
இந்தபடமும் பாலசந்தரின் ஒரு வீடு இரு வாசல் போன்று இரண்டு விதமான கதைகளை உடையது. இடைவேளைக்கு முன் ஒரு கதையும், இடைவேளைக்கு பின் ஒரு கதையும் அமைய இருக்கிறது. இதில் ஒரு கதைக்கு கிழவன் என்றும், மற்றொரு கதைக்கு கருப்பு துரை என்றும் பெயர் வைத்துள்ளார். இரண்டிலுமே லாரன்ஸ் தான் நடிக்கிறார். கிழவனில் ஆண்ட்ரியாவையும், கருப்பு துரையில் லட்சுமி ராய்யும் நடிக்கிறார்கள். காமெடி மற்றும் பசங்க தொடர்பான படமாக இப்படம் இருக்கும் என்றும் நவம்பர் மாதம் முதல் ஷூட்டிங் ஆரம்பிக்க இருப்பதாகவும் லாரன்ஸ் தெரிவித்துள்ளார். அவரே நடித்து, இயக்கி, தயாரிக்கும் இப்படத்தில் பாடலாசிரியர் விவேகா, வசனம் எழுத இருக்கிறார்.
இந்தப்படம் குறித்து லாரன்ஸ் கூறுகையில், கங்கா படத்தின் ஷூட்டிங் போது முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட பிரச்னையால், மருத்துவர்கள் 6 மாத காலம் ஓய்வில் இருக்க சொல்லி அறிவுறுத்தினர். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றபோது இப்படத்தை இயக்கும் எண்ணம் தோன்றியது. ஒரு படத்தில் இரண்டு கதை வருவதால் படத்திற்கு ஒரு டிக்கெட்டுல இரண்டு சினிமா என்று பெயர் வைத்துள்ளதாக கூறும் லாரன்ஸ், தற்போது தான் இயக்கி வரும் முனி-3(கங்கா) படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகவும், காஞ்சனாவை காட்டிலும் அதிக த்ரில் மற்றும் காமெடி நிறைந்த படமாக இப்படம் இருக்கும் என்றும், டிசம்பரம் மாதம் கங்கா ரிலீஸாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment