Tuesday, 19 August 2014

Tagged Under: ,

அஞ்சான் படத்தில் பிரமானந்தம் காமெடி கட்…!

By: Unknown On: 18:58
  • Share The Gag
  • சூர்யா - சமந்தா ஜோடியாக நடித்த அஞ்சான் படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தை லிங்குசாமி இயக்கியுள்ளார். யு.டி.வி. மோஷன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. ஆக்‌ஷன் படமாக வந்துள்ளது. நண்பனை கொன்ற தாதாக்களை நாயகன் தேடி பிடித்து அழிப்பதே கதை.

    பெரும்பகுதி படப்பிடிப்பை மும்பையில் நடத்தி உள்ளனர். இடைவேளைக்கு பிறகு படத்தின் காட்சிகள் நீளமாக இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பின. சில காட்சிகளை குறைக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டன. இதையடுத்து அஞ்சான் படத்தில் 6 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு நீளம் குறைக்கப்பட்டது.

    அஞ்சான் படத்தில் பிரமானந்தம் காமெடி கட்…

    இது குறித்து கூறிய யு.டி.வி படநிறுவன நிர்வாகி தனஞ்செயன், அஞ்சான் படத்தில் இடைவேளைக்கு பிறகு காட்சிகள் நீளமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். எனவே அதை குறைக்க முடிவு செய்தோம். தற்போது 6 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டு உள்ளன.

    பிரம்மானந்தம் தொடர்பான நகைச்சுவைக் காட்சியொன்று படத்தில் உள்ளது. அது கதையோடு சார்ந்து இல்லாமல் இருந்ததால் அந்த காமெடி நீக்கப்பட்டு உள்ளது. ஆனால் தெலுங்கு படத்தில் இந்த நகைச்சுவைக் காட்சி இருக்கும் என்று கூறியுள்ளார்.

    0 comments:

    Post a Comment