Wednesday, 20 November 2013

அடுத்தாண்டு வரப் போகும் ஹைட்ரஜன் கார்களுக்கு இப்போதே டிமாண்ட்!

By: Unknown On: 20:16
  • Share The Gag
  •  nov 20 - vanikam_hydrogen_full
    உலகளவில் அநேக வாகனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் கொண்டே இயங்கி வருகிறது. தற்போது பெட்ரோல் டீசல் கிடைத்தாலும் பல்வேறு நாடுகளில் தட்டுபாடுகள் இருந்து கொண்டு வருகிறது. மேலும் எதிர்காலத்தில் பெட்ரோல்-டீசலுக்கான வளங்கள் இல்லாமல் ‌கூட போகலாம் என்று ஆய்வுகள் சொல்கிறது. அப்படி செல்லும் பட்சத்தில் பெட்ரோல் டீசலுக்கு பதிலான மாற்று வழியை பல்வேறு நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன. குறிப்பாக வாகனங்களுக்கு பேட்டரி கார், காஸ் கொண்டு இயங்கும் வகையில் வாகனங்கள் வெளிவருகின்றன. இந்நிலையில் உலகளவில் கார் தயாரிப்பில் இருக்கும் முன்னணி நிறுவனங்களான ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் எதிர்காலத்தில் தங்களது நிறுவன கார்களை மாற்று வழியில் அதாவது பெட்ரோல், டீசல் அல்லாது ஹைட்ரஜன் மூலம் இயங்கக்கூடிய கார்களை தயாரிக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன்

     அதே சமயம் இது போன்ற ஹைட்ரஜன் பங்குகளில் ஸ்டோரேஜ் செய்வதிலும், கையாள்வதிலும் பல பிரச்னைகளும், வெடிக்கும் அபாயம் இருப்பதாலும் இந்த வகை கார்கள் சந்தையில் வெற்றி பெற வைப்பது என்பதும் கார் நிறுவனங்களின் தயங்கி வந்தன் அதேவேளை ஹைட்ரஜன் கார்களிலிருந்து வெளிப்படும் புகை எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டதால் சுற்றுச்சூழலுக்கு துளியும் தீங்கு ஏற்படுத்தாது என்பது இதன் மிகப்பெரிய பலம் என்பதால் அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட பிரத்யேக உதிரிபாகங்களை பயன்படுத்தி ஹைட்ரஜன் காரை தயாரித்து அடுத்தாண்டு விற்பனைக்கு விடுகிறது.

    இந்நிலையில் ஹைட்ரஜன் காருக்கு இப்போது புது டிமாண்ட் உருவாக்கி வருகிறது. தற்போது ஹைட்ரஜன் கார்களை அறிமுகம் செய்வதில் ஹுண்டாய், டயோட்டா, ஹோண்டா போன்ற கம்பெனிகள் இறங்கி உள்ளன. லாஸ்ஏஞ்சலஸ் கார் கண்காட்சியில் ஹுண்டாய் நிறுவனம் இந்த ஹைட்ரஜன் கார்களை அறிமுகம் செய்தது. இது அடுத்தாண்டு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன்டயோட்டா மோட்டார் நிறுவனமும் தன் கார்களில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் கார்களை அறிமுகப்படுத்த உள்ளது.இதையடுத்து இதை வாங்க பலரும் இப்போதே ஆன்லைனில் விசாரித்து வருகிறார்களாம்.

    All Eyes on Hydrogen Fuel Cell Vehicles at the LA Auto Show

     ******************************************************
     Hydrogen fuel cells join the advantages of clean, efficient electric vehicles with the convenience of fast refueling. The fuel cell combines hydrogen gas stored in a tank with oxygen from the air to produce electricity and water. The electricity from the fuel cell then powers an electric motor, similar to today’s plug-in electric vehicles. And like battery electric vehicles, there is no smog-forming or climate-changing pollution from the vehicle’s tailpipe.

    நீங்கள் மூளையின் வல பக்கமா? இடப் பக்கமா?ஒரு சின்ன டெஸ்ட்!!

    By: Unknown On: 20:04
  • Share The Gag

  • உலகிலேயே மிக மிக ஆச்சரியம் – மனித மூளை. அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மண் துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால் ஒரு லாரி நிரம்பும்! இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை! மனிதன் உயிர் வாழும்வரை இந்தச் செல்களிடையே மின் துடிப்புகள் திரிகின்றன.இந்நிலையில் மூளையை பொறுத்த மட்டில் இடது, வலது என இரு பாதிகளாக உள்ளன. ஒரு நரம்பு குவியல் இரண்டையும் இணைக்கிறது. இந்த இணைப்பு “corpus callosum” எனப்படும். வால்நட் பருப்பு இணைந்துள்ளது போலவே காணப்படும். செரிபெரம் இரு பகுதிகள் என மூளையை கொண்டுள்ளது. இடது பாகம் உடலின் வலது புறத்தையும், வலது பாகம் உடலின் இடது புறத்தையும் கவனித்துக்கொள்கிறது. “corpus callosum” பகுதியை சமமாக வெட்டினால் இரு பாகங்களான மூளைக்கு தொடர்பே இருக்காது.

    அதிலும் ஒரு பாகம் செயல் படுவது மற்றொரு பாகத்துக்கு தெரியாது. இரு பகுதிகளும் சமமானதா? ஒரு பாகம் செய்ய முடியாததை மற்றுது செய்யுமா? (அ) செயல்படுத்துவதில் வித்தியாசம் உள்ளதா? 1861ல் இரண்டும் வெவ்வேறானவை எனப்பட்டது. பிரெஞ்சு டாக்டர் ப்ராகா பேச முடியாத நோயாளியை கண்டார். நாம் சொல்வதை புரிந்து கொண்டாலும் அவனால் திரும்ப பேச முடியாது. முக பாவங்களை, கை அசைவு கொண்டு அவனால் அறிவு பூர்வமாக பதிலளிக்க முடியும். ஆனால் பேச முடியாது.

    இதற்கிடையில் இதில் இடதுபக்க மூளையை பயன்படுத்துபவர்கள் முடிவுகளை எடுக்கும்போது அவை லாஜிக்கலாக இருக்குமாறு பார்ப்பார்கள், அதேபோல் வலப்பக்க மூளையை பயன்படுத்துபவர்கள் தொலைதூர நோக்குடன் முடிவுகளை எட்டுவார்களாம் என்றெல்லாம் சொல்வார்கள்.

    சரி இவற்றில் நீங்கள் எந்தவகையைச் சேர்ந்தவர்கள் நீங்கள் எப்பக்க மூளையை பயன்படுத்துகின்றீர்கள் என்பதை கண்டறிய சிறிய பரீட்சை ஒன்றை உருவாக்கியுள்ளனர் ஒரு இணையத்தள வடிவமைப்பாளர்கள். (பரீட்சை ஆங்கிலத்தில் தான் இருக்கிறது என்றாலும் எல்லோரும் சட்டென புரிந்து கொள்ள முடியும்)

    இந்த பரீட்சையின் முடிவில் உங்களை இயக்குவது வலதா அல்லது இடது மூளையா என்பதை அறியலாம். 30 செக்கனுக்குள் கண்டுபிடிக்கலாம் என்று தான் இந்த இணையத்தளம் சொல்லும். ஆனால் அதற்காக ஆர்வக் கோளாறில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பட்டு பட்டுனு பட்டன்களை தட்டிச் சென்றீர்கள் என்றால் இறுதி முடிவு சில வேளை தவறாக கொடுக்கலாம். எனவே கொஞ்சம் நின்று நிறுத்தி நிதானமாக மனம் என்ன சொல்கிறதோ, மன்னிக்க, மூளை என்ன சொல்கிறதோ அதனபடி பதில் அளியுங்கள். முடிவில் நீங்கள் எந்தப்பக்க மூளையை பயன்படுத்துபவர் என ஆதாரத்தோடு அடித்துச் சொல்கிறது இப்பரீட்சை.

    இனி பரிட்சைக்கு க்ளிக் :::http://en.sommer-sommer.com/braintest/

    மோடிக்கு நோ விசா: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீ்ர்மானம்!

    By: Unknown On: 18:41
  • Share The Gag
  •  nov 20 - modi u s
    குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுக்கும் நடவடிக்கையை அமெரிக்கா தொடர வேண்டுமென்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் இதற்கான தீர்மானத்தை எம்.பி.க்கள் கொண்டு வந்துள்ளனர். மதசுதந்திரம் மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மோடிக்கு விசா மறுக்கும் நடவடிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென்று அந்த தீர்மானம் வலியுறுத்துகிறது. குஜராத் கலவரத்தை சுட்டிக்காட்டியுள்ள அந்த தீர்மானம் அதில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் தங்களுக்கு நீதி கோரி வருவதையும் குறிப்பிட்டுள்ளது.

    குஜராத்தில் கடந்த 2002–ம் ஆண்டு கலவரம் நடந்தது. அதில் ஏராளமானவர்கள் பலியானார்கள். அப்போது குஜராத் முதல் – மந்திரியாக நரேந்திரமோடி பதவி வகித்தார்.

    இதையடுத்து மத சுதந்திரத்தின் விதிமுறையை மீறியதாக கூறி இவருக்கு ‘விசா’ வழங்க அமெரிக்கா மறுத்தது. அதை தொடர்ந்து அமெரிக்காவில் நடைபெறும் வர்த்தக மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் நேரில் பங்கேற்காமல் வீடியோ, கான்பரன்சிங் (வாணொலி காட்சி) மூலம் அவர் பேசி வந்தார்.

    இந்த நிலையில், பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து எதிர்காலத்தில் அவர் பிரதமராகும் பட்சத்தில் அவருடன் அமெரிக்கா சுமூக உறவு மேற்கொள்ளும் என அமெரிக்கா அறிவித்தது.

    எனவே, தடைகள் நீக்கப்பட்டு நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு ‘விசா’ மறுப்பு நீடிக்கப்படுகிறது.அதற்கான தீர்மானம் அமெரிக்கா பாராளு மன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மைனாரிட்டிகளின் உரிமைகள் மற்றும் மத சுதந்திரங்களை இந்தியா பாதுகாக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்த தீர்மானத்தை ஆளும் குடியரசு கட்சியின் கெய்த் எல்லிசன், எதிர் கட்சியின் குடியரசு கட்சியின் ஜோபிட்ஸ் மற்றும் 25–க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கொண்டு வந்துள்ளனர்.

    பெங்களூரில் பிஸியான இடத்தில் ஏடிஎம் செண்டரில் வெட்டப்பட்ட பெண் (வீடியோ)?

    By: Unknown On: 17:55
  • Share The Gag


  •  

    பெங்களூரில் கார்ப்பரேசன் சர்க்கிள் என்னும் இடம் மிகவும் பிஸியான இடம், இந்த இடத்தில் இருந்த ஏடிஎம் செண்டரில் நேற்று காலை 7.30 மணிக்கு புகுந்த ஒருவன் கையில் துப்பாக்கி கத்தியோடு மிரட்டி பணம் பறிக்க முயன்றான், ஆனால் 44 வயதான அந்த பெண் கொடுக்க மறுத்ததால் அந்த பெண்ணை வெட்டிவிட்டு சென்று விட்டான், வெட்டப்பட்ட பெண் மயக்கமடைந்து கிடந்தார், பின் கண்டெடுக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    ஏடிம் செண்டரின் ஷட்டரை மூடிவிட்டு நடந்த கொடூரம் பெங்களூர் மக்களை குறிப்பாக பெண்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    "பரம்பரை "யின் உண்மையான பொருள்!

    By: Unknown On: 17:26
  • Share The Gag
  • நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசும்
     பொழுது, பரம்பரை பரம்பரையாய் இருக்கிறது
     என்று சொல்வதுண்டு...

    பரம்பரை என்றால் என்ன? வழி வழியாக
     என்று சொல்லலாம் என்றாலும்,
     "தலைமுறை தலைமுறையாக"
    என்பதே உண்மை பொருள் ஆகும்.

    அப்படியென்றால், பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல்லா? ஆம்!..
    பரன் + பரை = பரம்பரை
     நமக்கு அடுத்த தலைமுறைகள்:
    நாம்
     மகன் + மகள்
     பெயரன் + பெயர்த்தி
     கொள்ளுப்பெயரன் + கொள்ளுப்பெயர்த் தி
     எள்ளுப்பெயரன் + எள்ளுப்பெயர்த்தி

     நமக்கு முந்தைய தலைமுறைகள்:

    நாம் - முதல் தலைமுறை

     தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை

     பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை

     பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை

     ஓட்டன் + ஓட்டி -
    ஐந்தாம் தலைமுறை

     சேயோன் + சேயோள் -
    ஆறாம் தலைமுறை

     பரன் + பரை - ஏழாம் தலைமுறை

     ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள்
     என்று கொண்டால்,
    ஏழு தலைமுறை - 480 வருடங்கள்..
    ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..
     (கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)
    ஆக, பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன்
     பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக
     என்று பொருள் வரும்.
    எனக்கு தெரிந்து, வேறெந்த மொழிகளிலும்
     இப்படி உறவு முறைகள் இல்லை..

    இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!..

    உங்கள் நண்பர்களுக்கு தெரிய பகிரவும் !!

    உடலின் செயலற்ற பகுதிகளை ஸ்டெம் செல்களால் இயங்க செய்யலாம்!

    By: Unknown On: 17:07
  • Share The Gag

  •  ஸ்டெம் செல்களை அதிகரிக்கச் செய்வதன் மூலம் உடலில் செயலற்ற பகுதிகளை இயங்க செய்ய முடியும் என்று லைவ் 100 மருத்துவமனையின் இயக்குனர் நாகராஜ் தெரிவித்தார்.

    பெங்களூருவில் திங்கள்கிழமை அம்மருத்துவமனையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது: முதுகுத்தண்டில் எதிர்பாராதவிதமாக அடிபடுதவதால், விபத்துகளால் முதுகுதண்டு பாதிக்கப்பட்டு, உடலில் கை,கால்கள, இடுப்பு உள்ளிட்ட பகுதிகள் செயலிழந்து போகும். தற்போது புதிய மருத்துவ கண்டுபிடிப்பால், ஸ்டெம் செல்களை அதிகரிகச் செய்து செயலிழந்துள்ள பகுதிகளை இயங்கச்செய்ய முடியும்.

    இது மருத்துவ உலகிறகு வர பிரசாதமாகும். விபத்து உள்ளிட்டவைகளால் உடலின் சில பகுதி செயல் இழந்துவிட்டால் பெரும்பாலானவர்கள் தங்களது எதிர்காலம் சூயன்யமாகிவிட்டதாக கருதுகின்றனர். தற்போது மருத்துவத்தில் பல வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. எனவே உடலில் சில பகுதிகள் செயலிழந்தால் யாரும் மன தைரியத்தை இழக்காமல், உரிய சிகிச்சை பெற்ற நீண்ட நாள் வாழ வழி உள்ளது என்பதனை உணரவேண்டும் என்றார்.

    ‘இரண்டாம் உலகம்’ ரிலீஸாதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    By: Unknown On: 16:50
  • Share The Gag
  •  1irandamulagam
    செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா – அனுஷ்கா நடித்திருக்கும் படம் ‘இரண்டாம் உலகம்’. நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்து வந்த இப்படம் ஒருவழியாக வரும் 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்திற்கு புதிய வடிவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    படம் இயக்கித் தருவதாகக்கூறி இயக்குனர் செல்வராகவன் அட்வான்ஸ் வாங்கிவிட்டு ஏமாற்றியதாக பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான ராஜ்குமார் சந்தோஷி உட்பட சிலர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கூறியுள்ளனர். மேலும் இந்தப் பணத்தை திருப்பித் தராவிட்டால் செல்வராகவன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனால் ‘இரண்டாம் உலகம்’ திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்து ஒரு படத்தை எடுத்தாலும் கூட அதை நினைத்த நேரத்தில் எந்தவிதப் பிரச்சனையும் இன்றி ரிலீஸ் செய்வது என்பது, கோலிவுட்டைப் பொறுத்தவரை இப்போதைக்கு குதிரைக் கொம்பாகத்தான் உள்ளது. எப்போ, எந்த உருவத்தில், என்ன பிரச்னை, வரும் என்று யாராலும் சொல்ல முடியாது.

    புகழ் நம்மை தேடி வரும்.- குட்டிக்கதைகள்!

    By: Unknown On: 07:59
  • Share The Gag
  • தன்னை தானே முடியாதென்று தாழ்த்த கூடாது :

    ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களையும்
     கலந்துரையாடலுக்கு அழைத்தார்.

    நிகழ்ச்சி ஆரம்பிக்கும் சமயம் பூஜ்யம் அங்கு இல்லை என்பது தெரியவந்தது.

    பூஜ்யம் ஒளிந்து கொண்டது, மற்ற எண்கள் அதை ஆசிரியரிடம்
     கொண்டு வந்தன.

    ஆசிரியர், ""ஏன் ஒளிந்து கொண்டாய்?'' என்று கேட்டார்.

     ""நான் வெறும் பூஜ்யம்தானே. என்னை பற்றி யார் கவலைப்படுவார்கள்?
    எனக்கு மதிப்பே இல்லையே,'' என்று வருத்தமாக கூறியது.

    புன்னகைத்த ஆசிரியர், "ஒன்று' என்ற எண்ணை முன்னே வரச்சொன்னார்.

    குழுவினரைப் பார்த்து, ""இதன் மதிப்பு என்ன?'' என்றார்.

     ""ஒன்று!'' என்றன மற்ற எண்கள்.

    அடுத்து பூஜ்யத்தை அதன் அருகில் நிற்கச் சொன்னார்.

     ""இப்போது?''

     ""பத்து!'' என்று மற்ற எண்கள் உரக்கக் கத்தின.

    அடுத்து பூஜ்யத்தைப் பார்த்து, ""இப்போதுதெரிந்து கொண்டாயா உன்
     மதிப்பு? "ஒன்று' என்ற சாதாரண எண் உன் சேர்க்கையால்
     பன்மடங்கு அதிக மதிப்பு அடைந்ததைப் பார்த்தாயா?'' என்றார்.

    எல்லா எண்களும் மகிழ்ச்சியுடன் கை தட்டின.

     ""ஆமாம்... நான் சரியான இடத்தில் இருந்தால், நானும் பயனுடையவன்தான்.

    நான் மற்றவருடன் சேர்ந்தால் நாங்கள் அனைவருமே அதிக
     மதிப்பு வாய்ந்தவர் ஆகிறோம்,'' என்று பூஜ்யம் மகிழ்ந்தது.

    இது போலதான் நாமுமம்..

    நம்மிடம் ஏதாவது ஒரு திறமை இருக்கும்
     அதை சரியான நேரத்தில்.,சரியான இடத்தில் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்

    நீ தாண்டா சூப்பர் மேன்!

    By: Unknown On: 07:39
  • Share The Gag
  • 1) வீதியில் எச்சில் துப்பாதவன் ..

    2) பொது இடத்தில் புகைப்பிடிக்காதவன்

    3) சிறுவர் பூங்காவில் காதல் செய்யாதவன்

    4) கழிவறையில் சிறுநீர் கழிப்பவன்

    5) தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் செல்லுபவன்

    6) ஸ்கூல் மாணவிகளுக்கு குறும்பு செய்யாதவன்

    7) பேரூந்தின் வாசலில் தொங்கிசெல்லாதவன்

    8) மூடநம்பிகையை நம்பாதவன்

    9) பந்தா லொள்ளு செய்யாதவன்

    10) குடியால் குடியை அழிக்காதவன்..

    பிறந்த குழந்தையின் வளர்ச்சி நிலைகள்:-

    By: Unknown On: 07:31
  • Share The Gag
  • தாயின் கர்ப்பப் பையில் கருவாக உருவாகி, 9 மாதத்தின் நிறைவில் சரியான உடல் எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் வளர்ச்சி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.

    அந்த வகையில், ஒரு சில குழந்தைகள் விரைவாகவே திரும்புதல், தவழுதல் போன்றவற்றை செய்யலாம். சில குழந்தைகள் மாதங்கள் கடந்தும் செய்யலாம். அது அவற்றின் வளர்ச்சியைப் பொருத்த விஷயமாகும். ஆனால் பொதுவாக குழந்தைகளின் வளர்ச்சியைப் பற்றி இங்கு காணலாம்.

    முதல் மாதம்

     கை, கால்களில் அசைவு இருக்கும். 24 மணி நேரத்தில் 22 மணி நேரம் உறங்கிக் கொண்டுதான் இருக்கும். பசிக்காகவும், உடல் உபாதைகளுக்காகவும் குழந்தைகள் அழும்.

    இரண்டாம் மாதம்

     அசைவுகளை உணரும். அழுகையைத் தவிர சில சிறிய சத்தத்துடன் கத்தும். தாயின் அரவணைப்பை நன்கு உணர்ந்திருப்பர்.

    மூன்றாம் மாதம்

     தாயின் முகம் நன்கு அறிந்திருக்கும். குரல்களைக் கேட்டு அந்தப் பக்கமாகத் திரும்பும். அசைவுகளை உற்று நோக்கும்.

    நான்காம் மாதம்

     நிறங்களை அறிந்திருக்கும். குழந்தைகளுக்கு கழுத்து நிற்க ஆரம்பிக்கும். கழுத்தை அவர்களாக திருப்பி அசைவுகளை கவனிப்பார்கள். அவர்களது பெயரை கூப்பிட்டால் அந்த திசையை நோக்கி திரும்புவார்கள்.

    5ம் மாதம்

     ஒரு பக்கமாக ஒருக்களித்து படுப்பார்கள். கவிழ்ந்து கொள்ள முயற்சித்து கை சிக்கிக் கொண்டு அழுவார்கள். இந்த மாதங்களில் குழந்தைகள் கவிழ்ந்து கொள்ள எடுக்கும் முயற்சிகள் தோல்வியாகவே இருக்கும்.

    6ம் மாதம்

     வாயில் நுரை வரும். பேசுவதற்கு வாயைக் குழப்புவார்கள். கவிழ்ந்து கொள்வார்கள். தலை நன்றாக நிற்கும். பால் பற்கள் முளைக்கத் துவங்கியிருக்கும்.

    7ம் மாதம்

     ஒரு முறை கவிழ்ந்தும், அதில் இருந்து திரும்ப மல்லாக்காக படுத்தும் உருளுவார்கள். சில குழந்தைகள் பின்னுக்கு செல்ல காலை உதைக்கத் துவங்கும். உட்கார வைத்தால் உட்காருவார்கள்.

    8ம் மாதம்

     பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடுவார்கள். எந்த பொருளையும் வாயில் வைத்துக் கொள்ள முனைவார்கள். தானே உட்காருவார்கள். நிற்க வைத்தால் தள்ளாடிக் கொண்டே நிற்பார்கள்.

    9ம் மாதம்

     ஒரு அடி எடுத்து வைத்து நடப்பார்கள். அவர்களது பெயரைக் கூப்பிட்டால் திரும்பி பார்ப்பார்கள். ஒவ்வொரு வார்த்தைகளாக பேசுவார்கள். தாய், தந்தையை அடையாளம் காட்டுவார்கள்.

    10ம் மாதம்

     அத்தை, தாத்தா, மாமா போன்றவற்றை நன்கு உச்சரிப்பார்கள். தாயின் பாடலுக்கு நடனமாடுவார்கள். டாடா சொல்வது, உணவை மறுப்பது, தெரியாதவர்களிடம் செல்ல மறுப்பது போன்றவை உருவாகும்.

    12ம் மாதம்

     ஒரு வயது நிரம்பும் போது முன்வரிசை பால் பற்கள் அனைத்தும் முளைத்திருக்கும். விழுந்து எழுந்து அவர்களாக நடப்பார்கள். பல வார்த்தைகளை அவர்களாகவே பயன்படுத்துவார்கள். ஒரு சில குழந்தைகள் ஒன்றிரண்டு வார்த்தைகளை இணைத்துப் பேச முயற்சிக்கும். பொருட்களையும், உறவினர்களையும் அடையாளம் காட்டுவார்கள்.

    15வது மாதம்

     தனியாக நடப்பார்கள். உணவுகளை ருசித்து உண்பார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப பயம், சந்தோஷம், அழுகை ஆகியவற்றை அவர்களே வெளிப்படுத்துவார்கள். படிகட்டுகளை ஏற முயற்சிப்பார்கள். வார்த்தைகளை தெளிவாக பேசுவார்கள்.

    இவ்வாறாக குழந்தை வளர்ந்து சிறுவனாகிறது. இந்த படிநிலைகளில் சில குழந்தைகளின் வளர்ச்சியும், மற்ற சில குழந்தைகளின் வளர்ச்சியும் வேறுபடும்.