Thursday, 21 August 2014

பரோட்டா அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் சீக்கிரம் வரும்!

By: Unknown On: 23:00
  • Share The Gag
  • "பரோட்டா அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு, நீரிழிவு நோய் வர அதிகம் வாய்ப்புள்ளது,'' என்று, கோவையில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மைதா மாவினால் தயாரிக்கப்படும் "பரோட்டா' உணவு, நமது பாரம்பரிய உணவுகளைப் பின்னுக்குத்தள்ளி, தமிழக மக்களின் முக்கிய உணவாக மாறியுள்ளது; இதனால், பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படுவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நவக்கரை ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரி சார்பில், கோவையில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் அருகில், நேற்று காலை 11 மணியளவில், இந்த பேரணியை பாரதியார் பல்கலை பதிவாளர் ராதாகிருஷணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி, பாலசுந்தரம் ரோடு, ஆர்.டி.ஓ., அலுவலகம் வழியாக, வ.உ.சி., மைதானம் வந்தடைந்தது. மாணவ, மாணவியர் புரோட்டா உணவால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை ஏந்தி கோஷமிட்ட படி நடந்து வந்தனர்.

    இதுகுறித்து ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரி முதன்மை செயலாளர் அஜீத்குமார் லால்மோகன் கூறியதாவது: சுகாதாரமற்ற உணவைச் சாப்பிடுவதால் மட்டுமில்லை; சாப்பிட கூடாத உணவைச் சாப்பிடுவதாலும் பல்வேறு நோய்கள் உண்டாகி வருகின்றன. மக்களுக்கு தங்கள் சாப்பிடும் உணவு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. கடைகளில் புதிய பெயரில் எந்த உணவை விற்றாலும், அதை வாங்கிச் சாப்பிடுவது வழக்கமாகி விட்டது. அதனால், உடலுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி அவர்கள் அறிவதில்லை. இன்றைக்கு பெரும்பாலான உணவு வகைகள், மைதா மாவில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன.

    தமிழகத்தில் சிறிய மற்றும் நடுத்தர ஓட்டல்களில் மைதா மாவில் தயாரிக்கப்படும் "பரோட்டா'தான் அதிகளவில் விற்பனையாகிறது. மைதா மாவு, ரவையில் இருந்து தயாரிக்கப்படுகிறது; மைதா இயல்பாக கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்; அதை வெண்மையாக மாற்ற, "பென்சாயில் பெராக்ஸைடு' மற்றும் "அலாக்ஸான்' என்ற வேதிப்பொருள் கலக்கப்படுகிறது; இதனால், மைதா வெள்ளை நிறமாகவும், மிருதுவான தன்மையுடனும் மாறுகிறது.இந்த "பென்சாயில் பெராக்ஸைடு' என்பது, அழகு நிலையங்களில் முகத்தை பொலிவு படுத்தவும், முகப்பருவை போக்கவும் பயன்படும் மருந்தாகும். "அலாக்ஸான்' என்பது படிகத்தன்மை கொண்ட வேதிக்கலவை. இது உணவில் கலந்தால், நீரிழிவு நோய் உண்டாகும் என, ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், மைதாவில் "அலாக்ஸான்' கலப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இது கணையநீர் சுரப்பியை சோர்வடைய செய்து, சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த விடாமல் தடுக்கிறது.

    இதனால் கணையத்தில் இன்சுலின் சுரப்பது தடை படுகிறது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. மைதாவில் தயாரிக்கப்படும் உணவுகளை அதிகம் சாப்பிவோருக்கும் நீரிழிவு நோய் வர அதிகமான வாய்ப்புள்ளது. மைதா "பரோட்டா' சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தற்போது பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை நடத்திய ஆய்வில், "பரோட்டாவில் "கார்போஹைடிரேட்' அதிகம் இருப்பதும், நார் சத்து இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    மைதா உணவைச் சாப்பிடுவதால் இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதோடு, கொழுப்பு படிதல், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் இளம் வயதிலேயே வரும் என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் விலை குறைவு என்பதால் "பரோட்டா' உள்ளிட்ட மைதாவில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் சாப்பிடுகின்றனர்; இதனால், பணக்காரர்களை மட்டுமே அதிகம் பாதித்து வந்த பல நோய்கள், ஏழைகளுக்கும் வர வாய்ப்புள்ளது; எனவே, "பரோட்டா' சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு, அஜித்குமார் லால்மோகன் கூறினார்.


    இது விலங்குகளுக்கான உணவு...!


    மைதா மாவினால் தயாரிக்கப்படும் "பரோட்டா' குறித்த வேறு சில தகவல்கள்:
    * மைதா மாவில் தயாரிக்கப்படும் பரோட்டா, நம் பாரம்பரிய உணவு இல்லை; பாரசீக நாட்டு உணவாகும். ஆரம்பத்தில், இது வீட்டில் வளர்க்கும் விலங்குகளுக்கான உணவாக இருந்தது.
    * மைதா மாவை வேக வைத்து கவனமாக உருட்டி, வண்டி இழுக்கும் குதிரைகளுக்கும், பொதி சுமக்கும் கோவேறு கழுதைகளுக்கும் உணவாக வழங்கப்பட்டன. ஒரு நாளைக்கு உணவு கொடுத்தால் போதும், பிறகு இரண்டு நாட்களுக்கு உணவு கொடுக்கத் தேவையில்லை. இதில், கொழுப்புச் சத்துஅதிகம் இருப்பதால், பன்றிகளுக்கும் உணவாக கொடுக்கப்பட்டது. காலப்போக்கில் இதில் ரொட்டி தயாரித்து மனிதர்களும் சாப்பிடத் துவங்கினர்.
    * இன்றைக்கு மைதாவில் நூற்றுக்கும் மேற்பட்ட உணவு பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் அதிக அளவில் தயாரிக்கப்படுவது புரோட்டா மட்டுமே.

    ஓட்ஸ் பழ கூழ்!

    By: Unknown On: 22:59
  • Share The Gag



  • ஓட்ஸ் பழ கூழ்தேவையான பொருட்கள்:

    வாழைப்பழம் - 4
    ஆப்பிள் - 3
    கோதுமை ரவை - 1/2 கப்
    ஓட்ஸ் - 2 கப்
    பால் - 1 1/2 லிட்டர்
    வெண்ணெய் - தேவையான அளவு
    தண்ணீர் - 1 கப்
    பட்டை தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    தேன் - தேவையான அளவு

    செய்முறை:

    • வாழைப்பழம், ஆப்பிளை துண்டகளாக வெட்டிக் கொள்ளவும்.

    • முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை போட்டு உருக வைக்க வேண்டும்.

    • பின்னர் அதில் கோதுமை ரவையை சேர்த்து, பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

    • அடுத்து அதில் ஓட்ஸ் போட்டு 3 நிமிடம் வறுக்க வேண்டும்.

    • பின் அதில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

    • பிறகு தண்ணீர் ஊற்றி கிளறி விட்டு, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.

    • இறுதியில் விசிலானது போனதும், அதனை திறந்து அதில் தேன், பட்டை தூள் சேர்த்து கிளறி, குளிர வைத்து, பின் அதில் நறுக்கி வைத்துள்ள வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் சேர்த்து பிரட்டி பரிமாறினால், சூப்பரான ஓட்ஸ் பழ கூழ் ரெடி!!!

    'ஏமாறாதே....ஏமாற்றாதே'(நீதிக்கதைகள்)

    By: Unknown On: 22:58
  • Share The Gag
  • ஒரு காட்டில் நரி ஒன்று இருந்தது.அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி...அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுதுபோக்காக இருந்தது.

    ஒரு நாள் ..கொக்கு ஒன்றை...அந்த நரி பார்த்தது.. அதை தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.

    கொக்கும் ...நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.

    கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்கு உண்ணக் கொடுத்தது.கொக்கால் ..தன் அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை...ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே ...கொக்கு தன் அலகை அதில் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.

    கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது...அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.

    நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது

    நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..

    அதைக் கண்ட கொக்கு ..'நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் ...என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்...என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.
    தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.

    நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.

    அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.

    பிறர் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது..அவர்களுக்கு உதவியும் செய்ய ஆரம்பித்தது.

    மந்தையால் முடியாது. ஆனால் மனிதனால் முடியும்..!

    By: Unknown On: 19:37
  • Share The Gag
  • ஒழுக்கம் என்றால் என்ன என்பதற்கு ஒவ்வொருவரும் தமது அறிவுக்கெட்டிய வரையில் அவரவர் விளக்கங்களைக் கொடுக்கின்றனர். ஒருவர் திருவள்ளுவர் சொன்னதைச் சொல்வார். இன்னொருவர் கம்பராமாயணம், பாரதம் என்பவற்றில் அவரால் ஒழுக்கம் என்று புரிந்துகொள்ளப்பட்ட விடயத்தைக் கூறுவார். வேறு சிலர் யாரோ ஒருவருடைய சுய சரிதையை உதாரணம் காட்டி அதில் உள்ளது தான் ஒழுக்கம் என்பார். இன்னும் சிலர் மத நூல்களில் சொல்லப் பட்டவற்றை தான் ஒழுக்கம் என்பார்.

    இவ்வாறாக அவரவர் எதையெல்லாம் ஒழுக்கம் என்று புரிந்துகொண்டார்களோ அதை எல்லாம் ஒழுக்கம் என்பர். ஒழுக்கம் பற்றி நாம் இதுவரையில் அறிந்து கொண்ட விடயங்களைப் பற்றி சிறிது அலசிப் பார்ப்போம்.

    முதலில், ஒரு மனிதனின் வாழ்க்கை எப்போதோ, எவராலோ உருவாக்கப்பட்ட விதிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டதாக அமைய வேண்டுமா என்பது பற்றிப் பார்ப்போம். மனிதனைத் தவிர ஏனைய உயிரினங்கள் அனைத்தும் இயற்கையின் ஒழுங்குகளை உள்வாங்கி வாழ்க்கையை மகிழ்ச்சியாக நகர்த்தும் போது எமக்கு மட்டும் ஏன் விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும்? இந்த விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் ஓட்டுமொத்த மனித குலத்துக்கும் ஏற்புடையதாக அமைக்கப்பட முடியாமைக்குக் காரணம் என்ன? ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு மரபும் மனித இனத்தைக் கூறு போட்டதைத் தவிர வேறு எதைச் சாதித்திருக்கிறது? அது மட்டுமல்ல. இந்த மதங்களாலும், மரபுகளாலும் நாம் மந்தைகளாக மாறிவிட்டோமே, ஏன்?

    நாம் எப்படி மந்தைகளாக்கப்பட்டு விட்டோம் என்பதை ஒரு காட்சியாகப் பார்ப்போம். இந்தக் காட்சியின் பாத்திரங்கள், ஒரு இடையன், ஒரு கைத்தடி, மந்தைக்கூட்டம். இங்கே கால மாற்றத்துக்கு இடமளிக்காத மதக் கோட்பாடுகளையும், மரபுகளையும் சுமந்து திரிபவன் தான் இடையன். மதமும் மரபும் உருவாக்கியுள்ள ஒழுக்க விதிகள் தான் கைத்தடி. இடையனின் வழிகாட்டலை ஆய்வுக்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளும் கூட்டம் தான் மந்தைக்கூட்டம். இடையனின் தொழில் தனது தேவைக்கு ஏற்ப மந்தைகளை மேய்ப்பதும் பின்னர் பண்ணைக்கு அழைத்துச் செல்வதும் தான். ஏற்கனவே இந்தச் சுழற்சிக்குப் பழக்கப்பட்டுள்ள மந்தைகளை மேய்ப்பது இடையனுக்கு மிகவும் சுலபம்.

    தற்செயலாக, அந்த மந்தைக் கூட்டத்தில் இருக்கும் ஒன்று ஏதோ ஒரு விழிப்புணர்வால் இடையனுடைய செயற்பாட்டில் மாற்றம் வேண்டும் என்று கேட்டாலோ அல்லது ஒரு புதிய பாதையைத் தெரிவு செய்யவேண்டும் என்ற நோக்கில் அந்தக் கூட்டத்தில் இருந்து வேறுபட முயற்சித்தாலோ இடையனால் அதைத் தாங்க முடியாது. தன்னிடமுள்ள கைத்தடியால் அந்த ஒற்றைக்கு ஒரு அடி . அத்துடன் இடையனின் சுழற்சிக்குப் பழகிப் போய் அதுதான் உலகம் என்று தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அந்த மந்தைக் கூட்டத்தில் இருக்கும் ஏனையவைகூட ஆத்திரமடைந்து 'இன்னுமொரு அடி போடுங்கள்! இன்னுமொரு அடிபோடுங்கள்!!' என்று இடையனை உற்சாகப்படுத்தும், பாவம், அந்த ஒற்றைதான் என்ன செய்யும்?

    மந்தையால் முடியாது. ஆனால் மனிதனால் முடியும்! எப்படி முடியும் என்று கேட்கிறீர்களா? ஒழுக்க விதி என்று சொல்லப்படுகின்ற ஒன்று, ஒரு இனத்தையோ, மதத்தையோ, கலாச்சாரத்தையோ அல்லது ஒரு மரபையோ ஏனையவற்றை விட உயர்ந்தது என்று பறை சாற்றுகிறதோ அதைக் குழி தோண்டிப் புதைத்து விடுங்கள். வேண்டாம்! வேண்டாம்!! குழிதோண்டிப் புதைத்துவிட்டால் பிறிதொரு காலத்தில் புதைபொருள் ஆராய்ச்சிக்குள் அகப்பட்டு மீண்டும் மனிதர்களை மந்தைக் கூட்டங்களாக்கிவிடும். எனவே எரித்துவிடுங்கள். மதங்களும், மரபுகளும், கலாச்சாரங்களும் மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்பதற்காகத் தரப்பட்டவையே அன்றி மனிதனை மந்தைகளாக்குவதற்கு அல்ல. உண்மையில் ஒரு மனிதன் ஒழுக்கமாக வாழ்வதற்கு உணர்வுள்ள மனிதனாக இருந்தால் போதும். ஏனெனில் ஒழுக்கம் என்பது உணர்வுள்ள மனிதன் வாழுகின்ற முறை. அதாவது உணர்வுள்ள மனிதனின் வாழ்க்கைப் பாணி தான் ஒழுக்கமே அன்றி வேறு எதுவுமேயில்லை

    கத்தி படத்தை விலைபேசும் விஜய் – அதிர்ச்சியில் லைக்கா நிறுவனம்!

    By: Unknown On: 18:41
  • Share The Gag
  • ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா ஆகியோர் நடித்திருக்கும் படம் கத்தி. இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

    ராஜபக்சேவின் நண்பரான லைகா ப்ரொடக்ஷ்ன் நிறுவனர் ஏ.சுபாஷ்கரன் மற்றும் கருணாமூர்த்தி ஆகியோர் தயாரித்திருக்கும் இப்படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என தமிழ் அமைப்புகளும், மாணவர்கள் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பிரச்சனையை சுமூகமாக முடிக்க விஜய்யே களம் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதாவது இப்படத்தின் ஒரே பிரச்சனை தயாரிப்பாளர் என்பதால் தயாரிப்பாளரிடம் பேசி வேறொரு தயாரிப்பாளரிடம் படத்தை கைமாற்ற படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

    மேலும் கத்தியை வேறு யாரும் விலைக்கு வாங்க தயங்கினால் விஜய் மற்றும் முருகதாஸ் இணைந்தே படத்தை சொந்தமாக ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    விரைவில் இதுகுறித்து முறையான அறிவிப்பு வெளிவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆனந்தம் என்பது எது தெரியுமா?

    By: Unknown On: 18:08
  • Share The Gag

  • * தீமையை நன்மையால் வெல்ல வேண்டும். கருமியை ஈகையால்
     வெல்ல வேண்டும். பொய்யனை உண்மையால் வெல்ல வேண்டும். பகைவனைஅன்பினால் வெல்ல வேண்டும். இவையே பண்புடையோரின்
     நெறிமுறையாகும்.


     * பிறர் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி அவர்களுடைய
     குறைகளையே காணுபவர்கள், பிறரைப் பற்றி புறஞ்சொல்லும்
     குணமுடையவர்கள், இறுதியில் தங்களுடைய குறைகளை திருத்த
     முடியாமல் தவிப்பார்கள்.


     * உண்மையில் ஆனந்தம் என்பது எது தெரியுமா? உங்களால்
     இயன்ற நல்ல செயல்களை செய்வதில் ஆர்வத்தை வளர்த்துக்
     கொள்ளுங்கள். அதன் மூலம் கிடைக்கும் ஆனந்தத்தை இழக்க
     மாட்டீர்கள்.


     * மனிதன் பழக்கத்திற்கு அடிமையானவன். ஒருமுறை செய்த
     செயலைத் திரும்ப திரும்பச் செய்யும் தன்மை கொண்டவன்.
    ஆதலால், பாவம் தரும் செயல்களை செய்வதற்கு அஞ்சுங்கள்.
    இல்லாவிட்டால், பழக்கத்தினால் மீண்டும் மீண்டும் செய்ய
     ஆரம்பித்து விடுவீர்கள்.


     * துன்பப்பட்டவனுக்கே இன்பத்தின் அருமையை உணர முடியும்.
    எவ்வித முயற்சியும் இல்லாமல் பெறும் இன்பம் வந்த வேகத்தில்
     காணாமல் போய்விடும். பொறாமை, பேராசை மற்றும் கெட்ட எண்ணம்
     உடையவன் பேச்சாலோ, உடலழகாலோ மட்டும் நல்லவனாகி விட
     முடியாது.

    கோலாகலமாக நடைபெற்ற நஸ்ரியா, பகத் பாசில் திருமணம் - வீடியோ உள்ளே!

    By: Unknown On: 18:04
  • Share The Gag
  • நேரம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நஸ்ரியா.

    இவருக்கும் மலையாள நடிகர் ஃபகத் பாசிலுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக நாம் ஏற்கெனவே அறிவித்திருந்தோம். அதன்படி இன்று திருவனந்தபுரம் கழக் கூட்டத்தில் உள்ள அல்ஹாஜ் திருமண மண்டபத்தில் இருவருக்கம் திருமணம் நடைபெற்று.

    2 பேரும் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் முஸ்லீம் மத வழக்கப்படியே சடங்குகள் செய்யப்பட்டு திருமணம் நடந்தது.

    இதில் சினிமா துறையினர், அரசியல் தலைவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    திருமணம் மண்டபம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆலப்புழாவில் நடக்கிறது.

    நாய்கடி வாங்கிய சிபிராஜ் - ருசிகர தகவல்...!

    By: Unknown On: 17:13
  • Share The Gag
  • நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் பல படங்களில் நடித்தலும் அவருக்கு சரியான தீனி போடும் வகையில் எந்த படமும் அமையவில்லை. அவர் நடித்த அணைத்து படங்களும் தோல்வியே தழுவின.

    ஆனால் வில்லனாக அவதாரம் எடுத்த நாணயம் படத்தில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இனி நடித்தால் நல்ல தரமான படங்களில்மட்டுமே நடிப்பேன் என்று பொறுமையாக இருந்த நாய்கள் ஜாக்கிரதை என்று வித்தியாசமான படத்தில் நடித்து உள்ளார்.

    இப்படம் ஒரு நாய்யை மையபடுத்தி வருகிறது,இதில் நாய் வளப்பரவராக சிபிராஜ் நடித்து உள்ளார்,அவர் அந்த நாய் கிட்ட மாட்டிகிட்டு படு அவஸ்தையும் அதில் சில பல திருப்பமான விஷயங்களையும் சேர்த்து ஜனரஞ்சகமான தயாராகியுள்ளது.

    அவர் படத்தில் நடிக்கும் அந்த நாய் கிட்ட பல கடிகள் வங்கி நடித்து உள்ளேன் ,சொல்லபோன என் உயிரை பண்ணையம் வைத்து நடித்து இருக்கிறேன் என்றார்.

    உள்ளே வந்த நடிகையும்...! வெளியே போன நடிகையும்...!

    By: Unknown On: 08:06
  • Share The Gag
  • சிம்பு, நயன்தாரா நடித்து வரும் இது நம்ம ஆளு படத்தை பாண்டியராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சிம்புவின் பிளாஷ்பேக் காட்சியில் ஒரு காதலி வருகிறார். அந்த காதலியாக நடிக்க முதலில் ஹன்சிகாவை கேட்டார்கள். அவர் மறுக்கவே அடுத்து டாப்ஸி நடிப்பார் என்று கூறப்பட்டது.

    நயன்தாராவுக்கும், டாப்ஸிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் வந்த மனக்கசப்பு மாறாமல் இருப்பதால் இருவரும் இணைந்து நடிப்பதில் சிக்கல் இருந்தது. அதனால் தற்போது டாப்ஸிக்கு பதில் ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

     அடுத்த வாரம் முதல் படப்பிடிப்பு நடக்கிறது. இறுதி நாட்களில் ஆண்ட்ரியாவும், நயன்தாராவும் இணைந்து நடிக்கிறார்கள். ஆண்ட்ரியா, சிம்புவுடன் இங்க என்ன சொல்லுது படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஏற்கெனவே நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்போதெல்லாம் இது சாத்தியமாகுமா....?

    By: Unknown On: 07:45
  • Share The Gag
  •  திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள்அது ஏன் என்று தெரியுமா?

    அதற்க்கு ஒரு காரணம் உண்டு, கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,

    அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம்,

    பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.