Sunday, 20 July 2014

ஷங்கரை அசிங்கப்படுத்திய எமி ஜாக்ஸன்..! நடந்தது என்ன..?

By: Unknown On: 18:39
  • Share The Gag
  • இந்திய சினிமாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் ஐ. இதில் விக்ரம், எமி ஜாக்ஸன், சந்தானம், பவர் ஸ்டார் என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

    இந்நிலையில் சமீபத்தில் எமி செய்த ஒரு விஷயம் ஷங்கரை மிகவும் கோபப்படுத்தியுள்ளது, ஏனென்றால் இவர் தற்போது மேலாடையின்றி ஒரு புகைப்படத்தை தட்டியுள்ளார். இது ஷங்கருக்கு மிகவும் வருத்தத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

    இது குறித்து எமி ’உங்கள் படத்தில் நான் நடிக்க வேண்டிய காட்சிகள் முடிந்து விட்டது. இனிமேல் என்னை அதிகாரம் செய்ய உங்களுக்கு உரிமையில்லை. நான் ஆடையுடனும் நடிப்பேன், ஆடையில்லாமலும் நடிப்பேன் அதை கேட்க நீங்கள் யார்?’ என்று தெரிவித்துள்ளார்.


    விஜய்யின் அரசியல் அதிரடி! அது என்ன அது....?

    By: Unknown On: 16:25
  • Share The Gag
  • தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். முன்னணி வார இதழ் ஒன்று வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி மதுரையில் இவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கி கௌரவிக்க இருக்கிறார்கள், அதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க, அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக மேலும் ஒரு தகவல் வந்துள்ளது.

    ஏற்கனவே தலைவா படத்தில் பட்ட கஷ்டம் இந்த முறை வரக்கூடாது என்பதற்காக மிக தெளிவாக விஜய் முடிவெடுத்து வருகிறார். அதில் முதல் வேலையாக தன் ரசிகர் மன்றங்களை வலுப்படுத்தினார்.

    தற்போது மீண்டும் தன் ரசிகர் பலத்தை காட்ட மதுரையில் மாபெரும் விழாவாக எடுக்க முடிவெடுத்துள்ளாராம். அன்றைய தினம் இளைய தளபதியின் ரசிகர்களுக்கு அரசியல் குறித்து செம்ம விருந்து காத்திருக்கிறது என நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றது.


    பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்!

    By: Unknown On: 14:25
  • Share The Gag
  • பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவேக் கூடாது என்றும் சொல்லலாம்.

    அது போன்ற போருட்களின் பட்டியலை பார்க்கலாம்.

    வெங்காயம்

    வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நான் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.

    பூண்டு

    பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூரணம் பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.

    உருளைக் கிழங்கு

    உருளைக் கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பாலீதீன் பையில் வைக்கக் கூடாது.

    தேன்

    உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், சுமை மற்றும் பலவற்றுக்காக பல வித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும், தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.

    வாழைப்பழம்

    வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

    பூசணிக்காய்

    பூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.

    மெலாம்பழம்

    கடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த மெலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், மெலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது. ஆனால், நறுக்கிய மெலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.

    இதேப்போல, அன்னாசி, கிவி பழம், பிலம் பழம், மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

    உலக சாதனை செய்யவிருக்கும் யான் !

    By: Unknown On: 14:16
  • Share The Gag
  • ஜீவாவின் நடிப்பில் விரைவில் வெளிவரயிருக்கும் படம் யான். இப்படத்தை முதன் முறையாக பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் இயக்குகிறார். இதில் ஒரு பாடல் காட்சிகள் மட்டும் தான் மீதி இருப்பதாக படக்குழு தெரிவிக்கின்றன.

    இப்பாடலை இதுவரை யாரும் எடுத்திராத வகையில் புதுமையாக எடுக்கவுள்ளார்களாம். எப்போதும் பாடலில் பிரம்மாண்டம் என்றால் அது ஷங்கர் தான்.

    தற்போது அவரை மிஞ்சும் வகையில் ஒரு பாடலில் ஜீவாவும், துளசியும் 100 உடைகளை அணிய இருக்கிறார்களாம். இதுவரை இத்தனை காஷ்டியும்களை எந்த பாடலிலும் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    டிடியை மேடையிலேயே கலாய்த்த சந்தானம்!

    By: Unknown On: 09:33
  • Share The Gag
  • தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் சந்தானம். இவர் தற்போது ஹீரோவாகவும் புது அவதாரம் எடுத்துள்ளார். இவரிடம் யார் மாட்டினாலும் தன் கவுண்டர் டையலாக்கால் கலாய்த்துவிடுவார்.

    சமீபத்தில் நடந்த முன்னணி விருது வழங்கும் விழாவில் சென்ற ஆண்டிற்கான சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை பெற்ற இவர் ‘எனக்கு தெரிஞ்ச டிடி தான் ட்ரன்க் அண்ட் ட்ரைவ் தான்’. அங்கு பைப் வைத்து ஊதிக்காட்ட சொல்வார்கள், இங்கு மைக் கொடுத்து டிடி என்ன டார்ச்சர் செய்கிறார்’ என்று கூறினார்.

    இதைக்கண்ட அனைவரும் ஆரவாரமாக கைத்தட்டி ஒரு நிமிடம் டிடியை மௌனமாக்கிவிட்டனர்.


    கழுத்து கருமை நிறம் மறைய! 100% உண்மையானது..!

    By: Unknown On: 09:24
  • Share The Gag
  •        சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது. கழுத்து கருமை நிறம் மறைய சில எளிய வழிமுறைகள் இதோ..

    * கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு – இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.

    * பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் – இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.

    * முட்டைக்கோசை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.

    * பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் படிப்படியாக மறையும்.

    * சிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்கும். அதனை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து நிறம் படிப்படியாக மாறுவதை காணலாம்.