Friday, 18 July 2014

மத்தவங்கன்னா நியாயம்.. கமல்னா மட்டும் அநியாயமா..?

By: Unknown On: 22:27
  • Share The Gag
  • இப்போ ‘சண்டியர்’ங்கிற டைட்டிலை வச்சு ஒரு படம் தயாராகி சென்சார்ல U/A சர்டிபிகேட்டும் வாங்கி ஆகஸ்ட்-1ல ரிலீசாகவும் இருக்குது. சோழதேவன்ங்கிற புது இயக்குனர் இயக்கியுள்ள இந்தப்படத்துல நடிச்சுருக்கவங்களும் புதுமுகங்கள் தான்..

    பத்து வருஷத்துக்கு முன்னாடி கமல் முதன்முதலா இயக்கி நடிச்ச ‘விருமாண்டி’ படம் வெளியானது உங்களுக்கு தெரியும். ஆனா அந்த படத்துக்கு அவர் முதல்ல வச்ச பேரம் ‘சண்டியர்’ தான். ஆனா அந்தப்பேரை டைட்டிலா வச்சப்ப ஒரு பக்கம் ஒரு கட்சியின் தலைவர் இந்த டைட்டிலை வைக்க கூடாதுன்னு போராட்டம் பண்ண, அப்போ முதல்வரா இருந்த ஜெயலலிதாவும் பிரச்சனை பெரிதாகிவிடும் என்று சொல்லி பேசாம டைட்டிலை மாத்த சொல்லிட்டார்.

    அதுக்குப்புறம் தான் ‘விருமாண்டி’ன்னு டைட்டிலை மாத்தினார் கமல். அப்ப பத்து வருஷத்துக்கு முன்னாடி ‘கெட்ட டைட்டிலா இருந்த ‘சண்டியர்’, இப்ப ‘நல்ல டைட்டில்’ ஆகிருச்சா..? மத்தவங்க வச்சா நியாயம்.. கமல் பண்ணினா மட்டும் அநியாயமா அப்படின்னு கமலோட ரசிகர்கள் தங்களோட குமுறலை வெளிப்படுத்தி இருக்காங்க.

    சூப்பர் ஸ்டாருக்கு என்ன ஆனது? Hot news..

    By: Unknown On: 22:07
  • Share The Gag
  • இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் தான். இவருக்கு கடந்த சில வருடங்களாகவே உடல் நிலை சரியில்லாமல் இருந்து வருகிறது. இதனால் தான் கோச்சடையான் படத்திலேயே நடிக்க சம்மதித்தார்.

    தற்போது மீண்டும் ரசிகர்களுக்கு விருந்தளிக்க லிங்கா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடுவே ரஜினி மயங்கி விழுந்ததாக நேற்று வதந்திகள் பரவி வந்தது.

    இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ‘ரஜினி மயக்கம் போட்டு விழுந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று வெளியான செய்திகளில் கொஞ்சமும் உண்மையில்லை. அவர் எப்போதும் போலவே படப்பிடிப்பில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். யாரோ தேவையில்லாமல் இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பி விட்டு வருகிறார்கள். அதனால் இதை யாரும் நம்ப வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.


    பத்து எண்றதுக்குள்ள படத்தின் அப்டேட்!

    By: Unknown On: 18:53
  • Share The Gag
  • ஷங்கர் இயக்கத்தில் 'ஐ' படத்தில் நடித்த விக்ரம், அடுத்து நடித்து வரும் அடுத்த படம் 'பத்து எண்றதுக்குள்ள'. விஜய் மில்டன் இயக்கும் இப்படத்தின் தலைப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன.

    விக்ரமிற்கு ஜோடியாக சமந்தா இரட்டை வேடங்களில் நடிக்கிறார். பசுபதி மற்றும் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். இமான் இசையமைக்கிறார்.

    தற்போது இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்புகள் ஜூலை 23ம் தேதி சென்னையில் துவங்க உள்ளது. சென்னையைத் தொடர்ந்து நான்காம் கட்ட படப்பிடிப்புகள் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் சிக்கிம் மாநிலத்தில் நடைபெற உள்ளது.

    இவ்வளவுதாங்க இப்போதைய சினிமா!

    By: Unknown On: 08:13
  • Share The Gag
  • நம் ஊரில் கதை இருக்கோ இல்லையோ கெட்டப், செட் ப்ராப்பர்ட்டி, ஃபார்முலா கதைனு வெச்சுப் படம் எடுத்து ரிலீஸ் பண்ணிடுறாங்க. அதை மீறி படம் எடுத்தால் தெய்வகுத்தம் ஆயிடும்னு பயத்துல அதே மாதிரி தொடர்ச்சியா எடுத்துட்டு இருக்காங்க. அதெல்லாம் என்னன்னு பார்ப்போமா?

     80’-ஸ் பார்முலா படம்: ஹிப்பி வெச்ச விஜயகாந்த் மாதிரி ஒருத்தர் இருக்கணும். தாடி வெச்ச சந்திரசேகர் மாதிரியும் ஒருத்தர் இருக்கணும். கூலிங்கிளாஸ் மாட்டின பாக்யராஜ் மாதிரி இன்னொருத்தர் இருக்கணும். இல்லைனா இந்த மூணு பேர் மாதிரியும் ஒருத்தரே இருக்கலாம்.

    செட் ப்ராப்பர்ட்டி: அலேக் வண்டி, டிரான்சிஸ்டர், குழாய் ஸ்பீக்கர் திருவிழா, பழைய புல்லட், ரஜினி/கமல் பட ரிலீஸ் தியேட்டர்!

    பேக்ரவுண்டில் 'பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு’ 'டார்லிங் டார்லிங் டார்லிங்... ஐ லவ் யூ’ங்கிற மாதிரி 80’-ஸ் பாட்டு அடிக்கடி ஒலிச்சுக்கிட்டே இருக்கணும். அதுவும் ஹீரோயின்கூட லவ்வாகிறப்போ, கண்டிப்பா இருக்கணும்.

    ஊருக்குள்ளே டாக்டராகவோ, நர்ஸாகவோ, அல்லது பஞ்சாயத்து ஸ்கூல் வாத்தியாராகவோ ஒரே ஒரு படிச்ச மனுஷன் இருக்கணும். கண்டிப்பா அந்த மனுஷன் மட்டும்தான் படிச்சவனா இருக்கணும்!

    ஐ.டி கம்பெனி படம்: சரக்கடிக்கணும்... சரக்கடிக்கணும்... சரக்கடிச்சுக்கிட்டே இருக்கணும்!

    லேப்டாப் வெச்சுக்கணும். ஹீரோயினைப் பார்க்கணும். உடனே ஃப்ரெண்ட்ஸோட சரக்கடிக்கணும். ஹீரோயின்கிட்ட புரபோஸ் பண்ணணும். உடனே ஃப்ரெண்ட்ஸோட சரக்கடிக்கணும். ஹீரோயின் ஓகே சொல்லணும். உடனே ஃப்ரெண்ட்ஸோட சரக்கடிக்கணும். ஹீரோயின் கெட் லாஸ்ட் சொல்லணும். உடனே ஃப்ரெண்ட்ஸோட சரக்கடிக்கணும்.

    பேய் படம்: ஒரே ஒரு பங்களா வேணும். அந்த பங்களாவுல எக்கச்சக்கமான ஜன்னல்கள் வேணும். அந்தக் கதை முழுக்க இருட்டுலேயே நடக்கணும், பங்களாவுல எக்கச்சக்கமான லைட்டு இருந்தாலும் சுவிட்ச் போர்டு அப்படிங்கிற ஒன்றையே அங்கே இருக்கிற எல்லோரும் மறந்திடணும். டார்ச் லைட்டை அடிச்சுக்கிட்டு பங்களா படிக்கட்டுல அடிக்கடி மேலேயும் கீழேயும் நடக்கணும்.

    குல்லா போட்டுக்கிட்டோ, தாடியோட கோரமாவோ ஒரு வேலைக்காரன்/காரி இருக்கணும். எல்லோரும் தூங்கின பிறகும் இவங்க மட்டும் தூங்காம சுத்தணும். ஆளே இல்லாத அந்த பங்களாவில் கறுப்பு பூனை சுத்தணும். பூனைக்கு சீன் வெச்சீங் களே, பால் வெச்சீங்களா?

    ஹைஃபை பிரமாண்ட படம்: 'கலக்கப்போவது யாரு’ காமெடியன்ஸ் மாதிரி ஹீரோ, வில்லன், வில்லனோட அல்லக்கைகள்னு எல்லோருக்கும் கோட் சூட் தான்!

    டூ பீஸ், சிங்கிள் பீஸ், அரை பீஸ், கால் பீஸ் டிரெஸ் போட்டுத்தான் அத்தனை பொண்ணுங்களும் திரியணும். ஹீரோவுக்கு ஏதாவது பெயர் தெரியாத நோய் இருக்கலாம். தெரு முக்குல இருக்கிற பெட்டிக் கடைக்குப் போறதா இருந்தாலும் ஹீரோ ஹெலிகாப்டர்லதான் போவார்.

    கிராஃபிக்ஸ்ல  இரட்டையர் ஹீரோனு உருவாக்கணும். ஜோடியா சண்டை போடவோ, டூயட் பாடவோ விடணும். படம் முழுக்க கிராஃபிக்ஸ்ல சுண்டு விரலைச் சுண்டி கண்ணாடி உடையுறதும் விமானத்துலேர்ந்து ஜம்ப் பண்ணி மொட்டை மாடியில் நிற்கிற மாதிரி கிராஃபிக்ஸில் சாகசங்கள் பண்ணிக் காட்டணும்.

    ரிவால்வர், ஏகே 47 துப்பாக்கிகளை வைத்து டப்பு டப்புனு குருவி சுடுற மாதிரி அநியாயத்தைத் தட்டிக் கேட்ட ஹீரோ, கடைசியா சரண்டர் ஆகுறப்ப டி.வி-க்காரங்க, பொதுமக்கள்கிட்ட கருத்து கேட்பாங்க. கண்டிப்பா ஒரு ஆட்டோ டிரைவரும் பூ விற்கும் அம்மாவும் அந்த மகராசனை விடுதலை பண்ணணும்னு கருத்து சொல்வாங்க.

    சாமி படம்: 'வேப்பிலை கட்டுற அம்மன்’ என்பதுபோல் அம்மன் பெயரைத்தான் படத்துக்கு வைக்கணும். அம்மனை நம்பாத ஹீரோ, தெய்வ பக்தியில் ஊறிப்போன ஹீரோயின், சாமியாடும் பூசாரி இருக்கணும். அம்மன் கோவில் உண்டியல், நகைகளைக் கொள்ளையடிக்கும் வில்லனை அம்மனே சூலாயுதத்தால போட்டுத்தள்ளணும். கிராஃபிக்ஸ் கம்பெனிக்கு நிறையவே வேலை இருக்கு.

    பூமி பிளக்குறது, தீ வட்டமா எரியுறது, கிளைமாக்ஸில் அம்மன் சிலை எழுந்து வர்றதுனு வழக்கமான கிராஃபிக்ஸ் ஒர்க்கைப் புதுமையா செய்யத் தெரிஞ்சுக்கணும்.

    சாமி படத்துலதான் பாம்பு, நாய், குரங்கு, பல்லி, பூரான்னு அத்தனையும் நடிக்க முடியும். கடைக்குப் போய் காய்கறி வாங்குறதுல இருந்தும் தீ மிதிக்கிற வரைக்கும் வளர்ப்பு விலங்குகள் பண்ணலாம்!

    விஜய் புகழ் பாடும் பாலிவுட் நடிகர்!

    By: Unknown On: 08:09
  • Share The Gag
  • தமிழ் சினிமாவையும் தாண்டி பாலிவுட்டிலும் விஜய் புகழ் பரவ ஆரம்பித்துவிட்டது. இதற்கு உதாரணமாக இவர் நடித்த போக்கிரி, காவலன், துப்பாக்கி போன்ற படங்கள் ஹிந்தியி ரீமேக் செய்யப்பட்டது.

    தற்போது விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படம் கத்தி. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் நீல் நிதின் முகேஷ் நடிக்கிறார். இவர் இப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்த அனுபவங்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

    இதில் ‘ நான் இந்தப்படத்தில் அவருடன் மோதவது போல் எந்த சண்டைக்காட்சிகளும் இல்லை, ஆனால் இருவரும் தங்களது புத்திசாலித்தனத்தால் மட்டுமே சண்டையிடவோம்’ என்று நீல் நிதின் தெரிவித்துள்ளார்.

    மேலும் விஜய்யுடன் பணியாற்றியது மனதிற்கு மிக சந்தோஷமாக இருந்தது, சூப்பர் ஸ்டார் என்ற எண்ணம் அவர் மனதில் துளியும் இல்லாமல் என்னுடன் எளிமையாக பழகினார் என்றும் கூறினார்.

    ரகசியமாக படமெடுக்கும் பாண்டிராஜ்!!

    By: Unknown On: 08:07
  • Share The Gag
  • இது நம்ம ஆளு படத்துக்கு பிறகு பாண்டிராஜ் மறுபடியும் குழந்தைகளை வைத்து படம் எடுக்க உள்ளார்.

    இப்படத்தின் பூஜை சமீபத்தில் சூர்யாவின் மேற்பார்வையில் நடந்தது ஏனென்றால் இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது தான் காரணம்.

    அது மட்டும் இல்லாமல் இப்படத்தில் ஏற்கனவே ஜோதிகாவை நடிக்க வைக்க முயற்சி செய்தார் பாண்டிராஜ், ஆனால் அதற்கு பிடி கொடுக்காமல் இருந்த போது இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நான் நடிக்கிறேன் என்று வாக்கு அளித்தார் சூர்யா.

    சரி என்று கடந்த நான்கு நாட்களாக படப்பிடிப்பை மிக ரகசியமாக நடத்தி வந்தார் பாண்டிராஜ், ஆனால் அந்த ஷூட்டிங்கில் சூர்யா பங்கு பெறவில்லை.


    புளித்த பாலின் பயன் அறிவீரா?

    By: Unknown On: 08:05
  • Share The Gag


  • அரை டம்ளர் தண்ணீரில் ஷாம்பூ போட்டுக் குலுக்கி அரைமணி நேரம் கழித்த பிறகு அதில் வெள்ளி கொலுசுகளைப் போட்டுக் கசக்கி, சுத்தமான தண்ணீரில் தேய்த்துக் கழுவி ஈரம் போகத் துடைத்தால் பளபளவென்று இருக்கும்

     வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைதத் தவிர்க்கலாம்.

    குத்துவிளக்கு, காமாட்சி விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.

    புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டு பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.

    கல் பதிக்காத நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுத்து துடைத்தால் அவை பளபளப்பாகிவிடும். கல் பதித்த நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுக்கக்கூடாது.

    வெள்ளி நகைகள் மற்றும் பாத்திரங்கள் பளபளக்க அவற்றை ஜாடியில் சில நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் போதுமானது.


    மூக்கில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்க சில டிப்ஸ்...

    By: Unknown On: 08:03
  • Share The Gag


  • மூக்கில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்க சில டிப்ஸ்...

    பொதுவாக அனைவருக்கும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அது நடப்பதில்லை. அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு, இது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும். அதுவும் அவர்களுக்கு மூக்கில் தான் அதிகப்படியான எண்ணெய் பசையானது இருக்கும். இதனால் மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவை அதிகம் தங்கி, அந்த இடத்தையே ஒருவித தோற்றத்தில் வெளிப்படுத்தும்.


    இருப்பினும் சரியான சரும பராமரிப்புக்களை மேற்கொண்டால், அழகாக வைத்துக் கொள்ள முடியும். இங்கு அப்படி மூக்கில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கொடுத்துள்ளோம்.
    அதைப் பின்பற்றி மூக்கை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்


    * மூக்கில் அதிகப்படியான எண்ணெய் பசை இருப்பதால் தினமும் 2 முறை கிளின்சிங் செய்ய வேண்டும். இதனால் சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளை வெளியேற்றி, சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

    * தினமும் முடிந்த வரையில் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் அழுக்குகள் நீண்ட நேரம் படிவதைத் தடுக்கலாம். குறிப்பாக அப்படி கழுவியப் பின்னர், சுத்தமான துணி அல்லது டிஸ்யூ பேப்பர் மூலம் துடைக்க வேண்டும்.

    * உடனே சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை போக்க வேண்டுமானால், எலுமிச்சை சாற்றினை பஞ்சில் நனைத்து மூக்கைத் துடைக்க வேண்டும். இந்த முறையை தினமும் 2-3 முறை செய்ய வேண்டும். இதனால் அதிகப்படியான எண்ணெய் பசையில் இருந்து விடுபடலாம்.

    * வீட்டில் தேன் மற்றும் பாதாம் இருந்தால், அவற்றை அரைத்து, அதனை முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

    * உப்பு அல்லது சர்க்கரை கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்வதன் மூலம், சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்கி, எண்ணெய் பசையினால் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

    * ஆப்பிள் சீடர் வினிகர் வீட்டில் இருந்தால், அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து, அந்த கலவைக் கொண்டு முகத்தை துடைத்து, 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்குவதோடு, சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளையும் வேரோடு வெளியேற்றலாம். இதனால் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை போக்கலாம்.

    * மூக்கில் அதிகப்படியான எண்ணெய் பசை இருப்பதால் தினமும் 2 முறை கிளின்சிங் செய்ய வேண்டும். இதனால் சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளை வெளியேற்றி, சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

    * தினமும் முடிந்த வரையில் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் அழுக்குகள் நீண்ட நேரம் படிவதைத் தடுக்கலாம். குறிப்பாக அப்படி கழுவியப் பின்னர், சுத்தமான துணி அல்லது டிஸ்யூ பேப்பர் மூலம் துடைக்க வேண்டும்.

    * உடனே சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை போக்க வேண்டுமானால், எலுமிச்சை சாற்றினை பஞ்சில் நனைத்து மூக்கைத் துடைக்க வேண்டும். இந்த முறையை தினமும் 2-3 முறை செய்ய வேண்டும். இதனால் அதிகப்படியான எண்ணெய் பசையில் இருந்து விடுபடலாம்.

    * வீட்டில் தேன் மற்றும் பாதாம் இருந்தால், அவற்றை அரைத்து, அதனை முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

    * உப்பு அல்லது சர்க்கரை கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்வதன் மூலம், சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்கி, எண்ணெய் பசையினால் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

    * ஆப்பிள் சீடர் வினிகர் வீட்டில் இருந்தால், அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து, அந்த கலவைக் கொண்டு முகத்தை துடைத்து, 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்குவதோடு, சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளையும் வேரோடு வெளியேற்றலாம். இதனால் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை போக்கலாம்
    .

    பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?

    By: Unknown On: 08:03
  • Share The Gag


  • பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?

    என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

    பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்..

    நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

    இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..

    கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

    வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.. முயற்சித்துப் பாருங்களேன்.