Thursday, 4 September 2014

மீண்டும் இணையதளத்தில் லீக் ஆன சிம்பு- நயன்தாரா நெருக்கமான படங்கள்!

By: Unknown On: 20:55
  • Share The Gag
  • சிம்பு- நயன்தாரா காதலித்து பின் சண்டை வந்து பிரிந்தது எல்லாம் பழைய கதை. இதையெல்லாம் மறந்து மீண்டு ம் அவர்கள் இது நம்ம ஆளு படத்தில் சேர்ந்து நடித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இவர்கள் அனைவரும் சிம்புவும், நயன்தாராவும் படுக்கையறையில் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பது போல ஒரு புகைப்படம் இணையத்தளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதை தொடர்ந்து விசாரித்த போது, அவை இது நம்ம ஆளு படத்தின் படப்பிடிப்பின் போது யாரோ எடுத்து வெளியிட்ட படம் என்று தகவல் வந்துள்ளது.

    இனி சிம்புவின் மீது எனக்கு காதல் வராது என்று நயன்தாரா சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.

    பனங்கருப்பட்டியின் மருத்துவ குணங்கள்..!

    By: Unknown On: 20:15
  • Share The Gag
  • பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

    சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்
    தொல்லை நீங்கும்.

    குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

    ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில்
    சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

    சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது.

    இனி யாரும் என்னிடம் கதை சொல்லாதீர்கள்! விஜய் சேதுபதி அதிரடி

    By: Unknown On: 19:34
  • Share The Gag
  • சின்ன பட்ஜெட் படங்களின் இயக்குனர்கள் முதல் சாய்ஸ் தற்போது விஜய் சேதுபதி தான். இவர் மெல்லிசை, பொறம்போக்கு, வன்மம், நானும் ரவுடி தான், ஆரஞ்சு மிட்டாய் போன்ற அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார் இவர். அது என்னவென்றால் சென்ற வருடம் நண்பர்களுக்காக இவர் நடித்து கொடுத்த ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்கள் தோல்வியடைந்து விட்டது.

    இதனால் இனி யாரிடமும் கதை கேட்பதில்லை, இருக்கிற படங்களை நன்றாக நடித்து கொடுத்தால் போதும் என்று அதிரடி முடிவை எடுத்துள்ளாராம்.

    பாலிவுட் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை!

    By: Unknown On: 18:14
  • Share The Gag
  • தி ஹான்டடு ஹவுஸ் என்ற பாலிவுட் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மோனா கன்னா. ஆனால் இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை, அதற்குள் தூக்குப்போட்டு இறந்துவிட்டார்.

    இது குறித்து போலிஸார் விசாராணையில் அவர் எழுதிய கடிதம் கிடைத்தது. இதில் ‘ என் மரணத்திற்கும் யாரும் காரணம் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதை முற்றிலுமாக மறுத்த அவரது தங்கை ’ என அக்கா பிரபல நடிகரின் மகனை காதலித்து வந்தார், அவர் ஏமாற்றியாதால் தான் இந்த முடிவை எடுத்துள்ளார்’ என்று கூறியுள்ளார்.

    தற்போது அந்த காதலன் யார், மரணத்திற்கு அவர் தான்

    ஆண்களின் ரகசியங்கள் உங்களுக்கு தெரியுமா?

    By: Unknown On: 17:36
  • Share The Gag
  • எப்போதும் பெண்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கக் கூடாது. மேலும் அவர்களுக்கு ஆண்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியாது. சொல்லப்போனால் ஆண்கள் நிறைய விஷயத்தில் பெண்களை விட மிகவும் திறமையானவர்கள். அவை என்னென்னவென்று சிறிது பார்ப்போமா!!!

    ஆண்களுக்கு சமைப்பது என்றால் மிகவும் பிடிக்கும். சமைப்பதில் பெண்கள் தான் மிகவும் சிறந்தவர்கள் என்று யார் சொன்னார்கள்? சமையலறை பெண்களுக்குத் தான் என்று சொல்வது உண்மை தான். ஆனால் அப்படி சமைக்கும் பெண்களை விட, தனியாக வீடு எடுத்து தங்கி, சமைத்து உண்ணும் ஆண்களின் சமையல் உண்மையில் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அத்தகைய சமையல், அவர்களது மனநிலையைப் பொறுத்ததே ஆகும்.

    பெண்களை விட ஆண்களே மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்கள். ஆண்கள் அனைவரும் ‘பெண்கள் உணர்ச்சிவசப்பட்டால் அழுவார்கள்’ என்று சொல்கின்றனர். உண்மையில் ஆண்களே உணர்ச்சிவயப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் அதனை வெளிப்படுத்தமாட்டார்கள். பெண்கள் ஏதேனும் ஒரு கஷ்டம் என்றால் அழுது வெளிப்படுத்துவர். ஆனால் ஆண்கள் அதனை பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். ஏனெனில் ஆண்களிடம் இருக்கம் ஈகோ அதனை கட்டுப்படுத்தும்.

    அடிக்கடி ஆண்கள் பெண்களை அதிகம் துன்புறுத்துவார்கள். ஆனால் அதில் ஒரு காரணம் இருக்கும். அதிலும் அவர்கள் உடுத்தும் உடை, கூந்தல் அழகு, ஹை ஹீல்ஸ் அல்லது பேசும் விதம் போன்றவற்றை வைத்து துன்புறுத்துவதில் மிகவும் பிஸியாக இருப்பர். ஏனெனில் ஆண்கள் அவ்வாறு செய்தால் அது அவர்களது ஒரு வகையான அன்பை வெளிப்படுத்தும் விதம் ஆகும். ஆனால் அவ்வாறு செய்வது ஒரு அன்பின் காரணமாக என்று நிறைய பெண்களுக்கு தெரியாது.

    நிறைய பேர் நினைக்கின்றனர், ஆண்கள் அனைவருக்கும் காம உணர்வு அதிகம், அவர்கள் எப்போதும் அந்த சிந்தனையிலேயே இருப்பர். ஆனால் உண்மையில் அவர்கள் எப்போதும் அவ்வாறு இருப்பதில்லை, அவர்களது ஹார்மோன் தான் அவர்களை அவ்வாறு தூண்டுகிறது. இது நிறைய ஆராய்ச்சியில் கூட நிரூபிக்கப்பட்டுள்ளது.

    ஆண்களுக்கு வாயாடுவது என்பது பிடிக்காது என்று நிறைய பெண்கள் நினைக்கின்றனர். ஆனால் ஆண்களுக்கும் பிடிக்கும். அவ்வளவாக வாயாடவில்லை என்றால் கூட ஓரளவாவது வாயாடுவர். அதிலும் அவர்கள் பெரும்பாலும் வாயாடுவது எதைப் பற்றி என்று கூறினால், பெண்களைப் பற்றி தான் இருக்கும்

    குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க இயற்க்கை மருத்துவம்:-

    By: Unknown On: 08:37
  • Share The Gag

  • குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே வசம்பைச் சுட்டுப் பொடியாக்கித் தேனில் குழைத்துக் குழந்தையின் நாக்கில் தடவி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குக் கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் எளிதில் இறந்து விடுகின்றன.

    சிறு குழந்தைகள் இனிபபு வகைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதால் பூச்சிகள்
     உண்டாகும். இதற்கு ஒரு எளிய வைத்தியம். தித்திப்பு மாதுளையை முதல் நாள் சாப்பிடக்
     கொடுத்து மறுதினம் பாலில் சிறிது விளககெண்ணையைக் கலந்து கொடுத்தால் பூச்சிகள்
     வெளியேறும்.

    கொக்கிப் புழுக்கள் தொந்தரவிலிருந்து விடுபட, துளசிச் சாற்றுடன் எலுமிச்சைச் சாற்றைக்
     கலந்து குடித்து வரவும் தினமும் சில இலைகளை மென்று வந்தாலே புழுக்கள்
     வெளியேறும்.

    கொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு ஸ்பூன் அளவு காலை வெறும்
     வயிற்றில் சிறிது பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, குடல்
     பூச்சிகள் மொத்தமும் அன்றே வெளிவரும். கடும் பத்தியம் கிடையாது குழந்தைகளின்
     வயதுக்கேற்ப அளவைக் கூட்டியோ குறைத்தோ கொடுக்கலாம்.

    வேப்பிலைக் கொழுந்துடன் சிறிது உப்பைச் சேர்த்து மையாக அரைத்து சுண்டைக்காய்
     அளவு உருண்டைகளாக்கி இரண்டு உருண்டைகளை (ஒரு குழந்தைக்கு) வெறும் வயிற்றில்
     சாப்பிடச் செய்யவும் பூச்சிகள் செத்து வெளியில் வந்துவிடும்

    அதிகம் கோபம் கொள்ளும் ஆசிரியரை கையாளுவது?

    By: Unknown On: 08:36
  • Share The Gag
  • அதிகம் கோபம் கொள்ளும் ஆசிரியரை கையாளுவது எப்படி?


    ஒரு மாணவராக உங்களுக்கு அதிகமாக வீட்டுப்பாடம் கொடுக்கும் அனைத்து ஆசிரியர்களுமே கொடுமை படுத்தும் ஆசிரியர்களின் வகையறாக்களின் கீழ் வந்து விடுகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. உண்மையிலே கொடுமை படுத்தும் கஷ்டமான வகை ஆசிரியர்களை பற்றி இங்கே பார்க்க போகிறோம். பாடம் கற்பிக்கும் துறையை மிகவும் விரும்பினாலும் கூட சில ஆசிரியர்களால் மாணவர்களை பொறுமையாக கையாள தெரியாது. அவர்களே சகித்து கொள்ள முடியாத ஆசிரியர்கள் பட்டியலில் அடங்குவார்கள்.


    அப்படிப்பட்டவர்கள் மாணவர்களுடன் தெளிவான மனநிலையில் நடந்து கொள்ள மாட்டார்கள். நீங்கள் டீனேஜ் பருவத்தில் உள்ளவர்கள் என்பதால் உண்மையான சூழ்நிலையை உணர்ந்து கொள்ள ஒரு முறைக்கு இரண்டு முறை உங்கள் எண்ணங்களை அலசுங்கள். சில நேரம் ஏதாவது ஒரு காரணத்திற்காக உங்களுக்கு ஒரு ஆசிரியரை பிடிக்காமல் போகலாம். ஆனால் அவைகளையெல்லாம் ஓரமாக வைத்து விட்டு ஒரு ஆசிரியர் உண்மையிலேயே கஷ்டப்படுத்துவரா என்பதை நிலைமையை வைத்து புரிந்துக் கொள்ளுங்கள்.


    உங்கள் வகுப்பில் இருக்கும் மற்ற மாணவர்களை கேட்டால், சில ஆசிரியரால் தங்கள் பள்ளி வாழ்க்கையையே திகிலாக உள்ளது என்று கூறுவார்கள். ஒரு மாணவராக அவ்வகை ஆசிரியர்களை சமாளிக்க உங்களுக்கு கஷ்டமாக இருக்கும். கஷ்டமான ஆசிரியர்களை டீனேஜ் மாணவரான நீங்கள் கையாள சில டிப்ஸ் உள்ளது. உங்கள் குறைகளை எல்லாம் உன்னிப்பாக கவனியுங்கள். பின் இவ்வகை கஷ்டமான ஆசிரியர்களை கையாளுவது மிகவும் கஷ்டம் என்று நீங்கள் உணர்ந்தால் கீழ் கூறிய எளிய, ஆனால் சிறந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.


    எரிச்சல் ஊட்டாதீர்கள்


    எரிச்சலை உண்டாக்கினால் உங்கள் ஆசிரியர் கோபத்தின் உச்சிக்கே போய் விடுவார் என்று தெரிந்தால் நீங்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பது நல்லது. பொறுமையாக இருப்பது என்பது ஒவ்வொரு டீனேஜ் மாணவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான டிப்ஸாகும். உங்கள் ஆசிரியர் நிலைமையை மோசமாக மாற்றும் அளவிற்கு ஒரு சூழ்நிலையை நீங்களாகவே உருவாக்கி விடாதீர்கள்.


    குறைபாடற்ற மாணவராக நடந்து கொள்ளுங்கள்:


    குறை கூறிக் கொண்டிருக்கும் ஆசிரியரை கையாள வேண்டுமானால், அந்த ஆசிரியர் சம்பந்தப்பட்ட அனைத்திலேயும் நீங்கள் ஒரு குறைபாடற்ற மாணவராக மாறி விடுங்கள். வீட்டுப்பாடங்களை தினமும் செய்து, ஒழுக்கமாகவும் பணிவாகவும் நடந்து கொள்ளுங்கள். பல ஆசிரியர்களுக்கு குறைபாடற்ற ஒழுக்கமான மாணவர்களையே பிடிக்கும். அதனால் இந்த டிப்ஸை பின்பற்றி கஷ்டமான ஆசிரியர்களை சுலபமாக கையாளலாம்.

    பாலசந்தர் பாணியில் லாரன்ஸ் - ஒரு டிக்கெட்டுல இரண்டு சினிமா!

    By: Unknown On: 08:22
  • Share The Gag
  • 1990-ம் ஆண்டு பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த படம் ஒரு வீடு இரண்டு வாசல். ஒரே படத்தில் இரண்டு விதமான கதைகளை சொல்லியிருப்பார் பாலசந்தர். இவரின் இந்த முயற்சி அப்போது எல்லோராலும் பாராட்டு பெற்றது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலசந்தரின் வழியில் ராகவா லாரன்ஸ் ஒரு படத்தை இயக்க உள்ளார். படத்திற்கு ஒரு டிக்கெட்டுல இரண்டு சினிமா என்று பெயர் வைத்துள்ளார்.

    இந்தபடமும் பாலசந்தரின் ஒரு வீடு இரு வாசல் போன்று இரண்டு விதமான கதைகளை உடையது. இடைவேளைக்கு முன் ஒரு கதையும், இடைவேளைக்கு பின் ஒரு கதையும் அமைய இருக்கிறது. இதில் ஒரு கதைக்கு கிழவன் என்றும், மற்றொரு கதைக்கு கருப்பு துரை என்றும் பெயர் வைத்துள்ளார். இரண்டிலுமே லாரன்ஸ் தான் நடிக்கிறார். கிழவனில் ஆண்ட்ரியாவையும், கருப்பு துரையில் லட்சுமி ராய்யும் நடிக்கிறார்கள். காமெடி மற்றும் பசங்க தொடர்பான படமாக இப்படம் இருக்கும் என்றும் நவம்பர் மாதம் முதல் ஷூட்டிங் ஆரம்பிக்க இருப்பதாகவும் லாரன்ஸ் தெரிவித்துள்ளார். அவரே நடித்து, இயக்கி, தயாரிக்கும் இப்படத்தில் பாடலாசிரியர் விவேகா, வசனம் எழுத இருக்கிறார்.

    இந்தப்படம் குறித்து லாரன்ஸ் கூறுகையில், கங்கா படத்தின் ஷூட்டிங் போது முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட பிரச்னையால், மருத்துவர்கள் 6 மாத காலம் ஓய்வில் இருக்க சொல்லி அறிவுறுத்தினர். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றபோது இப்படத்தை இயக்கும் எண்ணம் தோன்றியது. ஒரு படத்தில் இரண்டு கதை வருவதால் படத்திற்கு ஒரு டிக்கெட்டுல இரண்டு சினிமா என்று பெயர் வைத்துள்ளதாக கூறும் லாரன்ஸ், தற்போது தான் இயக்கி வரும் முனி-3(கங்கா) படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகவும், காஞ்சனாவை காட்டிலும் அதிக த்ரில் மற்றும் காமெடி நிறைந்த படமாக இப்படம் இருக்கும் என்றும், டிசம்பரம் மாதம் கங்கா ரிலீஸாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

    நடைப்பயிற்சி - தவறுகளை தவிர்க்கும் வழிகள்!

    By: Unknown On: 07:34
  • Share The Gag
  • ''உடல் நலத்தில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் முதலில் கடைப்பிடிப்பது நடைப்பயிற்சிதான். அதிகாலையில் பயிற்சி செய்தால், அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும். சர்க்கரைநோய், உடல் பருமன், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைத் தவிர்க்கவும் முடியும். பலன்களை அள்ளித் தரும் இந்தப் பயிற்சிகளை, பலரும் கடமைக்காகச் செய்கின்றனர். 'டாக்டர், வாக்கிங் போகச் சொன்னார் போறேன். ஜாகிங் செய்யச் சொன்னார் செய்றேன்...’ இப்படிக் கடனே என்று செய்பவர்கள் பலர்.

    நடைப்பயிற்சியோ ஓட்டப்பயிற்சியோ எதுவானாலும் அதை முறையோடு செய்யவில்லை என்றால், மூட்டு மற்றும் கால் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும்'' என்று எச்சரிக்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த பிசியோதெரப்பிஸ்ட் எஸ்.சத்திய நாராயணன்.

    'ஓடுவதால் எந்த அளவுக்கு நன்மைகள் இருக்கிறதோ, அதேபோல் முறையாக ஓடவில்லை என்றால் பாதிப்புகளும் வரும். ஓட்டப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு 'ரன்னர்ஸ் நீ’ (runners knee) என்ற பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எடுத்த எடுப்பிலேயே மிகக் கடுமையாக ஓட்டப் பயிற்சி மேற்கொள்வதால் இது ஏற்படுகிறது. இதனால், மூட்டில் உள்ள குருத்தெலும்பு தேய்ந்து வலி ஏற்படும். ஆரம்பத்தில் இந்த வலியை உணர முடியாது. மாடிப்படிகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் நாற்காலியில் அதிக நேரம் உட்காரும்போதும் இந்தப் பாதிப்பை உணரலாம். எனவே, அதிக ஆர்வத்தில் கால்களுக்கு அதிக பளுவைக் கொடுக்கக் கூடாது.

    உடல் பயிற்சிக்காக ஓடுபவர்கள், ஓடும் விதத்தைத்தான் பார்க்க வேண்டுமே தவிர, ஓடும் தூரத்தைப் பார்க்கக் கூடாது. தொடர்ந்து நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபடும்போது சோர்வு, வலி ஏற்படும். இதனால் பயிற்சியில் ஈடுபடுவதற்கான மனநிலை பாதிக்கப்படும். எனவே, பயிற்சிக்கு இடையே அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்'' என்கிற சத்தியநாராயணன், முறையான ஓட்டத்துக்கும், நடைக்கும் டிப்ஸ் தருகிறார்.

    ஓடினால் வியாதிகள் ஓடும்!

    ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு உடலை சுய பரி¢சோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

    இதயம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் நடைப்பயிற்சி செய்வதே போதுமானது. மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு ஓடுவது நல்லது.

    நடைப்பயிற்சியில், ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் பருத்தி மற்றும் இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது. இதனால் உடலின் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

    சிந்தடிக் ஆடைகளை அணிந்து ஓடுவதால் வியர்வை நம் உடலின் மேற்பரப்பில் தேங்கும். உடல் குளிர்ச்சியாக இருப்பதுடன், உடல் வெப்பமடைவதை இது தவிர்க்கும்.

    சாலை ஓரத்தில் பயிற்சியில் ஈடுபடுபவர், ஒளிரும் தன்மைகொண்ட ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும்.

    காலுக்குப் பொருத்தமான, எடை குறைந்த காலணிகளை அணிந்து பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. மிகவும் இறுக்கமான காலணி அணிந்துகொண்டு நடைப்பயிற்சி செய்வது வலியை ஏற்படுத்தும்.

    புதிதாக ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுபவர்கள் இரண்டு நிமிடம் ஓட்டம், ஒரு நிமிடம் நடைப்பயிற்சி என்று மாற்றிமாற்றிச் செய்ய வேண்டும். இதனால், இதயத்துக்கு அதிக சிரமம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

    'நட’ப்பது நன்மைக்கே!

    சரியான நிலையில் நடப்பது மிகவும் அவசியம். தலையைத் தாழ்த்தியபடி முன்னோக்கிச் சாய்ந்தபடி நடப்பதால், கழுத்து வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி ஏற்படலாம். எனவே, முதுகை வளைக்காமல், நடக்கும்போதும் ஓடும்போதும் நேராக இருங்கள். முதுகின் இயல்பான தன்மையைப் பின்பற்றுங்கள்.

    வயிற்றை உள்ளிழுத்தபடி பயிற்சியில் ஈடுபடுங்கள். கால்கள் நடப்பதற்கு ஏற்ப நம் உடலை பேலன்ஸ் செய்யும் வகையில் கைகள் அசைகின்றன. இதனால் வேகமாக நடக்கலாம். கைகள் அசைக்காமல் நடக்கும்போது, அது முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, தாராளமாகக் கைகளை வீசி நடைபோடுங்கள்.

    சம தளத்தில் பயிற்சியில் ஈடுபடுங்கள். கரடுமுரடான ஓடுதளத்தைத் தவிர்த்துவிடுங்கள்.

    ஒரே இடத்தில் நடைப்பயிற்சி செய்யாமல், அவ்வப்போது நடக்கும் இடத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

    நடைப்பயிற்சியை மிதமாகத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரியுங்கள். அதேபோல முடிக்கும்போது வேகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துப் பயிற்சியை முடியுங்கள்.

    வீக்கத்தைப் போக்கலாம்!

    வாக்கிங், ஜாகிங் பயிற்சியில் அடியோ, வீக்கமோ ஏற்பட்டால் ஆர்.ஐ.சி.இ. (R.I.C.E.) என்ற முறையைப் பின்பற்றி முதலுதவி செய்ய வேண்டும். அதாவது,

    ஆர்- ஓய்வு (REST): அடிபட்டவுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.

    ஐ - ஐஸ் (ICE): அடிபட்ட இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

    சி - அழுத்தம் (COMPRESSION): அடிபட்ட இடத்தைத் துணியால் இறுகக் கட்ட வேண்டும்.

    இ - உயர்த்துதல் (ELEVATION) வீக்கமான இடத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

    ஜாகிங் பயன்கள்

    ஆண்களை விட, பெண்கள் உடலில்தான் கொழுப்பு அதிகம் சேருகிறது. 35 வயதைத் தாண்டிய பெண்கள், கண்டிப்பாக ஜாகிங் செய்ய வேண்டும். தேவை இல்லாத கொழுப்புகள் குறையும். ரத்த ஓட்டம் சீராகும். நாள் முழுக்கத் துடிப்புடன் செயல்பட முடியும். உயர் ரத்த அழுத்தம் குறையும். சர்க்கரையின் அளவு குறையும். எலும்பின் அடர்த்தி அதிகமாவதுடன் தசைகள் வலுவாகும்.