கடந்த தலைமுறையை சேர்ந்த முன்னணி கதாநாயக நடிகர்கள் ஆரோக்கியமான போட்டியை விரும்பினார்கள். அதன் காரணமாக தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் மட்டுமல்ல சாதாரணமான நாட்களிலும் முன்னணி ஹீரோக்கள் நடித்த ஒன்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின. தற்போதைய ஹீரோக்கள் மத்தியில் இப்படிப்பட்ட தைரியம் இல்லை. தனித்தனியாக களத்தில் இறங்கி வசூலை அள்ள வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள். எப்போதாவது அபூர்வமாகத்தான் இன்றைய ஹீரோக்களின் படங்கள் போட்டியில் குதிக்கின்றன. அனேகமாக வரும் தீபாவளி அன்று ஒன்றுக்கு மேற்பட்ட முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளிவர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கத்தி படமும், ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் பூஜை படமும் இந்த தீபாவளிக்கு ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பூஜை படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடித்துவிட்டது. இன்னும் க்ளைமாக்ஸும், பாடல்களும் மட்டுமே படமாக்கப்பட வேண்டியிருக்கிறதாம். அதேபோல் கத்தி படத்தின் 90 சதவிகித காட்சிகள் முடிவடைந்தநிலையில் இன்னும் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளது.
விஜய், விஷால் படங்கள் ஒரே நாளில் வெளிவருவது தொடர்பாக ஒரு ப்ளாஷ்பேக் உள்ளது. 2007 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் விஜய் நடித்த 'போக்கிரி' படம் வெளியானது. அதே நாளில் வெளிவந்தது விஷாலின் 'தாமிரபரணி' படம். ஏழு வருடங்களுக்குப் பிறகு தற்போது இளைய தளபதியும், புரட்சி தளபதியும் மீண்டும் மோதுகிறார்கள்.

0 comments:
Post a Comment