Friday, 25 July 2014

இல்லத்தரசிகளுக்கு எளிய டிப்ஸ்…அருமை!

By: Unknown On: 21:11
  • Share The Gag

  • சமையலை எளிதாக்க இல்லத்தரசிகளுக்கு சில டிப்ஸ்.

    * அரிசியை நன்கு ஊறவைத்து பின் வேகவைத்தால் சீக்கிரமாக வேகும்.

    * இட்லி, இடியாப்பம், புட்டு எண்ணையில்லாச் சப்பாத்தி ஆகியவற்றிற்கு முதலிடம் கொடுப்பது உடலுக்கு நல்லது.

    * ஒரு நேரத்திற்கு ஒரே வகைக் காய் நல்லது.

    * கீரை வகைகளை, அரை வேக்காட்டில் இறக்க வேண்டும்.

    * எண்ணெய்விட்டு தாளித்து பின் காய்களை வேக வைத்து பொரியல் செய்வது வழக்கம். அதற்குப் பதிலாக தேவையான அளவு தண்ணீர் மட்டுமே விட்டு காய்களையும் மசாலாச் சாமான்களையும் சேர்த்து வேகவேகக் கிளற வேண்டும். பச்சை நிறம் மாறும் முன்பே தேங்காய்த்துருவலை வேண்டிய அளவு சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும், தேங்காயை வேகவிடக் கூடாது.

    * குழம்புச் சாதத்தை குறைத்து மோர்சாதத்தைக் கூட்ட வேண்டும்.

    * காரம், புளி, உப்பு மிகக் கெடுதல் குறைத்து கொள்வது நல்லது.

    * தேங்காய் வெந்தால் கொழுப்புக் கூடும். பச்சையாக உபயோகித்தால் கூடுதலாக இருக்கிற கொழுப்பு வெளியேறி சமநிலைக்கு வந்துவிடும்.

    * பொரித்த பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது.

    * வெள்ளைச் சர்க்கரை கெடுதல் தரும். வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்ப்பது நல்லது.

    * அரிசியோடு சோளம், கேழ்வரகையும் சேர்த்து இட்லி தயாரித்தால் சத்து கூடுதலாக கிடைக்கும்.

    • காய்கறிகள், கீரை வகைகளை கூடுதலாக எடுத்துக் கொண்டு உணவை குறைத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

    அனுஷ்காவுடன் டான்ஸ் ஆடும் ரஜினி..!

    By: Unknown On: 20:52
  • Share The Gag
  • கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சோனாக்‌ஷி சின்ஹா, அனுஷ்கா நடிக்கும் படம் 'லிங்கா'. ரஜினி மீண்டும் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் என்பதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    சந்தானம், தேவ் கில், ஜெகபதி பாபு, விஜயகுமார், ஆர். சுந்தர்ராஜன் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

    ஹைதராபத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் அனுஷ்கா மற்றும் ரஜினிகாந்த் நடனம் ஆடும் ரொமான்டிக் டூயட் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. படத்தை ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரஜினி , அனுஷ்கா ஆடிய அப்பாடல் அனைவரையும் மிகவும் கவரும் எனவும் மேலும் ரஜினியின் ரசிகர்களுக்கு விருந்தாகவும் அமையும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    அஜீத்துக்கு பிறகுதான் விக்ரமாம்..?

    By: Unknown On: 18:31
  • Share The Gag
  • ஷங்கர் இயக்கத்தில் 'ஐ' படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துவருகிறது. இப்படத்தையடுத்து விஜய் மில்டன் இயக்கத்தில் 'பத்து எண்றதுக்குள்ள' படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.

    இப்படத்தில் விக்ரம் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் முடிந்ததும் கௌதம் மேனனுடன் கைகோர்க்க இருக்கிறார் விக்ரம்.

    கௌதம் மேனன் தற்போது அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

    இப்படத்திற்கு அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை கௌதம் மேனன் இயக்குகிறார். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வரும் என கூறப்படுகிறது.

    AUTORUN.INF வைரசை அகற்ற எளிய வழி! அருமையான வழி..!

    By: Unknown On: 16:49
  • Share The Gag
  • AUTORUN.INF வைரசை அகற்ற எளிய வழி!


    கணினியை பயன்படுத்துவோர் பலருக்கும் AUTORUN வைரசை பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கும். இது பெரும்பாலும் FLASHDRIVE கள் மூலமாக பரவக்கூடியது. இது பல்வேறு வைரஸ் தாக்குதல் நமது கணினியில் நிகழ அடிப்படையானது. இதை சாதாரண முறையில் நமது கணினியில் இருந்து அழிக்க முயன்றால் முடியாது.இதை நீக்க சில PROGRAM களும் உள்ளன. இருந்தாலும் SOFTWARE எதுவும் இல்லாமல் இதை கணினியில் இருந்து நீக்கலாம்.

    முதலில் உங்கள் கணினியில் NOTEPAD ஐ திறந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த CODE ஐ அப்படியே TYPE செய்து NOTEPAD ல் PASTE செய்யுங்கள். (c,d,e,f,g,h,i,k mentioned are Driver Letters. If you have more than k: you can add it)

     cd\
     c:
     attrib -r -s -h autorun.inf
     del autorun.inf
     d:
     attrib -r -s -h autorun.inf
     del autorun.inf
     e:
     attrib -r -s -h autorun.inf
     del autorun.inf
     f:
     attrib -r -s -h autorun.inf
     del autorun.inf
     g:
     attrib -r -s -h autorun.inf
     del autorun.inf
     h:
     attrib -r -s -h autorun.inf
     del autorun.inf
     i:
     attrib -r -s -h autorun.inf
     del autorun.inf
     j:
     attrib -r -s -h autorun.inf
     del autorun.inf
     k:
     attrib -r -s -h autorun.inf
     del autorun.inf


    இந்த DOCUMENT ஐ ஏதாவது ஒரு பெயரில் .bat என்று முடியும் வகையில் சேமியுங்கள் .(உதாரணம் filename.bat) இப்போது நீங்கள் சேமித்த அந்த கோப்பை RUN செய்யுங்கள். இப்போது உங்கள் கணினியில் இருந்து autorun.inf வைரஸ் நீக்கப்பட்டிருக்கும்.

    இன்னார்க்கு இன்னாரென்று - திரைவிமர்சன அலசல்...!

    By: Unknown On: 16:34
  • Share The Gag
  • தன் தந்தையோடு கிராமத்தில் சிறு ஹோட்டல் நடத்தி வருகிறார் நாயகன் கணேஷ் (சிலம்பரசன்). அதே ஊரில் தன் முறைப்பெண்ணான பண்ணையாரின் மகள் ஜானகியை (அஞ்சனா) சிறு வயதிலிருந்தே காதலித்து வருகிறார். ஜானகியும் அவரை காதலித்து வருகிறார். ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் கணேசின் அப்பாவிற்கு தெரிந்து விடுகிறது. இவர்களை பிரித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தன் உறவுக்காரரான பண்ணையாரிடம் சென்று இந்த விஷயத்தை கூறுகிறார். இதற்கு பண்ணையார் கோபம் அடைந்து இந்த விஷயத்தை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி கணேசின் அப்பாவை திட்டி விடுகிறார்.

    பிறகு கோபத்துடன் வீட்டிற்கு செல்லும் பண்ணையார் தன் மகளான ஜானகியை கண்டிக்கிறார். தன் மூத்த மகனை அழைத்து கணேசை கொன்றுவிடுமாறு கூறுகிறார். இதைக்கேட்ட பண்ணையாரின் மகன், கணேஷ் வீட்டிற்கு செல்கிறார். அங்கு கணேஷ் இல்லாததால் அவரின் அப்பாவை அடித்து விடுகிறார். மயக்கத்தில் கீழே விழும் அவர் இறந்து விடுகிறார்.

    அதன்பிறகு வீட்டிற்கு வரும் கணேஷ், தந்தை இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார். பிறகு பண்ணையாரிடம் நியாயத்தை கேட்க செல்கிறார். அங்கு பண்ணையார் தன் மகளை திருமணம் செய்ய வேண்டுமென்றால் 30 நாட்களில் 1 கோடி ரூபாய் எடுத்துவந்தால் மட்டுமே என் பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக சவால் விடுகிறார். இதைக் கேட்ட கணேஷ், ஜானகியை கைபிடிக்கும் நோக்கத்தில் இந்த சவாலை ஏற்று சென்னைக்கு செல்கிறார்.

    சென்னையில் தன் சித்தப்பா வைத்திருக்கும் ஹோட்டலில் சமையல்காரராக வேலைக்குச் சேர்கிறார் கணேஷ். இதே ஊரில் ஓட்டல் நடத்தி நஷ்டம் அடைந்திருக்கும் மற்றொரு ஹோட்டல் முதலாளியின் மகளான கவிதா அந்த ஹோட்டலுக்கு வருகிறார். அங்கு உணவு சாப்பிடும் கவிதா (ஸ்டெபி), தன் ஹோட்டலில் உள்ள சுவை போன்று உணவு இருப்பதால் கணேசை வைத்து ஹோட்டல் நடத்த முடிவு செய்து தன் தந்தையிடம் சென்று ஆலோசனையும் கூறுகிறார். இதை ஏற்ற கவிதாவின் தந்தை ஹோட்டல் நடத்த முடிவு செய்கிறார். இதற்கிடையில் கவிதா, கணேசை காதலிக்க ஆரம்பிக்கிறார்.

    இறுதியில் கணேஷ் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து ஜானகியை மணந்தாரா? இல்லை கவிதாவை மணந்தாரா? என்பதை பல திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

    அறிமுக நாயகன் சிலம்பரசன் முதல் படம் என்பதால் முடிந்தவரை கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். இருந்தாலும் திரையில் பார்க்கும்போது பல காட்சிகளில் இவர் பேசும் வசனங்கள் நடிப்போடு ஒன்றவில்லை. பண்ணையாரின் மகளாக வரும் நாயகி அஞ்சனா, கிராமத்து பெண் வேடத்தில் அழகாக பொருந்துகிறார். சிறு வயதான இவரை விதவை கோலத்தில் பார்க்க முடியவில்லை. மற்றபடி, பார்க்க அழகாக இருக்கிறார். இன்னொரு கதாநாயகியாக வரும் ஸ்டெபி கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்.

    பண்ணையாராக வரும் சந்தானபாரதி வில்லனாக மிரட்டுகிறார். நாயகனுக்கு சித்தப்பாவாக வரும் அனுமோகன் பிற்பாதியில் கதையை நகர்த்த உதவியிருக்கிறார். இயக்குனர் ஆண்டாள் ரமேஷ் பல காட்சிகளை பிற படங்களிலிருந்து உருவியது அப்பட்டமாக தெரிகிறது. படத்தில் இவர் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். வசந்தமணி இசையில் பாடல்கள் பரவாயில்லை. சாய் நடராஜ் ஒளிப்பதிவு ஒரு சில இடங்களில் பளிச்சிடுகிறது.

    மொத்தத்தில் ‘இன்னார்க்கு இன்னாரென்று’ பழைய கதை.

    ஜெட் வேக உற்சாகத்தில் அஜீத்! நடந்தது என்ன..?

    By: Unknown On: 08:49
  • Share The Gag
  • மங்காத்தா, ஆரம்பம், வீரம் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தனது 55வது படத்தில் உற்சாகமாக நடித்துக்கொண்டிருக்கிறார் அஜீத். முன்பெல்லாம் தனது படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போது அதிக இடைவெளி எடுத்துக்கொள்ளும் அஜீத், முந்தைய படங்கள் கொடுத்த வெற்றி காரணமாக ஜெட் வேக உற்சாகத்தில் நடித்துக்கொண்டிருககிறார்.

    ஆரம்பத்தில் சென்னை ஈசிஆர் சாலை பகுதியில் இரவு நேரங்களில் படப்பிடிபபு நடத்தி வந்த கெளதம்மேனன், பின்னர் வெளிநாடுகளுக்கு சென்று பாடல்களை படமாக்கி விட்டு வந்தவர், மறுபடியும் இரவு நேரங்களில் படப்பிடிப்பை முடுக்கி விட்டுள்ளார். சென்னையை சுற்றி நடக்கும் கதையை மையமாகக்கொண்ட படம் என்பதால், பெரும்பாலான காட்சிகளை ஈசிஆர் சாலையிலேயே படமாக்குகிறார்கள்.

    இந்த நிலையில், தினமும் இரவு படப்பிடிப்பு என்பதால், பகலில் வெளியில் சுற்றாமல், தூங்கி ஓய்வெடுத்து விட்டே இரவு 10 மணிக்கு மேல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார் அஜீத். அதனால், இரவு நேரத்தில் தனக்கு ஷாட் இலலையென்றால்கூட அவர் கேரவனுக்குள் சென்று தூங்குவதில்லையாம். கேமரா அருகில் அமர்ந்தபடி மற்றவர்கள நடிப்பதை கவனிக்கிறாராம். அப்போது தனக்கு தோன்றும் கருத்துகளையும் டைரக்டர் முன் வைக்கிறாராம். அந்த அளவுக்கு படம் நன்றாக வர வேண்டும் என்பதில் அக்கறை காட்டுகிறாராம் அஜீத்.

    தொப்பை குறைய உதவும் எளிய க்ரஞ்சஸ் பயிற்சி!

    By: Unknown On: 08:39
  • Share The Gag
  •  தொப்பை குறைய உதவும் க்ரஞ்சஸ் பயிற்சி


    இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.

    அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.

    செய்முறை: 


    முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும்.

    அப்போது தான் முழுபலனையும் பெற முடியும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 30 முறை செய்ய வேண்டும். பார்க்க எளிமையாக தெரிந்தாலும் செய்யும் போது இந்த பயிற்சி சற்று கடினமாக தான் இருக்கும்.

    ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்த எண்ணிக்கையில் உங்களால் முடிந்த அளவு செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 50 முறை கூட செய்யலாம். செய்யும் எண்ணிக்கையின் அளவை பொறுத்து விரைவில் பலன் கிடைக்கும். 

    ஆர்.கே இனி மக்கள் தளபதியாம்..! என்ன கொடுமை சார்.....!

    By: Unknown On: 08:01
  • Share The Gag
  • தமிழ் நாட்டைச் சேர்ந்த என்ஆர்ஐ தொழிலதிபர் ஆர்.கே. வெளிநாட்டில் தயாரான சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர், எல்லாம் அவன் செயல் என்ற படத்தை தயாரித்து அதில் ஹீரோவாக நடித்தார். சிந்தாமணி கொலை கேஸ் என்ற மலையாளப்படத்தின் ரீமேக் அது. அந்த படம் ஓரளவுக்கு ஓடியதும், ஆர்கே நிரந்தர ஹீரோவானர். இங்கேயே கிளப்புகள், ஓட்டல்கள் திறந்தார். சினிமாவிலும் நடித்தார். ஆனால் அதன் பிறகு அவர் நடித்த மருதமலை, புலிவேஷம் படங்கள் ஓடவில்லை. பாலாவின் அவன் இவன், விஜய்யின் வேலாயுதம் படங்களில் கேரக்டர் ரோலில் நடித்தார். அதுவும் சரியாக போகவில்லை.

    அதனால் மீண்டும் எல்லாம் அவன் செயல் படத்தை இயக்கிய மலையாள இயக்குனர் ஷாஜி கைலாசை அழைத்து வந்து என் வழி தனி வழி என்ற படத்தை தயாரித்து ஹீரோவாக நடிக்கிறார். இதில் அவர் கரடுமுரமான என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனாக்ஷி தீட்சித், பூனம் கவுர் நடிக்கிறார்கள்.

    இந்த படத்தின் மூலம் ஆர்கே மக்கள் தளபதியாகிறார். விஜய் இளைய தளபதி, பரத் சின்ன தளபதி, விஷால் புரட்சி தளபதி, அந்த வரிசையில் ஆர்கே மக்கள் தளபதியாகி இருக்கிறார். ரசிகர்கள் அவருக்கு வற்புறுத்தி கொடுத்த பட்டமாம் இது. அவர்களது அன்புக்கு கட்டுப்பட்டு இந்தப் பட்டத்தை பெற்றுக் கொண்ட ஆர்.கே அதனை என் வழி தனி வழி படத்தின் டைட்டிலிலும், விளம்பரத்திலும் பயன்படுத்தப் போகிறார். அவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் இது கூறப்பட்டுள்ளது.

    வயிற்றுக்கான எளிய பயிற்சி! முயற்சி செய்து பாருங்கள்..!

    By: Unknown On: 07:45
  • Share The Gag

  • வயிற்றுக்கான எளிய பயிற்சி

    வயிற்றுப்பகுதியில் உள்ள சதை குறைய எளிய பயிற்சிகள் பல உள்ளன. அவற்றுள் இதுவும் ஒன்று. இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    ஆனால் அதிக தொப்பை உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி பலன் தராது. தரையில் நன்றாக காலை நீட்டி உட்காரவும். வலது காலை இடது தொடையில் உள் பக்கமாக வைக்கவும். மூச்சை உள் இழுத்தபடி வலது கையை மேலே உயர்த்திய படி, இடது கையால் இடது கால் பாதத்தை முடிந்த வைர தொட முயற்சிக்கவும்.

    கைகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருகையில் மூச்சை வெளியே விடவும். கால்கள் மாற்றி மீண்டும் இதேபோல் செய்யவும். இப்படி பத்து முறை தொடர்ந்து செய்ய வேண்டும்.  

    ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 10 முறை செய்தால் போதுமானது.படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 25 முதல் 30 வரை செய்யலாம்.இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    பலன்கள்.....அடிவயிற்றுபாகங்களுக்கு அழுத்தம் கிடைக்கும். கல்லீரல், கணையம், பித்தப்பை போன்ற உறுப்புகளின் செயல்பாடுகள் சீரடையும்.