Friday, 5 September 2014

விஜய்க்கு ஆதரவாக களத்தில் இறங்கிய சரத்குமார்!

By: Unknown On: 20:39
  • Share The Gag
  • விஜய்யின் கத்தி படத்திற்கு பல அமைப்புகளில் இருந்து எதிர்ப்பு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தால் இந்த பிரச்சனைக்கு முடிவு வரும் என விஜய் தரப்பு யோசித்துள்ளது.

    ஆனால் அவரை சந்திப்பது எளிதல்ல என்பதை புரிந்து கொண்ட படக்குழு நடிகர் சங்க தலைவர் சரத்குமாரை அணுகியுள்ளது.

    அவரும் விஜய்க்கு ஆதரவு தருவதாக கூற, விரைவில் முதலமைச்சருடன் மீட்டிங் ரெடி என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    கத்தி டீமை தொடர்ந்து லிங்கா டீமும் ஐரோப்பா பயணம்!

    By: Unknown On: 07:54
  • Share The Gag
  • கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, சோனாக்‌ஷி சின்ஹா, அனுஷ்கா நடிக்கும் படம் ‘லிங்கா’. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

    ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ல் 'லிங்கா' படம் ரிலீஸ் என தகவல்கள் வெளியான நிலையில் படத்தை வேகமாக முடித்து வருகிறார் கே.எஸ்.ரவிகுமார்.படப்பிடிப்புகள் நடக்கும் அதே வேளையில் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் சேர்ந்தே நடந்து வருகின்றன.
                         
    கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஷிமோகா மாவட்டத்தின் ஜோக் நீர்வீழ்ச்சியின் அருகே  படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து ‘லிங்கா’ பட டீம் விரைவில் ஐரோப்பாவிற்கு பயணமாக உள்ளனர். அங்கு பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

    ’கத்தி’  டீமும் பாடல் காட்சிகளுக்காக ஐரோப்பா செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

    பிரா அணியும் பெண்ணே...

    By: Unknown On: 01:20
  • Share The Gag
  • 13 முதல் 19 வரை உள்ள எண்களை ஆங்கிலத்தில் அழைக்கும்போது கடைசி இரு எழுத்துக்கள் டீன் என்று முடியும். அதனல் அந்த வயதினரை டீன்-ஏஜ் வயதினர் என்று அழைக்கிறோம்.

    இந்த வயதில் உள்ள பெண்கள், தங்கள் முன்னழகுக்கு - அதாவது மார்பக அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். விதவிதமான பிராவை தேர்வு செய்து தங்களை அழகு பார்ப்பதோடு, தங்கள் மார்பகத்தை எடுப்பாக காண்பிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்கள்.

    ஆனால், இளம்பெண்களில் சிலருக்கு பிரா அணிவது எப்படி என்பதே தெரியவில்லை. தங்கள் மார்பக அளவுக்கு சரியான பிராவை அணியாமல், இறுக்கிப் பிடிக்கும் சிறிய பிராவையோ அல்லது தொள தொளவென்று இருக்கும் பெரிய சைஸ் பிராவையோ அணிந்து, தங்கள் அழகை தாங்களே கெடுத்துக் கொள்கிறார்கள்.
    சரி... அப்படியென்றால், எப்படி பிராவை தேர்வு செய்து அணிவது?

    சில டீன்-ஏஜ் பெண்கள், தங்கள் மார்பகத்தை எடுப்பாக காண்பிப்பதற்காக இறுக்கமான பிராவை தேர்வு செய்து அணிகிறார்கள். இது தவறு. இந்த டீன்-ஏஜில் மார்பகம் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனால், அதன் "ஷேப்" மாறிக்கொண்டே இருக்கும்.

    சைஸ் குறைவான பிராவை அணிந்தால், அதன் கப் பகுதிக்குள் மார்பகம் அடங்காமல் வெளியில் பிதுங்கிக் கொண்டிருக்கும். தொடர்ந்து, அந்த "சைஸ்" குறைவான பிராவையே பயன்படுத்தி வந்தால் அவர்களது மார்பகம் பிதுங்கியது போன்ற நிலைக்கு மாறிவிடும். இதையெல்லாம், தடுக்க மார்பக வளர்ச்சிக்கு ஏற்ப பிராவின் அளவை அதிகரித்துக் கொண்டே வரவேண்டும்.

    கனமான மார்பகம் கொண்டவர்களுக்கு, மார்பகம் சீக்கிரமே தொய்ந்து போக வாய்ப்புகள் அதிகம் உண்டு. அவர்கள் சரியான சைஸ் பிராவை தேர்வு செய்து அணியாவிட்டால் இந்த பிரச்சினை இன்னும் அதிகமாகிவிடும். அவர்களது கவர்ச்சியும் போய்விடும்.

    இவர்கள் தேர்வு செய்யும் பிரா, கனமான மார்பகங்களை சற்று தூக்கித் தரும்படியும், மார்பகத்திற்குள் சரியாக பொருந்தும்படியும் இருக்க வேண்டும். அத்துடன், கொஞ்சம் இறுக்கமாகவும் இருக்க வேண்டும். மேலும், இவர்கள் இரவில் பிராவை கழற்றுவதை தவிர்த்துவிட வேண்டும். மீறி கழற்றி ப்ரியாக இருந்து வந்தால் மார்பகம் விரைவிலேயே தொய்ந்துபோய் விடும்.
    மற்ற பெண்கள் இரவில் தாராளமாக பிரா அணிந்து கொள்ளலாம். அதேநேரம், அணியும் பிராவானது இறுக்கமாக இல்லாமல் இருப்பது நல்லது. இவர்களுக்கு, இரவில் பிரா அணிய விருப்பம் இல்லை என்றால் அதை தாராளமாக கழற்றி வைத்துவிட்டு படுக்கலாம். அதனால் எந்த ப்ராப்ளமும் இல்லை.

    இன்னும் சிலர் இருக்கிறார்கள். "எப் டி.வி."யில் "கேட் வாக்" வரும் பல மாடல்களைப்போல் பிராவே அணிவதில்லை.

    இப்படி பிரா அணிவதை தவிர்ப்பது ஆபத்தில் கொண்டுபோய்விடும். அவர்கள் தங்கள் மார்பக அளவுக்கு ஏற்ப சரியான பிராவை தேர்வு செய்து அணிவது அவசியம்.

    குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில!

    By: Unknown On: 00:51
  • Share The Gag

  • 1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

    3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

    5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

    6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

    7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

    8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

    9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

    10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

    11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

    சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்!!!

    By: Unknown On: 00:50
  • Share The Gag

  • சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்!!!

    ஒரு வீட்டின் மிக முக்கியமான பகுதியாக சமையலறை விளங்குகின்றது. வீட்டில் உள்ள விருந்தாளிகள் தங்கும் அறைக்கு நாம் சில நாட்கள் செல்லாமல் இருக்கக்கூடும் அல்லது மிகுந்த குளிர் காலத்தில் வீட்டின் மாடிக்கும் கூட செல்லாமல் இருக்கலாம். ஆனால் யாராலும் சமையலறைக்கு செல்லாமல் இருக்க முடியாது. ஆகையால் தான் வீட்டின் மற்ற பகுதியில் நாம் செலுத்தும் கவனத்தை சமையல் அறையில் சற்றே அதிகமாக செலுத்த வேண்டும். மற்ற அறைகளை போல் இதையும் அழகாக வைக்க வேண்டும்.


    புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சமையலறை சாதனங்களையும் நவீன கட்டமைப்புடன் சமையல் அறையையும் நாம் அலங்கரிப்பது வீட்டிற்கு மேலும் அழகூட்டும். இவைகளை செய்தால் மட்டும் போதாது, அவற்றை எந்த வித பூச்சிகளும் பாழ்படுத்தாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு என்ன செய்வது? பெருமளவில் பணம் செலவு செய்து பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் போது அவை பூச்சிகளுக்கு மட்டுமின்றி நமக்கும் அதே அளவு கேடு விளைவிப்பதாக இருக்கின்றன. அப்படி என்றால் நாம் எப்படி இயற்கை முறையில் இத்தகைய பூச்சுகளை தவிர்க்க முடியும் என்று காண்போம்.


    சோள மாவு

    சோளத்திலிருந்து செய்யப்பட்ட இவை அதிக அளவு உணவு தயாரிப்பில் பயன்படுகின்றது. கிரேவி வகைகள், பஜ்ஜி, போண்டா போன்ற உணவுகளை தயாரிக்க மற்றும் பலவற்றில் இவை பயன்படுகின்றது. ஆனால் இவை எறும்புகளை கொள்ளுவதற்கும் உதவும் என்றும் பலருக்கு தெரியாது. இந்த மாவிற்கு ஒரு இனிப்பு தன்மை உண்டு. சோள மாவு விஷம் கிடையாது. ஆனால் அவைகள் செரிக்க சிறிது காலமாகும். எறும்புகள் இவற்றை உண்டால் அவைகளால் இந்த உணவை செரிக்க முடியாமல் போய்விடும். ஆகையால் சோள மாவு சாப்பிட்ட எறும்பு இறந்து விடும். எறும்பு தனக்கு மட்டுமில்லாமல் தன்னுடன் இருக்கும் சக எறும்புகளுக்கும் இதை கொடுப்பதால் அவையும் உண்டு இறந்துவிடும், சமையல் அறையில் மற்றும் எறும்பு இருக்கும் பகுதியில் இந்த மாவை சிறிதளவு தெளித்து வைத்தால் போதும். உங்கள் நோக்கம் நிறைவேறும்.
       
       
    பூண்டு


    பூண்டின் வாசனையும் அதை உண்டால் நமக்கு கிடைக்கும் சுகாதார பலன்களும் வியப்பூட்டுபவை. இவை எறும்புகளையும் கரப்பான்களையும் இந்த அறைக்குள் வரவிடாமல் தடுக்கும் என்ற விஷயம் நமக்கு தெரியாது. புதிதாக வாங்கிய பூண்டு பற்களை சமையல் அறையை சுற்றிலும் வைத்தால் போதும். இந்த வாசனை தாங்காமல் அவை தங்களுடைய உயிரை காக்க ஓடி விடும். பூண்டு பற்கள் கொஞ்சம் காயும் நிலையில் இருந்தால் வேறு புதிய பற்கள் மாற்றுவது நல்லது. இவை பூச்சிகளை மிரண்டு ஓட வைக்கும். பூண்டை அறைத்து அதில் தண்ணீர், தாது எண்ணைய் மற்றும் சோப் ஆகிய கலவையை தெளிக்கவும் செய்யலாம். இந்த வகை பாதுகாப்பு முறை மிகவும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும். இந்த பூண்டு ஸ்பிரே உங்கள் சமையலறையை சுத்தமாக வைத்திருக்கவும், சமையலறை தோட்டத்தின் செடிகளை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.


    லகிரி தைலம்


    யூகலிப்டஸ் மரத்திலிருந்த எடுக்கப்படும் எண்ணையானது மிகுந்த நறுமணம் கொண்ட வாசனை பொருளாகும். இவை பூச்சிகளை கட்டுபடுத்துவதில் சிறந்த பலனளிக்கின்றன. இந்த எண்ணையை சிறிது தண்ணீரில் கலக்கி ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி அதை அடுப்பறைக்குள் வரும் கரப்பான்கள், சிலந்திகள் மற்றும் சிறிய பூச்சிகள் மீது தெளித்தால் அவை உடனே இறந்து விடும்.


    போரிக் அமிலம்

    பூச்சிகளை கொல்லும் மற்றொரு வழி போரிக் அமிலமாகும். இதை மாவுடன் சேர்த்து உள்ளே வரும் பூச்சிகள் மேல் தெளித்தால் உடனடியாக அவை இறந்து விடும். இந்த அமிலத்தை அருகில் உள்ள மருந்து கடைகளில் வாங்க முடியும். இது இல்லை என்றால் போரக்ஸ் டிடர்ஜென்ட்டை பயன்படுத்தலாம். இதை நாம் சர்கரை மற்றும் தண்ணீரில் கூட கலந்து பயன்படுத்துவது மிகுந்த பலனளிக்கும். இவை பொதுவாக மக்கள் பயன்படுத்தும் மருந்தாக அமைகின்றது.