Friday, 6 September 2013

கேரள கோயில்களில் உள்ள தங்கம் பற்றி விபரம் கேட்கிறது ரிசர்வ் வங்கி!

By: Unknown On: 21:39
  • Share The Gag

  • திருவனந்தபுரம் : கேரள கோயில்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தங்கம் குறித்த விபரங்களை அளிக்குமாறு மத்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக கேரள கோயில் கழகத்திற்கு ரிசர்வ் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

     
    ரிசர்வ் வங்கி அனுப்பி உள்ள கடிதம் குறித்து குருவாயூர் தேவஸ்தான் போர்டு தலைமை அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், ரிசர்வ் வங்கியின் இந்த வேண்டுகோள் குறித்த தகவல் கோயில் மேலாண்மை குழுவின் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளோம்; கோயில்களின் விதிமுறைகளின் அடிப்படையில் மேலாண்மை குழு தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அதிகாரி தெரிவித்துள்ளார். 
     


    கேரளாவில் உள்ள பெரும்பாலான கோயில்கள் 5 விதமான தேவஸம் போர்டுகளின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இவைகளில் திருவாங்கூர் தேவஸம் போர்டு தான் பெரியது. கேரளாவின் பிரபலமான வழிபாட்டு ஸ்தலமான சபரிமலை, திருவாங்கூர் தேவஸம் போர்டின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. ரிசர்வ் வங்கி அனுப்பிய கடிதத்தை உறுதி செய்த ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் சலிம் கங்காதரன், புள்ளி விபர சேகரிப்பு அடிப்படையிலேயே இந்த தகவல் கேட்கப்பட்டுள்ளதாகவும், கேரள கோயில்களில் உள்ள தங்கத்தை வாங்கும் திட்டம் ரிசர்வ் வங்கிக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

     திருவனந்தபுரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் உள்ள 6 ரகசிய அறைகளில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பிட்டு அறிக்கை சம்ர்ப்பிக்க 2011ம் ஆண்ட ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதன்படி 5 அறைகள் திறக்கப்பட்டு அவற்றின் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த விலைமதிப்பற்ற நகைகளை மதிப்பீடு செய்தனர். இருப்பினும் பி அறை இதுவரை திறக்கப்படவில்லை. 5 அறைகளில் உள்ள நகைகளின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டது. பத்மநாபசுவாமி கோயில் கருவூலத்தை போன்ற மற்ற கோயில்களில் எவ்வளவு தங்கம் உள்ளது என்பதை கண்க்கிடவே ரிசர்வ் வங்கி, இந்த தகவலை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    நோக்கியா லூமியா 925 இந்தியாவில் விற்பனை!

    By: Unknown On: 21:32
  • Share The Gag

  •  


    தன்னுடைய புதிய அறிமுகமான, லூமியா 925 மொபைல் ஸ்மார்ட் போனை, இந்தியாவில், நோக்கியா விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ. 34,169 என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் இது அறிவிக்கப்பட்டு, விற்பனைக்கான முன் பதிவுகள் பெறப்பட்டன. இப்போது விற்பனை மையங்களில் இது கிடைக்கிறது. இதன் சிறப்பம்சங்கள்;

    1. 4.5 அங்குல அகலத் திரை. சூப்பர் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன்.


    2. போன் மேலாக மெட்டல் கவர்.


    3. டூயல் கோர் குவால்காம் ப்ராசசர் 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகம்.


    4. விண்டோஸ் போன் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம்.


    5. ஆப்டிகல் இமேஜ் திறனுடன் கூடிய 8.7 எம்.பி. கேமரா. எல்.இ.டி. ப்ளாஷ். வீடியோ பதிவு நொடிக்கு 30 பிரேம்.


    6. 1.2 எம்.பி. திறனுடன் முன்புறக் கேமரா,


    7. ஐ.எச்.எப். ஸ்பீக்கர், இரண்டு மைக், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எப்.எம். ரேடியோ.


    8. புளுடூத் மற்றும் வை-பி இணைப்பு.


    9. 2000 mAh திறன் கொண்ட பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டுடன்.


    10. ராம் மெமரி 1 ஜிபி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜிபி.


    வெள்ளை, கிரே மற்றும் கருப்பு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.
    மேலே அறிவிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் சற்றுக் குறைவான விலையில், சில இணைய தளங்கள் இந்த மொபைல் போனை விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது.

    பட்ஜெட் விலை மொபைல்கள்!

    By: Unknown On: 21:25
  • Share The Gag

  • பட்ஜெட் விலையிட்டு, புதியதாய் வந்த மொபைல் போன்களைப் பார்க்கையில், இரண்டு மொபைல் போன்கள் கண்களில் தட்டுப்பட்டன. இவை விற்பனைக்கு வந்து சில மாதங்கள் ஆனாலும், தற்போது பரவலாக, விருப்பப்பட்டு வாங்கப்படுகின்றன. அவை,

    1. நோக்கியா 109


    அதிக பட்ச விலை ரூ.1,899 என விலையிடப்பட்டாலும், சில கடைகளில், விலை குறைவாகவும் கிடைக்கிறது. இரண்டு பேண்ட் அலைவரிசைகளில் இயங்கும் இந்த மொபைல் போனில் ஒரு சிம் மட்டுமே பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 110 x 46 x 14.8 மிமீ ஆகும். எடை 77 கிராம். பார் டைப் வடிவில் உள்ள இந்த மொபைல் போனில் ஆல்பா நியுமெரிக் எனப்படும் வழக்கமான கீ போர்ட் தரப்பட்டுள்ளது. இதன் திரையில் 1.8 அங்குல டிஸ்பிளே கிடைக்கிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தக்கூடிய மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், ராம் மெமரி 16 எம்.பி, சிஸ்டம் மெமரி 64 எம்.பி. உள்ளது. கேமரா இல்லை. எம்.பி. 3 பிளேயர் இயங்குகிறது. எப்.எம். ரேடியோ பதிவு செய்திடும் வசதியுடன் கிடைக்கிறது.
    800 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டுள்ளது. 7.8 மணி நேரம் வரை தொடர்ந்து பேசலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால், 790 மணி நேரம் தங்குகிறது.


    2. ஸ்பைஸ் எம் 5030


    அதிக பட்ச விலை ரூ. 1,149 என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு சிம் பயன்பாடு, இரண்டு பேண்ட் அலைவரிசை செயல்பாடு, பார் டைப் வடிவமைப்பு, 1.8 அங்குல திரை டிஸ்பிளே, லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 4 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், புளுடூத், யு.எஸ்.பி. போர்ட், 0.3 எம்பி திறன் கொண்ட கேமரா, வீடியோ பதிவு, எஸ்.எம்.எஸ். வசதி, 1,600 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி என இதன் சிறப்புக் கூறுகள் உள்ளன. பட்ஜெட் விலையில் போன் தேடுபவர்களுக்கு, இரண்டு சிம் இயக்கம் கொண்ட இந்த போன் உகந்ததாக உள்ளது.

    ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் எளிதாக கண்டுபிடிக்கலாம்.

    By: Unknown On: 18:43
  • Share The Gag
  • வெளி உலகம் தெரியாமல் கணினி மட்டுமே உலகம் என்று எண்ணும் நமக்கு வெளி உலக தகவல்களை அள்ளி கொடுப்பதற்காக பல தளங்கள் உள்ளது அந்த வகையில் இன்று கூகிள் உதவியுடன் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் என்று எளிதாக கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

    வெளி ஊருக்கு செல்ல வேண்டி இருந்தால் கூகிள் மேப் உதவியுடன் இடம் மற்றும் செல்ல வேண்டிய இடங்களை எளிதாக கண்டுபிடிபோம் அதே வகையில் செல்லும் இடத்தின் தூரத்தை கி.மீ மற்றும் மைல் அளவில் கொடுக்க ஒரு தளம் உள்ளது.
    இணையதள முகவரி : http://www.distancefromto.net
    இத்தளத்திற்கு சென்று From மற்றும் To என்பதில் நாம் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பதை கொடுத்து Measure Distance என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் உடனடியாக வரும் திரையில் நமக்கு இரண்டு ஊருக்கும் எத்தனை கி.மீ என்பதை துல்லியமாகவும் எப்படி செல்ல வேண்டும் என்பதற்கான மேப்-ஐயும் காட்டுகிறது. கூகிள் மேப்-ல் இதைவிட சிறப்பான வசதிகள் இருக்கும் போது நாம் ஏன் இந்தத் தளத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் கூகிள் மேப் பக்கம் திறக்க எடுத்துக்கொள்ளும் கால நேரத்தை விட இது வேகமாக இருக்கும்.ஓட்டுனர்கள் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும் எத்தனை கி.மீ தூரம் என்பதை கூகிள் உதவியுடன் கண்டுபிடிக்க உதவும் இத்தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
     

    கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key

    By: Unknown On: 18:12
  • Share The Gag


  • நாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

    F1
    இது பெரும்பாலும் எல்லா ப்ரோக்ராம்களிலும் Help Screen ஐ ஓபன் செய்யப் பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது.
    Windows Key+ F1 Help Screen ஓபன் செய்ய.

    F2
    இது Highlight செய்யபட்ட file or folder or Icon க்கு Rename செய்யப் பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது. Boot மெனுவுக்கு செல்ல

    Microsoft Word இல் இதன் பயன்கள்:
    Alt + Ctrl + F2 --> open a new document in Microsoft Word.
    Ctrl + F2--> display the print preview window in Microsoft Word.

    F3
    இது நிறைய ப்ரோக்ராம்களில் Search option ஓபன் செய்ய பயன்படுகிறது. MS-DOS இல் கடைசி வரியை Repeat செய்ய பயன்படுகிறது. MS WORD இல் upper case இல் இருந்து lower case க்கு வார்த்தை முழுவதையும் மாற்ற பயன்படுகிறது.

    F4
    Find window ஓபன் செய்ய(check in the My Computer ) கடைசியாக நடந்த Action ஐ Repeat செய்ய பயன்படுகிறது.(உதாரணம் MS WORD இல் ஒரு line ஐ தொடர்ந்து Paste செய்ய இது எளிதான வழி.)
    Alt+F4 will Close all Programs.
    Ctrl+ F4 will close current Program.

    F5
    Reload or Refresh
    Open the find, replace, and go to window in Microsoft Word
    PowerPoint இல் Slide Show ஸ்டார்ட் செய்ய.

    F6
    cursor ஐ address bar க்கு மாற்றும். (IE, Mozilla)
    Ctrl + Shift + F6 இது புதிய MS WORD Document ஐ ஓபன் செய்யும்.

    F7
    MS இல் Spell Check & Grammar Check செய்ய பயன்படும். (Word, Outlook,etc ) Mozilla வில் Caret Browsing ஐ ON செய்ய பயன்படும்.

    F8
    விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும் போது நாம் Safe Mode Access செய்ய இது பயன்படும்


    F9
    Quark 5.0 வில் Measurement toolbar ஓபன் செய்ய பயன்படுவதாக உள்ளது.

    F10
    இது MS இல் MenuBar ஓபன் செய்ய பயன்படுகிறது. (MS WORD இல் முயற்சி செய்யவும்.)
    Shift+F10 - Right Click ஆக செயல்படும்.

    F11
    இன்டெர்நெட் பிரவுசர்களில் Full Screen கொண்டுவர பயன்படும். nகணினி திரையை முழு ஸ்க்ரீன்க்கு கொண்டு வரவும் பயன்படும்.

    F12
    MS Word இல் save as menu வை ஓபன் செய்ய பயன்படும்.
    Shift+F12 will Save MS Word
    Ctrl+Shift+F12--MS Word print செய்ய பயன்படும்.
    நாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.  F1 இது பெரும்பாலும் எல்லா ப்ரோக்ராம்களிலும் Help Screen ஐ ஓபன் செய்யப் பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது. Windows Key+ F1 Help Screen ஓபன் செய்ய.  F2 இது Highlight செய்யபட்ட file or folder or Icon க்கு Rename செய்யப் பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது. Boot மெனுவுக்கு செல்ல  Microsoft Word இல் இதன் பயன்கள்: Alt + Ctrl + F2 --> open a new document in Microsoft Word. Ctrl + F2--> display the print preview window in Microsoft Word.  F3 இது நிறைய ப்ரோக்ராம்களில் Search option ஓபன் செய்ய பயன்படுகிறது. MS-DOS இல் கடைசி வரியை Repeat செய்ய பயன்படுகிறது. MS WORD இல் upper case இல் இருந்து lower case க்கு வார்த்தை முழுவதையும் மாற்ற பயன்படுகிறது.  F4 Find window ஓபன் செய்ய(check in the My Computer ) கடைசியாக நடந்த Action ஐ Repeat செய்ய பயன்படுகிறது.(உதாரணம் MS WORD இல் ஒரு line ஐ தொடர்ந்து Paste செய்ய இது எளிதான வழி.) Alt+F4 will Close all Programs. Ctrl+ F4 will close current Program.  F5 Reload or Refresh Open the find, replace, and go to window in Microsoft Word PowerPoint இல் Slide Show ஸ்டார்ட் செய்ய.  F6 cursor ஐ address bar க்கு மாற்றும். (IE, Mozilla) Ctrl + Shift + F6 இது புதிய MS WORD Document ஐ ஓபன் செய்யும்.  F7 MS இல் Spell Check & Grammar Check செய்ய பயன்படும். (Word, Outlook,etc ) Mozilla வில் Caret Browsing ஐ ON செய்ய பயன்படும்.  F8 விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும் போது நாம் Safe Mode Access செய்ய இது பயன்படும்   F9 Quark 5.0 வில் Measurement toolbar ஓபன் செய்ய பயன்படுவதாக உள்ளது.  F10 இது MS இல் MenuBar ஓபன் செய்ய பயன்படுகிறது. (MS WORD இல் முயற்சி செய்யவும்.) Shift+F10 - Right Click ஆக செயல்படும்.  F11 இன்டெர்நெட் பிரவுசர்களில் Full Screen கொண்டுவர பயன்படும். nகணினி திரையை முழு ஸ்க்ரீன்க்கு கொண்டு வரவும் பயன்படும்.  F12 MS Word இல் save as menu வை ஓபன் செய்ய பயன்படும். Shift+F12 will Save MS Word Ctrl+Shift+F12--MS Word print செய்ய பயன்படும்.

    ஐடிஐ-யில் வயர்மேன்/ எலக்ட்ரீசியன் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்க மின்சார வாரியத்தில்பணி!

    By: Unknown On: 17:32
  • Share The Gag
  • தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் என அழைக்கப்படும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 4000 களப்பணி உதவியாளர்கள்(பயிற்சி) நேரடி ஆள் சேர்ப்பு வழியாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
    இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிரிமான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”தற்போது நடைபெற உள்ள ஐடிஐ கள உதவியாளர் பணி நியமனத்திற்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், ஐடிஐ-யில் வயர்மேன் அல்லது எலக்ட்ரீசியன் பிரிவில் தேர்ச்சி பெற்று மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிரிமானக் கழகத்தில்(தமிழ்நாடு மின்சார வாரியம்) 1 வருடம் தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்கள், 18 வயது முதல் 57 வயது வரை உள்ள நபர்கள் தகுதி உடையவர்களாவர்.

    அவர்கள் தலைமை அலுவலகம், தமிழ்நாடு மின்சார வாரிய வளாகம் 114, அண்ணாசாலை, சென்னை-600002 அலுவலகத்தில் 02.09.2013 முதல் 13.09.2013 வரையிலான காலத்திற்குள் காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் தங்களுடைய தனிப்பட்ட விவரங்களை தொழில் பழகுநர் அசல் சான்றிதழ்களுடன் வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    மேற்கூறியவாறு இவ்வலுவலகத்தில் பெயரை பதிவு செய்தவர்களுக்கும் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் வழியாக பெயர் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கும் சேர்த்து நேர்காணல் கடிதம் அனுப்பப்படும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மேலும் முழுமையான விவரங்கள் அறிய

     www.tangedco.gov.in,          www.tantransco.gov.in,                   www.tenders.tn.gov.in 

    இந்தியாவை உலுக்கப் போகும் இன்னொரு ஊழல் :தோரியம் கடத்தலில் ரூ.60 லட்சம் கோடி:

    By: Unknown On: 17:27
  • Share The Gag
  • இந்திய கடல் பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக தோரியம் கடத்தப்படும் விவகாரத்தில் ரூ.60 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இவ்விவகாரம் அம்பலமாகியுள்ளது. மேலும் பொதுத்துறை ஒன்றையும், அணுசக்தி துறை நிறுவனங்களையும் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் ஆய்வு செய்தால் மேலும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

    sep 6 - indian money bundle

     

    இதன் மூலம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய ஊழல் நடைபெற்ற இருப்பதை அறியும் முடியும் என்றும் கூறப்படுகிறது. தோரியம் கடத்தலில் மத்திய மண்டல தாது பொருட்கள் கட்டுப்பாடு அதிகாரியாக உள்ள ரஞ்சன் சகாய் என்பவருக்கு முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்துள்ளது.
    தோரியம் கடத்தல் குறித்தும் ரஞ்சன் சகாய் முறைகேடு குறித்தும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட பல்வேறு புகார்கள் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. தோரியம் கடத்தலால் நாட்டிற்கு மிகப்பெரிய பெருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி கதிர்வீச்சு தன்மையுள்ள இந்த பொருட்கள் தீவிரவாதிகள் கைகளில் சிக்கினால் பெரும் நாச வேலைகளுக்கு காரணமாகிவிடும் என்ற நிலையில் அரசு மெத்தனமாக இருப்பது கவலை அளிப்பதாக தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால், தோரியம் கடத்தப்படுவதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.சென்னை விமான நிலையத்தி்ல் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அகமது, கடல் பகுதியில் தோரியம் கடத்தல் உறுதி செய்யப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Biggest Ever: Thorium Mono-Cyanide Scam: 60 Lakh Crore Worth

    *******************************************


     G scam, Coal scam was hearing all around India. Now comes an new shocking scam news much larger than earlier ones. 2G, coal corruption all became smaller on looking this new scam case in India.Currently a new sensational scandal news released. That is Rs.60 lakh crore worth ‘Thorium scam’. This hot scam news says that from the region of Indian Ocean Rs.60 lakh crore worth of Thorium has been exploited.The country’s natural resources are been exploited in a very bad manner. This new Thorium scam is the great example for that.

    மீண்டும் சர்ச்சையில் சிக்குகிறதா கமலின் ‘விஸ்வரூபம் – 2′…!

    By: Unknown On: 17:10
  • Share The Gag
  • நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பலமுகங்களை கொண்ட கமல்ஹாசனின் சமீப கால படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கமான நிகழ்வாகிவிட்டது.கடந்த ஆண்டு விஸ்வரூபம் என்ற பெயரில் அவர் வெளியிட்ட படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பெரும் போராட்டத்திற்கு பிறகு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    இஸ்லாமியர்களை அந்த படத்தில் தவறாக சித்தரித்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்தே படத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதன்பிறகு தமிழக அரசு தலையிட்டு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு விஸ்வரூபம் படம் வெளியானது.அந்த படம் வெளியான சில நாட்களிலேயே ‘விஸ்வரூபம் -2′ படம் விரைவில் வெளியாகும் என்ற தகவல் பரவியது. காரணம், விஸ்வரூபம் படத்திற்கு ஆரம்பத்தில் ஏற்பட்ட எதிர்ப்பும்… பின்னர் படம் வெளியானதும் கிடைத்த வரவேற்பும் விஸ்வரூபம்&2 படம் உருவாக காரணமாக அமைந்தது என்கிறார்கள்.

    sep 6 = viswaroop 1

     

    இந்த சூழலில், ‘விஸ்வரூபம் -2′ படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் நடித்திருந்த பூஜாகுமார் முதல் படம்போல இதில் எந்த சர்ச்சையான காட்சிகளையும் குறிப்பிடமுடியாது. மிகவும் யதார்த்தமாக படம் வந்திருக்கிறது என பல்வேறு பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார்.

    கமல்ஹாசனும் தன் பங்குக்கு ‘விஸ்வரூபம்&2′ படம் அனைத்து தரப்பு மக்களும் ஏற்கும்விதமாக அமையும் என கூறியிருந்தார். இதன் மூலம் படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருந்த கமல் ரசிகர்களுக்கு திடீரென இஸ்லாமியர் அமைப்பு ஒன்றின் அறிக்கை மூலம் மீண்டும் கமல் படம் சர்ச்சையில் சிக்குமா என்ற பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    இது குறித்து இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜவஹர்அலி வெளியிட்டுள்ள அறிக்கையில்”கமலஹாசன் நடித்து இயக்கி வரும் விஸ்வரூபம் பார்ட்-2 தீபாவளிக்கு வர இருப்பதாகவும், விஸ்வரூபம் படத்தை போன்று இப்படத்திலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து முஸ்லிம்களின் மனம் புண்படும்படியான காட்சிகள் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளதை கண்டு மிகவும் வேதனை அடைந்துள்ளோம். சகோதரர் கமலஹாசன் தொடர்ந்து முஸ்லிம்களை காயப்படுத்தி படம் எடுத்து வருவதும் பிறகு கருத்து சுதந்திரம் என்று பேசி அதன் மூலம் படத்தை விளம்பரப் படுத்தி கொள்வதும் நல்ல கலைஞனுக்கு அழகல்ல.

    யார் மனதையும், காயப்படுத்தி திரைப்படம் எடுப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். டாம் 999 மற்றும் மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்கள் ஏன் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை படைப்பாளி புரிந்து கொள்ள வேண்டும். எனவே முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ‘விஸ்வரூபம்2′ திரைப் படத்தில் முஸ்லிம்களை காயப்படுத்தும் காட்சிகள் இல்லாதவாறும் சமூக ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவும் திரைப்படத்தை எடுத்து காயப்பட்டுள்ள இஸ்லாமியர்களின் நெஞ்சங்களில் மருந்து தடவ வேண்டும் என்று கமலஹாசனை இந்திய தேசிய முஸ்லிம் லீக் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்’ என கூறியிருக்கிறார்.

    இந்த அறிக்கை வெளியானதால் கமல் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

    இதையடுத்து ஜவஹர் அலியின் அறிக்கைக் குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது,”விஸ்வரூபம்&2 படம் அனைத்து தரப்பு மக்களுக்குமான கதையாக இருக்கிறது. அதில் எந்த இடத்திலும் இஸ்லாமியர்களின் மனது புண்படும்விதமான காட்சிகளோ, வசனங்களோ இல்லை. அதிலும் முந்தைய படத்தில் ஏற்பட்ட காயங்களை திரையுலக்மே இன்னும் மறக்காத நிலையில் மீண்டும் சர்ச்சை காட்சி அல்ல்து வசனங்களை யாராவத்கு வைப்பார்களா?இவ்வளவிற்கும் இந்த பார்ட் 2 படத்தில் அனைத்து மத மக்களும் சகோதரர்களே என குறிப்பிடும் விதமான காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. படத்தை பார்த்தால் அவர்களுக்கே புரியம். மற்றபடி சர்ச்சையான விஷயங்கள் எதுவும் இல்லை.. இல்லை.. இலலவே இல்லை” என்கிறார்.

    சும்மா இருந்தாலே சினிமாவில் கிசுகிசுவும், பரபரப்பும், வதந்தியும் பரவுவதை தடுக்க முடியாது… போததற்கு இதுபோன்ற செய்திகள் வெளியானால் படம் குறித்த விஷயங்களும்… செய்திகளும் றெக்கை கட்டி பறப்பதை யாரும் தடுக்க முடியாது…


    பங்குச் சந்தை - முக்கிய கலைச் சொற்களுக்கான அர்த்தம்!

    By: Unknown On: 08:00
  • Share The Gag

  • பங்குச் சந்தை முதலீட்டில் சில முக்கியமான வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து கொண்டால் கம்பெனிகளின் காலாண்டு முடிவுகளை சட்டெனப் புரிந்து கொள்ள உதவும். எனவே, சில முக்கிய கலைச் சொற்களுக்கான அர்த்தம் இதோ உங்களுக்காக...!

    முக மதிப்பு (Face Value)

    ஒரு பங்கின் முகமதிப்பு என்பது பங்கின் மூலம் பங்கு மூலதனத்துக்குப் போய்ச் சேரும் தொகையைக் குறிப்பதாகும். இந்த மதிப்புக்குதான் டிவிடெண்ட் வழங்கப்படும்.

    புத்தக மதிப்பு (Book Value)

    கம்பெனியின் மொத்தச் சொத்து மதிப்பிலிருந்து அதன் கடன்களைக் கழித்தால் கிடைக்கும் மதிப்புதான் இது. ஒரு கம்பெனியை விற்றால் என்ன விலை கிடைக்குமோ, அதுதான் அந்த கம்பெனியின் புத்தக மதிப்பு.

    செயல்பாட்டு லாப வரம்பு (Operating Profit Margin)

    கம்பெனி வழக்கமாகச் செய்யும் செலவுகளான மூலப் பொருட்களின் விலை, பணியாளர்கள் சம்பளம், வரி மற்றும் தேய்மானத்துக்கு முந்தைய செலவு போன்றவற்றை அதன் வருமானத்தால் வகுக்கக் கிடைப்பது இது. வர்த்தகச் செயல்பாடுகளுக்கான செலவை ஒரு கம்பெனி சிறப்பாகக் கையாளுகிறதா என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

    மார்க்கெட் கேபிட்டலைசேஷன் (Market Capitalization)

    கம்பெனியின் அங்கீகரிக்கப்பட்ட, வெளியிடப்பட்ட மற்றும் முதலீட்டா ளர்களால் வாங்கப்பட்டுள்ள மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு இது. கம்பெனி எந்த அளவுக்கு பெரிது என்பதை இது காட்டும்.

    இ.பி.எஸ். (Earning per share)

    ஒரு பங்கு சம்பாதிக்கும் தொகையே இது. குறிப்பிட்ட காலத்தில் ஒரு பங்கு மூலம் எவ்வளவு வருமானம் கிடைத்திருக்கிறது என்பதைக் குறிப்பது இது. கம்பெனியின் நிகர லாபத்தை, அதன் மொத்தப் பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்தால் இது கிடைக்கும். இ.பி.எஸ். அதிகமாக இருக்கும் பங்குகளை துணிந்து வாங்கலாம்.

    பி/இ விகிதம் (Price to Earnings Ratio)

    பங்கின் சந்தை விலைக்கும், அந்தப் பங்கின் இ.பி.எஸ்-க்கும் உள்ள விகிதம்தான் பி/இ விகிதம். இந்த விகிதம் குறைவாக இருக்கும் பங்குகளை வாங்கலாம்.

    இண்டஸ்ட்ரி பி/இ விகிதம் (Industry P/E)

    ஒரு குறிப்பிட்ட துறையில் இருக்கும் மொத்த நிறுவனங்களின் சராசரி பி/இ விகிதம்தான் இது. இந்த சராசரியுடன் குறிப்பிட்ட நிறுவனத் தின் விகிதத்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். சராசரி பி/இ விகிதத்தைவிட கம்பெனியின் விகிதம் குறைவாக இருந்தால், அந்த கம்பெனி பங்கை வாங்கலாம்.

    பி/பி.வி (Price to book Value)

    பங்கின் விலைக்கும் புத்தக மதிப்புக்கும் உள்ள விகிதம். அதாவது, பங்கின் விலையை, பங்கின் புத்தக மதிப்பால் வகுக்கக் கிடைப்பது. பி.இ விகிதத்தைப் போல இந்த விகிதமும் குறைவாக இருந்தால் நல்லது.

    ஈபேயில் (eBay) பணம் சம்பாதிப்பது எப்படி?

    By: Unknown On: 07:58
  • Share The Gag

  • இணையதளம் 1995 ல் நிறுவப்பட்டது. இவ்விணையதளம் பொருட்களின் ஏல மற்றும் விற்பனை சந்தை போல் செயல்பட்டுவருகிறது. ஈபே மூலம் லட்சக்கணக்கான பொருட்கள் தினமும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது, ebay ல் பொருட்களை
    விற்பதன் மூலம் விற்பனையாளர்கள் நிறைய லாபங்களை ஈட்டிவருகின்றனர்.

    நீங்களும் இதில் சேர்ந்து பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் உள்ளன.ஈபேயில்
    கிடைக்கும் வருமானம் உங்களுக்கு பகுதி நேர பணமாக (Part Time Cash) இருக்கலாம்,
    ஏன் இதை நீங்கள் முயன்றால் முழு நேர தொழிலாகவும் (Full time Business) செய்ய
    முடியும்.ஈபே ஒரு வணிக தளம், இதில் பொருட்களை விற்பதன் மூலம் பணம்
    சம்பாதிக்கலாம் என்பது வரை சரி. ஆனால் எப்படிப்பட்ட பொருட்களை விற்பது?,
    அதை எப்படி தயாரிப்பு நிறுவனங்களிடமோ அல்லது தனியாரிடமோ பெறுவது?.
    மேலும் அப்படி விற்க்கப்படும் பொருட்களின் மூலம் இதை எப்படி ஒரு தொழிலாக
    மாற்றி ஈபேயில் PowerSeller (PowerSeller) என்பது விற்பனையாளர்களின் உயர்
    தகுதி ஆகும்) அந்தஸ்தை பெறுவது? போன்ற கேள்விகள் உங்களிடம் தோன்றலாம்.
    அதற்க்கு விடைகான இந்த பதிவு உங்களுக்கு உதவும்.

    உண்மையில் சொல்லபோனால், ஈபேயில் பணம் சம்பாதிக்க தொடங்குவதென்பது
    எளிதான காரியம் தான். உங்களுக்கான விற்பனையாளர் கணக்கை தொடங்கிய பின்,
    உங்களிடமுள்ள பழைய அல்லது உங்களுக்கு தேவைப்படாத பொருள்கள் ஏதும்
    இருந்தால் அதனை விற்பதற்கான முயற்சியை செய்து பார்க்கலாம். ஒருவேளை
    நீங்கள் மற்றவர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி விற்க முற்படும்
    (start buying stock to resell) முன், இவ்வகையான அடிப்படை விற்பனையில்
    ஈடுபடும் பட்சத்தில் இது சிறந்த அனுபவங்களை தரலாம்.

    நீங்கள் பொருட்களை வாங்கி விற்க்கும் (Reselling) முறையில், எந்த மாதிரியான
    பொருட்களை விற்க்கும்விற்பனையாளராக (seller) விரும்புகிறீர்கள் என்பதை
    முதலில் தீர்மானிக்க வேண்டும். நிச்சயமாக நீங்கள் எந்த வகையான பொருட்களையும்
    விற்கமுடியும், ஆனால் ஒரு பெயர்பெற்ற (Famous) விற்பனையாளராக நீங்கள் மாற
    வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட வகையான பொருட்களை விற்பது தான் சிறந்ததாக
    இருக்கும்.அதற்காக உங்களின் விற்பனை பொருட்கள் ஒரு குறுகிய வட்டத்தில் தான்
    இருக்கவேண்டும் என்பது அர்த்தமில்லை. நீங்கள் விற்பனை செய்வதாக இருக்கும்
    பொருள் பிரபலமாக மற்றும் அதிகமாக விற்பனையாக கூடியதாக இருக்கவேண்டும்.
    இதை கண்டறிய ஈபேயின் மேம்ப்பட்ட தேடல் (ebay Advanced Search) வசதியை
    பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட வகை பொருள்களின்விற்பனை விகிதம் மற்றும் அதன்
    விலை நிர்ணயம் போன்றவற்றை தெரிந்து கொள்வது நல்லது.

    உதாரணத்திற்க்கு நீங்கள் கணினி விளையாட்டு மென்பொருள்களை (computer Games)
    விற்கநினைக்கிறீர்கள் என்றால், நீங்கள் வாங்கி விற்பதற்க்கு ஆயிரக்கணக்கான
    விளையாட்டு மென்பொருள்கள் உள்ளன. ஆனால் எவை உங்களுக்கு அதிகமாக விற்று
    லாபமீட்டி தரும் அல்லது எவை உங்களை நட்டப்படுத்தும்என்பதை தெரிந்து வைத்துக்
    கொள்ளவேண்டும். நீங்கள் தவறான பொருட்களை வாங்கி வைத்து விற்பனை
    செய்ய முடியாமல், பணத்தை இழக்க முடியாது. எனவே ஈபேயின் தேடுதல் மூலம்
    பட்டியலிட்டுள்ள பொருட்களில் எவை தொடந்து விற்பனை செய்யப்பட்டுவருகிறது,
    மேலும் எவை உங்களுக்கு அதிக லாபம் பெற்று தரும் என்பதையும் அறிந்து கொள்வது
    சிறந்தது.

    சரி, எந்த பொருட்களை விற்று லாபம் சம்பாதிப்பது என்பதை தெரிந்து கொண்டீருப்பீர்கள்,
    இப்பொழுதுஅதை நீங்கள் எங்கே வாங்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
    விற்பனையாளர்கள் (sellers) யாரும் அவர்கள் எங்கே பொருட்களை வாங்கி விற்கிறார்கள்
    என்பதை உங்களுக்கு சொல்லமாட்டார்கள். அவ்வாறுசொல்வது அவர்களின்
    பணப்பெட்டியின் சாவியை உங்கள் கையில் கொடுப்பதை போன்றதாக கருதுவார்கள்.
    அது தான் உண்மையும் கூட. எனவே நீங்கள் அதை தெரிந்து கொள்ள உங்கள்
    மூளைக்கும் கால்களுக்கும் சிறிது வேலைக்கொடுத்தாக வேண்டும்.

    தயாரிப்பு பொருள்களை வாங்க நீங்கள் இரண்டு முக்கியமான இடங்களை நாட வேண்டும்.
    மொத்த விற்பனையாளர்கள் (wholesalers) அல்லது dropshippers. இரண்டு வகையிலும்
    நீங்கள் பொருட்களை வாங்க அவர்களுக்கே உரித்தான சில விதிமுறைகள் உள்ளன.
    அதில் எதை நீங்கள் பின்பற்ற போகிறீர்கள் என்பது உங்களை பொருத்தது.

    Dropshippers உங்களுக்கான பொருட்களின் கையிருப்பை (product stock) அவர்களே
    வைத்திருப்பார்கள். எனவே உங்கள் வாடிக்கையாளரிடமிருந்து (Customer) பணத்தை
    பெற்றபின், Dropshippers க்கு பணத்தை கொடுத்தால் போதுமானதாக இருக்கும்.
    அதற்காக நீங்கள் அவர்களின் குறிப்பிட்ட சில திட்டங்களில் (scheme) ஒன்றில்
    இணைந்திருக்க வேண்டும்.

    நீங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொத்த விற்பனையாளர்கள் (wholesaler)
    தேர்வு செய்திருந்தால், உங்களுக்கு பொருட்களை வாங்கி வைக்க அறை (stock room),
    மற்றும் முன்கூட்டியே அதை வாங்க பணம்(Investment) வேண்டும். சில நேரங்களில்
    நீங்கள் வாங்கிய பொருளை விற்க இயலவில்லையெனில், இம்முறைஉங்களை நட்ட
    படுத்த நேரிடலாம். அதனால் நான் ஏற்கனவே சொன்னதை போல் தேடல்களின் பட்டியல்
    முடிவைபொருத்து இதை தந்திரமாக செய்யலாம். அப்படி செய்வதன் மூலம் ரீஸ்க்
    குறையலாம்.



    சரி, மீண்டும் தயாரிப்பு பொருட்களை எங்கே வாங்குவது என்பதிற்க்கு செல்வோம்.
    ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு பொருளை வாங்கி விற்க திட்டமிட்டு விட்டிர்களெனில்,
    எளிமையான வழியென்னவெனில் அந்த பொருளின் pack ல் பெரும்பாலும்சப்ளையர்
    பெயரை பார்க்க முடியும். அதன் மூலம் அவர்களின் இணைய முகவரிக்கு சென்று மேலும்
    விவரங்களை திரட்ட முடியும்.

    மற்றொரு எளிய முறை நீங்கள் Google இல் தேடுவது. இவ்வாறு தேடுவதன் மூலம் சில
    சிறந்த மொத்த விற்பனையாளர்களை கண்டறிய முடியும். காலப்போக்கில் நீங்கள்
    பொருட்களை பெற பல ஆதாரங்களை பெறுவதன் மூலம், ஒரு மொத்த
    விற்பனையாளரிடமிருந்து மற்றவரிடம் செல்ல நேரிடும். மற்றும் நீங்கள் விற்பனையில்
    வளர உங்கள் தயாரிப்பு அளவுகளையும் கட்டமைக்க முடியும்.

    விற்பனை சேவை பற்றிய கருத்துகளை (feedback) தெரிந்து கொள்வது உங்கள் தொழிலை
    மேலும் வளர்க்க உதவும் முக்கியமான ஒன்று. கருத்துகளை(feedback) தெரிந்து கொண்டு
    அதற்கேற்றார் போல் செயல்படுவது உங்களை மேம்படுத்தப்பட்ட விற்பனையாளராக
    மாற்றும் என்பதில் ஐயமில்லை. மேலும் அவ்வாறாக செயல் படுவதன் மூலம் நீங்கள்
    ஈபேயில் powerseller என்ற தகுதியை பெற இயலும்.

    PowerSeller சின்னம் என்பது பல வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்
    மத்தியில் உங்களை மிகவும் தீவிரமான ஈபே விற்பனையாளராக காண்பிக்கும். இதில்
    ஐந்து நிலைகள் உள்ளன. நீங்கள் PowerSeller என்பதை அடைய ஒரு இலக்கை
    நிர்ணயித்தது இருக்கும் போது, உங்கள் தயாரிப்பு அளவு கட்டமைக்க மற்றும் படிப்படியாக
    உங்கள் விற்பனையை அதிகரிக்க வெறும் மூன்று மாதங்களில் அதை செய்ய முடியும்
    என்றே கருதுகிறேன்.

    பல விற்பனையாளர்கள் ஈபேயில் தங்களுக்கென ஒரு தனி விற்பனை நிலையத்தையே
    (Own ebay shop) வைத்துள்ளனர். ஆனால் நீங்கள் முதன் முதலில் பொருட்களை விற்க்க
    துவங்கும் போது இது தேவையில்லை. ஏனேனில் உங்கள் விற்பனை நிலைய பக்கம்
    பொருட்களே இல்லாமல் வெறுமையாக இருக்கலாம். எனவே உங்கள் விற்பனையில்
    நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதற்க்கு பிறகு இவ்வகை தனி விற்பனைநிலையத்தையே
    (Own ebay shop) வைத்துக்கொள்ளலாம்.

    கடைசியாக நீங்கள் சிந்திக்க வேண்டியது, எவ்வகை விலை வரம்பு (price range)
    பொருட்களை விற்க வேண்டுமென்பதை தான். மேலும் எந்த பொருட்களை நீங்கள்
    விரும்பி விற்க்க முடியும் என்பது மிக முக்கியமானது. அதிக விலை பொருட்கள் அதிக
    லாபத்தை தரலாம் என்ற காரணத்தால் மட்டும் அதை விற்க முடிவெடுக்க வேண்டாம்.
    உங்களுக்கு பிடித்த மற்றும் உங்களுக்கு சரியானதாக எது இருக்கும் என்று தேர்வு செய்து
    அதில் கவனம் செலுத்தவும். அப்படி செலுத்தினால் அதில் உங்களுக்கு மிக பெரிய வெற்றி
     காத்திருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

    எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு வெற்றிகரமான விற்பனை வணிகத்தை
    (selling business) உருவாக்க காலம் எடுத்து கொள்ளும் என்பதை நினைவில் கொள்க.

    ஆனால் நீங்கள் ஈபேயில், உண்மையாக வெற்றியை அடைய தீர்மானித்துவிட்டிர்கள்  என்றால், இந்த பயணம் உங்களுக்குமகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    The Web Blocker: குறிப்பிட்ட இணையத்தளங்களை தடை செய்வதற்கு !

    By: Unknown On: 07:50
  • Share The Gag

  • obscene-website-blocked-in-pakistan 
    இணையத்தில் எந்த அளவுக்கு நன்மைகள் உள்ளதோ, அதே அளவுக்கு தீமைகளும் உண்டு என்று கூறினால் அது மிகையல்ல.
    இணையத்தை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது, சில தளங்கள் ஓபனாகி எரிச்சலூட்டும்.
    அவ்வாறான தளங்களை Block செய்வதற்கு The Web Blocker என்ற மென்பொருள் பயன்படுகிறது.
    இதற்கு முதலில் குறித்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக் கொள்ளவும்.
    நிறுவும் போது ClaroBrowser Tool Bar, PC Utilities Pro, Babylon போன்றவை இன்ஸ்டால் செய்யலாமா என்று கேட்கப்படும், அப்போதெல்லாம் Decline என்பதை கிளிக் செய்யவும்.
    மென்பொருளை நிறுவிய பின், குறித்த மென்பொருளை ஓபன் செய்யவும். அதில் தோன்றும் விண்டோவில் Add Address to Block List என்று காட்டப்படும்.
    இதில் நீங்கள் Block செய்ய வேண்டிய தளத்தின் முகவரியை கொடுக்கவும்.
    அவ்வளவு தான் இனிமேலும் நீங்கள் அத்தளத்தை ஓபன் செய்தால் Error செய்தி காட்டப்படும்.
    இதேபோன்று எத்தனை தளங்களை வேண்டுமானாலும் Block செய்து கொள்ளலாம்.

    ஹார்ட் டிஸ்க் சிக்கலா??!!

    By: Unknown On: 07:37
  • Share The Gag
  • chkdsk.exe என்னும் பைலை பயன்படுத்தி ஹார்ட் டிஸ்க்கில்(hard disk) ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைகளை அறியலாம். இது ஒரு DOS புரோகிராம் ஆகும். 
    தேர்ந்தெடுக்கப்பட்ட டிரைவில்(drive) அல்லது முழு டிஸ்க்கை இந்த
     பைல் சோதனை செய்து பிரச்சினைகள் இருந்தால் அவற்றைச் சரி செய்திடும்.
    எனவே கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் மாதம் ஒரு முறையேனும் இந்த பைலை இயக்கிப் பார்த்தல் நல்லது..
    இதை பைலை இயக்க, ஸ்டார்ட் அழுத்தி கிடைக்கும் ரன் விண்டோவில் ‘command’ அல்லது ‘cmd’ என டைப்செய்து என்டர் செய்தால் கிடைக்கும் விண்டோவில் கீழ்காணும் கட்டளையை இயக்கவும்..

    c:\>chkdsk e:
    இது ஹார்ட் டிஸ்க்கின் 'e' டிரைவை சோதனை செய்யும்..

    c:\>chkdsk e: /f /r

    /f என்னும் கட்டளை டிஸ்க்கினை சோதனை செய்கையில் ஏதேனும் பிழைகளைக்கண்டால்; தானாகவே சரிசெய்துவிடும்..
    /r என்னும் கட்டளை பழுதாகிப்போன மீண்டும் பயன்படுத்த முடியாத டிஸ்க்கிக் பகுதிகளை( Bad Sectors ) கண்டறிந்து அதிலுள்ள தகவல்களை மீட்டுத்தர முயற்சிக்கும்..


    இந்த செக்டிஸ்க் கட்டளை கொடுத்தபின் கம்ப்யூட்டரை ரீ-ஸ்டார்ட் செய்யவும்..பூட் ஆகும் போது செக்டிஸ்க் தானாக இயங்கி விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்ட்டம் திரைக்கு வந்துவிடும்..

    குறிப்பு

    • இந்த பைலை இயக்க ஒரு கம்ப்யூட்டருக்குள் நீங்கள் அட்மினாக (admin)நுழைந்திருக்க வேண்டும்.

    • ஹார்ட் டிஸக்கில் உள்ள தவறுகளை இந்த கட்டளை திருத்த வேண்டுமென்றால் நீங்கள் கம்ப்யூட்டரில் உள்ள எந்த பைலையும் திறந்து வைத்திருக்கக் கூடாது.. 
    இப்பத்தான் நான் சோதனை செய்து முடித்தேன் என்னுடைய டிஸ்க்கில் இப்போதைக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை..ம்ம்..அப்பாடி..