Sunday, 3 August 2014

40 வயதில் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..?

By: Unknown On: 20:44
  • Share The Gag
  • 40 வயதுக்குப் பிறகு சருமத்தில் உண்டாகிற பிரச்சனைகளை சரி செய்து, பழைய தோற்றத்துக்குத் திரும்பச் செய்வது சற்றே சிரமமானதுதான்.  அதனால்தான், 40 பிளஸ்ஸில் இருப்பவர்கள் எடை குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும்போது, அவர்களது முகத்தசைகள் தொய்வடைந்து,  முதுமைத்தோற்றம் தெரிகிறது.

    எலாஸ்டின், கொலாஜன் சுரப்பு இல்லாததால், சருமம் உறுதி இழந்து, தொய்வடைகிறது. சுருக்கங்களும் கோடுகளும்  இன்னும் சற்று ஆழமாகத் தெரியும். 50 வயதில் சருமச் சுருக்கங்களும் கோடுகளும் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கும்.

    மெனோபாஸ் காலகட்டம் என்பதால், பெண்களின் உடலில்  நிகழும் ஹார்மோன் மாற்றங்களும் சரும அழகைப் பெரிதாகப் பாதிக்கும். இவை எல்லாம் அந்தந்த வயதுக்குரிய இயற்கையான மாற்றங்கள்.  இளமையில் இருந்தே சருமப் பராமரிப்பில் அக்கறை காட்ட ஆரம்பிக்கிறவர்களுக்கு, இந்த மாற்றங்கள் தள்ளிப் போவதுடன், நீண்ட காலம் இளமைத்  தோற்றம் தக்க வைக்கப்படுகிறது.

    அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? தினமும் சருமத்துக்கு கிளென்சர், டோனர், மாயிச்சரைசர் உபயோகிக்க வேண்டும். வயதாக ஆக கொழுப்பு உணவு தவிர்த்து, முழு தானிய உணவுகள்,  மீன், காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்க்க வேண்டும்.

    உப்பையும் சர்க்கரையையும் பாதியாகக் குறைப்பது நல்லது. சோயா உணவுகளை அதிகம்  சேர்த்துக் கொள்ளலாம். மெனோபாஸில் இருப்போருக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சோயா உதவும்.வால்நட் மற்றும் பிரேசில் நட், பாதாம் ஆகியவை இளமைக்கு உதவக்கூடியவை.

    தக்காளி, பப்பாளி, கிவி, ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, அவகேடோ, ஸ்ட்ராபெர்ரி  ஆகிய பழங்களும், பசலைக்கீரை, பீட்ரூட், கிரீன் டீ, டார்க் சாக்லெட் போன்றவையும் இளமைத் தோற்றத்துக்கான உணவுகள்.

    ஜலதோசம், மூக்கடைப்புக்கு மாத்திரைகளே இல்லாமல் உடனடி நிவாரணம் …!

    By: Unknown On: 19:52
  • Share The Gag
  •           உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது.

    முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.

    மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு :

    மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும் ஆனால் உண்மையில் சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் இந்த எளியவனுக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றே தோன்றியது. அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். மருந்து கிடைத்தாச்சு ஆனால் எந்த மருந்தையும் சோதிக்காமல் வெளியே தெரியப்படுத்தியது கிடையாது.

    ஜலதோசத்துடன் யாராவது வந்தால் சோதித்து பின் தெரியப்படுத்தலாம் என்று வைத்துவிட்டோம். இரண்டு நாள் கழித்து நம் நண்பர் ஒருவர் ஜலதோசத்திற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தாமாக வந்து கேட்டார். உடனடியாக நாம் அவர் வீட்டிற்கு வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் வாங்கிக்கொண்டு சென்றோம். அவர் அம்மாவிடம் மஞ்சள் பொடி எடுத்து வரச்சொன்னோம். (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்தோம்.(படத்தில் மேலே காட்டப்பட்டுள்ளது) மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது என்றார், மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது என்று சொல்லி பூசக்கூறினோம். நண்பரின் நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக்கலவையை அவர் அம்மாவே பூசிவிட்டார்.

    1 மணி நேரம் நன்றாக தூங்க சொல்லிவிட்டு பிறகு வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றோம். சரியாக மூன்று மணி நேரம் நன்றாக அசந்து தூங்கியுள்ளார் அதன் பின் நேரடியாக நம் வீட்டிற்கு வந்தார் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு சென்றார். குருநாதாரின் அன்பை என்ன சொல்வேன். நன்றியை அப்படியே குருநாதருக்கு சமர்பித்தோம். சில நாட்கள் கழித்து இவரின் தெருவில் 10 வயதுள்ள ஒரு சிறுவன் இதே போல் நெற்றியில் நம் சுண்ணாம்பு கலவை பூசிக்கொண்டு செல்வதைக்கண்டு அவனை அழைத்து ஏன் நெற்றியில் ஏதோ பூசி இருக்கிறாயே என்று கேட்டோம் அவன் உடனே நம் நண்பரின் வீட்டை காட்டி அவர் தான் பூசிவிட்டார் என்று கூறினார்.

    உடனடியாக நம் நண்பரை அழைத்து எத்தனை பேருக்கு இதே போல் பூசிவிட்டாய் என்று கேட்டோம். அவர் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்று 10 நபர்களை அழைத்து வந்தார் இத்தனை பேருக்கும் ஜலதோசத்திற்கு மருந்து கொடுத்து உடனடி குணம் கிடைத்தது என்றார். 10 பேரிடமும் தனித்தனியாக விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் மருந்து பூசிய பின் தூக்கம் வருகிறது, நாம் தூங்கினால் தான் மண்டையில் இருக்கும் நீரை சுண்ணாம்பு முழுமையாக எடுக்கிறது என்றும், அத்துடன் இரவு படுக்கப்போகும் முன்னும் இதே போல் பூசிவிட்டு படுக்கலாம் என்றும், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்கவிளைவுகளும் இல்லை என்றும் தெரிவித்தனர். சித்த மருத்துவத்தை சோதித்து பார்க்கவிரும்பும் நபர்கள் கூட இந்த மருந்தை பயன்படுத்திப் பார்த்து தங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    முட்டை கெடாமல் இருக்க…அத்தியாவசியமான கிச்சன் டிப்ஸ் இதோ…!

    By: Unknown On: 18:32
  • Share The Gag
  • அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய எளிமையான, அத்தியாவசியமான கிச்சன் டிப்ஸ் இதோ…

    முட்டை கெடாமல் இருக்க…

    முட்டைகளை 30-40 நாட்கள் வரை கெடாமல் வைப்பதற்கு, அதன் மேல் ஒரு பிரஷால் சமையல் எண்ணையை தடவவும்.

    உருளைக்கிழங்கு கெடாமல் இருக்க…

    உருளைக்கிழங்குகளை வெங்காயங்களுடன் வைத்தால் அவை சீக்கிரமாக கெட்டுப்போய்விடும். அவ்வாறு அவை கெடாமல் இருப்பதற்கு, அந்த உருளைக்கிழங்குகள் இருக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் பழத்தை வைக்கவும்.

    ஸ்வீட் செய்த பின்…

    ஸ்வீட் செய்து இரும்பு அல்லது அலுமினியத் தட்டில் தான் கொட்ட வேண்டும். எவர்சில்வர் தட்டு சரிப்படாது.

    குலோப்ஜாமூன் செய்யும்போது…

    குலோப்ஜாமூன், ஜிலேபி, ஜாங்கிரி முதலியவைகளுக்கு ரொம்ப கம்பி பதம் தேவையில்லை. பிசுக்குப் பதம் இருந்தால் போதும் கைகளில் பிசுக்காக ஒட்ட வேண்டும் கம்பிப்பதம் ஆரம்பிக்கும் முன் எடுத்துவிட வேண்டும்.

    மைசூர் பாகு செய்யும்போது…

    மைசூர் பாகு, காஜு கட்லி, பாதாம் கேக் முதலியவைகளில் கடலை மாவு அல்லது முந்திரி அல்லது பாதம் போட்டுக் கிளறும் ஸ்வீட்டுகளுக்கு, பாகு, ஒற்றைக் கம்பிப் படியாக இருக்க வேண்டும்.

    ஏ.வி.எம் ஸ்டூடியோவை விலைக்கு வாங்கிய விஜய் ஆண்டனி

    By: Unknown On: 17:34
  • Share The Gag
  • தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி.

    இவர் சலீம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் என்னும் படத்திலும் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

    தமிழ் திரையுலக நடிகர்களுக்கு மிகவும் பரிச்சியமானது ஏ.வி.எம். ஸ்டுடியோஸ். இந்த இடத்தில் ஏ.வி.எம். சரவணன் அலுவலகத்திற்கு அருகில் சுமார் முக்கால் கிரவுண்ட் இடத்தை விலைக்கு வாங்கி, அதில் சொந்தமாக ஒரு ரெக்காடிங் ஸ்டூடியோ ஒன்றை கட்டியுள்ளார் விஜய் ஆண்டனி.

    ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுக்கு முன் ஏ.வி.எம் நிறுவனத்தின் இடத்தினை விஜய் ஆண்டனி வாங்கியிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


    கர்ப்பகாலத்தில் குழந்தைக்கு ஏற்படும் காது கோளாறு பிரச்சனை..!

    By: Unknown On: 17:15
  • Share The Gag
  • காதுகளைப் பொறுத்தவரை காது கேளாமை, காதடைப்பு இரண்டும்தான் காலம் காலமாக இருந்து வருகிற பிரச்சனை. காது கேளாமை பிறவியிலேயே வரலாம். கர்ப்ப காலத்தில் தாய் அதிகளவில் ஆன்டி பயாடிக் மருந்துகள் எடுத்துக் கொண்டிருந்தால், பிறக்கும் குழந்தைக்கு காது கோளாறுகள் ஏற்படக் கூடும்.

    முன்னோர்கள் யாருக்காவது காது பிரச்சனைகள் இருந்தால், அந்த பாதிப்பும் தலை முறைகளைத் தாண்டி வரலாம். இடையில் விபத்து, வெடிச்சத்தம் போன்றவற்றால் பாதிப்புக்குள்ளானாலும் காது கேட்காமல் போகலாம்.

    கர்ப்பமாக இருக்கும்போது ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பெண்கள், கர்ப்பகால உடற்பயிற்சியோடு கூடுதல் பயிற்சியாக, சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் சந்திக்கும் அடிப்பகுதியில் தினமும் இருபது முறை இதமாக அழுத்தி வர வேண்டும்.

    தாய்க்கோ அல்லது குடும்பத்தில் வேறு யாருக்குமோ காது கேட்காத பிரச்சனை இருந்தால், பிறந்த குழந்தைக்கு ஒரு வயதிலிருந்தே இந்த ‘விரல் சிகிச்சை’யை ஆரம்பித்து விடலாம்.

    வேறு பாதிப்புகளால் காது கேளாமல் போனவர்கள் கூட, இதே சிகிச்சையைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டால், நாளடைவில் கேட்கும் திறனில் முன்னேற்றம் வரும். மேலும் கர்ப்ப காலத்தில் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது.

    ஆண்மை குறைவு ஏற்படுகின்றது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

    By: Unknown On: 12:31
  • Share The Gag
  • மனிதனின் உடல் சீராக இயங்குவதற்கு உடலில் போதிய ஹார்மோன்கள் இருக்க வேண்டும். மேலும் ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையில் ஹார்மோன்கள் தான் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. அதில் பெண்களின் உடலில் புரோஜெஸ்டிரோனும், ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோனும் போதிய அளவில் இருக்க வேண்டியது அவசியம். ஆண்களின் உடலில் சுரக்கப்படும் டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண் ஹார்மோன்.

    இந்த ஹார்மோன் தான் ஆண்களின் ஆண்மையை வெளிப்படுத்தும். குறிப்பாக இந்த டெஸ்டோஸ்டிரோன் தான் பாலுணர்ச்சியைத் தூண்டும். ஆனால் இவை ஒரு ஆணின் உடலில் குறைய ஆரம்பித்தால், அவை உடலை மட்டுமின்றி, கணவன் மனைவி உறவுகளையும் பாதிக்கும். ஆண்களே! இதோ ஆண்மை இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் பழங்கள்!!! பொதுவாக இந்த டெஸ்டோஸ்டிரோன் குறைவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு கண்டுபிடித்து, உடனே மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தால், அவற்றை உடனே குணப்படுத்த முடியும். எனவே இங்கு ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறையும் போது வெளிப்படும் அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளது. அபாரமான உறுப்பு எழுச்சியை எப்படிப் பெறலாம்?.. இதை ‘பாலோ’ பண்ணுங்க!

    பாலுணர்ச்சி குறையும்

    டெஸ்டோஸ்டிரோன் உடலில் குறைய ஆரம்பித்தால், பாலுணர்ச்சியானது குறைய ஆரம்பிக்கும். எனவே உங்களுக்கு பாலுணர்ச்சி குறைய ஆரம்பித்தால், அதற்கு காரணம் டெஸ்டோஸ்டிரோன் உடலில் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.
    மன இறுக்கம் மன இறுக்கமும்

    டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளது என்பதை தான் வெளிப்படுத்தும். மேலும் ஆய்வு ஒன்றிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே மருத்துவரை சந்தித்து போதிய சிகிச்சைகளை எடுத்து வந்தால், இதனை சரிசெய்யலாம்.
    குறைவான எனர்ஜி

    உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருந்தால், எனர்ஜியானது குறைவாக இருக்கும். ஆனால் நிறைய ஆண்கள் தற்போது அதிகப்படியான வேலைப்பளுவின் காரணமாகத் தான் எனர்ஜி குறைவாக உள்ளது என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் உடலில் எப்போதுமே எனர்ஜி இல்லாதது போல் உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

    நிம்மதியற்ற தூக்கம்

    மற்றொரு அறிகுறி என்றால் இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாது. இப்படி இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறாவிட்டால், உடலானது இன்னும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகக்கூடும்.

    வலுவிழந்தது போல் இருக்கும்

    ஆண்களின் உடலில போதிய டெஸ்டோஸ்டிரோன் இல்லாலிட்டால், ஆற்றல் மற்றும் வலிமை இழந்தது போல் எப்போதும் சோர்வோடு இருக்கக்கூடும். அதுமட்டுமின்றி, சிறு வேலை செய்யக்கூடாத முடியாத அளவில், உடல் வலிமையிழந்தது போல் இருக்கும்.

    மற்ற ஆரோக்கிய பிரச்சனைகள் குறிப்பாக டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருந்தால், மற்ற ஆரோக்கிய பிரச்சனைகளான உடல் பருமன், டைப்-2 நீரிழிவு, தைராய்டு குறைபாடு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றிற்கு பாதிக்கக்கூடும்.

    குறைவான அளவில் விந்து வெளிப்படுதல்

    மற்ற நேரங்களுடன் ஒப்பிடுகையில், விந்து வெளிப்படுதல் குறைவாக இருந்தால், அதுவும் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று. இதனை போதிய சிகிச்சை எடுத்து வருவதன் மூலம் குணப்படுத்தலாம்.
    குறைவான விறைப்புத்தன்மை

    முன்பை விட உறவில் ஈடுபடும் போது, விறைப்புத்தன்மையானது குறைவாக இருந்தால், அதுவும் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

    விதைப்பை சுருங்குதல்

    ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருந்தால், அவர்களின் விதைப்பையின் அளவானது சுருங்க ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சிலருக்கு விதைப்பையை தொட்டால் எந்த ஒரு உணர்ச்சியும் தெரியாது.

    தினமும் சாப்பிடக் கூடாத உணவுகள்..! உங்களுக்கு..?

    By: Unknown On: 11:12
  • Share The Gag

  •                 நம் உடல் எடை அதிகரிப்பதற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் சில உணவுகளை பல நேரங்களில் நாம் குறை கூறி கொண்டிருப்போம். ஆனால் உடல் எடை கூடுவதற்கு காரணமாக இருக்கும் வேறு சில உணவுகளை பற்றி நாம் யோசிப்பதே இல்லை. ஜங்க் வகை உணவுகளை முழுவதுமாக தவிர்த்து புரதச்சத்துள்ள பானத்தை மட்டும் குடித்து வந்தாலும் கூட, நாம் நம் அன்றாட உணவு பழக்கங்களில் சில தவறுகளை செய்யத் தான் செய்வோம்.

    அதனால் சரியான உணவு பழக்கங்களை கடைப்பிடித்து, உடல் எடையை சரியாக பராமரிக்க கீழ்கூறிய உணவு பட்டியலை தவிர்க்க வேண்டும்.

    உருளைக்கிழங்கு

    உருளைக்கிழங்கின் மீது மக்களுக்கு உண்டான காதல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே ஏற்பட்டது. உணவின் ருசியை கூட்டவோ அல்லது அளவை கூட்டவோ நாம் உருளைக்கிழங்கை பயன்படுத்துகிறோம். அதனால் அதனை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள தனியாக எந்த ஒரு காரணமும் தேவையில்லை. நாளடைவில் அது உங்கள் உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும். அதனால் அடுத்த முறை உருளைக்கிழங்கிற்கு பதில் நற்பதமான காய்கறிகளை பயன்படுத்துங்கள்.

    பால்

    பல பிரச்சனைகளுக்கும் பால் தீர்வாக இருப்பது உண்மை தான். ஆனால் அதனை அன்றாடம் பருகி வந்தால் அது உங்கள் வளர்ச்சியில் தடையாகவும் இருக்கும். தூங்கும் முன்பு, காலை உணவின் போது அல்லது மாலை வேளைகளில் நொறுக்குத் தீனி உண்ணும் போது பால் குடித்தால் கொஞ்சம் இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். பால் குடிக்கவில்லை என்றால் உங்கள் சோம்பல் நீங்கி, உடல் எடை குறைந்து, சருமம் பொலிவடைகிறதா என்பதை கவனியுங்கள். இல்லையென்றால் பிரச்சனை பாலில் இல்லை, வேறு ஏதோ ஒரு உணவில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    உணவிற்கு பின்பு டெசெர்ட்

    உணவருந்திய பிறகு இனிப்பு பண்டங்கள் ஏதாவது உண்ணுவது நம்மில் பல பேருக்கு உள்ள பழக்கமாகும். இது தேவையற்றது என்பதும் நமக்கும் தெரியும். நீங்கள் உண்ணும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் உங்கள் உடல் எடையை குறைக்க நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாய் போகும். தினமும் டெசெர்ட் வகை உணவுகள் உண்ணுவதை தவிர்த்தால் நீங்கள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கலாம். வார இறுதி நாட்கள் அல்லது ஏதாவது விசேஷ நாட்களில் மட்டும் அவைகள் உண்ணுங்கள்.

    மாலையில் உண்ண வேண்டிய நொறுக்குத் தீனிகள்

    மாலை வேளைகளில் உண்ணும் நொறுக்குத் தீனிகளில் தான் அதிக கவனம் தேவை. மாலை வேளையில் பசி எடுக்கும் போது சாண்ட்விச் அல்லது சமோசா போன்ற நொறுக்குத் தீனிகளை உண்ண நம்மை தூண்டும். பசி நம்மை வாட்டும் போது நாம் எதனை உண்ணுகிறோம் என்பதை பற்றி அதிகம் கவலை கொள்வதில்லை. இது அன்றாடம் நடக்கக் கூடியது என்றால் அது நம் உடல் நலத்தை நாம் நினைப்பதை விட வெகுவாக பாதித்து விடும். அதனால் நட்ஸ், வெண்ணெய் அல்லது தயிர் போன்றவற்றை உங்கள் மாலை வேளை நொறுக்குத் தீனியாக பயன்படுத்துங்கள்.

    ஒவ்வொரு ஆணும் தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!!!

    By: Unknown On: 10:43
  • Share The Gag
  •                 சில விஷயங்கள் உள்ளது; அவைகளை பற்றி தனக்கு நன்கு தெரியும் என பல ஆண்கள் நினைத்து வருகின்றனர். அதே போல் அவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் சில உள்ளது. வரவு செலவை எப்படி கணக்கிட வேண்டும் என்பது ஆண்களுக்கு தெரியும். ஆனால் தன் வீட்டை சுத்தப்படுத்த சொல்லுங்கள்; சில ஆண்கள் அதனை மேலும் குப்பையாக்கி விடுவார்கள். இதனை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் ஆணாக இருந்தால், இந்நேரத்திற்கு "இது உண்மை இல்லை!" என நீங்கள் கூறியிருப்பீர்கள்.

    இடத்தை சுத்தமாக வைத்திருக்கவும், துணிகளை துவைக்கவும், பேரம் பேசி காய்கறிகள் வாங்கவும் சில ஆண்கள் பழகி விட்டனர். ஆனாலும் கூட நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னமும் உள்ளது. ஏன்? எல்லாம் தெரிந்து கொள்வது நல்லது தானே? கண்டிப்பாக வாழ்க்கையில் நீங்கள் தனியாக இருக்க வேண்டிய காலம் வரும். அப்போது உங்களை பார்த்துக் கொள்ள நீங்கள் மட்டுமே இருப்பீர்கள். இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஏன், சில நேரம் உங்கள் காதலி உங்களிடம் சில வேலைகளை வாங்கலாம். அந்த வேலைகளை பற்றி உங்களுக்கு போதிய அறிவு இல்லாததால் அவரை ஈர்க்க முடியாமல் போவீர்கள்.

    சில விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஒன்றும் தவறில்லை. அதனால் ஒன்றும் குறைந்து போய் விட மாட்டோம். இப்போதே அவைகளை பற்றி தெரிந்து கொள்ள தொடங்குங்கள். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கியமான விஷயங்களை பற்றி இப்போது பார்க்கலாம். இன்னும் தெரியவில்லை என்றால், இன்றே தெரிந்து கொள்ளுங்கள்!
           
    திடமான ஆண்மை நிறைந்த கைகுலுக்கல்

    நீங்கள் பிறருக்கு எப்படி கை குலுக்குகிறீர்களோ அதை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை பிறர் தீர்மானிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? லேசாக பேருக்கு கை கொடுத்தாலோ அல்லது கைகளை மிகவும் இறுக்கினாலோ, உங்கள் மீது தவறான அபிப்ராயம் உருவாக வாய்ப்புகள் உள்ளது. அதனால் திடமான ஆண்மை நிறைந்த கை குலுக்கல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

    கார் டயர்களை மாற்ற பழகுங்கள்

    பல ஆண்கள் இதனை தவிர்த்து வருகிறார்கள். ஆனால் நீங்கள் யாரும் உதவிக்கு இல்லாத ஒரு நெடுஞ்சாலையில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வீர்கள்? மாற்று டயர் ஒன்று, அதனால் மாட்டும் ஆற்றல், உங்களுக்கு சமயத்தில் கை கொடுக்கும். இந்த சூழ்நிலையில் ஒரு பெண் மாட்டிக் கொண்டால், அவளின் கார் டயரை நீங்கள் மாட்ட உதவி, அவரை ஈர்க்கலாம் அல்லவா?
           
    டிப்ஸ் வைக்க பழகிக் கொள்ளுங்கள்

    உங்களுக்கு சேவை அளிக்கும் ஒவ்வொரு நபருக்கும் டிப்ஸ் வைக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அது உங்கள் சிகையை அலங்காரம் செய்பவராக இருக்கட்டும், மதுக் கடையில் பானங்கள் கொடுப்பவராக இருக்கட்டும் அல்லது உணவகத்தில் இருக்கும் சர்வராக இருக்கட்டும். குறைந்தபட்ச டிப்ஸை வழங்கவாவது கற்றுக் கொள்ளுங்கள்.

    வீட்டை சுத்தப்படுத்துதல்

    உங்கள் வீட்டை எப்படி சுத்தப்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். வேக்யூம் கிளீனர், துடைப்பம் போன்றவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என கற்றுக்கொண்டு, அவ்வப்போது அவைகளை பயன்படுத்தி வீட்டை சுத்தப்படுத்துங்கள். இப்படி செய்வதால், நீங்கள் தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தில் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்கலாம் அல்லவா?
           
    துணியை துவைத்தல்

     பல ஆண்கள் தங்கள் துணிகளை துவைக்க தெரிவதில்லை. தங்கள் வாழ்க்கையை ஹாஸ்டலில் தொடங்கும் போதோ அல்லது பேயிங் கெஸ்டாக தொடங்கும் போதோ அவர்களுக்கு இந்த பிரச்சனை தொடங்கும். துணி துவைக்க கற்றுக் கொண்டால், இப்படிப்பட்ட நேரத்தில் அது உங்களுக்கு கைக்கொடுக்கும்.

    சரியான முறையில் ஆடை அணிந்து கொள்வது

    நம்மில் பலரும் எப்போது பார்த்தாலும் ஜீன்ஸ் ஒன்றை போட்டுக் கொள்வோம். எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அதையே தான் அணிவோம். எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் நம் உடைகள் மட்டும் மாறாமல் இருக்கும். நீங்கள் கண்டிப்பாக மாற்றிக் கொள்ள வேண்டிய பழக்கம் இது. நிகழ்வுக்கு ஏற்றார் போல் உடை அணிந்து கொள்ள பழக வேண்டும். அப்போது தான் நீங்களும் கவனிக்கப்படுவீர்கள்.
           
    தீவிரமாக ஷாப்பிங் செய்பவர்களிடம் உடனிருக்க கற்றுக் கொள்ளுதல்

    செய்வதை காட்டிலும் சொல்வதற்கு தான் இது சுலபம். ஆனாலும் கூட இதனை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஷாப்பிங் என்றால் மிகவும் பிடித்த ஒரு பெண்ணை காதலிக்கிறீர்கள் அல்லது திருமணம் செய்ய போகிறீர்கள் என வைத்துக் கொள்வோம்; அப்படியானால் ஒவ்வொரு முறை ஷாப்பிங் செல்லும் போது அவருடன் சேர்ந்து நீங்கள் செல்ல வேண்டாமா? அப்படிப்பட்ட பயணத்தை மேற்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் தானே?

    அடிப்படை சமையலை கற்பது

    வாழ்வதற்கான அடிப்படைகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் தானே? ஏன் அடிப்படை சமையலை நாம் கற்க கூடாது. கண்டிப்பாக தேவைப்படும் நேரத்தில் அது நமக்கு பெரியளவில் கை கொடுக்கும். சாதம், சில காய்கறிகள் அல்லது சாலட்கள் சமைப்பதற்கு கற்றுக் கொள்ளுங்கள்.
       
    ஹேங் ஓவரிலிருந்து மீள்வது

    எல்லா வார இறுதிகளிலும் நீங்கள் சரக்கு அடிக்க முடியாது. ஆனால் சில நேரங்களில் வார நாட்களில் தொடர்ச்சியாக குடிக்கும் வாய்ப்பு உண்டாகலாம். அப்படி நடக்கையில் மறுநாள் அலுவலகத்திற்கு ஃப்ரெஷாக வர வேண்டுமல்லாவா? அதற்கு எப்படி ஹேங் ஓவரிலிருந்து மீள்வது என்பதை கற்றுக் கொள்ளுங்கள்.

    ஒயின் இங்கிதங்கள்

    இது கண்டிப்பாக தேவையான ஒன்று; முக்கியமாக நீங்கள் கார்பரேட் உலகத்தில் ஒரு அங்கமாக இருந்தால். ஒயின் மெனுவை எப்படி படிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதே போல் எவ்வளவு ஊற்ற வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உடன் வந்தவருக்காக அதனை ஆர்டர் செய்யும் போது, எப்படி செய்ய வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ளுங்கள்.

    தனுஷ் எழுதிய பாடலைப் பாடினார் இளையராஜா!

    By: Unknown On: 08:34
  • Share The Gag
  • கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'வை ராஜா வை'. '3' படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

    'வை ராஜா வை'  விரைவில் வெளிவர உள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

    இப்படத்தில் இடம்பெறும் 'மூவ் யுவர் பாடி' எனும் பாடலை தனுஷ் எழுதியுள்ளார். இப்பாடலை  இசைஞானி இளையராஜா பாடியிருக்கிறார். இதுகுறித்து தனுஷ் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கிறது கோலிவுட் வட்டாரம்.