Wednesday, 23 July 2014

விஜய்க்காக பாலிவுட் பட வாய்ப்பை தவிர்த்த நட்ராஜ்!

By: Unknown On: 23:38
  • Share The Gag
  • இந்திய திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர் நட்ராஜ். ஆனால் அப்படி சொல்வதை விட முத்துக்கு முத்தாக, மிளகா, சதுரங்க வேட்டை படத்தின் கதாநாயகன் என்றால் அனைவருக்கும் தெரியும்.

    இவர் ஹிந்தியில் பல முன்னணி இயக்குனர்களின் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர். சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு இவர் தான் ஒளிப்பதிவாளர்.

    ஆனால் இந்த படத்திற்காக தனக்கு வந்த பாலிவுட் படங்களின் வாய்ப்புகளை தவிர்த்துள்ளார். இவர் விஜய் நடித்த யூத் படத்தில் இதற்கு முன்பு பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


    வசூலில் புதிய சாதனை படைக்கும் வேலையில்லா பட்டதாரி!

    By: Unknown On: 21:12
  • Share The Gag
  • கடந்த வாரம் (ஜூலை 18) வெளியான 'வேலையில்லா பட்டதாரி' படத்துக்கு அனைத்து ஏரியாக்களிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 400 திரையரங்குகளுக்கு மேல் வெளியிடப்பட்ட வேலையில்லா பட்டதாரி முதல் மூன்று நாட்களில் மட்டும் 15 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. நாளுக்குநாள் அதிகரித்து வரும் வேலையில்லா பட்டதாரி படத்தின் வசூல் நிலவரம் திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

    இதுவரை தனுஷ் நடிப்பில் வெளிவந்த படங்களிலேயே வேலையில்லா பட்டதாரி படம்தான் மிகப்பெரிய வசூல் செய்திருப்பதாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கினர் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல, இந்த வருடம் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடித்த கோலிசோடா உட்பட அனைத்து படங்களின் வசூலையும் வேலையில்லா பட்டதாரி படம் முறியடித்துவிட வாய்ப்பிருக்கிறது என்ற பேச்சும் அடிபடுகிறது.

    கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்து வந்த தனுஷுக்கு, வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றி மிகப்பெரிய தெம்பைக் கொடுத்திருக்கிறது. தமிழகத்தில் மட்டும் மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 15 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ள வேலையில்லா பட்டதாரி படம், வெளிநாடுகளிலும் முதல் வாரத்தில் சுமார் 8 கோடி ரூபாய்களை வசூல் செய்துள்ளதாம். தனுஷ் நடித்த படத்திலேயே வெளிநாட்டில் மிகப்பெரிய வசூலை அள்ளிய படமும் வேலையில்லா பட்டதாரி படம்தானாம்.

    ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும் கீரை பற்றிய குறிப்பு !

    By: Unknown On: 21:03
  • Share The Gag
  •  * முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.

     * முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்ற பெயரும் இருக்கிறது.

     * முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.

     * இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.

     * முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

     * கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

     * ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு


     ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும் முருங்கைக் கீரை பற்றிய குறிப்பு !

     * முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.

     * முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்ற பெயரும் இருக்கிறது.

     * முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.

     * இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.

     * முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

     * கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

     * ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.

    பெயர் வைப்பதில் கில்லாடி தமிழர்கள்...!

    By: Unknown On: 19:11
  • Share The Gag

  • பாலங்கள், சாலைகள், கட்டடங்கள் என அனைத்திற்கும் பெயர் வைப்பதில் கில்லாடிகள் தமிழர்கள். பெயர் வைக்கும் போது எதை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை பற்றி கவலை கொள்வதும் கிடையாது.

    குறிப்பாக திராவிட ஆட்சிக்காலத்தில் இந்த பெயர் வைக்கும் வைபவம் அரசின் சாதனை பட்டியலாகவே பார்க்கப்படுகிறது.ஆனால் இந்த பெயர் வைக்கும் படலம் விவசாயத்துறையையும் விட்டு வைக்க வில்லை.

    நெல் பயிரையும் அலையாய் அலைக்கழித்து இருக்கின்றனர். நமது அரசியல்வாதிகளின் நகைச்சுவை. நெல் சாகுபடி முறையில் புதிய தொழில்நுட்பம் திருந்திய நெல் சாகுபடி. குறைவான தண்ணீரில் கூடுதல் மகசூல் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த தொழில் நுட்பம் ஆங்கிலத்தில் System of Rice Intensification என்றழைக்கப்படுகிறது.

    1970களிலேயே இதற்கான ஆய்வுகள் நடைபெற்ற போதும், அமெரிக்காவின் நியூார்க்கின் இதாகாவில் உள்ள கார்னெல் பல்கலைகழகம் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது. உணவு, வேளாண்மை, மேம்பாட்டுக்கான சர்வதேச நிறுவனத்தின் தலைவர் நார்மன் உபாஃப் இதனை உலகெங்கும் எடுத்துச் சென்றார்.

    2005களில் தான் ஆசியாவில் திருந்திய நெல் சாகுபடி வளர்ந்தது. தமிழகத்திலும் சில ஆண்டுகளாகவே பிரபலமடைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, திருந்திய நெல் சாகுபடி குறித்து விரிவாக காணொளி தொகுப்பு ஒன்றை தமிழக வேளாண்மை துறை தயாரித்துள்ளது.

     அரை மணிநேரத்திற்கும் மேலாக ஒளிபரப்பப் தக்க வகையிலான இந்த காணொளி தொகுப்பை அப்போதைய முதலமைச்சரிடம் காண்பிப்பதற்காக சில நிமிடங்கள் கொண்ட தொகுப்பாக குறைத்து முதலமைச்சரிடம் காண்பித்துள்ளது. திருந்திய நெல் சாகுபடி தொடர்பான அந்த காணொளியை பார்த்த முதலமைச்சர் தான் பிறந்த தஞ்சை தரணிக்கு இது உபயோகமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

    ரொம்பவும் மகிழ்ந்து போன அவரிடம் முழு படத்தையும் காண்பித்து இருக்கிறார்கள். முடிவில், “இந்த முறையில் நெல் சாகுபடி செய்தால் மகசூல் அதிகரிக்கும். இதனால் செழுமை ஏற்படும். அதனால் செழுமை நெல் சாகுபடி என்று பெயர் வைங்கய்யா,” என்று சொல்லி இருக்கிறார். System of Rice Intensification என்பதற்கு திருந்திய நெல் சாகுபடி என்பது தான் பொருத்தமாக இருக்கும்.

    அப்படி தான் வேளாண் பல்கலைக்கழகம் பெயர் வைத்துள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சரோ அதனால என்னய்யா? கடைசியில விவசாயிகளுக்கு செழிப்பு தானே வரும் செழுமை நெல் சாகுபடினு பெயர் வைய்ங்கய்யா. தமிழ்ல அது தான் சரியா வரும் என்று சொல்லியிருக்கிறார். சரி என்ன செய்வது சொல்லியது முதலமைச்சர் ஆயிற்றே! புதிய பெயர் சூட்டப்பட்டு விட்டது.

    பொருத்தமாக இருக்கிறதோ இல்லையோ செய்தாக வேண்டிய கட்டாயத்தில் தமிழக வேளாண் துறையும் செழுமை நெல் சாகுபடி என்று புதிய நாமகரணம் சூட்டியது. வேளாண் பல்கலை முதல் உலக நெல் ஆராய்ச்சி நிலையம் வரை நெல் சாகுபடி தொழில்நுட்பத்திற்கு தமிழகத்தில் பயன்படுத்தும் பெயர் செழுமை நெல் சாகுபடி என்று தெரிவிக்கப்பட்டது.

     சில மாதங்கள் உருண்டோடின. தமிழகத்தில் செழுமை நெல் சாகுபடி தொழல் நுட்பத்தில் எவ்வளவு நிலம் பயிரிடப்படுகிறது. என்பது போன்ற விவரங்கள் முதலமைச்சரிடம் தரப்பட்டன. அதனை பார்த்துக் கொண்டிருந்த முதலமைச்சர் திடீர் யோசனையில் ஆழ்ந்தார். அப்போது ராஜ ராஜ சோழனின் சதய விழா நடைபெற்ற காலம். ஏன்ய்யா பேசாம செழுமை நெல் சாகுபடிங்கிறதுக்கு பதிலா ராஜாராஜன் 1000ம் னு என் பெயர் வைக்க கூடாது என்று கேட்டிருக்கிறார்.

    நெல் என்றால் தஞ்சை, தஞ்சை என்றால் ராஜ ராஜ சோழன், அதனால் ராஜ ராஜன் பெயர் வைத்து விடலாம் என்று கூறியிருக்கிறார். அதிகாரிகளோ அதிர்ந்து போய் விட்டார்கள். ஐயா இது வெறும் தொழில்நுட்பம் தான். இதனை தமிழில் எப்படி அழைக்க வேண்டும் என்பது தான் பிரச்னை. இது புது ரக நெல் கிடையாது. கோ 40, அம்பை 16 என்று நெல் ரகங்களுக்கு பெயர் வைப்பது போன்று இதற்கு பெயர் வைக்க முடியாது என்று தெரிவித்து இருக்கின்றனர்.

    அதனால என்னய்ய தமிழகத்தில நாம தானய்யா முடிவு செய்யணும். பேசமா ராஜ ராஜன் 1000ம்னு பெயர் வையுங்க என்று முடிவாக கூறி விட்டார் முதலமைச்சர். வேறு என்ன செய்வது சொல்லியது முதலமைச்சராயிற்றே. ராஜ ராஜன் 1000ம் என்று பெயர் சூட்டப்பட்டது. திருந்திய நெல் சாகுபடி, செழுமை நெல் சாகுபடியாகி, ராஜ ராஜன் 1000 ஆக பெயர் மாறியது. பிறகு ஆட்சி மாறியது. கட்டடங்கள் முதல் திட்டங்கள் வரை அனைத்திற்கும் பெயர் மாற்றம் நடந்தது.

    அதுபோலவே ராஜ ராஜன் 1000ம் என்ற பெயரும் மாற்றப்பட்டது. புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்தது போல மீண்டும் திருந்திய நெல் சாகுபடி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வேளாண் துறை அதிகாரிகளும், வேளாண் பல்கலைகழகமும், விவசாயிகளும் என்ன செய்வது? மீண்டும் திருந்திய நெல் சாகுபடியானது System of Rice Intensification.

    இளைய தளபதி, புரட்சி தளபதி மோதல்..! வெற்றி யாருக்கு?

    By: Unknown On: 19:04
  • Share The Gag
  • கடந்த தலைமுறையை சேர்ந்த முன்னணி கதாநாயக நடிகர்கள் ஆரோக்கியமான போட்டியை விரும்பினார்கள். அதன் காரணமாக தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் மட்டுமல்ல சாதாரணமான நாட்களிலும் முன்னணி ஹீரோக்கள் நடித்த ஒன்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின. தற்போதைய ஹீரோக்கள் மத்தியில் இப்படிப்பட்ட தைரியம் இல்லை. தனித்தனியாக களத்தில் இறங்கி வசூலை அள்ள வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள். எப்போதாவது அபூர்வமாகத்தான் இன்றைய ஹீரோக்களின் படங்கள் போட்டியில் குதிக்கின்றன. அனேகமாக வரும் தீபாவளி அன்று ஒன்றுக்கு மேற்பட்ட முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளிவர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கத்தி படமும், ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் பூஜை படமும் இந்த தீபாவளிக்கு ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பூஜை படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடித்துவிட்டது. இன்னும் க்ளைமாக்ஸும், பாடல்களும் மட்டுமே படமாக்கப்பட வேண்டியிருக்கிறதாம். அதேபோல் கத்தி படத்தின் 90 சதவிகித காட்சிகள் முடிவடைந்தநிலையில் இன்னும் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளது.

    விஜய், விஷால் படங்கள் ஒரே நாளில் வெளிவருவது தொடர்பாக ஒரு ப்ளாஷ்பேக் உள்ளது. 2007 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் விஜய் நடித்த 'போக்கிரி' படம் வெளியானது. அதே நாளில் வெளிவந்தது விஷாலின் 'தாமிரபரணி' படம். ஏழு வருடங்களுக்குப் பிறகு தற்போது இளைய தளபதியும், புரட்சி தளபதியும் மீண்டும் மோதுகிறார்கள்.

    விஜய் டிவி மா.கா.பா.ஆனந்த்துக்கு ஏற்பட்ட சிக்கல்!!!

    By: Unknown On: 16:38
  • Share The Gag
  • மாப்பிள்ளை’, ‘அலெக்ஸ்பாண்டியன்’, ஆகிய படங்களில், இயக்குனர் சுராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ள விஜயபாஸ்கர்,. முதன் முறையாக இயக்குனராக ‘அட்டி’ என்கிற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இதில் கதாநாயகனாக மா.கா.பா ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகியாக அஷ்மிதா, மற்றும் முன்னனி கதாபாத்திரத்தில் ராம்கி நடிக்கின்றார்.

    சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘நாடோடிகள்’ ஆகிய வெற்றி படங்களின் இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபு தான் இந்தப்படத்துக்கு இசையமைக்கிறார்.. சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் வாட்டர் சப்ளை கடை வைத்திருக்கும் கதாநாயகன் மற்றும் அவனது நண்பர்கள் பற்றிய கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளது. .

    சந்தோஷமாக வாழ்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு எதிர்பாராமல் ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையை சாதூர்யமாக எப்படி கதாநாயகன் சமாளித்தார் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் படமாக்கியிருக்கிறார்களாம்.

    ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்துக்கு எகிறுது பிசினஸ் வேல்யூ!

    By: Unknown On: 08:53
  • Share The Gag
  • ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தை ஆரம்பித்தபோது அந்தப்படத்துக்கான மார்க்கெட் வேல்யூ இவ்வளவு ஏறும் என்று இயக்குனர் ஆர்.கண்ணன் சத்தியமாக நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்.

    காரணம் தொடர்ந்து தோல்வி முகத்தில் இருந்த விமல், பெரிய வெற்றிகளை பெற்றிராத ப்ரியா ஆனந்த் இவர்களுடன் சூரி என்கிற மினிமம் கியாரண்டி காம்பினேஷனில் தான் படத்தை ஆரம்பித்தார்.

    ஆனால் ‘மஞ்சப்பை’யின் வெற்றி விமலின் மார்க்கெட்டை தூக்க, ‘அரிமா நம்பி’யின் கலெக்ஷன் அதில் நடித்த பிரியா ஆனந்திற்கு வெளிச்சம் போட, இதனாலேயே இப்போது இவர்கள் நடிக்கும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்திற்கான பிசினஸ் வேல்யூ ஏறியுள்ளது. இந்தப்படத்தை ஒரு மிகப்பெரிய தொகைக்கு வாங்க படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுடன் பலர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

    பழைய பாடல்களை கேட்க மகளை பழக்குகிறார் இயக்குனர் பாலா!

    By: Unknown On: 08:19
  • Share The Gag
  • இன்றைக்கு டெக்னாலஜி வளர்ச்சி என்கிற பெயரில் புதுவிதமான இசை, பாடல்கள் என தமிழ்சினிமா மாறிவிட்டாலும் பழமையின் பாரம்பரியம் கெடாமல் பாதுகாப்பதில் இயக்குனர் பாலா போன்ற ஒரு சிலரின் பங்கு மிக முக்கியமானது.

    தனது கதைக்கு தேவையானது அல்லது பொருத்தமானது என்கிற வகையில் இன்றைய இரைச்சல் சத்தத்திலிருந்து விலகியே இருப்பவர் பாலா. அதேபோல தனது மகள் பிரார்த்தனாவுக்கும் பழைய பாடல்களை போட்டுக் கேட்டு
    ரசிக்கும்படி ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறார். மகளும் தந்தையின் இசை ரசனைக்கு ஏற்றமாதிரியே பழைய பாடல்களை ஆர்வத்துடன் கேட்டு ரசிக்கிறாராம்.

    ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? உப்பை வெச்சு துவைங்க....!

    By: Unknown On: 07:49
  • Share The Gag
  •           நீங்க ஜீன்ஸ் வாங்கி எத்தனை நாள் ஆச்சு? எத்தனை தடவை துவைத்து இருக்கிறீர்கள்? என்று கேட்டால் அனைவரும் யோசிப்பார்கள். ஏனெனில் அதைத் துவைத்து பல மாதங்கள் ஆகியிருக்கும். மேலும் அடிக்கடி துவைத்தால், ஜீன்ஸ் அதன் தன்மை, நிறம் போன்றவற்றை இழந்துவிடும் என்றும் நினைத்து, அடிக்கடி வீட்டில் துவைப்பதையும் நிறுத்திவிட்டனர். அதிலும் சிலர் ஜீன்ஸ் துவைப்பதற்கு லாண்டரி தான் சிறந்த வழி என்று எண்ணி அங்கு கொடுத்து துவைக்கின்றனர். ஆனால் ஜீன்ஸை சூப்பராக வீட்டிலேயே ஈஸியான முறையில் நிறம் போகாமலும், அதன் தன்மை மாறாமலும் இருக்க அழகாக துவைக்கலாம். அதற்கு உப்பு தான் சிறந்த பொருள். எப்படியெனில் உப்பை வைத்து ஜீன்ஸை துவைத்தால், ஜீன்ஸில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, துணியின் தன்மையும் அப்படியே இருக்கும். இப்போது உப்பை வைத்து எப்படி துவைப்பது என்று பார்ப்போமா!!!

    உப்பை வைத்து எப்படி துவைக்க வேண்டும்?


    முதலில் பக்கெட்டில் தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு டீஸ்பூன் உப்பை சேர்த்து, ஜீன்ஸை போட்டு 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.பின் அந்த ஜீன்ஸை எடுத்து, வாஷிங் மிசினிலோ அல்லது கையிலோ லேசாக சோப்பு போட்டு துவைத்து, நீரில் அலச வேண்டும். அதிகமாக தேய்த்து விட வேண்டாம். ஏனெனில் பின் அதில் உள்ள துணியின் தன்மை குறைந்துவிடும்.

    பின்பு மற்றொரு பக்கெட்டில் நீரை ஊற்றி, அதில் உள்ள நுரை போகும் வரை நன்கு அலச வேண்டும். பின் அதனை காய வைக்க வேண்டும்.

    முக்கியமாக ஜீன்ஸ் துவைக்கும் போது, உட்பகுதி வெளியே இருக்க வேண்டும். பின் காய்ந்ததும், அதனை ஐயர்ன் செய்து சரியாக மடித்து வைக்க வேண்டும். இதனால் ஜீன்ஸ் நன்கு புதிது போன்று அழகாக சுத்தமாக இருக்கும்.

    எதற்கு ஜீன்ஸை உப்பை வைத்து துவைக்க வேண்டும்?

    * புதிய ஜீன்ஸை உப்பை வைத்து துவைத்ததால், ஜீன்ஸில் உள்ள நிறம் போகாமல், புதிது போன்று காணப்படும்.

    * உப்பு துணிகளில் படியும் கறைகளை எளிதில் நீக்கிவிடும். அதாவது கறைகளை கஷ்டப்பட்டு தேய்த்து நீக்க வேண்டும் என்று இருக்காது.

    * ஜீன்ஸை எப்போது துவைக்கும் போதும், உட்பகுதி வெளியே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் சாயம் போய், வெளுப்புடன் காணப்படுவதைத் தடுக்கலாம்.

    * உப்பை சேர்த்து துவைத்தால், துணிகளில் உள்ள சாயம் வெளி வராமல் இருக்கும். மேலும் மற்ற துணிகளில் இருந்து வரும் சாயமும் எந்த துணிகளோடும் கலக்காமல் இருக்கும்.

    * அதிலும் உப்போடு, சிறிது வெள்ளை வினிகரை கலந்து துவைத்தால், நல்லது.

    * எப்போதும் ப்ளீச்சிங் பவுடரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை துணியில் உள்ள நிறத்தை முற்றிலும் வெளியேற்றிவிடும், பின் துணியின் தன்மையையும் குறைத்துவிடும்.

    ஆகவே மேற்கூறியவற்றை நினைவில் வைத்து, ஜீன்ஸை துவைத்தால், ஜீன்ஸை சூப்பராக இருப்பதோடு, லாண்டரியில் துணிகளை போட வேண்டிய அவசியமில்லை. மேலும் வேறு எப்படியெல்லாம் ஜீன்ஸை துவைக்கலாம் என்று தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...