையற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் பெண்கள் நினைக்கிறார்கள்.

    டாக்டரிடம் பொய் சொல்வது:

    நம்மை ஆரோக்கியமானவராகவோ, நல்ல பழக்கவழக்கம் கொண்டவராகவோ காட்டிக் கொள்ள ஏற்ற இடம் மருத்துவமனை அல்ல. ஏற்பட்டிருக்கும் ஆரோக்கிய பிரச்சினைகளை, தன்னிடம் இருக்கும் மோசமான பழக்கவழக்கங்களை டாக்டரிடம் மறைக்காமல் சொன்னால்தான், அவரால் சரியான சிகிச்சை தரமுடியும்.

    சரியான சிகிச்சையே இல்லாவிட்டால் ஆரோக்கியத்தை பெற முடியாது. குடிப்பழக்கம் இருக்கும் ஆண்கள், டாக்டர் அதுபற்றி கேட்கும் போது, ‘சும்மா எப்பவாச்சும் ஒரு நாள் சும்மா பெயரளவுக்கு குடிப்பேன்’ என்று சொல்கிறார்கள்’ என்பது பெண்களின் குற்றச்சாட்டு.

    அஞ்சானால் வாழ்ந்த கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்!

    By: Unknown On: 17:01
  • Share The Gag
  • தமிழ் திரையுலகில் எப்போதும் பெரிய படம் வருவதாக இருந்தால் சின்ன படங்கள் பின் வாங்கிவிடும். ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை அஞ்சான் படத்தோடு தைரியமாக தன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தை வெளியிட்டார் பார்த்திபன்.

    இப்படத்திற்கு பெரிய ஓப்பனிங் ஆரம்பத்தில் இல்லை, தியேட்டர்களும் மிக குறைவு. இந்நிலையில் அஞ்சான் படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வருவதால் அது பார்த்திபன் படத்திற்கு சாதகமாகி விட்டது.

    தற்போது பல இடங்களில் இப்படத்திற்கு தியேட்டர்களும், காட்சிகளும் அதிகமாக்கப்பட்டுள்ளன.

    கறைகளை நீக்கும் வழிகள்!

    By: Unknown On: 08:11
  • Share The Gag
  •  காபி, டீ கறைபட்ட துணியை மிதமான சூடு தண்ணீரில் பத்து நிமிஷம் ஊற வைக்கவும். சிறிது போரெக்ஸ்லோஷனை நனைத்துக் கறையை ஒற்றி எடுத்துவிட்டு மீண்டும் குளிர் நீரில் கசக்கினால் கறை மறையும்.
    :-
    * சாக்லேட் கறை அதிகம்பட்டிருந்தால் ஸ்பிரிட்டை பஞ்சால் ஒற்றி கறை மீது தடவி பிறகு கசக்கினால் மறையும்.
    :-
    * மிதமான சூடுள்ள நீரில் ஊறவைத்து பொடி உப்பைப் போட்டுத் தேய்த்தால் துணியில் ஏற்பட்ட க்ரீம் கறை மறையும்.
    :-
    * கிளிசரினை லேசாக சூடு செய்து லிப்ஸ்டிக் கறைபட்ட துணியின் மீது சில சொட்டுகள் இட்டுக் கசக்கவும். பிறகு டிடர்ஜென்ட் கொண்டு துவைக்க கறை மறையும்.
    :-
    * மிதமான சூடு நீரில் நனைத்து சோடியம் கார்பனேட் கொண்டு துவைக்க சேறினால் ஏற்பட்ட கறை மறையும்.
    :-
    * துணியில் இங்க் கறைபட்டுவிட்டால் கறைபட்ட இடத்தை தண்ணீரில் நனைத்து எலுமிச்சைச் சாறைக் கொண்டு கசக்கினால் கறை மறையும்.
    :-
    * நகப்பூச்சுக் கறை நீங்க ஸ்பிரிட் நனைத்த துணியால் கறையை ஒற்றவும். பிறகு டிடர்ஜென்ட் கலந்த நீரில் துவைக்க கறை மறையும்.

    இயக்குநர் ஆகிறார் எடிட்டர் ஆண்டனி...!

    By: Unknown On: 07:54
  • Share The Gag
  •  தமிழ் திரையுலகின் பல பிரம்மாண்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய ஆண்டனி, அடுத்த ஆண்டு இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார்.

    தமிழ்த் திரையுலகின் தற்போதைய முன்னணி எடிட்டர்களில் முக்கியமானவர் ஆண்டனி. இயக்குநர் ஷங்கர், கே.வி.ஆனந்த் உள்ளிட்டவர்களின் படங்களுக்கு எடிட்டராக பணியாற்றுபவர் ஆண்டனி.

    தற்போது பல்வேறு படங்களுக்கு எடிட்டராக பணியாற்றி வருபவர்கள் இவரிடம் உதவியாளராக பணியாற்றியவர்கள்தான். இவர் எடிட் செய்த படங்களைப் பார்த்து விட்டு 'ஆண்டனி கட்' என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு தனது எடிட்டிங்கால் பல்வேறு படங்களை தூக்கி நிறுத்தியவர் என்றால் மிகையாகாது.

    இந்நிலையில், எடிட்டர் ஆண்டனி இயக்குநராகும் ஆசை வந்திருக்கிறது. மலையாளத்தில் ஜோ மேத்திவ் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'ஷட்டர்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக இருக்கிறார்.

    தற்போது 'ஐ', 'அனேகன்' உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு எடிட்டராக பணியாற்றி வரும் ஆண்டனி, தனது எடிட்டிங் பணிகளுக்கு இடையூறு வராமல் இயக்குநர் முன்னோட்ட பணிகளையும் பார்த்து வருகிறார். 2015 தொடக்கத்தில் 'ஷட்டர்' ரீமேக் இயக்க திட்டமிட்டு இருக்கிறார் ஆண்டனி!

    இளையராஜாவிடம் எனக்கு பிடித்த இசையை வாங்க முடியவில்லை – கஸ்தூரிராஜா ஆதங்கம்!!!

    By: Unknown On: 07:32
  • Share The Gag
  • என்ன இப்படி சொல்லிவிட்டார்…? கஸ்தூரிராஜாவின் படங்களின் வெற்றிக்கு ஆணிவேராக இருந்ததே இளையராஜாவின் இசையும் அதன்மூலம் கிடைத்த பாடல்களும் தானே.. ஏன் இப்படி சொனார்.. எங்கே வைத்து இதை சொன்னார் என்று கேட்கிறீர்களா..

    இரண்டு தினங்களுக்கு முன்னால் பிரசாத் லேபில் ‘சரித்திரத்தில் ஒரு ஈ’ என்கிற குறும்பட வெளியீட்டு விழா நடந்தது.. படம் தான் குறும்படமே தவிர விழா என்னவோ சினிமா விழாக்களை தூக்கி சாப்பிட்டு விடும் அளவுக்கு பிரம்மாண்டம். இந்த குறும்படத்தில் நடித்த ஹீரோவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து பேண்டு வாத்தியங்களுடன் வரவேற்பு நடந்ததென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

    இந்த விழாவில் கலந்துகொண்ட கஸ்தூரி ராஜா தான் பேசும்போது இந்த குறும்படத்தின் இசையமைப்பாளரை அருகில்  அழைத்து கட்டிப்பிடித்து பாராட்டினார்.. அப்போது “நான் இளையராஜாவுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். எனக்கு அற்புதமான பின்னணி இசையை தந்திருக்கிறார். ஆனால் நான் இந்த இடத்தில் இந்தமாதிரி வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து வைத்திருப்பேன்.

    ஆனால் ராஜா கொடுப்பதோ வேறுவிதமாக, நான் எதிர்பார்த்ததி விட சிறப்பாக இருக்கும். ஆனாலும் நான் நினைத்த இசையை வாங்கமுடியாதது எனக்கு தோல்வி தானே” என மனம் திறந்து பேசி இந்த குறும்பட இசையமைப்பாளர் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார் என பாராட்டினார்.

    மேலும் இந்த விழாவில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், முன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்தீஷ், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் பாபி சிம்ஹா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    சீனாவில் பிரபலமாகும் புதியவகை ஷால்!

    By: Unknown On: 07:07
  • Share The Gag


  • சீனாவில் அறிமுகம் ஆகியிருக்கும் புதிவித ஷால் இதுதான்.


     இந்த ஷால் டு இன் ஒன்.


     ஷால் மறைக்க வேண்டியதையும் மறைக்கும்.


    அதே நேரத்தில் குழந்தையையும் சுமக்கும்.

    இப்போது இந்த ஷால் சீனப்பெண்கள் இடையே மிகவும்பிரபலம் ஆகி
    வருகிறது.


    இதன் விலை $69