சிம்பு, நயன்தாரா நடித்து வரும் இது நம்ம ஆளு படத்தை பாண்டியராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சிம்புவின் பிளாஷ்பேக் காட்சியில் ஒரு காதலி வருகிறார். அந்த காதலியாக நடிக்க முதலில் ஹன்சிகாவை கேட்டார்கள். அவர் மறுக்கவே அடுத்து டாப்ஸி நடிப்பார் என்று கூறப்பட்டது.
நயன்தாராவுக்கும், டாப்ஸிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் வந்த மனக்கசப்பு மாறாமல் இருப்பதால் இருவரும் இணைந்து நடிப்பதில் சிக்கல் இருந்தது. அதனால் தற்போது டாப்ஸிக்கு பதில் ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
அடுத்த வாரம் முதல் படப்பிடிப்பு நடக்கிறது. இறுதி நாட்களில் ஆண்ட்ரியாவும், நயன்தாராவும் இணைந்து நடிக்கிறார்கள். ஆண்ட்ரியா, சிம்புவுடன் இங்க என்ன சொல்லுது படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஏற்கெனவே நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment