Friday, 19 September 2014

இந்திய பட வரலாற்றிலேயே ஐ - க்குப் பிறகுதான் எல்லா படமும்..!

By: Unknown On: 21:39
  • Share The Gag
  • ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஐ படம் ரிலீஸ் ஆன பிறகு என்ன சாதனையை நிகழ்த்துமோ தெரியாது...ஆனால் படம் வெளியாவதற்கு முன்பே, அதாவது தயாரிப்பு நிலையில் இருக்கும்போதே, இந்திய சினிமாவில் சாதனையை நிகழ்த்திய படமாகி இருக்கிறது. என்ன சாதனை? பட்ஜெட்டிலும், பிசினஸிலும், வசூலிலும், தமிழ் சினிமாவை விட ஹிந்திப் படங்கள் பல மடங்கு அதிகம்.

    அது மட்டுமல்ல, பாலிவுட் படங்கள் உலகம் முழுக்க வெளியாகின்றன. அப்பேற்பட்ட பாலிவுட் படங்களின் பட்ஜெட்டையே தென்னிந்திய திரைப்படங்களின் பட்ஜெட் பின்னுக்குத் தள்ளிவிட்டன. குறிப்பாக தமிழ்ப்படங்களின் பட்ஜெட் பாலிவுட் படங்களின் பட்ஜெட்டை தாண்டிவிட்டன. இதுவரை இந்தியாவில் தயாரான படங்களிலேயே அதிக தொகையில் உருவான படம் என்ற பெருமை ஐ படத்துக்குக் கிடைத்துள்ளது. அதாவது ஐ திரைப்படத்தின் பட்ஜெட் 185 கோடி ரூபாய்.

    ஐ படத்துக்கு அடுத்த இடத்தில் இருப்பது எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் பாகுபாலி தெலுங்குப்படத்தின் பட்ஜெட். இதன் பட்ஜெட் 175 கோடி ரூபாய். மூன்றாவது இடத்தில் உள்ளது கோச்சடையான் படம். இப்படத்தின் பட்ஜெட் - 150 கோடி. இப்படங்களுக்கு அடுத்த இடங்களை பிடித்திருப்பது..மூன்று ஹிந்திப்படங்கள். ஷாருக் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் பட்ஜெட் 130 கோடி. மற்றவை தூம் 3 மற்றும் கிரிஷ் -3. தூம் 3 படத்தின் பட்ஜெட் -125 கோடி. க்ரிஷ் 3 படத்தின் பட்ஜெட் -115 கோடி. 

    அழைப்புக்களை புறக்கணிக்கும் பேங் பேங் படக்குழு

    By: Unknown On: 21:02
  • Share The Gag
  • புதிதாக எந்த படம் ரிலீஸ் ஆனாலும் அந்த படத்தை புரமோட் செய்யும் நிகழ்ச்சிகள் டிவிக்களில் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பாணியை ஏற்க பேங் பேங் படக்குழு நிராகரித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் -8 நிகழ்ச்சியில் ஹிருத்திக் ரோஷன் நடித்த பேங் பேங் படத்தை புரமோட் செய்வதற்காக கலந்து கொள்ளுமாறு பேங் பேங் படத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

     ஆனால் இந்த அழைப்பை புறக்கணிக்க ஹிருத்திக் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. பேங் பேங் படக்குழு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் என பிக் பாஸ் குழு கூறியிருப்பதை பேங் பேங் படக்குழு மறுத்துள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்ற. மேலும் எந்த ரியாலிட்டி ஷோ மூலமும் தங்கள் படத்தை புரமோட் செய்ய விரும்பவில்லை எனவும் திட்டவட்டமாகவும் தெரிவித்து பேங்பேங் படக்குழு.

    சித்தார்த் ஆனந்த் இயக்கி, ஹிருத்திக்-கத்ரினா கைப் நடித்துள்ள பேங் பேங் படம் அக்டோபர் 2ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தூம் 3 படத்தை எந்த ரியாலிட்டி ஷோ மூலமும் பிரமோட் செய்யாமல் அமீர்கான் வெளியிட்டதை பின்பற்ற நினைத்தே ஹிருத்திக் இந்த அழைப்பை புறக்கணித்துள்ளதாகவும் ஒரு பக்கம் கூறப்பட்டு வருகிறது. ரசிகர்கள் மீது தங்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கை இருப்பதால் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் படத்தை பிரமோட் செய்ய விரும்பவில்லை எனவும் பேங் பேங் கூறி உள்ளதாம்.