Saturday, 9 August 2014

பித்த வெடிப்பை போக்குவதற்கான சிகிச்சைகள் சில.. !

By: Unknown On: 23:10
  • Share The Gag
  • பாதங்கள் பிளவுபடுவதை பித்த வெடிப்பு என்று அழைப்போம். அவை தொல்லை மற்றும் வலியை கொடுப்பதோடு நிறுத்தாமல் உங்களுக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தும். பாதங்களுக்கு போதிய கவனத்தை செலுத்தாததாலும் சுத்தமாக இல்லாததாலும் தான் பித்த வெடிப்பால் பலரும் கஷ்டப்படுகின்றனர். இருப்பினும் உங்கள் பாதங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு இன்னும் பல காரணிகளும் இருக்கத் தான் செய்கிறது. இதனால் உங்கள் பாதங்களில் பித்த வெடிப்பு ஏற்பட்டு சிதைவுகளும் உண்டாகிறது. ஊட்டச்சத்து குறைபாடுகளினால் கூட சில நேரங்களில் பித்த வெடிப்பு உண்டாகலாம். உங்கள் பாதங்களை நல்ல அக்கறையுடன் கவனித்து கொண்டு பித்த வெடிப்பு ஏற்படுவதை தவிர்க்கவும்.

    அப்படி செய்யாமல், வலி வரும் வரை காத்திருந்து அதன் பின் அதற்கு சிகிச்சை எடுக்கும் கஷ்டம் எதற்கு? ஒரு வேளை, பித்த வெடிப்பு ஏற்படாமல் தடுக்கும் முயற்சியை நீங்கள் கடந்திருந்து ஏற்கனவே வலி உண்டாகியிருந்தால், அதற்கு பல வீட்டு சிகிச்சைகள் இருக்கிறது. அவைகளை பின்பற்றினால் உங்கள் பித்த வெடிப்புகள் குணமாகும். உங்கள் பித்த வெடிப்புகள் குணமான பிறகு, அது மீண்டும் வராமல் தடுக்க அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். உங்கள் மொத்த எடையையும் தாங்கும் விதமாக உங்கள் பாதத்தின் தோல் கடுமையானதாக இருக்கும்.

    மெருகேற்ற உதவும் கல்/ஸ்கரப்பர்

    பாத சருமத்தை மென்மையாக்க, பாதங்களை வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அரம் அல்லது நுரைக்கல்லை பயன்படுத்தி உங்கள் பாதத்தில் உள்ள செத்த அணுக்களை மெதுவாக தேய்த்து எடுக்கவும். பாதங்களுக்கான நல்ல மாய்ஸ்சுரைசிங் க்ரீமை தடவிக் கொள்ளுங்கள். அதனை பாதங்கள் உறிஞ்சிட வேண்டும் என்பதால் ஒரு 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள். ஈரப்பதத்தை நீட்டிக்க செய்திட இரவு நேரங்களில், ஏன் பகல் முழுவதும் கூட பாதங்களுக்கு காலுறைகளை அணிவித்துக் கொள்ளுங்கள். ஒரு வாரத்திற்கு இதனை தினமும் ஒரு முறை செய்தால், அதனால் ஏற்பட போகும் மாற்றத்தை கண்டு வியப்பீர்கள்.

    பாத மாஸ்க்

    ஒரு பெரிய வாளி ஒன்றை எடுத்து அதில் வெப்பமான தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள். உங்கள் பாதங்களை அதனுள் முக்கிக் கொள்ளுங்கள். உப்பு, எலுமிச்சை சாறு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டரின் பயன்பாடும் பின் தேவைப்படும். 15-20 நிமிடங்கள் வரை உங்கள் பாதங்கள் இந்த நீரில் ஊறட்டும். பின் உரைக்கல் அல்லது பாத ஸ்கரப்பரை கொண்டு உங்கள் பாதங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தேய்க்கவும். 1 டீஸ்பூன் நீர்க்காத கிளிசரின், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து உங்கள் பித்த வெடிப்பின் மீது தடவுங்கள். இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு விட்டு, காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் காலை கழுவிடுங்கல்.

    தேன் கலவை

    உங்கள் பாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்க தேன் பெரிதும் உதவி செய்யும். மேலும் தேனில் சிறந்த ஆன்டி-பாக்டீரியல் குணங்கள் அடங்கியுள்ளது. 2-3 டீஸ்பூன் அரிசியை எடுத்து, அதனுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து அடர்த்தியான பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் பித்த வெடிப்புடன் வறண்டு காணப்பட்டால், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது இனிப்பு பாதாம் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளவும். வெதுவெதுப்பான நீரில் பாதங்களை 10 நிமிடம் வரை ஊற வைத்து, பின் அந்த பேஸ்ட்டை வைத்து மெதுவாக பாதத்தில் தேய்க்கவும். அப்படி செய்யும் போது பாதங்களில் உள்ள இறந்த அணுக்கள் நீங்கிவிடும்.

    தேன் அல்லது ஆலிவ் எண்ணெய்

    பித்த வெடிப்பு ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது, வெறும் தேன் அல்லது ஆலிவ் எண்ணெய்யை கூட பாதங்களில் மெதுவாக தடவலாம். இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு விடுங்கள். இதனை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு தினமும் ஒரு முறை செய்து வந்தால், உங்கள் பித்த வெடிப்புகளுக்கு நல்ல பயனை அளிக்கும்.

    குறிப்பு

    மேற்கூறியவற்றை தினமும் நேரம் கிடைக்கும் போது செய்து வந்தால், நிச்சயம் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, பாதங்களில் உள்ள பித்த வெடிப்புகள் நீங்கி, பாதங்கள் அழகாக இருக்கும்.

    இந்தியாவின் ‘டாம் க்ரூஸ்’ ஆனார் சத்யராஜ்!!

    By: Unknown On: 22:36
  • Share The Gag
  • சிகரம் தொடு’ படத்தில் சத்யராஜ் விக்ரம் பிரபுவின் தந்தையாக நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.  இந்தப்படத்தின் இயக்குனர் கௌரவ் இந்தக்கதையை உருவாக்கியபோதே அந்த கேரக்டரில் சத்யராஜ் தான் அவர் மனதில் வந்து நின்றிருக்கிறார். அதனால் இரண்டு வருடங்களுக்கு முன்னரே சத்யராஜிடம் இந்த கதையை சொல்லிவிட்டாராம் கௌரவ்.

    சிகரம் தொடு’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய கௌரவ் “இந்தப்படத்தில் கிட்டத்தட்ட 15 நாட்கள் சத்யராஜ் சார் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இரவு நேர படப்பிடிப்புதான் அவருக்கு.. நாங்கள் எல்லாம் சட்டை கசங்காமல் வேலைபார்க்க, அவரோ மண்ணிலும் சேற்றிலும் புரண்டு அழுக்குத்துணியுடனே காட்சியளிப்பார்.

    ஆனால் அதற்காக அவர் கொஞ்சம் கூட முகம் சுழித்ததே இல்லை.. சத்யராஜ் சாரை நான் ஹாலிவுட் நடிகர்  டாம் க்ரூஸ் மாதிரி தான் பார்க்கிறேன்..” என  ஒரு பெரிய ஐஸ்கட்டியாக தூக்கி வைத்தார்.

    உங்கள் செல்ல கண்மணிக்களுக்கு முத்துப்பல் முளைக்கப் போகிறதா !

    By: Unknown On: 21:51
  • Share The Gag
  •  வயிற்றுப்போக்கு குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது, வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும். அப்படி உங்கள் குந்தைக்கு "வயிற்றுப்போக்கானது" திடீரென்று ஏற்பட்டால், அவர்களுக்கு உடனே ORS கொடுங்கள். இல்லாவிட்டால், குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து விரைவில் குறைந்துவிடும்.

    தொடர்ச்சியான அழுகை: குழந்தைகள் தொடர்ந்தோ அல்லது அவ்வப்போதோ காரணமின்றி அழ ஆம்பித்தால், அவர்களுக்கு பற்கள் முளைக்க ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். அப்போது அவர்களின் கவனத்தை திசைத்திருப்பும் வகையில் தொட்டிலை ஆட்டிவிட்டோ அல்லது தாலாட்டு பாடவோ செய்யலாம். இல்லாவிட்டால், உங்கள் கைகளை நன்கு சுத்தமாக நீரில் கழுவிவிட்டு, பின் அவர்களின் ஈறுகளை மசாஜ் செய்துவிடலாம்.

    காய்ச்சல் : குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது, அவர்கள் கண்ட கண்ட பொருட்களை வாயில் வைப்பதால், வயிற்றில் தொற்றுகள் ஏற்பட்டு, சில சமயங்களில் காய்ச்சலுக்கு கூட உள்ளாவார்கள். எனவே அப்போது அவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைத்த காய்ச்சல் மாத்திரையைக் கொடுங்கள். ஒருவேளை காய்ச்சல் அளவுக்கு அதிகமாக இருந்தால், மருத்துவரிடம் உடனே அழைத்துச் செல்லுங்கள்.

    கண்டதைக் கடிப்பதால் ஏற்படும் விபத்துக்கள் :குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் நேரத்தில், அவர்கள் கைகளுக்கு எது கிடைத்தாலும், அது உடனே அவர்களின் வாய்க்கு தான் செல்லும். அதிலும் அவர்கள் கடினமான பொருட்களைக் கூட கடிக்க நேரிடுவதால், சற்று கவனமாக இருக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு தேன் நிரப்பப்பட்ட டீத்திங் ரிங்ஸை கைகளில் மாட்டிவிட்டால், அவர்கள் அதை வாயில் போட்டு மென்று கொண்டிப்பார்கள்.

    உணவுகளைத் தவிர்ப்பார்கள் :பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் காலத்தில், குழந்தைகள் உணவுகளை உட்கொள்ளாமல் தவிர்ப்பார்கள். ஆகவே அப்போது, அவர்களுக்கு வெதுவெதுப்பான பால் நிரப்பப்பட்ட பால் பாட்டிலை குழந்தைகளுக்கு கொடுத்தால், வெதுவெதுப்பான பாலானது, குழந்தைகளின் ஈறுகளில் உள்ள வலியை தணித்து, அவர்கள் பால் பாட்டிலின் நிப்புளை மெல்லவும் வசதியாக இருக்கும்.
    வாய்வு தொல்லை ஏற்படும் :குழந்தைகளுக்கு வயிற்றில் தொற்றுகள் ஏற்பட்டால், வாய்வுத் தொல்லையும் அதிகரிக்கும். அப்படி உங்கள் குழந்தை வாய்வு தொல்லையால் அதிகம் அவஸ்தைப்பட்டால், அவர்களை குப்புற படுக்க வையுங்கள். இதனால் அவர்களின் உடலில் உள்ள வாயுவானது வெளியேறிவிடும்.

    தவறுதலாக அழித்த வாட்ஸ்அப் பைல்களை மீட்டெடுப்பது எப்படி?

    By: Unknown On: 21:11
  • Share The Gag
  • கணினி உலகை பேஸ்புக் என்ற சமூக வலைத்தளம் ஆட்டிப்படைப்பதை போன்றே மொபைல் உலகை வாட்ஸ்அப் என்ற மென்பொருள் ஆட்டிப்படைகின்றது. இதன் அசுர வளர்ச்சியை பார்த்து ஆடிப்போன போஸ்புக் நிறுவனம் அதை விலைக்கு வாங்கி தன்னுடையதாக்கிகொண்டது. இதில் சாட்டிங், மெசேஜ், படங்கள், தகவல்கள், ஆடியோ மற்றும் வீடியோக்களை எளிதாக அனுப்பமுடிவதால் இம்மென்பொருள் பலரையும் கவர்ந்துவிட்டது.

    நீங்கள் மொபைல் மாற்றும் போதோ அல்லது மெமரி கார்ட் மற்றும் போதோ ஏற்கனவே உபயோகப்படுத்தி வந்த வாட்ஸ்அப் தகவல்கள் காணமல் போய் இருக்கும். இல்லையென்றால்  தவறுதலாக அழித்திருப்போம். எனவே அழிந்த வாட்ஸ்அப் பைல்களை எப்படி திரும்ப மீட்பது என பார்க்கலாம்.

    1. உங்கள் வாட்ஸ்அப் கணக்கை uninstall செய்துவிட்டு, அதே நம்பரில் புதிதாக வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்யுங்கள்.

    2. இன்ஸ்டால் செய்த பிறகு வரும் Restore பட்டனை தேர்வு செய்யும் போது உங்கள் பழைய தகவல்கள் அனைத்தும் உங்கள் கணக்கில் இருக்கும்.

    கவனிக்க வேண்டியவை:

    நீங்கள் Uninstall செய்யவதற்கு முன்பு தற்போது உள்ள தகவல்களை backup செய்யுங்கள். அதற்கு WhatsApp > Menu Button > Settings > Chat Settings > Backup conversations. செல்லுங்கள் இந்த backup பைல் “msgstore.db.crypt7″ ஆனது /sdcard/WhatsApp/Databases folder இந்த இடத்தில இருக்கும். இதை புதிதாக இன்ஸ்டால் செய்த பிறகு restore செய்து கொள்ளுங்கள்.

    சுவைக்கும் போதும், நிறம் மாறும் ஐஸ்கிரீமை- ஸ்பெயின் நாட்டுக்காரர் கண்டுபிடிப்பு..!

    By: Unknown On: 19:43
  • Share The Gag
  • சுவைக்கும் போதும், நிறம் மாறும் ஐஸ்கிரீமை- ஸ்பெயின் நாட்டுக்காரர் கண்டுபிடிப்பு

    ஒவ்வொரு முறை சுவைக்கும் போதும், நிறம் மாறும் ஐஸ்கிரீமை, ஸ்பெயின் நாட்டுக்காரர் தயாரித்து உள்ளார். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இயற்பியலாளர் மேனுவல் லினாரஸ், அந்நாட்டை சேர்ந்த சிற்பி மற்றும் வர்த்தக குழுவுடன் இணைந்து, இந்த ஐஸ்கிரீமை தயாரித்துள்ளார்.

     டூட்டி – புரூட்டி பழச் சுவையுடன், சாதாரணமாக நீல நிறத்தில் இருக்கும் இந்த ஐஸ்கிரீம், சுவைக்க துவங்கியதும், முதலில் செந்நிறத்திற்கும், பின் பர்ப்பிள் நிறத்திற்கும் மாறும். வெளி தட்பவெப்பநிலை மற்றும், மனிதர்களின் வாயில் உள்ள அமிலங்களால், இந்த ஐஸ்கிரீம்கள், இவ்வாறு நிறம் மாறுகின்றன.

    ஐஸ்கிரீமில் உள்ள, பழங்கள் மற்றும் கோன்களில் நிரப்பப்பட்டவுடன் மேலே தெளிக்கப்படும், இலிக்சர் என்னும் திரவத்தால், ஐஸ்கிரீமின் நிறம் கிடைக்கிறது.

    வரலட்சுமி பூஜைக்கு வேண்டிய ஸ்பெஷல் ரெசிபிக்கள்!

    By: Unknown On: 19:25
  • Share The Gag
  • வரலட்சுமி பூஜையை திருமணமான பெண்கள் செய்து வருவார்கள். இந்த பூஜையை செய்வதால் பொன்னும் பொருளும் வீட்டில் எப்போதும் குடிக்கொண்டிருப்பதுடன், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.

    இந்த வரலட்சுமி பூஜையை முன்னிட்டு சிலர் காலையில் பூஜையை செய்வார்கள். ஆனால் பெரும்பாலானோர் மாலையில் மகாலட்சுமியை அலங்கரித்து, 9 படையல்களை செய்து, பூஜை செய்து, சுமங்கலிகளை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு, தம்மால் முடிந்ததை கொடுத்து அனுப்புவார்கள்.

    இந்த பூஜை செய்பவர்கள் வீட்டில் கீழே கொடுக்கப்பட்ட படையல்களை படைக்கலாம்!

    கேசரி

    பொதுவாக பண்டிகை என்றால், இனிப்புக்கள் செய்வது வழக்கம். அந்த வகையில் அனைவரும் செய்யும் ஒரு இனிப்பான ரெசிபி தான் கேசரி. இதை கூட பூஜையின் போது மகாலட்சுமிக்கு படையலாக படைக்கலாம்.

    பாசிப்பருப்பு பாயாசம்

    பாயாசம் ஒரு சிறப்பான படையல் படைக்கும் உணவுப்பொருள் என்று சொல்லலாம். சவ்வரிசி பாயாசத்தை விட பாசிப்பருப்பு பாயாசம் செய்யலாம்.

    எலுமிச்சை சாதம்

    எலுமிச்சை சாதம் கூட செய்யலாம். மேலும் இது மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்ததும் கூட. எனவே இதனை பூஜையின் போது செய்து படைப்பது நல்லது.

    உளுந்து வடை

    வடை கூட வரமகாலட்சுமி பூஜையின் போது செய்யக்கூடிய படையல்களுள் ஒன்றாகும். இதனையும் சேர்த்து படைக்கலாம்.

    முறுக்கு, அதிரசம்

    கடவுளுக்கு படைக்கும் படையல்களுள் முறுக்கு மற்றும் அதிரசம் மிகவும் முக்கியமானது. அதிலும் மகாலட்சுமிக்கு முறுக்கு என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே இதை தவறாமல் செய்து படையுங்கள்.

    விஜய் அடுத்த திருமணத்துக்கு ரெடி - அமலாபால் அதிர்ச்சி ..!

    By: Unknown On: 18:01
  • Share The Gag
  • சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி விஜய், அமலாபால். இவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டு இருந்த நிலையில் திடிரென்று விஜய் மீண்டும் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்து உள்ளது.

    அதாவது திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்குவதாக கூறிய அமலாபால், மீண்டும் விஜய் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

    ஆனால் அமலாபால் நடிக்க இருப்பது திரைப்படம் அல்ல, விளம்பரப்படம். இந்த விளம்பரப்படத்தில் விஜய் - அமலாபால் ஜோடியாக நடிக்கின்றனர்.

    அமலாபாலை விஜய் மீண்டும் திருமணம் செய்வது போல் ஒரு காட்சி வருகின்றது. இந்த படத்தை இயக்கவும், நடிக்கவும் விஜய் ஒப்புக்கொண்டுள்ளார். விஜய் இயக்கத்தில் திரைப்படத்தில் இனி நடிக்க முடியாவிட்டாலும், விளம்பரப்படத்தில் நடிப்பதில் இன்ப அதிர்ச்சியாக இருக்கின்றது என அமலாபால் கூறியுள்ளார்.

    முதல் சந்திப்பில் காதலியை இம்ப்ரஸ் செய்வது எப்படி..?

    By: Unknown On: 11:34
  • Share The Gag
  • காதலில் பெரும்பாலும் காதலியை இம்ப்ரஸ் செய்வதுதான் ஆண்களுக்கு பெரும்பிரச்சனையாக உள்ளது.

    காதலில் முதல் சந்திப்பு, முதல் முத்தம், முதல் ஸ்பரிசம் என்பது வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாதது. காதலர்கள் இருவரும் முதன் முதலாய் தனியாக சந்திக்க வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் காதலியை கவரும் வகையில் காதலன் நடந்து கொள்ளவேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    இல்லையெனில் முதல் சந்திப்பே இறுதி சந்திப்பாகிவிடும். எனவே காதலியை சந்திக்கச் செல்பவர்கள் இதை கவனமா படிங்க.

    * முதன் முதலாக தனியாக பார்க்கப்போகிறோம் என்ற உடனே என்ன பேசுவது? எப்படி பேசுவது என்ற பதற்றம் எழத்தான் செய்யும் எனவே தனியாக ஹோம் ஒர்க் செய்யுங்கள். சொதப்பலாக பேசக்கூடாது. காதலி என்பவள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் வரவேண்டும் என்ற எண்ணத்தோடு தனித்தன்மையான பதில்களை ரெடி செய்து கொண்டு சந்திக்கச் செல்லுங்கள்.

    * காதலியை சந்திக்க காத்திருக்கும் தருணங்களில் பாராட்டி ஒரு குட்டிக் கவிதை எழுதி விடலாம். அவரை சந்தித்த உடன் அதை கூறலாம். காதலியின் உடை அலங்காரம், பேச்சு, சிரிப்பு என சின்ன சின்ன விடயங்களில் பாராட்டு மழை பொழியுங்கள். உங்கள் பேச்சு அவர்களை மெதுவாக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை உணரும் போது காதலியின் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!

    * இருவரும் பேசிக்கொள்ளும் போது எதைப் பற்றி ஆரம்பித்தாலும் காதலியை சுற்றியே இருக்கட்டும். ஏனெனில் அதைத்தான் எல்லா பெண்களும் விரும்புவார்கள். பேசும்போதே விருப்பங்களை பகிர்ந்து கொள்ளுங்கள், காதலியை நிறைய பேசவிடுங்கள். நீங்கள் அவர்கள் பேசுவதை ரசியுங்கள். அதுவே வெற்றிக்கு வழி வகுக்கும்.

    * காதலியை உற்சாகப்படுத்தும் விடயங்களை பேசுங்கள். அதையும் முக பாவங்களுடன் பேசினீர்கள் என்றால் உங்கள் உற்சாகம் அவர்களையும் தொற்றிக்கொள்ளும். உங்களை ஒரு உற்சாகமான மனிதராக நினைப்பார்கள், நீங்கள் விரும்புவது கேள்விகளுக்கான பதில்கள் அல்ல. நெருக்கம்தான். ஆகையினால் கேள்விகள் உங்களுக்குள் நெருக்கம் ஏற்படுத்துவது போல் அமையட்டும்.

    * காதலியின் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். உங்கள் பார்வை அவருடைய முகத்திலேயே இருக்கட்டும். அவரின் உடலின் வேறு பாகங்களில் பார்வை செல்வது அவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

    அதே போல் அவர் முகத்தைப் பார்க்காமல் விட்டத்தையோ, சுற்று முற்றும் பார்ப்பதையோ பெண்கள் விரும்பமாட்டார்கள். அதேபோல் தன்னம்பிக்கையுடன் பேசுங்கள். தயக்கம், பயம் ஆகியவை இருக்கக் கூடாது. நீங்கள் பேசும் உறுதியான பேச்சு அவர்களை நிச்சயம் கவரும்.


    * முதலில் பேசும்போது பேச ஒன்றுமில்லாத நேரம் ஒன்று ஏற்படுமாயின் நீங்களே சில சுவாரசியமான விடயங்களைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாம். உங்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவையான நிகழ்ச்சிகளை முன்கூட்டியே தயார்செய்து கொண்டு செல்லுங்கள்.

    உற்சாகமாக நீங்கள் பேசும் நகைச்சுவைப் பேச்சு பெண்களை எளிதில் கவரும். அவர்களைச் சிரிக்க வைக்கும் கலையைக் கற்று விட்டீர்கள் என்றால் மேட்டர் ஈசிதான்!. கொஞ்சம் பொது அறிவும் அவசியம் எனவே அப்டேட்ஆக இருங்கள்.


    * இருவருக்கும் பொதுவான விடயங்கள் என்ன என்று துப்பறியுங்கள். அவளுடன் பேசும்போது அந்தப் பொதுவான விடயத்தை வெளிக்கொணருங்கள். எனக்கும் அது பிடிக்கும் என்று ஆரம்பிங்க!!. எல்லாப் பெண்களும் கட்டாயம் ஏதாவதொரு பொழுதுபோக்கு ஹாபி வைத்திருப்பார்கள்.

    காதலியின் பொழுது போக்கு அம்சங்கள் பற்றிக் கேட்கவும். அதில் அதிக ஆர்வம் காட்டிப் பேசினால் உங்களை அவர்களுக்குப் பிடிக்கும் அப்பெண்ணின் குடும்பத்தில் உள்ள நபர்களைப் பற்றி, அண்ணன்கள், தம்பிகள் பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்.

     அவர்களிடம் உள்ள சிறப்பு அம்சங்களைப் பாராட்டிப்பேசுங்கள். இப்படி நாலைந்து பொதுவான விடயங்களைப் பிடித்துக் கொண்டுபேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. உங்கள் காதலும் வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிடும்.

    ஆண்மகனே...உங்களுக்கு எங்க மச்சம் இருக்கு...?

    By: Unknown On: 11:09
  • Share The Gag
  • பொதுவாகவே உடலில் மச்சம் இருந்தாலே அதிர்ஷ்டம் என்று தான் சொல்வார்கள்..எந்த இடத்தில் உள்ளது என்பதை பொறுத்து பலன்களும் வேறுபடும்.

    நாம் இப்போது ஆண்களுக்கான மச்ச பலன்களை பார்ப்போம்.

    கண்ணின் இரு புருவங்களுக்கு மத்தியில்- ஆயுள் பலம் அதிகம்.

    நெற்றியின் வலது பக்கத்தில்- தனயோகம்.

    நெற்றியின் வலது புருவத்தில்- திருமணத்தால் யோகமும், திருமணத்திற்கு பிறகு யோகமும் வரும்.

    வலது கண்ணுக்கு அருகில்- பழகும் நண்பர்களால் நன்மை உண்டு.

    இடது புருவத்தில்- வாழ்க்கை ஏற்ற இறக்கமாக அமையும். செலவாளியாக இருப்பார்.

    மூக்கின் மேல்- கவலை இல்லாத ராஜா. வாழ்க்கை சுகபோகமாக அமையும்.

    மூக்கின் வலது புறம்- நினைத்தது நடக்கும், அது நினைத்த மாதிரியே நடக்கும்.

    மூக்கின் இடது புறம்- நல்ல நண்பர்கள் அமைய மாட்டார்கள். அமையும் நண்பர்களும் சுய ஆதாயத்தோடு பழகுவார்கள். பெண்களால் அவமானம், அவப்பெயர் உண்டாகும்.

    மூக்கின் நுனியில்- தான் என்ற எண்ணம் கொண்டவராக, தனக்கு மிஞ்சி எதுவும் இல்லை என்று நினைப்பவராக, பிறர் வளர்ச்சியில் பொச்சரிப்பு கொண்டவராக இருப்பார்.

    உதட்டின் மேல் பகுதி அல்லது உதட்டின் கீழ் பகுதியில்- நிறைய அலச்சியம் இருக்கும். அதை விட அதிகமாக பெண்ணாசை இருக்கும். சபல பேர்வழிகள்.

    உதட்டுக்கு மேலே அதாவது மீசை இருக்கும் பகுதியில்- கலைத்துறை நாட்டம் உள்ளவர்கள். இசை பிரியர்கள்.

    வலது கன்னத்தில்- மற்றவரை கவர்ந்து இழுக்கும் ஆற்றல் மிக்கவர்கள். இரக்க குணம், தயாள சிந்தனை உள்ளவர்கள்.

    இடது கன்னத்தில்- வாழ்க்கை ஊஞ்சல் மாதிரி ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும்.

    கழுத்தின் வலது புறம்- சொத்துக்கள் சேரும், ஆடம்பரமான வாழ்க்கை அமையும்.

    கழுத்தின் இடது புறம்- பண பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும்.

    இடது மார்பில்- பெண்களால் விரும்பபடுவார்கள்.

    வலது மார்பில்- அன்பானவர்கள். பண்பானவர்கள்.

    வயிற்றில்- பொறாமை குணம் அதிகம். தங்கள் தகுதிக்கு மீறி ஆசை படுவார்கள்.

    அடி வயிற்று பகுதியில்- திடீர் அதிஷ்டம் வரும்.

    இடது தொடையில்- மாற்றி மாற்றி பேசுவார்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள் இல்லை.

    வலது தொடையில்- ஆணவம், எடுத்தெறிந்து பேசும் குணம் கொண்டவர்கள்.

    வலது காலில்- சுகமான வாழ்க்கை.

    இடது காலில்- வரவும் செலவும் சரியாக இருக்கும்.

    ஆண்களின் மார்பு பகுதியை கவர்ச்சியாக மாற்றும் பயிற்சிகள்

    By: Unknown On: 10:40
  • Share The Gag
  • சின்-அப்ஸ் : 

    சற்றே உயர்-நிலை உடற்பயிற்சிகளில் ஒன்றான சின்-அப் பயிற்சியை செய்வது கனமான உடல்வாகு கொண்ட மனிதர்களுக்கு கடினமாக இருக்கும். ஆனால், இது உடலுக்கு மிகுந்த வலிமை தருவதுடன், கட்டுக்கோப்பாகவும் வைக்கும்.

    இந்த பயிற்சியை செய்யும் போது மற்றவர்களின் உதவியை நீங்கள் நாடலாம். ஒரு உதவியாளர் இருந்தால் அவர் உங்களுடைய முழங்காலை தூக்கிக் கொள்ளச் செய்யலாம். உங்களுடைய கைகள் உடல் எடையைத் தாங்கிக் கொள்ளும் என்றளவிற்கு வலிமை பெற்ற பின்னர், இந்த பயிற்சியை நீங்கள் பிறர் உதவியின் செய்யலாம். 

    டம்பெல் ப்ளைஸ் :

    உங்களுடைய மார்புகளுக்கு ஆண்மைத்தனமான வடிவத்தை அளிக்கும் மற்றுமொரு உடற்பயிற்சியாக டம்பெல் உள்ளது. இந்த பயிற்சி உங்களுடைய மார்பின் அகலத்தை அதிகப்படுத்தி, அதை கவர்ச்சியான அம்சமாக்கி விடும். ஒரு டேபிள் மற்றும் டம்பெல்-ஐ வைத்து இந்த பயிற்சியை செய்யலாம் அல்லது உங்களுடைய பேலன்ஸ் தவறாமல் எடையுள்ள பொருள்களை தூக்கலாம்.