Monday, 28 July 2014

நீங்கள் பால் கொடுக்கும் போது கோபப்பட்டால் அந்த பாலே குழந்தைகளுக்கு விஷமாகி விடுமாம்..!

By: Unknown On: 21:33
  • Share The Gag
  • கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட ஏற்படுத்துகிறதாம். எனவே தாய்மார்கள் பாலூட்டும் போது அமைதியான சூழ்நிலையில் தாய்ப்பாலுட்ட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

    கோபம் என்பது ஒரு உணர்வு. எரிச்சல், மனக்கடுப்பு, வருத்தம், சீற்றம், ஆத்திரம், ஆவேசம், பெரும்சினம் இவை எல்லாம் கோபத்தின் பெருவகைகள். கோபம் என்பது ஒரு சில இடங்களில் அவசியம்தான் அதேசமயம் எதற்கெடுத்தாலும் கோபம், எப்போதும் கோபம் என்று இருக்கக் கூடாது.

    கோபம் ஏற்படும் போது மனதை அமைதியாக வைத்திருக்க பழகவேண்டும். கோபம் வரக்கூடாது. வந்தாலும்கூட நீண்ட நேரம் இருக்கக் கூடாது. அவ்வாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கோபம் உடனே மறைந்து விட வேண்டும். திரும்ப திரும்ப பேசியதைப் பேசி கேட்பவரையும் கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்று தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடாது. கோபம் உடலில் பல கெடுதல்களை ஏற்படுத்துகிறது.

    கோபத்தோடு தன் குழந்தைக்கு தாய்பால் அந்த கோப உணர்ச்சியானது பாலையே நஞ்சாக்கிவிடுமாம்.கோபத்தினால் நம்முடைய சக்தி வீணாகிறது. நரம்பு மண்டலம் முழுவதும் சீர்குலைகிறது. உடல் பதறுகிறது. உடலில் சோர்வு ஏற்படுகிறது. மறுபடியும் உடல் தன்னிலைக்கு வர பல மணி நேரங்கள் ஆகின்றன. எனவே உங்கள் உடலை நோய்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவும்.

    தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கவும் கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். கோபம் வரும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் நம்முடைய மூச்சுக்காற்றை கவனிக்க வேண்டும். மூச்சு உள்ளே போவதையும், வெளியே வருவதையும் சில நிமிடங்கள் கவனித்து வந்தீர்களானால் கோபம் வராது வந்தாலும் அடங்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் கோபத்தை கட்டுப்படுத்த தியானம் சிறந்த வழி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

    இனி இண்டர்நெட் மூலம் முத்தமிட்டு கரங்களைப் பற்றிக்கொள்ள முடியும்..!

    By: Unknown On: 20:09
  • Share The Gag
  •  பிரியமானவர்களிற்கு  தொலைதூரத்தில்  இருந்தும்  கைகொடுத்து  தங்கள்ளது உணர்வினை வெளிப்படுத்த  கூடிய  கருவியை நெதர்லாந்தின் அம்ஸ்டர்டாம் நகரைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ‘பிரெப்பிள்ஸ்’ என அழைக்கப்படும் தொலை தூரத்திலுள்ளவர்கள் ஒருவருக்கொருவர் தொடுகை உணர்வைப் பெறுவதற்கு வழிவகை செய்யும் தொழில்நுட்ப உபகரணத்தை உருவாக்கியுள்ளனர்.

    இனி இண்டர்நெட் மூலம் முத்தமிட்டு கரங்களைப் பற்றிக்கொள்ள முடியும்

    இண்டர்நெட் மூலம் முத்தமிட கருவி கண்டு பிக்க பட்டது நினைவு வரலாம்  பொதுவாக  ஒருவருக்கொருவர் நீண்ட தொலைவிலுள்ள காதலர்கள் ஒருவர் முகம் பார்த்து ஒருவர் உரையாடுவதற்கு ‘ஸ்கைப்’ போன்ற இணையத்தள தொடர்பாடல் சேவைகள் உதவுகின்ற போதும் காதலர்கள் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றி அன்பை வெளிப்படுத்துவது சாத்தியமில்லாது உள்ளது

    கம்பியில்லா தொழில்நுட்பத்தின் மூலம் செயற்படும் இந்த உபகரணம் ஒருவர் தனது அன்புக்குரியவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவரது கரத்தைப் பற்றி அன்பை வெளிப்படுத்துவதற்கு வழிவகை செய்கிறது.

    தூர இடங்களில் இருக்கும் காதலர்கள் தம்மிடமுள்ள ‘மிரெப்பிள்ஸ்’ உபகரணத்தைப் பயன்படுத்தி கரத்தைப் பற்றும் உணர்வை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்ள முடியும்.இந்த உபகரணத்தை ஸ்கைப் மற்றும் கூகுள் ஹேங் அவுட் சேவைகளுடன் இணைத்துப் பயன்படுத்த முடியும்.மேற்படி ஒரு சோடி உபகரணங்களின் ஆகக்குறைந்த விலை 99 அமெரிக்க டொலராகும்.

    தேசிய விருதை தவறவிட்ட யுவன் ஷங்கர் ராஜா!

    By: Unknown On: 19:44
  • Share The Gag
  • தமிழ் சினிமாவையும் தாண்டி பாலிவுட்டிலும் கலக்க ஆரம்பித்துவிட்டார் யுவன். இவர் சமீபத்தில் இசையமைத்த ஹிந்தி படமான ராஜ் நட்வர்லால் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறதாம்.

    இந்நிலையில் யுவன் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது, கடந்த வருடம் வெளியான தங்கமீன்கள் படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றது.

    இந்த விருது பிரிவில் இசைக்காக யுவனும் போட்டியில் இருந்தாராம், கடைசி தருணத்தில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் இவ்விருது வேறு ஒருவருக்கு சென்றுவிட்டதாம். இது ரசிகர்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது.

    கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிமுறைகள் ஸ்பெஷல் ரிப்போர்ட்!

    By: Unknown On: 18:55
  • Share The Gag
  • ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது ‘ தினமும் இணையதள செக்யூரிட்டி
    பற்றி பல புத்தகங்கள் வந்தாலும் ஏதுவுமே நடைமுறைக்கு பயன்படாது
    என்று முழுமையாக படித்த பின் தான் புரியும். இப்போது இந்த குற்றத்தை
    தடுப்பதற்கான சில வழிமுறைகள்.

    வழிமுறைகள்:


    * ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் தங்களின் வங்கி
    கணக்கை கொடுத்து அதற்கு பணம் அனுப்ப சொல்லலாம்.

    * இணையதளம் பயன்படுத்தும் நாம் இமெயில் மற்றும் வங்கி
    கணக்கு பயன்படுத்துவதாக இருந்தால் அதற்கு தனி உலாவியும்
    மற்றபடி தளங்களை பார்ப்பதற்கு தனி உலாவியும் பயன்படுத்தலாம்.

    * Crack செய்து கொடுக்கும் மென்பொருளை ஒரு போதும் தரவிரக்காதீர்கள்
    இதனுடன் தற்போது உங்கள் கடவுச்சொல்லை அனுப்பும் ஸ்கிரிப்ட்-மும்
    கூடவே வருகின்றது.

    *  பணம் அனுப்பும் தளத்தின் முகப்பில் “https” என்று இருக்கிறதா என்று
    ஒரு முறைக்கு இருமுறை பார்த்துக்கொள்ளுங்கள்.

    *  கடவுச்சொல் தட்டச்சு செய்யும் போது உலாவியில் ஏதாவது மெசேஸ்
    வந்து Ok , close என்று இருந்தால், நீங்கள் Esc பொத்தானை மட்டும்
    அழுத்துங்கள் ஏன் என்றால் ok cancel , close எதை அழுத்தினாலும் ஒரே
    வேலையைத்தான் செய்யும்.

    * உலாவி பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது இடையில் Close அல்லது
    Restart ஆனால் கண்டிப்பாக உங்கள் கவனம் உலாவியின் மேல்
    இருக்கட்டும்.( தேவைப்பட்டால் உலாவியை uninstall செய்து மறுபடியும்
    Install செய்து கொள்ளுங்கள் ).

    * கடவுச்சொல்லை ஒரு போதும் உங்கள் கணினியில் சேமித்து வைக்காதீர்கள்.
    ஒவ்வொரு முறையும் தட்டச்சு செய்து உள் நுழையுங்கள்.

    * நெட்கஃபே- களில் சென்று பேங்க் Transaction செய்வதை கூடுமானவரை
    தவிர்க்க பாருங்கள், பயன்படுத்தியே ஆகவேண்டும் என்றால் Firefox
    உலாவியை பயன்படுத்தி Transaction செய்யுங்கள்.

    * லாட்ரியில் பரிசு விழுந்திருக்கிறது என்று வரும் இமெயிலில்
    ஒருபோதும் உங்கள் கிரெடிட் கார்டு தகவல்களை கொடுக்காதீர்கள்.

    விஜய் படத்தில் ஸ்ரீ தேவி கதாபாத்திரம் கசிந்தது!

    By: Unknown On: 17:06
  • Share The Gag
  • இந்திய திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் ஸ்ரீ தேவி தான். ரஜினி, கமல், சிரஞ்சீவி, அனில் கபூர் என்று அனைத்து மாநில முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயர் பெற்றவர்.

    திருமணத்திற்கு பிறகு திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த இவர், நீண்ட இடைவேளைக்கு பிறகு இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் நடித்தார். தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    இதில் இவர் விஜய்யை தத்தெடுத்து வளர்க்கும், வளர்ப்பு தாயாக நடிக்கிறார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    காய்கறிகளின் பயன்களும், பக்க விளைவுகளும்!

    By: Unknown On: 16:42
  • Share The Gag

  • உடல் நலத்தை பேணுவதில் காய்கறிகளின் பங்கு அதிகம். இருந்தபோதிலும் ஒரு சில காய்கறிகள் சிலரது உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் வகையில் குணநலன்களை கொண்டுள்ளது. அது பற்றிய விபரங்களை கீழே காண்போம்.

    கத்தரிக்காய் என்ன இருக்கு: விட்டமின் `சி', மற்றும் இரும்புச் சத்து

    யாருக்கு நல்லது: ஆஸ்துமாக நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட உடல் சூட்டை தக்கவைக்கும்.

    யாருக்கு வேண்டாம்: சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அரிப்பைத் தூண்டும். அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள் முதல் மூன்று மாதங்கள் சாப்பிடக்கூடாது.

    பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும் சளி, இருமலைக் குறைக்கும்.

    முருங்கைக்காய் என்ன இருக்கு: கொழுப்பு மற்றும் இரும்புச்சத்து மற்றும் விட்டமின் `ஏ', `சி'.

    யாருக்கு நல்லது: குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.

    யாருக்கு வேண்டாம்: முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. வாயுப்பிடிப்பை ஏற்படுத்தும்.

    பலன்கள்: நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும்.

    அவரைக்காய் என்ன இருக்கு: உயர்நிலை புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்து.

    யாருக்கு நல்லது: நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச் சிக்கல் உள்ளவர்களுக்கு.

    யாருக்கு வேண்டாம்: யாரும் இரவில் சேர்க்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் என்பதால் ஜீரணம் ஆகாது.

    பலன்கள்: உடலுக்கு தேவையான புரதச் சத்தினை அளிக்கவல்லது.

    பீர்க்கங்காய் என்ன இருக்கு : நீர்ச்சத்தும் தாது உப்புகளும்

    யாருக்கு வேண்டாம்: யாரும் இரவில் சாப்பிடக்கூடாது. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக் கூடாது. தலையில் நீர்க் கோத்துக்கொள்ளும்.

    பலன்கள்: உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

    புடலங்காய் என்ன இருக்கு: உயர்நிலை புரதம், விட்டமின் `ஏ', சுண் ணாம்புச்சத்து, கந்தகச்சத்து.

    யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.

    யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா, மூட்டுவலி, தலைவலி, சளி மற்றும் காய்ச்சல் உடம்பில் குத்தல் குடைச்சல் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

    பாகற்காய் என்ன இருக்கு: பாலிபெப்டு டைட் எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப் பொருள் நிறைந்துள்ளது

    யாருக்கு நல்லது: சர்க்கரை நோயாளிகளுக்கு

    யாருக்கு வேண்டாம்: வேறு அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது இதனை சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடிக்கும். அடிக்கடி சாப்பிட்டால் ஆண்மைக் குறைவு ஏற்படும்.

    பலன்கள்: தொற்று நோய்களை தடுக்கும். கிருமிகளை அழிக்கும். வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும்.

    சுரைக்காய் என்ன இருக்கு: நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து. இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.

    யாருக்கு நல்லது: எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம்

    யாருக்கு வேண்டாம்: சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு

    பலன்கள்: இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீத ளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.

    பூசணிக்காய் என்ன இருக்கு: புரதம், கொழுப்பு யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக்கூடாது

    யாருக்கு நல்லது: குழந்தைகளுக்கு. மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது

    பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும். வயிற்றுப் புண்களை ஆற்றும். உடல் எடையைக் கூட்டும். வெண்பூச ணியே நல்லது.

    கொத்தவரைக்காய் என்ன இருக்கு: நார்ச்சத்து

    யாருக்கு நல்லது: நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு.

    யாருக்கு வேண்டாம்: சிறுவர்கள், நோயுற்றோர் இதனை தவிர்ப்பது நல்லது. குறிப்பிடும்படியான சத்துக்கள் இல்லை. வாயுத் தொல்லை, லேசான நெஞ்சுவலியை உண்டாக்கும்.

    பலன்கள்: ருசி மட்டுமே வாழைக்காய்

    என்ன இருக்கு: கொழுப்புச் சத்து, விட்டமின் `இ'.

    யாருக்கு நல்லது: வயிற்றுப்புண், ரத்தமூலம் உள்ளவர்களுக்கு பிஞ்சாக சாப்பிட நோய் கட்டுப்படும்

    யாருக்கு வேண்டாம்: வாய்வு, இதய, மூட்டுவலியுள்ளவர்கள் சாப்பிடக்கூடாது

    பலன்கள்: உடலுக்கு உரம் அளிக்கும். மலச்சிக்கலை உடைக்கும்.

    காரட் என்ன இருக்கு : விட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள்.

    யாருக்கு நல்லது : அசிடிட்டி தொந்தரவு உள்ளவர்களுக்கு குழந்தைகளுக்கு. கர்ப்பிணிப் பெண்களுக்கு.

    யாருக்கு வேண்டாம்: குழந்தை பேறு இல்லாதவர்கள் அதிகம் சேர்க்க வேண்டாம். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.

    பலன்கள்: கண் பார்வைக்கு உகந்தது. உடல் பரும னாகாமல் காக்கும். காரட் சாறுடன் பத்து மிளகு சேர்த்து சாப்பிட்டுவர உடல் கழிவுகள் வெளியேறும்.

    பீன்ஸ் என்ன இருக்கு: புரதம், கார்போ ஹைட்ரேட், விட்டமின் ஏ, தாது உப்புகள்.

    யாருக்கு நல்லது: ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

    யாருக்கு வேண்டாம்: குடைச்சல், ஏப்பம், வயிற்று வலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். ஜீரணத் தொந்தரவு ஏற்படும்.

    பலன்கள் : பித்தம் தணியும், பார்வை தெளிவு, சருமப் பள பளப்புக்கு உதவும். வாயு நீக்கும்.

    பீட்ரூட் என்ன இருக்கு: க்ளூ கோஸ்

    யாருக்கு நல்லது: ரத்தச் சோகை உள்ளவர்கள் தொடர்ந்து 45 நாட்கள் பீட்ரூட் சூப் சாப்பிட்டு வர சோகை அடியோடு விலகும். வளரும் குழந்தைகள் அடிக்கடி சாப்பிட்டால் கண், நகம், பல் நன்கு வளரும்.

    யாருக்கு வேண்டாம்: சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக் கூடாது.

    பலன்கள்: ரத்தத்தை வளப் படுத்தும். சுறுசுறுப்பை அளிக் கும். மேனி நிறம் பெறும்.

    முள்ளங்கி (வெள்ளை) என்ன இருக்கு : நீர்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச் சத்து. யாருக்கு நல்லது: சீறுநீரகக் கல் அடைப்பு, பித்தப்பை கல் உள்ளவர்கள் வாரம் இரண்டு நாள் சாப்பிட்டுவர, கல் கரைந்து வெளியேறும்.

    யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா நோயாளிகளுக்கு.

    பலன்கள்: அதிகம் குளிர்ச் சியை தரும். வாயுவை வெளியேற்றும்.

    காலிஃபிளவர் என்ன இருக்கு: பொட்டாசியம், சோடியம், இரும்பு, பாஸ் பரஸ், மெக்னீசியம், விட்ட மின் ஏ, இ.

    யாருக்கு நல்லது: புற்று நோயால் அவதிப்படுபவர்களுக்கு. எதிர்ப்பு சக்தியைத் தரும். புற்றுநோய் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்.

    பலன்கள்: மலச்சிக்கலை போக்கும். உடலை இளைக்கச் செய்யும்.

    முட்டைக்கோஸ் என்ன இருக்கு : சோடியம், இரும்பு பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின் ஏ, இ.

    யாருக்கு நல்லது : சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நல்லது.

    யாருக்கு வேண்டாம்: பனி காலத்தில் ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடக்கூடாது. கருப்பையில் திசு வளர்ச்சி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

    பலன்கள்: ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். கிரேக்க நாட்டின் அந்தக் கால வயாக்ரா. மலச்சிக்கலை விலக்கிடும். தாது பலம் பெருகும். இளமையை தக்க வைக்கும்.

    அரிப்பு நோயை தடுக்க நாட்டு வைத்தியம்! அருமையானது..எளிமையானது..!

    By: Unknown On: 07:52
  • Share The Gag
  •         கொசுக்களை விரட்டுவதற்கு சருமத்தில் க்ரீம்களை தடவுவதால், ஒருவேளை இன்னும் அதிகமாக கொசுக்கடிக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்படலாம். குறிப்பாக வெப்பம் அதிகமாக இருக்கும் சமயத்தில் தூங்குவதற்கு முயற்சிக்கும் போது, சரும அரிப்பு காரணமாக நாம் சொரிய ஆரம்பிக்கிறோம்.

    உடனடியாக அரிப்பிலிருந்து சுகம் கிடைப்பதற்கு, பாதிக்கப்பட்ட பகுதியை சொரிவதால், அந்த இடத்தில் இன்னும் வீக்கம் அதிகமாகிறது. இதனால் மேலும் சருமத்தில் அரிப்பு அதிகமாகி இரத்தம் வரும் வரை சொரியும் சமயத்தில், அழுக்கான விரல் நகங்களால் சருமத்தில் கீறல் ஏற்பட்டு, நோய்த்தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து உருவாகும்.

    ஆகவே கொசு கடிக்கும் போது, எரிச்சலை உண்டாக்கும் அரிப்பிலிருந்து விடுதலை பெற இதோ சில ஆரோக்கியமான வழி முறைகள் உள்ளன. இவை அதிகமாக நாட்டு மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகின்ற நாட்டு வைத்தியக் குறிப்புகள் ஆகும்.

    இவற்றில் அறிவியல் ரீதியான ஆதாரங்களும் அடங்கியுள்ளன. மேலும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி பலரும் பயனடைந்துள்ளனர். ஆகவே கொசுக்கடியால் அவஸ்தைப்படுவதற்குப் பதிலாக, இவற்றை பின்பற்றுவதன் மூலம் சுகம் பெறலாம்.

    ஆல்கஹால் :

    பீர் அல்லது மற்ற மதுவை அருந்துவதால், சருமத்தில் ஏற்படும் அரிப்பை மறந்து விடலாம். ஆனால் இந்த வகையான ஆல்கஹாலைப் பற்றி இங்கு பேசவில்லை. முதலுதவி பெட்டியிலிருந்து கொஞ்சம் ஆல்கஹாலை எடுத்து, கொசுக்கடியால் பாதிக்கப்பட்ட பகுதியில் தேய்த்து சுத்தம் செய்வதால், அரிப்புத் தொல்லையிலிருந்து நிவாரணம் பெற முடியும். ஒருவேளை ஆல்கஹால் இல்லாவிட்டால், சோப்புத் தண்ணீரால் கழுவுவதன் மூலம் பயன் பெற முடியும்.

    எலுமிச்சை சாறு :

    எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான ஆன்டி இச், ஆன்டிபயோட்டிக் மற்றும் ஆன்டிமைக்ரோபயல் ஆகும். ஆகவே எலுமிச்சையைப் பிழிந்து, அதன் சாற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுவதன் மூலம், அரிப்பைக் குறைத்து தொற்று ஏற்படாமல் தடுக்கலாம். அதிலும் இதை வீட்டின் உள்ளே பயன்படுத்துங்கள். ஏனென்றால் இதனை தேய்த்துக் கொண்டு, வெயிலில் சென்றால், சூரியக்கதிர்களின் தாக்கத்தால், சருமத்தில் புண்கள் ஏற்பட்ட வாய்ப்பு உண்டு.

    ஐஸ் கட்டி :

    சரும அரிப்பு காரணமாக ஏற்படக்கூடிய வீக்கம் மற்றும் சரும மதப்பு தன்மையைக் குறைப்பதற்கு ஐஸ் கட்டி பெரிதும் உதவும். அதிலும் கொசுக்கடி அதிகமாக இருக்கும் சமயத்தில், மிகவும் குளிர்ச்சியான தண்ணீரில் குளியுங்கள் அல்லது குளிர்ச்சி நிறைந்த தண்ணீருள்ள குளத்தில் மூழ்கிக் குளியுங்கள்.

    பேக்கிங் சோடா மற்றும் விட்ச் ஹாசில் :

    செலவில்லாத கொசுக்கடித் தீர்வுக்கு, இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து பேஸ்ட் செய்து, கொசுக்கடி ஏற்பட்ட பகுதியில் தடவி, 15 நிமிடங்கள் உலர விடவும். இதனால் பேக்கிங் சோடாவில் உள்ள ஒரு காரத்தன்மையான (அல்கலைன்) பதார்த்தம் இருப்பதால், இது சருமத்தின் பிஎச் அளவை நடுநிலைப்படுத்த உதவி, வீக்கம் குறைய வாய்ப்புண்டு. விட்ச் ஹாசில் கிடைக்காவிட்டால், அதற்குப் பதிலாக தண்ணீர் பயன்படுத்தலாம்.

    டீட்ரீ ஆயில் :


    இது வீக்கத்தைக் குறைக்கும் ஒரு இயற்கை மருந்து என்பதால், பரு மற்றும் சருமத்தில் ஏற்படும் நச்சுப் படலம் ஆகியவற்றுக்கு சிறந்தது. அதிலும் சொரிவதால் ஏற்படக்கூடிய வீக்கத்தைக் குறைப்பதற்கும், நோய்த் தொற்றுகளைத் தடுப்பதற்கும் இந்த எண்ணெய் உதவும்.

    டூத் பேஸ்ட் :

    கொசுக்கடியால் சருமத்தில் சிறு சிறு வெள்ளைக் கொப்புளங்கள் ஏற்பட்டால், அதன் மீது கொஞ்சம் டூத் பேஸ்ட் தடவுங்கள். இதனால் அரிப்பிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

    உப்பு :

    கொசுக்கடியிலிருந்து சீக்கிரம் நிவாரணம் பெறுவதற்கு, உப்புடன் சிறிது தண்ணீர் சேர்த்து, பாதிக்கப்பட்ட இடத்தில் லேசாக தடவுங்கள். அரிப்பிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும். ஒருவேளை கடற்கரைக்கு அருகில் இருந்தால், உப்பு நீரில் நீச்சலடியுங்கள், சிறந்த பலனைப் பெறுவீர்கள்.

    கற்றாழை :

    சொரியும் போது சருமத்தில் கீறல்கள் ஏற்பட்டு வலி உண்டாகும். ஆனால் கற்றாழையில் உள்ள குளிர்விக்கும் தன்மை, இந்த வேதனையிலிருந்து சுகம் பெற உதவும்.

    ஆப்பிள் சீடர் வினிகர் :

    குளியல் தொட்டி நீரில், சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து குளிப்பதால், வெயிலால் ஏற்படும் எரிச்சல் குறைவது மட்டுமன்றி, இதில் இருக்கும் ஒருவகை ஆசிட் சரும அரிப்பைத் தணிப்பதற்கும் வழி செய்யும். ஒருவேளை தண்ணீரில் கலந்து குளிக்க முடியாவிட்டால், ஒரு காட்டன் உருண்டையில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் நேரடியாக தடவுவதால் பயன் பெறுவீர்கள்.

    வாழைப்பழத் தோல் : 


    வாழைப்பழத் தோலில் உள்ள இனிப்புப் பகுதி கொசுக்கடியிலிருந்து நிவாரணம் பெற உதவும். எனவே வாழைப்பழத் தோலின் உள் பகுதியை பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்ப்பதால் சுகம் பெறுவீர்கள்.

    எச்சில் :

    விரலில் சிறிது எச்சிலைத் தொட்டு, அதை கொசுக்கடி ஏற்பட்ட இடத்தில் லேசாக தடவி உலரவிட்டாலும் சுகம் கிடைக்கும்.

    உள்ளங்கையால் லேசாக அடித்தல் :

    இது கொஞ்சம் வழக்கத்திற்கு மாறானதாகத் தோன்றலாம். ஆனால், கொசுக்கடி ஏற்பட்ட இடத்தில் லேசாக அடிக்கும் போது, மூளை நரம்புகளுக்கு வலி எது? அரிப்பு எது? என்ற குழப்பம் ஏற்படுவதால், அரிப்பிலிருத்து சுகம் பெற முடியும்.

    அரிப்பு நோய் என்பது சராசரி வாழ் மனிதனை பாடாய் படுத்திவிடும். அதற்கு தகுந்த மருத்துவம் பார்க்காமல் இருந்து விட்டால் பக்க விளைவுகள் நம்மையே அழிக்கும் நிலைமைக்கும் கொண்டுபோய் விடும். அத்துடன் அரிப்பு நோயானது தன்னம்பிக்கையையும் குறைத்துவிடும்.

    மருந்தில்லா மருத்துவம் என்பது போல் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களை (மேற் கூறப்பட்டவை) தகுந்த அளவு முறையாக பயன்படுத்தி வந்தாலே அரிப்பு நோயில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

    முகத்தில் ரோம வளர்ச்சி அதிகமாக இருக்கிறதா?

    By: Unknown On: 07:35
  • Share The Gag
  • Hair growth on the face is more. Pli done in vain. Is there a way to fix this problem in a natural way?

    முகத்தில் ரோம வளர்ச்சி அதிகமாக இருக்கிறது. ப்ளீச் செய்தும் பலனில்லை. இயற்கையான முறையில் இந்தப் பிரச்னையை சரி செய்ய வழி  இருக்கிறதா?

    வழிகாட்டுகிறார் அழகுக்கலை ஆலோசகர் ராஜம் முரளி...


    டீன் ஏஜ் பிள்ளைகள் அதிகம் சந்திக்கும் பிரச்னை இது. ஹார்மோன் குறைபாடு காரணமாக சிலருக்கு ரோம வளர்ச்சி அதிகம் இருக்கும். உடனடியாக  டாக்டரிடம் கன்சல்ட் செய்து கொள்ளுங்கள். ப்ளீச் செய்வதால் முகத்தில் உள்ள ரோமத்தின் நிறம் மாறுமே தவிர, நிரந்தரத் தீர்வு கிடைக்காது. எந்தக்  காரணத்துக்காகவும் ரிமூவர் கொண்டு ரோமம் நீக்க முயற்சி செய்ய வேண்டாம்.

    பல மடங்கு அடர்த்தியுடன் முடி வளர்ந்து முகத்தை அசிங்கமாக்கிவிடும். ரோமத்தை எளிதாக நீக்க இயற்கையான வழிமுறை இருக்கிறது.  குப்பைமேனி இலை, வசம்பு, வேப்பந்தளிர், விரலி மஞ்சள், கோரைக்கிழங்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து, உலர வைத்து பொடியாக்கிக்  கொள்ளுங்கள்.

    இந்தக் கலவையில் 2 டீஸ்பூன் எடுத்து திக் பேஸ்ட்டாக ஆக்கிக் கொள்ளுங்கள். முகத்தில் தடவுங்கள். கொஞ்சம் உலர்ந்த உடன் ப்யூமிஸ் ஸ்டோன்  வைத்து மேல் நோக்கி ஸ்க்ரப் செய்வது போல செய்யுங்கள். வாரம் ஒருநாள் செய்து வந்தால் ரோமங்கள் நீங்கி, முகம் பளிச் ஆகிவிடும்!