Wednesday, 16 July 2014

பிலிம் ஃபேர் விருது தனுஷ்க்கு முறைக்கேடாக கொடுக்கப்பட்டதா?

By: Unknown On: 17:11
  • Share The Gag
  • சமீப காலமாக விருது வழங்கும் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சை தான் அதிகமாக உள்ளது. இதேபோல் தற்போது நடந்து முடிந்த பிலிம் ஃபேர் விருது அனைவருக்கும் தரமான முறையில் கொடுத்திருந்தாலும், வழக்கம் போல் ஒரு சிலரை முகம் சுழிக்க வைத்திருக்கிறது.

    இதில் சிறந்த நடிகர்(க்ரிட்டிக்ஸ்) விருது தனுஷ்க்கு வழங்கப்பட்டது. இவ்விருதை பெரும்பாலும் வரவேற்றாலும் பலருக்கு இதில் திருப்தி இல்லையாம்.

    ஏனெனில் இதை விட நன்றாக நடித்த பலர் இருக்கும் போது, தனுஷ் பிலிம் ஃபேர் விருதின் விளம்பர தூதர் என்பதலேயே விருது வழங்கியதாக நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    முதுகு வலி: 10 எளிய தீர்வுகள்..!

    By: Unknown On: 16:45
  • Share The Gag
  • முதுகு வலி: 10 எளிய தீர்வுகள்..!



    நீங்கள் அலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா? ஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால், போதிய முன் எச்ச்ரிக்கைகளுடன் நீங்கள் செயல்படாதவரெனில் உங்களுக்கு முதுகு வலி பிரச்சனை கூடிய விரைவில் வரும்.

    ஆனால் இது போன்ற வலிகளுக்கு நமக்கு நாமே காரணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். உணவுகளில் அக்கறையின்மை, வைட்டமின் டி குறைபாடு, உட்காருவதில் அலட்சியம், சரியான இருக்கைகள் இன்மை, வேலைக்கு தேவையான பொருட்களை கண்ட இடங்களில் வைத்து உபயோகிப்பது போன்ற பல பிரச்சனைகளை நாமே ஏற்படுத்தி கொள்கிறோம்.

    எனவே வேலையின் போது சில விஷயங்களில் கவனம் கொண்டால் முதுகு வலி பிரச்சனையிலிருந்து நீங்கள் உஷாராக தப்பித்துவிடலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை,

    1. உட்காரும் தோரணை

    அலுவகத்திலோ, வீட்டில் சகஜமாக டிவி பார்க்கும் போதோ உட்காரும் நிலையை கவனம் கொள்ள வேண்டும். உட்காரும் போது விழிப்புடன் நேராகவும், சரியான உடல் தோரணையிலுமே அமர்ந்தாலும், வேலையின் பளுவால் நீங்கள் சற்று சோர்ந்து செளகரியமாக உட்கார நேர்ந்திடும். இப்படியான பட்சத்தில் சில நிமிடங்கள் என்பது, சில மணி நேரங்களாக மாற்றி உங்களை சோம்பல் அடைய செய்யும். இதனை மனதில் கொண்டு அவ்வப்போது நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையை கருத்தில் கொண்டு நேராக உட்கார பழகி கொள்ள வேண்டும். நாளடைவில் இது உங்களின் மாறா பழக்கவழக்கமாக மாறிவிடும்.

    வேலையின் நடுவே அவ்வப்போது கழுத்தை நேர் முகமாகவும், வலது இடது புறமாகவும் திருப்பி கண்களை மூடி ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள்.

    2. உடற்பயிற்சி
    கீழ் முதுகு வலியால் அவதிப்படுவோர், மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு அவ்வப்போது உட்காருங்கள், எப்போதும் இப்படி உட்காருவது சிறந்த முறையாகும். இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கயை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உணருங்கள்.

    அடுத்த பயிற்சி, நாற்காலியில் உட்கார்ந்த நிலையில், மூட்டு மற்றும் கால்களை நேராக வைத்தப்படி கீழே குனிந்து உங்கள் கால் விரல்களை தொட வேண்டும். ௦20 எண்ணிக்கைகள் வரை இதே வாக்கில் இருக்கவும். நாள்பட பயிற்சியின் நேரத்தை 2 நிமிடங்கள் வரை செய்யலாம்.

    3.உணவு முறை:

    பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற நம் உணவுகளில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை சேர்க்க மறக்காதீர்கள். கொழுப்பு இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரிச்சை, பச்சை காய்கறிகளை உணவின் முக்கிய பங்காக வைத்து கொள்ளுங்கள்.

    4. வைட்டமின்கள்:

     கால்ஷியம் எலும்பிற்கு முக்கிய தேவை, உணவில் உள்ள கால்ஷியத்தை உடல் தக்கவைத்து கொள்ள வைட்டமின் டி அத்தியாவசியம். வைட்டமின் டி இல்லாமல், நீங்கள் எடுத்துகொள்ளும் கால்சியம் உணவுகளை உடல் ஏற்காது. அதே போல வைட்டமின் பி 12 , எலும்பு மஜ்ஜையின் வாழ் நாள் உறுதி செய்ய இந்த வைட்டமின் முக்கியம் வாய்ந்தவை. ஈரல், மீன், பாலாடையில் வைட்டமின் பி 12 அதிகம். இதை தவிற வைட்டமின் ஏ, வைட்டமின், சி, வைட்டமின் கே ஆகியவை எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய வல்லமை பெற்றவையாலும்.

    5. தாதுக்கள்:

     எலும்பின் வளர்ச்சி, வலிமையை கால்ஷியம், மெக்னிஷியம், இரும்புச்சத்து ஆகியவையை உணவில் சரிவர எடுத்து கொள்ளுதல் ஒரு சீரான சத்தான உடலை அமைத்து கொள்ள உதவும். வைட்டமின்களுடன், தாதுக்களும் நமக்கு முக்கியமானவை.

    6. சூடான குளியல்:

     வலி மிகுந்த நேரத்தில், சோம்பல் படாமல் சூடான குளியளில் ஈடுப்படுவது நல்லது. உற்சாகத்தையும் இது தரும்.

    7. சப்ளிமென்ட்ஸ்:


     நல்ல உணவு அதனுடன் தேவையான சில சப்ளிமென்டுகளை எடுத்து கொள்ளுங்கள், பல சமயங்களில் உடனடி உடல் தேவையை சப்ளிமென்டுகள் ஈடு செய்யும்.

    8. மசாஜ்: 

    வாரம் ஒரு நாள் நல்ல மசாஜ் எடுத்து கொள்வதை வழக்கத்தில் கொள்ளுங்கள், வாரம் முழுவதிலுமான உடல் வேலைகளில் நம் தசைக்களை உற்சாகப்படுத்த இது உதவும்.

    9. கடுகு எண்ணெய்:

     எலும்புகளை வலுவூட்ட கடுகு எண்ணெயை உடலில் தேய்த்து சிறிது நேரம் வெயிலில் நடங்கள். கடுகு எண்ணெய் எலும்பிற்கு உகந்தது.

    10.ஆரோகியமான சூழ்நிலை:

     சில ஆரோக்கிய பழக்கவழக்கங்களை மேற்கொள்ளும் சூழல், எண்ணம் கொண்ட நண்பர்களை வைத்து கொள்ளுங்கள், அவர்கள் அப்படி இல்லை எனில் அவர்களை மாற்ற பாருங்கள்.

    ’சூப்பர் ஸ்டார்’ விஜய்! மதுரையில் திருவிழா!

    By: Unknown On: 16:39
  • Share The Gag
  • தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் கம்ர்ஷியலாக மாபெரும் வெற்றிபெறும், இதனாலேயே இவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்வார்கள்.

    சமீபத்தில் ஒரு வார இதழ் கருத்து கணிப்பு நடத்தி இவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கியது. இதை தொடர்ந்து பல சர்ச்சை வந்தாலும் விஜய் ரசிகர்கள் இதை கொண்டாடி வந்தனர்.

    தற்போது ரசிகர்களை மேலும் சந்தோஷப்படுத்தும் விதமாக மதுரையில் இதற்கு ஆகஸ்ட் 15ம் தேதி விழா எடுத்து, அந்த வார இதழ் ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை விஜய்க்கு வழங்கவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    ஷாருக்கானை அழவைத்த சிவகார்த்திகேயன்!

    By: Unknown On: 08:00
  • Share The Gag
  • தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் கடந்த வருடம் நடித்த அனைத்து திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது.

    இதனாலேயே தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகன் ஆகிவிட்டார் சிவா. சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் விருதை பெற்ற இவர், தன் தந்தைக்கு நான் ஏதும் செய்யவில்லை என்று கண்ணீருடன் கூறினார்.

    இதைக்கண்ட இளையதளபதி விஜய், இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கண்கலங்கினர். மொழி தெரியாத ஷாருக்கான் கூட சிவாவின் உணர்ச்சியை புரிந்துக்கொண்டு கண்கலங்கிவிட்டார்.

    கவர்ச்சியாக விழாவுக்கு வந்த சமந்தா..!

    By: Unknown On: 07:51
  • Share The Gag
  • இன்றைய இளம் ரசிகர்களின் கனவு கன்னி என்றால் முதல் மூன்று இடத்தில் சமந்தா கண்டிப்பாக இருப்பார்.

    தற்போது விஜய்யுடன் கத்தி படத்திலும், சூர்யாவுடன் அஞ்சான் படத்திலும் நடித்து வருகிறார்.

    இவர் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நகைக்கடை ஒன்றின் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.

    இந்த திறப்பு விழாவிற்கு வரும் போது சமந்தா, வெளிர் தங்க நிறத்தில் தொப்புள் தெரியும் அளவிற்கு ரித்திகா மிர்சந்தானி லெஹெங்கா உடை அணிந்து வந்திருந்தார்.

    இந்த லெஹெங்கா உடைக்கு சமந்தா அணிந்து வந்த கம்மல், நெக்லேஸ் போன்றவை தான் அவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டியது.