Friday, 25 October 2013

நான் ஈ இயக்குனரின் ‘மகாபலி’

By: Unknown On: 23:46
  • Share The Gag


  • ராஜமௌலி இயக்கி வரும் தெலுங்கு படத்திற்கு தமிழில் ‘மகாபலி’ என்று பெயர் வைத்துள்ளனர்.

    நான் ஈ பட இயக்குனர் ராஜமௌலி அடுத்து பாஹுபாலி தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். சரித்திர பின்னணியிலான இப்படத்தில் அனுஷ்கா ராணி வேடம் ஏற்றிருக்கிறார். ‘ரிபெல் ஸ்டார்’ பிரபாஸ்தான் கதையின் நாயகன்.
    இவர்களுடன் சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகர் - நடிகைகள் பலர் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறுகிறது. தெலுங்கு திரையுலகில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.


    இந்நிலையில் படத்தின் ‘மேக்கிங்’ சம்பந்தமான வீடியோ ஒன்றை, கதாநாயகன் பிரபாஸின் பிறந்த நாளையொட்டி வெளியிட்டுள்ளனர். தெலுங்கின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவரான எம்.எம்.கீரவாணி இசை அமைக்க, கே.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படத்திற்கு சாபு சிரில் கலை இயக்குனராக பணியாற்ற, பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சிகளை அமைக்கிறார். ஸ்ரீகர் பிரகாஷ் எடிட்டிங் செய்யும் இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகளை ஹாலிவுட் கலைஞர்கள் கவனிக்கிறார்கள்.


    ராஜமெளலி இயக்கிவரும் 'பாஹுபாலி' திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கிறது. 'ரத்த சரித்திரா' படத்தினைத் போன்று ஒரே சமயத்தில் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் இப்போதே முடித்துவிட முனைப்புடன் செயல்படுகிறாராம் ராஜமெளலி. இந்தப் படத்திற்கு தெலுங்கில் ‘பாஹுபாலி’ என்றும் தமிழில் ‘மகாபலி’ என்றும் பெயர் வைத்துள்ளார்.

    சர்வதேச திரைப்பட விழாவை தொடங்கி வைக்கும் ராம் லீலா!

    By: Unknown On: 23:43
  • Share The Gag


  • மொராக்கோவின் சர்வதேச திரைப்பட விழாவை தொடங்கிவைக்கிறது ‘ராம் லீலா’.


    ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நவம்பர் 29ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை 13வது மராக்கெஷ் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது.
    இந்த விழாவில் திரையிடுவதற்காக இந்தியாவில் இருந்து பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் ராம் லீலா தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதுவும் சர்வதேச திரைப்பட விழா இந்திய சினிமாவை கொண்டாடும் வகையில், விழாவின் தொடக்கமாக ராம் லீலா படம் இடம்பெறுகிறது.


    இதன்மூலம் சர்வதேச திரைப்பட விழாவை தொடங்கி வைக்கும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை ராம் லீலா பெறுகிறது. திரைப்பட விழாவில் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, தீபிகா படுகோன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.




    ரன்வீர் சிங், தீபிகா படுகோன் நடித்துள்ள ராம் லீலா, நவம்பர் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரோமியோ-ஜூடிவயட் காலகத்திய காட்சிகளை தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கும இப்படத்தின் டிரைலர் மற்றும் தீபிகாவின் நடனம் இடம்பெற்ற பாடல் ஒன்று வெளியிடப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

    'அத்தரின்டிக்கி தாரெடி' ரீமேக்கில் விஜய்!

    By: Unknown On: 23:38
  • Share The Gag

  • தெலுங்கில் ஹிட்டான 'அத்தரின்டிக்கி தாரெடி' படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிப்பது உறுதியாகிவிட்டது.

    சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்தோடு வசூல் சாதனையும் படைத்த படம் 'அத்தரின்டிக்கி தாரெடி'. இதில் நாயகன், நாயகியாக பவன் கல்யாண், சமந்தா நடித்திருந்திருந்தனர்.

    தற்போது இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதன் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிப்பது உறுதியாகி விட்டதாம். தெலுங்கில் சமந்தா நடித்த வேடத்தில் தமிழிலும் அவரே நடிக்க உள்ளார். இதன்மூலம் அவர் விஜய்க்கு ஜோடியாக முதன் முறையாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்கிறார். படத்துக்கு இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை.

    விஜய் தரப்போ காவலன் படத்தை இயக்கிய சித்திக் இயக்கினால் நன்றாக இருக்கும் என விரும்புகிறதாம். ஆனால் சித்திக்கோ ஜான் ஆப்ரஹாம் நடிக்கும் இந்தி படத்தை இயக்க உள்ளார். இதனால் வேறொரு இயக்குனர் இப்படத்தை இயக்கலாம் என கூறப்படுகிறது.

    ஏற்கெனவே விஜய் பல தெலுங்கு ரீமேக் படங்களை தமிழுக்கு கொண்டு வந்துள்ளார். அந்த வரிசையில் 'அத்தரின்டிக்கி தாரெடி' படமும் இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அண்ணனுக்காக உடல் எடையை குறைக்கும் தம்பி!

    By: Unknown On: 23:35
  • Share The Gag

  • ஜெயம் ரவி, தனது அண்ணன் ராஜா இயக்கும் படத்துக்காக உடல் எடையை குறைக்க உள்ளார்.

    தற்போது ஜெயம் ரவி பூலோகம், நிமிர்ந்து நில் ஆகிய இரண்டு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அவர் 'பூலோகம்' படத்தில் குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இதற்காக அவர், தனது உடல் எடையை அதிகரித்து ஜிம் பாய் தோற்றத்துக்கு மாறினார். இதே தோற்றத்துடன் அவர் 'நிமிர்ந்து நில்' படத்திலும் நடித்து வருகிறார்.

    இவ்விரு படங்களுக்குப் பிறகு ஜெயம் ரவி அவருடைய அண்ணன் ராஜா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இன்னும் பெயரிப்படாத இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் ஆக்ஷனுக்கு நிகராக ரொமான்டிக் காட்சிகளும் இருப்பதால் ஜெயரம் ரவியிடம் எடையை குறைக்குமாறு ராஜா சொல்லியிருக்கிறாராம்.

    மேலும் ஜெயம் ரவி தனது பழைய படங்களில் எப்படி இருந்தாரோ அப்படியே இருக்க வேண்டும் எனவும் விரும்புகிறாராம். இதையடுத்து ஜெயம் ரவி தனது உடல் எடையை 12 கிலோ வரை குறைக்க இருக்கிறார்.

    அஜீத் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு!

    By: Unknown On: 23:28
  • Share The Gag
  • 'வீரம்' படப்பிடிப்பின் போது தெலுங்கு திரைப்பட ஸ்டண்ட் கலைஞர்கள் போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

    சிவா இயக்கத்தில் அஜீத்-தமன்னா நடித்து வரும் வரும் வீரம். இப்படத்திற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு, படத்தின் சண்டைக்காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இதன் சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா வடிவமைக்கிறார். 

    இந்த சூழ்நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த தெலுங்கு ஸ்டண்ட் யூனியனைச் சேர்ந்தவர்கள் தங்களது சங்கத்தை சேர்ந்த்வர்களுக்கும் படத்தில் வேலை கொடுக்கவேண்டும் என போர்க்கொடி தூக்கினார்கள். ஆந்திராவில் வேறு மொழி பட படப்பிடிப்பு நடத்தும் போது, தெலுங்கு திரைப்பட ஸ்டண்ட் கலைஞர்கள் குறிப்பிட்ட சதவீதம் பேரை பயன்படுத்த வேண்டும். 

    இதை செய்யாததால் 'வீரம்' பட படப்பிடிப்பிற்கு எதிராக அவர்கள் கோஷம் போட்டனர். இதனால் படப்பிடிப்பு தடைபட்டு, பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டு ஸ்டண்ட் யூனியனையும் சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. 

    நிலைமையை கவனித்த சிறுத்தை சிவா ஸ்டண்ட் காட்சிகளை ஒதுக்கிவைத்துவிட்டு அஜீத், தமன்னா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க ஆரம்பித்துவிட்டாராம்.

    இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-04

    By: Unknown On: 19:51
  • Share The Gag
  • புதியகற்காலத்தை அடுத்து வந்த காலம் உலோககாலம்.  உலோக காலம் இந்தியாவில் கி.மு 3300 ஆண்டு வாக்கில் தொடங்கியது. உலோக காலத்தை செம்பு-கற்காலம், இரும்பு காலம் என இரண்டாக வகைபடுத்தலாம்.


    செம்பு கற்காலம்:
                   கல் ஆயுதங்களுக்கு பதிலாக செம்பு, வெண்கலம் போன்ற பல வகையான உலோகங்களை உருக்கி கருவிகளை செய்தனர்.  உலோகங்களின் வருகையால் பொருளாதாரம், நாகரிகம் சற்று வேகமாக வளர்ச்சியடைய ஆரம்பித்தது. சில நுண் கற்கருவிகளும் இக்காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தன. உலோகங்களின் பயன்களை அறிந்த மக்கள் உலோகங்களை தேடி நெடுந்தூர பயணம் மேற்கொண்டனர்.



    தென்இந்தியாவில் கோதாவரி, காவிரி, துங்கபத்ரா, பென்னாறு நதிகளின் பள்ளதாக்குகளில் குடியானவ சமுதாயங்கள் தோன்றி வளர்ந்தன. கி.மு 2000 ஆண்டு வாக்கில் தென்னிந்தியாவில் உலோகங்கள் பயன்படுதியதர்க்கான சான்றுகள் காணப்படுகின்றன. இந்தியாவின் மிக பழமையான நாகரிகமாக கருதப்படும் மேலும் எகிப்து, மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்ததாக கருதப்படும் ஹரப்பா நாகரிகம் ஆரம்பமானது செம்பு கற்காலத்தில் தான் .

    ஹரப்பா பண்பாடு:

               கி.பி 1856 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கிழக்கிந்திய ரயில்வே கம்பனியை சார்ந்த பொறியாளர்கள்  பிரிட்டிஷ் கால இந்தியாவின் கராச்சி-லாகூர் நகரங்களை  இணைக்க இருப்பு பாதை பணிகள் மேற்கொண்ட பொழுது பூமிக்கடியில் கட்டிடங்களின் தடயங்கள் இருப்பதை கண்டறிந்தனர். இதுவே ஹரப்பா என்னும் தொன்மையான  நாகரிகம் வெளிவந்ததற்கான முதல் படி. பின்னர் அரை  நூற்றாண்டுகள் கழித்து 1912 ஆண்டில் ஹரப்பா நாகரிகத்தின்  முழுமையான பெருமைகள் வெளிவர தொடங்கின. கடந்த156 ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சிகள் மேற்கொண்ட வண்ணமே  உள்ளனர்.




              1931 ஆம் ஆண்டிலிருந்தே ஒவ்வொரு வரலாற்று ஆசிரியர்களும் ஹரப்பா நாகரிகத்தின் காலத்தை ஒவ்வொரு விதமாக கணிக்கின்றனர். இவை அனைத்தையும் தொகுத்து  பார்க்கும் பொழுது ஹரப்பா நாகரிகத்தின் காலம் கி.மு 3300 இல்  இருந்து கி.மு 1500. எதிர்காலத்தில் வேறு மாற்றம் கூட வரலாம்.
     .
                     சிந்து பள்ளத்தாக்கின் மேற்கு பஞ்சாப்பிலுள்ள ஹரப்பா மற்றும் சிந்து மாகாணத்திலுள்ள மொகஞ்சதாரோ ஆகிய இரு  இடங்களில் தான் முதன் முதலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தற்போது இவ்விரு இடங்களுமே பாகிஸ்தானில் உள்ளன. தொடக்கத்தில் இப்பண்பாடு சிந்து சமவெளி நாகரிகம் என்றழக்கபட்டது. பின்பு சிந்துசமவெளி நாகரிகத்திற்கு அப்பாலும் இந்நாகரிகத்தின் தடயங்கள்  இருந்ததால், முதன்  முதலில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட இடத்தை நினைவு  கூறும் விதமாக ஹரப்பா பண்பாடு என்றளைக்கப்படுகிறது .


     உலகின்  மிக பழமையான நாகரிகமாக கருதப்படும் மெசபடோமியா, எகிப்திய நாகரிகத்திற்கு இணையானது ஹரப்பா பண்பாடு.  ஹரப்பா நாகரிகத்திற்கு முந்தய கால மக்களின் தடயங்கள் கிழக்கு பாலுச்தீனத்தில் காணப்படுகின்றன. எனவே ஹரப்பா  நாகரிகம் அங்கிருந்த மக்களின் குடிப்பெயர்தளால்  ஆரம்பித்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.


                    சிந்து சமவெளி நாகரிக மக்கள் சிறப்பு வாய்ந்த நாகரீக  வாழ்வை பெற்றிருந்தனர் பெரும்பாலான இடங்களில் செங்கற்களாலான கோட்டைகளும் கட்டிடங்களும்  இருந்துள்ளன. பாதாள சாக்கடை அமைத்து கழிவுநீரை அகற்றும் அளவுக்கு நாகரீக வளர்ச்சியும் பெற்றிருந்தனர். மேலும்  மொகஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட 38 அடி நீளமுள்ள  மாபெரும் குளியல்குலம் அவர்களின் மேம்பட்ட வாழ்க்கையை  பறைசாற்றுகிறது. சிந்துவெளி நாகரிகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட செரமிக் பொருட்கள் தெற்கு துர்க்மெனிஸ்தானிலும், வடக்கு ஈரானிலும் காணப்பட்ட செரமிக் பாண்டங்களுடன் ஒத்துப்போகின்றன. இதன் மூலம் சிந்துவெளி மக்கள் அப்பகுதிகளுடன் வணிகத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


           
                       ஹரப்பா மக்கள்  சிவா  வழிபாட்டை  மேற்கொண்டிருந்ததற்கான சான்றுகள் நிறைய உள்ளன. சிந்து சமவெளி நாகரிக மக்கள் ஹிந்துக்களே என்ற முடிவுக்கு வரமுடிகிறது. இருப்பினும் வழிபாட்டு கூடங்கள், கோவில்கள்  இருந்ததற்கான சான்றுகள் இன்று வரை ஏதும் இல்லை.


     


             மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஆரியர்களின்  படையெடுப்பினால், வறட்சி, புயல், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் சிந்து சமவெளி நாகரீகம் அழிந்திருக்கலாம் என்று  பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. மேலும் ஆரியர்களின்  படையெடுப்பிற்கு பின் அங்கிருந்த மக்கள் தென்இந்தியாவை  நோக்கி வந்தனர் எனவே ஹரப்பா மக்கள் பயன்படுத்திய மொழி  தமிழ் என்று கூறும் வரலாற்று ஆசிரியர்களும் உண்டு. இதற்கு சான்றாக நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துளது. இதிலிருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாக தெரிகிறது.
                            தமிழ்நாட்டின் காவிரிக் கழிமுகப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகக் குறியீடுகளைப் போன்றே இருப்பதாக, பழங்கால எழுத்துக்களை ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

    ஹரப்பா பண்பாட்டிற்கு பிறகு ஆரம்பித்த காலம் வேத காலம். இக்காலக்கட்டத்தில் ஆரியர்களின் படையெடுப்பு மற்றும் இந்தோ-ஆரிய கலாச்சாரம் உருவாகியது. இதை பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்ப்போம்!

    ‘விஸ்வரூபம்’ வெறும் குழந்தை : டெக்னீஷியன் கருத்து

    By: Unknown On: 18:08
  • Share The Gag
  • 'Viswaroopam' only child: technician Feedback‘விஸ்வரூபம்‘ 2ம் பாகம் முன் முதல்பாகம் வெறும் குழந்தைதான் என்று அதில் பணியாற்றும் டெக்னீஷியன் கூறினார். ‘விஸ்வரூபம் 2ம் பாகம்‘ இயக்கி நடித்து வருகிறார் கமல். ஆண்ட்ரியா, பூஜாகுமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் டிரைலரை 2வது கட்டமாக வெளியிட்டுள்ளார் கமல். ஆக்ஷன் பகுதிகள் நிறைந்த படமாக இப்படம் உருவாகி வருகிறது.


    திரையுலகை சேர்ந்த சிலர் டிரைலரை பார்த்து பாராட்டினர். விஷுவல் எபக்ட்ஸ் சூபர்வைசர் மதுசூதனன் தனது இணைய தள டுவிட்டர் பக்கத்தில், ‘விஸ்வரூபம் 2ம் பாக  டிரைலர் என்னை பெரிதும் கவர்ந்தது. இந்த டிரைலரை பார்க்கும்போது ஏற்கனவே வெளியான விஸ்வரூபம் முதல் பாகம் இந்த 2ம்பாகத்தின் முன் வெறும் குழந்தைதான். இப்படத்தின் விஷுவல் எபக்ட் பணிகள் ரசிகர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கும்‘ என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் டிரைலரை பார்த்த உதயநிதி ஸ்டாலின்,‘விஸ்வரூபம் 2ம் பாக டிரைலர் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். உலகநாயகன் கமல் மட்டும்தான் இதுபோன்ற படத்தை செய்ய முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    நாயகன் வேடம் வேண்டாம்!

    By: Unknown On: 18:02
  • Share The Gag

  • ‘ரகளபுரம்‘ படத்தில் கருணாசுடன் சேர்ந்து மற்றொரு ஹீரோவாக நடித்திருப்பவர் பரத் ரெட்டி. அவர் கூறும்போது, ‘தமிழில் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தேன். இந்த படத்தை பார்த்துதான் ‘ரகளபுரம்‘ படத்தில் கருணாஸ் எனக்கு போலீஸ் அதிகாரியாக நடிக்க வாய்ப்பு தந்தார்.

     Do not play the hero

    அடுத்து சுந்தரபாண்டியன் இயக்கும் ‘இது கதிர்வேலன் காதல்‘, ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தயாரிக்கும் படம், ‘சேட்டை‘ இயக்குனர் கண்ணன் இயக்கும் படங்களில் நடிக்கிறேன். ஐதராபாத்தில் இதய அறுவை சிகிச்சை டாக்டராக பணிபுரிந்தாலும் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்த விஷயம். ஹீரோ ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை. குணசித்திரம் உள்ளிட்ட வேடங்களே போதும். நடிப்புக்காக டாக்டர் பணியை விடமாட்டேன்’ என்றார்.

    நோக்கியா லூமியா 1320 பேப்லட் அறிமுகம்

    By: Unknown On: 17:42
  • Share The Gag

  • மைகேரோசாப்ட் நோக்கியாவை வாங்கிய பிறகு  இப்போது முதன்முறையாக பேப்லட் ஒன்றை வெளியிட்டுள்ளது. நோக்கியா லூமியா 1320 என்ற பெயர் கொண்ட இந்த பேப்லட், 6 இன்ச் நீளம் கொண்ட டிஸ்பிளே உடையது.

    மேலும், மொபைலில் அதிகம் ஸ்கேரட்ச்(scratch) ஆகாமல் இருக்க கொரில்லா கிளாஸ் இதில் உள்ளது. 1.7GHz dual-core Qualcomm Snapdragon 400 processor கொண்டுள்ளது, இது மற்ற பிராஸஸர்களை விட மிக வேகமாக செயல்படக்கூடியதாகும்.

    மேலும் இதில் 1GB ரேம், விண்டோஸ் 8 OS, மற்றும் 5MP கேமரா ஆகியவற்றுடன் சந்தையில் கிடைக்கிறது. இதில் 8GB க்கு இன்டர்நெல் மெமரியும் 32GB க்கு மெமரி கார்டு ஆப்ஷனும் இந்த பேப்லட்டில் உள்ளது. இந்த பேப்லட் வாங்கும் நபர்கள் கிளவுட் ஸ்டோரேஜ் மூலம் 7GB க்கு ஆன்லைனில் தங்களது தகவல்களை சேமித்து கொள்ளலாம்.

    லூமியா 1320 ல் மைக்ரோசாப்டின் வேர்டு, எக்ஸல், பவர்பாயிண்ட் என அனைத்தையும் இதில் பயன்படுத்தும் வகையில் இந்த பேப்லட் உள்ளது. இதன் தற்போதைய விலை ரூ.20,900 என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. இது அடுத்த வரும் 2014 ஜனவரி மாதம் முதல் சந்தையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நோக்கியா லூமியா 1320 பேப்லட் அம்சங்கள்:


    1280 x 720 என்ற pixel resolution கொண்டுள்ளது

    1.7GHz dual-core Qualcomm Snapdragon 400 processor கொண்டுள்ளது

    5MP கேமரா

    0.3MP ப்ரண்ட் கேமரா,

    8GB க்கு இன்டர்நெல் மெமரி,

    1GB ரேம்,

    விண்டோஸ் 8 OS

    4G,

    3G,

    WiFi 802.11 b/g/n

    எடை 220 கிராம்

    எல்ஜி Fireweb, பயர்பாக்ஸ் ஓஎஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

    By: Unknown On: 17:37
  • Share The Gag
  •                                             



    எல்ஜி நிறுவனம் பயர்பாக்ஸ் ஓஎஸ் இல் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன் Fireweb என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இந்த சாதனம் பயர்பாக்ஸ் OS 1.1 இயங்குதளத்தில் இயங்குகின்றது. Fireweb ஸ்மார்ட்போன் பிரேசில் முதல் நாட்டில் ரூ. 12,700 விலையில் முதன் முதலாக தொடங்கப்பட்டது.

    பயர்பாக்ஸ் OS 1.1 அடிப்படையாக கொண்டு எல்ஜி Fireweb வருகிறது, 4 இன்ச் HVGA (320x480) டிஎஃப்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 1GHz குவால்காம் ப்ராசசர், மற்றும் microSD அட்டை ஸ்லாட் கொண்ட inbuilt சேமிப்பு 4GB கொண்டுள்ளது. 1540mAh பேட்டரி மற்றும் Wi-Fi, ப்ளூடூத், மைக்ரோ-USB, 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் 3 ஜி போன்ற இணைப்பு விருப்பங்களும் கொண்டுள்ளது.

    எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற ஆட்டோ ஃபோகஸ் கேமரா. கூடுதலாக எல்ஜி புதிய பயர்பாக்ஸ் ஸ்மார்ட்ஃபோனில் HTML5 துணைபுரிகிறது. வெப் ப்ரவ்சர், காலெண்டரை, கடிகாரம் மற்றும் வரைபட அப்ளிக்கேஷன் உடன் ஏற்றப்பட்டதாக வருகின்றது.

    எல்ஜி Fireweb முக்கிய குறிப்புகள்:


    4 இன்ச் HVGA (320x480) டிஎஃப்டி டிஸ்ப்ளே

    1GHz குவால்காம் ப்ராசசர்

    MicroSD அட்டை ஸ்லாட் உடன் inbuilt சேமிப்பு 4GB

    1540mAh பேட்டரி

    பயர்பாக்ஸ் OS

    எல்இடி ப்ளாஷ் உடன் 5 மெகாபிக்சல் பின்புற ஆட்டோ ஃபோகஸ் கேமரா

    Wi-Fi,,

    ப்ளூடூத்,

    மைக்ரோ-USB,

    3.5mm ஆடியோ ஜாக்

    3G

    பேபால் மணி கிராம் – இதில் உடனடியாக பணம் !

    By: Unknown On: 17:03
  • Share The Gag
  • பேபால் மூலம் பரிவர்த்தனை நடத்துவதுதான் இப்ப ஃபேம்ஸாக இருக்கிறது. உடனே பணம் அனுப்ப‌ இன்னொரு முறை வெஸ்ட்டர்ன் யூனியன் அல்லது மணி கிராம் என்ற சேவை. இப்போது பேபால் மனி கிராமுடன் இனைந்து அற்புதமான திட்ட்த்தை உருவாக்கியுள்ளது.



    25 - ravi paypal


    1. அதாவது பேபாலுக்கு தேவையான கிரடிட் கார்ட் அல்லது வங்கி கணக்கு இனி மேல் தேவையில்லை. நேராக மணி கிராம் கடைக்கு சென்று காசை கட்டி பேபால் அக்கவுன்ட்டில் வரவு வைத்து அனுப்ப வேண்டியவங்களுக்கு பேபால் மூலம் பணத்தை அனுப்பலாம்.


    2. பேபாலில் பணம் வந்தாலோ அல்லது பணம் எடுக்க 7 – 10 நாட்கள் ஆகும் ஏன் என்றால் பேபால் பணத்தை வங்கியில் தான் நேரடியாய் செலுத்தும். அது வரை நமக்கு ஸ்டக் ஆகிவிடும். இப்போது பணத்தை வித்டிரா செய்யலாம் எப்படி – பணத்தை மணி கிராமாக டிரான்ஸஃபராக மாற்றி உடனே உலகத்தின் எந்த ஒரு மூலையிலும் பணத்தை மணி இன் செகன்ட்ஸ் பிரகாரம் உடனே பெறலாம்.

    இப்போதைக்கு இது அமெரிக்காவில் மட்டும் சாத்தியம் ஆனால் விரைவில் உலகெம்ங்கும்….

    இதை தவிர இப்போது பேபால் ப்ரீபேய்ட் மாஸ்டர் கார்டை இலவசமாக தருகின்றனர். இதன் மூலமும் பேபாலில் நமக்கு வரும் பணத்தை கிரடிட் அல்லது டெபிட் கார்ட் மாதிரி உபயோகிக்கலாம் மற்றும் உலகத்தின் எந்த ஒரு ஏடிஎம் இயந்திரத்திலும் பணம் எடுக்கலாம்.

    சார்ஜ் வழக்கம் போல உண்டு.இதுவும் உடனே எடுக்க கூடிய ஒரு விஷயம் தான்.

    எனக்கு வேணா ஒரு ஆயிரம் அமெரிக்க டாலர் அனுப்பினா பக்காவா வேலை செய்தான்னு பார்த்து சொல்றேன் – வசதி எப்படி..???

    ராடாருக்கு புது யுக்தியை கொடுத்த டால்பின்கள்!

    By: Unknown On: 16:55
  • Share The Gag
  • டால்பின்கள், பாலூட்டி வகையை சார்ந்தவை. அவை சமுதாயமாக வாழும் தன்மை கொண்டவை. உணவைப் பெறுவதிலும், குட்டிகளைப் பராமரிப்பதிலும் அவை ஒன்றுக்கொன்று கூட்டாக செயல்படும்.
    உலகில் 37 வகை டால்பின்கள் இருக்கின்றன. இவற்றில் 32 வகை டால்பின்கள் கடலில் வாழ்கின்றன. 5 டால்பின் இனங்கள் ஏரிகளில் காணப்படுகின்றன.

    25 - tec dolhin rador.2

    டால்பின்கள் கடல் மட்டத்தில் இருந்து 260 மீட்டர் ஆழம் வரை வாழும் தன்மை பெற்றவை. அவை சுவாசிப்பதற்காக அடிக்கடி கடல்மட்டத்திற்கு வந்து `டைவ்’ அடித்துவிட்டுச் செல்லும். ஆபத்து சமயங்களில் 15 நிமிடம் வரை தண்ணீரில் மூழ்கியிருக்கும்.அத்துடன் டால்பின்கள் `எகோலொகேசன்’ எனும் முறையில் எதிரொலி முறைப்படி உணவு தேடல் மற்றும் இடப்பெயர்ச்சியை மேற்கொள்கிறது.


    மொத்தத்தில் மிகவும் அமைதியான விலங்கான டால்பின்,மனிதர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவி வருகிறது. எனவே டால்பினை வைத்து பல ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.


    பொதுவாக டால்பின்கள், நீரில் மூழ்கி உள்ள பொருட்களை ஒலி அலைகளை அனுப்பி அவை என்ன என்று கண்டறிகின்றன. இந்த யுக்தி பயன்படாத நேரங்களில் நீர்குமிளிகளை எழுப்பி பொருட்கள் மீதுள்ள தூசுகளை அகற்றிவிட்டு இரையை அடையாளம் காண்கின்றன.


    டால்பின்களின் இந்த ஆய்வு முறையை பின்பற்றி வெடி பொருட்களை துல்லியமாக கண்டறிய உதவும் புதிய ராடார் ஒன்றை லண்டன் சவுத் ஆம்ப்டன் பல்கலைகழக விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். தற்போதுள்ள ராடார் முறையில் நீரில் மூழ்கியுள்ள அனைத்து பொருட்களுமே தெரிய வரும்.

    25 - tec dolhin rador



    இதன் மூலம் பல நேரங்களில் தவறான பொருட்கள் அடையாளம் காணப்படுகின்றன. இந்நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராடார் மூலம் நீரில் மூழ்கியுள்ள வெடி பொருட்களை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என்கிறார்கள்.

    Dolphins Inspire Rescue Radar Device

    **************************************


     British engineers said Wednesday they had taken inspiration from dolphins for a new type of radar device that could easily track miners trapped underground or skiers buried in an avalanche. The device, like dolphins, sends out two pulses in quick succession to allow for a targeted search for semiconductor devices, canceling any background “noise,” the team wrote in the journal Proceedings of the Royal Society A: Mathematical and Physical Sciences.

    ஈரோடு மாவட்டத்தின் வரலாறு!

    By: Unknown On: 08:02
  • Share The Gag

  • தந்தை பெரியார் பிறந்த மண். 1996-ஆம் வருடம் வரை இது பெரியார் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது. சென்னையிலிருந்து தென்மேற்கு திசையில் 400 கிலோமீட்டர் (249 மைல்) தொலைவிலும் காவிரி மற்றும் பவானி ஆறுகளின் நதிக்கரையிலும், தென்னிந்திய தீபகற்பத்தில் மையத்திலும் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஈரோடு கைத்தறி, விசைத்தறி ஜவுளி பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பிற்கு புகழ் பெற்றது. எனவே இது இந்தியாவின் கைத்தறி நகரம் எனவும் பாரதத்தின் ஜவுளி நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி, ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஈரோடு நகராட்சி 01.01.2008 முதல் 'ஈரோடு மாநகராட்சி' யாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

    உற்பத்தி ரகங்களான பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தரைப்பாய்கள், லுங்கிகள், அச்சிடப்பட்ட துணிகள், துண்டுகள், கால்சட்டைகள் போன்ற பொருட்களை மொத்தமாக இங்கே சந்தைப்படுத்தப்படுகின்றன. இது மஞ்சள் மாநகரமாகவும் (Turmeric City) மற்றும் ஜவுளி மாநகரமாகவும் (Textile City) திகழ்கிறது. ஈரோடு கொங்கு நாட்டில் ஒரு முக்கிய நகரமாக உள்ளது. தமிழகத்தில் புகழ்பெற்ற ஊத்துக்குளி வெண்ணெய், காங்கேயம் காளை இரண்டும் ஈரோடு மாவட்டத்தின் சிறப்பு.

    இவ்வூரில் பிறந்த புகழ்பெற்ற மனிதர்கள்

    தந்தை பெரியார்

    பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (E. V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்[1]. இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது.

    சீனிவாச ராமானுஜம்

    சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 - ஏப்ரல் 26, 1920) உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் கும்பகோணம் சீனிவாசய்யங்கார், தாயார் ஈரோடு கோமளத்தம்மாள். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் 1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.

    தீரன் சின்னமலை

    மாவீரன் தீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் ஒருவர்.

    ஈரோடு மாவட்டம் 5 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

    பவானி
    ஈரோடு
    கோபிசெட்டிபாளையம்
    பெருந்துறை
    சத்தியமங்கலம்
    இம்மாவட்டத்துடன் இருந்த தாராபுரம், காங்கேயம் வட்டங்கள், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

    வா..வா..என்றழைக்கும் கோவா - சுற்றுலாத்தலங்கள்!

    By: Unknown On: 07:57
  • Share The Gag
  •       வா..வா..என்றழைக்கும் கோவா

    சிக்க வைக்கும் கடற்கரையைக் கொண்ட கோவாவில் தரிசிக்க வைக்கும் தலங்களும் நிறைய உண்டு. இவற்றில் பாரம்பரியமிக்க தேவாலயங்களும் அடக்கம். இந்த தேவாலயங்கள் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டு கோவாவை மேலும் மிளிர வைத்துக்-கொண்டிருக்கின்றன.
     கோவாவைப் பற்றிய குறிப்புகள் வரலாற்றில் 3ம் நூற்றாண்-டிலேயே காணப்படுகின்றன. மவுரியப் பேரரசின் ஒரு பாகமாக இது இருந்து வந்துள்ளது. தொடர்ந்து சாளுக்கியர்கள், டெல்லி சுல்தான்கள், விஜயநகர மன்னர்கள், போர்ச்சுகீசியர்கள் என பல தரப்பினரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.

     போர்ச்சுகீசியர்களின் ஆளுகையின் போது பல தேவாலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதில் பழைய கோவாவில் கட்டப்பட்ட தேவாலயங்கள் முக்கியமானவை. சே கதீட்ரல், சர்ச் அண்ட் கான்வென்ட் ஆப் செயின்ட் பிரான்சிஸ் ஆப் அசிசி, சேப்பல் ஆப் செயின்ட் காதரின், பாசிலிகா ஆப் போம் ஜீசஸ், சர்ச் ஆப் லேடி ஆப் ரோசரி, சர்ச் ஆப் செயின்ட் அகஸ்டின் போன்றவை பாரம்பரியமிக்கவை. அனைத்தும் 16- 17ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை. இவை அழகிய கலை வேலைப்பாடுகள் கொண்டவை. போம் ஜீசஸ் சர்ச் அதாவது குழந்தை இயேசு தேவாலயம், ஆசிய அளவில் புகழ்பெற்றதாக விளங்கி வருகிறது. இந்த தேவாலயங்கள் 1986ம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டன.

     இவை தவிர கோவா மாநிலம் முழுவதும் பார்த்து ரசிக்க நிறைய இடங்கள் உள்ளன. தலைநகர் பனாஜியில் செபாஸ்டியான் சாப்பல், ஜும்மா மசூதி, மஹாலட்சுமி கோவில் போன்றவையும் பனாஜியில் இருந்து 28கி.மீ தொலைவில் உள்ள ஆன்மீக நகரமான போன்டாவில் நாகேஸ் கோவில், மஹால்ஸா நாராயணி கோவில், சாந்தா துர்கா கோவில், ஸ்ரீமங்கேஷ் கோவில்,  தூத்சாகர் பால்ஸ் (பாலருவி), போன்ட்லா வனவிலங்கு சரணாலயம், பகவான் மஹாவீர் வனவிலங்கு சரணாலயம் போன்றவையும் பிரபலமானவை. மப்பூசா, வாஸ்கோடகாமா (இடத்தின் பெயர்தான்), மார்கோ போன்ற இடங்களும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தவை.
    ஒரு முறை சென்று வந்தால் போதும். மீண்டும் வா..வா..என்றழைக்கும் கோவா.

    கர்ப்ப கால இரத்தப் போக்குக்கான காரணங்கள்!

    By: Unknown On: 07:49
  • Share The Gag
  • பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமான கர்ப்ப கால பொழுதை மகிழ்ச்சியுடனும் கவனத்துடனும் அணுக வேண்டும்.நம் பெற்றோர்களும், பாட்டிகளும் கர்ப்ப காலத்தில் எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்பதை நமக்கு சொல்லி இருப்பார்கள். அதன்படியும், மருத்துவர் ஆலோசனையின் படியும் நாம் என்ன தான் பார்த்து கொண்டாலும், சில நேரங்களில் இரத்தப்போக்கு ஏற்படும் ஆபத்து உள்ளது.

    சில பெண்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும். அதற்காக குழந்தைக்கு பாதிப்பு என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொரு வித இரத்தப்போக்கிற்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. இதை தெரிந்து கொள்ளாமல், சிலர் இரத்தக் கசிவு ஏற்பட்ட உடனேயே பயந்து விடுகின்றனர்.

    இவ்வித பயத்தை போக்க பிரசவ காலத்தில் ஏன் இரத்தப்போக்கு ஏற்படுகின்றது என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதோடு விட்டு விடாமல், இரத்தப்போக்கு ஏற்பட்டால் மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்வது அவசியமாகின்றது. இங்கே எதனால் இரத்த போக்கு ஏற்படுகின்றது என்று பார்ப்போம்.

    இது எதனால் நிகழ்கின்றது?

    கருவின் கழுத்து பகுதியில் பாதிப்பில்லாத மாற்றங்கள் நிகழும் போது சில திசுக்கள் உடைந்து இரத்தப் போக்கு வெளிர் நிறத்தில் வெளியேறும். சில பெண்கள் பிரசவ காலம் முழுவதும் மாதவிடாய் அடைவார்கள். ஆனால் குழந்தை ஆரோக்கியமாகவே இருக்கும். இது மட்டுமின்றி இன்னும் சில காரணங்கள் உள்ளது.

    கரு முட்டை உருவாதல்

    முதல் மாதத்தில் கரு உருவாக ஆரம்பிக்கும் போது, கருப்பையில் மாற்றம் ஏற்பட்டு இரத்த கசிவு ஏற்படலாம். அப்பொழுது இரத்தம் வெளிரிய நிறத்தில் இருக்கும். அதுவும் ஒன்று இரண்டு நாட்களுக்கு மேல் இருக்காது

    கர்ப்பப்பை வாயில் தொற்று நோய்

    அதே போல் கர்ப்பமாக இல்லாத போதும், இந்த மாற்றத்தை அனுபவிக்க முடியும். ஆனால் இதை ஸ்கேன் மூலம் கண்டறிய முடியும்.
    குறிப்பாக செக்ஸ் வைத்துக் கொள்வதால், கருப்பையின் வாயில் எரிச்சல் ஏற்பட்டு சிறிது இரத்தம் வடியும். இந்த வகையான இரத்தப்போக்கு உடலுறவுக்கு பிறகு நடக்கும் பின்னர் மிகவும் விரைவாக நின்றுவிடும்.

    சளிப்பிளவு

    பிரசவ வலி ஏற்படும் போது கருப்பையின் உள்ள சளி போன்றது உடைந்துவிடும். அப்பொழுது இரத்த கசிவு ஏற்படும். ஒருவேளை இது முன்னரே உடைந்தால், குறிக்கப்பட்ட திகதிக்கு முன்னரே பிரசவம் நடக்க போகின்றது என்று அர்த்தம்.

    நஞ்சுக்கொடி நகர்வு

    நஞ்சுக்கொடி பகுதி கருப்பையின் உள்ளிருந்து வெளிவரும் போது இரத்தப்போக்கு ஏற்படும்.

    கருப்பை

    கருப்பை மிகவும் இறங்கிய நிலையில் இருந்தாலும், இரத்தக் கசிவு ஏற்படும். இவ்வாறு இருந்தால் கருப்பையின் கனம் தாங்க முடியாமல் இரத்தக் கசிவு ஏற்படும். இவ்வாறு இருப்பின் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இடம் மாறிய கர்ப்பம்

    கருமுட்டை கருப்பையின் வெளியே கருத்தரித்தால், இரத்தக் கசிவு ஏற்படும். பொதுவாக ஒரு கருமுட்டை குழாயில் கருத்தரிக்கும் போது, இந்த பாதிப்பு ஏற்படும். அப்பொழுது கடுமையான வயிற்று வலி இருக்கும். இவ்வகை பிரச்சனை இருப்பின், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

    கருச்சிதைவு

    இரத்தப் போக்கு கருச்சிதைவின் அறிகுறியாகவும் இருக்க முடியும். ஆனால் இது மூன்று மாதத்திற்கு பின் ஏற்படாது.

    நரியின் புத்திசாலித்தனம் (நீதிக்கதை)

    By: Unknown On: 07:43
  • Share The Gag
  •  
    ஒரு காட்டில் ஒரு வயதான சிங்கம் இருந்தது.

    அதனால் தனித்து அதற்கான உணவைத் தேடமுடியவில்லை.

    அது தனக்கான உணவு தன்னை நாடி வர வேண்டும் என்பதற்காக ஒரு தந்திரம் செய்தது.

    தனக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்தியைப் பரப்பி..தன் குகையிலேயே இருந்தது.அதன் நலன் விசாரிக்க வரும் மிருகங்களை குகைக்குள்ளேயே அடித்துக் கொன்று உண்டு வந்தது.

    ஒரு நாள் நரி ஒன்று சிங்கத்தின் உடல்நிலைக் குறித்து விசாரிக்க வந்தது.அது குகையின் வாயிலில் நின்று, 'சிங்க ராஜாவே! எப்படியிருக்கிறீர்கள்?" என வினவியது.

    இந்த நரிதான் இன்றைய என் உணவு என்று தீர்மானித்த சிங்கம்,'நரியாரே!..என்னால் எழக் கூட முடியவில்லை..நீங்கள் குகைக்குள் வாருங்கள்' என்றது.

    அதற்கு புத்திசாலியான நரி கூறியது,'சிங்க ராஜாவே! உங்கள் குகைக்குள் மிருகங்கள் வந்த தடயங்கள் தெரிகின்றது..ஆனால் அவை திரும்பிய தடயங்கள் இல்லை..அதனால் அம்மிருகங்களுக்கு என்ன ஆகியிருக்கும் என என்னால் யூகிக்க முடிகிறது.அதனால் நானும் உள்ளே வந்தால் திரும்ப முடியாது என உணர்கிறேன்'

    இப்படிக் கூறிவிட்டு நரி அகன்றது.சிங்கம் தனது கெட்ட எண்ணம் நரியிடம் நடக்கவில்லையே என ஏமாந்தது.

    இதற்கிடையே..நரியும் ,மற்ற மிருகங்களிடம் சென்று சிங்கத்தைப் பற்றி கூறி,'இனி யாரும் அதன் குகைக்குச் செல்ல வேண்டாம்' என்றது.

    நம்மைச் சுற்றி நடைபெறுவதை உன்னிப்பாகக் கவனித்து...தீமைகளை உணர்ந்து, அதற்கேற்றார் போல புத்திசாலித்தனத்துடன் செயல் பட வேண்டும்.

    இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-03

    By: Unknown On: 07:39
  • Share The Gag

  •                     இந்தியாவில் மனிதர்களின் நடமாட்டம் ஆரம்பித்த காலத்தை பற்றி எழுத்து வடிவிலான சான்றுகள் ஏதும் இல்லை. கல்வெட்டுக்களோ, குறிப்புக்களோ எழுதும் பழக்கமும் இல்லாமல் இருந்திருக்கின்றனர். இருப்பினும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை கொண்டு ஓரளவுக்கு வரலாற்றை படைத்துள்ளனர் தொல்லியல் நிபுணர்கள். இந்தியாவில் சொல்லிகொல்லும்படியாக முதன் முதலில் தோன்றியது சிந்துசமவெளி நாகரிகம். உலகில் முதன் முதலில் தோன்றியதாக கருதப்படும் மெசபடோமியா மற்றும் எகிப்திய கலாசாரத்திற்கு இணையானது நமது சிந்து சமவெளி நாகரிகம். ஆனால் மேசபடோமியர்கள் போல் சிந்து சமவெளி நாகரிகத்தினர் வரலாற்றுக்கு எந்த ஒரு எச்சங்களையும் விட்டு செல்லவில்லை. இதுவே நமது சிந்து சமவெளி நாகரிகம் உலக அளவில் பெருமையாக பேச படைத்ததற்கு ஒரு காரணம் ஆகும். சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தய வரலாற்றை பார்த்தால் அதில் கர்காலமும், உலோக காலமும் அடங்கும். கற்கால மனிதர்களும் இந்தியாவில் வாழ்ந்துள்ளனர் அதற்கான சான்றுகள் நிறைய இருக்கின்றன. சிந்து சமவெளி நாகரிகத்தை பற்றி பார்ப்பதற்கு முன்பு கற்கால மனிதர்கள் பற்றி பார்ப்போம்.
    கற்கால மனிதர்களின் வரலாற்றை நான்கு வகையாக பிரிக்கின்றனர்:
    1.பழைய கற்காலம்(கி.மு10,000 முன்பு)
    2.இடை கற்காலம்(கி.மு10,000- கி.மு6000)
    3.புதிய கற்காலம்(கி.மு6000- கி.மு4000)
    4.உலோக காலம்
           பள்ளி பருவத்திலிருந்தே வரலாற்றில் இவை பற்றி நிறைய படித்திருக்கிறோம். இருப்பினும் இதுவரை நாம் அறியாத சில தகவல்களுடன் இக்காலகட்டங்களை விரிவாக பார்ப்போம். இன்றைய நாகரீக வளர்ச்சியின் அடித்தளம் அமைக்கப்பட்டது கற்காலத்தில் தான்.முக்கியமாக செய்ய வேண்டியவை எவை செய்ய கூடாதவை எவை என்ற பகுத்தறிவை மனிதன் பெற்றான்.

    பழைய கற்காலம்(palaeolithic or old stone age):

                 பழைய கற்கால மனிதர்களின் வரலாறு 5,00,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே தோன்றுகிறது. பழைய கற்கால மனிதர்களை உணவுகளை சேகரிப்போர் என வரலாற்று ஆசிரியர்கள் அழைக்கின்றனர். குரங்குகளை போல பல வகையான் மனித வகையினர் இக்கால கட்டத்தில் வாழ்ந்தனர். மனிதன் கல்லால் ஆன ஆயுதங்களை கண்டுபிடித்தான். குவார்ட்ஸ் போன்ற கடுமையான கற்களை கொண்டு கூர்மையான ஆயுதங்களை செய்து விலங்குகளை வேட்டையாடினர். மாமிசம் பழங்கள் தானியங்கள் இவர்களின்                     முக்கிய உணவாக இருந்தது. மனிதனின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றான நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. வேட்டையாடிய விலங்குகளை நெருப்பில் இட்டு உண்டான் மேலும் இரவு நேரங்களில் குளிரில் இருந்து  தன்னை காத்துக்கொள்ளவும் நெருப்பை பயன்படுத்தினான்.
     இக்காலகட்டத்தில் சில இடங்களில் நியாண்டர்தால் வகை மனிதர்களும், ஹோமோசபியன்(நாம்) மனிதர்களும் இணைந்தும், சில இடங்களில் தனித்தனியாகவும் வாழ்ந்துள்ளனர். கற்கால மனிதர்கள் எந்த மொழியையும் பயன்படுத்தவில்லை மேலும் தகவல் பரிமாற்றம் தொடர்பான விவரங்கள் ஏதும் தெரியவில்லை.

    மத்தியபிரதேஷ மாநிலம் bhimbetka என்ற இடத்தில கற்கால மனிதர்களின் 30,000 ஆண்டு பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் 30,000 ஆண்டுகளுக்கு முன்பே மனித நடமாட்டம் இருந்ததை சுட்டிக்காட்டுகிறது. முந்தய பதிவில் பார்த்த மனித இனங்களில் ஒன்றான homo erectus வகை மனிதர்களின் ஓவியம் அவை.

    இடை கற்காலம்(Mesolithic or middle stone age):
                        மனித நாகரிகத்தின் அடுத்த கட்ட முனேற்றம் இடை கற்காலம் ஆகும். இடை கற்காலம் கி மு 10,000 இல் இருந்து கி.மு 6,000 வரை உள்ள காலம். இக்காலாகட்டதில் நாடோடிகலாக  திரிந்த மனிதர்கள் குழுக்களாக இணைந்து வசதியான ஓரிடத்தில் வாழ தொடங்கினர். கல் ஆயுதங்களையே பயன்படுத்தினர்.
     நியாண்டர்தால், ஹோமோ எரக்டஸ் போன்ற பல வகையான மனித இனங்கள் படிப்படியாக அழிந்தது இக்காலகட்டத்தில் தான். இடை கற்காலத்திலும் மனிதர்களின் மொழி பற்றி சான்றுகள் ஏதும் இல்லை.  இடை கற்கால எச்சங்கள் குஜராத்தில் Langhanj, மத்திய பிரதேசத்தில் Adamgarh, ராஜஸ்தான், பீகார் போன்ற பகுதிகளில்  கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    புதிய கற்காலம்(Neolithic or new stone age):
                           கற்காலத்தின் கடைசி காலம் புதிய கற்காலம் ஆகும். புதிய கற்காலம் கி.மு 6,000 இல் இருந்து கி.மு 4,000 வரை உள்ள காலம் ஆகும். மனித நாகரிகத்தின் குறிப்பிடத்தக்க முனேற்றம் நடைபெற்றது இக்காலகட்டத்தில் தான். இகாலகட்டதில் கால்நடைகளை வீட்டில் வளர்க்க ஆரம்பித்தனர். விவசாயம் செய்தனர். மனிதனின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றான சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்தியாவின் பல பகுதிகளில் இக்காலத்திற்கான சான்றுகள் கிடைக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு, பீகாரில் siraant, உத்திர பிரதேசத்தில் பிளான் சமவெளி, தென்இந்தியாவில் கர்நாடகத்தில் Maski, Brahmagiri, Hallur
    மற்றும் Kodekal. தமிழ்நாட்டில் payyampalli, ஆந்திரபிரதேசத்தில் utnoor போன்ற பகுதிகளில் புதிய கற்காலத்திற்கான சான்றுகள் கிடைக்கின்றன.

    கல் ஆயுதங்களை பயன்படுத்தி வந்த மனிதன் உலோகங்களை கண்டெடுத்தான் பின்பு அவற்றை உருக்கி உலோகத்தினாலான கருவிகளை செய்தான். படிப்படியாக கல் ஆயுதங்களுக்கு விடை கொடுத்து உலோகத்தினாலான ஆயுதங்களை பயன்படுத்த ஆரம்பித்தான். இது உலோக காலம் ஆகும். கற்காலத்தை தொடர்ந்து வருவது உலோக காலம் ஆகும். உலோக காலத்தை பற்றியும் மனிதர்களின் அடுத்தடுத்த வளர்சிகள் பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

    என்ன கொடுமை சார்!

    By: Unknown On: 07:34
  • Share The Gag
  •  ’22 கேரட் தங்கத்தில் “டாய்லெட் பேப்பர்’” ஆஸ்திரேலியாவில் சேல்ஸ்!

    பணத்தை தண்ணியாக செலவு செய்யும் குணம் கொண்ட உயர் வர்க்கத்தினருக்காக, 22 கேரட் தங்கத்தினால் ஆன விலை உயர்ந்த டாய்லெட் பேப்பரை தயாரித்து பிரமிக்க வைத்துள்ளது ஆஸ்திரேலிய நிறுவனம்.


    24 - gold toilet paper


    ‘டாய்லெட் பேப்பர் மேன்’ என்ற அந்த நிறுவனம், இயற்கைக்கு மாறான இந்த புதிய தயாரிப்பினை 22 கேரட் தங்கத்தினால் செய்துள்ளது. இது 100 சதவீதம் பயன்படுத்தக்கூடியது என்றும், பாதுகாப்பானது என்றும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


    இதுவரை ஒரே ஒரு தங்க பேப்பர் ரோல் மட்டுமே தயாரித்துள்ளது. இதன் விலை 13 லட்சத்து 76 ஆயிரத்து 900 மில்லியன் டாலர் ஆகும். ஆர்டர் செய்தால், தங்க டாய்லெட் பேப்பர் ரோலுடன், இலவசமாக ஒரு சாம்பெய்ன் மதுபாட்டிலையும் சேர்த்து வீட்டுக்கே டெலிவரி செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால் இதுவரை விற்பனைக்கு தயாரிக்கவில்லை.
    துபாயில் உள்ள நிறுவனம், வெஸ்டன் டாய்லெட்டுகளுக்கான இருக்கையை (டாய்லெட் சீட்) முழுக்க முழுக்க தங்கத்தினால் தயாரித்திருப்பதைப் பார்த்து, தங்க டாய்லெட் பேப்பர் ரோல் தயாரிக்கும் எண்ணம் உருவானதாக ‘டாய்லெட் பேப்பர் மேன்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.


    Toilet paper made of gold for sale in Australia

    **************************************************
    n Australian company is set to take the idea of extravagant living to another level with an eccentric new product – toilet paper made of gold! The 22-carat gold toilet paper is priced at a staggering USD 1,376,900 million per roll.