Thursday, 14 August 2014

Tagged Under: ,

புதுமணத் தம்பதியரைப் பிரிக்கும் டிவி இயக்குநர்களே! கொஞ்சம் திருந்துங்களேன்!!

By: Unknown On: 22:16
  • Share The Gag
  • இப்போதெல்லாம் டிவி சீரியல்களில் அதிகம் இடம் பெறுவது திருமணமான இளம் தம்பதியரை எப்படி பிரிப்பது என்பதுதான்.

    திருமணம் நடைபெறாமல் தடுப்பது எப்படி என்று அண்ணியோ, கொழுந்தியாளோ, அத்தையோ வில்லத்தனம் செய்துவந்த காலம் மலையேறிவிட்டது.

    அதையும் மீறி திருமணம் நடந்து விட்டால் அதை பொறுக்க முடியாமல் மாமா பெண்ணையோ, அத்தை பெண்ணையோ கொண்டுவந்து வீட்டிற்குள் வைத்துக்கொண்டு குடைச்சல் கொடுத்து எப்படியாவது அவர்களை பிரித்துவிடவேண்டும் என்று வில்லத்தனம் செய்கின்றனர்.

    தென்றல்

    இந்த வில்லத்தனத்தை முதலில் தொடங்கியது தென்றல் தொடரில்தான். நிச்சயம் ஆன பெண்ணுக்குப் பதிலாக காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் அவர்களை பிரிக்க சொந்த அம்மாவும், சகோதரியும் சேர்ந்து திட்டமிட்டு படு கேவலமான செயல்களை அரங்கேற்றுவார்கள்.

    இளவரசி

    ராதிகாவின் தொடரில்தான் இதுபோன்ற வில்லத்தனங்கள் அதிகம் இருக்கும் இளவரசி தொடரில் கொழுந்தன் சுப்ரமணிக்கு தன்னுடைய தங்கையை திருமணம் செய்து வைக்க முயற்சிக்கும் அண்ணியின் திட்டம் பலிக்கவில்லை.

    இதனால் இளம் தம்பதிகளை பிரிக்க தங்கையை வீட்டோடு வைத்துக் கொள்கிறாள். அவளும் இல்லாத பொல்லாத கதையை கூறி எப்படியோ இரண்டாவதாக திருமணமும் செய்து கொள்வாள்.

    முத்தாரம்

    இந்த சீரியலில் திருமணத்திற்கு முதல்நாள் மாமன் பெண்ணை விட்டு விட்டு காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு வருகிறான் பிரம்மா. எப்படியாவது அத்தை மகனை அடையவேண்டும் என்று முயற்சி செய்து வீட்டிலேயே தங்கி வாடகைத் தாயாக வேறு இருந்து கணவன் மனைவியை பிரிக்க படுபயங்கர திட்டமெல்லாம் போடுகிறாள்.

    பொன்னூஞ்சல்

    இந்த தொடரிலும் அத்தை மகளின் குடைச்சல்தான். அண்ணன் மகனுக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்து தர முடிவு செய்து ஏற்பாடு செய்கிறாள் தங்கை. அது நிறைவேறாமல் போகிறது.

    வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்த பின்னரும் தனியாக இருக்கும் தம்பதியரை பிரிக்க அதே வீட்டில் மகளுடன் குடியேறி கேவலமான திட்டங்களை தீட்டுகின்றனர்.

    வாணி ராணி

    இந்த தொடரில் மகனிடம் இருந்து மருமகளை பிரித்து வீட்டை விட்டு துரத்த சொந்த மாமனாரே தன்னுடைய தங்கை மகளை குடிவைக்கிறார். பல திட்டங்களைப் போட்டும் பிரிக்க முடியவில்லை. கடைசியில் பிரிக்க வந்த பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதுதான் மிச்சம்

    பொம்மலாட்டம்

    பொம்மலாட்டம் தொடரில் செய்யப்படும் வில்லத்தனம் கொஞ்சம் வித்தியாசமானது. தம்பதியரை பிரிக்க முன்னாள் காதலியை அவளுக்கு வேறொருவனுடன் திருமணம் ஆகிவிட்டது என்று தெரிந்தும் வீட்டிற்குள் கொண்டு வந்து வைத்து சதித்திட்டம் தீட்டுகிறார் சின்ன மாமனார்.

    சன் டிவி கவனிக்குமா?

    இந்த தொடர்கள் அனைத்துமே சன்டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள்தான். ஒரே கதையமைப்பு கொண்ட தொடர்களையே தொடர்ந்து ஒளிபரப்புகின்றனர்.

    இனி கலைஞர் டிவி, ஜெயா டிவி, ஜீ தமிழ் டிவி, பாலிமர் டிவி, புதுயுகம் டிவி என பல சேனல்கள் இருக்கின்றன.

    மற்ற சேனல்களில் இதேபோன்ற குடும்பத்தை பிரிக்கும் சீரியல்கள் பல ஒளிபரப்பாகின்றன இதையே காலையில் இருந்து மாலை வரை பார்க்கும் இல்லத்தரசிகளின் பாடுதான் படு திண்டாட்டம்.

    0 comments:

    Post a Comment