Monday, 7 July 2014

சருமத்தை பளபளப்பாக்கும் பச்சை திராட்சை..!

By: Unknown On: 21:05
  • Share The Gag
  • பருத்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், பருக்கள் வராமலும் தடுக்கிறது பச்சை திராட்சைச் சாறு. இரண்டு புதினா இலைகளை இடித்து எடுத்த  சாறுடன் அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் கலந்து கொள்ளுங்கள்.

    இது பேஸ்ட்டாகும் அளவுக்கு சிறிது திராட்சைச்சாறு, எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில்  இருக்கும் பருக்கள் மறையும். மேற்கொண்டு பருக்கள் வராமல் தடுக்கும். சருமமும் மிருதுவாகும்.

    தொய்வடைந்த தோலை இறுக்கமாக்கி, இளமைத் தோற்றம் தருகிறது பச்சை திராட்சைச் சாறு. ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை ஒரு  கிண்ணத்தில் எடுங்கள். அதே அளவுக்கு திராட்சைச் சாறையும் எலுமிச்சைச் சாறையும் எடுத்து, வெள்ளைக் கருவுடன் சேர்த்து நன்றாக அடித்துக்  கொள்ளுங்கள்.

    இதை முகம், கழுத்து, கை ஆகிய பகுதிகளில் பேக் ஆகப் போட்டு 20 நிமிடம் காயவிட்டு கழுவுங்கள். பச்சை திராட்சை, சருமத்தை மிருதுவாக்கும்.  எலுமிச்சைச் சாறு, சருமத்தை சுத்தப்படுத்தும். முட்டை, தொய்வடைந்த தோலை இறுக்கமாக்கும். இதுபோல வாரம் இருமுறை செய்துவர முதுமைத்  தோற்றம் மறைந்து இளமை மிளிரும்.

    சிவப்பழகை ஜொலிக்கச் செய்யும் தன்மையும் பச்சை திராட்சைக்கு உண்டு. ஆரஞ்சு பழத் தோலை உலர்த்தி பவுடராக்குங்கள். ஒரு டீஸ்பூன் இந்தப்  பவுடருடன், ஒரு டீஸ்பூன் திராட்சை ஜுஸ் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசி கழுவுங்கள். இப்படிச் செய்வதால் தோலின்  முரட்டுத்தன்மை நீங்குவதுடன் நிறமும் கூடும்.

    அழகுக்கு ஆதரவு தருவதில் காய்ந்த திராட்சைக்கும் கணிசமான பங்கு இருக்கிறது. காய்ந்த திராட்சையுடன், பீட்ரூட் சாறை கலந்து தினமும்  உதடுகளில் பூசி வர, உதடுகள் கோவைப்பழம் போல சிவக்கும்.

    காய்ந்த திராட்சை, பாதாம் பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை முகத்தில் பூசி, சிறிது  நேரம் ஊறவிட்டு கழுவினால், ஃபேஷியல் செய்தது போல முகம் ஜொலிக்கும்.

    விஜய் சேதுபதியின் கொலைவெறியியை காட்டும் 'எடக்கு'

    By: Unknown On: 19:48
  • Share The Gag
  • இதுவரை காமெடி, செண்டிமெண்ட், திகில் என்று நடித்து வந்த விஜய் சேதுபதி, முதல் முறையாக கொலைவெறியுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். 'எடக்கு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை எஸ்.சிவன் என்பவர் இயக்குகிறார்.

    இப்படத்தில் விஜய் சேதுபதி, கொலைவெறியுடன் திரயும் ஒரு ஆக்ரோஷமான வேடத்தில் நடிக்கிறாராம். இதற்காக அவர் நீண்ட தலைமுடியையும் வளர்த்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் மற்றொரு ஹீரோவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் யார் என்பதை ரகசியமாக வைத்திருக்கிறது தயாரிப்பு தரப்பு.

    'லிங்கா' படத்திற்கு கிராம வாசிகளால் வந்த பிரச்சனை..!

    By: Unknown On: 19:19
  • Share The Gag
  • கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இரட்டை வேடத்தில் நடித்து வரும் படம் லிங்கா. இப்படத்தில் நாயகிகளாக சோனாக்சி சின்ஹாவும், அனுஷ்காவும் நடிக்கின்றனர்.

    இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 40 நாட்களாக ஆந்திரா ஹைதராபாத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு படப்பிடிப்பு நடந்த வேளையில் கிராமவாசிகள் இடையூறு கொடுத்துள்ளனர்.

    ஆந்திராவின் அனஜ்பூர் கிராமத்தில் லிங்கா படப்பிடிப்பு நடப்பதை அறிந்த கிராமவாசிகள் அங்கிருக்கும் ஏரியை அசுத்தப்படுத்துவதாக பிரச்சினை கொடுத்துள்ளனர்.

    மேலும் படக்குழுவினர் படப்பிடிப்பிற்கு அனுமதி பெற்ற கடிதத்தை கிராம பஞ்சாயத்து யூனியனிடம் காண்பித்த பிறகே கிராமவாசிகள் களைந்து சென்றுள்ளனர்.

    விஜய் பட வாய்ப்பினால் அச்சத்தில் ஹன்சிகா,,!

    By: Unknown On: 18:41
  • Share The Gag
  • விஜய்யுடன் ஏற்கனவே ஜெயம் ராஜா இயக்கிய, 'வேலாயுதம்' படத்தில் நடித்தவர் ஹன்சிகா. அந்த படத்தில் ஜெனிலியாதான் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஹன்சிகா விஜய்யின் முறைப்பெண்ணாக ஒரு கிராமத்து வேடத்தில் நடித்தார். அதையடுத்து விஜய்யுடன் சோலோவாக நடிக்கும் வாய்ப்பை பெறாத அவருக்கு இப்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் மீண்டும் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    இருப்பினும் இதே படத்தில் இன்னொரு நாயகியாக ஸ்ருதிஹாசனும் இருப்பதுதான் ஹன்சிகாவுக்கு பெரிய தலைவலியாக அமைந்திருக்கிறது. காரணம், சரித்திர பின்னணியில் உருவாகும் அப்படத்தில் விஜய் அப்பா-மகன் என்ற இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடிக்கிறார். அப்படியென்றால் எஞ்சியிருக்கும் ஒரு விஜய்க்கு என்னுடன் ஸ்ருதியும் இருக்கிறார். எங்களில் யார் இளவட்ட விஜய்க்கு ஜோடி என்று உண்மையை தெரிந்து கொள்ள அப்பட யூனிட்டில் இருந்து தன்னை தொடர்பு கொண்டவர்களை நச்சரித்துக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா.

    ஆனால், அவர்கள்தரப்பில் இருந்து அதற்கு சரியான பதில் தெரிவிக்கப்படவில்லையாம். அதனால் ஹன்சிகாவுக்கு இன்னும் அச்சம் அதிகரித்து விட்டதாம். ஏனென்றால் ஸ்ருதிஹாசனைப் பொறுத்தவரை வெயிட்டான வேடமாக இருந்தால்தான் நடிப்பார். அதுவும் ஹீரோவுக்கு இணையான வேடம் கேட்பார். அப்படிப்பட்டவர் இருக்கும் படத்தில் அவருக்குத்தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் முதல் வாய்ப்பு கொடுப்பார்கள்.

    அப்படியென்றால் நம்மை டம்மியான ஏதேனும் சிறிய கேரக்டரில் நடிக்க வைத்து விடுவார்களோ என்ற பெருங்குழப்பத்தில் இருக்கும் ஹன்சிகாவுக்கு, ஒருவேளை லிங்காவில் சோனாக்க்ஷி சின்ஹாவை ரஜினிக்கே பாட்டியாக நடிக்க வைத்தது போன்று இந்த படத்தில் நம்மையும் ஏதாவது முதிர்ச்சியான காட்சிகளில் நடிக்க வைக்க திட்டம் வைத்திருப்பார்களோ என்ற பேரதிர்ச்சியும் இப்போது ஏற்பட்டிருக்கிறதாம்.

    ’பூஜை’யில் சத்யராஜுக்கு மாறுபட்ட கெட-அப்!!

    By: Unknown On: 16:40
  • Share The Gag
  • ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதி ஹாசன் ஜோடியாக நடிக்கும் ‘பூஜை’ படத்தின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் சத்யராஜ் பவர்ஃபுல் கேர்கடர் ஒன்றில் நடிக்கிறார். இந்த கேரக்டர் குறித்து இயக்குனர் ஹரி கூறும்போது, ‘‘பூஜை’ படத்தின் ஸ்கிரிப்ட் ரெடியானதும், இந்த கேர்கடருக்கு சத்யராஜ் மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று என் மனதுக்கு தோன்றியது. ‘

    நூறாவது நாள்’, ‘வால்டர்
    வெற்றிவேல்’ போன்ற படங்களில் அவர் ஏற்று நடித்தது மாதிரியான ஒரு வேடம் இது. இந்த கேர்கடர் அவருக்கும், ரசிகர்களுக்கும் மாறுபட்ட ஒரு அனுபவத்தை கொடுக்கும்’’ என்றார். இந்தப் படத்தை விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார்.

    ஏற்கனவே பிரபலமாக விளங்கும் நடிகர்கள் இயக்குனர் ஹரியின் படங்களில் நடிக்கும்போது இன்னொரு பரிமாணம் பெறுவார்கள் என்பது நாம் அனைவரும் அடிக்கடி கண்டுணர்ந்த நிகழ்வுதான். அப்படி ஒரு சிறப்பம்சமாகத்தான் தற்போது விஷாலை வைத்து ஹரி இயக்கிவரும் பூஜை படத்தின் முக்கிய கதாபாத்திரமாக படத்தில் நுழைந்திருக்கிறார் சத்யராஜ்.

    படத்தில் சத்யராஜ் நடிப்பதை உறுதி செய்தாலும் அவருடைய கேரக்டரின் பெயரைக்கூட வெளியிட மறுக்கிறார் இயக்குனர் ஹரி. ஆனால் சத்யராஜின் மொட்டைத்தலையும் அவர் அணிந்திருக்கும் காக்கி யூனிபார்மும் மீண்டும் ஒரு ‘நூறாவது நாளையும்’ ஒரு ‘வால்டர் வெற்றிவேலையும்’ தான் நமக்கு  நினைவூட்டுகிறது. அப்போ படத்துல ஏதோ வித்தியாசமா இருக்குது” அப்படிங்கிறது மட்டும் நல்லாவே தெரியுது..