Thursday, 14 August 2014

துணி தைக்கப் போகிறீர்களா?

By: Unknown On: 22:35
  • Share The Gag
  • * சுடிதார் தைக்கும் போது, பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி, லைனிங் கொடுத்து தைக்கவும். மெல்லிய ஆடையாக இருந்தால், நெளிந்து, கூன் போட்டு நடக்க வேண்டி வரும். லைனிங் கொடுத்து தைப்பதால், இலகுவாக நடக்கலாம்.

    * வயது வந்த பெண்களுக்கு எப்போதும் இறுக்கமான ஆடைகளை அணிவிக்காதீர்கள். அதற்காக, கழுத்தை, "பப்பரப்ப...' என பெரிதாக்கி விட வேண்டாம். டெய்லரிடம் கொடுக்கும் போது, சொல்லி கொடுங்கள். "நெக்' பெரிதாக வைத்தால்தான் நல்லா தைக்க வரும் என்று, டெய்லர்கள், அவர்கள் இஷ்டத்துக்கு தைப்பர்.

    * விலை உயர்ந்த துணியை தைக்க கொடுக்கும் போது, உள்ளே பிரித்து பயன்படுத்துமாறு துணி விட்டு தைக்கவும்.

    * காட்டன் சுடிதார் தைக்க கொடுக்கும் போது, ஒருநாள் முழுவதும் தண்ணீரில் நனைத்து, உலர்த்தி, "அயர்ன்' செய்து கொடுங்கள்.

    * அப்படியே தைக்க கொடுத்தால், ஒருமுறை போட்டு துவைத்து, மறுமுறை போடும் போது கை கூட நுழைக்க முடியாது; காசு கரியானதுதான் மிச்சம்.

    * அதேபோல், காட்டன் லைனிங் கொடுத்து தைத்த சுடிதாரை, அலசி காய வைக்கும் போது, லைனிங் பகுதியை திருப்பி, நன்கு உதறி போட வேண்டும். அப்படியே காய வைத்தால், உள்ளே உள்ள காட்டன் துணி சுருங்கி நிற்கும், "அயர்ன்' செய்ய அதிக நேரம் எடுக்கும்.

    * பிளவுஸ் மற்றும் சல்வார் வெட்டும் போது, கழுத்து பகுதி பெரிதாகி விட்டால், கவலைப்பட தேவையில்லை. அதே போல், அரை அங்குலத்துக்கு கழுத்து வரைந்து, ஒட்டு கொடுத்து விட்டு, ஒட்டு தெரியாமல் இருக்க, சல்வாருக்கு பொருத்தமான லேஸ், மணி அல்லது ஜரிகை லேஸ் வைத்து தைத்துக் கொள்ளலாம்.

    * அதே போல், சாதாரண சல்வார் கம்மீஸ் கூட கழுத்து, சைட் பகுதி, கை பகுதியில் மணி அல்லது லேஸ் வைத்து தைத்தால், "ரிச் லுக்' கிடைக்கும்.

    பின்குறிப்பு: இப்போது யாரும் பட்டு சேலை அவ்வளவாக உடுத்திக் கொள்வதில்லை; மைசூர் சில்க் போன்றவை தான் கட்டுகின்றனர். அப்படியானால், பழைய பட்டு சேலையைக் கூட சல்வார் கம்மீசாக தைத்துக் கொள்ளலாம்.

    டிப்ஸ்

    பிளவுஸ் தைக்கும் போது...: பிளவுஸ் தைக்கும் போது, இடுப்பு பட்டிக்கு உள்பக்கம் கேன்வாஸ் துணி கொடுத்து தைத்தால், உட்காரும்போது, மடங்காமல் இருக்கும்.

    துணிகளை வெட்டும் போது...: துணிகளை வெட்டும் போது, கவனமாக உடனே அதை ஒரு துண்டு விடாமல் எடுத்து சுருட்டி, ஒரு பையில் வையுங்கள். அங்கு இங்கு சிதறவிட்டால் கை, பட்டி, கழுத்து துணி எல்லாம் காணாமல் போய் விடும்.
    அடுத்து, மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளை வைத்துக் கொண்டு தைக்காதீர்கள். நீங்கள் தைக்கும் போது ரொம்ப சுவாரசியமாக இருக்கும். அந்த நேரம், குழந்தை, தையல் மிஷினில் கையை வைத்து விடும். ஆபத்து தான். நீங்கள் தைக்கும் போது, திரும்பி பார்க்காதீர்கள். பேசிக் கொண்டே தைக்காதீர்கள். உங்கள் கையே ஊசியில் மாட்டிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

    புதுமணத் தம்பதியரைப் பிரிக்கும் டிவி இயக்குநர்களே! கொஞ்சம் திருந்துங்களேன்!!

    By: Unknown On: 22:16
  • Share The Gag
  • இப்போதெல்லாம் டிவி சீரியல்களில் அதிகம் இடம் பெறுவது திருமணமான இளம் தம்பதியரை எப்படி பிரிப்பது என்பதுதான்.

    திருமணம் நடைபெறாமல் தடுப்பது எப்படி என்று அண்ணியோ, கொழுந்தியாளோ, அத்தையோ வில்லத்தனம் செய்துவந்த காலம் மலையேறிவிட்டது.

    அதையும் மீறி திருமணம் நடந்து விட்டால் அதை பொறுக்க முடியாமல் மாமா பெண்ணையோ, அத்தை பெண்ணையோ கொண்டுவந்து வீட்டிற்குள் வைத்துக்கொண்டு குடைச்சல் கொடுத்து எப்படியாவது அவர்களை பிரித்துவிடவேண்டும் என்று வில்லத்தனம் செய்கின்றனர்.

    தென்றல்

    இந்த வில்லத்தனத்தை முதலில் தொடங்கியது தென்றல் தொடரில்தான். நிச்சயம் ஆன பெண்ணுக்குப் பதிலாக காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் அவர்களை பிரிக்க சொந்த அம்மாவும், சகோதரியும் சேர்ந்து திட்டமிட்டு படு கேவலமான செயல்களை அரங்கேற்றுவார்கள்.

    இளவரசி

    ராதிகாவின் தொடரில்தான் இதுபோன்ற வில்லத்தனங்கள் அதிகம் இருக்கும் இளவரசி தொடரில் கொழுந்தன் சுப்ரமணிக்கு தன்னுடைய தங்கையை திருமணம் செய்து வைக்க முயற்சிக்கும் அண்ணியின் திட்டம் பலிக்கவில்லை.

    இதனால் இளம் தம்பதிகளை பிரிக்க தங்கையை வீட்டோடு வைத்துக் கொள்கிறாள். அவளும் இல்லாத பொல்லாத கதையை கூறி எப்படியோ இரண்டாவதாக திருமணமும் செய்து கொள்வாள்.

    முத்தாரம்

    இந்த சீரியலில் திருமணத்திற்கு முதல்நாள் மாமன் பெண்ணை விட்டு விட்டு காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு வருகிறான் பிரம்மா. எப்படியாவது அத்தை மகனை அடையவேண்டும் என்று முயற்சி செய்து வீட்டிலேயே தங்கி வாடகைத் தாயாக வேறு இருந்து கணவன் மனைவியை பிரிக்க படுபயங்கர திட்டமெல்லாம் போடுகிறாள்.

    பொன்னூஞ்சல்

    இந்த தொடரிலும் அத்தை மகளின் குடைச்சல்தான். அண்ணன் மகனுக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்து தர முடிவு செய்து ஏற்பாடு செய்கிறாள் தங்கை. அது நிறைவேறாமல் போகிறது.

    வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்த பின்னரும் தனியாக இருக்கும் தம்பதியரை பிரிக்க அதே வீட்டில் மகளுடன் குடியேறி கேவலமான திட்டங்களை தீட்டுகின்றனர்.

    வாணி ராணி

    இந்த தொடரில் மகனிடம் இருந்து மருமகளை பிரித்து வீட்டை விட்டு துரத்த சொந்த மாமனாரே தன்னுடைய தங்கை மகளை குடிவைக்கிறார். பல திட்டங்களைப் போட்டும் பிரிக்க முடியவில்லை. கடைசியில் பிரிக்க வந்த பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதுதான் மிச்சம்

    பொம்மலாட்டம்

    பொம்மலாட்டம் தொடரில் செய்யப்படும் வில்லத்தனம் கொஞ்சம் வித்தியாசமானது. தம்பதியரை பிரிக்க முன்னாள் காதலியை அவளுக்கு வேறொருவனுடன் திருமணம் ஆகிவிட்டது என்று தெரிந்தும் வீட்டிற்குள் கொண்டு வந்து வைத்து சதித்திட்டம் தீட்டுகிறார் சின்ன மாமனார்.

    சன் டிவி கவனிக்குமா?

    இந்த தொடர்கள் அனைத்துமே சன்டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள்தான். ஒரே கதையமைப்பு கொண்ட தொடர்களையே தொடர்ந்து ஒளிபரப்புகின்றனர்.

    இனி கலைஞர் டிவி, ஜெயா டிவி, ஜீ தமிழ் டிவி, பாலிமர் டிவி, புதுயுகம் டிவி என பல சேனல்கள் இருக்கின்றன.

    மற்ற சேனல்களில் இதேபோன்ற குடும்பத்தை பிரிக்கும் சீரியல்கள் பல ஒளிபரப்பாகின்றன இதையே காலையில் இருந்து மாலை வரை பார்க்கும் இல்லத்தரசிகளின் பாடுதான் படு திண்டாட்டம்.

    ஆண்மைப் பெருக அறிய மருந்து - கஸ்தூரி மஞ்சள்...! பயன்படுத்தி பாருங்கள்..!

    By: Unknown On: 21:45
  • Share The Gag
  • மஞ்சளைப் போலவே பயன் தருவது கஸ்தூரி மஞ்சள். "குர்குமா அரோமேட்டிகா'' என்பது இதன் தாவரப் பெயராகும். "கற்பூரா,'' "ஆரண்ய ஜெனிகந்தா,'' "வன அரித்ரா'' என்று ஆயுர் வேதம் குறிப்பிடும். இதனின்று எடுக்கும் ஒருவகை எண்ணெய் நுண்கிருமிகளைப் போக்க வல்லது.

    (ஆன்டி மைக்ரோபியல்) பூஞ்சக்காளானை ஒழிக்க வல்லது (ஆன்டிஃபங்கல்) புழுக்களைக் கொல்லவல்லது. (ஆன்த் தெல்மின்திக்) மேலும் இதை மேற்பூச்சாக உபயோகப்படுத்தும் போது கீழே விழுந்ததால் ஏற்பட்ட சிராய்ப்பு காயங்கள், சுளுக்கு, தோலின் மீது ஏற்படும் வேர்க்குரு போன்ற நமைச்சல் தரும் கொப்புளங்கள் ஆகியன போகும்.

    கஸ்தூரி மஞ்சளில் குர்க்குமால், குர்டியோன் என்னும் ரசாயனப் பொருள்கள் புற்று நோய்ச் செல்கள் உருவாவதைத் தடுக்க வல்லது. இதைத் தீ நீராக்கிக் குடிப்பதால் பித்த சம்பந்தமான வயிற்றுக் கோளாறுகள் குணமாகும். கஸ்தூரி மஞ்சளால் பெரும் புண்கள், காப்பான் எனுந் தோல் நோய் நுண்புழுக்கள், அக்கினி மந்தம் ஆகியவை குணமாகும்.

    மேலும் ஆண்மையும், அறிவும், ஞாபக சக்தியும் பெருகும். கஸ்தூரி மஞ்சள் தூளைப் பொதுவாக 350மி.கி வரை உள்ளுக்குக் கொடுத்து வர வயிற்று நோய், குன்மம் ஆகியன குணாமாகும்.

    1. சாதாரண மஞ்சளுக்கு பதிலாகப் பெண்கள் மஞ்சளை இடித்து தூளாக்கி வைத்துக் கொண்டோ அல்லது கல்லில் இழைத்தோ முகத்துக்குப் பூசி குளித்துவர முகப்பருக்கள், தேமல்கள், மெல்லிய முடிகள் வராமல் தடுக்கப்பட்டு முகம் பொலிவு பெறும்.

    2. கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு இதில் 500மி.கி அளவு தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வர வயிற்றுக் கோளாறுகள் குணமாவதுடன் பெண்களின் வெள்ளைப் போக்கு மற்றும் அதிக மாதவிடாய் போக்கு மட்டுப்படும்.

    3. கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் குழைத்து விழுதாக்கி அடிபட்ட புண் மற்றும் ஆறாச் சிரங்குகள் மேல் பூசிவர விரைவில் ஆறிவிடும்.

    4. கஸ்தூரி மஞ்சள் தூளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசிவர விரைவில் கட்டிகள் உடைந்து குணமாகும்.

    5. கஸ்தூரி மஞ்சளைச் சுட்டு வரும் புகையை நுகர்ந்தால் மூக்குஒழுக்கு, மூக்குநமைச்சல் போன்ற நோய்கள் குணமாகும்.

    6.கஸ்தூரி மஞ்சளை தயிரில் கலந்து குழைத்து முகத்துக்கு பூசிவைத்திருந்து சிறிது நேரம் கழித்து கழுவிவிட முகப்பருக்கள், முகச்சுருக்கம், புள்ளிகள் மறைந்து முகம் பொலிவு பெறும். மூன்றுவித மஞ்சளின் மகிமை உணர்ந்த நீங்கள் மஞ்சளை உபயோகப்படுத்தி ஆரோக்கியத்தோடு மங்களமாய் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

    மீண்டும் ரயில் காட்சியில் அசத்திய அஜித்....அருமை..!

    By: Unknown On: 20:58
  • Share The Gag
  • வீரம் படத்தில் இடைவேளை முன்பாக வரும் ரயில் சண்டை காட்சியில் அவரது ரசிகர்களை மட்டுமில்லாமல் சினிமா ரசிகர்களையும் மிரள வைத்தார் அஜித்.

    தற்போது கௌதம் இயக்கி கொண்டிருக்கும் தல 55 படத்தில் அதே போன்ற ரயில் காட்சி ஒன்று உள்ளதாம், ஆனால் இந்த தடவை ரயிலில் த்ரிஷாவுடன் ரொமான்ஸ் காட்சியில் அசத்தியுள்ளார்.

    தற்போது படத்தின் ரெண்டாவது கெட்டப்பில் த்ரிஷாவுடன் ஹைதராபாத்தில் நடித்து வருகிறார்.

    இன்றுவுடன் ஹைதராபாத் படப்பிடிப்பு முடிந்து அடுத்த கட்டம் வழக்கம் போல் ஈசிஆரில் தொடங்க உள்ளது.

    மலேசிய ஹீரோவுக்கு அடி… சூர்யா செய்தது சரியா?

    By: Unknown On: 20:16
  • Share The Gag
  • இந்த வாரம் ‘அஞ்சான்’ ரிலீஸ். அங்கிங்கெணாதபடி எங்கெங்கும் அஞ்சானாகவே இருப்பதால், அதே நாளில் திரைக்கு வரவிருந்த ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திற்கும் ‘சினேகாவின் காதலர்கள்’ படத்திற்கும் தியேட்டர் நெருக்கடி. வலிமையான ஹீரோக்கள் நடிக்கிற படங்கள் வரும்போது அவரவர்க்கு ஏற்படும் இயல்பான இடைஞ்சல்தான் இவையெல்லாம். ‘அஞ்சானுக்கு டிக்கெட் கிடைக்காம வழிஞ்சு வர்ற கூட்டம் வந்தாலே போதும்’ என்று கூறிவிட்டார் பார்த்திபன். சினேகா ஆரம்பத்திலிருந்தே கான்ஃபிடன்ட். இன்னும் சொல்லப் போனால், ‘அஞ்சான் வரட்டும். நாங்களும் வர்றோம். அவங்க கைதட்டல் அவங்களுக்கு. எங்க கைத்தட்டல் எங்களுக்கு’ என்று முன்னமே கூறிவிட்டார் அப்படத்தின் டைரக்டர் முத்துராமலிங்கன்.

    இப்படி உள்ளூரில் உடுக்கையடி கொடுத்துவிட்டு மலேசியாவிலும் மட்டையடி கொடுத்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. அங்கென்ன பிரச்சனை? கடந்த வாரம் திரைக்கு வந்திருக்கிறது மலேசியாவிலேயே தயாரிக்கப்பட்ட ‘மைந்தன்’ என்ற திரைப்படம். குமரேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் புன்னகைப்பூ கீதா, ஷைலா நாயர், ராப் இசை பாடகர் சீஜே, ரேபிட் மேக், டிஎச்ஆர் உதயா, புகழ்பெற்ற பாடகர் டார்க்கி, கலைமாமணி கேஸ் மணியம், கலைமாமணி ஏகவல்லி, பொன் கோகிலம், திலா லக்‌ஷ்மண், விக்கி நடராஜா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    படம் வெளியாகி முதல் நான்கு நாள் வசூலே ஐந்து லட்சம் வெள்ளி என்கிறது மலேசிய ரிப்போர்ட் ஒன்று. இதுவரை வெளியான எந்த தமிழ் படத்திற்கும் இந்தளவுக்கு கலெக்ஷனும் கைதட்டல்களும் வந்ததில்லையாம். சரி, தியேட்டரை அதிகப்படுத்தலாம் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருந்தால், ‘மிஸ்டர் சூர்யா வர்றாரு. கொஞ்சம் படத்தை தியேட்டர்லேர்ந்து கௌப்புறீங்களா?’ என்கிறார்களாம் மலேசியா திரையரங்குகளில். வேறொன்றுமில்லை, அங்கும் ஏராளமான திரையரங்குகளில் ‘அஞ்சான்’ திரையிடப்படவிருக்கிறது.

    உள்ளூரோ வெளியூரோ… ‘யானை வாக்கிங் வரும்போது எறும்புக்கென்ன ஜாக்கிங் வேண்டி கிடக்கு?’ என்கிற தியேட்டர்காரர்களின் மனநிலையை திகிலோடுதான் கவனிக்கிறது தமிழ்நாடும் மலேசியாவும்!

    விஜய்யை சீண்டி பார்த்த சூர்யா! இந்த பிரச்சினை எப்பதான் முடியும்..?

    By: Unknown On: 07:41
  • Share The Gag
  • அஞ்சான் திரைப்படம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வரயிருக்கிறது. இப்படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் தற்போது சூர்யா பிஸியாக இருக்கிறார்.

    சமீபத்தில் இதற்காக கேரளா சென்ற இவரிடம் ‘ நீங்கள் தான் இந்தியாவின் சூப்பர் ஸ்டாரா?’ என்று ஒரு நிருபர் கேட்டுள்ளார்.

    இதற்கு பதில் அளித்த இவர் ‘ கண்டிப்பாக இல்லை, எனக்கு அந்த ஆசையும் இல்லை, இந்தியாவின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் மட்டுமே, அந்த இடத்தில் வேறு ஒருவரை நினைத்து கூட பார்க்க முடியவில்லை’ என்று கூறியுள்ளார்.

    சில நாட்களுக்கு முன் விஜய்க்கு முன்னணி வாரஇதழ் ஒன்று சூப்பர் ஸ்டார் பட்டம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

    இதோ..! பவர் ஸ்டாரின் அடுத்த தொல்லை ஆரம்பமாகிறது!

    By: Unknown On: 07:09
  • Share The Gag
  • லத்திகா படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பவர்ஸ்டார் சீனிவாசன். அதையடுத்து, அவர் ஆனந்த தொல்லை என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் அவரது அலம்பலைப் பார்த்த சந்தானம், அவரைத்தேடிப்பிடித்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடிக்க வைத்தார்.

    விளைவு, அந்த படத்தில் இருந்து பவர்ஸ்டாரின் மார்க்கெட் சூடுபிடித்தது. மளமளவென்று புதிய படங்களில் ஒப்பந்தமான அவர் சந்தானத்துக்கே போட்டியாக வந்து விடுவார் என்றுகூட கருதப்பட்டு வந்தது. ஆனால் அந்த நேரம் பார்த்து பண மோசடியில் சிக்கிய பவர், சிறைக்கம்பிகளை எண்ணச்சென்று விட்டதால், வேகமாக வளர்ந்த அவரது மார்க்கெட் சரிந்தது.

    அதன்பிறகு வெளியே வந்த அவர், மீண்டும் மார்க்கெட்டை உயர்த்த கடுமையாக போராடிக்கொண்டிருக்கிறார். அதோடு, சினிமா உள்பட பள்ளி விழாக்களுக்கு அழைத்தாலும் சென்று அங்குள்ள ரசிகர்களிடம் கைதட்டல்களை பெற்று வரு அவர், அடுத்து தான் நாயகனாக நடித்து கிடப்பில் கிடக்கும் ஆனந்த தொல்லை படத்தை வெளியிடும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்.

    ஒருவேளை இந்த படத்தை வாங்குதற்கு விநியோகஸ்தர்கள் யாரும் முன்வரவில்லை என்றால், தானே தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டிருக்கிறார் பவர்ஸ்டார்.