Monday, 16 September 2013

பாடகி சின்மயிக்கு கல்யாணம்!

By: Unknown On: 22:00
  • Share The Gag

  • மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இடம் பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. சிவாஜி படத்தில் இவர் பாடிய ‘சஹானா சாரல் தூவுதோ’, எந்திரன் படத்தில் ‘கிளிமஞ்சாரோ’ ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலமானவை. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளார்.இதற்கிடையில் நடிகர் ராகுல் ரவீந்திரன், ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கும் ‘வணக்கம் சென்னை’ படத்திலும் நடிக்கிறார். மற்றும் சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.



    sep 16 - sinmayee

     



    அதிலும் சின்மயி நடிகர் ராகுல் ரவீந்திரனை காதல் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்றும் இவர்கள் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்றும் தகவலை பரப்பியுள்ள சின்மயியின் தாய் பத்மாசினி இதைஉறுதிபடுத்தியுள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டபோதுபோது, நடிகர் ராகுல் ரவீந்திரனுக்கும், எனது மகள் சின்மயிக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடைபெறவுள்ளது. விரைவில் நிச்சயதார்த்தத்தை நடத்த முடிவு செய்துள்ளோம் “என்று கூறியுள்ளார். 


    Actor Rahul Ravindran to wed singer Chinmayi next year

    ****************************************


    Southern actor Rahul Ravindran will marry singer-dubbing artist Chinmayi Sripada early next year. The parents of the couple have mutually agreed to the wedding. “Everybody is talking like we are going to get married tomorrow, but the wedding is likely to take place only early next year. Chinmayi and I have been seeing each other for a few months now and our parents have met and agreed for the wedding,” Rahul told IANS.

    நாரையும் ஓநாயும் (நீதிக்கதைகள்)

    By: Unknown On: 21:47
  • Share The Gag

  • ஒரு காட்டில் ஒரு ஓநாய் இருந்தது.அது மிகவும் கெட்ட குணம் கொண்டது.

    தினமும் ..பலம் குறைந்த ஏதேனும் விலங்குகளையோ ..பறவைகளையோ கொன்று தன் பசியை தீர்த்துக்கொள்ளும்.

    ஒரு நாள் அது இறந்த ஒரு மிருகத்தின் உடலை தின்றபோது ..அறியாமல் ஒரு எலும்புத் துண்டையும் சாப்பிட்டது. அந்த எலும்புத்துண்டு
    அதனுடைய தொண்டையில் சிக்கிக்கொண்டது.

    அதனால் ...அவதிப்பட்ட ஓநாயால் எந்த உணவையும் சாப்பிட முடியவில்லை..

    ஒரு நாரையை அது அணுகி ...அதன் அலகால் எலும்புத்துண்டை அகற்றுமாறும்..அப்படி அகற்றினால் அந்த நாரைக்கு பரிசு தருவதாகவும் கூறியது.

    சரியென்று நாரையும் தன் நீளமான அலகை ஓநாயின் தொண்டைக்குள் விட்டு அங்கே சிக்கிக்கொண்டிருந்த எலும்பை வெளியே எடுத்துவிட்டது.

    பின் நாரை ..ஓநாயிடம் பரிசு கொடுக்குமாறு கேட்டது....

    உடன் ஓநாய்'உனக்குத்தான் ஏற்கனவே வெகுமதி கொடுத்துவிட்டேன்,என்னைப்போன்ற ஓநாயின் வாயில் உன் தலையை விட்டுவிட்டு ...அதை பத்திரமாக வெளியே எடுக்க
    அனுமதித்தேனே,,அதுவே உனக்கு சிறந்த பரிசு தான்' என்று கூறிவிட்டது.

    நாரை ஏமந்தது...

    கொடியவர்களுக்கு உதவி செய்தால் ..பின் அவற்றிடமிருந்து உயிர் தப்புவது பெரிய காரியமாகிவிடும்.

    ஆகவே தீயவரைக் கண்டால் ஒதுங்குவதே சிறந்தது.
     

    சாக்லெட் சுவைப்போர் கவனத்துக்கு..!

    By: Unknown On: 21:41
  • Share The Gag







  • அனைவரும் விரும்பிச் சாப்பிடுகின்ற சாக்லெட் சம்பந்தமாக நிறைய கற்பிதங்கள் உள்ளன. சாக்லெட் சாப்பிட்டால் பாலுணர்வு தூண்டப்படும் என்றெல்லாம்கூட மேற்குலகில் நம்பப்படுகிறது. ஆனால், இந்த கற்பிதங்கள் எந்த அளவுக்கு உண்மை?

    பால் கலக்காத சாக்லெட்டைவிட பால் கலந்த சாக்லெட்டில் கலோரி அதிகம் என்பது ஒரு கற்பிதம். இது உண்மையல்ல. பால் கலந்தது என்றாலும் சரி, பால் கலக்காதது என்றாலும் சரி, அவற்றில் கிட்டத்தட்ட ஒரே அளவான கலோரிகள்தான் உள்ளன. நூறு கிராம் சாக்லெட்டில் சுமார் 550 கலோரிகள் இருக்கின்றன.

    சாக்லெட் சாப்பிட்டால் மைகிரேன் தலைவலி வரும் என்பது மற்றொரு கற்பிதம். சாக்லெட்டில் டைரமைன், ஃபீனைல்எதிலமைன் போன்ற அமினோ அமிலங்கள் இருக்கின்றன. இவற்றால் மைகிரேன் தலைவலி தூண்டப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், சாக்லெட் சாப்பிடுவதால் மட்டும் ஒருவருக்கு மைகிரேன் வரும் என்று சொல்வதற்கில்லை.

    சாக்லெட் சாப்பிடுவதால் சதைபோடும் என்றும் பலரும் நம்புகின்றனர். சாப்பாட்டை வெளுத்துக் கட்டிவிட்டு அதற்கும் மேல் சாக்லெட்டும் உட்கொண்டால் நிச்சயம் உடல் பெருக்கத்தான் செய்யும்.

    சாக்லெட்டை அளவாக எடுத்துக்கொள்ளும்போது, அதனால் உடல்நலனுக்கு சில நன்மைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆன்டிஆக்சிடண்ட்ஸ் என்று சொல்லப்படும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வேதிப்பொருள் சாக்லெட்டில் உள்ளது.


    ஹெட்போன் மூலம் இலவச மின்சாரம்!

    By: Unknown On: 20:59
  • Share The Gag


  • செல்பேசிகள் மற்றும் எம்பி3 பிளேயர்களில் கேட்பதற்குப் பயன்படும் ஹெட்போன் மூலம் சூரியசக்தி மின்சாரம் தயாரித்து, அவற்றின் மின் தேவையை நிறைவு செய்யலாம் என்று புதிய ஆராய்ச்சி சொல்கிறது. இந்த புதிய கண்டுபிடிப்பு 2014-ம் ஆண்டு விற்பனைக்கு வரலாம்.


    ஹெட்போனின் இரண்டு பக்கங்களின் மேற்பரப்பில் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் மின்கலங்கள் பொறுத்தப்பட்டிருக்கும். இந்த ஹெட்போன்களை மாட்டிக்கொண்டு நீங்கள் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தால், உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் மின்சாரம் உற்பத்தி ஆகிக் கொண்டிருக்கும் என்கிறார் இதைக் கண்டுபிடித்த பிரிட்டனைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஆண்டர்சன்.


    ஏற்கெனவே அமெரிக்காவில் மனிதர்கள் நடப்பதை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் கருவி விற்பனையில் உள்ளது. மனிதர்களின் காலணிக்குள் இருக்கும் இந்த சின்னஞ்சிறு கருவி, நடக்கும்போது ஏற்படும் அழுத்தத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறது.


    இந்தச் சிறப்புக் காலணிகளை அணிந்துகொண்டு ஒருவர் இரண்டரை கிலோமீட்டர் முதல் ஐந்து கிலோ மீட்டர் நடந்தால் ஐபோனை சார்ஜ் செய்யமுடியும்.


    உலக அளவில் மாற்று மின்சாரத்தின் தேவை குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவரும் நிலையில், இது போன்ற வித்தியாசமான கண்டுபிடிப்புகளுக்கான மதிப்பும் கூடி வருகிறது.


    பாஸ்வேர்டை பாதுகாக்க ஒர் எளிய வழி!

    By: Unknown On: 20:43
  • Share The Gag


  • வங்கி கணக்குத் தொடங்கி சமூக வலைதளம் வரை பெரும்பாலான இணையதளங்கள் இன்று பயனீட்டாளர் பெயரையும் பாஸ்வேர்டையும் கேட்டகாமல் உங்களை உள்ளே அனுமதிப்பதில்லை. அதனால், எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய எண்களையோ நபர்களின் பெயர்களையோ பாஸ்வேர்டாக உருவாக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு.


    இப்படியிருக்கையில், உங்கள் பாஸ்வேர்டை தாக்காளர்கள் (ஹேக்கர்) அறிந்துகொள்வதும் மிகவும் எளிது. உங்களுடைய தனிப்பட்ட விவரங்களைத் தெரிந்துக்கொண்டாலே போதும், அவற்றைக்கொண்டு சாஃப்ட்வேர் மூலம் யூகித்தறியும் படலத்தை அரங்கேற்றினால் உங்கள் பாஸ்வேர்டு தாக்காளர் கையில்.


    நம்முடைய பாஸ்வேர்டும் எளிதில் நினைவில் கொள்ளக்கூடியதாகவும் இருக்கவேண்டும். அதேசமயம், அது திருட்டும்போகக் கூடாது. என்னதான் செய்வது? இலக்கணப் பிழை செய்யுங்கள் என்கின்றனர், ஆய்வாளர்கள்.


    ஆம்! நீங்கள் இலக்கண பிழையோடு உங்கள் பாஸ்வேர்ட் உருவாக்கினால் அவ்வளவு எளிதில் அதனை ஹேக் செய்ய முடியாது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதை அமெரிக்காவில் உள்ள கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அஸ்வினி ராவ் தலைமையிலான ஆய்வுக்குழு நிரூபித்துள்ளது.


    இந்தக் குழு நடத்திய ஆய்வில், பாஸ்வேர்டை யூகிக்க பயன்படுத்தப்படும் கிராகிங் என்ற முறையில் இலக்கண சுத்தமாக உருவாக்கப்பட்டுள்ள பாஸ்வேர்டுகள் எளிதாக கண்டுபிடிக்கப்படக்கூடியவை என தெரியவந்துள்ளது. இடையே எண்கள், பெரிய எழுத்து போன்றவற்றை கொண்டு பாஸ்வேர்டை கடினமாகியிருந்தாலும்கூட, அவற்றில் உள்ள இலக்கண தன்மையைக் கொண்டு கிராகிங் சாப்ட்வேர்கள் வெற்றி பெற்று விடுகின்றன. ஆனால், அதே பாஸ்வேர்டு இலக்கண‌ப் பிழை கொண்டதாக இருந்தால் தாக்காளர்களின் சாப்ட்வேரால், அதிலுள்ள எந்த பொதுத்தன்மையையும் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. எனவே, உங்கள் பாஸ்வேர்டு பாதுகாப்பாக இருக்கும்.


    நீங்கள் உருவாக்கும் இலக்கண பிழையைப்போன்று மற்றொருவரால் உருவாக்க முடியாது என்பதுதான் இந்த உத்தியின் தனிச்சிறப்பு. எனவே, இலக்கணப் பிழை செய்யுங்கள் பாஸ்வேர்டில் மட்டும்.

    நடிகர் பரத் – ஜெஸ்லி திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆலபம்!

    By: Unknown On: 20:16
  • Share The Gag

  • நடிகர் பரத்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (14.09.2013) அன்று சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.விழாவில் திமுக தலைவர் டாக்டர் மூ.கருணாநிதி கலந்து கொண்டு வாழ்த்தினார் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த். திரைப்பட நடிகர்,நடிகைகள்,இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.




    Bharath Rathna M S Subbulakshmi Queen of Music1916 2004) - இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த தினம் இன்று 16.09.2013

    By: Unknown On: 19:19
  • Share The Gag







  • இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த தினம் இன்று 16.09.2013


    எம். எஸ். சுப்புலட்சுமி என்ற மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (செப்டம்பர் 16, 1916 - டிசம்பர் 11, 2004) புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்றவர்.



    தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் பாடியுள்ள இவர், உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று நிகழ்ச்சிகள் பல நடத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையிலும் இவர் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.

    விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி!

    By: Unknown On: 19:06
  • Share The Gag

  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற செனட் தேர்தலில் விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அஸாஞ்சே கட்சி தோல்வியடைந்ததுடன், அவர் போட்டியிட்ட விக்டோரியா பகுதியிலும் தோல்வியை தழுவியுள்ளார்.மேலும் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களின் ஆதரவைப் பெற்ற செக்ஸ் கட்சிக்கு கிடைத்த ஆதரவை விட குறைவான வாக்குகளை பெற்று அஸாஞ்சே கட்சி தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


    sep 16 - julian-assange-wikileaks-

     


    விக்கிலீக்ஸ் அதிபரான ஜூலியன் அஸாஞ்சே, அமெரிக்க வெளியுறவுத்துறையின் ரகசியத் தகவல்களை அம்பலப்படுத்தி உலகையே பரபரப்பில் ஆழ்த்தி பிரபலமடைந்தார்.இதையடுத்து அவருக்கு கடும் எதிர்ப்புகளும், மிரட்டல்களும் வந்தன. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் அவர் மீது செக்ஸ் புகார்கள் கிளம்பின. இதையடுத்து லண்டனில் உள்ள போர்ச்சுகல் நாட்டுத் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தார்.
    இதனால் அவரை நாடு கடத்த முடியாமல் தவித்து வருகிறது இங்கிலாந்து அரசு. தொடர்ந்து போர்ச்சுகல் தூதரகத்திலேயே தங்கியிருக்கும் அஸாஞ்சே தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவில் ஒரு கட்சி ஆரம்பித்தார்.அங்கு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சியை களம் இறக்கினார். அவரும் விக்டோரியா தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அஸாஞ்சே உள்பட அவரது கட்சியை சார்ந்த அத்தனை பேரும் தற்போது தோல்வியைத் தழுவியுள்ளனர்.



    Is WikiLeaks Party’s defeat an end of Assange’s political career?
    **************************************** 


    The whistle-blowing website WikiLeaks founder Julian Assange, who ambitiously launched his political party called “The WikiLeaks Party”, ahead of federal elections in Australia that were held on September 7, lost badly. Tony Abbott from the Liberal/National Coalition won the elections while defeating Labor party’s leader Kevin Rudd.

    உண்மையே பேசவேண்டும்.(நீதிக்கதைகள்)

    By: Unknown On: 18:43
  • Share The Gag


  •  
    கந்தன் பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லாமல் ..எதற்கெடுத்தாலும் பொய்யைச் சொல்லி...மக்களை ஏமாற்றி வந்தான்.


    அதனால் ...அவனது தந்தை,,,அவனிடம் ...வீட்டிலிருந்த ஆடுகளை மேய்க்கும் வேலையைக் கொடுத்திருந்தார்.


    ஆடுகளை....ஊருக்கு வெளியே இருந்த காட்டுப்பகுதிக்கு ஓட்டிச் சென்றான் கந்தன்.


    ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்க..சற்றே தள்ளி அமர்ந்திருந்த கந்தன் 'புலி வருது புலி வருது காப்பாத்துங்க...' எனக் கத்தினான்.


    அருகாமையில் பக்கத்து வயல்களில் வேலை செய்துகொண்டிருந்த மக்கள் அவனைக் காக்க ஓடி வந்தனர்.ஆனால் வந்ததும்தான் கந்தன் பொய் சொல்லியிருக்கிறான் என்று உணர்ந்தனர்....ஏமாந்த அவர்களைப் பார்த்து கந்தன் சிரித்தான்.


    அடுத்த நாளும்..கந்தன் முந்தைய நாள் சொன்னது போல 'புலி வருது புலிவருது..'எனக் கத்த ஓடி வந்த மக்கள் ஏமாந்தனர்....கந்தனும் அவர்களைப் பரிகசிப்பதுபோல சிரித்தான்.


    மூன்றாம் நாள் ..ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்க ...உண்மையிலே புலி வந்து விட்டது. கந்தன் கத்த ...மக்களோ அவன் தங்களை மீண்டும் ஏமாற்றவே கத்துகிறான் என நினைத்து போகவில்லை.


    புலி..சில ஆடுகளை அடித்து கொன்றுவிட்டு அவன் மேலும் பாய்ந்து காயத்தை ஏற்படுத்தி விட்டு மறைந்தது.


    அப்போது தான் கந்தன் ....தான் முன்னர் பொய் சொன்னதால் ...தான் கூறும் உண்மைகளையும் மக்கள் பொய்யாக எண்ணியதை எண்ணி மனம் வருந்தினான்.


    இனி எக்காரணம் கொண்டும் பொய் சொல்லக்கூடாது என்று எண்ணியதுடன் நில்லாது....அடுத்த நாள் முதல் ஒழுங்காகப் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தான். 

    நிமிர்ந்து நில் படத்தில் வில்லனாக ஜெயம்ரவி!

    By: Unknown On: 18:18
  • Share The Gag



  • நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடித்திருக்கிறார்.
    போராளி வெற்றிக்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கி வரும் திரைப்படம் நிமிர்ந்து நில். இதில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அதாவது 24 வயது இளைஞன் மற்றும் 48 வயது நடுத்தர வயது மனிதன் என இரண்டு கேரக்டர்கள். 


    அவருக்கு ஜோடிதான் அமலாபால். சரத்குமார் சிபிஐ அதிகாரியாக வருகிறார். இவர்களுடன் சூரி, தம்பி ராமையா, பஞ்சு சுப்பு, கோபிநாத் உட்பட பலர் நடிக்கின்றனர். வாசன் விஷுவல் வெஞ்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன் தயாரிக்கிறார். 


    இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகி வருகிறது. தெலுங்கில் ‘ஜண்டாபாய் கப்பிராஜூ’ என்ற பெயரில் உருவாகிறது. இதில் நானி ஹீரோ. கிட்டதட்ட 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. 


    இது குறித்து இயக்குனர் சமுத்திரக்கனி கூறியதாவது: உன்னை சரிசெய்துகொள். உலகம் தானாக சரியாகிவிடும் என்பதுதான் படத்தின் ஒன்லைன். 48 வயது கேரக்டர் இதுவரை தமிழ் சினிமா பார்க்காததாக இருக்கும்.  இதற்காக ரவி நிறைய உழைத்திருக்கிறார். இளம் வயது ரவியும் வில்லன் ரவியும் மோதும் சண்டைக் காட்சி அதிகப் பொருட்செலவில் சமீபத்தில் படமாக்கப்பட்டது என்றார்.

    அதிரடி மாற்றம் : மோடியை புகழ்ந்து தள்ளும் அத்வானி!

    By: Unknown On: 18:13
  • Share The Gag



  • மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடிக்கு எதிராக கொடி பிடித்த பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, இன்று பொதுக்கூட்டம் ஒன்றில் மோடியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.


    சட்டீஸ்கர் மாநிலம் கர்பாவில் நடைபெற்ற பேரணியின் முடிவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அத்வானி, குஜராத் மாநிலம் உள்கட்டமைப்பிலும், மின்சார வசதியிலும் அதிக முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக ஏன் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நியமித்திருப்பதற்கு இதுவே உதாரணமாகும் என்று கூறிய அத்வானி, குஜராத்தின் மேம்பாட்டுக்காக நரேந்திர மோடி ஏராளமான பணிகளை செய்துள்ளார் என்று கூறினார்.

    மிஸ் அமெரிக்கா அழகி போட்டி: இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் தேர்வு!

    By: Unknown On: 17:55
  • Share The Gag


  • மிஸ் அமெரிக்கா அழகி போட்டி:
    இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் தேர்வு
        நியூயார்க்கில் நடைபெற்ற மிஸ் அமெரிக்கா அழகி போட்டியில் முதன் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த அழகி நீனா டவ்லுரி வயது (24 ) மிஸ் அமெரிக்காவாக தேர்ந்தெடுக்கபட்டார்.



    2014-ம் ஆண்டிற்கான மிஸ் அமெரிக்கா அழகி போட்டிகள் அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் அட்லாண்டிக் நகரில் நடந்தது. பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 52 அழகிகள் கலந்து கொண்டனர். இதில் அமெரிக்காவின், மிஸ் நியூயார்க் அழகி , நினா தவுலுரி (24) , ‘மிஸ் அமெரிக்கா’ பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்தார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இதன் மூலம் இப்பட்டத்தை வென்ற முதல் இந்திய வம்சவாளி அழகி என பெயர் பெற்றுள்ளார்.


    காற்றில் கலந்து வரும் ஆரோக்கியம்!

    By: Unknown On: 17:49
  • Share The Gag

  • நாம் ஒவ்வொருவரும் உயிர்வாழ நல்ல சுத்தமான காற்று அவசியம் தேவை நல்ல பிராணவாயு நிறைந்த காற்றை சுவாசித்தால்தானே, அதை நம் உடல் ஏற்று, ரத்தம் சுத்தமடைந்து, அதிலுள்ள கழிவுகளை கரியமில வாயுவாக மாற்றி, நம் உடலானது நம் நாசிகள் மூலம் வெளியேற்ற முடியும்!ஆனால் மக்கட்தொகை பெருகி, ஜனநெருக்கம் அதிகம் ஆகும் பொழுது அத்தனை மக்களும், உயிர் வாழ் பிராணிகள்,மிருகங்கள் அனைத்தும் சேர்ந்து மூச்சு விடும் பொழுது வெளியேற்றும் கரியமில வாயு, காற்றில் கலந்து அந்த பகுதியில் உள்ள காற்று மாசு படாதா! என்று எண்ணத் தோன்றும்.


    இங்குள்ள செடி கொடிகளும், மரங்களின் இலைகளும் சுவாசிக்கின்றன. ஆனால் அவைகள் காற்றில் உள்ள கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு, நல்ல பிராணவாயுவை வெளியிடுகின்றன. இதனால் காற்றில் கரியமில வாயு குறைந்து, பிராண வாயு அதிகரிக்கிறது. இயற்கை, இப்படி ஒரு சமன்பாட்டு நிலைமை ஏற்படுத்துகிறது! இதனை எத்தனை பேர் உணருகிறார்கள்.


    sep 16 - air on earth.MINI

     


    மொத்தத்தில் உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 மில்லியன் மெட்ரிக் டன் அளவில் காற்றை அசுத்தப்படுத்தக் கூடிய, உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவுகள் உற்பத்தியாகின்றன. இதில் அமெரிக்கா தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 51/2 லட்சம் பேர் காற்று அசுத்தமாவதால் ஏற்படும் நோய்களால் இறந்துபோகின்றனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் சுமார் 3.35 லட்சம் பேர் நுரையீரல் புற்றுநோயினால் இறக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் காற்று மாசுபடுவதுதான்.


    உலகிலுள்ள மனிதர்கள் எந்த நோயால் அதிகமாக இறக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பு COPD என்று சொல்லக்கூடிய நாள்பட்ட நுரையீரல் பாதை தடுப்புநோய் (Chronic Obstructive Pulmonary Disease) பதினாறாவது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது இந்த நோய் நான்காவது இடத்துக்கு வந்துவிட்டது.


    ஒரு மனிதன் ஒரு நாளைக்கு சுமார் 3 ஆயிரம் கேலன் காற்றை சுவாசிக்கிறான். (ஒரு கேலன் என்பது சுமார் 3.88 லிட்டர் ஆகும்). இதில் சுமார் 142 கேலன் சுத்தமான ஆக்சிஜன் வாயு தான் அவனது உடலுக்கு கிடைக்கிறது. மீதமுள்ளதெல்லாம் சுத்தமற்ற காற்று தான். இந்த நிலை தொடர்ந்தால் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு எல்லா மருத்துவமனைகளிலும் நுரையீரல் பாதிப்பு நோயாளிகள் தான் அதிகமாக இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.


    காற்று மாசு இயற்கையாக எரிமலை வெடித்து சிதறுதல் மூலமாகவும் ஏற்படுகிறது. சுமார் 500 எரிமலைகள் உலகில் உயிரோடு இருக்கின்றன. இதில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 எரிமலைகள் வெடித்து சிதறி விஷ வாயுக்களையும், சாம்பலையும் கக்கிக்கொண்டு இருக்கின்றனவாம். இந்த விஷ வாயுக்களும், சாம்பலும் எரிமலை வெடிக்கும்போது வெளியாகி காற்றில் கலக்கின்றது.


    பூமியிலிருந்து சுமார் 16 முதல் 32 கிலோ மீட்டர் உயரத்துக்கு எரிமலைகள் வெடித்து சிதறி மேற்கூறிய மாசுப் பொருட்களை வானத்தில் பரப்பி விடுகிறது. இப்படிப்பட்ட எரிமலைகளுக்குப் பக்கத்தில் சுமார் 50 கோடி மக்கள் வாழ்கிறார்களாம். நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.
    சிகரெட் புகைப்பவர்களை விட பக்கத்தில் நின்று கொண்டு அவர்கள் விடும் புகையை சுவாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு பாதிப்பு அதிகம் உண்டு. நீங்கள் விடும் சிகரெட் புகை இந்த நாட்டு மக்களுக்கே கெடுதல் செய்கிறது என்பதை சிகரெட் பிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..


    நீங்கள் ஒருத்தர் மட்டும் சிகரெட் புகைக்கவில்லையே? உலகம் முழுவதும் சுமார் 150 கோடி பேர் சிகரெட் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். இத்தனை கோடி பேரும் விடும் புகை, காற்றை அசுத்தப்படுத்துமா…படுத்தாதா… என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் கூட இந்த அசுத்தக் காற்றை சுவாசிக்கிறீர்கள் அல்லவா. இது கெடுதிதானே! ஆகவே தயவு செய்து இன்றோடு சிகரெட்டை நிறுத்திவிடுங்கள். இதுவரை புகைத்தது போதும். நாம் வசிக்கும் இடத்தைச் சுற்றி சிகரெட் புகைத்தால் கர்ப்பிணிப் பெண்களின் கருவில் குழந்தை உருவாகுவதையும் தொந்தரவு செய்யும்.



    நாம் இறை வழிபாடு செய்ய பயன்படுத்தும் கற்பூரம் எரியும்போது கார்பன் துகள்களையும், கார்பன் படிமங்களையும் அதிகமாக உண்டு பண்ணுகிறது. இவை காற்றில் கலந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதனாலேயே இப்பொழுதெல்லாம் கோவில்களில் கற்பூரத்திற்குப் பதிலாக எண்ணை அல்லது நெய்யை தீபம் ஏற்ற பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அதையே நாம் தொடர்ந்து பயன்படுத்தலாமே.


    சுத்தமான காற்று கிடைப்பது என்பது மிக மிகக் கஷ்டமாக இருக்கிறது. இந்த நிலையில் சுத்தமான ஆக்சிஜனுக்கு எங்கே போவது என்ற கவலையைப் போக்க `ஆக்சிஜன் பார்லர்` என்ற கடைகளை வெளிநாடுகளில் திறந்திருக்கிறார்கள். இந்தியாவிலும் இருக்கிறது.


    சுத்தமான ஆக்சிஜனை சுவாசித்து உடலில் தெம்பை ஏற்றிக்கொள்ள இந்தக்கடைகள் உபயோகப்படுகிறது. இந்தக் கடைகளில் அதிக சதவீதம் சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும். நம் நாட்டில் இது இன்னும் பிரபலமாக வில்லை. நாம் காற்றை அசுத்தப்படுத்தாமல் இருந்தாலே இந்தக் கடைகளெல்லாம் தேவையில்லை.


    அதுசரி… நாம் காற்றை அசுத்தப்படுத்தாமல் இருப்பது எப்படி?


    * பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட எந்தப் பொருளும் மண்ணுக்குள் மக்காது. எரித்துத்தான் ஆகவேண்டும். எரித்தால் நச்சுப்புகை வரும். ஆகவே பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை குறையுங்கள்.


    * மண்ணில் மக்கிப் போகக்கூடிய எல்லாப் பொருட்களையும் கொளுத்துவதற்குப் பதிலாக புதைத்து விடுங்கள்.


    * வீடு, பாத்ரூம் முதலியவற்றை கழுவ அதிக சக்தி வாய்ந்த `கிளினீங்’ பொருட்களை உபயோகிக்காதீர்கள்.


    * கியாஸ் மூலம் இயங்கும் மெஷின்களுக்குப் பதிலாக மின்சாரம் மூலம் இயங்கும் மெஷின்களை அதிக அளவில் உபயோகப்படுத்துங்கள்.


    * கார் ஓட்டும்போது அடிக்கடி வேகத்தை கூட்டிக் குறைத்து ஓட்டாதீர்கள். மிதமான வேகத்தில் செல்லுங்கள்.


    * சிகரெட்டை நிறுத்துங்கள்.


    * உங்களது காரில் அதிக புகை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


    * நம் தலைமுறைகள், நீண்ட காலத்துக்கு நிலைத்து உயிர்வாழ காற்று மிக மிக முக்கியம். அதற்கு இந்த தலைமுறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் உதவி புரிய வேண்டும்.அதிலும் காற்றை காசு கொடுத்து வாங்கும் நிலைமையை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு (நீதிக்கதை)

    By: Unknown On: 17:19
  • Share The Gag




  • ஒரு தந்தைக்கு நாலு பிள்ளைகள் இருந்தனர்.அவர்கள் தங்களுக்குள் அவ்வப்போது சண்டைப் போட்டு வந்தனர்.அதனால் மனம் வருந்திய தந்தை...அவர்களிடையே எந்த வழியில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்று யோசித்தார்.


    பின் ஒரு நாள் அவர் தன் பிள்ளைகளிடம் ஒரு கட்டு சுள்ளி விறகுகளைக் கொண்டு வரச் சொன்னார்.


    பின்னர் ஒவ்வொரு பையனிடமும் அந்தக் கட்டைக் கொடுத்து அதை துண்டுகளாக உடைக்கும்படியாகக் கூறினார்.மகன்கள் நால்வரும் தனித்தனியாக தங்கள் பலத்தை உபயோகித்து சுள்ளிக் கட்டை உடைக்க முயன்றனர்.


    ஆனால்...அதை அவர்களால் உடைக்க முடியவில்லை...


    பின்னர் தந்தை அந்தக் கட்டை அவிழ்த்து.....சுள்ளிக் குச்சிகளைத் தனித்தனியே எடுத்து ஒடிக்கக் கொடுத்தார்.....அவர்கள் சுலபமாக ஒடித்து விட்டனர்.


    தந்தை தன் புதல்வர்களைப் பார்த்து 'பார்த்தீர்களா..முதலில் இருந்த சுள்ளிக் கட்டு போல நீங்கள் ஒற்றுமையாக ஒன்றாக வாழ்ந்தால் உங்களை யாரும் அசைக்க முடியாது.அதனால் உங்களுக்கு எப்போழுதும் துன்பம் வராது....ஆனால் ஒற்றுமையில்லாமல் தனித்தனியாக பிரிந்தீர்களானால் இந்த சுள்ளிக் குச்சிகளைப் போல எளிதில் உடைபட்டு அழிந்து விடுவீர்கள்'.என்று புத்திமதி கூறினார்.


    அதைக் கேட்ட புதல்வர்கள்...ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து ஒற்றுமையாக இருந்தனர்.


    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
     
     

    ஜெயலலிதாவுடன் துக்ளக் சோ திடீர் சந்திப்பு!

    By: Unknown On: 17:13
  • Share The Gag


  • சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, துக்கள் ஆசிரியரும் அரசியல் விமர்சகருமான சோ ஞாயிற்றுக்கிழமை திடீரென சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் நீடித்த சந்திப்பின் போது பிரதமர் வேட்பாளராக மோடியின் பிறந்தநாள்யொட்டி (17ம் தேதி) அவருககு,அட்வான்ஸ்’ பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது

    sep 16 jayalalitha_20120206

     


    இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழகத்தில் அரசியல் கூட்டணி அமைப்பதற்கான மறைமுக பேச்சுவார்த்தைகளை இங்குள்ள அரசியல் கட்சிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. அதே சமயம், அதிமுக தனித்துப் போட்டியிடும் என்று ஜெயலலிதா ஏற்கெனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.


    இதற்கிடையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெயலலிதாவை அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான சோ சந்தித்துப் பேசியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் முதல்வரை சந்திப்போரின் விவரங்கள் பட்டியலில், சோவின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்து குறிப்பிடத்தக்கது!

    எம்.எஸ். சுப்புலட்சுமி ஒரு சகாப்தத்தின் முடிவு!

    By: Unknown On: 08:01
  • Share The Gag


  • 'பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்' என்று சொல்வார்கள். பரணியில் பிறந்த இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைத் தரணியை ஆளத்தான் செய்தார். நான்மாடக்கூடலிலே தோன்றி எட்டுத் திக்கும் தமிழோசை பரவச் செய்த இசை இமயம் டிசம்பர் மாதம் 12ம் தேதி அதிகாலையில் உலகை விட்டு நீங்கியது.


    கடும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். திடீரென்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88.


    தேனினும் இனிய காந்தக் குரலால் கோடானுகோடி ரசிகப்பெருமக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்ற நாதஜோதி அணைந்துவிட்டது. இசைவானிலும், திரைவானிலும் சுடர்விட்டுப் பிரகாசித்த அந்த ஒளி இனி ஒலிவடிவில்தான் உலா வரும்.


    ராகம், தானம், பல்லவி எல்லோரும் பாடுவார்கள். ஆனால் ராகம் பாடி ஈட்டிய பெருஞ்செல்வத்தை தானமாக நற்பணிகளுக்கும், சமூகசேவைக்கும் கொடுத்த ஒரே இசைக்கலைஞர் எம்எஸ். சுப்புலட்சுமிதான். இதற்காகத்தான் இவருக்கு மாக்சேசே விருது தரப்பட்டது.


    1916ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் நாள் சண்முக வடிவு அம்மாளுக்கும் சுப்பிரமணிய அய்யருக்கும் மகளாகத் தோன்றியவர் எம்.எஸ். தாயார் புகழ்பெற்ற வீணைக் கலைஞர். எம்.எஸ்.ஸின் முதல் குரு அவர்தான். ஆரம்ப காலத்தில் அம்மாவின் வீணைக் கச்சேரிகளில் பாடி வந்தார் எம்.எஸ். 1926ல் வெளியிடப்பட்ட ஒரு எல்.வி. இசைத்தட்டில் 'மரகத வடிவும் செங்கதிர் வேலும்' என்னும் பாடலில் சண்முகவடிவின் வீணையும், எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாட்டும் இணைந்து வெளிவந்தது. தி ட்வின் ரிகார்டிங் கம்பெனி இதை வெளியிட்டது. இதுதான் இவரது முதல் இசைத்தட்டு.
    எம்.எஸ்.ஸிற்கு சக்திவேல் பிள்ளை என்ற அண்ணனும், வடிவாம்பாள் என்று ஒரு தங்கையும் இருந்தனர். மதுரை சக்திவேல் பிள்ளை ஒரு மிருதங்கக் கலைஞர். தங்கை எம்.எஸ்.ஸின் கச்சேரிகளுக்குப் பலமுறை இவர் மிருதங்கம் வாசித்திருக்கிறார். 


    புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளை மிருதங்கத்தில் ஜாம்பவான். எம்.எஸ்.ஸின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களுள் அவரும் ஒருவர். 1935ல் தட்சிணாமூர்த்தி அவர்களின் மணிவிழாவில் எம்.எஸ்.ஸின் கச்சேரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிதான் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது எம்.எஸ்.ஸுக்கு. 


    அதே ஆண்டு மைசூர் மகாராஜாவின் அரசவையில் திருக்கோகர்ணம் ரங்கநாயகி அம்மாள் மிருதங்கத்துடன், எம்.எஸ். சுப்புலட்சுமி பாடியது அவரது மிகச் சிறந்த கச்சேரிகளுள் ஒன்றாகக் கருதப்பட்டது. இதன் பிறகுதான் தென்னிந்தியாவின் அனைத்து இடங்களிலிருந்தும் எம்.எஸ்.ஸிற்கு அழைப்பு வரத் தொடங்கிற்று. 

    அரங்கேற்றம் 

     

    மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி அரங்கில் சண்முகவடிவு அம்மாள் வீணைக் கச்சேரி செய்து கொண்டிருந்தார். வாசிப்பை திடீர் என நிறுத்திவிட்டு அருகில் இருந்த தனது மகள் 10 வயது சிறுமி சுப்புலட்சுமியை அழைத்தார் அம்மா சண்முகவடிவு ('குஞ்சம்மாள்' என்று அழைப்பார் அவர்) அருகில் மகளை அழைத்த அம்மா ''குஞ்சம்மாள் நீ பாடு'' என்று சொல்ல, உடனே சிறுமி குஞ்சம்மாள் மேடைக்கு விரைந்து வந்து ஹிந்துஸ்தானி மெட்டில் அமைந்திருந்த 'ஆனந்த ஜா' என்னும் மராட்டிப் பாடலைச் சிறிதும் அச்சமின்றிப் பாடி வந்திருந்தோரின் பாராட்டைப் பெற்றார். இதுதான் இவரின் முதல் இசைக்கச்சேரி. அன்று எம்.எஸ்.ஸின் அரங்கேற்றம் நடைபெற்றபோது அப்பள்ளியில் அப்போது ஆசிரியராக பணிபுரிந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் இளைய சகோதரர் ஸ்ரீனிவாசனும் அங்கிருந்தார். 

    இசை ஆசிரியர்கள்


    அம்மாவைத் தொடர்ந்து சேத்தூர் சுந்தரேச பட்டர் என்பவரிடம் பல வருடங்கள் இசை பயின்றார் எம்.எஸ். திருமணத்திற்குப் பிறகு செம்மங்குடி சீனிவாச அய்யர். எம்.எஸ்.ஸின் பிரதான குருவாக திகழ்ந்தார். கடையநல்லூர் வெங்கட்ராமன் அவரது கடைசி குரு. அன்னமாச்சரியா கீர்த்தனங்களை டி. பசுபதி, நேதநூரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் கற்றுக் கொண்டார். தோடி ராக ஆலாபனை மட்டும் டி.என். ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர இசையைக் கேட்டுக் கற்றுக் கொண்டார். அதுபோல் முத்துசாமி தீட்சதரின் கீர்த்தனைகளை உச்சநீதிமன்ற நீதிபதி டி.எல். வெங்கட்ராம ஐயரிடம் கற்றுக் கொண்டார். பாபநாசம் சிவனும், மைசூர் வாசுதேவாச்சாரும் தாங்கள் இயற்றிய பாடல்களைத் தாங்களே எம்.எஸ்.ஸுக்கு கற்றுக் கொடுத்தனர். 

    வெள்ளித் திரைத் தாரகை


    இயக்குநர் கே. சுப்பிரமணியம் (பிரபல நாட்டியமணி பத்மா சுப்ரமணியத்தின் தந்தை) அவர்களின் 'சேவா சதனம்' என்னும் திரைப்படத்தில் முதன்முதலில் பாடி நடித்தார் எம்.எஸ். 1938ல் இப்படம் வெளியானது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு 'சகுந்தலை' என்னும் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். மிகப்பெரிய வெற்றிப் படமான இதை எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கினார். 

    1941ல் வெளியான 'சாவித்திரி' என்கிற படத்தில் எம்.எஸ். நாரதராக நடித்ததும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பின்பு 1945ஆம் ஆண்டில் தீபாவளியன்று வெளியானது 'மீரா'. மீரா படத்தையும் சகுந்தலை படத்தைத் தயாரித்த நிறுவனமே தயாரித்தது. இப்படத்தில் எம்.எஸ். பாடிய அனைத்துப் பாடல்களும் பெரிய வெற்றி பெற்றன. 'காற்றினிலே வரும் கீதம்...' கேட்டவர்களை உருக வைத்தது. படத்திற்கான வசனத்தை எழுதியவர் கல்கி கிருஷ்ணமூர்த்தியும், பாடல்களைப் பாபநாசம் சிவனும் எழுதியிருக்கிறார்.
    மீரா இந்தியில் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. எம்.ஜி.ஆரும், எம்.எஸ். சுப்புலட்சுமியும் சேர்ந்து நடித்த ஒரே படம் மீரா ஆகும். அதுமட்டுமல்ல, மீராதான் எம்.எஸ். நடித்த கடைசிப்படமும்கூட.

    திருமணம்

    'சேவா சதனம்' படப்பிடிப்பு கிண்டியில் ஒரு ஸ்டுடியோவில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்கு அடிக்கடி வருவார் டி.எஸ். சதாசிவம். எம்.எஸ்.- சதாசிவம் சந்திப்பு இங்கே தொடங்கி, திருமணத்தில் முடிந்தது. 1940ல் சென்னையிலுள்ள திருநீர்மலை கோயிலில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. 

    கல்கியின் விமர்சனம்

    அக்காலத்தில் ஒரு திரைப்படத்தைப் பற்றி கல்கி அவர்கள் பாராட்டி விமர்சனம் எழுதினால் அந்தப் படம் நிச்சயம் வெற்றி பெற்றுவிடும். அவரது எழுத்துக்களுக்கு மகத்தான சக்தி இருந்தது. சுதந்திரப் போராட்டத்தில் சத்தியாகிரகம் செய்து கல்கி மாயவரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனந்தவிகடன் பத்திரிகையின் பொறுப்பாசிரியராக அப்பேது கல்கி பணியாற்றி வந்தார். மாயவரம் சிறையிலிருந்த ஜாமீனில் வெளிவந்த கல்கியை அழைத்துச் சென்று 'சகுந்தலை' படத்தைப் பார்க்க சதாசிவம் ஏற்பாடு செய்தார். அந்தப் படத்திற்கான விமர்சனத்தைக் கல்கி எழுதினார். அது எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் ஒரு படிக்கல்லாக அமைந்தது முக்கியமானது. 

    தமிழ் இசைவளர்ச்சியில் எம்.எஸ்.ஸின் பங்கு

    ராஜாஜி, டி.கே. சிதம்பரநாத முதலியார், ராஜா சர். அண்ணாமலை செட்டியார், கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஆர். கே. சண்முகம் செட்டியார் போன்றோரால் தொடங்கப்பட்ட தமிழ் இசை இயக்கத்திற்குப் பக்கபலமாக நின்றவர்கள் சுப்புலட்சுமி - சதாசிவம் தம்பதியினர். 

    மகாகவி சுப்பிரமணிய பாரதியார், சுத்தானந்த பாரதியார், வள்ளலார், ராமலிங்க அடிகளார், பாபநாசம் சிவன் போன்ற எண்ணற்ற அருளாளர்களின் தமிழ்ப் பாடல்களை மேடைதோறும் பாடி, ரசிகர்கள் மனதில் பதியவைத்த பெருமை எம்.எஸ். சுப்புலட்சுமியைச் சாரும். 

    சென்னை தமிழ் இசைச் சங்கம், எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு 'இசைப் பேரறிஞர்' பட்டம் சூட்டி கெளரவித்தது. இவர் பாடிப் பிரபலமடைந்த தமிழ்ப் பாடல்களுள் 'வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்', 'குறையொன்றுமில்லை', 'நீ இறங்கா எனில் புகலேது', 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா', 'வாழிய செந்தமிழ்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 

    ஐக்கிய நாடுகளில் பாடிய குயில்

    1966ஆம் ஆண்டு அக்டோ பர் 23ம் தேதி ஐ.நா. சபையில் எம்.எஸ் பாடினார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உலக அமைதியை வலியுறுத்தி மூதறிஞர் ராஜாஜி எழுதிய 'மே தி லார்ட் பர்கிவ் அவர்சின்ஸ்' என்னும் ஆங்கிலப் பாடலை எம்.எஸ். சுப்புலட்சுமி ஐ.நா. சபையில் பாடினார். இப்பாடலுக்கு ஹாண்டல் மேனுபல் இசையமைத்துள்ளார். 

    காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஐ.நா. நிகழ்ச்சிக்காகப் பிரத்யேகமாக இயற்றிய 'மைத்ரீம் பஜத' என்ற உலக நன்மைக்கான பிரார்த்தனை ஸ்லோகத்தையும் எம்.எஸ். பாடினார். அந்நிகழ்ச்சிக்கு வி.வி. சுப்ரமணியம் வயலின், டி.கே. மூர்த்தி மிருதங்கம், டி.எம். வினாயகராம் கடம் வாசித்தனர். 

    மகாத்மா காந்தி முதல் அப்துல் கலாம் வரை அத்தனை தேசத்தலைவர்களும் எம்.எஸ். அவர்களின் ரசிகர்கள். 

    மகாத்மா காந்தியின் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டு பலமுறை பஜனைப் பாடல்களை எம்.எஸ். சுப்புலட்சுமி பாடியுள்ளார். இன்றைக்கும் அகில இந்திய வானொலியில் காந்தி அஞ்சலிக்கு முன்னால் ஒலிக்கும் 'வைஷ்ணவ ஜனதே' மற்றும் 'ரகுபதி ராகவ ராஜாராம்' போன்ற மகாத்மா காந்திக்குப் பிடித்த பாடல்கள் எம்.எஸ். அவர்களால் பாடப்பட்டவையே. 

    சுப்ரபாதம்

    வேங்கடேச சுப்ரபாதம் திருப்பதி திருமலையில் தினமும் கோவில் நடை திறக்கும் போது பாடப்படுகிறது. இறைவனைத் துயில் எழுப்பும் இந்த தெய்வீகப் பாடலை 'பிரதிவாதி பயங்கரம்' அண்ணங்கராச்சாரியார் என்னும் வைணவப் பெரியவரின் குரலில்தான் திருப்பதி கோயிலில் ஒலிபரப்பி வந்தனர். 

    எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய வேங்கடேச சுப்ரபாதம், ஆதிசங்கரரின் பஜகோவிந்தம், முத்துசாமி தீட்சதரின் 'ரங்கபுர விஹாரா' என்னும் கீர்த்தனை ஆகியவற்றை எச்.எம்.வி. நிறுவனம் இசைத்தட்டாக வெளியிட்ட போது அது உலக அளவில் பிரபலமாயிற்று.

    முதலில் எம்.எஸ்.ஸின் சுப்ரபாதத்தை அங்கீகரிக்காமல் இருந்த திருப்பதி தேவஸ்தானம், 1975லிருந்து இதனை ஒலிபரப்ப ஆரம்பித்தது. 

    கணவரின் மறைவு

    1997ம் ஆண்டு நவம்பர் மாதம் சதாசிவம் மரணம் அடைந்தார். அதன்பிறகு எம்.எஸ். கச்சேரிகள் செய்வதை நிறுத்திக்கொண்டார். கடந்த ஏழு வருடங்களாக அவர் மேடைக் கச்சேரிகள் செய்யவில்லை. 2002ம் ஆண்டு சென்னை மியூசிக் அகாதெமி இவருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கியது. உடல்நல குறைவால் அவ்விரதை எம்.எஸ். நேரே சென்று பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் எம்.எஸ். அவர்களின் வீட்டிற்கே நேரிடையாகச் சென்று விருதை அவருக்கு அளித்து கெளரவப்படுத்தினார். 

    1997ம் ஆண்டு ஜுன் மாதம் சென்னை மியூசிக் அகாதெமியில் எம்.எஸ். பாடினார். அதுதான் அவர் கடைசியாகப் பாடிய கச்சேரி!
    அவரது குரலும், இனிய இசையும் இந்தப் பார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும் நிலைத்து நிற்கும் அமரத்துவம் பெற்றவை என்பதில் ஐயமில்லை! 

    இந்திய மொழிகள் அத்தனையிலும் இவர் பாடியுள்ளார் என்பதும் ஒரு சரித்திரம். இதற்கு முன் யாரும் இதைச் செய்ததில்லை.
    செப்பு மொழி பதினெட்டுடையாள் - எனில் சிந்தனை ஒன்றுடையாள் என்று மகாகவி பாரதி பாரதமாதாவிற்குப் பாடினானே, அந்த வரிகள் எம்.எஸ்ஸுக்கும் பொருந்தும் அல்லவா!