Monday, 1 September 2014

வாய் துர்நாற்றத்தை தடுக்கும் வாசனைப் பொருட்கள் எவை?

By: Unknown On: 23:14
  • Share The Gag
  • நல்ல சுவையான உணவுகளை உண்ட பின், வாயிலிருந்து வரும் நாற்றத்தை தாங்கவே முடியாது. ஏனெனில் அதில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதால் நாற்றம் ஏற்படுகிறது. வீட்டில் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் ஒரு சில பொருட்களை மெல்லலாம்.

    • உணவு உண்ட பின், பாக்குகளை போடாமல் சமையலறையில் இருக்கும் ஏலக்காயை வாயில் போட்டு 20 நிமிடம் மென்றால், துர்நாற்றம் இல்லாமல் இருக்கும்.

    • கொத்தமல்லியை சாப்பிட்டால் வாய் நாற்றம் போகும் என்பது நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் கொத்தமல்லியை உணவுக்கு பின் சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

    • உணவில் காரம் மற்றும் மணத்திற்கு பயன்படும் பொருளான கிராம்பு மற்றும் லவங்கம், வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் கிராம்பை சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் சரியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய சிறப்பான கிராம்பு துர்நாற்றத்தை மட்டும் நீக்காமல், தொண்டை கரகரப்பையும் சரிசெய்யும்.

    • நிறைய உணவில் மேலே அலங்கரிக்க புதினாவை எதற்கு பயன்படுத்துகிறோம் என்று தெரியுமா? உணவு நன்கு கலராக இருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும் என்பதால் தான்.

    உங்களால் முடியுமா பாருங்கள் :)

    By: Unknown On: 22:37
  • Share The Gag
  • -
    -
    -
    -
    -
    -
    -
    -
    --
    -

    -
    1.  அதிகமா ஆசைப்படுற் ஆம்பளையும் அதிகமா கோவப்படுற நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை
    2.  கூட்டி கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்
    3.  நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி
    4.  இது எப்பிடி இருக்கு (சூப்பர்)
    5.  இப்போ என்ன செய்வே இப்போ என்ன செய்வே,
    6.  பேரக் கேட்டாலே சும்மா அதிருதுல
    7.  நான் எப்ப வருவே எப்பிடி வருவேங்கறது முக்கியம் இல்ல ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வந்துருவேன்.
    8. சீவிடுவேன்
    9.  என் வழி தனி வழி
    10. கண்ணா பன்னிங்க தான் கூட்டமா வரும். ஆனா சிங்கம் சிங்கிளா தான் வரும் 

    நாம் சொல்லும் எட்டு விதப் பொய்கள்!

    By: Unknown On: 20:59
  • Share The Gag
  • பொய் பேசுவது அன்றாட வாழ்க்கையில் இணை ந்துள்ள ஒரு பகுதி யாகி விட்டது. தங்கள் குழந் தைகளை மிகப் புத்தி சாலிகள் என்று சொல்வ திலிருந்து அது தொடங் குகிறது. நமது வாழ்க்கை யே உண்மைகளும், பொய் களும் கலந்து பின்னப்பட்டவை. அதே வேளையில் உண் மைகளைப் பொய்யிலிருந்து வேறு படுத்திப் பார்க்க முடியாமல் போகும் சந்தர்ப்பங்களும் நேரும் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

    “பொய்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த

    நன்மை பயக்கும் எனின்”

    என்ற குறள் மூலம் “குற்ற மில்லாத நன்மை விளை விக்கும் எனில், பொய் யான சொல்லும் உண்மை என்றே கருதப்படும்” என் று திருவள்ளுவர் கூறி இருக்கிறார். இதைச் சொ ன்னபின், எந்தக் குறிப்பி ட்ட ஒரு சந்தர்ப்பத்தில் பொய் சொல்லப்படலாம் என்ப தற்குரிய நியாயங்களையும் அறிய வேண்டிய அவசியம் ஏற்படு கிறது.

    ஹிப்போ அகஸ்டின் பொய்களை எட்டு விதமாக வகைப்படுத்து கிறார்.       1. மதபோதனையின் போது சொல் லப்படும் பொய்கள்.

    2. யாருக்கும் உதவிடாமல் மற்றவ ர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பொய்கள்

    3. மற்றவர்களுக்குத் தீங்கு விளை வித்து, ஒரு சிலருக்கு உதவிடும் பொய்கள்.

    4. பொய் சொல்வதில் கிடைக்கும் மனமகிழ்ச்சிக்காகக் கூற்படும் பொய்கள்.

    5. மற்றவர்களின் திருப்திக்கா கக் சொல்லப்படும் பொய்கள்.

    6. யாருக்கும் தீங்கிழைக்காத, ஆனால் யாருக்கோ உதவி டும் பொய்கள்.

    7. யாருக்கும் தீங்கிழைக்காது ஆனால் யாரையோ காப்பாற் றுவதற்காகச் சொல்லப்படும் பொய்கள்.

    8. யாருக்கும் தீங்கிழைக்காத ஆனால் யாருடைய தூய்மையை யோ பாதுகாக்கச் சொல்லப்படும் பொய்கள்       பொய் என்ற வார்த்தை ஒரு சமூக ஆர்வல ரைப் பொறுத்த வரை, “மிகைப் படுத்தப்பட்ட நோக்கத்தைக்” குறிக்கிறது. ஒரு அரசியல் வாதியைப் பொறுத்தவரை, அவர் “தனது கனவுகளை, விற்பனை செய்வதைக்” குறிக்கிறது. சாதார ண மனிதனுக்கு, அது சந்தர்ப்பத்தின் தேவையைப் பொறுத்ததாக இருக்கிறது.

    யாரும் பொய் சொல்லவே கூ டாது எனத் தடை விதிக்கப்பட் டால் நமது அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்துப் போகும். ஊடகங் களில் நாம் காணும் ஆபூர்வ விளம்பரங் களிலிருந்து, நமது சினிமா நட்சத்திரங்கள், அதிகா ரிகள், அரசியல்வாதிகளுக்குச் சூட்டப்படும் புகழ் மாலைகள், பாராட்டுக்கள் எல்லாம் மாயமாகிவிடும்.   இலக்கியங்கள், மதங்கள், அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல்வாதி கள் தீட்டும் சொற் சித்திரங்கள் எல்லாம் வறட்சியைச் சந்திக் கும். இதனால் வாழ்க்கையே, சுவையும் சுறுசுறுப்பும் இல்லா மல் போய்விடும். ஆகவே, பொய் சொல்வது அல்ல பிரச் சினை. “எப்பொழுது, எந்த இடத்தில் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று வரையறை செய்து கொள்வதுதான் பிரச்சினை” என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஒரு தனிமனிதனின் மூளை அமைப்பில் உள்ள ஒரு கூறு சரியாகச் செயல்படாமல் போனால், தன் னை அறியாமலே அவர் பொய் யுரைகள் கூறுவதற்கு அது வழி வகுக்கும். இப்படிப்பட்ட நிலை யை மருத்துவ அறிவியல் மைதோமேனியா Mythomania எனக் கூறுகிறது. அத்துடன் “ பொய் சொல்லும் ஒருவர் எப் பொழுதுமே பொய் சொல்லிக் கொண்டிருப்பாரா? என்ற கேள் வி எழுகிறது. அது அவசி யமில்லை.   பொய் சொல்வது ஒரு அறிவாற்றலின்படியான செயல். அதாவது ஒரு மனிதர் உணர்ந்தே அந்தப் பழக்கத்தை வைத்திருக்கிறார். அதன்படி அவர் எப்போது, எங்கே பொய் சொல்வது என்பதைத் தன் விருப்பத்திற்கேற்றபடி வைத்துக் கொள்கிறார். அது பெரும்பாலும் ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே இருக்கும்.

    உணவு ::: கொஞ்சம் உண்மைகள் + தெளிவுகள் !

    By: Unknown On: 20:59
  • Share The Gag
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”, உண்மைதான், இவ்வுலகில் நிறைவான வாழ்வு வாழ ஆரோக்கியம் மிக மிக இன்றியமையாதது. ஆரோக்கியமற்ற மனிதரால் விரும்பினாலும் மகிழ்சியாக வாழ முடிவதில்லை. அவர் தானும் துன்புற்று தம்மை நேசிப்பவர்களையும் வருத்தத்தில் ஆழ்த்துகின்றார்.

    26 - health foodஇன்றைய நவ‌நாகரீக யுகத்தில் விளைந்த நவீன வாழ்வியல் முறைகளும், விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சிகளும் மனித வாழ்வை பல வழிகளில் முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்சென்றுள்ளன என்பது உண்மை, எனினும் நோயற்ற வாழ்வை அவை நமக்குத் தந்துள்ளன என நம்மால் நிறைவு கொள்ள முடிவதில்லை காரணம், நாளும் ப‌ல்கிப்பெருகி வரும் எண்ணற்ற நோய்கள், (பிறந்த குழந்தைகளுக்கு பெயர் வைப்பதைப்போல அல்லவா விஞ்ஞானிகள், நாளும் ஒரு நோயைக் கண்டுபிடித்து புதிது புதிதாய் அவற்றுக்கு பெயர் வைத்துக் கொண்டு வருகின்றனர்) !!?




    இதற்கிடையில் பெரும்பாலானோருக்கு அவர்களின் உணவால்தான் பெரும் வியாதிகள் வருகிற்து. பொதுவாக ஒவ்வொருவரும் பசித்தால் மட்டுமே உண்ணவேண்டும்.*உண்பதற்கு அரைமணி நேரம் முன்பும்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍பின்பும் நீர் அருந்தக்கூடாது. தேவைப்பட்டால் மட்டுமே சிறிதளவு அருந்தலாம்.*உண்ணும் பொழுது கண்களை மூடி, இதழ்களை மூடி, இதழ் பிரிக்காமல் மென்று கூழ் போல் அரைத்து பின் விழுங்க வேண்டும்.*தொலைகாட்சி பார்த்தல், புத்தகம் படித்தல், செல்போன் பேசுதல், கால்களை தொங்க விடுதல் ஆகிய கவனச் சிதறல்கள் உண்ணும் நேரத்தில் கூடாது.*முடிந்தவரை வீட்டு உணவு ( நம்மேல் அக்கரை கொண்டவர்கள் சமைத்த உணவை ) உட்கொள்ளவும். 

    அதே சமயம் உணவுகளில் பல வகைகள் உள்ளன. இருந்தாலும் சுலபமாகப் புரிந்துகொள்வதற்காக நாம் சில வகைகளாகப் பிரித்துள்ளோம்.

    முதல் வகை:

    இயற்கையாக, சுவையாக இருக்கும், சமைக்காத உணவுகள், அனைத்துப் பழங்கள், தேங்காய், வெள்ளரிக்காய், கேரட் போன்றவை சமைக்காமல் அதே சமயம் சுவையாக இருக்கும் உணவுகள் இவை அனைத்தும் முதல் வகை உணவுகள். இவற்றில் சுவை 100%இருக்கும். எனவே 100 மதிப்பெண்கள். பிராண சக்தி 100% இருக்கும். எனவே மேலும் 100 மதிப்பெண்கள். சத்துப்பொருள் 100% இருக்கும். எனவே மீண்டும் 100 மதிப்பெண்கள். ஆக மொத்தம் முதல்வகை உணவுக்கு 300 மதிப்பெண்கள். எந்த உணவைச் சமைக்காமலும், அதே சமயத்தில் சுவையாக பச்சையாகச் சாப்பிட முடியுமோ, அவையனைத்தும் முதல் வகை உணவுகளில் வரும்.

    இரண்டாவது வகை:

    சமைக்காத ஆனால் சுவையில்லாத உணவுகள் இந்த வகையில் சேரும். உதாரணமாக முளை கட்டிய தானியங்கள், சுவையில்லா பழங்களும், காய்கறி வகைகளும். இந்த இரண்டாம் வகை உணவுகளில் பிராணன் 100% இருக்கும். எனவே 100 மதிப்பெண்கள். சத்துப்பொருள்கள் 100% இருக்கும். எனவே 100 மதிப்பெண்கள். ஆனால் சுவை இருக்காது. எனவே அதற்கு 0.மதிப்பெண்கள். எனவே இந்த வகை உணவுகளுக்கு மொத்தம் 200 மதிப்பெண்கள். எனவே இவை இரண்டாம் தர உணவுகள் என நாம் பிரிக்கலாம். உதாரணம் முளை கட்டிய தானியங்கள்.

    மூன்றாம் வகை:

    சமைத்த காய்கறிகள், கீரைகள், தானியங்கள் அனைத்தும் இந்த மூன்றாவது வகை உணவுகளாம். ஓர் உணவை சமைப்பதால் (வேக வைப்பதால்) அந்த உணவிலுள்ள சுவை 50% குறைகிறது. எனவே சுவைக்கு 50 மதிப்பெண்கள். மேலும் சத்துப்பொருள் பாதி குறைந்து விடுகிறது. எனவே மீண்டும் 50 மதிப்பெண்கள். பிராணசக்தியும் பாதி குறைந்து விடுகிறது. எனவே மேலும் ஒரு 50 மதிப்பெண்கள். ஆக மொத்தம் இவ்வகை உணவுகளுக்கு 150 மதிப்பெண்கள் தரலாம். உதாரணம், இட்லி, தோசை, பொங்கல், ஊத்தப்பம், சாப்பாடு, சப்பாத்தி ஆகிய நாம் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் அனைத்து சமைத்த உணவுகளும்
    .
    நான்காவது வகை:

    அசைவ உணவுகள் இந்த நான்காவது வகையில் வரும். அசைவ உணவில் சத்துப் பொருள்100% இருக்கும். எனவே 100 மதிப்பெண்கள். பிராணன் ஒன்றுமே இருக்காது. எனவே 0மதிப்பெண். சுவை இருக்காது. எனவே 0.மதிப்பெண். ஆக மொத்தம் அசைவ உணவுகளுக்கு 100மதிப்பெண்கள். எனவே அசைவ உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது அல்லது குறைப்பது நல்லது. ஆனால் சில நாடுகளில், பாலைவனப் பிரதேசங்களில், வெப்பம் அதிகமுள்ள நாடுகளில், தாவரவகை உணவுகள் கிடைக்காத காரணத்தினால் அசைவ உணவுகள் சாப்பிட வேண்டிய சூழ்நிலை உள்ளது. உடல் ரீதியாக அசைவ உணவைச் சாப்பிடுவதால் உடலுக்கு எந்தத் தீங்கும் கிடையவே கிடையாது. ஆனால் ஆன்மிக ரீதியாக ஓர் உயிரைக் கொல்வது பாபம் என்ற அடிப்படையில் நம் மனத்தில் ஓர் எண்ணம் தோன்றிய பிறகு நாம் சாப்பிட்டால் அந்த எண்ணம் நோயை உண்டாக்கும். எனவே அசைவ உணவைச் சாப்பிடுபவர்கள் இதைச் சாப்பிட்டால் பாபமில்லை என்ற எண்ணத்துடன் மனத்திலே எந்தவொரு குழப்பமும் இல்லாமல் சாப்பிடும் பொழுது சரியாக ஜீரணமாகிறது.

    அதே சமயம் மனத்தில் 50/50 சாப்பிடலாமா? வேண்டாமா? அல்லது சாப்பிட்டால் நல்லதா? கெட்டதா? என்ற எண்ணத்துடன் குழப்பத்துடன் சாப்பிடும் பொழுது அது நோயை உண்டாக்குகிறது. இஃது அசைவத்திற்கு மட்டுமன்று. எந்த ஓர் உணவைச் சாப்பிட்டாலும் உடம்புக்கு ஆரோக்கியமென்ற தெளிவான திடமான நம்பிக்கையுடன் சாப்பிடும்பொழுது அது மருந்தாக வேலை செய்கிறது. அந்த உணவு நமக்கு நோய் ஏற்படுத்துமோ என்ற எண்ணத்துடன் சாப்பிடும்பொழுது அது நோயை உண்டாக்குகிறது. இறுதியாக அசைவ உணவு சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. இது நான்காவது வகை உணவு.

    ஐந்தாவது வகை:

    போதைப் பொருள்கள் (லாகிரி வஸ்துகள்) இவை உணவே அல்ல. சில பொருள்களை நாம் உணவுபோல் சாப்பிடுகிறோம். ஆனால் அவை உணவல்ல. போதைப்பொருள்கள். உதாரணமாக டீ, காபி, பீடி, சிகரெட், சாராயம், பீடா, கஞ்சா, அபின், பாக்கு ஆகியவை அனைத்தும் உணவுப் பொருள்களே அல்ல. அவை போதைப் பொருள்கள். உணவுப் பொருளுக்கும், போதைப் பொருளுக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பதென்றால் எந்தவொரு பொருளை மூன்று நேரமும் சாப்பிட்டு நம்மால் உயிரோடு இருக்க முடியுமோ இவையனைத்தும் உணவுப் பொருள்கள். எந்தப் பொருளை மூன்று நேரமும் அது மட்டும் சாப்பிட்டு உயிரோடு இருக்க முடியாதோ, அவை போதைப் பொருள்கள். தேங்காயை மட்டும் சாப்பிட்டு ஒரு மனிதன் உயிரோடு இருக்க முடியும்; அஃது உணவு. சிகரெட் மட்டும் புகைத்துக் கொண்டு ஒரு மனிதன் உயிரோடு இருக்க முடியுமா? அது போதைப் பொருள். அசைவம் சாப்பிட்டு ஒருவர் உயிரோடு இருக்க முடியும். எனவே அசைவம் என்பது ஓர் உணவு. கஞ்சா குடித்துக்கொண்டே ஒருவர் உயிரோடு இருக்க முடியுமா? இருக்க முடியாது. எனவே அது போதைப் பொருள். உணவு என்பது நம் உடலில் வெளியிலிருந்து சத்துப் பொருள்களை உடலுக்கு எடுத்துச் செல்லும் ஒரு பொருள். போதைப் பொருள் என்பது உடலிலேயே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சத்துப் பொருள்களை எடுத்துச் செலவு செய்யும் ஒரு பொருள்.

    எனவே போதைப் பொருளைப் பயன்படுத்தும் பொழுது சில குறிப்பட்ட நேரம் மட்டும் உடலில் அதிகமான தெம்பு இருக்கும். பிறகு நாம் வலுவிழந்து காணப்படுவோம். ஏனென்றால் நம் உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். சில சத்துப்பொருள்களை இந்தப் போதைப்பொருள் எடுத்துச் செலவு செய்து நம்மை வீரியமாக இருக்கச் செய்கிறது. ஆனால் அது நம் உடம்பிற்கு உணவை ஒரு போதும் கொடுப்பதில்லை. எனவே தயவு செய்து போதைப் பொருள்களைச் சாப்பிடக் கூடவே கூடாது. “நான் பல மருத்துவரிடம் சென்றேன். பல வருடங்களாக சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன். ஆனால் எந்த நோயும் குணமாகவில்லை” என்று மருத்துவத்தையும், மருத்துவர்களையும் குறை சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் பயன்படுத்தும் போதைப் பொருள்களைப் பற்றி அவர்கள் வெளியே சொல்வதே கிடையாது. எனவே அசைவம் சாப்பிடுவதை விட டீத்தூள், காபித்தூள் சாப்பிடுவது கெடுதல் அதிகம்.

    மேலே கூறப்பட்டுள்ள உணவு வகைகளைப் புரிந்து கொண்டு நீங்கள் எந்தவகை சாப்பிடுகிறீர்கள்? என்று புரிந்து கொள்ளுங்கள். முடிந்தவரை முதல் வகை உணவை நோக்கி உங்கள் பயணம் இருக்கட்டும். சில இயற்கை மருத்துவர்கள் மூன்று நேரமும் இயற்கை உணவு சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்கள். இஃது எல்லாராலும் கடைப்பிடிக்க முடியாது. நீங்கள் ஒரு மாதம் தொடர்ந்து மூன்று வேளையும் இயற்கை உணவு சாப்பிட்டு வந்தால் ஒரு மாதம் முடிந்தவுடன் இட்லியைப் பார்த்தால் நாக்கில் எச்சில் ஊறும். என்ன செய்வீர்கள்? எனவே நம் சிகிச்சையில் ஒரு சிறிய யோசனை உங்களுக்குத் தருகிறோம்.

    காலையில் சமைக்காத உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். நம் உடலுக்குத் தேவையான பிராண சக்தியும், தாது உப்புகளும் இயற்கையான முறையில் காலையில் உணவு மூலமாக நம் உடலுக்குச் சென்று விடும். பகல் உணவு சமைத்த உணவு. ஆசை தீர எது எதுவெல்லாம் பிடித்ததோ அனைத்தையும் சாப்பிடுங்கள். இது நம் மனத்திற்கு ருசிக்காக சாப்பிட்டுக் கொள்ளலாம். இரவு நேரங்களில் அதிகமாக சாப்பிடக்கூடாது என்பதற்காக அரிசிக் கஞ்சி, கோதுமைக் கஞ்சி போன்ற கஞ்சி, ஏதாவது ஒரு காய்கறி பொரியலை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த முறையில் சாப்பிடுவதால் இயற்கை உணவு சாப்பிட்டது போலவும் இருக்கும். ஆசை தீர சமைத்த உணவு சாப்பிட்டது போலவும் இருக்கும். கஞ்சி என்ற நோயைக் குணப்படுத்தும் மருந்தைச் சாப்பிட்டது போலவும் இருக்கும். நமக்கு எல்லா வகையிலும் சத்துப்பொருள்கள் உள்ளே சென்று நாம் என்றும் ஆரோக்கியமாக இருக்கவும், சிறந்த வழியையும் கொடுக்கும்.

    காலையில் இராஜா போல சாப்பிட வேண்டும். பகலில் மந்திரி போல சாப்பிட வேண்டும். இரவு பிச்சைக்காரனைப் போல சாப்பிட வேண்டும் என்று பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். இது தான் ஆரோக்கியத்திற்கான சரியான வழி. ஆனால் நாம் காலையில் பிச்சைக்காரனைப் போல இரண்டு தோசை, இரண்டு இட்லி என்று அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு அலுவலகத்துக்கு ஓடுகிறோம். பகலில் மந்திரியைப் போல அளவாக சாப்பிடுகிறோம். இரவு இராஜாவைப் போல அனைத்து உணவுகளையும் மொத்தமாக அள்ளிச் சாப்பிடுகிறோம். நமக்கு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணமே இரவு அதிகமாக சாப்பிடுவதுதான். எனவே காலை நேரங்களில் நம் வயிற்றில் ஜீரணசக்தி அதிகமாக இருக்கும்,

    எனவே காலை உணவை தயவு செய்து திருப்தியாக, நிறை அமைதியாக, ஆசை தீர சாப்பிடுங்கள். பகல் உணவு அளவாக இருக்கட்டும். இரவு முடிந்தவரை அளவைக் குறையுங்கள். ஏனென்றால் இரவில் நமக்கு உழைப்பு குறைவு. சூரியனும் கிடையாது. நம் உடலில் ஜீரணம் ஆக வேண்டுமென்றால் வெப்பம் இருக்க வேண்டும். பகலில் நாம் உழைக்கிறோம், நடக்கிறோம், ஓடுகிறோம், வேலை செய்கிறோம், எனவே உழைப்பு மூலமாக உடலுக்கு உஷ்ணம் கிடைக்கிறது. மேலும் சூரியன் இருக்கும்பொழுது இயல்பாகவே வெப்ப சக்தி நம் உடலுக்குள் புகுகிறது. அதனால் பகலில் அதிகமாக சாப்பிடுங்கள். இரவில் குறைவாக சாப்பிடுங்கள்.

    எவ்வளவு சாப்பிட வேண்டும்?

    பலருக்கு இந்த விஷயத்தில் மிகப்பெரும் சந்தேகம் எப்பொழுதுமே இருக்கும். காலையில் எவ்வளவு சாப்பிட வேண்டும், பகலில் எவ்வளவு சாப்பிட வேண்டும், இரவில் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று இந்த அளவில் குழப்பம் ஏற்படும்பொழுது நாம் ஒரு மருத்துவரிடம் செல்கிறோம். குறிப்பாக டயட்டீசியனிடம் சென்றால் அவர் நமக்கு அறிவுரை கூறுவார். காலையில் நான்கு சப்பாத்தியும், ஒரு கப் தயிரும் சாப்பிடுங்கள். இரவு ஐந்து இட்லி சாப்பிடுங்கள், பகலில் 750 மி.கி. சாதமும் 350 மி.லி. குழம்பும் சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுப்பார். சாப்பிடும்பொழுது மி.கி., மி.லி. பார்த்தா சாப்பிட முடியும்? சாப்பிடும்பொழுது நாம் பக்கத்தில் தராசு வைத்துக் கொள்ள முடியுமா? ஒன்று செய்யுங்கள், இனிமேல் பகலில் சாப்பிடும்பொழுது பக்கத்தில் தராசு வைத்துக் கொள்ளுங்கள். 750 மி.கி. சாப்பாட்டை அளந்து தட்டில் போடுங்கள். இது சாத்தியமாகுமா?

    மருத்துவர்கள் காலையில் 4 சப்பாத்தி சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுக்கிறார்களே, நீங்கள் வீட்டில் எல்லா வேலையும் செய்யும் பெண்மணியா? அல்லது எல்லா வேலைக்கும் ஆள் வைத்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டு சும்மா இருக்கும் பெண்மணியா என்று கேட்டார்களா? டயட் எழுதித் தருவதற்கு முன்பாக நீங்கள் கூலி வேலை செய்யும் நபரா? அல்லது கம்ப்யூட்டர் என்ஜினியரா என்று கேட்டார்களா? ஒவ்வொரு மனிதனுக்கும் வேலையின் அளவு, உடல் எடை, மனத்தில் தெம்பு, சுபாவம், கிளைமேட், இயற்கையின் அளவு முறை, நாடு, வயது, இடம், ஊர், ஆகியவற்றைப் பொருத்து உணவின் அளவு மாறும். ஒரு நாள் கட்டடவேலைக்குச் சென்று நாள் முழுவதும் கற்களைத் தூக்கும் ஒருவர் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று யோசியுங்கள். அதே நபர் அடுத்த நாள் தன் நண்பரின் ஏசி காரில் பயணம் செய்யும்பொழுது அவர் எவ்வளவு சாப்பிட வேண்டும்? உலகத்தில் யாருமே இன்று செய்வதைப் போல அடுத்த நாள் வேலை செய்வது கிடையாது. அப்படி இருக்கும்பொழுது ஒருவர் எவ்வளவு சாப்பிட வேண்டுமென்பதை முதலிலேயே எழுதிக் கொடுக்க முடியுமா?

    உலகத்தில் எவ்வளவு பெரிய சயன்டிஸ்ட்டாக இருந்தாலும் எவ்வளவு பெரிய மருத்துவராக இருந்தாலும் அடுத்த வேளை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை அவருக்கு அவரே எழுதிக் கொடுக்க முடியாது. இப்படி நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நமக்கே கூற முடியாத நிலையில் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு எப்படி கூற முடியும்? தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவை உலகத்தில் வேறு யாராலும் கொடுக்க முடியாது. ஏன்? உங்களுக்கே தெரியாது.

    மருத்துவர்கள் காலையில் 4 சப்பாத்தி சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்களே உங்கள் வீட்டுச் சப்பாத்தி எந்த அளவு இருக்குமென்று கேட்டார்களா? சிலரின் வீட்டுச் சப்பாத்தி கெட்டியாக, பெரியதாக இருக்கும். ஒன்று சாப்பிட்டாலே போதும். சில சப்பாத்தி அப்பளம் போல இருக்கும். பத்து சாப்பிட்டாலும் வயிறு நிறையாது. இப்படி இருக்கையில் எப்படி நான்கு சப்பாத்தி சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுக்க முடியும்? ஒரு கப் தயிர் சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்களே, உங்கள் வீட்டு கப் எத்தனை பெரிய சைஸ் உள்ளது என்று அவர்களுக்குத் தெரியுமா? சற்று சிந்தியுங்கள், இரவு 5 இட்லி சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுக்கிறார்களே, உங்கள் வீட்டு இட்லி எடை அவருக்குத் தெரியுமா? தயவு செய்து மற்றவர்கள் எழுதிக் கொடுக்கும் அளவு முறையில் தயவு செய்து சாப்பிட வேண்டாம். இது நோயைப் பெரிது படுத்துமே தவிர நோயைக் குணப்படுத்தாது.

    சரி எவ்வளவுதான் சாப்பிட வேண்டும் என்ற அளவை எப்படி கண்டுபிடிப்பது. அதற்கு சுலபமாக வழிமுறை இருக்கிறது. பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது கவனத்தை உணவில் வைத்துச் சுவையை ரசித்து, ருசித்து சாப்பிட்டால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நமக்கு சாப்பிடப் பிடிக்காது. முதல் முறை வாயில் எடுத்து வைக்கும் பொழுது பிடித்த அதே உணவு எப்பொழுது நமக்குப் பிடிக்கவில்லையோ, போதும் என்று அர்த்தம். வழக்கமாக நீங்கள் காலையில் 10 இட்லி சாப்பிடும் நபராக இருந்தால் கவனத்தை இட்லியின் மீதும், இட்லியிலுள்ள சுவையின் மீதும் கவனம் வைத்துச் சாப்பிட்டுப் பாருங்கள், நான்கு இட்லி சாப்பிட்ட பிறகு ஐந்தாவது இட்லியைப் பார்த்தால் உங்களுக்குச் சாப்பிடப் பிடிக்காது. எப்பொழுது பிடிக்கவில்லையோ உங்கள் அளவு முடிந்து விட்டது என்று அர்த்தம்.
    கவனத்தை உணவில் வைத்துச் சாப்பிடும் பொழுது நமக்கு அளவு தெரியும். கவனத்தை செல்போனிலோ, ட.வி.யிலோ அல்லது பேச்சிலோ வைத்துச் சாப்பிடும் பொழுது நமக்கு அளவு தெரிவதில்லை. எனவே தயவு செய்து சாப்பிடும் பொழுது கவனத்தை உணவிலும், சுவையிலும் வைத்துச் சாப்பிட்டுப் பாருங்கள். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நம்மால் சாப்பிட முடியாது.

    எனவே நம் சிகிச்சையில் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதற்கு மி.கி., கி.கி., தராசு போன்ற அளவு முறைகள் தேவையில்லை. பசி எடுத்தால் சாப்பிட வேண்டும். ருசித்து சாப்பிட வேண்டும். மனத்திற்கு எப்பொழுது போதுமென்று எண்ணம் ஏற்படுகிறதோ அப்பொழுது நிறுத்த வேண்டும். எனவே ஆசை தீர சாப்பிடுங்கள். கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் ஒரு தவறும் கிடையாது. பசி கொஞ்சம் தள்ளிப் போகும். அவ்வளவுதான். குறைவாகச் சாப்பிட்டால் ஒரு தவறும் கிடையாது. நமக்கு சீக்கிரமாகப் பசித்து விடும். எனவே தயவு செய்து சாப்பிடும்பொழுது அளவு பார்க்காதீர்கள். உங்கள் மனத்திற்குப் பிடித்த அளவு ஆசை தீரச் சாப்பிடுங்கள். ஆனால் ஒரேயொரு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் பசி எடுக்கும் வரை வேறு எதையும் சாப்பிடக்கூடாது.

    எனக்குக் கண்டிப்பாக சாப்பிடுவதற்கு அளவு வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஒரு வழிமுறையைச் சொல்கிறேன். உங்கள் வீட்டிலுள்ள நாய்க்கு ஒரு கப் சாதம் கொடுங்கள். அது சாப்பிட்டு முடித்த பிறகு மீண்டும் வேண்டுமென்று வாலை ஆட்டிக்கொண்டு நிற்கும். மீண்டும் ஒரு கப் சாப்பாடு கொடுங்கள். மீண்டும் கேட்கும். மூன்றாவது கப் சாப்பாடு கொடுத்தால் அதில் பாதியை மட்டும் சாப்பிட்டு விட்டு மீதியை அங்கேயே விட்டுவிட்டு நடக்க ஆரம்பிக்கும். அந்த நாயை “வா வந்து சாப்பிடு, என்னிடம் இன்னும் ஏழு கப் சாப்பாடு உள்ளது” என்று நீங்கள் கொட்டினாலும் அது சாப்பிடாது. ஏனென்றால் ஒரு நாய்க்குத் தெரியும். நாம் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று மனிதர்களுக்குத் தெரிவதில்லை. ஏனென்றால் நாய் பசித்து, ருசித்து சாப்பிடுகிறது. மனிதன் பசிக்காமல், ருசிக்காமல் சாப்பிடுகிறான்.

    எனவே  நம் சிகிச்சை முறையில் பசி எடுத்தால் சாப்பிட வேண்டும். ரசித்து, ருசித்து ஆசை தீர சாப்பிட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். யார் யார் வீட்டில் 80 வயதிற்கு மேல் தாத்தா, பாட்டி ஆரோக்கியமாக இருக்கிறார்களோ அவர்கள் கண்டிப்பாக எந்த உணவையும், எந்தச் சுவையையும் வேண்டாமென்று ஒதுக்கியிருக்க மாட்டார்கள். சுவை, சுவையாக வித விதமாக மனத்திற்குப் பிடித்த உணவுகளைச் சாப்பிடுவது மூலமாக நாம் ஆரோக்கியமாக இருக்க முடியுமே தவிர நோய்கள் வராது. எனவே சுவையைப் பற்றியும், உணவைப் பற்றியும் தெரியாத சில மருத்துவர்கள் கூறும் தவறான விதிகளை தயவு செய்து கடைப் பிடிக்க வேண்டாம்.

    ஐ - 50 வினாடி ஓடக்கூடிய டீசர் ...!

    By: Unknown On: 20:09
  • Share The Gag
  • இயக்குனர் ஷங்கர் நண்பன் படத்திற்கு பிறகு மூன்று வருடங்களாக இயக்கிவரும் திரைப்படம் ஐ.

    விக்ரம், எமிஜாக்சன் ஜோடியாக நடிக்கும் இத்திரைப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கிறது.

    இந்நிலையில் முதன்முதலாக ஊடகத்தினருக்கு 50 வினாடி ஓடக்கூடிய டீசர் பிரத்யேகமாக போட்டுக்காட்டப்பட்டது.

    இதில் பெரிய பற்கள் மற்றும் கொம்புகளுடன் உடல் முழுவதும் ரோமங்களுடன் ஓநாய் போன்ற தோற்றத்தில் உள்ளார் விக்ரம்.

    இளைஞன் ஒருவனை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதால் அவனுக்குள் நிகழும் மாற்றத்தை பற்றியான கதை என கூறப்படுகிறது.

    இது ஹல்க் படத்தின் சாயலில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

    இனி ஊசி குத்தினால் வலிக்காது

    By: Unknown On: 19:35
  • Share The Gag
  • மருத்துவம் நாளுக்கு நாள் நவீன மயமாகிக்கொண்டே வருகிறது. ஆனால் ஆரம்ப காலத்தில் மனிதனுக்கு சிகிச்சை அளிக்க குத்தப்படும் ஊசியின் அளவில் மட்டும் பெரிய மாற்றம் வராமல் இருந்தது. தற்போதைய காலகட்டத்தில் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் உடலில் இன்சுலினை செலுத்துவதற்கு ஊசி குத்தும் முறையையே கையாண்டு வருகின்றனர். இதே போல சிறிய குழந்தைகள் சரியாக சாப்பிடவில்லை என்றால் டாக்டரிடம் சொல்லி ஊசி குத்திவிடுவேன் என்று கூறி பயமுறுத்திய காலம் தற்போது மாறியுள்ளது.

    ஊசி குத்தும் உணர்வே இல்லாமல் மருந்துகளை உடலுக்குள் செலுத்துவதற்கு மைக்ரோ நீடில்களை இந்திய அறிவியல் கழகத்தின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து இன்சுலின் ஊசி பயன்படுத்துபவர்களுக்கு கையில், ஊசி குத்தியதன் அடையாளங்கள் இருக்கும். ஆனால் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள மைக்ரோ நீடில் 130 மைக்ரான் டையாமீட்டர் அளவுடையது. தட்டையான வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மைக்ரோ நீடிலில் 12 நீடில்கள் உள்ளது. இதை சாதாரண மனிதன் கூட பயன்படுத்தும் அளவுக்கு மிகவும் பாதுகாப்பான முறையில் தயாரித்துள்ளனர்.

    சிரஞ்சில் இருந்து வரும் மருந்தை இந்த மைக்ரோ நீடில்கள் வலியில்லாமல் உடலுக்குள் செலுத்துகிறது. இது சாதாரண ஊசி நீடில்கள் தயாரிக்கப்படும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் தயாரிக்கப்படுவது கிடையாது. அதற்கு பதிலாக மைக்ரோ நீடில்கள் சிலிகானை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆனால் சிலிகான் மனித ரத்தத்திற்கு ஏற்றது கிடையாது. சிலிகான் மனித ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு கேடு விளைவிக்க வாய்ப்புகள் உள்ளது.

    இதனால், மைக்ரோ நீடில் முழுவதும் டைட்டானியம் மற்றும் தங்கம் கலந்த கலவைப்பூச்சு அடர்த்தியாக பூசப்பட்டுள்ளது. இதனால் சிலிகான் ரத்த பிளாஸ்மாவை பாதிக்கும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது. இதுகுறித்து இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்தின் பேராசிரியர் கே.ராஜண்ணா கூறுகையில், சாதாரண ஊசிக்கும், மைக்ரோ நீடிலுக்கும் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளது. மைக்ரோ நீடில் ஊசிகளில் நானோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நீடிலை பயன்படுத்தும் போது மனித உடலில் அதன் அடையாளங்கள் இருப்பது மிகவும் குறைவாக இருக்கும். மேலும் உடலுக்குள் செலுத்தப்படும் மருந்துகள், பரவலாக செலுத்தப்படும் என்பதால், வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும் வாய்ப்புகள் இல்லை. சாதாரண மனிதர்கள் கூட ஆபத்து காலங்களில் இந்த மைக்ரோ நீடில் பொருத்திய ஊசிகளை எளிதில் பயன்படுத்தும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சமாக இருப்பது, உடலில் எவ்வித காயங்களையும் ஏற்படுத்தாது என்பதால், இன்சுலின் ஊசிகள் பயன்படுத்துபவர்களுக்கு இது வரப்பிரசாதமாகும் என்றார்.

    கோபத்தின் வெளிப்பாடு தான் விஷாலின் தீடிர் முடிவு

    By: Unknown On: 19:10
  • Share The Gag
  • நடிகர் விஷால் தற்போது ஹரி இயக்கத்தில் பூஜை என்றா படத்தை தயாரித்து நடித்து கொண்டிருக்கிறார்.

    இந்நிலையில் சமீபத்தில் வி ஆடியோ என்ற பெயரில் ஆடியோ கம்பெனி ஒன்றை தொடங்கியுள்ளார் விஷால்.

    ஆடியோ கம்பெனி தொடங்கவதுக்கு என்ன கரணம் என்று கேட்ட போது , ஒவ்வொரு மனிதனின் எடுக்கும் முடிவுவிலும் ஒரு காரணம் இருக்கும் ,அது போல் நான் இந்த கம்பெனி தொடங்கவதுக்கு என்ன காரணம் என்றல் கோபத்தின் வெளிப்பாடு தான் நான் கடந்த சில கசப்பான அனுபவத்தால் தான் ஆடியோ கம்பெனி தொடங்கவதுக்கு காரணம் ஏன் என் தயாரிப்பு நிறுவனமே சில சில கசப்பான அனுபவத்தால் தான் தொடங்கினேன் என்றார் .

    உற்சாகமாக பணியாற்ற முட்டை சாப்பிடுங்கள்

    By: Unknown On: 17:29
  • Share The Gag
  • பள்ளி, கல்லூரி, அலுவலகத்தில் எப்போதும் தூங்கி வழிகிறீர்களா… உடல் எப்போதும் சோர்வாக இருப்பதாக உணர்கிறீர்களா? சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் ஆம் என்பது பதில் என்றால், உங்கள் உணவில் முட்டையை சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

    ஆம் முட்டையில் அதுவும் வெள்ளைக் கருவில் உள்ள புரதச் சத்து உங்களை மிகவும் உற்சாகமாக வைத்துக் கொள்ளும்.

    உடனடியாக உடலுக்கு சக்தியை வழங்கும் சாக்கலேட், பிஸ்கெட், இனிப்புப் பண்டங்களில் உள்ள கார்போஹைட்ரேட்டை விட, முட்டையில் உள்ள புரதச் சத்து உடலுக்குத் தேவையான கலோரிகளை சமச்சீரான விகிதத்தில் பயன்படுத்த உதவிபுரிகிறது.

    முட்டையில் உள்ள புரதச்சத்தை சக்தியாக மாற்றிக் கொண்டு, நமது உடல், சீரான அளவில் அதனை கலோரிகளாக எரிக்கின்றன. இதனால் தொடர்ந்து சீரான வேகத்தில் இயங்க நமது உடலுக்குத் தேவையான சக்தியை மூளை கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

    பொதுவாக நாம் உண்ணும் உணவைப் பொருத்துத்தான் நமது மூளை உடலின் செயல்திறனை அமைக்கிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை சக்தியாகப் பெறும் மூளை, அதனை அடிப்படையாக வைத்து உடல் இயக்கத்தை மாற்றி அமைக்கிறது.

    ஆனால் உடலில் அதிகமான கொழுப்பு உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும், இதய பாதிப்பினை ஏற்படுத்தும் என்று முட்டையை தவிர்த்து விடுவார்கள். ஆனால், புகைப்பிடிப்பது, உடல் பருமன், உடற்பயிற்சி இன்மை ஆகியவற்றால் ஏற்படும் பிரச்சினைகளோடு ஒப்பிடும் போது முட்டை மிகக் குறைந்த அளவிற்கே பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால், முட்டைக்கு ஓகே சொல்லலாம் தவறில்லை.

    இளையராஜா இசையில் எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கும் டூரிங் டாக்கீஸ்

    By: Unknown On: 08:01
  • Share The Gag
  • டூரிங் டாக்கீஸ் எனும் பெயரில் அடுத்த படம் இயக்குகிறார் எஸ்ஏ சந்திரசேகரன். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

    தேனி மாவட்டத்தில் "டூரிங் டாக்கீஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

    அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்ஏசி கூறுகையில், "விஜயகாந்த் நடித்த "சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் தொடங்கி, இதுவரை 68 திரைப்படங்களை இயக்கியுள்ளேன். எனது 69ஆவது படமாகவும், கனவுப் படமாகவும் "டூரிங் டாக்கீஸ்' திரைப்படம் உருவாகி வருகிறது.

    3 சிறிய கதைத் தொடர்களை ஒருங்கிணைத்து, இந்தப் படத்தின் கதையை அமைத்துள்ளேன். இளையராஜா இசையமைக்கிறார்.

    படத்தில் 70 வயது முதியவராக பாத்திரமேற்று நான் நடித்துள்ளேன். எனக்கு ஓய்வு தேவைப்படும் என்பதற்காக, இனிமேல் திரைப்படங்களை இயக்க வேண்டாம் என்று என்னுடைய மகன் விஜய் அன்புக் கட்டளையிட்டுள்ளார். ஆனால், உழைப்புக்கு ஏது ஓய்வு என்பது எனது கருத்து.

    கத்திக்கு சிக்கல் இல்லை

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "கத்தி' திரைப்படத்தை வெளியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை. விளம்பரம் தேடிக் கொள்வதற்காக, சிலர் பிரச்னையாக்கி வருகின்றனர்," என்றார்.

    சாவுக்கு பயந்தவனுக்கு தினம் தினம் சாவு: அஜித் ரசிகர்களின் சுவரொட்டியால் பரபரப்பு

    By: Unknown On: 07:38
  • Share The Gag
  • தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் அஜித்.

    தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவரது வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்ம ஆசாமி மிரட்டல் விடுத்தான்.

    இதனையடுத்து சென்னை பொலிசார் திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் சுமார் 1½ மணி நேரம் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு இல்லை என்பது தெரியவந்தது.

    இதுதொடர்பாக திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி மதுரையில் அவரது ரசிகர்கள் கண்டன சுவரொட்டியை ஓட்டியுள்ளனர்.

    சுவரொட்டியில் ‘‘வெடி குண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்! சாவுக்கு பயந்தவனுக்கு தினம் தினம் சாவு, எதுக்குமே பயப்படாதவனுக்கு ஒரு தடவை தான் சாவு, எங்க தலயை தொடணும்னா... எங்களை தாண்டி தொட்டுப்பாருங்கடா பார்ப்போம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு!

    By: Unknown On: 07:17
  • Share The Gag
  •  நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழுத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும். புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும். கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்பழமே விளங்குகிறது.

    நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர், மலர், கனிகள் பயன்கொண்டவை.

    செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

    கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அஸ்கார்பிக் அமிலம், அலனைன், நியசின், வைட்டமின் பி, அஸ்பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல், லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம்
    மலர்கள் தசை இறுக்கி, செயல்ஊக்கி, வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும். வயிற்றில் ஏற்பட்ட புண்ணிற்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது.

    நார்த்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர ரத்தம் சுத்தமடையும். வாதம், குன்மம் (வயிற்றுப் புண்), வயிற்றுப் புழு இவை நீங்கும். பசியை அதிகரிக்கும்.
    கனிந்த கனிகள் வலுவேற்றி, ஊக்குவி, இதன் சாறு வாந்தி நிறுத்தும். பசியை தூண்டுவிடும், தசை இறுக்கி குளிர்ச்சி தரும். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும். நார்த்தை பழத்தின் மேல் தோலை தேன் அல்லது சர்க்கரைப் பாகில் ஊற வைத்து நன்கு ஊறிய பின் சீதக் கழிச்சல் உடையவர்களுக்கு கொடுக்க நல்ல பலன் தரும்.

    உடல் சூடு தணியும்

    உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.
    பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

    உடல் வலுப்பெற

    நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடுபட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம் பழச்சாறு அருந்துவது மிகவும் நல்லது.

    சுகமான பிரசவம்

    கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச்சாறு எடுத்து தண்­ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்.
    சிலர் கொஞ்சம் சாப்பிட்டால்கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம்.

    முதல் ரயில்... முதல் ஸ்டேஷன்..! - சுற்றுலாத்தலங்கள்!

    By: Unknown On: 01:33
  • Share The Gag
  •    முதல் ரயில்... முதல் ஸ்டேஷன்..!
    த்ரபதி சிவாஜி டெர்மினஸ்!. முன்பு விக்டோரியா டெர்மினஸ். சுருக்கமாக மும்பை சி.எஸ்.டி (CST) அல்லது மும்பை VT. இப்படி குறிப்பிடப்படும் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில்நிலையம் வரலாற்று சிறப்பு மிக்கது. 
    இந்தியாவின் ரயில்போக்கு-வரத்துக்கு வித்திட்டவர்கள் ஆங்கிலேயர் என்பது தெரிந்ததுதான். இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் மூன்று நீராவி என்ஜின்களுடன் மும்பை-  தாணே இடையே 1853ம் ஆண்டில் இயக்கப்பட்டது. முப்பத்துநான்கு கி.மீ பயணதூரத்தை 57நிமிடங்களில் கடந்தது முதல் ரயில். நாட்டின் ரயில்பயணம் தொடங்கிய இடமே தற்போதைய சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்.

    மும்பை கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது, போரி பந்தர்.  ஆங்கிலேயர், ஏற்றுமதி இறக்குமதி பொருட்களை பாதுகாத்து வைப்பதற்காக இந்த இடத்தை தேர்ந்தெடுத்தனர். இதற்காக ரயில் போக்குவரத்து அவசியம் என்பதை உணர்ந்தனர். கிரேட் இன்டியன் பெனின்சுலார் ரயில்வே என்ற அமைப்பினை ஏற்படுத்தி 1850ம் ஆண்டில் இங்கு ரயில்நிலையம் அமைத்தனர். அது போரி பந்தர் டெர்மினஸ் என அழைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தேவைகருதி ரயில்நிலைய கட்டடத்தை பிரம்மாண்டமாக கட்ட ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.
    கட்டடத்தை வடிவமைக்க அப்போது பிரபல நிபுணராக இருந்த பிரெடரிக் வில்லியம் ஸ்டீவன்ஸ் என்பவர் பணிக்கப்பட்டார். அதற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 16.14 லட்சம்!. புதிய கட்டட மாடல் குறித்து தெரிந்து கொள்வதற்காக ஸ்டீவன்ஸ் சுமார் 10மாதங்கள் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டாராம்.

    அதில் மத்திய லண்டனின் செயின்ட் பாங்கிராஸ் ரயில் நிலையக் கட்டட வடிவமைப்பு பிடித்துப் போக அதுபோலவே மும்பை ரயில்நிலையத்தையும் அமைக்க முடிவு செய்துள்ளார். கட்டடப் பணிகள் தொடங்கின. இந்திய, இத்தாலிய, கோதிக் கட்டடக்கலைகளின் கலவையாக, ஆங்கிலேய நிபுணர்களும் இந்தியக் கைவினைஞர்களும் இணைந்து தீட்டிய அழகு ஓவியமாக உருவாக்கப்பட்டது மும்பை ரயில்நிலையம்.
    மரவேலைப்பாடு, டைல்ஸ் பதிப்பு, அலங்கார இரும்பு வேலைப்பாடு என அனைத்திலும் கலைநயம் மிளிர அமைத்தனர். உள் அலங்கார வேலைப்பாடுகளில் பாம்பே ஸ்கூல் ஆப் ஆர்ட் (சர் ஜே.ஜே.ஸ்கூல் ஆப் ஆர்ட்) மாணவர்களும் கைவண்ணம் காட்டியிருக்கிறார்கள். இப்படி பிரம்மாண்டமாக உருவான ரயில்நிலையம் 1888ம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. இங்கிலாந்து ராணியை பெருமைப்படுத்தும் வகையில் விக்டோரியா டெர்மினஸ் என பெயர் சூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து கிரேட் இன்டியன் பெனின்சுலார் ரயில்வேயின் தலைமையகமாக விக்டோரியா டெர்மினஸ் திகழ்ந்து வந்துள்ளது. ரயில் டிக்கெட்டு-களையும் இங்கேயே அச்சடித்து வந்துள்ளனர்.
    இப்படி சிறப்புமிக்க ரயில்-நிலையத்துக்கு 1996ம் ஆண்டில் மராட்டிய மாவீரர் சத்ரபதி சிவாஜி நினைவாக சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதை உலக பண்பாட்டுச் சின்னமாக 2004ல் யுனெஸ்கோ அறிவித்தது. மத்திய ரயில்வேயின் தலைமையக-மாகவும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நிர்வாக கட்டடம் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட பெருமையும் இதற்கு கிடைத்துள்ளது.

    கல்லில்கண்ட கலைவண்ணம் அஜந்தா - சுற்றுலாத்தலங்கள்!

    By: Unknown On: 01:32
  • Share The Gag
  •       கல்லில்கண்ட கலைவண்ணம் அஜந்தா

    கல்லில்கண்ட கலைவண்ணம் அஜந்தா



    கல்லிலே கண்ட கலைவண்ணமாக காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றன அஜந்தா குகைகளும், அதனுள்  தீட்டப்பட்டுள்ள ஓவியங்களும்!.

    குகைகளைக் குடைந்து உருவாக்கப்படும் கோவில்களுக்கு குடைவரைக்கோவில்கள் என்று பெயர். அஜந்தாவும் இந்த ரகம்தான். மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் இருந்து 107 கி.மீ தொலைவில் உள்ள அழகான கிராமம் அஜந்தா. இங்கிருந்து 12கி.மீ தொலைவில் காணப்படும் குடைவரைக்-கோவில்களும், ஓவியங்களும் அமைந்துள்ள இடம் கிராமத்தின் பெயரால் அஜந்தா குகைகள் என அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் புத்தமதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தியும், புத்தரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை சித்தரித்தும் உருவாக்கப்பட்டவை.
     குகைகளை முன்பு மழைக்காலத்தில் ஓய்வெடுக்கும் இடமாக புத்தபிட்சுகள் பயன்படுத்தியிருக்கின்றனர். கி.மு.2 முதல் கி.பி. 6ம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் பல்வேறு கட்டமாக இவை உருவாக்கப்பட்டுள்ளன. சீன யாத்ரீகர் யுவான் சுவாங் இதுபற்றி குறிப்பெழுதி-யிருக்கிறார்.


    காட்டுப்பகுதிக்குள் கரும்-பாறைக்குள் புதைந்து கிடக்கும் இந்த கலைப்பொக்கிஷம் 1819ம் ஆண்டில்தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மெட்ராஸ் ரெஜிமென்டை சேர்ந்த ஆங்கிலேய ராணுவ அதிகாரி இந்தப்பகுதிக்கு வேட்டையாடச் சென்றபோது இதைக் கண்டுபிடித்துள்ளார். சலசலத்துக் கொண்டிருக்கும் வகோரா நீரோடையை தொட்டபடி குதிரைக்குளம்பு போன்ற வடிவத்தில் நீண்டுகிடக்கும் குகைகளின் உயரம் சுமார் 76மீட்டர். இங்கு நடந்த பல்வேறுகட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரையிலும் 30 குகைகள் கண்டுபிடிக்-கப்பட்டுள்ளன. பாறைகளில் மட்டுமல்ல, கூரைகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்களும் நம்மை ஓ போட வைத்துக்-கொண்டிருக்கின்றன.

    கலைநயம் மிக்க ராட்சத தூண்கள், மண்டபங்கள், சிலைகள், புத்தரின் பல்வேறு வடிவங்கள் என ஒவ்வொரு குகையிலும் ஒவ்வொருவகை ஆச்சரியம் நிரம்பியிருப்பதும் அஜந்தாவின் கூடுதல் சிறப்பு. பார்க்கப் பார்க்கப் பரவசப்படுத்தும் ஓரிடம் அஜந்தா. இதை 1983ம் ஆண்டில் உலகப்பண்பாட்டுச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ.

    எப்படிப்போகலாம்?

    மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள அஜந்தாவுக்கு சாலை வசதி உள்ளது. ரயிலில் செல்பவர்கள், ஜல்கானில் இறங்கி விடலாம். இங்கிருந்து 50 கி.மீ தொலைவுதான் அஜந்தா. விமானப் பயணத்தைப் பொறுத்தவரை அவுரங்காபாத்தில் விமான-நிலையம் உள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் இருந்து அவுரங்காபாத்திற்கு தினமும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவுரங்காபாத்தில் இருந்து அஜந்தா 107 கி.மீ தொலைவில் உள்ளது. அஜந்தா குகைகளை இந்திய நேரப்படி காலை 9மணி முதல் மாலை 5.30 மணிவரை பார்வையிடலாம். கட்டணம் உண்டு.

    ஆச்சரியப்படுத்தும் ஆக்ரா கோட்டை - சுற்றுலாத்தலங்கள்!

    By: Unknown On: 01:32
  • Share The Gag
  • ஆச்சரியப்படுத்தும் ஆக்ரா கோட்டை

    ஆச்சரியப்படுத்தும் ஆக்ரா கோட்டை

    "பளிங்கினால் ஒரு மாளிகை...பவளத்தால் மணிமண்டபம், உயரத்தில் ஒரு கோபுரம்...உன்னை அழைக்குது வா..." என்ற பாடலை முணுமுணுப்-பவரா நீங்கள்? அப்படியென்றால் நீங்கள் நின்று பாடவேண்டிய சரியான இடம் ஆக்ரா கோட்டைதான். இது ஒரு அரண்மனை நகரம். இங்கு சுமார் 100ஏக்கர் நிலப்பரப்பில் எழுந்து நிற்கும் கலைப்பொக்கிஷங்கள் வேறெங்கும் காணக்கிடைக்காதவை.

    வரலாற்றின் வளமான பக்கங்கள்பல மொகலாய மன்னர்களின் வசந்தமான வாழ்க்கையால் நிரப்பப்பட்டவை. 

    அவர்களது வாழ்க்கைக்கும், அப்போது நடந்த பல ஆச்சரியங்களுக்கும் சான்றாக திகழ்ந்து கொண்டிருக்கிறது இந்தக்கோட்டை. யமுனை ஆற்றின் கரையோரத்தில் தாஜ்மகாலில் இருந்து சுமார் இரண்டரை கி.மீ தொலைவில் அமைந்துள்ள இது, ஆக்ராவின் செங்கோட்டை, லால் கிலா, போர்ட் ரூய்ஜ் என்றும் அழைக்கப்படுகிறது. அப்போது நாட்டின் மிகப்-பெரிய கஜானா, நாணயசாலையை இந்தக் கோட்டை கொண்டிருந்தது. பாபர், ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜகான், அவுரங்கசீப் ஆகியோர் இங்குதான் வசித்துள்ளனர்.

    முதலில் ராஜபுதனத்து சௌகான்கள் வசம் கோட்டை இருந்துள்ளது.  அப்போது இந்த இடம் பஸல்கார், படல்கார் (badalgarh) என்றழைக்-கப்பட்டுள்ளது.  டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு தலைநகரை மாற்றி இங்கு வாழ்ந்த முதல் டெல்லிசுல்தான் சிக்கந்தர் லோடி (1487-1517). இதனால் இது நாட்டின் இரண்டாவது தலைநகராகக் கருதப்பட்டுள்ளது.

    சிக்கந்தர் லோடிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அவரது மகன் இப்ராகிம் லோடி சுமார் 9ஆண்டுகள், அதாவது 1526ல் பானிபட் போரில் கொல்லப்படும் வரை இங்குதான் வாழ்ந்துள்ளார். இவரது காலத்தில்தான் இங்கு புதிய அரண்மனைகளும், மசூதிகளும், கிணறுகளும் வெட்டப்பட்டுள்ளன.

     இந்தநிலையில், பானிபட் போரில் வெற்றிபெற்ற மொகலாயர்கள் இந்த கோட்டையையும் கைப்பற்றினர். இங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த பெரும் செல்வங்கள் அவர்கள் வசமானது. இதில் பிரபலமான கோஹினூர் வைரமும் அடங்கும்.

    மொகலாயர் வசம் வந்த பிறகு கோட்டை சீரமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான சுற்றுச்சுவரை பாபர் எழுப்பினார். பாபரின் மகன் ஹுமாயூன் 1530ம் ஆண்டு மன்னராக முடிசூட்டப்பட்டார். பிள்ளைப்பருவத்தில் தண்ணீரில் விழுந்த ஹுமாயூனை, நீர்சுமக்கும் தொழிலாளியான நஜாம் என்பவர் காப்பாற்றியுள்ளார். இளவரசரின் உயிரைக் காப்பாற்றிய நஜாம், அரைநாள் மன்னராக ஆக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார். அந்தச் சம்பவம் நடந்ததும் இங்குதான்.

    1558க்கு பிறகு ஆக்ராவுக்கு வந்த அக்பர் இந்தக் கோட்டையை புனரமைக்க உத்தரவிட்டுள்ளார். தினமும் சுமார் 4ஆயிரம் கட்டிடக்கலைஞர்கள் பணியாற்றி 8ஆண்டுகளில் (1565-1573) புதிய கோட்டையை கட்டி முடித்துள்ளனர். மண்டபங்கள், மசூதிகள், மாடமாளிகைகள் என அட்டகாசப்படுத்தப்பட்டது அக்பர் காலத்தில்தான். அக்பரின் முக்கிய அமைச்சரும், அக்பர்நாமாவை எழுதியவருமான அபுல்பஸல் இந்தக்கோட்டைக்குள் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டதாக குறிப்பெழுதியிருக்கிறார்.

    அன்றைய கட்டடங்கள் இப்போது இல்லை. அக்பர் கட்டியவற்றில் பல கட்டிடங்களை பளிங்கு மாளிகைகள் அமைப்பதற்காக ஷாஜகான் அகற்றியுள்ளார். ஆங்கிலேயர் வசம் கோட்டை வந்த பிறகும் சில கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது.

    ரசனைமிக்க ஷாஜகான் காலத்தில்தான் இங்கு பளபள பளிங்கு கட்டிடங்கள் பல எழுப்பப்பட்டுள்ளன. இவற்றில் மோத்தி மஸ்ஜித், நஜினா மஸ்ஜித், மினா மஸ்ஜித் போன்ற மசூதிகள் குறிப்பிடத்தக்கவை. அதே நேரத்தில் ஷாஜகானை அவரது மகன் அவுரங்கசீப் சிறைவைத்த இடமும் இந்த கோட்டைதான். எட்டு ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்த ஷாஜகான் மரணமடைந்த பிறகு அவரது உடல் அருகில் உள்ள தாஜ்மகாலுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    ஷாஜகானுக்குப் பிறகு கோட்டை களையிழந்தது. இப்படியாக பல வரலாறுகளில் வலம் வந்து கொண்டிருந்த கோட்டை, 1803ம் ஆண்டில் ஆங்கிலேயர் வசம் வந்தது.
     
    ஆக்ரா கோட்டைக்குள் திராட்சைத் தோட்டம் என்றழைக்கப்படும் ஆங்குரி பாக், பொதுமக்களிடம் குறைகள் கேட்கும் திவான்-இ-ஆம் மண்டபம், பிறநாட்டு மன்னர்கள் மற்றும் பிரபலங்களை வரவேற்கும் திவான்-இ-காஸ் மண்டபம், மாட மாளிகையான கோல்டன் பெவிலியன்ஸ், பளபள பளிங்கு மாளிகைகளான ஜஹாங்கிர் மஹால், காஸ் மஹால், மச்சி பவன், முஸம்மான் பர்ஜ், மினா மஸ்ஜித், பியர்ல் மசூதி, நஜினா மஸ்ஜித், பெண்கள் மட்டும் ஷாப்பிங் செல்வதற்காக கட்டப்பட்ட செனானா மினா பஜார், அரசவைக் கலைஞர்கள் இசைநிகழ்ச்சி நடத்தும் நவ்பத் கானா, மன்னரின் அந்தப்புரமான ரங்மஹால், ஷாஜகானி மஹால், காலத்தால் அழிக்க முடியாத கண்ணாடி வேலைப்பாடுகள் நிறைந்த அரச ஒப்பனைக்கூடமான ஸீஸ் மகால் போன்றவை இன்றளவும் கலைப்பொக்கிஷங்களாக காட்சி-யளித்துக் கொண்டிருக்கின்றன.

    கோட்டைக்குள் செல்ல கட்டணம் உண்டு. இந்திய குடிமக்களுக்கும் SAARC, BIMSTEC அமைப்பின் உறுப்புநாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கும் நுழைவுக்கட்டணம் நபருக்கு 10ரூபாய்தான். பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஐந்து அமெரிக்க டாலர் அல்லது ரூபாய் 250 கட்டணமாகும்.

    உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஆக்ரா கோட்டை, டெல்லியில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ளது. ஆக்ராவில் விமான நிலையமும்,  ரயில்நிலையமும் அமைந்துள்ளன. யுனெஸ்கோவின் பாராம்பரியச் சின்னங்கள் பட்டியலில் ஆக்ரா கோட்டை 1983ல் இடம் பெற்றது.

    கொங்கு மண்டல மலைகளும் கோட்டைகளும்!

    By: Unknown On: 01:31
  • Share The Gag
  •  1 . அவிநாசி - ஒதியமலை, குருந்தமலை

    2 . கோவை - சிரவணம் பட்டிமலை, மருதமலை, ரத்தினகிரி,
    பாலமலை, பெருமாள் மலை

    3 . பொள்ளாச்சி - ஆனைமலை, பொன்மலை

    4 . உடுமலைப்பேட்டை - திருமூர்த்தி மலை

    5 . பல்லடம் - தென்சேரிமலை, அழகுமலை, குமார மலை

    6 . தாராபுரம் - ஊதியூர்மலை, சிவன் மலை

    7 . ஈரோடு - சென்னிமலை, பெருமாள் மலை

    8 . கோபி - தவளகிரி, குன்றத்தூர்

    9 . பவானி - பாலமலை, ஊராட்சிக் கோட்டை மலை

    10. கொள்ளேகால் - மாதேசுவரன் மலை

    11 . திருச்செங்கோடு - சங்ககிரி, மோரூர் மலை, திருச்செங்கோடு

    12 . இராசிபுரம் - கொங்கணமலை, கொல்லிமலை

    13 . சேலம் - - சேர்வராயன் மலை, ஏற்காடு, கந்தகிரி

    14 . நாமக்கல் - - கொல்லிமலை, கபிலர் மலை, நைனாமலை

    15 . கரூர் - - தான்தோன்றி மலை, வெண்ணெய் மலை, புகழிமலை

    16 . பழனி - - ஐவர் மலை, பழனி மலை ,கொண்டல் தங்கி மலை.

    கொங்கு நாட்டில் 51 கோட்டைகள் உள்ளன. கோயம்புத்தூர், சத்தியமங்கலம், கொள்ளேகால், தணாய்க்கன், பொள்ளாச்சி, ஆனைமலை, திண்டுக்கல், தாராபுரம், பொன்னாபுரம், பெருந்துறை, எழுமாத்தூர், ஈரோடு,காங்கேயம், கரூர், விஜயமங்கலம்,அரவக்குறிச்சி, பரமத்தி, பவானி, மோகனூர், நெருஞ்சிப் பேட்டை, மேட்டூர், சரம்பள்ளி , காவேரிபுரம், சேலம், தகடூர், ராயக்கோட்டை, அமதன் கோட்டை, ஓமலூர், காவேரிப்பட்டினம், தேன்கனிக்கோட்டை, பெண்ணகரம்,பெரும்பாலை,சோழப்பாவு,தொப்பூர், அரூர், தென்கரைக்கோட்டை, ஆத்தூர், சேந்தமங்கலம், நாமக்கல், 300 அடி, சங்ககிரி - 1500 அடி, சதுரகிரி - 3048 அடி, கனககிரி - 3423 அடி, மகாராசக்கடை - 3383 அடி, தட்டைக்கல் துர்க்கம் - 2029 அடி. இரத்தினகிரி - 2800 அடி, சூலகிரி - 2981 அடி, ஆகியன கொங்கு நாட்டுக் கோட்டைகளாம்.

    14 ஆம் நூற்றாண்டு வரை இந்தக் கோட்டைகள் பெருமையுடன் இருந்தன. குறுநில மன்னர்கள் ஆண்டனர். 15 ஆம் நூற்றாண்டுக்குப்பின் முகமதிய, ஆங்கிலேயப் படையெடுப்பால் அழிந்தன. திண்டுகள், நாமக்கல், கோட்டைகள் மட்டும் அழியாமல் இருக்கின்றன. சங்ககிரி, கிருஷ்ணகிரி, மகராஜக் கடை ஆகிய கோட்டைகள் சிதைந்துள்ளன. பிற முழுதும் சிதைந்து போயின. குறுநில மன்னர்களுடன் கோட்டைகளும் அழிந்து போயின.