Tuesday, 26 November 2013

முளைகட்டிய நவதானிய சூப் - சமையல்!

By: Unknown On: 23:43
  • Share The Gag

  •  தேவையானவை:

    முளைகட்டிய பயறுகள் - ஒரு கப்,

    வெங்காயம் - ஒன்று,

    பூண்டு - 2 பல்,

    சீரகம் - ஒரு டீஸ்பூன்,

    தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்,

    மிளகு - காரத்துக்கேற்ப,

    கொத்தமல்லி தழை - தேவையான அளவு,

    எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,

    தேங்காய் பால் - 1 கப்

     புளிக்காத கெட்டி தயிர் - அரை கப்,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:


     * வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

     * முளைகட்டிய பயறுகளை வேகவைத்துக் கொள்ளவும்.

     * மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

     * காடாயில் எண்ணெயை காய வைத்து, அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

     * தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

     * அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்துவிடவும்.

    • பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    குப்பைமேனி தைலம் தயாரிக்கலாம் வாங்க!

    By: Unknown On: 23:33
  • Share The Gag
  •  

    குப்பை மேட்டில் கூட முளைத்து நிற்கும் செடி குப்பைமேனி. நாம் நடந்து செல்லும் ரோட்டில், கடந்து செல்லும் பாதையில் என எங்கும் காணப் பட்டாலும், நாம் காணாது கடந்து விடுவோம் குப்பைமேனியை. காரணம் இதன் அருமை நமக்கு தெரியாது.

    விதைக்க வேண்டாம். உரம் போட வேண்டாம். சிறிய மண் பரப்பு இருந்தால் போதும். தானே தழைத்து நிற்கும் சுயம்பு இந்த குப்பைமேனி. Antibiotic Properties கொண்டது குப்பைமேனி. பலவித infectionலிருந்து நம்மை காக்கும். இதில் உள்ள anti inflammatory properties வீக்கத்தை குறைக்கும்.

     "தோலில் ஏற்படும் பலவித பிரச்சினைகளுக்கு சிறந்த மருந்து குப்பைமேனி தைலம்."

    Eczema எனப்படும் ஒருவகை தோல் நோய், சிறு குழந்தைகளுக்கு வரும் கரப்பான், தோலில் ஏற்படும் அரிப்பு, சிறு சிறு வெட்டு காயங்கள், bedsoreஇவைகளுக்கு சரியான தீர்வு குப்பைமேனி தைலம். பிரச்சினை உள்ள பகுதியில் இந்த தைலத்தை லேசாக தடவ வேண்டும். இரவு படுக்க போகும் முன் இந்த தைலத்தை உபயோகிக்கலாம். காலை குளிக்க போகுமுன் சிறிது விளக்கெண்ணெய் அல்லது குளித்த பின் moisturizing cream தடவினால் நல்லது. இவ்வாறு பதினைந்து நாள் செய்தால் போதும். " Skin பிராப்ளமா? எனக்கா?" என்று கேட்பீர்கள்.

    குப்பைமேனி மூட்டு வலியை கூட குறைக்கும். தோல் பொலிவை கூட்டும்.

    குப்பைமேனி இன்னமும் பல வியாதிகளை குணப் படுத்தக் கூடியது.

    குண்டலம், குண்டலமாக அதன் விதைகள் பலஅடுக்குகள் கொண்டதாக இருக்கும். இலை அடுக்குகளுக்கு இடையில் இந்த விதை அடுக்குகள் இருக்கும்.


    குப்பைமேனி இலைகள் - இரண்டு கைப்பிடி அளவு.

    தேங்காய் எண்ணெய் - 250 மி.லி.


    விளக்கெண்ணெய் - 3 டீஸ்பூன்.



    குப்பைமேனி இலைகள் ஆயும் போது கைகள் லேசாக அரிப்பது போல் இருக்கும். பயப்பட வேண்டாம். சிறிது நேரத்திலே சரியாகி விடும்.

    குப்பைமேனி இலைகளை கழுவி, ஆய்ந்து கொள்ளவும். தண்ணீர் உலர்ந்ததும் மிக்சியில் போட்டு மையாக அரைத்து கொள்ளவும். அறைக்கும் பொது தண்ணீர் விட வேண்டாம். இலைகளில் இயற்கையாக உள்ள நீர் சத்தே போதும்.

    விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் நன்கு கலக்கவும். பின், அரைத்த குப்பைமேனி விழுதையும் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை வாணலியில் கொட்டி கொதிக்க விடவும். அடுப்பை சிம்மில் வைத்து 20 நிமிட நேரம் கொதிக்க விடவும்.

    அடுப்பை அணைத்து கொதித்த எண்ணெய் கலவையை ஆற வைக்கவும்.

    இப்போது குப்பைமேனி தைலம் தயார்.


    வாழ்க்கைப் பிரச்சனைகள் – தீர்வுகள்!

    By: Unknown On: 23:18
  • Share The Gag
  • மனித உறவுப் பிரச்சனைகள் (Human Relations Problems) மன நிம்மதியைப் போக்கிவிடுகின்றன. வாழ்க்கையில் பிடிப்பினைத் தளர்த்துகின்றன. செயலூக்கத்தினைக் குறைக்கின்றன. சிந்தனைத்திறன், அறிவு (Creativity) ஆகியவற்றைப் பாதிக்கின்றன. இவற்றிற்குக் காரணங்கள் யாவை? தீர்வுகள் யாவை என்பதைப் பார்ப்போம்.

    காரணங்கள்

    தன்னைப் புரிதல், மற்றவர்களைப் புரிதல், வாழ்வினைப் பற்றிய தெளிவான நோக்கு- இவைகள் இல்லாத பட்சத்தில் பிரச்சனைகள் உருவாகின்றன.

    தீர்வுகள்

    1. உயர்வு மனப்பான்மை (Superiorty Complex) & தாழ்வு மனப்பான்மை (Inferiority complex) கொள்ளாமல் இருக்க வேண்டும். கர்வம் கொண்ட, அகங்காரம் மிக்க, தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற, தானே பெரிது என்று எண்ணுகின்ற, மனப்பான்மையை போக்கிக்கொள்வது எப்படி?

    இந்த உலகில் எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்தையும் தெரிந்துகொள்ளவும் முடியாது. ஒரு உதாரணத்திற்கு, ஒரு ராக்கெட்டில் அதன் உச்ச வேகத்தில் வானத்தில், எவ்வளவு ஆண்டுகள் பயணித்தாலும், வானின் எல்லையை காண முடியாது. இப்படி பூமிக்கு மேலேயும், கீழேயும் பக்க வாட்டிலும் வானுக்கு எல்லை இல்லை. எவ்வளவு பெரிய தொலைநோக்கியை வைத்து ஆராய்ந்தாலும், ஒரு எல்லைக்கு மேல் அறிந்து கொள்ள முடியாது. அப்படி இருக்கும்போது இந்த வானவெளியில் பூமி, இந்தியா, தமிழ்நாடு, நம்மூர், நாம் – எவ்வளவு மிகச்சிறு பகுதி… எண்ணிப்பாருங்கள்.

    ஒரு அணுவை எடுத்துக்கொண்டால் அதையும் பிரித்து அணுத்துகள்கள் – இவற்றைப் பற்றி எவ்வளவு டாக்டர் பட்டம் வாங்கினாலும், எத்தனை ஆராய்ச்சிகள் செய்தாலும் முழுமையாக இன்னும் புரியவில்லை. பிறப்புக்கு முன்பும், இறப்புக்கு பின்பும் இன்னும் சரியாகத் தெரியவில்லை.

    இதையெல்லாம் எண்ணிப்பார்த்தால் தான் பெரிது என்ற அகங்கார மனநிலை போய்விடும்.

    தாழ்வு மனப்பான்மையை போக்குவது எப்படி?

    இந்த உலகில் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு தனித்தன்மையும் சிறப்புத்தன்மையும் உடையது. (Uniqueness) ஒருவர் கைரேகையைப் போல் இன்னொருவர் கைரேகை இருப்பது சாத்தியமில்லை. ஒவ்வொரு செடி,கொடி, பறவைகள் உயிரினங்கள்- எல்லாமே மிக மிக அற்புதமாக படைக்கப் பட்டிருக்கின்றன. இதை எண்ணிப்பார்க்கும்போது ஒரு சிறந்த படைப்பே என்பதை எண்ணிப்பார்த்தால் ஒப்பிட்டு உருவாகும் தாழ்வு மனப்பான்மை ஓடிவிடும். என்னிடம் மறைந்திருக்கும் மாபெரும் ஆற்றலை தொடர் முயற்சியினால் வெளிப்படுத்தினால் மாபெரும் சாதனை புரிய முடியும் என்பதை உணர்ந்து தாழ்வு மனப்பான்மையை தகர்த்து எறிக.

    “பெரியோரைப் பார்த்து
    வியத்தலும் இலமே
    சிறியோரைப் பார்த்து இகழ்தல்
    அதனினும் இலமே”
    -புறநானுறு


    2. இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும், மதிப்பும், முக்கியத்துவமும், கொடுக்கும்போது, உறவுகள் இனிமையாகும்.

    ஏனென்றால் எல்லா உயிர்களுக்கும் அடிப்படை உறவுத் தேவைகள்: (i) அன்பு (ii) மதிப்பு, முக்கியத்துவம், அங்கீகாரம் இவைகள் கிடைக்கும்பொழுது உள்ளங்கள் நிறைவு கொள்ளும். நிறைந்த உள்ளங்கள் நிறைவின் இனிமையான வார்த்தைகளால் வெளிப்படுத்தும்.

    மனித உறவுத் தேவைகள் கிடைக்காத போது, உள்ளங்கள் பாதிக்கப்பட்டு – பாதிப்பினை வேறு வேறு ரூபத்தில் எளிப்படுத்தி – உறவுகளுக்குள் உரைசலை உருவாக்கும்.

    ஆகவே நான், எனது என்ற விஷயங்களைப் பற்றி அதிகம் பேசாமல், உங்கள் நீங்கள், உங்களுடைய என்கிற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசும்போது – நம்மோடு உரையாடவும், உறவுகளைத் தொடரவும் மனிதர்கள் விரும்புவர்.

    பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் என்ன செய்யலாம் அருமையான தகவல்!

    By: Unknown On: 23:06
  • Share The Gag
  •  

    கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன்

    . . . . உலகோர்க் கெல்லாம் காரமா

    மூலியடா பங்கம்பாளை கொண்டு

    . . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால்

    கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம்

    . . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும்

    நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா

    . . . . அன்றான ஆகாசகருடன் மூலி

    அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம்

    - சித்தர் பாடல்.

    ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.


    பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும்.

    கடத்தியாவது நடிக்க வைக்கலாம்!

    By: Unknown On: 22:38
  • Share The Gag

  • ரம்யா கால்ஷீட் பிரச்னை செய்வதால் அவரைக் கடத்திச் சென்று ஷூட்டிங் நடத்தலாம் என்று கன்னட ஹீரோ சிவராஜ்குமார் தெரிவித்த கருத்தால், நடிகை ரம்யா கொதிப்படைந்துள்ளார்.

    கர்நாடகா இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரம்யா நடிப்புக்கு முழுக்கு போடுவதாக அறிவித்தார். இதனால் இவர் ஒப்புக்கொண்டிருந்த 'நீர் டோஸ்' உள்ளிட்ட சில கன்னடப் படங்களின் ஷூட்டிங் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

    'நீர் டோஸ்' படத்தில் பாலியல் தொழிலாளி வேடத்தில் ரம்யா நடிக்க இருந்தார். எம்.பி ஆன பிறகு அப்படி நடிப்பது தனது இமேஜை பாதிக்கும் என்று கூறி நடிக்க மறுத்தார். இதைத் தயாரிப்பாளர் ஜக்கேஷ் ஏற்கவில்லை.

    ரம்யா மீது பிலிம்சேம்பரில் புகார் அளித்தார். இருதரப்பினரிடமும் பிலிம்சேம்பர் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டது.

    ஜனவரி மாதத்திற்குள் படத்தில் நடித்துக் கொடுப்பதாக ரம்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கன்னட ஹீரோ சிவராஜ்குமார் நடிக்கும் 'ஆர்யன்' ஷூட்டிங்கில், ரம்யா பங்கேற்றார்.

    ''ரம்யா கால்ஷீட் கிடைப்பது அரிதாக இருக்கிறது. இப்போது செட்டுக்கு வந்திருக்கிறார். அவரைத் தனி விமானத்தில் கடத்திச் சென்று எங்கெல்லாம் ஷூட்டிங் நடத்தவேண்டுமோ அங்கு நடிக்கவைத்துவிட்டு திரும்பவும் கொண்டு வந்துவிட்டுவிடலாம்'' என்று வேடிக்கையாக சிவராஜ்குமார் கூறி இருக்கிறார்.

    சிவராஜ்குமார் சொன்னது  ரம்யாவுக்குக் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதால், கன்னட சினிமாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தமிழர்களால் கைவிடப்பட்டவை!

    By: Unknown On: 22:11
  • Share The Gag


  • அம்மி :

    குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல்.

    அண்டா :

    அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்.

    அடுக்குப்பானை:

    ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர்.

    ஆட்டுக்கல் :

    வட்ட அல்லது சதுர வடிவக் கல்லின் நடுவே குழியும், குழியில் பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம்.

    அங்குஸ்தான்:

    தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை.

    ஒட்டியாணம்:

    பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் அணிந்து கொள்ளும் பொன்னால் அல்லது வெள்ளிப் பட்டையால் செய்யப்பட்ட ஒருவகை ஆபரணம்.

    எந்திரம் :

    (அரிசி, உளுந்து முதலிய தானியங்களை அரைக்கவோ உடைக்கவோ பயன்படுத்தப்படும்) கீழ்க்கல்லில் நடுவில் உள்ள முளையில் சுற்றும்படியாக மேல்கல் பொருத்தப்பட்ட வட்டவடிவச் சாதனம். இதைத் திரிகல், திரிகை, இயந்திரம் என்றும் கூறுவர்.

    உரல் :

    வட்ட வடிவ மேற்பரப்பின் நடுவில் கிண்ணம் போன்று குழியுடையதும் குறுகிய இடைப் பகுதியை உடையதும் தானியங்களைக் குத்த அல்லது இடிக்கப் பயன்படுத்துவதுமான கல்லால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட சாதனம்.

    உறி:

    (வீடுகளில் பால், தயிர், வெண்ணெய் முதலிய பொருள்களை வைத்திருக்கும் பானைகளைத் தாங்கி இருக்கும்) உத்தரத்திலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலியால் ஆன கூம்புவடிவ அமைப்பு.

    குஞ்சம் - குஞ்சலம்:

    (பெரும்பாலும் பெண்களின் சடையில் இணைத்துத் தொங்கவிடப்படும்) கயிற்றில் இணைக்கப்பட்ட நூல் கொத்து அல்லது துணிப்பந்து போன்ற அலங்காரப் பொருள்.

    கோகர்ணம்:

    (ரசம், மோர் முதலியவற்றை ஊற்றப் பயன்படும் விதத்தில்) ஒரு பக்கத்தில் மூக்கு போன்ற திறப்பை உடைய ஒருவகைப் பாத்திரம்.

    கொடியடுப்பு:

    ஒரு பெரிய அடுப்பும் அதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தும் வகையில் இணைக்கப்பட்ட சிறிய அடுப்பும் கொண்ட அமைப்பு.

    சுளகு :

    வாய்ப்பகுதி குறுகளாகவும் கீழ்ப்பகுதி அகலமாகவும் இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும், முறத்தைவிடச் சற்று நீளமான) ஒரு சாதனம்.

    தாவணி:

    (இளம் பெண்கள் அணியும்) ஒரு சுற்றே வரக்கூடிய அளவுக்கு இருக்கும் சேலையின் பாதி நீளத்திற்கும் குறைவான ஆடை.

    தொடி:

    பெண்கள் தோளை அடுத்த கைப் பகுதியில் அணிந்து கொள்ளும் பிடித்தாற்போல் (அழுத்தம்) இருக்கும் அணி வகை.

    நடைவண்டி:

    (குழந்தை நடைபழகுவதற்காக) நின்று நடப்பதற்கு ஏற்றவகையில் மரச் சட்டத்தை உடைய மூன்று சிறிய சக்கரங்களைக் கொண்ட விளையாட்டுச் சாதனம்.

    பஞ்சமுக வாத்தியம்:

    கோயில்களில் பூஜையின் போது வாசிக்கப்படுவதும் ஐந்து தட்டும் பரப்புகளைத் தனித்தனியாகக் கொண்டிருப்பதுமான, பெரிய குடம் போன்ற ஒரு தாள வாத்தியக் கருவி.

    பாக்குவெட்டி:

    பாக்கு வெட்டுவதற்குப் பயன்படும்) சற்றுத் தட்டையான அடிப்பகுதியையும் வெட்டுவதற்கு ஏற்ற கூர்மை உடைய மேற்பகுதியையும் கொண்ட சாதனம்.

    பிரிமணை :

    (பானை போன்றவை உருண்டுவிடாமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றின் அடியில் வைக்கும்) பிரிகளைக் (வைக்கோல்) கொண்டு வளையம் போல பின்னப்பட்ட சாதனம்.

    புல்லாக்கு:

    மூக்கு நுனியில் துவாரங்களுக்கு இடையில் தொங்கவிடப்படும் பெண்களின் அணி வகைகளுள் ஒன்று.

    முறம்:

    (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும்) நுனிப்பகுதி சற்று அகலமாக இருக்கும்படி மெல்லிய மூங்கில் பிளாச்சு முதலியவற்றால் பின்னப்பட்ட தடித்த விளிம்புடைய சாதனம்.

    மரப்பாச்சி:


    பெண் குழந்தைகளுக்கான, மனித உருவம் செதுக்கப்பட்ட மரப் பொம்மை.

    லோட்டா:

    நீர் குடிப்பதற்கான நீள் உருண்டை வடிவக் குவளை.

    அரிக்கன் விளக்கு :

    காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு.

    அடிகுழாய்:

    கைப்பிடியைப் பிடித்து அடிப்பதன் மூலம் நிலத்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய்.

    கூஜா :


    (குடிப்பதற்கான நீர், பால் முதலியவற்றை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தும்) புடைத்த நடுப்பகுதியும் சிறிய வாய்ப் பகுதியும் அதற்கேற்ற மூடியும் கொண்ட கலன்.

    மின் சாதனங்கள் வந்துவிட்ட பிறகு இத்தகைய நம் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள் எல்லாம் இப்பொழுது அழிந்துகொண்டே வருகின்றன. முக்கால்வாசி புழக்கத்தில் இல்லை என்றே கூறலாம். 

    அவற்றையெல்லாம் சேமித்து, பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு என்பதை நினைவில் நிறுத்துவோம்.

    அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

    By: Unknown On: 21:49
  • Share The Gag

  • அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!


    வசதியாகத்தான் இருக்கிறது மகனே…

    நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.

    பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது,

    முன்பு நானும்

     இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது!


    முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!


    இதுவரையில் ஒரு முறையேனும் என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும்


    என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல்  அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது.


    நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்


     உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல்


     இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!





    இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்…


    உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு.




    நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…


    வாழ்க்கை இதுதானென்று!



    நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு… 



    உறவுகள் இதுதானென்று!

    ஒருவேளை இப்படி இருக்குமோ ?

    By: Unknown On: 21:03
  • Share The Gag
  • ஆசைதான் துன்பத்திற்கு காரணம் ஆதலால்
     ஆசையை ஒழிக்க வேண்டும் - புத்தர்

     எந்த எந்த ஆசைகளை ஒழிக்க வேண்டும் ?

    உலகில் ஆசைகளை அழித்தவன் ஒருவன் மட்டுமே

     - அவனுக்கு பெயர் சடலம்

     ஆம் உயிரில்லா உடலில் மட்டும் தான் ஆசை இல்லை.

    »» ஆசைகளை ஒழிக்கவேண்டும் என்பதே ஒரு ஆசை
    »» உணவு உண்பதே உயிர்வாழ வேண்டும் என்ற ஆசையில்
    »» உழைப்பதே குடும்பத்தை காக்கும் ஆசையில்
    »» பாசம் வைப்பது பாசம் கிடைக்கும் எனும் ஆசையில்

     இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் ஆசை உள்ளது .

     ## வைக்கவேண்டிய ஆசைகள்

    »» பெற்றோரை காக்க ஆசைப்படு
    »» வறியோர்க்கு வழங்க ஆசைப்படு
    »» சிறியோரை சீர்படுத்த ஆசைப்படு
    »» மழலையுடன் விளையாட ஆசைப்படு
    »» உன் மேல் நீ ஆசைப்படு

     இப்படி ஆசைப்படவேண்டிய விசயங்கள் நிறைய உள்ளது.
    கண்டிப்பாக இவை நமக்கு ஆசை தேவை.
    இவை மேல் நீ ஆசைப்பட்டால் மகிழ்ச்சி உன்னுடன் வாழ ஆசைப்படும்.

    ## வைக்ககூடாத ஆசைகள்

    »» பிறர் மனைவி மேல் ஆசை
    »» பிறர் பொருள் மேல் ஆசை
    »» தகுதிக்கு மேல் பொருள் வாங்கும் ஆசை
    »» மது, மாது, போதை, பேதை மேல் ஆசை.
    »» இயற்கைக்கு புறம்பான செயல்களில் ஆசை

     ஒருவேளை புத்தர் கூறியது நல்லவைகளை ஆசைப்படு , தீயவைகளை ஆசைப்படாதே என்று இருக்குமோ?

    விஜய் சேதுபதியுடன் ஒரு 'ரேபிட் ஃபயர்’ ரவுண்ட்...

    By: Unknown On: 20:51
  • Share The Gag

  • ''உங்க வெயிட் எவ்வளவு?'' 

    ''ரொம்ப வருஷமா, 85 கிலோ!''

    ''பொக்கிஷம்?'' 

    ''என் அப்பாவின் சில புகைப்படங்கள். அப்புறம் 'தென்மேற்குப் பருவக்காற்று’ படம் வெளியான சமயம், என்னைப் பாராட்டி ஒரு சின்னக் குறிப்பு விகடன்ல வந்தது. அதை என் தங்கச்சி லேமினேட் பண்ணிக் கொடுத்தாங்க!''

    ''மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கும் சினிமா?'' 

    ''முள்ளும் மலரும்''

    ''இப்போ பர்ஸ்ல எவ்வளவு பணம் வெச்சிருக்கீங்க?''
     
    (எண்ணிப் பார்த்துச் சொல்கிறார்) ''250 ரூபா!''

    ''உங்க உயிர்த் தோழன்?'' 

    ''சூர்யா... என் பயங்கர தோஸ்த். ஆனா, ப்ளஸ் ஒன் படிக்கும்போது இறந்துட்டான். ப்ச்... அவன் ஞாபகமாத்தான் என் மகனுக்கு 'சூர்யா’னு பேர் வெச்சேன்!''
     

    ''இப்போ என்ன கார் வெச்சிருக்கீங்க?'' 

    ''செகண்ட்ஹேண்ட்ல வாங்கின லேன்சர் கார்!''

    ''சென்னையில் பிடிச்ச ஸ்பாட்?'' 

    ''சாலிகிராமம் பஸ் ஸ்டாண்ட் பக்கம் ஒரு டீக்கடை. அங்கே கிடைக்கிற இஞ்சி டீக்கு நான் அடிமை!''

    ''அடிக்கடி நினைத்து மகிழும் பாராட்டு?'' 

    ''அமெரிக்காவில் இருந்து ஒரு வி.ஐ.பி. என்னைப் பார்க்க வந்தார். என்னை மாதிரியே பேசி நடிச்சுக் காமிச்சார். அவர் பெயர் யதுனன், வயசு ரெண்டு!''

    ''உங்கள் பலம்?'' 

    ''நான் நடிக்கும் படங்களின் கதையை நானே முழுசா, சீன் பை சீன், ஒவ்வொரு வசனமும் கேட்டு அப்புறம் முடிவெடுக்கிறது!''

    ''உங்கள் பலவீனம்?'' 

    ''நான் ஒரு சூப்பர் சோம்பேறி!''

    ''தமிழ் சினிமாவில் பிடித்த பன்ச் வசனம்?''

    '' 'மகாதேவி’ படத்துல 'மணந்தால் மகாதேவி... இல்லையேல் மரணதேவி’னு பி.எஸ்.வீரப்பா சொல்றது. அப்புறம், 'முள்ளும் மலரும்’ படத்தில் ரஜினி சொல்ற 'கெட்ட பய சார் இந்தக் காளி’!''

    "தோரணம்" பற்றிய அறிய தகவல்.!

    By: Unknown On: 19:57
  • Share The Gag
  •  

    தோரணம் தமிழர்கள் நிகழ்வுகளைக் குறிக்கும் பண்பாட்டு அடையாளமாக செய்யும் ஒரு அலங்கார அமைப்பாகும். இதை தென்னங் குருத்தோலை என்பவற்றால் செய்வார்கள். இவற்றில் செய்யப்படும் மடிப்புக் கட்டமைப்பு குருவிகள் எனப்படும். சிலவேளைகளில் தோரணத்துடன் மாவிலைகளையும் சேர்த்துக் கட்டுவர். இது மாவிலை தோரணம் எனப்படும்.

    தோரணங்கள் பொதுவாக இரண்டு வகைகளாக வகுக்கப்படும்.

    1. மங்கள தோரணம்.

    2. அமங்கள தோரணம்


    மங்கள தோரணம்:

    மாவிலை தோரணம், சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலான மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படுபவை மங்கள தோரணங்கள் எனப்படும்.

    இவை நான்கு குருவிகளைக் கொண்டதாகக் காணப்படும். 

    குருவிகளின் தலை மேல் நோக்கியும் வால் கீழ் நோக்கியும் இருக்கவேண்டும்.

    அமங்கள தோரணம்:

    மரணவீடு முதலான அமங்கள நிகழ்வுகளில் கட்டுவது அமங்கள தோரணம் எனப்படும்.

     இது மூன்று குருவிகளைக் கொண்டிருக்கும். 

    குருவிகளின் தலை கீழ் நோக்கியும் வால் மேல்நோக்கியும் இருக்கவேண்டும்.

    பிரசவத்திற்குப் பின் வயிற்றுச் சதையை குறைக்க சில எளிய வழிகள்!!!

    By: Unknown On: 19:42
  • Share The Gag
  • பெண்களுக்கு குழந்தைப்பேறு ஒரு சந்தோஷமான விஷயம் என்றால் அந்த சந்தோஷ நிகழ்வுக்குப் பின்பு வயிற்றுச் சதையை கட்டுப்படுத்துவது மற்றொரு சவாலான விஷயம். புதிதாக தாய்மைப் பேற்றை அடைந்த எல்லா பெண்களும் பிரசவத்திற்குப் பிறகு வயிற்றுப் பகுதியில் சேர்ந்த சதையை எப்படி குறைப்பது என்று கவலைப்பட ஆரம்பித்துவிடுகின்றனர்.

    வயிற்றுச்சதை என்று பார்க்கும் போது இரண்டு வகை கொழுப்புத்திசுக்களால் இந்த சதை உருவாகிறது. ஒன்று வயிற்றின் உள் உறுப்புகளை சூழ்ந்து சேர்ந்திருக்கும் கொழுப்பு, மற்றொன்று தோலுக்கடியில் சேகரமாகியிருக்கும் கொழுப்பு. வயிற்றின் உள்ளே சேகரமாகியிருக்கும் கொழுப்பை நம்மால் பார்க்கவோ உணரவோ முடியாது. ஆனால் இது மிக அபாயகரமானது. அதே சமயம் தோலுக்கு அடியிலுள்ள கொழுப்பை நம்மால் தொட்டுணர்ந்து பார்க்க முடியும். மேலும் உள்ளே உள்ள கொழுப்பின் அளவு அதிமாகும் போது, அது தோலுக்கு கீழ் உள்ள கொழுப்பையும் புறந்தள்ளி வயிற்றை இன்னும் பெரிதாக தோற்றமளிக்க வைத்துவிடுகிறது.

    வயிற்றுப் பகுதியில் பல காரணங்களால் அதிக சதை சேர்கிறது. கருவுற்றிருக்கும் போது வயிற்றைச் சுற்றிலும் இயற்கையாகவே எடை அதிகரித்து விடுகிறது. பிரசவத்திற்கு பின்பு இந்த எடையை குறைப்பது சிரமமாகத் தான் இருக்கும். எனினும் வயிற்றுக் கொழுப்பை குறைப்பதற்கான மிகச் சிறந்த ஆலோசனைகளை இங்கு தருகிறோம். அதைப் படித்து பின்பற்றி, வயிற்றுக் கொழுப்பை கரைத்து, ஸ்லிம்மாக மாறுங்கள்.

    பிரசவத்திற்குப் பின் வயிற்றுச் சதையை குறைக்க சில எளிய வழிகள்!!!

    புதிதான பழங்கள்

     பழங்கள் சாப்பிடும் போது, அவற்றை நீண்ட நேரம் ஃப்ரிட்ஜில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் அதில் உள்ள சத்துக்கள் போவதற்கு வாய்ப்புள்ளது. எனவே எப்போதும் நல்ல பிரஷ்ஷான பழங்களை சாப்பிட வேண்டும்.

    சமைத்த உணவு

     பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பாக்கெட் பண்டங்களை தவிர்த்துவிட்டு, வீட்டில் சமைத்து சாப்பிட வேண்டும். இதனால் ஆரோக்கியமற்ற கொழுப்புக்கள் சேர்வதை தவிர்க்கலாம்.

    காய்கறி மற்றும் பழங்கள்

     காலத்துக்கு ஏற்றபடி பல ரகங்களில் கிடைக்கும் புதிய காய்கள் மற்றும் பழங்கள் உடலுக்கு மிகவும் ஏற்றவை. இவை உடலுக்கு வித்தியாசமான சத்துப்பொருட்களை அளிக்கின்றன. அதுமட்டுமின்றி ஒரே மாதிரியான உணவை தினமும் சாப்பிடுவதை தவிருங்கள். அதே சமயம் அதிகமாகவும் எதையும் சாப்பிட வேண்டாம்.

    உடற்பயிற்சி

     நடைப்பயிற்சியை மிஞ்சிய உடற்பயிற்சி ஏதும் இல்லை. எனவே அதற்கான நேரம் மற்றும் இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும் அதற்கு முன் மருத்தவரிடம் கலந்தாலோசியுங்கள்.

    யோகா

     பொருத்தமான யோகா பயிற்சிகள் உடலை பழைய நிலைக்கு கொண்டு வரக்கூடியவை. அவிற்றில் பிராணயாமம் ஒன்று. ஆகவே அடிப்படைகளுடன் சொல்லித் தரும் ஒரு நல்ல யோகா வகுப்பில் சேர்ந்து கொள்ளுங்கள். இதனால் உடல் மட்டுமல்லாது, மனதிற்கும் மிகச்சிறந்த நன்மைகளை அளிக்கும்.

    உணவை நன்கு மென்று சாப்பிடுங்கள்


     உடலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென்றால், உணவை அவசர அவசரமாக சாப்பிடாமல், நன்கு மென்று சாப்பிடுவது மிகவும் அவசியம். இது வாய்ப் பகுதிக்கு நல்ல பயிற்சியும் கூட. அதுமட்டுமின்றி, இதனால் அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கலாம்.

    தாய்ப்பாலை தவறாமல் அளித்தல்


     உடலை பார்த்துக் கொள்ளும் பரபரப்பில் தாய்ப்பால் அளிக்க தவறுவது குழந்தைக்கு மட்டுமல்ல, உங்கள் உடலையும் பாதிக்கும். எனவே மார்பகப் புற்றுநோய் அண்டாமல் இருக்கவும், மார்பக சதைகள் இளைக்கவும் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம்.
    மேற்கூறியவற்றையெல்லாம் தவறாமல் செய்து வந்தால், வயிற்றுத் தசை குறைவதை நன்கு காணலாம்.

    'ஐ' படத்தில் பவர்ஸ்டார் இல்லையா?

    By: Unknown On: 19:25
  • Share The Gag
  •  

    சமீபத்தில் போலீஸ் விசாரணைக்காக அந்தமான் வரைக்கும் போய் வந்தார் பவர்ஸ்டார் சீனிவாசன்.

    இந்த ட்ரிப் அவருக்கு எவ்வளவு மன உளைச்சலைக் கொடுத்திருக்கும்? என்று தெரியவில்லை.

    விசாரணை முடிந்து சென்னை திரும்பி, பிணையில் ரிலீஸ் ஆகி, என்று பல கட்டங்களை தாண்டிய பவர் ஸ்டாரை மீண்டும் அதே அந்தமானுக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள் ஒரு படத்திற்காக .

    'நாலுபேரும் ரொம்ப நல்லவங்க' என்ற படத்திற்காகத்தான் இந்த விசேஷ ட்ரிப். இசைஞானி இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராசனின் மகன் ஜோ இயக்கும் படம் இது.

    ஒரு குடும்பத்திடம் பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பி தராத டெரர் கேரக்டரில் நடிக்கிறாராம் பவர் ஸ்டார். கதைப்படி இவரை அந்தமான் சிறையில் அடைக்கிறார்கள் . அதற்காக, செல்லுலார் சிறையில் சில காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் பவர்.

    'ஐ' படத்தில் பவர் ஸ்டார் நடித்த காட்சிகளை ஷங்கர் நீக்கிவிட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை படத்தில் சம்பந்தப்படுத்தி பார்க்கும் ஷங்கருக்கு இல்லை. எனவே பவர் கட் இருக்காது என்றும் கூறுகிறார்கள்.

    படம் ரிலீஸான பிறகுதான் பவர்ஸ்டார் 'ஐ' படத்தில் இருக்காரா? இல்லையா? என்பது தெரியும்.

    வீட்டில் சுபநிகழ்ச்சிகளில் வாழைமரம் கட்டுவது ஏன்?

    By: Unknown On: 18:59
  • Share The Gag
  •  

    சுபநிகழ்வு நடக்கும் வீட்டுக்கு அடையாளமே வாசலில் வாழை மரம் கட்டுவது தான்.

    இதை எதற்கோ அழகுக்காக கட்டுவதாகவும், மணமக்கள் குடும்பம் வாழையடி வாழையாக தழைக்க வேண்டும் என்றும் சொல்வார்கள்.

    இது ஆன்மிக காரணம்.

    அறிவியல் காரணமும் இதற்கு உண்டு.!

    தாவரங்கள் காற்றில் இருக்கும் கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு, ஆக்சிஜனைப் பரவச் செய்கின்றன.

    சுபநிகழ்வுக்கு ஏராளமான விருந்தினர்கள் வருவார்கள்.

    அவர்கள் விடும் மூச்சுக் காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடு காற்றில் கலக்கும்

    அத்துடன் கூடி நிற்பவர்களின் உடல் உஷ்ணம், வியர்வை நாற்றமும் சேர்ந்து கொள்ளும்.

    அங்கு கட்டப்பட்டிருக்கும் மாவிலைத் தோரணங்களும், வாழை மரங்களும் காற்றில் பரவியிருக்கும் கிருமிகளை அழிப்பதோடு, உஷ்ணத்தையும் உறிஞ்சும்.

    புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்!

    By: Unknown On: 18:40
  • Share The Gag
  • எதைச் செய்தாலும் ஏன்? எதற்கு? என்றும், அதனால் நமக்கு என்ன பயன் என்றும், தெளிவுபடுத்திக் கொண்டால் அந்தச் செயலை சிறப்பாக செய்ய முடியும்.

    செயல் செய்வதற்கும் ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகும். அந்த வகையில் நூல்களை ஏன் படிக்கவேண்டும்? என்பது பற்றி சில விளக்கங்களைப் பார்ப்போம்.


    நூல் படிப்பதறகும் தொலைக்காட்சி
    பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம்


    ஒரு உதாரணத்திறகு ‘ஒரு அரசன் குதிரையில் வேகமாக ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருக்கின்றான். அப்பொழுது-

    மேற்கண்டதைப் படிக்கும்போது ஒரு அரசனையும், ஒரு குதிரையையும், ஒரு காட்டையும் மனம் கற்பனை செய்யும். அந்த செயல் நிகழ்வது போல் மனத்திரையில் காட்சிகள் விரியும். இவ்வாறு நிகழும்போது மனிதனுடைய வலது மூளை சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கும். வலது மூளை கற்பனை சக்திக்கும், ஆக்க அறிவிற்கும் (Creativity) காரணமாக இருப்பதால், படிப்பதால் நன்மை விளைகிறது.

    மேற்கண்ட காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தால் எல்லாவற்றையும் காட்சியில் பார்த்துவிடுவதால் மூளைத் தூண்டலுக்கு அங்கு வாய்ப்பில்லை.

    நல்ல நூல்களைப் படிப்பதால் விளையும் நன்மைகள்

    1.திருவள்ளுவர் ‘வழுக்குகின்ற இடத்தில் ஒரு ஊன்றுகோலைப் போல சான்றோர் சொல் பயன்படும்’ என்று கூறுகிறார்.

    2. இந்த உலகில் பல்வேறு வெற்றியாளர்கள் மற்றும் சாதனையாளர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி சொல்லும்போது ‘ஒவ்வொரு நாளும் இரவு படுக்கப்போவதற்கு முன்பு ஏதேனும் ஒரு நல்ல நூலின் ஒரு பகுதியை படித்துவிட்டுத்தான் படுக்கச் செல்கிறேன்’ என்று கூறியுள்ளனர். இவ்வாறு படிக்கும் பழக்கம் பல புதிய விசயங்களை தெரிந்து கொள்ளவும் நமக்கு நானே மேலும் மேலும் தூண்டுதல் செய்து கொள்ளவும் பயன்படும்.

    3. ஒரு அறிஞர் சொல்கிறார், “Life is a Learning Process”. அப்படிப் பார்க்கும்போது வாழ்க்கை முழுதும் கற்றல் நிகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும்.

    4. ஜப்பானியரின் கைசன் என்னும் கொள்கை சொல்கிறது ‘தொடர்ச்சியாக வளர்ச்சியடைய வேண்டும்’ அதாவது அறிவில் – தொழிலில் வளர்ச்சியடைய மேலும் மேலும் கற்றுக்கொண்டே இருத்தல் வேண்டும்.

    5. நாம் சார்ந்திருக்கும் துறையில் என்னென்ன புதுமைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி தெரிந்து கொண்டே இருக்கவேண்டும். அதன் எதிர்காலம் அதன் மார்க்கெட் நிலவரம், போட்டியாளர்களுடைய செயல்கள், அரசின் வணிகக் கொள்கைகள் என்பது பற்றியெல்லாம் விழிப்புணர்வு வர, செய்திகளைத் தெரிந்து கொண்டே இருக்கவேண்டும்.

    6. மற்றவருடைய அனுபவங்களையெல்லாம் படித்துத் தெரிந்து கொள்கிற போது அவை வளர்ச்சிக்கு வழிகாட்டுபவையாக இருக்கும்.

    7. மனித மனம் ஓர் நிலம். அந்த நிலத்தில் ஒன்றும் பயிர் செய்யவில்லையென்றால் புல்- பூண்டுகள் முளைத்து விடும். அந்த நிலத்தில் விதைகளை தொடர்ந்து தூவிக் கொண்டே இருக்க நல்ல நூல்களைப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

    8. நல்ல நூல்களைப் படித்த பின் அவற்றை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். சந்தித்து உரையாடும்போது பேச வேண்டிய விசயத்தை பேசி முடித்தப்பின் படித்த நூலில் உள்ள சிறப்பம்சத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்த சந்திப்புக்கு பின் ‘உங்களுடைய சந்திப்பு பல நல்ல விசயங்களை தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருந்து’ என்ற நல்ல உணர்வை அது நண்பரிடம் ஏற்படுத்தும்.

    9. என்னுடைய பயிற்சியின் போது சில அன்பர்கள் சொல்லியிருக்கிறார்கள் “நூல்கள் வாங்கிவிடுவேன் ஆனால் படிக்கத் தவணை செய்கிறேன். என்ன செய்வது?’

    பதில்: ‘நூலை எடுத்து முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை அமைதியாக பொறுமையாக உட்கார்ந்து படிக்க வேண்டும் அதற்கு இப்பொழுது நேரமில்லை’ என்று சிலர் தள்ளிப் போடுகின்றனர். அதற்குப் பதிலாக ஒவ்வொரு அத்தியாயத்தின் பின் பகுதியில் அதன் சுருக்கம் இருக்கும். அதைப் படியுங்கள். ஒவ்வொரு பக்கத்திலும் அடிக்கோடு போடப்பட்டோ அல்லது பெரிய எழுத்திலோ உள்ள முக்கிய வரிகளைப் படியுங்கள். நேரம் கிடைக்கும் போது முதலில் படித்த அத்தியாயத்தை படியுங்கள்.

    ஹென்றி ஃபோர்டு சொல்லுவார், “எந்தப் பெரிய வேலையையும் பகுதி பகுதியாக பிரித்துச் செய்து விட்டால் வேலை எளிதில் முடியும்’

    அடுத்து, படிக்கும்போது வேறு நினைவுகள் வந்து கவனம் சிதறினால் விரல் வைத்து படியுங்கள் பின் சிறிது சிறிதாக விரலை வேகமாகக் கொண்டு சென்று படியுங்கள். படித்து முடித்ததற்கு பிறகு வருகிற பயன்களை எண்ணிப் பார்த்து படியுங்கள்.

    நிறைவுரை

    பல நூல்களைப் படித்து அறிவை வளர்ப்பதின் மூலம் தன்னம்பிக்கை ஏற்படும். ஆக்க அறிவு (Creativity) மிகும். உரையாடும் போது மற்றவர்களால் மதிக்கப்படுவோம். எல்லோராலும் வேண்டப்பட்டோராக மாற முடியும்.

      நம் குழந்தைகளுக்கு அவர்கள் வயதுக்குத் தக்கபடி நூல்களை வாங்கி கொடுப்போம். வீட்டிற்கு ஒரு நூல் நிலையம் அமைப்போம்!

    பூண்டு சூப் - சமையல்!

    By: Unknown On: 18:28
  • Share The Gag


  • தேவையானவை:

    முழுப்பூண்டு – 2 ...
     
    வெங்காயம் – ஒன்று
     
    தண்ணீர் – அரை லிட்டர்
     
    சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
     
    பால் – ஒரு கப்
     
    கெட்டித் தயிர் – சிறிதளவு
     
    ஆலிவ் ஆயில் – ஒரு டேபிள்ஸ்பூன்
     
    மிளகுத் தூள், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை:

    *பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும்.

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    * கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி சூடாக்கி, உரித்த பூண்டு சேர்த்து நன்கு வறுக்கவும்.

    * இதில் சிறிது எடுத்து தனியே வைக்கவும்.

    * நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    * சோள மாவு சேர்த்து வறுத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டிஇல்லாமல் கிளறி, தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும்.

    * பூண்டு நன்கு வெந்தவுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி, தனியாக எடுத்து வைத்த வறுத்த பூண்டு, தயிர் சேர்த்துப் பரிமாறவும்.

    * இந்த சூப் வயிறு உபாதை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

    அரச மரம் - அனைத்து பயன்களும் ஒரே கட்டுரையில்!

    By: Unknown On: 18:10
  • Share The Gag

  •  புவியில் வாழும் உயிர்களுக்கு உயிர் கொடுப்பது மரங்கள்தான்.

    மரங்கள்தான் சூரிய ஒளியிலிருந்து வெப்பத்தை உள்வாங்கி, குளோரோபில் மூலம் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சி ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.

    இதனாலேயே தாம் நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். அப்படி நம் முன்னோர்கள் வழிபட்ட மரங்களுள் அரச மரமும் ஒன்று.

    இன்று குளக்கரை, கோவில்களில் அரச மரம் இல்லாத கிராமங்களை நாம் காண முடியாது. நீண்ட காலம் வாழும் அரச மரங்கள் தெய்வமாக போற்றப்படுகின்றன. வேம்பை பெண் தெய்வமாக வணங்குவார்கள். அரச மரத்தை ஆண்தெய்வமாக வணங்குவர். பெரும்பாலும் அரச மரம் இருக்கும் இடமெல்லாம் பிள்ளையார் சிலை இருக்கும்.

    புத்தபிரான் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக நாம் அறிவோம். அந்த போதிமரம் என்பது அரச மரம்தான்.

    அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள் என்ற பழமொழி உண்டு.

    இதன் பொருள் அரச மரம் குலம் தழைக்கச் செய்யும் பிள்ளைப்பேறை உண்டாக்கும். சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும் என்பதே.

    அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.

    புராதான காலம் தொட்டே அரச மரம் இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இதன் பூர்வீகத்தை இந்தியா, இலங்கை, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடையது என்கின்றனர். ஆனால் இதன் பூர்வீகம் பாரத பூமிதான்.

    நீண்டு நெடிய மரம், அழகான இலைகள் என்று பரந்து விரிந்து காணப்படும் அரச மரத்திற்கு அஸ்வத்தம், அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம், சராசனம், மிப்பலம் என பல பெயர்கள் உண்டு.

    நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர்.
    இதன் இலை, வித்து, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.

    அரச இலை கொழுந்துகளை எடுத்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வன்மை கொடுப்பதுடன் சுரக்காய்ச்சல் குறையும். முக்குற்றத்தையும் அதாவது வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சீராக்கி உடலை சீராகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

    அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

    அரச விதைகளைக் காயவைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் பாலில் கலந்து உண்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் குணமாகும்.

    அரசமரப் பட்டையை சிதைத்து நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் சொறி, சிரங்கு குணமாகும். உடல் வெட்கை குறையும். வியர்வை நாற்றம் நீங்கும். சருமம் பளபளப்பதுடன், சரும நோய்கள் அண்டாது. சருமத்தில் சுருக்கம் ஏற்படாது.

    அரசமரப் பட்டையை சிதைத்து பொடியாக்கி நாள்பட்ட புண்களின் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும்.

    அரச மரப் பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் அந்த நீரால் வாய் கொப்பளித்து வந்தால் வாயில் உள்ள புண்கள் விரைவில் குணமாகும்.

    வெள்ளைப்படுதல் நோய் கொண்ட பெண்கள் இந்த நீரால் பிறப்புறுப்பை கழுவி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். அதனால் ஏற்படும் மற்ற பாதிப்புகள் குறையும்.

    அரச மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு மாதவிலக்குக் காலங்களில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

    அரச மரத்தின் பாலை எடுத்து பாத வெடிப்புகள் உள்ள பகுதிகளில் பூசிவந்தால் பித்த வெடிப்புகள் விரைவில் மறையும்.

    அரச இலை, பட்டை, வேர் இவைகளை எடுத்து நன்கு இடித்து நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி தேவையான அளவு பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால், மன அழுத்தம், மன எரிச்சல், அதீத கோபம், தீரா சிந்தனை போன்றவை தீரும்.

    அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் அரச மரமும் ஒன்று. எனவே அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்.

    ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: "அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்" என்றொரு பழமொழி இருக்கிறது. அரச மரத்தினுடைய காற்று கர்ப்பத்தையே பலப்படுத்தக்கூடிய அளவிற்கு மருத்துவ சக்தி பெற்றது. அரச மரத்தில் ஒருவித மின் ஆற்றல்கள், பாசிடிவ் எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல்கள் அரச இலை போன்றவற்றில் இருக்கிறது.

    ஹோமங்களில் நாம் போடும் பொருட்களில் அரசங்குச்சி அவசியமாக அதில் இடம் பெறுகிறது. இந்த அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது.

    குறிப்பாக சொல்ல வேண்டுமானால், விந்தணுக்களினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தக்கூடிய, பலப்படுத்தக்கூடியதெல்லாம் அரச பழத்தை பதப்படுத்தி உண்ணும் போது வருகிறது.

    நம்முடைய மூதாதையர்கள், முன்னோர்கள் மருத்துவ குணங்களை சூசகமாக சொல்லிச் சென்றிருக்கிறார்களே தவிர, நேரடியாக அறிவியலாக அதை சொல்லாமல் சென்றுவிட்டார்கள். அதனால், பாதியில் வந்தவர்கள் இதெல்லாம் மூட நம்பிக்கை, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

    இதையே சிகாகோவில் இருக்கக் கூடிய பல்கலைக்கழகம், அரச மர இலையில் இவ்வளவு வீரியம் இருக்கிறது. அந்த மரத்திற்கு கீழ் உட்கார்ந்து அரை மணி நேரம் சுவாதித்தால் இத்தனை கலோரிகள் கிடைக்கிறது என்று அவர்கள் சொல்லும் போதுதான் மக்கள் நம்பப் போகிறார்கள்.

    அதனால்தான், அரச, வேம்பு போன்றவைகளை பராமரிப்பது என்பது பரிகாரம் போன்றது என்று சொல்லியிருக்கிறார்கள். 4 அரச மரங்களை நட்டு அதற்கு கீழ் 4 பேர் உட்கார்ந்து மருத்துவ குணம் பெற்று உடல் நலம் தேறிச் செல்கிறார் என்றால், அந்தப் புண்ணியம் அந்த மரத்தை நட்டவரைப் போய்ச் சேரும்.

    ஒரு ஆன்மாவைத் திருப்திப்படுத்தக் கூடிய செயல்தான் மரம் நடுதல். அதில் பயனுள்ள மரத்தை நடும்போது அவர்களுடைய புண்ணியம் இன்னமும் அதிகரிக்கிறது. அசோகர் மரம் நட்டார் என்று படிக்கிறோமே, இன்றைக்கும் அதையேதானே உலக நாடுகள் மரம் நடுவோம் என்று வலியுறுத்தி வருகின்றன.

    அரச மரம் -அஸ்வத்தம்

     ஆயுர்வேதத்தில் அரச மரத்தை -அஸ்வத்த என்போம்
     வேறு பெயர்கள் -போதி மரம் (போதி தரு ),சல பத்ர,திரு மரம் ,பிப்பலம்
     ஆச்சார்யர் சர்க்கார் -மூத்திர சங்கிரக நீயம் ,கஷாய ஸ்கந்தா பிரிவில் சேர்த்துள்ளார் .

     ஆச்சார்யர் சுஸ்ருதர் -ந்யக்ரோதாதி கனத்தில் சேர்த்துள்ளார்
     பயன்பாடுகளில் -கப பித்த நோய்களிலும் ,ஆண்மை பெருக்கவும்,வர்ணத்தை கொடுக்கவும் ,புண்களை ஆற்றவும்,சுத்தம் செய்யவும் பயன்படும்

     நோய்களில் -பெண்களின் பெண் உறுப்பு நோய்கள்,வாத ரக்த என்னும் நீர் வாதத்திலும் ,தோல் நோய்களிலும் ,கெட்ட ஆரப் புண்களிலும் சரிசெய்யும்
     வாத ரக்த நோயில் -அரசம்பட்டையை குடிநீராக்கி குடிக்க தீரும் (சரக சம்ஹிதை -சி -இருபத்தி ஒன்பது அத்தி)
    ஆண்மையில்லாதவனுக்கு (கிலைபியத்தில்)-அரசம் பாலில் அரச பூ,வேர்,பட்டை ,இலை மொக்கு வேக வைத்து தேன் சர்க்கரையுடன் சாப்பிட ஆண்மை இல்லாதவன் ஆண்மை பெறுவான்,குறி எழும்பாதவன் ஆண் மகனாவான் (சுஸ்ருத சம்ஹிதை -சி-இருபத்தி ஆறு )
    தீப்புண்ணில் -அரசம்பட்டையின் வேர் பொடியை தூவ தீப்புண் சீக்கிரம் ஆறும் (வ்ரு-மாதவம் )
    கடைகளில் கிடைக்கும் மருந்ந்துகளில்-அஸ்வத்த மூலாதி மோதகம் ,நால்பாமராதி தைலம்
     சித்த மருத்துவத்தில்

     செய்கை -விதை -மலம் இளக்கி,
    இலை கொழுந்து -உடல் வன்மை பெருக்கும்,சூலகத்தை உண்டாக்கும் ,கருப்பை கொலரை போக்கி -சூல் கொள்ள செய்யும் -அதனாலே "அரச மரத்தை சுற்றி விட்டு அடி வயிற்றை தொட்டு பார்த்தாள்" என்ற பழ மொழியும் உண்டு
     அரசவேர் மேல் விரணம் ஆற்றுமுவ் வித்து

     வெருவவரும் சுக்கில நோய் வீட்டும் -குரல் வறள்வி

     தாகமொழிக் குங்கொழுந்து தாது தரும் வெப்பகற்றும்

     வேக முத்தோடம்போக்கும் மெய் (அகத்தியர் குண பாடம் )


    மரங்களில் அபூர்வமான மரம் அரச மரம். அனைத்து தாவரங்களும் 12 மணி நேரம் ஆக்ஸிஜனும், 12 மணிநேரம் கார்பன்-டை-ஆக்சைடும் வெளியேற்றும். ஆனால் அரச மரம் மட்டும் 24 மணிநேரமும் ஆக்ஸிஜன் வெளியேற்றும். அதனால்தான் கோயில்களின் சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பராமரிக்க அரச மரங்களை நட்டு பராமரிப்பார்கள். இதேப் போல், பொது இடங்களில் கிராமங்களில் அரச மரத்தை நடுவார்கள்.

    அரச மரத்திற்கும், வியாழன் (Jupiter) கிரகத்திற்கும் நேரடி தொடர்புகள் இருக்கின்றன. கிரகங்களில் வியாழன் கிரகம் சக்தி வாய்ந்தது. இது குழந்தை பாக்கியம், திருமணம், பணம், வரவு போன்ற காரியங்களுக்கு உதவுவதாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    வியாழன் கிரகம் மனிதனின் தொடைப் பகுதியை அதிகளவில் பாதிக்கும். வியாழக்கிழமையன்று வியாழன் கிரகம் மிகவும் சக்தி வாய்ந்ததாக காணப்படுகிறது. அதனால்தான் அந்த தினம் வியாழக்கிழமை (Thursday)என்று உலகம் முழுவதும் அழைக்கப்படுகிறது.

    தனுசு ராசி, மீனம் ராசி, புனர்பூசம் நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம், பூரட்டாதி நட்சத்திரம் கொண்டவர்களுக்கும் வியாழக்கிழமை பிறந்தவர்களுக்கும், நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 வரை பிறந்தவர்களுக்கும் அரசன் மரம் உகந்த நன்மை தரும் மரமாகும்.

    தோல் நோய்கள், காயங்கள், தீப்புண், அஜீரணம், நடக்கும் போது கால் மடங்கிப் போதல், தொழுநோய், மூட்டுவாதம், இதய பலவீனம், மது மற்றும் போதைக்கு அடிமையாகுதல் போன்ற நோய்களும் வியாழன் கிரகத்துடன் தொடர்பு கொண்டவை.

    இந்து சமுதாய மக்கள் வியாழன் கிரகத்திற்கு "குரு' என்று அழைப்பார்கள். வியாழன் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுக்கள் நன்மைகள் தரும். கெட்ட கதிர்வீச்சுக்கள் தீங்கு விளைவிக்கும்.

    வியாழன் கிரகத்தால் உண்டாகும் நோய்கள், தீமைகளுக்கு வியாழன் தோஷம், குரு தோஷம் என்பார்கள். இந்த தோஷத்தை நீக்க நவக்கிரக ஆலயங்களுக்குச் சென்று குரு பகவான் விக்கிரகத்தை வணங்கிவிட்டு அருகில் உள்ள அரச மரத்தைக் தொட்டு கும்பிட்டு நூறு முறை சுற்றி வருவது இந்து சமுதாய மக்களின் ஐதீகம்.

    உண்மையில், அரச மரம் வியாழன் கிரகத்துடன் தொடர்பு கொண்டது. இந்த மரம் வியாழன் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகளை தன் உடலில் உறிஞ்சிக் கொண்டு அடைத்து பாதுகாத்துக் கொளளும். அதுதான் இந்த மரத்தின் ஒவ்வொரு பாகததிலும் மருத்துவ குணமாக மாறுகிறது.

    மருத்துவ குணங்கள்

     இலைகள்: இளம் துளிர்களை பாலில் அல்லது தண்ணீரில் காய்ச்சி, வடிகட்டி சர்க்கரை கலந்து குடித்து வந்தால் மூளைக்கு பலம் கிடைக்கும்.

    இதன் இலைகளை நிழலில் உலர வைத்து, பவுடராக்கி, கருவேலம் பிசின் சேர்த்து மாத்திரைகளாக உருட்டி ஒரு மாத்திரையை சுவைத்துச் சாப்பிட்டால் இருமல் குணம் பெறும்.

    ஏழு முதிர்ந்த இலைகளை எரித்து, தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து வடித்துக் குடித்தால் வாந்தி நிற்கும்.

    மரப்பட்டை: 

    இம்மரத்தின் பட்டையையும், இலைகளையும் தண்ணீரில் கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்தால் வெட்டை நோய், குஷ்ட நோய் நீங்குவதுடன், இரத்தம் சுத்தமாகும்.

    பட்டைச்சாறு: 

    இம்மரத்தின் பட்டைச்சாறு மிகச் சிறந்த கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.

    பழம்: இம்மரத்தின் பழங்களை நிழலில் உலர வைத்துப் பவுடராக்கி மாதவிலக்கு முடிந்த நாளிலிருந்து தினசரி ஒரு டீ ஸ்பூன் வீதம் பாலில் கலந்து தினசரி ஒருவேளை என பதினான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பெண்களின் மலட்டுத்தன்மை பிரச்னைகள் நீங்கும். இதை ஆண்கள் சாப்பிட்டால் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை இனிதாக அமையும். அதனால்தான் "அரச மரத்தைச் சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்' என்ற பழமொழியும் சொல்லப்படுகிறது. மருத்துவ ரீதியாக அரச மரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் மலட்டுத்தன்மையை நீக்கும் குணம் இருக்கின்றது.

     "ரெய்கி' மருத்துவத்தில் மரத்தைக் கட்டிப்பிடிக்கும் சிகிச்சை பிரபலமானது. மரத்தை கட்டிப்பிடிக்கும் போது அதன் நல்ல குணங்கள் நம் உடலில் மாற்றலாகி பல வகையான நோய்களை குணப்படுத்துவதுடன், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உண்டாக்குகிறது. கிரக தோஷங்களையும் நீக்குகிறது. இம்மரத்தை தினசரி அரை மணி நேரம் கட்டிப்பிடிப்பதால் மேற்கண்ட பலன் கிடைப்பதுடன் நல்ல உடல் நலனும் கிடைக்கிறது.

    பெரும்பாலான கோவில்களில் அரசமரம் இருக்கும். அதன் அடியில் விநாயகர் அமர்ந்திருப்பார். விநாயகரையும், அதனுடன் அரச மரத்தையும் சுற்றி பக்தர்கள் வழிபடுவார்கள். அரச மரத்தில் மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது.

    எனவே தினமும் நேரம் கிடைக்கும் போது அரச மரத்தை பிரதட்சணம் (வலம் வருதல்) செய்வது புண்ணியம் தரும். திங்கட்கிழமைகளில் வரும் அமாவாசை அமாசோமவாரம் என்று அழைக்கப்படும்.

    அன்றைய தினத்தில் அரச மரத்தை வலம் வந்து வழிபடுவது பெரும் புண்ணியத்தை கிடைக்கச் செய்யும். அரச மரத்தை வலம் வரும்போது, மூலப்பொருளான கணபதியையும், மும்மூர்த்திகளையும் கைகூப்பி மனதார நினைத்து வணங்க வேண்டும்..

    ஆண்களுக்கும் வந்துருச்சுப்பா 'பிரா'...!!

    By: Unknown On: 17:56
  • Share The Gag


  • பெண்களுக்கே உரிய பிரா ... இனிமேல் ஆண்களுக்கும் கிடைக்கப் போகிறது..
    அதுவும் எப்படி.. புஷ் அப் பிரா... ஆம், ஆண்களுக்காகவே பிரத்யேகமான பிராவை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

    பேஷன் துறையினர்தான் இந்த லந்துக்...கார வேலையில் இறங்கியுள்ளனர்.
    ஆண்கள் மத்தியில் இது வித்தியாசமான ஆச்சரியத்தையும், சிலரது எதிர்ப்புகளையும் ஒரு சேர பெற்றுள்ளதாம்.

    பெண்களுக்கு மட்டும்தானா...

    பெண்களுக்கான பிரத்யேக உள்ளாடைதான் பிரேசியர் எனப்படும் பிரா. பெண்களின் தனிச் சிறப்பான உள்ளாடையாகவும் காலம் காலமாக திகழ்கிறது.

    ஆண்களுக்கு முண்டா பனியன்.. கை வச்ச பனியன்
    ஆண்களைப் பொறுத்தவரை முண்டா பனியன், கை வச்ச பனியன் என்று வரிசைப்படுத்தியுள்ளனர்.

    ஆண்களுக்கும் வந்தாச்சுப்பா பிரா

    ஆனால் இப்போது ஆண்களுக்கும் பிராவை கொண்டு வந்து விட்டனர். அதுவும் புஷ் அப் பிரா...


    நெஞ்சை நிமிர்த்திக் காட்டுமாம்


    ஆண்களுக்கு அழகே அந்த கட்டுமஸ்தான நெஞ்சுதான். ஆனால் எல்லோரும் சல்மான் பாடியோடு இருக்க முடியாதே... அப்படி இல்லாதவர்கள்தான் நிறையப் பேர் உள்ளனர். அவர்களுக்காகத்தான் இந்த புஷ் அப் பிராவை கொண்டு வந்துள்ளனராம்.


    நெஞ்சுரம் மிக்கவர்களாக தோற்றமளிக்கலாம்
    இந்த புஷ் அப் பிராவை அணியும் ஆண்களுக்கு கட்டுமஸ்தான நெஞ்சு இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுமாம்.


    டி சர்ட் பிரா

    இந்த பிராவை டி சர்ட் பிரா என்று அழைக்கிறார்கள். அதாவது பெண்கள் அணியும் வழக்கமான பிரா போல இது இருக்காது. மாறாக டி சர்ட்டுடன் கூடிய பிரா... இதை அணிந்தால் பைசெப்ஸ், டிரைசெப்ஸ், நெஞ்சுப் பகுதி என ஒட்டுக்காக எல்லாமே எடுப்பாக தெரியுமாம்.

    படத்தில் விவேக் போல...

    பிரபாகரன் படத்தில் விவேக் ஒரு குண்டாங்குறையாக டியூப்களை உடலில் சொருகி 8 பேக் காட்டுவாரே.. கிட்டத்தட்ட அது போலத்தான் இதுவும். ஆனால் இது காமெடிக்காக அல்ல, ஆண்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில் இருக்குமாம்.


    இல்லாதவங்களுக்கு நல்லதுதானே...

    இதுகுறித்து பாலிவுட் நடிகரான இஜாஸ் கான் கூறுகையில், எடுப்பான மார்பு இல்லாத ஆண்களுக்கு இது வரப் பிரசாதம்தான். காமெடியாக இருந்தாலும் இதைப் போட்டுக் கொள்வதில் தவறில்லை என்பதே எனது கருத்து... என்றார்.

    என்ன கருமம்டா சாமி இது...

    ஆனால் சிலர் இதற்கு முகம் சுளிக்கின்றனர். கெளதம் ரோட் என்ற இன்னொரு நடிகர் கூறுகையில், ஆண்களுக்குப் பிராவா.. என்ன கருமம் இது.. ஆண் என்றாலே ஆண்மைதானே.. பிறகு எதற்கு பெண்களைப் போல பிரா.. எனக்கு உடன்பாடில்லை என்கிறார்.

    நமமை போலவே செயல்படும் ரோபோக்கள் தயார்!

    By: Unknown On: 17:25
  • Share The Gag
  • உலகில் ரோபோட் என்றழைக்கப்படும் முதல் இயந்திர மனிதன் கலிபோர்னியாவிலுள்ள ஸ்டாண்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 1968-இல் பிறந்தான்.வீட்டு வேலை செய்யும் சிறிய ரோபோ என்னும் இயந்திர மனிதனின் உயரம் மூன்றடி. எடை – இருபத்தி இரண்டரை கிலோ ஆகும்.போலீஸ் ரோபோ என்ற ஒன்று உண்டு. அதன் எடை 87 கிலோ. உயரம் ஒன்றரை மீட்டர்.

    பெயர் ஞடஈ-2.மனிதனுக்கு உள்ள அத்தனை உறுப்புக்களையும் கொண்ட ரோபோவுக்கு “லெனின் கிரேடு’ என்று பெயர். இது ரோபோ இயல் மற்றும் பொறியியல் சைபர்னடிக்ஸ் கழகத்தில் உள்ளது.அயர்லாந்து அருகே அட்லாண்டிக் கடலில் ஏர்இந்தியா ஜெட் விமானம் வெடித்துச் சிதறியபோது கடலில் மூழ்கிய பொருள்களைக் கண்டெடுத்த ரோபோவின் பெயர் “ஸ்கார்ப்’.2050,ம் ஆண்டுக்குள் சிவப்பு விளக்கு ஏரியாக்களில் பெண்களுக்கு பதிலாக ரோபோக்கள் இடம்பெறும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

    nov 26 - robot
    செக்ஸ் பொம்மைகள், கருவிகள் போன்றவைஎல்லாம் பல ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கின்றன. அதற்கிடையில் அமெரிக்காவை சேர்ந்த ‘ட்ரூ கம்பெனி’ என்ற நிறுவனம் ‘ராக்ஸி’ என்ற செக்ஸ் ரோபோவை 2010,ல் அறிமுகப்படுத்தியது. இதுதான் உலகின் முதல் செக்ஸ் ரோபோவாக கருதப்படுகிறது. வழக்கமாக ஒருவரது விருப்பத்துக்கு ஏற்ப ஒரு செக்ஸ் பொம்மையின் உடல் நிறம், முடி நிறம், முக அமைப்பு ஆகியவற்றை மாற்றிக் கொள்ள முடியும். சதே சமயம் செக்ஸ் ரோபோவான ராக்சியை பொருத்தவரை அதன் ‘மூடு’கூட மாற்றிக் கொள்ளலாம்.

     ரொம்ப வெட்கப்படும் ப்ரிகிட் ஃபரா, அதிரடி பெண்ணான வைல்ட் வெண்டி, வெகுளி பெண்ணான யங் யோக்கோ என்பது உள்பட 5 கேரக்டர்களாக இந்த ரோபோவை மாற்றிக் கொள்ள முடியும். இப்படியான தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக வருங்காலத்தில் அதிநவீன செக்ஸ் ரோபோக்கள் வரக்கூடும். 2050ம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்த விபசார விடுதிகளிலும் பெண்களுக்கு பதிலாக ரோபோக்கள் இடம்பெறும் என்கிறார்கள்.

    இந்நிலையில் மனிதனை போன்று தோற்றமளிக்கும் ரோபோ எனப்படும் இயந்திர மனிதனும் நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று தான்.இது போன்ற ரோபோக்கள் மனிதர்களுக்கு பயன்படும் வகையிலேயே உருவாக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் கொடுக்கும் கட்டளைக்கு ஏற்ப பணிகளை அவை செய்கின்றன. இது வரை ஒரு வேலைக்காரன் என்ற நிலையில் உள்ள அவற்றை தற்போது பாதுகாப்பு பணி, மருத்துவ சிகிச்சை, உடல் நலம் பேணுதல், வழிகாட்டிகள் மற்றும் பிற பணிகளில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அட்லாண்டாவில் உள்ள ஜார்ஜியா தொழில்நுட்ப அமைப்பில் உயிரி மருத்துவ பொறியியல் துறையின் பேராசிரியராக இருப்பவர் சார்லி கெம்ப். இவர் மனிதன் எதையெல்லாம் செய்கிறானோ அதனை திரும்ப செய்யும் வகையில் ரோபோக்களை வடிவமைக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டு உள்ளனர் என்று கூறியுள்ளார்.

    இதனால் மனிதர்களுக்கு சேவை செய்யும் வேலைக்காரன் என்ற நிலையில் இருந்து சக மனிதன் என்ற அந்தஸ்திற்கு ‘நர்சிங்’ என்ற தகுதிக்கு ரோபோக்கள் உயர்த்தப்படும் என்றும் அதற்கான ஆய்வுகள் பல்கலை கழகத்தில் நடைபெற்று வருவதாகவும் நியூயார்க் டைம்ஸ் செய்தி இதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

    கடலின் அடியில் ஹோட்டல் – இதுதான் டாப்!

    By: Unknown On: 17:15
  • Share The Gag
  • சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வர,அமெரிக்காவின் ஃப்ளோரிடா , மாலத்தீவு மற்றும் ஸ்வீடனை அடுத்து – கடலின் அடியில் தங்கும் ஹோட்டல் வரிசையில் இது தான் இப்ப நம்பர் 1

    nov 26 - ravi sea

    ஆப்ரிக்காவில் உள்ள பெம்பா தீவில் இந்தியன் ஓஷன் கடற்பரப்பில் அமைந்துள்ள மான்ட்டா ரிஸார்ட் தான் ஹாட் டெஸ்டினேஷன். மூன்று அடுக்குகள் கொண்ட இந்த ஹோட்டலில் கீழ் பகுதி பெட்ரூம் எட்டு கண்ணாடிகள் கொண்டது அதனால் 24 மணி நேரமும் பெரிய சிறிய அத்தனை வகை மீன்களும் சுற்றி கொண்டே இருக்கும்.

    அதுக்கு அடுத்த தளத்தில் வரவேற்ப்பறை அதுவும் தண்ணீரில் மூழ்கி இருக்கும். அதை தாண்டி மேலே வந்தால் தண்ணீருக்கு மேல் இருக்கும் மொட்டை மாடி உண்மையிலெ சூப்பர் ஹோட்டல் தாங்க. 17 ரூம்கள் மட்டும் கொண்ட இந்த ரெஸார்ட்டில் தங்க ஒரு நாளைக்கு சுமார் 95,000 ரூபாய்கள் தான்…………………..

    சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் குரலில் தயாரான அனிமேஷன்!

    By: Unknown On: 17:05
  • Share The Gag
  • டீச் எயிட்ஸ்’ அமைப்பின் சார்பில் எச்ஐவி தொற்று விழிப்புணர்வு குறித்த அனிமேஷன் படம் திரையிடும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. தமிழில் உருவாக்கப் பட்டிருக்கும் இந்த அனிமேஷன் படத்தில் நடிகர்கள் சூர்யா, சித்தார்த், நடிகைகள் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் குரல் கொடுத்திருக்கிறார்கள்.டிசம்பர் 1 ம் தேதி உலக எயிட்ஸ் தினமாக அனுசரிப்பதை முன்னிட்டு இந்த அனிமேஷன் படக்காட்சியை, ‘டீச் எயிட்ஸ்’ அமைப்பு தமிழ்நாடு முழுக்க கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் திரையிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவெடுத்துள்ளது.

    nov 26 - aids promo

    இது குறித்த நிருபர் சந்திப்பில் தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் இணை இயக்குநர் லீலாகிருஷ்ணன் பேசும்போது ‘‘தமிழ்நாட்டில் வரும் 2015 ஆம் ஆண்டுக்குள் எயிட்ஸ் நோயே இல்லாமல் ஜீரோ சதவீதமாகக் கொண்டு வர வேண்டும் என்று எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இதில் புறந்தள்ளுதல், ஒதுக்குதல், புதிதாக தொற்றுதல், இறப்பு இப்படி எதுவுமே இருக்கக்கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறோம். தற்போது தமிழ்நாடு முழுக்க 10,006 கல்லூரிகளில் எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். வரும் மார்ச் மாதத்திற்குள் புதிதாக, 700 கல்லூரிகளிலும், பல பள்ளிகளிலும் நடத்த இருக்கிறோம். எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்டம் தோறும் சிறப்பாக நடத்துவதில் தமிழ்நாடு முன்மாதிரியான மாநிலமாக இருக்கிறது.’’ என்றார்.
     
    அதில் கலந்து கொண்ட நடிகை அனுஷ்கா பின்னர் நிருபர்களிடம் பேசும் போது,”‘‘நான் பெங்களூரில் படிக்கும்போதே அந்த கல்லூரியில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் நடக்கும். அதை நான் கண்டுகொள்வதில்லை. எய்ட்ஸ் நோயாளிகளை தொட்டாலோ, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டாலோ, அந்த நோய் வந்துவிடும் என்று பயந்தேன்.டாக்டர் பியா சர்க்காரின் அறிமுகம் கிடைத்த பிறகு, எய்ட்ஸ் நோய் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டேன். அதனால்தான் இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்கிறேன். சினிமாவில் நடித்துக்கொண்டே இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கும் நேரம் ஒதுக்குகிறேன்.
      
    இதற்கிடையில் பள்ளி பருவத்தில் இருந்தே பாலியல் கல்வியை மாணவர்களுக்கு சொல்லித்தரவேண்டும். பெற்றோர்களும் இதுபற்றி குழந்தைகளிடம் போதிக்கவேண்டும்.அதே சமயம் திருமணத்துக்கு முன்பு ரத்த பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்ற கருத்து சமீபகாலமாக எழுந்துள்ளது. அந்தளவுக்கு நம் நாட்டில் நிலைமை மோசமாகவில்லை. அந்த சூழ்நிலை வருவதற்கு முன்பு எய்ட்ஸ் நோயை ஒழித்துவிடலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.

    ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா..குட்டிக்கதைகள்!

    By: Unknown On: 08:07
  • Share The Gag
  •  

    ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... இது ஜப்பானில் நடந்த உண்மை கதை !
    ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.

    வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது.

    அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 10 வருடம் ஆகி இருக்கும்.எப்படி இந்த பல்லி 10 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்கானித்து கொண்டு இருந்தார்

    சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார்.அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார்.அவருக்கு தூக்கி வாரிப்போடது 10 ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது.

    ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 10 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது.

    திருமணம் முடித்த கையோடு புகுந்த வீட்டில் கைதட்டல் வாங்க......

    By: Unknown On: 07:57
  • Share The Gag
  • திருமண ஷாப்பிங், பியூட்டி பார்லர் என்று குஷியாக இருக்கும் புதுப்பெண்கள், அடுத்த மாதம் முதலே ஒரு குடும்பத்தைக் கட்டி ஆளும் பொறுப்புக்கு பதவி உயர்வு பெற்றுவிடுவார்கள். குறிப்பாக முன்பின் அறிமுகமில்லாத வீட்டின் நிதி நிர்வாகம் அவர்கள் கைக்கு வரும். கணவரின் சம்பளம், இன்ஷூரன்ஸ், லோன், வரி என்று அவற்றை ஆரம்பம் முதலே திறம்பட திட்டமிட்டு, புகுந்த வீட்டில் கைதட்டல் வாங்க இங்கே அணிவகுக்கின்றன அத்தியாவசியமான நிதி ஆலோசனைகள்...

    தனிக்குடித்தன தயாரிப்புகள்!


    திருமணம் முடித்த கையோடு, ஃபர்னிச்சர் முதல் பாத்திரங்கள் வரை வாங்க வேண்டியிருக்கும். தனிக்குடித்தனம் என்றால், இது கட்டாயம். இப்படி வாங்கும்போது, நீண்டகாலத்துக்கு பயன்தரும் வகையில் யோசித்து வாங்குவது நல்லது. வீட்டுக்கு வந்து போகும் பெற்றோர், உறவினர்களுக்கு ஏற்றபடியும், குழந்தைகள் வளரும்வரை அவர்களின் சேட்டைக்குஈடுகொடுக்கும் விதமாகவும் ஒவ்வொரு பொருளையும் வாங்கினால், 'எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்' என்று இடையிடையே காசை விரயமாக்காமல், கொடுக்கும் விலைக்கு ஏற்ற பலனைப் பெறலாம். உதாரணமாக... ஃப்ளாட் டி.வி. வாங்கிய பின், 'எல்.சி.டி வாங்கியிருக்கலாம்' என்று அலைபாய்வது வேண்டாம். பிறக்கப் போகும் குழந்தையையும் மனதில் கொண்டு டபுள் பெட்டுக்கு பதிலாக, முன்கூட்டியே டிரிபிள் பெட் என்பதாக கட்டில் வாங்கிவிடலாம்! 

    குழந்தைக்குப் பின் வேலை..?

    வேலைக்குச் செல்லும் பெண்கள், குழந்தை பிறந்த பின், வேலையைத் தொடர்வது அல்லது விடுவது பற்றி முன்கூட்டியே கணவருடன் கலந்து பேசி முடிவெடுங்கள். சில வருடங்கள் மட்டும் வேலைக்கு பிரேக் விட முடிவெடுக்கும் பெண்கள், குழந்தை வளர்ப்பினூடே தங்களின் தகுதியை உயர்த்திக் கொள்ளவும் அந்தக் காலகட்டத்தைப் பயன்படுத்தலாம். சாஃப்ட்வேர் துறை பெண்கள், வளர்ந்து வரும் துறைகளான மொபைல் ஆப்ஸ், க்ளவுட் அப்ளிகேஷன், பிக் டேட்டா போன்ற ஆன்லைன் கோர்ஸ்களைக் கற்கலாம். அக்கவுன்டன்ஸி துறையிலிருப்பவர்கள் வீட்டில் இருந்தபடியே இன்கம்டாக்ஸ் ஃபைல் பண்ணும் வேலையை தெரிந்தவர்களுக்கு செய்து கொடுத்து, வருமானம் பார்க்கலாம். அரசு வேலை, வங்கி வேலைகளில் விருப்பமுள்ளவர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்திக் கொள்ளலாம்.

    எமர்ஜென்ஸி தொகை!

    வரவு - செலவு, நீண்டகாலத்துக்கான முதலீடு, சேமிப்பு தவிர, எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கையில் எமர்ஜென்ஸி தொகை எப்போதும் இருப்பது நல்லது. குழந்தை பிறந்த பின் செலவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்பதால், இந்தத் தொகையை, குழந்தை பிறப்பதற்கு முன்போ அல்லது குழந்தை பிறந்த ஆரம்ப வருடங்களிலேயே தயார் செய்து வைப்பது புத்திசாலித் தனம்.

    வருமான வரி விவரங்கள்!

    இன்கம்டாக்ஸ் நடைமுறைகள் பற்றி தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் அதன் சாதக, பாதகங்களை புரிந்து கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, குழந்தைகள் பெயரில் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்றால் அதில் வரும் லாபத்தை பெற்றோரின் வருமானத்தில் சேர்த்துக் கணக்குக் காட்ட வேண்டும். என்றாலும், ஒரு குழந்தைக்கு 1,500 ரூபாய் வரை என்கிற விகிதத்தில் வருமான வரிவிலக்குக் கோரலாம். முதலீடு செய்யும்போதே, முதலீட்டு ஆலோசகரை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

    எதிர்கால நிதி திட்டமிடல்!

    இன்றைய சூழலில், எடுத்த எடுப்பிலேயே வாங்கும் செழிப்பான சம்பளத்தில் 30 வயதுக்குள்ளாகவே வீடு, கார் என்று எல்லாம் சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது. எனவே, 'அதுக்குள்ளயா..?' என்று தயங்காமல், அதற்கான முயற்சியை தாமதிக்காமல் முடுக்குங்கள். லேண்ட் லோன், ஹவுஸிங் லோன் பற்றிய விவரங்களை சேகரியுங்கள். காலம் வரும்போது, சட்டென சொந்த வீட்டுக் கனவை நனவாக்குங்கள். அதேசமயம், ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்ஷன் ஏரியாக்களில் பெருகிக் கிடக்கும் ஏமாற்று வேலைகளிலும் கவனமாக இருங்கள். இன்னொரு பக்கம், குழந்தையின் பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு, திருமணம் என பிற் காலத்திய செலவுகளை மேலோட்டமாகவாவது திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

    வீண் செலவுகள் வேண்டாம்!


    ஒரு குட்டி ஜீவன் வந்த பின், குழந்தைகளுக்கென்று மார்க்கெட்டில் குவிந்து கிடக்கும் பொருட்கள் அனைத்தையும் வீட்டுக்குக் கொண்டு வர மனம் பரபரக்கும். பெரும்பாலும்... குழந்தைகளுக்கான பயன்பாட்டைவிட, பெற்றோரின் ஆசைகளைத் தூண்டும் வித மாகவே அவை தொடர்பான விளம்பரங்களும், பொருட்களும் இருக்கும். எனவே, 'குழந்தைக்காக' என்ற மாயையில், காசைக் கரைக் காதீர்கள். எதை வாங்கினாலும், தேவையானதாக இருக்க வேண்டுமே தவிர, அடுத்தவர்களிடம் நம் ஆடம்பரத்தைக் காட்டுவதற்காக இருக்கக் கூடாது.

    மெட்டர்னிடி லீவ் பாலிஸி! 


    வேலைக்குச் செல்லும் பெண்கள், அலுவலகத்தின் மெட்டர்னிடி லீவ் பாலிஸி பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். பேறுகால விடுப்பு எத்தனை மாதங்கள் என்பதை தெளிவுபடுத்திக் கொண்டு, பிரசவத்துக்கு முன், பின் என்று அந்த விடுப்பை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பதைத் திட்டமிடுங்கள். சிலருக்கு கர்ப்பம் தரித்த ஆரம்ப மாதங்களில் உடம்பு அலுவலகச் சூழலுக்கு ஒத்துழைக்காது போகும். அப்போது எடுக்கும் விடுப்பு, பேறுகால விடுப்பில் சேராது. என்றாலும், அது 'லாஸ் ஆஃப் பே' ஆகிவிடாமல், மெடிக்கல் லீவாக மாற்றிக்கொள்ளும் அனுகூலத்தை ஆராயுங்கள். சில அலுவலகங்களில் அப்பாவாகும் ஆண்களுக்கும் மனைவியின் பேறுகாலத்தில் 'பெட்டர்னிடி லீவ்' (Paternity leave) வழங்குவார்கள்... பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    எழுதி வையுங்கள் நிதி விவரங்களை!

    கணவரின் நிதி முதலீடுகள் பற்றி தெரியாத மனைவியாக இருப்பது, இந்த யுகத்திலும் வேண்டாம். சம்பளம், பி.எஃப், பேங்க் அக்கவுன்ட், ஏ.டி.எம் பாஸ்வேர்டு, நகை லாக்கர், இன்ஷூரன்ஸ் பாலிசிகள், லோன், முதலீடுகள், சேமிப்புகள் என்று அனைத்து விவரங்களையும் கணவரிடம் இருந்து கேட்டறியுங்கள். அவற்றை தெளிவாக எழுதியும் வையுங்கள். வாழ்க்கை முழுக்க குழப்பமில்லாத, திணறலில்லாத பொருளாதார நிர்வாகத்துக்கு இது கை கொடுக்கும்.

    அப்புறம் என்ன... 'என் வீட்டு ஃபைனான்ஸ் மினிஸ்டர்!' என்று கணவர் சரண்டர் உங்களிடம்! 

    லைஃப் இன்ஷூரன்ஸ்!


    ஒரு இன்ஷூரன்ஸ் பாலிஸி எடுப்பது அனைவருக்குமே அவசியம். அது, லைஃப் இன்ஷூரன்ஸ் என்பதைவிட, டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பதாக இருப்பது நல்லது. இதை உங்களுடைய இளம்வயதிலேயே, அதாவது நீங்கள் வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கும் நிலையிலேயே எடுப்பது நல்லது. அப்போதுதான் பிரீமியம் தொகை குறைவாக இருக்கும்! உதாரணத்துக்கு, உங்களுக்கு 25 வயது ஆகிறது என்றால், 10 லட்சம் ரூபாய்க்கான டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிஸியின் பிரீமியம், ஆண்டுக்கு சுமார்‌ 2,500 ரூபாய்தான். திருமணத்துக்கு முன்பே எடுக்காவிட்டாலும்... திருமணம் முடிந்த கையோடு கட்டாயம் இதை எடுத்துவிடுங்கள்.

    மெடிக்ளைம் பாலிஸி!

    மெடிக்ளைம் பாலிஸி, இப்போது காலத்தின் கட்டாயம். பல ஆண்டுகளாக சேமித்த பணம் அனைத்தும், எதிர்பாராமல் நிகழும் ஒரு மருத்துவச் செலவில் கரைந்துவிடாமல் தடுக்க, 'மெடிக்ளைம் பாலிஸி' கை கொடுக்கும். கணவன், மனைவி, ஒரு குழந்தை கொண்ட குடும்பத்துக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 6,000 ரூபாய் பிரீமியம் செலுத்தும் வகையிலான பாலிஸி எடுத்தால், 2 லட்சம் வரை 'மெடிக்ளைம்' செய்துகொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் பாலிஸியை புதுப்பிப்பது அவசியம். தங்களுடன் தாய், தந்தையரையும் இந்த பாலிஸியில் இணைத்துக் கொள்வது நல்லது. இதில் ஆணின் அப்பா - அம்மாவை மட்டுமல்லாமல், பெண்ணின் அப்பா - அம்மாவையும் சேர்க்கலாம்.

    அம்மா ஒரு பென் ட்ரைவ்!

    By: Unknown On: 07:49
  • Share The Gag

  •  
     
    சொல்லுங்க... சொல்லுங்க... உங்கம்மாவுக்கு என்ன தெரியும்!

    நான்கு வயதுக் குழந்தை: அம்மாவுக்கு எல்லாம் தெரியும்... அம்மாதான் கடவுள்!
    ...
    எட்டு வயது மடி புள்ள: அம்மாவுக்கு நிறையத் தெரியும்... அம்மாதான் குரு!

    12 வயது கைப்புள்ள: அம்மாவுக்கு ஓரளவுக்குத் தெரியும்... அம்மா ஒரு நபர்!

    16 வயது பருவ புள்ள: அம்மாவுக்கு ஒண்ணும் தெரியாது... அம்மா ஒரு எதிரி!

    20 வயது வாலிபப் புள்ள: அம்மா பழம் பஞ்சாங்கம்... அம்மா ஒரு அசடு!

    24 வயது கல்யாணப் புள்ள: அம்மாவுக்கு கொஞ்சம் தெரியும்... அம்மா ஒரு அட்வைசர்!

    30 வயது குடும்பப்புள்ள: அம்மாகிட்ட கேட்டுச் செய்யலாம்... அம்மா ஒரு ஆதரவு!

    50 வயது ரெண்டுங்கெட்டான்: அம்மா சொல்றதுதான் சரி... அம்மா ஒரு தீர்க்கதரிசி!

    60 வயது பெரிசு! இப்பச் சொல்றதுக்கு அம்மா இல்லாம போய்ட்டாளே!

    அம்மா என்னிக்கும் ஒரு ‘பென் ட்ரைவ்’!

    பெற்றோர்களுக்கு சிறந்த மகனாக இருப்பதற்கான 10 சிறந்த வழிகள்!!!

    By: Unknown On: 07:38
  • Share The Gag
  • 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்' என்பது வள்ளுவர் வாய்மொழி. தன்னுடைய மகன் சிறந்தவனாக இருக்க வேண்டும் என்று எண்ணுவதே ஒவ்வொரு பெற்றோர்களின் கனவாகவும் இருக்கும் என்பது தான் இதன் வெளிப்படையான பொருள். அன்னையின் வயிற்றில் சிறு துளியாக உதித்த பொழுதிலிருந்தே, உங்கள் மேல் அவர்கள் பொழிந்த அளவற்ற அன்பையும், பாசத்தையும் அவர்களுக்கு திரும்ப கொடுக்க வேண்டியது மகனாகப் பிறந்த ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். கருவாக உருவான நாளிலிருந்தே பெற்றோர்கள் உங்களை கவனிக்கத் தொடங்கி விடுகிறார்கள். உங்களுக்காக அவர்களுடைய ஓய்வு நேரங்கள், தூக்கம் மற்றும் சுகங்கள் என பலவற்றையும் அவர்கள் தியாகம் செய்திருப்பார்கள்.

    சிறந்த மகனாக இருப்பதை அவர்களுக்கு செய்யும் கடமையாகவோ, கடனை திரும்ப அடைக்கும் செயலாகவோ கூட நினைக்க யாருக்கும் அருகதை இல்லை என்பது மிகவும் முக்கியமான விஷமாகும். சிறந்த மகனாக இருப்பது வழக்கம் போல் ஒரு வேலையல்ல, அது ஒரு வாழ்வு முறை. இதன் மூலம் உங்களுடைய குழந்தைகளும் சிறந்தவர்களாக இருக்கும் வகையில் நீங்கள் வழி நடத்த முடியும். ஏனெனில், குழந்தைகள் பெற்றோர்களின் பிரதிகள் தான்.

    தன்னலம் பார்க்காமல் அவர்கள் பாசத்தைப் பொழிந்தது போல, நீங்களும் அவர்களிடம் பாசத்தைப் பொழிய வேண்டியது தான் சிறந்த மகனாக இருக்க தொடங்கும் முதல் வழியாகும். உண்மையான அன்பின் மூலம் மரியாதையும், சுயநலமற்ற செயல்களும் வெளிப்படும். பெற்றோர்களுக்கு நீங்கள் தேவைப்படும் நேரத்தில், அவர்கள் அருகில் நீங்கள் இருப்பதை வைத்தே, நீங்கள் அவர்கள் மேல் எவ்வளவு பாசம் வைத்துள்ளீர்கள் என்பதை காட்டி விடும். இதில் நீங்கள் பொருட்களையோ, பணத்தையோ கொடுத்து அடையக் கூடியது எதுவுமில்லை. இவற்றிற்கு பதிலாக அவர்களுக்கு உங்கள் கையால் ஒரு வேளை சாப்பாடு போட பாசத்துடன் அழைத்துச் `செல்வது சிறந்த செயலாக இருக்கும்.

    அன்பு செலுத்துங்கள்

    சிறந்த மகனாக இருக்க, பெற்றோர்கள் மேல் நீங்கள் எவ்வளவு பாசம் வைத்துள்ளீர்கள் என்று காட்டுவதன் மூலம் தெரியப்படுத்த முடியும். சிறந்த மகனாக இருப்பதில் மிகவும் அடிப்படையான விஷயம் இதுதான். இதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டியதில்லை.

    பொறுப்பான மனிதராக இருக்கவும்

    சிறந்த மகனாக இருப்பவர் தன்னையும், தன் குடும்பத்தையும் சரி வர கவனித்துக் கொள்ளும் பொறுப்பான மனிதராக இருப்பார். இதன் மூலம் உங்களால் சொந்தக் கால்களில் நிற்க முடியும் மற்றும் பெற்றோர்கள் இல்லாமலேயே எதையும் சமாளித்து விட முடியும் என்ற நம்பிக்கையை, திருப்தியை பெற்றோர்களுக்கு தர முடியும்.

    மற்றவர்களை மதித்து நடத்தல்


    சிறந்த மகனாக இருக்க உதவும் முக்கியமான செயல்களில் ஒன்றாக மற்றவர்களை மதித்து நடப்பது என்பது உள்ளது. நீங்கள் உங்கள் பெற்றோர்களை மதிப்பது போலவே, ஆசிரியர்கள், சகோதரர்கள் மற்றும் நண்பர்களுக்கும் மரியாதை அளிப்பதன் மூலமாக சிறந்த மகனாக பரிணாமம் எடுக்க முடியும்.

    நன்றாக படியுங்கள்


    இளம் வயதிலிருந்தே நீங்கள் நன்றாக படிக்கத் தொடங்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேறி வர கல்வி மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒழுக்கமுடைய, கற்ற மகனே சிறந்த மகன்.

    நேர்மையாளன்


    உங்களுடைய பெற்றோர்களிடம் நேர்மையாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான விஷயமாகும். நாம் அனைவுரம் தவறு செய்வோம், அதை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்வதும், உண்மையான பெரிய மனிதரைப் போல நடந்து கொள்வதும் தான் பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்கும் சிறந்த மகனின் குணாதிசயம் ஆகும்.

    சகோதரர்களிடம் அன்பும், பாசமும் காட்டுதல்

    உங்களுடைய பெற்றோருக்கு மட்டும் நல்ல பெயர் வாங்கி விட்டால் சிறந்த மகனாக ஆகிவிட முடியாது. சிறந்த மகனாக இருப்பவர் தன்னுடைய சகோதரர்களை மதிக்கவும், அவர்களிடம் அன்பு-பாசத்துடன் நடந்து கொள்ளவும் வேண்டும்.

    பாதை மாறாதே!

    நமக்கு வயது ஏற ஏற நம் வாழ்க்கைப் பாதையில் வழி மாறிச் செல்லும் நிலைகளும் வரும். அதனால் குற்றங்கள் செய்தல், சூதாடுதல் மற்றும் பிற சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவோம். எனவே, சிறந்த மகனாக இருக்க விரும்புபவர்கள் இந்த தவறான பாதைகளில் இருந்து எந்த நிலையிலும் விலகியே இருக்க வேண்டும்.

    போதைக்கு அடிமையாக வேண்டாம்

    நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து அவ்வப்போது மது அருந்துவது தவறான விஷயமாக கருதப்படுவதில்லை ஆனால் அதே போதை மருந்துகளுக்கு நீங்கள் அடிமையானால் உங்கள் பெற்றோர்களை விட யாரும் அதிகம் வருந்தப் போவதில்லை. எனவே, நம்மை அடிமையாக்கி விடும் போதைப் பொருட்களிடமிருந்து நாம் விலகி இருந்தால் கூட சிறந்த மகன் என்ற அருகதையை பெற முடியும்.

    நான் இருக்கிறேன்

    எந்தவொரு தேவையும் இல்லாமல் நீங்கள் தங்களருகில் இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புவதில்லை. எனவே, அவர்களுக்கு உண்மையிலேயே தேவையான நேரத்தில் நீங்கள் அவர்களுக்கு அருகில் இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில், நான் இருக்கிறேன் என்று அவர்களுக்கு நீங்கள் அருகில் இருந்து சொல்வதன் அர்த்தத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

    சிறந்த மனிதராக இருங்கள்


    கடைசியாக, சிறந்த மகனாக இருக்க வேண்டுமெனில் நீங்கள் சிறந்த மனிதராகவும் இருக்க வேண்டும். குழந்தைகள் தங்களுடையே பெற்றோர்களையே எந்த விஷயங்களிலும் பிரதிபலிப்பார்கள். எனவே, உங்களுடைய பெற்றோர்களை நீங்கள் மகிழ்விக்க வேண்டுமெனில், அவர்களின் பிரதிபலிப்பான நல்ல மனிதராக இருக்க வேண்டும். உங்கள் நண்பர்களிடமிருந்து உங்களைப் பற்றி சொல்லப்படும் ஒரு சில நல்ல வார்த்தைகள் கூட அவர்களுக்கு கோடி ரூபாய்க்கும் ஈடாகாத மகிழ்ச்சியைக் கொடுத்து விடும்.

    எப்படி? எப்படி? எப்படி?

    By: Unknown On: 02:56
  • Share The Gag
  • அறிவது எப்படி; புரிவது எப்படி; உணர்வது எப்படி; தெளிவது எப்படி; பார்ப்பது எப்படி; கேட்பது எப்படி; கவனிப்பது எப்படி; தேர்ந்தெடுப்பது எப்படி இருப்பது “இலக்கைக் குறிப்பது எப்படி?” – என்று!

    “வாழ்க்கை” – என்கிற பயணத்தில் நாம் அடைய வேண்டிய இடம் எது? அதனைக் குறித்த பிறகு – அதனை அடைவதற்கான வழித்தடம் எது? அந்த வழியில் நாம் கடக்க வேண்டிய மைல் கற்கள் எவை? என்பதைத் தெள்ளத் தெளிவாகக் கண்டுபிடித்து – அமைத்துக் கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

    இலக்கைக் குறிப்பதன் அவசியமென்ன என்கிறீர்களா? “இதுதான் நான் அடைய விரும்பும் இடம்” என்று குறித்தால்தான் நமது கவனம் அந்த இடத்தை நோக்கிக் குவியத் தொடங்கும். மனிதனுக்கு மிகச் சிரமமான காரியம் எது தெரியுமா? மனதை ஒன்றின் மீது குவிப்பது தான். அது மட்டும் சாத்தியமாகிவிட்டால் மனிதனால் இயலாதது என்பதே இருக்காது.

    மனித இனத்தின் மிகப்பெரிய துயரம் என்னவெனில் மனிதர்களின் கவனச் சிதறல் தான். மனம் சிதறிக்கிடக்கும் போது அது கவலையாய் பரிமாற்றம் ஆகிவிடுகிறது. எண்ணம் அலையும்போது மனம் அமைதியாய் இருக்காது. மனம் அமைதியாய் இல்லாதபோது நாமெடுக்கும் முடிவுகள் சரியானவையாய் இருக்க முடியாது. முடிவுகள் சரியில்லாதபோது நாம் புரியும் செயல்கள் தீர்மானமானதாக இருக்காது. தீர்மானமில்லாத செயல் எதுவும் விரும்பத் தகுந்த பயனை தராமல் போய்விடுமல்லவா?

    எனவே “நாம் மனம் குவிப்பது” அவசியம் என்று புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். அவ்வாறு நம் மனதைக் குவிக்கத்தான் “இலக்கு” என்னும் ஒன்று தேவைப்படுகிறது.

    சரி… நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு இலக்குகள் இருக்கக்கூடும். அவற்றை எப்படித் தீர்மானிப்பது என்பதில் உள்ள நுட்பங்களை இங்கே காண்போம்.

    உற்று நோக்கினால் நாம் ஒவ்வொருவரின் இலக்குமே “மகிழ்ச்சி”யாகத்தான் இருக்க முடியும். ஆனால் அதிசயம் என்ன தெரியுமா? ஒவ்வொரு தனிமனிதனும் அந்த மகிழ்ச்சியை அடைவதற்கு வெவ்வேறு பாதைகளைத் தேர்ந்தெடுக்கிறான்.

    ஒருவருக்கு மகிழ்ச்சியைத் தரும் பாதை – வேறொருவருக்குப் பொருந்துவது இல்லை. ஒருவருக்கு விவசாயம் மகிழ்ச்சியைத் தரலாம்; வேறொருவருக்கு இசைப்பது மகிழ்ச்சியைத் தரலாம். இன்னொருவருக்கு விமானம் ஓட்டுதல் மகிழ்ச்சியைத் தரலாம்; ஒருவருக்கு ஆராய்ச்சி செய்வதும்; வேறொருவருக்கு காவல்பணியும், இன்னொருவருக்கு மாவட்ட ஆட்சியராய் இருப்பதுவும் மருத்துவராகவும், வழக்கறிஞராகவும் ஹோட்டல் நிர்வாகம் புரிவதும் என இப்படி இன்றைய நூற்றாண்டில் எண்ணற்ற கலைகள்; எண்ணற்ற துறைகள், எண்ணற்ற திறமைகள் – எனப் பல்வேறு வழிகளில் பயணம் செய்து தாம் விரும்பும் மகிழ்ச்சியை அல்லது குதூகலத்தை பரிசாகப் பெறலாம்; பெறமுடியும். இப்படிப் பரந்து விரிந்து கிடக்கின்ற – இன்றைய நவீன தொழில் யுகத்தில் தனக்கான ஒரு இலக்கைத் துல்லியமாகக் குறித்துக் கொள்தல் அவசியம் என்கிற அதே நேரத்தில் அது எவ்வளவு கடினமானது என்பதும் – இன்று நாம் அன்றாடம் உணர்ந்து கொண்டிருக்கும் ஒன்றுதான்.

    ஆகவேத்தான் இலக்கைக் குறிப்பதற்கான வழிமுறையைத் தெளிவாக அறிந்து கொள்வது மேலும் அவசியமாகிறது.

    இலக்கைக் குறிக்க விரும்பும் யாரும் – தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகளை இப்போது காண்போம்.


    1. நம் ஒவ்வொருவரின் “தன்முனைப்பையும்” (Self Esteem) அதிகரித்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் “தன்னார்வம்” மிக்க மனிதராக மாறுவோம். தன்னார்வமின்றி நம்மால் எதையும் சாதிக்க இயலாது. சாதிக்க வேண்டுமெனில் எதைச் சாதிப்பது என்பதைக் குறிக்க வேண்டுமல்லவா?

    2. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்து கிடக்கும் “தனித்திறமையை” – உள்ள பூர்வமாக உணர்ந்து தெளிய வேண்டும். இது ஆளுக்கு ஆள் வேறுபடும். இந்த வேறுபாடுதான் ஒருவரிடமிருந்து – இன்னொருவரை உயர்த்தியோ தாழ்த்தியோ காட்டுகிறது. தனித்திறமையை உணராதவரால் இன்றைய பந்தயத்தில் பங்கேற்று வெற்றிபெற இயலாமல் போய்விடும்.

    3. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய “இப்போதைய தேவை எது?” என்றும், “நாளைய தேவை எது?” என்றும் உணர்ந்து – அவற்றை முன்னுரிமை (priority) அடிப்படையில் வரிசைப் படுத்திக்கொள்ள பழக வேண்டும். இது மிக முக்கியமான பயிற்சி. பழகப் பழகத்தான் நமது தேவை எது எனத் தெளிவு பெறும் பக்குவம் வாய்க்கப் பெறுவோம்.

    மீண்டும் ஒரு முறை மேற்கண்ட மூன்று குறிப்புகளிலும் உங்கள் கவனத்தை ஓட விடுங்கள். இப்போது புரிகிறதா? – தன் முனைப்பு போதுமானதாக இருப்பவன்தான் முன்னேறும் எண்ணம் கொள்வான். அப்படிப்பட்டவன் பயனுள்ள பயிற்சிகளில் ஈடுபட்டு அவற்றின் மூலம் தன் முயற்சி செய்வான். உண்மைதான். ஆனால் அவனால் எப்போடு ஈடுபாட்டுடன் பணிபுரிய முடியும் தெரியுமா? – அவன் மேற்கொள்ளும் பணியில் – அவனது தனித்திறமையை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்கும்போது தான்! அப்போதுதான். அவன் அர்ப்பணிப்பு மிக்கவனாக திகழ்வான்.

    பிறகென்ன – அர்ப்பணிப்பு மனோபாவம் கொண்ட எவனும் மகத்தான வெற்றிப் பெறுவான் என்பது தானே காலங்களை வென்று இருக்கும் வரலாறு, நமக்கு வழங்கும் பாடங்களாகும். நடைமுறை உண்மைகளும் இதையே நிரூபிக்கின்றன.

    எனவே மேற்கண்ட “தன் முனைப்பு” “தனித்திறமை”, “தன் தேவை” – என மூன்றையும் சரியான முறையில் கைவரப் பெற்றுவிட்டால், தெள்ளத் தெளிவான துல்லியமான இலக்குகளைக் குறித்துக் கொள்ளுதல் எளிதாகிவிடும்.

    முன்னேற மூன்றே சொற்கள், மூன்றே பண்புகள் ஆகிய தீர்மானமான முடிவு, இடைவிடாத பெருமுயற்சி, கடின உழைப்பு எனும் இவை எப்படி ஒரு சாதனையாளருக்கு முதன்மையாகத் தேவையோ அப்படித் தேவையில்லாத, விட்டுவிட வேண்டிய, எதிர் மறையான மூன்று பண்புகளும் உள்ளன. அந்த மூன்று பண்புகளை, மூன்று தடைகளை நீக்கிவிட்டால் நம் முன்னேற்றம் உறுதியாகிவிடுகிறது, விளைவு படுத்தப்படுகின்றது. முடிவு நல்லதாக அமைகின்றது.

    இவை நம்மிடையே உள்ளவை
    இந்த மூன்று பண்புகளும் நம்மிடையே உள்ளவைதாம். முன்னர் சொன்ன மூன்று பண்புகளையும் முடிவு, முயற்சி, உழைப்பு ஆகிய மூன்றையும் நாம் வருந்தி வருத்திப்பெறவேண்டும். ஆனால் நம் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கின்ற இந்த மூன்று பண்புகளையும் நாம் நாம் நம்மிடமிருந்து விட்டுவிட்டால் போதும், நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கின்ற இந்தப் பண்புகளை உதறி எறிந்துவிட்டால் போதும். நாம் வெற்றி கண்டுவிடலாம்.

    நாவடக்கம் என்பார்களே

    நாவடக்கம் என்று கேள்விப்பட்டிருப்போம். நாவை அடக்குதல் என்பது பிறர் மனம்புண்படும்படி பேசாதிருத்தல்; வேண்டாத விவாதிதங்களில் ஈடுபடாதிருத்தல், வீணான கேளிக்கைப் பேச்சில் ஈடுபடாதிருத்த் ஆகிய மூன்றையும் விட்டு விடுவது தான். அப்படிப் பேச நேரும்போது நாவை அடக்கிவிடுவதுதான் நாவடக்கம் என்பது.

    துன்பங்களுக்கு அடிப்படை


    நம் முன்னோர்கள் நாவடக்கம் என்று சொன்னதை, இன்றைய அறிவியல் அறிஞர்கள், மூன்றாகப் பகுத்து மக்கள் மனங்கொள்ளும் வகையில், சமுதாயத்தில் உள்ள நடைமுறைக்கு ஏற்ற வகையில் எடுத்துரைத்துள்ளார்கள். நுணுகி நுணுகி ஆராய்ந்த பார்த்தால் நமக்கு ஏன் பலருக்கும் வருகின்ற துன்பங்களின் பெரும் பகுதி இவற்றின் வழியாகத்தான் வருகின்றன. என்பதை அறிந்துகொள்ளலாம் தவளை தன் வாயினால் கெட்டுவிடுகிறது என்று கிராமங்களில் பழமொழியாகச் சொல்வார்கள். தவளை மனிதர்கள் ஒரு காலும் மனிதர்கள் ஒரு காலும் முன்னேற முடியாது.

    பிறர் பற்றிக் கருத்துரை வழங்குதல்


    ஒவ்வொருவரைப் பற்றியும் ஒவ்வொருவருக்கும் ஒரு கணிப்பு. அவரது நடை முறைகள் பற்றிய ஒரு முடிவு இருக்கவே செய்கின்றது, ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருக்கிறார்கள். அல்லது ஒரு அலுவலகத்தில் 40 பேர் வேலை செய்கிறார்கள் என்றால் ஒவ்வொருவருக்கும் தன்னைத்தவிர மற்ற 36 பேரைப் பற்றிய கருத்தை, முடிவை வைத்தே இருக்கிறார்கள். நல்ல, பாராட்டக் கூடிய முடிவாக, கருத்தாக இருக்குமானால், அதுவும் தேவை நேர்ந்தால் மட்டுமே சொல்லலாம். இல்லாவிட்டால் சொல்லாமல் இருந்து விடுவதே நல்லது. தேவை இல்லாத இடத்தில், பேசாமல் இருப்பதே அறிவுடமை. மாறாக குறையான கருத்துக்களைத் தெரிவிக்க நேர்ந்து விடுவதால் அது உண்மையாக இருந்தாலும் கூட அவர் நமக்கு பகைவர் ஆகி விடுகிறார். ஒவ்வொருவரைப் பற்றிய குறைகளை வெளிப்படுத்துவோமானால் 39 பேரும் நமக்கு பகைவர்கள் ஆவதைத் தவிர வேறு வழியில்லை. நம்மைச் சுற்றிலும் பகைமைதான் மிஞ்சும்.

    பல அரசியல் வீழ்ச்சிக்குக் காரணமே இப்படிக் கருத்துத் தெரிவிப்பதுதான். இவர் குறையில்லாதவராக இருந்து கருத்துத் தெரிவித்தால்கூட உலகம் ஏற்றுக்கொள்ளும். ஆனால் ஆயிரம் குறைகளை வைத்துக்கொண்டு மற்றவர்களைப் பற்றிக் கருத்துத் தெரிவித்தால் யார் ஏற்றுக் கொள்வார்கள்? அதேபோல் தொழில் செய்யும் இடங்களில், குடும்பத்தில், உறவினர்களிடையில், ஏன் நாம் பழுகின்ற, பணி புரிகின்ற அனைத்து இடங்களிலும் நாம் இவ்விதம் கருத்துத் தெரிவிப்பதால் துன்பத்தை நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம். விலைக்கு வாங்கிக் கொள்கிறோம்.

    ஒரு மாதம் சோதனை முயற்சியாக யாரைப்பற்றியும் கருத்துத் தெரிவிப்பதில்லை என்ற முடிவோடு நடந்து பாருங்கள். துன்பங்கள் குறையும். பிறகு துன்பங்கள் இல்லாமலேயே போகும். யாராவது வற்புறுத்திக்கேட்டால் கூட மன்னிக்கவும் என்று பதில் சொல்லிவிடுங்கள். (No Comments) என்று முடிவு செய்து கொண்டே உங்கள் அன்றாடச் செயலைத் தொடங்குங்கள். ஏதேனும் கருத்துத் தெரிவிக்கும் அவசியம் நேர்ந்தால் பிறர் மனம் புண்படாத வகையில் சொல்லுங்கள்.

    வீண் விவாதங்களில் ஈடுபடுதல் (Arguments)

    கருத்துத் தெரிவித்தல் வேறு, விவாதித்தல் வேறு. தான் எடுத்துக் கொண்ட கொள்கை சரியா? தவறா? என்றே கருதாமல் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்பது போலப் பேசுகின்றவர்கள் உலகம் அறவே வெறுத்து ஒதுக்கி விடுகின்றது. அத்தகையவர்களைக் கண்டால் உலகம் ஒதுங்கிக் கொள்கிறது. அவர்களுக்கு எவ்வித பங்களிப்பையும் கொடுக்க நல்லவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். நாளடைவில் இத்தகைய “விவாதிகள்” (augumenters) இருந்தும் கூட வாழ்வில் எந்தத் துறையிலும் முன்னேற முடியாமல் தடைப்பட்டுப் போய்விடுகிறார்கள்.

    வீண் அரட்டை (Gossip)

    அதேபோல் எப்பொழுதும் பேசிப்பேசியே பொழுதைக் கழிப்பவர்கள் இருக்கிறார்கள். மணிக்கணக்காகப் பேசுவார்கள். கூட்டம் போட்டு பேசுவார்கள். ஒரு பயனும் இருக்காது. இத்தகையவர்கள் தங்கள் முன்னேற்றத்திற்குத் தாங்களே தடைவிதித்துக் கொள்கிறார்கள். இந்த வீண் அரட்டைகளால் கருத்து வேறுபாடுகள் தோன்றி, விவாதங்களில் ஈடுபட்டு ஒருவரைப் பற்றி ஒருவர் கருத்துக்கள் தெரிவித்து, வெளிப்படையாகச் சொல்லவோமானால் திட்டித் தீர்த்து சுற்றிலும் பகையை வளர்த்துக் கொள்வார்கள்.

    ஒன்றுக்கொன்று தொடர்புடைய இந்த மூன்று தன்மைகளும் உள்ளவர்கள் தங்கள் வளர்ச்சிக்குத் தங்களே தடைவிதித்துக் கொள்கிறார்கள். நீங்களே எண்ணிப்பாருங்கள். இந்த மூன்று குணங்களும் எந்த அளவு இருக்கிறது என்று கணியுங்கள். இதற்கு ஒரே வழி கூடுமானவரை வாய் திறவாதிருத்தல்தான்; இதனால் நன்மைகள் அதிகம். பிறர் உதவியின்றி நீங்களே செய்யக்கூடிய இந்தக் காரியத்தை நீங்கள் ஏன் செய்யக்கூடாது தினம் எழுந்திருக்கும்போதே ஒரு முறை நினைவு கூறுங்கள் (No Comments, No argumensts, No gossip) இதுவும் ஒரு வகையில் இறைவழிபாடுதான்.

    உங்களை காதுகளை கொடுங்கள்


    மாறாக பிறர் சொல்லுகின்ற நல்ல கருத்துக்களைக் காது கொடுத்துக் கேளுங்கள். அனுபவமும் அறிவும், பண்பும் நிறைந்த மனிதர்கள் சொல்லுகின்ற கருத்துக்கள் நம்மைச் சிந்திக்கச் செய்யும். தீமைகளிலிருந்து விலகச்செய்யும். நன்மைகளை நாடி நடக்கச் செய்யும், அதனால்தான் அறிஞர்கள் நல்லவர்களின் அறிவுரையைக் கேளுங்கள் என்று கூறியுள்ளார்கள். நாம் நம் காதுகளைக் கொடுப்போம்.

    எலுமிச்சை -பெயர் காரணம்!

    By: Unknown On: 02:44
  • Share The Gag
  •  
    எலுமிச்சை இதை


     தேவக்கனி, 


    இராசக்கனி 


    என்றும் கூறுவார்கள்.


    எல்லா பழங்களையும் எலி கடித்து விடும். 



    ஆனால் 


    எலுமிச்சையை மட்டும் எலி 


    தொடவே தொடாது. 



    எலி மிச்சம் வைத்ததாதல்தான், 


    இந்தப் பழத்திற்கு எலிமிச்சை 


    என்பது மருவி,



    என்ற பெயர் வந்ததெனக் கூறுவர்.

    மாணவர்களும் மன ஆற்றலும்!

    By: Unknown On: 02:18
  • Share The Gag
  • இயற்கை சமுதாயம், மனம் என்ற முக்கோணத்துக்குள் வாழ்ந்து வரும் மனித வாழ்வில் மகிழ்ச்சியான பருவம் மாணவப் பருவம்.

    பொதுவாகவே குழந்தைகள் மனதில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களால் எதிர்மறை எண்ணங்கள் (Negative Thoughts) சிறுவயது முதலே ஆழ்மனதில் பதிந்து விடுகின்றன. அதனால், பள்ளி இறுதி மற்றும் கல்லூரி செல்லும் பருவத்தில் இலக்குகளை நிர்ணயிக்க, அவற்றை அடைய மிகவும் சிரமப்படுகின்றனர்.

    ‘Critical Mass Theory’ யின்படி கைதவறி ஓடை நீரில் விழுந்த கிழங்கை, எடுத்துத் தின்ற குரங்கு பெற்ற சுவை மண்ணில்லாமல் இருந்ததால், மகிழ்ச்சி தர, அந்த எண்ணம் பல நூறு மைல்களுக்கு அப்பால் வசித்த குரங்கு கட்கும் உள்ளுணர்வாய் சென்றடைந்ததை நாம் அறிவோம். அதுபோல் பெரும்பாலும் பெற்றோர் விருப்பப்படி எதிர்கால படிப்பைத் தேர்வு செய்கிறோம்.

    விரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்தை விரும்பு என்பதற்கேற்ப, தேர்வு செய்த பாடத்திட்டத்தில் ஆர்வம் கொண்டு, திட்டமிட்டு, முழுமன ஈடுபாட்டுடன் செயல்பட்டால் வெற்றி கனிகள் நம் கரங்களில் தவழுவதை எவராலும் தடுக்க முடியாது. அதற்கு சில குறிப்புகள்:

    மனம் ஒரு மகத்தான சக்தி மிக்கது.

    எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியத்
    திண்ணிய ராகப் பெறின்


    என்றார் வள்ளுவர்.

    ‘நல்ல எண்ணங்களே நல்ல விளைவுகளைத் தரும். நமது எண்ணங்களே நம் வாழ்க்கையை நடத்துகின்றன. உன்னை நம்பு என்றார் எமர்சன் என்ற அறிஞர்.

    உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் நீ வாழலாம் என்றொரு பாடல் உள்ளது.

    தன்னையறிந்தின்ப முற வெந்நிலாவே
    ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெந்நிலவா

    என்றார் வள்ளலார்.

    ஆகவே, அடிப்படையில் எவர் ஒருவர் நெப்போலியனைப் போல் தன்னைப் பற்றி முழுமையாக அறிந்து வைத்துள்ளாரோ அவரால் இலக்கினை சுலபமாக அடைய முடியும்.

    Arise, Awake And Stop not till the goal is reached

    என்ற விவேகானந்தர் குரலை என்றும் நினைவில் கொண்டால், தொய்வின்றி இலக்கை விரைவில் அடைய முடியும்.

    நேரம் உயிரை விட மேலானது ஏனெனில் உயிருக்கு அழிவில்லை. உடலை விட்டு சென்று விடுகிறது.

    ஆனால், சென்றநேரம் திரும்பக் கிடைக்காது. நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்துபவர்கட்கு வானத்தையே கையகப் படுத்தும் திறமை வந்து விடும்.

    முழுமன ஈடுபாடு மிகவும் அவசியம். ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது கவனம் சிதறாமல் கவனித்து மனதில் பதிய வைத்தல் மிகவும் பயனுடையது.

    அந்தப் பதிவுகளை 24 மணி நேரம் / ஒரு வாரம் / ஒரு மாதம் / மூன்று மாதம் / ஒரு வருடம் என ஐந்து முறை நினைவுக்குக்கொண்டு வந்தால் என்றும் மறவாமல் ஆழ்மனதில் இருக்கும். தேவைப்படும் போது வெளிமனதுக்கு கொண்டு வந்து விடலாம்.

    நம் மூளை வினாடிக்கு 14 முதல் 40 முறை சுழலுகிறது. இதை EEG என்ற கருவி மூலம் கண்டு பிடிக்கலாம். நமது மூளை / மன அலைச்சுழல் எந்த வேகத்தில் இருக்கும் போது பதிகிறதோ அதே அலை இயக்கம் வரும்போது தான் திரும்ப நினைவுக்குக் கொண்டு வர முடியும். அமைதியான மன நிலையில் பதிவானவைகள் பதட்டப்படும்போது நினைவுக்கு வராது. எனவே 14க்கும் கீழ் மன அலைச்சுழல் வேகத்தைக் கொண்டு வந்துவிட்டால் மனம் நம் வயப்படும்.

    அதற்கு எளிய பயிற்சி

    உடல் தளர்வுறும் போது
    மனம் தளர்வுறுகிறது
    மனம் தளர்வுறும் போது
    மூளையின் அலைச்சுழல் வேகம் குறைகிறது
    மூளையின் அலைச்சுழல் வேகம் குறையும் போது
    வலது மூளை வேலை செய்கிறது
    அப்போது இறைநிலையுடன்
    பிரபஞ்சத்துடன் தொடர்பு ஏற்படுகிறது.

    அந்நிலையில் நாம் எண்ணும் எண்ணங்களை பேசும் பேச்சுக்கள், செய்யும் செயல்கள் முழுமையான பலன்களைத் தருகிறது.

    உடல் தளர்வுப் பயிற்சி

    தளர்வாக அமர்ந்து கொண்டு, கைகளைக் கோர்த்து, கண்களை மூடி லேசாக மூச்சு விடவும். நெற்றி தசைகள், குழப்பம், மன இறுக்கத்தின் இருப்பிடம்; கன்னங்கள், தோள்பட்டைகள், உணர்ச்சிகளின் இருப்பிடம்; தாடைகள், புஜங்கள், கோபத்தின் இருப்பிடம்; பின் கழுத்து கவலை வருத்தங்களின் இருப்பிடம்.

    இந்த உறுப்புக்களைத் தளர்வுறச் செய்தால் தொடர்புடைய உணர்வுகளும் நீங்குகிறது. கீழ்க்கண்டவாறு வரிசைப்படி தளர்வுறச் செய்யும்.

    நெற்றி தசை, கண்கள், கன்னம், நாக்கு, தாடை, கழுத்து, பின்கழுத்து, தோள் பட்டைகள், புஜங்கள், கைகள், விரல்கள் மார்புப் பகுதி, வயிற்றுப் பகுதி, இடுப்புப் பகுதி, தொடை, முழங்கால், பாதம்.

    தளர்வுற்றபின், தேவையான இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், உயிரோட்டம் சீராகப் பாய்ந்து நிரம்புவதாய் பாவித்து, பின் படிப்பதில் ஈடுபட்டால் பாடம் கவனித்தால் முழுப் பலன் கிடைக்கிறது. தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறமுடியும்.

    நாகரீக கோமாளிகள்!

    By: Unknown On: 02:08
  • Share The Gag
  •  

    ஐம்பதாயிரம் சம்பளம் என்பதால்
    அம்மாவை மாற்ற தேவையில்லை
    ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் எல்லாம்
    ஆகாயத்தில் இருந்து வந்தவரில்லை.

    காலை வணக்கம் வார்த்தை எல்லாம்
    கடல் கடந்து சென்றது
    Good Morning என்ற வார்த்தையில் தான்
    பல குடும்பம் விழிக்குது .

    அந்நிய உணவில் தனி ருசிதான்
    அதில் ஒன்றும் தவறில்லை
    ஆயின் வறண்ட ரொட்டியை
    திண்ணக் கூட வறட்டு கவுரவம் என்ன?

    பத்து வரியை படிக்க சொன்னால்
    பல்லை இளித்து காட்டுவார்
    ஆயினும் ஆங்கில நாளிதழ் வாங்கி
    வைத்து அறிவாளி வேடம் போடுவார்.

    முறுக்கும் சீடையும் கையில் தந்தால்
    அலட்சியம் செய்து போவார்.
    ஒரு Kurkure'வை வாங்கி கொண்டு
    கோமான் போல திரிவார்..

    நாகரீக பெண்கள் நடக்கும் விதத்தில்
    அலப்பறை அதிகமாய் மின்னும்
    நாலு வரி பேச தெரிந்துவிட்டால்
    மனதில் சேக்சுபியர் என்று எண்ணம்.

    பாரதி கவிதை பைந்தமிழ் நூலை
    புரியாதவர் போல படிப்பார்..
    Harry Potterஐ வாங்கி வைத்து
    மேதாவி போல நடிப்பார்..

    நண்பா தோழா என்பதை
    பழமை சாயம் பூசுவார்
    Bro Dude என்பதை எல்லாம்
    புரியாமலே பேசுவார்

    அன்பெனும் அம்மா
    Mummy ஆனது
    அழகிய தமிழ்மொழி
    Dummyஆனது
    ஆங்கிலம் என்பது
    பெருமையானது.

    நீங்கள் அலட்டிக்கொள்வது
    மடமையானது.
    அரசியலில் தான் விடுதலை பெற்றோம்

    நம் அடிமை தனம் இன்னும் போகவில்லை
    வளர்ச்சிக்கு தான் ஆங்கிலம்
    அதை கவர்ச்சியாய் காட்டத் தேவையில்லை.

    பெருமைக்கு பேசுவதை
    குறைத்து கொள்ளுங்கள்
    நம் பெருமை எல்லாம்
    தமிழ்தான் உரைத்து சொல்லுங்கள்.

    பிறந்தநாள் விழா - தோன்றியது எப்படி?

    By: Unknown On: 01:55
  • Share The Gag
  • பிறந்தநாள் அப்படீனு காதுல விழுந்தாலே அது சீமைல
    இருந்து வந்த வழக்கம். மேற்கத்திய நாடுகள்ள அவங்க
    கொண்டாட நாம அதை பழக்கத்துல எடுத்துக்கிட்டோம்
    அப்படீனு எல்லாம் நினைப்போம். எங்க பாட்டி
    சொன்னாங்க, 'அது அப்படி இல்லடா பேராண்டினு'.
    கிழவி ரொம்ப விவரமாவே சொல்லுச்சு. சரி, விசயத்த
    மேல பாப்போம்.

    அதாவது வந்துங்க, இந்த தீய சக்திகள் காத்து கருப்பு,
    இதுக்கெல்லாம் குழந்தை பிறப்பு, குழந்தைக பிறந்த நாள்
    இப்படி ஒரு சில விசயங்கள சுத்தமா பிடிக்காதாம். அந்த
    மாதிரி நேரங்கள்ல சம்பந்தபட்டவங்கள எப்படியாவது
    தொந்தரவு பண்ணனும், தீத்து கட்டனும்னு வெறியா
    அலையுமாம். நீங்களும் பாத்து இருப்பீங்க, கேள்விப்பட்டு
    இருப்பீங்க,"வெடிஞ்சா பொறந்த நாள், இப்படி ஆயிப்
    போச்சு,பிறந்த நாள் அன்னைக்கு இப்படி கைய
    ஒடச்சிட்டு வந்து நிக்கறானே, பிறந்த நாள் கொண்டாடிட்டு
    வண்டியில அவங்க அம்முச்சி(பாட்டி)ய பாக்க போனாங்க,
    இப்படி ஆயிருச்சு"னு சர்வ சாதாரணமா ஊர்ல சனங்க
    புலம்பறத கேட்டு இருப்பீங்க.

    அதனால அந்த காலத்துல எல்லாம், குழந்தை பிறப்புன்னா
    பதினஞ்சு நாளைக்கு முன்னாடியே சொந்த பந்தம்,
    ஊர்க்காரங்கன்னு ஒரு பெரிய கூட்டமே வீட்டுக்கு
    வந்துருவாங்களாம். ஏழு வயசுக்கு உட்பட்ட குழந்தைக
    பிறந்த நாள் வருதுன்னு சொன்னா,மூணு நாள் முன்னமே
    நெறய பட்சணம், பலகாரம்,சிறுதீன்,விளயாட்டு
    சாமான்னு நெறய கொண்டு வந்து வீட்டிலயே
    உக்காந்துக்குவாங்களாம்.

    கூட்டம் கூடினா கூத்து கும்மியடி கும்மாளம்,
    கொண்டாட்டந்தானே! இந்த கூத்து கும்மாளம், குலுவை,
    பாட்டு சத்தம் இதுகளக் கண்டா தீய சக்திகளுக்கு
    பயம் வந்து, கிட்டயே வராதாம். பிறந்த நாள் அன்னைக்கு
    குழந்தய குளிக்க வச்சி, புதுத்துணியெல்லாம் போட்டதுக்கு
    அப்புறம் இறைவணக்கம் சொல்லி, பாட்டு பசனை எல்லாம்
    பாடி, சாமி கும்புடுவாங்க. அதுக்கப்புறம் எல்லாரும்
    வாழ்ததுவாங்க, நலங்கு வெச்சி ஆசி வழங்குவாங்க. திருநீறு
    பூசி நலங்கு வெப்பாங்க. பூத்தூவி நலங்கு வெப்பாங்க.இப்படி
    பல விதமா குழந்த நல்லா இருக்கணும்னு வேண்டிக்குவாங்க.
    அப்புறம் பரிசுத் தொட்டில்ல விழுந்த, பரிசுகள வெச்சி
    விளயாட்டு காமிச்சி குழந்தய உற்சாகமா வெச்சு இருப்பாங்க.
    எந்த ஆத்மா மகிழ்வா மன சஞ்சலம் இல்லாம இருக்கோ,
    அந்த ஆத்மாவ கெட்ட சக்திகள் ஒண்ணும் பண்ணாதுங்றதும்
    ஒரு ஐதீகம்.

    ஆக, இப்படி நம்ம ஊர்ல பழங்காலத்துல தோணின ஒரு
    சம்பிரதாயந்தான் இந்த பிறந்த நாள் விழா. இதுல இருந்து
    நாம தெரிஞ்சுக்கறது என்னன்னா,யாருக்கு பிறந்த நாள்
    விழான்னு தெரிஞ்சாலும் மனசார வாழ்த்துங்க.
    கூப்பிடறாங்களோ இல்லயோ நீங்க மனசார வாழ்த்துங்க.
    வாழ்த்துறதுல உங்களுக்கும் மகிழ்ச்சி, அவங்களுக்கும்
    மகிழ்ச்சி இல்லீங்களா?

    (பிறந்த நாள் அன்னைக்கு தண்ணி ஏத்தி கும்மாளம் போட்ட
    இளசுகளப் பாத்த கெழவி இன்னொரு கெழவிகிட்ட சொல்லுது,
    "என்னடி ரங்கநாயகி, இவனுக எங்கயோ இருக்குற காத்து கருப்ப,
    வீட்டுக்கு விருந்து வெச்சு அழைக்கிற மாதிரி இல்லே இருக்கு
    இவனுக கூத்து..")