Thursday, 24 July 2014

ஸ்கேன் பற்றிய ஸ்கேன் ரிப்போர்ட்..உங்களுக்காக..!

By: Unknown On: 23:34
  • Share The Gag

  • நவீன மருத்துவ உபகரணங்களில் ஸ்கேன் முக்கிய இடம் பெறுகிறது அவற்றின் விபரம் வருமாறு.

    டெஸ்டா எம்ஆர்ஐ ஸ்கேன்

    காந்த அதிர்வை உடலில் செலுத்தி தேவைப்படும் பாகங்களை குறுக்கு வெட்டாக துல்லியமாக படம் பிடித்து கட்டிகளை கண்டறிய உதவுகிறது.

    சிடி ஸ்கேன்

    தலைப்பகுதியின் உட்பாகங்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை இந்தக் கருவியின் மூலமாக மட்டுமே துல்லியமாக கண்டறியமுடியும். எக்ஸ்ரேயில் தெரியாத தலையின் எலும்பு உள்பாகங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இதன் மூலம் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. இந்த கருவி மிகவும் விலை உயர்ந்தது என்பதால் குறிப்பிட்ட பெரிய மருத்துவமனைகள் அல்லது பெரிய மருத்துவ பரிசோதனை கூடங்களில் மட்டுமே உள்ளன.

    அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்

    உடலின் உள் அமைப்புகளை முப்பரிமான முறையில் கண்டறிய முடியும். குறிப்பாக திரவப் பகுதியில் ஊடுருவி உடலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள், கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி நிலை போன்றவற்றை கண்டறிய மிகவும் உதவுகிறது.

    கலர் டாப்லர் ஸ்கேன்.

    ரத்த குழாய்கள் வழியாக ஊசி மூலம் மருந்து செலுத்தி குறைபாடுகளை துல்லியமாக கண்டறிய பயன்டுகிறது.

    எக்கோ

    இருதய செயல்பாடுகளை கண்டறிய பயன்படும் கருவி, நுண் அதிர்வுகள் மூலம் இருதய திறனை கண்டறிந்து குறைபாடுகள் கண்டறியப்பட்டால் தேவையான சிகிச்சை அளிக்க முடியும்.

    டிரெட் மில் டெஸ்ட்(டிஎம்டி)

    வயதிற்கு ஏற்ப இருதய துடிப்பு செயல்பாடுகளை இதன் மூலம் கண்டறியமுடியும். டிரட்மில் கருவியில் வேகமாக நடக்க வைத்தும், ஒட வைத்தும் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. இதன்மூலம் இருதய பலம், பலவீனம் கண்டறிய முடியும்.

    இசிஜி


    இருதய துடிப்பு சீராக இருப்பதை கண்டறிய இது பயன்படுகிறது.

    டிஜிட்டல் இசிஜி

    இருதயத்தின் நான்கு அறைகளில் உள்ள செயல்பாடுகளையும் துல்லியமாக கண்டறிய முடியும்.



    டிஜிட்டல் எக்ஸ்ரே

    சாதாரண எக்ஸ்-ரே கருவியை விட இது துல்லியமாக உடலின் குறைபாடுகளை சுட்டிக் காட்டுகிறது.

    மோமோ கிராம்

    பெண்களுக்கு ஏற்படும் மார்பக குறைபாடுகளை கண்டறிய முடியும் குறிப்பாக பெண்களுக்கு அதிகம் ஏற்படும் மார்பக கட்டிகள், மார்பக புற்றுநோய், போன்ற குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.

    மாஸ்டர் ஹெல்த செக் அப்

    மாஸ்டர் ஹெல்த் செக்-அப் என்ற பெயரில் பல மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் பல உடற்பகுதிகள் பரிசோதனை செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு மருத்துவமனையிலும் பல்வேறு கட்டண விகிதங்களிலும் செய்யப்படுகிறது. உலக இருதய நோய் தினம், நீரிழிவு நோய் தினம், போன்ற சில முக்கிய மருத்துவ தினங்களில் சிறப்பு சலுகை கட்டணங்களில் மாஸ்டர் செக்அப் செய்யும் மருத்துமனைகளும் உண்டு. தேராயமாக 1000 முதல் 5000 வரை முழு உடல் பரிசோதனை செய்யப்படுகின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் ரூ10 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் கட்டணங்களில் சிறப்பு மருத்துவ உடற்பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

    அஜித் - கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு தலைப்பு எப்போது?

    By: Unknown On: 22:43
  • Share The Gag
  • அஜித் - கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு இன்னும் அதிகாரபூர்வமாக டைட்டில் வைக்கவில்லை. இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிற நிலையில்

    இப்படத்திற்கான தலைப்பை ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிவிக்க இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. கௌதம் மேன்ன எப்போதும் தனது படங்களுக்கு தமிழில் கவித்துவமான தலைப்புகளை வைப்பது வழக்கம். அந்த வரிசையில் இப்படத்திற்கும் அப்படிப்பட்ட ஒரு டைட்டிலேயே அவர் வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்போது அஜித், த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் கௌதம் மேனன். இந்தப் படத்தில் த்ரிஷா ஒரு பெண் குழந்தைக்கு தயாக நடிக்கிறார். இப்படத்தில் த்ரிஷாவின் கேரக்டர் பெயர் ‘ரியா’வாம்!!

    முதன்முதலாக மொட்டை கெட்டப்பில் சுரேஷ்கோபி!

    By: Unknown On: 20:58
  • Share The Gag
  • இங்கே தமிழில் ரஜினி, கமல் உட்பட உச்ச நட்சத்திரங்கள் கேரக்டருக்காக மொட்டை அடித்து பாத்திருக்கோம். கேப்டன் மட்டும் இதிலிருந்து எப்படியோ தப்பித்துக்கொண்டார். ஆனால் மலையாள முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், ஆக்ஷன் ஹீரோவான சுரேஷ்கோபி இவர்களில் யாராவது தங்களது படங்களில் மொட்டையடித்து நடித்ததாக பார்த்திருக்கிறீர்களா..?

    இப்போது சுரேஷ்கோபி துணிந்து மொட்டை அடித்திருக்கிறார் ‘மாலூட்டி சாபு’ என்கிற படத்திற்காக. பாபு ஜனார்த்தனின் காமெடியான கதைதான் சுரேஷ்கோபியை மொட்டையடிக்க வைத்துவிட்டது.

    படத்தை இயக்குபவர் டிவின். இதுவரை எண்ணிக்கையில் மிக குறைவான அளவிலேயே காமெடி படங்களில் நடித்திருக்கும் சுரேஷ்கோபி இந்தப்படத்தில் அந்தக்குறையை போக்கும் விதமாக முழுநீள காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    ஆன்ட்ராய்டு போனில் இருந்து புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்ற சூப்பரான வழி!

    By: Unknown On: 19:05
  • Share The Gag
  •               கூல் ஃபோட்டோ டிரான்ஸ்பர் செயலி(அப்) ஆன்ட்ராய்டு போனில் இருந்து புகைப்படங்களை டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு எளிதாக இடமாற்றம் செய்து அசத்துகிறது.இந்த செயலியை பயன்படுத்தும் போது  வழக்கமாக செல்போனில் உள்ள புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் யூஎஸ்பி கேபில் தேவைப்படும் அல்லவா? ஆனால் இந்த செயலி கேபில் எதுவும் இல்லாமலேயே வைபீ மூலமாக புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்றி விடுகிறது.

    இது புகைப்படங்களை மாற்றுவதற்கான சுலபமான வழி மட்டும் அல்ல, விரைவான வழியும் கூட என்கிறது இந்த செயலி.
    அது மட்டும் அல்ல சும்மா ஜாலியாக புகைப்படங்களை மாற்றலாம் என்கிறது. அதாவது விதவிதமான முறையில் ப‌டங்களை ,அனிமேஷன் பாணியில் படங்களை மாற்றலாம். எப்படி தெரியுமா? செல் போனில் உள்ள புகைப்படத்தின் மீது கையை வைத்து அப்படியே தள்ளிவிட்டால் அது கம்ப்யூட்டருக்குள் போய்விடும். அல்லது போனை கம்ப்யூட்டர் மேலே வைத்து மானிட்டர் மீது வைத்தாலும் புகைப்படம் இடம் மாறிவிடுகிறது.

    இதே போல போனை குலுக்கினாலும் புகைப்படல் கம்ப்யூட்டருக்குள் போய் உட்கார்ந்து கொள்கிறது. புகைப்படத்தை கைகளால் பெரிதாக்கி அப்படியே தள்ளி விட்டாலும் புகைப்படம் கம்ப்யூட்டருக்கு சென்று விடுகிறது. உங்களுக்கு விசில் அடிக்க தெரியுமா? அடித்து பாருங்கள். அசந்து போவீர்கள். காரணம் விசில் அடித்தாலும் புகைப்படம் இடம்மாறிவிடுகிறது.

    இந்த அனிமேஷன் வசதிகளை தான் புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்ற கூலான வழி என கூல் ஃபோட்டோ டிரான்ஸ்பர் வர்ணிக்கிறது. இதற்கான விளக்க வீடியோவே சூப்பராக இருக்கிறது.ஆன்ட்ராய்டு போன் இருந்தால் பயன்படுத்தி பாருங்கள்.

    டவுண்லோடு செய்ய:http://www.coolphototransfer.com/

    ATM / BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படிக்கவும்!

    By: Unknown On: 17:51
  • Share The Gag

  • ATM Online Complaint: 

    மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும் இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

    அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.

    அப்படியொரு சுவாரசியமான செய்தி தான் நேற்று சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார்.

    அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது.
    உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார்.

    வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.

    இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.

    சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார்.

    அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார்.
    அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார்.

    அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக

    ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.
    மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.
    பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர்.

    அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர்.

    மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .

    இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman }
     
    https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html

    சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள்.

    நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.

    மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது.

    இதை பார்கையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது.

    எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும் இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை

    PL CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS

    https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html

    ஸ்ருதிஹாசனுக்கு மூன்று கோடி சம்பளமா?

    By: Unknown On: 16:58
  • Share The Gag
  • தெலுங்கில் மகேஷ் பாபு, தமன்னா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஆகடு. இப்படம் வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் ரிலீசாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இப்படத்தை முடித்த கையோடு மகேஷ் பாபு கொரட்டா ஆ சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

    மைத்ரி மூவீஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த பிரம்மாண்டமான படம் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி பூஜையுடன் ஆரம்பிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    தெலுங்கில் நம்பர் 1 நடிகரான மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க இலியானா, தமன்னா, காஜல் அகர்வால் ஆகிய மூவரும் கடும் போட்டியில் இருந்தனர்.

    கடைசியில் மூவரையும் ஓரம் கட்டிவிட்டு ஸ்ருதிஹாசனுக்கு அந்த வாய்ப்பை கொடுத்துள்ளார் மகேஷ் பாபு.

    இந்தி மற்றும் தமிழில் பிஸியாக நடித்து வரும் ஸ்ருதிஹாசன், முதலில் நடிக்க தயங்கியிருக்கிறார்.

    பின்னர் 3 கோடி சம்பளம் என்றதும் உடனே ஒப்புக் கொண்டுள்ளாராம்.

    மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வு! அருமையான தகவல்..!

    By: Unknown On: 08:01
  • Share The Gag
  •              மனிதர்களுக்கு பல சிக்கலை ஏற்படுத்துவது மலச்சிக்கல் நோயே. மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக மூலநோய் இருக்கும். வயிற்று தொந்தரவுகள் இருந்தால் மனதில் தெம்பு இருக்காது. பணிகள் செய்ய சுறுசுறுப்பு இருக்காது. ஏராளமான குறைகளை ஏற்படுத்தும் இந்த நோய்க்கு மிக சாதாரண மருந்து உள்ளது. முருங்கை கீரை பொரியலை சற்று அதிகமாக எடுத்து கொண்டாலே போதும். இரவு உணவு சாப்பிடும்போது, சோறு பாதி, முருங்கை கீரை பாதியாக பிசைந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலே இருக்காது. எவ்வித தொந்தரவும் இல்லாமல் இலகுவாக மலம் வெளியேறும்.

    வெளி மூலம்:


    முருங்கை இலையும், முத்து என்னும் சிற்றாமணக்கு இலையும் சம அளவில் பொடியாக அரிந்து விளக்கெண்ணெய் விட்டு லேசாக வதக்கி மூலத்தின் மேல் வைத்துக்கட்டினால் வெளி மூலம், மூளை மூலம், சதை மூலம் போன்ற அனைத்து மூலங்களும் சுருங்கி குணமாகும். மூலம், பௌத்திரம் (பகந்தரம்) நோய் குணமாக முருங்கை கீரை 2 பங்கு, ஊமர்த்தன் இலை 1 பங்கு ஆகியவற்றை பொடியாக அரிந்து வேப்ப எண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் ஆசனவாயின் மேல் வைத்துக்கட்டினால் கிருமி, பௌத்திரம், நச்சு தண்ணீர் வடியும் பௌத்திரம், நீண்ட நாள்கள் உள்ள மூலம், பௌத்திரம் தொந்தரவுகள் குணமாகும்.

    வாந்தி உண்டாக்க:

    சித்தர்களின் கூற்றுப்படி ஆறு மாதத்திற்கு ஒருமுறை இயல்பாக பேதி மருந்து சாப்பிட்டு வயிற்றை சுத்தம் செய்தல், வாந்தி எடுக்க மருந்து சாப்பிடுதல், பித்த வாந்தி எடுத்தல் மனித ஆரோக்கிய விதிமுறை ஆகும். இந்த காரத்திற்காகவும், வேறெதேனும் விஷத்தை குடித்த பிறகு அதை வாந்தி மூலம் வெளியே எடுக்க வேண்டும் என்றால், காட்டு முருங்கை இலைச்சாற்றை 36 கிராம் வாயில் ஊற்றி வாந்தி எடுக்க செய்ய வேண்டும். முருங்கை இலை சாற்றை வாயில் ஊற்றினாலே வாந்தி வந்திவிடும்.

    த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் கமல் ஜோ‌டி கௌதமி, மேலும் தகவல்கள்.!

    By: Unknown On: 07:56
  • Share The Gag
  •  த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கின் பூஜை சென்னையில் போடப்பட்டது. கமல், ஜீத்து ஜோ‌சப், ஜெயமோகன், ஜிப்ரான், படத்தின் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்தப் படத்தில் கமல் மனைவியாக மீனா நடித்த கதாபாத்திரத்தில் கௌதமி நடிக்கிறார்.

    ஒரு த்ரில்லர் படத்தை குடும்பப் பின்னணியில் எடுத்து வெற்றிபெற வைக்க முடியும் என்பதை நிரூபித்த படம் த்ரிஷ்யம். குடும்ப உறவுகள்தான் இதில் பிரதானம். மோகன்லாலின் டீன்ஏஜ் மகள் உடை மாற்றுவதை உயர் போலீஸ் அதிகாரியின் மகன் ரகசியமாக செல்போனில் பதிவு செய்து, தனது ஆசைக்கு அவள் இணங்காவிட்டால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டுகிறான். அப்போது அங்கு வரும் மீனா (பெண்ணின் தாய்) மகளின் வீடியோவை அழித்துவிடும்படி கெஞ்சுகிறார். மிரட்டுகிறவனின் பார்வை மகளிடமிருந்து தாய்க்கு மாறுகிறது. மகள் வேண்டாம் தாய் தனது ஆசைக்கு சம்மதித்தால் போதும் என்கிறான். கோபமாகும் மகள் அவனது தலையில் இரும்புக் கம்பியால் அடிக்க அவன் இறந்து போகிறான்.

    இறந்தது உயர் போலீஸ் அதிகாரியின் மகன். தனது குடும்பமே சிறைக்குப் போக நோரிடும் என்ற நிலையில் அந்த கொலையை மறைத்து தனது குடும்பத்தை எப்படி மோகன்லால் காப்பாற்றுகிறார் என்பது மீதி கதை.

    மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இப்படம் கன்னடம் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றி பெற்றுள்ளது. தமிழ் ரீமேக் விரைவில் ஆரம்பமாகிறது.

    மலையாளத்தில் படத்தை இயக்கிய ஜீத்து ஜோ‌சப் தமிழ் ரீமேக்கை இயக்குகிறார். ஒளிப்பதிவு சுஷித் வாசுதேவன். இவர்தான் மலையாள ஒரிஜினலுக்கும் ஒளிப்பதிவாளர். இசை ஜிப்ரான். விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக இதற்கும் இசையமைக்கிறார். இளையராஜாவுக்குப் பிறகு இப்படி தொடர்ச்சியாக கமல் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு பெற்றவர் ஜிப்ரான்தான்.

    வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ், ராஜ்குமார் தியேட்டர்ஸ் இணைந்து படத்தை தயாரிக்கிறது.