Monday, 18 August 2014

பூஜையறை டிப்ஸ் : ட்வென்ட்டி 20..!

By: Unknown On: 22:04
  • Share The Gag
  • பூத்தொடுக்க பயன்படுத்தும் நூல், நார் போன்றவற்றை காலி சோப்பு உறை, காலி ஊதுவத்தி அட்டைப் பெட்டிகளில் வைத்தால் வாசனை இல்லாத பூக்களை தொடுத்தாலும் நாரோடு சேர்ந்து பூவும் மணக்கும்.

    ரோஜா, சாமந்தி பூக்களை வாங்கும் போது சில பூக்கள் காம்பில்லாமல் இருக்கலாம். எரிந்த ஊதுவத்தி குச்சியை அதன் நடுவில் செருகி படத்திற்கு வைக்கலாம்.

    பெரிய அகல் விளக்குகள் நான்கைந்தை வாங்கி வைத்தால் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்க, தசாங்கம், சாம்பிராணிக் கூம்பு ஏற்ற, கையை சுட்டுக் கொள்ளாமல் கற்பூர ஆரத்தி காண்பிக்க என விதவிதமாய் பயன்படுத்தலாம்.

    எலுமிச்சம் பழம் பிழியும் கருவியில் அரிசி மாவைப் போட்டு தரையில் தட்ட ஒரே மாதிரியான அழகிய சிறு கோலங்களை பூஜையறையில் போட லாம்.

    டீ, காபி வைக்கும் கோஸ்டர்களின் மேல் அகல் விளக்கை ஏற்றி வைத்தால் தரையில் எண்ணெய்க்கறை படாமல் இருக்கும்.

    கற்பூரத்தோடு மிளகு சேர்த்து வைத்தால் கற்பூரம் கரையாமல் இருக்கும்.

    மயிலிறகை பூஜையறையில் ஒட்டினால் பல்லி தொல்லை இருக்காது. மேலும் தேவதைகளை ஆகர்ஷணம் செய்யும் சக்தி மயிலிறகிற்கு உண்டு.

    பூஜையறை விளக்கை எண்ணெய் இல்லாமல் தானாகவே அணையவிடக்கூடாது. பூஜை முடிந்த பின் சிறிது நேரம் கழித்து, பெண்கள் மலர் கொண்டு விளக்கை அணைக்கலாம்.

    மணமுள்ள பூக்களால் பூஜை செய்தால் அடுத்த நாள் அந்த மலர்களை வீணாக்காமல் காயவைத்து சீயக்காயோடு சேர்த்து அரைத்தால் மணமுள்ள சீயக்காய் தயாராகிவிடும்.

    மழை நாட்களில், பூஜையறை தீபமேற்றும் தீப்பெட்டி நமுத்துப் போகாமல் இருக்க அதனுள் நான்கு அரிசி மணிகளைப் போட்டு வைக்கவும்.

    பூஜையறையின் கதவுகளில் சிறு சிறு மணிகளைக் கட்டி வைத்தால் திறக்கும்போதும், மூடும் போதும் இனிமையான மணியோசையை நற்சகுனமாகக் கேட்டு மகிழலாம்.

    ஊதுவத்தியை தண்ணீரில் நனைத்து பின் ஏற்றிவைக்க, ஊதுவத்தி நிறைய நேரம் எரிந்து மணம் பரப்பும்.

    வெளியூருக்குச் சென்றால் ஒரு கிண்ணத்தில் அரிசி-துவரம் பருப்பு, மறு கிண்ணத்தில் நல்ல தண்ணீரையும் பூஜையறையில் வைத்து விட்டுச் செல்ல வேண்டும். தெய்வங்களை பட்டினி போடக்கூடாது என்பது ஐதீகம்.

    காலையிலும் மாலையிலும் கோதூளி லக்னம் எனப்படும் 5-6 மணிக்கு பூஜையறையில் விளக்கேற்றுவது மிகவும் நல்லது. அப்போது வீட்டின் வாச லுக்கு வெளியேயும் விளக்கேற்றி வைத்தால் தேவதைகளின் ஆசி கிட்டும்.

    வியாழக்கிழமையன்றே பூஜைக்கான பொருட்களை தேய்த்து சுத்தம் செய்து, விளக்குகளுக்கு குங்குமம் இட்டு, திரிபோட்டு வைத்தால் வெள்ளிக்கி ழமை பூஜைக்கு உதவியாக இருக்கும்.

    ஆணி இல்லாத படத்திற்கு பூ வைக்க ஆசையா? பால்பாய்ன்ட் பேனா மூடியை சலஃபன் டேப் கொண்டு படத்தின் பின் தலைகீழாக
    ஒட்டவும். இப்போது பேனா மூடியினுள் காம்பைச் செருகி பூ வைக்கவும்.

    பாத்திரம் கழுவ உதவும் க்ளீனிங் திரவம் தீர்ந்த பின் அந்த பாட்டிலில் விளக்கேற்ற உதவும் எண்ணெயை ஊற்றி வைத்துக் கொண்டால் விளக்கு களுக்கு சிந்தாமல் எண்ணெய் ஊற்றலாம்.

    அஞ்சறைப் பெட்டியில் மஞ்சள்தூள், குங்குமம், அட்சதை, கற்பூரம், வாசனைப்பொடி, தீப்பெட்டி போன்றவற்றை போட்டு வைத்தால் இடம் அடைக் காமல் இருக்கும்.

    பூஜையறையில் ஒரே அளவுள்ள படங்களை மாட்டினால் பார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் எளிதாக இருக்கும்.

    வீட்டில் கட்டாயம் குல தெய்வ படத்தை வைத்து பூஜிக்க வேண்டும். விளக்கெண்ணெயும் நெய்யும் கலந்து தீபம் ஏற்ற குலதெய்வ
    அருள் கிட்டும்

    சிங்கம், ஏழாம் அறிவை விட கலெக்ஷன் அதிகம்! லிங்குசாமியின் ‘அஞ்சான்’ விளக்கம்!

    By: Unknown On: 21:29
  • Share The Gag
  • ‘அஞ்சான்’ பத்திரிகையாளர் ஷோவுக்கு வந்திருந்தார்கள் சூர்யாவும் லிங்குசாமியும்! படம் வெளியான நேரத்திலிருந்தே அஞ்சான் பற்றி சமூக வலை தளங்களில் வந்த விமர்சனங்கள் எதிலும் அகிம்சை இல்லை. இவருக்கு அவர் போட்டி, அவருக்கு இவர் போட்டி. யார் வளர்ந்தாலும், இன்னொரு காலை பிடித்து இழுக்க இங்கே அடாத போட்டி. இதில் சூர்யாவும் சிக்கி கொண்டதாக அவரது ரசிகர்கள் புலம்ப, ஒருத்தருடைய உணர்வையும் மதிப்பதாக இல்லை கல்லெறிவோர் குரூப். இந்த நிலையில்தான் பேஸ்புக், ட்விட்டர் விமர்சனங்கள் பற்றி மனதார பொங்கினார்கள் இருவரும்.

    அதிலும் லிங்குசாமிதான் ஆத்திரத்தின் உச்சத்திலிருந்தார். ‘இதை சொல்லலாம்னு நினைச்சு வரல. ஆனா சொல்லணும்னு தோணுச்சு. பேஸ்புக் ட்விட்டர்ல வேணும்னு ஒரு குரூப் எழுதுது. படம் பார்த்துட்டு விமர்சனம் பண்ணினா கூட பரவாயில்ல. படம் ரிலீஸ் ஆவறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடியே அஞ்சான் பற்றி தவறான விமர்சனம் வருதுன்னா அதை என்னன்னு சொல்றது?’ என்றார். வேதனையோடு. கூடவே அவர் சொன்ன ஆதாரங்களை நம்பிதான் ஆக வேண்டும். ஏனென்றால் அவர் சொன்னது பொத்தாம் பொதுவான ரிப்போர்ட் அல்ல. சம்பந்தப்பட்ட  படங்களின் பெயரையும்  சொல்லுவதால் அதில் உண்மையின் சதவீதம் அதிகமாகவே இருக்கலாம்.

    உதாரணத்திற்கு கோவை ஏரியாவை எடுத்துக்கங்க. ஹரி சார் இயக்கிய சிங்கம் படத்தின் கலெக்ஷனை விட அஞ்சானுக்கு அதிகம். அதே போல முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படத்தை விடவும் கலெக்ஷன் அதிகம். தியேட்டருக்கு போனால், சூர்யா ரசிகர்கள் ஆவலா வந்து கையை பிடிச்சிக்கிறாங்க. பெண்களும், தாய்மார்களும் பாராட்டுறாங்க என்றார் அடுக்கடுக்காக. பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த சூர்யா பேச்சில் லேசாக வருத்தம் இழையோடியது.

    விமர்சனங்களை ஏத்துக்கிறவன்தான் நான். ஆனால் அது ஒருவருடைய வளர்ச்சியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிற அளவுக்கு அது இருக்கக் கூடாது. நான் போகும் பாதையில் முள்ளை போடுறாங்க என்றார் கவலையோடு. இந்த படம் பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் கிண்டலாக விமர்சித்திருந்த சூது கவ்வும் இயக்குனர் நலன் குமாரசாமி பற்றி கேள்வி எழுப்பட்டபோது, இல்லைங்க… நான் அவரை கூப்பிட்டு பேசிட்டேன். அந்த பிராப்ளம் சால்வ் ஆகிருச்சு என்றார் சூர்யா, அந்த கேள்வியை மேற்கொண்டு வளர்க்க விரும்பாமல்!

    இதெல்லாம் ஒரு புறம் இருக்க, அஞ்சான் மூன்றே நாளில் முப்பது கோடி வசூல் என்கிறது தியேட்டர் வட்டார தகவல்கள்!

    அப்புறம் சமூக வலைதளங்கள் சட்டிப்பானையை உருட்டினால் என்ன, சாம்பலை பூசிக் கொண்டால்தான் என்னவாம்? அடிச்சு பின்னுங்க அஞ்சான்ஸ்!

    குக்கர் பராமரிப்பு..!

    By: Unknown On: 19:24
  • Share The Gag
  • 1. குக்கரின் கொள்ளளவில் 3ல் 2 பங்கு அதாவது குக்கரின் முக்கால் பகுதிக்கு மட்டும் அரிசி மற்றும் காய்கறி வகைகளைச் சமைக்க வேண்டும்.

    2. குக்கரில் உள் தட்டு வைத்து பாத்திரம் வைத்து சமைத்ததினால் அடியில் உப்புக் கறை போல் ஏற்பட்டு விடக் கூடும். அதைத் தவிர்க்கப் புளித் துண்டு அல்லது பிழிந்த எலுமிச்சம் பழத் தோல் போட்டு பாத்திரம் வைத்து சமைத்தால் கறை ஏற்படாது.

    3. குக்கரில் வேக வைக்க வேண்டிய பொருட்களை அடுப்பில் வைத்தவுடன் குக்கர் குண்டை போடக் கூடாது. சிறிது நேரம் கழித்து குக்கர் மூடியில் உள்ள வெண்ட் பைப் வழியாக நீராவி வருவதைப் பார்த்த பிறகே குண்டு போட வேண்டும். நீராவி வரவில்லையென்றால் அடுப்பைச் சிறிய அளவில் வைத்து விட்டு குக்கர் மூடியில் உள்ள வெண்ட் பைப்பில் பொருள்கள் அடைத்து இருந்தால் சுத்தம் செய்துவிட்டு குண்டு போட வேண்டும்.

    4. குக்கரில் கைப்பிடி உடைந்து விட்டால் உடனடியாகப் புதியது மாற்றி விட வேண்டும். ஏனென்றால் குக்கரில் பொருள்களை வைத்து மூடுவதற்கும் திறப்பதற்கும் கஷ்டமாக குக்இருக்கும். அதோடு அழுத்தத்தில் இருக்கும் நீராவி நம் உடம்பின் மீது படுவதற்கும் வழியாக இருக்கும்.

    5. பிரஷர் குக்கரில் உள்ள ‘காஸ்கெட்’டை சமையல் முடிந்ததும் தொட்டி நீரில் போட்டுவிட்டு எப்போது தேவையோ அப்போது எடுத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.

    6. புதிய காஸ்கெட் வாங்கிய உடன் பழைய காஸ்கெட்டை எறிந்து விட வேண்டும். இல்லையென்றால் மாற்றி பயன்படுத்த வாய்ப்புள்ளது.

    7. குக்கரின் கைப்பிடியில் இருக்கும் ஆணிக்கு மாதம் ஒரு முறை எண்ணெய் விட வேண்டும். அப்போது தான் துருப் பிடிக்காமல் இருக்கும்.

    8. குக்கரின் வெயிட்டை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும் போதும் தூசி, அடைப்புகள் முதலியன இல்லாமல் இருக்கிறதா என் பார்த்த பிறகே பயன்படுத்த வேண்டும்.

    9. குக்கர் மூடியில் பொங்கி வருவது ஒன்றும் குறையல்ல. பருப்பு வேக வைத்தால் உடன் பொங்கி வென்ட் பைப் வழியாகத் தண்ணீர் வெளிவரும். பருப்பு வேக வைக்கும் போது ஒரு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றினால் பொங்காது.

    10. குக்கரில் காய்கறி வேகும் போது அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

    11. குக்கரின் உள்பாகத்தில் கறை படிந்து கறுப்பாகக் காணப்பட்டால் கவலைப்படத் தேவையில்லை. புளித்த மோரைக் கறையுள்ள அளவு ஊற்றி 2,3 நாட்கள் ஊற வைத்தால் அந்தக் கறை நீங்கி குக்கர் பளிச்சென்று இருக்கும்.

    அந்த இடத்திலா பச்சை குத்துவார்! பிரபல நடிகை உண்டாக்கிய சர்ச்சை...!

    By: Unknown On: 18:29
  • Share The Gag
  • பாலிவுட் சினிமாவை தாண்டி இந்த பச்சை குத்தும் கலாச்சாரம் தமிழ் சினிமாவையும் தொற்றி கொண்டது. அந்த வகையில் நடிகை நயன்தாரா தன் முன்னாள் காதலர் பிரபுதேவா பெயரை கையில் பச்சை குத்தினார்.

    இதேபோல் நடிகை த்ரிஷா நிமு மீனை பச்சை குத்தினார். ஸ்ருதிஹாசன் பற்றி சொல்லவே தேவையில்லை. தற்போது அதேபோல் ஆடுகளம், ஆரம்பம் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் டாப்ஸி.

    இவர் தன் பின்பகுதியில் டாட்டூ குத்தி அதை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து மோசமான கமண்டுகள் வந்ததால் அதை உடனே டெலிட் செய்துவிட்டார்.

    இது குறித்து அவர் கூறும் போது ’ஏற்கனவே எனது கணுக்காலில் டாட்டூ வரைந்திருக்கிறேன். தற்போது இடுப்பின் பின்பகுதியில் வரைந்திருக்கிறேன். இங்கு வரைந்ததற்கு காரணம் இந்த 2 இடங்களையும் அடிக்கடி பார்க்க முடியாது. எப்போதாவதுதான் பார்க்க முடியும். அடிக்கடி டாட்டூவை பார்த்தால் போர் அடித்துவிடும். அதனால்தான் இந்த இடத்தில் வரைந்தேன்” என்று கூலாக பதில் கூறியுள்ளார்.

    புதிதாக பெற்றோர் ஆனவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

    By: Unknown On: 17:59
  • Share The Gag
  • குழந்தை என்ற பொக்கிஷத்தை பெற யார் தான் விரும்ப மாட்டார்கள். ஆனால் குழந்தை கருவாகி, உருவாகி, பெற்றெடுத்து அதனை வளர்ப்பது என்பது லேசு பட்ட காரியமில்லை. 9 மாத கர்ப்பக்காலத்திற்கு பிறகு பிரசவ வலி, பின் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்தல், உச்சா போக கற்று கொடுத்தல், அதனை நல்ல படியாக வளர்த்தல் என குழந்தைக்கு பெற்றோராக இருப்பது ஒன்றும் லேசு பட்ட காரியம் இல்லை என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். சொல்லப்போனால் வருடங்கள் கடந்து ஓடும் இது ஒரு நீண்ட அனுபவமாகும். ஆனால் இந்த கஷ்டங்களும் வலிகளும், உங்கள் குழந்தை உங்களை 'அப்பா அம்மா' என்று அழைக்கும் போதோ அல்லது முதல் அடி எடுத்து வைக்கும் போதோ பறந்து ஓடியே விடும்.

    புதிதாக பிறந்த குழந்தையை பராமரிக்க அதிக அளவு உழைப்பும், ஆற்றலும் தேவைப்படுவது உண்மை தான். ஆனால் அதற்கு பிரதி பலனாக, உங்கள் குழந்தை உங்கள் முன் வளர்வதை காணும் போது, அதற்கு ஈடு இணை எதவுமே கிடையாது. சரி, இப்போது புதிய பெற்றோர்களுக்கான சில குழந்தை பராமரிப்பு டிப்ஸ்களை கொடுக்கிறோம். அதை தெரிந்து கொண்டால், புதிய பெற்றோர்களாகிய உங்களுக்கு சற்று எளிமையாக இருக்கும்.

    1.குழந்தை கக்கா போவதற்கு பல மணி நேரம் ஆக்கலாம் உங்கள் குழந்தை வேகமாக கக்கா போக வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். சில குழந்தைகள் இயற்கையிலேயே வேகமாக கழித்து விடுவார்கள். ஆனால் அதற்காக எல்லா குழந்தைகளும் அப்படி இருக்க வாய்ப்பில்லையே. உங்கள் குழந்தை மெதுவாக கூட கக்கா போகலாம். ஆகவே ஆற அமர மெதுவாக செல்ல விடுங்கள்.

    2. எலாஸ்டிக் உள்ள ஆடைகளே குழந்தையின் நண்பர்கள்: குழந்தைக்கு ஆடைகள் அணிவிக்கும் போதும் சரி, கழற்றும் போதும் சரி, அதற்கு நோகாமால் சுலபமாக இருக்க வேண்டும். பல குழந்தைகளுக்கு பட்டன் மற்றும் ஜிப் வைப்பது அசௌகரியத்தை அளிக்கும். அதற்கு காரணம் அதை மாட்டவும், கழற்றவும் நேரம் பிடிக்கும். அதனால் குழந்தைகள் சுச்சு போகும் நேரம் எல்லாம் எரிச்சல் அடைவார்கள். அதனால் சுலபமாக அணிவிக்க ஒத்துழைக்கும் எலாஸ்டிக் ஆடைகளை பயன்படுத்துங்கள்.

    3. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குழந்தையை பயமுறுத்தாதீர்கள்: நீங்கள் புதிய தொழில்நுட்பத்தை உபயோகிக்க விருப்பப்படலாம். ஆனால் அது உங்கள் குழந்தையை பயமுறுத்தலாம். உதாரணத்திற்கு, உங்கள் குழந்தையை கழிவறைக்கு கூட்டிச் செல்லும் போது, தானாக தண்ணீர் விழும் தொழில்நுட்பம் இருந்தால், அந்த சத்தம் குழந்தையை பயமுறுத்தலாம். இந்த பயம் ஆழமாக படிந்து விட்டால், அது குழந்தை கழிப்பறையை பயன்படுத்தவே தயங்கும்.

    4. குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள்: குழந்தையின் கவனம் உங்கள் மீது விழ வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். ஆனால் அதற்கு நீங்களும் உங்கள் நேரத்தை குழந்தையுடன் செலவு செய்ய வேண்டும் அல்லவா? அதற்கு உங்கள் குழந்தைக்கு எது சந்தோஷத்தை அளிக்குமோ, அதனை செய்யுங்கள். குழந்தையுடன் இருக்கும் போது, பல வேலைகளில் ஈடுபடாதீர்கள். அது உங்கள் உறவை பாதிக்கும் வகையில் அமையும்.

    5. மெத்தை விரிப்பை அடிக்கடி மாற்றியாக வேண்டும்: சில குழந்தைகள் மெத்தையை நனைக்காமல் பழகுவதற்கு சில நாட்கள் ஆகலாம். ஒரு வேளை உங்கள் குழந்தை படுக்கையை ஈரமாக்கிவிட்டால், அவர்களை பார்த்து கத்தாதீர்கள். அவர்களை ஆழ்ந்த நித்திரையில் இருந்து எழுப்பாமல் மாற்று விரிப்புகளை பயன்படுத்துங்கள். அவர்கள் நிம்மதியாக தூங்கட்டும்.

    6.புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் உங்களுக்கு எண்ணிலடங்கா நல்ல நண்பர்கள் கூட்டம் ஒன்று இருக்கக்கூடும். அவர்கள் எல்லாம் ஒவ்வொரு திசைக்கு பறந்து போயிருக்கலாம். ஆனால் இப்போது உங்கள் நண்பர்களை நீங்கள் தேர்வு செய்யப் போவதில்லை. உங்கள் குழந்தைகளே உங்கள் நண்பர்களை தேர்வு செய்யப் போகிறார்கள். இப்போதெல்லாம் உங்கள் குழந்தையின் நண்பர்களின் பெற்றோர்களோடு, விளையாட்டு மைதானத்திலோ அல்லது பள்ளியிலோ நீங்கள் பழகும் வாய்ப்பு கிடைக்கும்.

    7. உங்கள் வீட்டின் அறைகள் குப்பை கூடமாக மாறும் உங்கள் குழந்தை வளர வளர, அது உருளுவது, தவழ்வது, நடப்பது என்று ஒவ்வொன்றையும் பார்த்து ரசிப்பீர்கள். ஆனால் உங்கள் குழந்தை நடக்க ஆரம்பித்து பொருட்களை உருட்ட ஆரம்பிக்கும் போது தான் கஷ்டமே ஆரம்பிக்கும்.அதிலும் குழந்தை சேட்டை செய்ய தொடங்கும் போது, வீட்டின் அறைகள் குப்பை கூடமாக மாறப் போவது உறுதி. திடீரென்று பார்த்தால், உங்கள் அலமாரி காலியாக இருக்கலாம், ஆடைகள் எல்லாம் தரையில் சிதறி கிடக்கலாம். அவர்களுக்கு கிடைக்கும் அனைத்தும் தரையில் சிதறி கிடக்கலாம். ஆனால் அப்போது அமைதியாக இருங்கள். அதே சமயம் ஆபத்தான பொருட்களை அவர்களுக்கு எட்டும் இடத்தில் எப்போதுமே வைக்காதீர்கள்.

    8. வயதிற்கு வந்த பிள்ளைகளை விட, அதிகமாக உங்கள் குழந்தை சண்டித்தனம் செய்யலாம் ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தைகள் செய்யும் சண்டித்தனத்தை பற்றி நண்பர்களுடன் பேசாமல் இருப்பதில்லை. குழந்தைகள் என்றால் சண்டித்தனம் இருக்கத் தான் செய்யும். ஆனால் ஒரு பெற்றோராக நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஒரு எல்லையை விதித்து, அதற்கு அன்பையும், ஒழுக்கத்தையும் கற்று கொடுக்க வேண்டும்.

    9. கஷ்டமான வேலைகளை விட, மகப்பேறு விடுமுறை தான் கடினமாக இருக்கும் மகப்பேறு விடுமுறையை அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு பின் எடுப்பதற்கு திட்டம் போட்டு வைத்திருப்பீர்கள். பின் விடுப்பு தொடங்கும் முதல் நாள் தான் விடுமுறை உணர்வை பெறுவீர்கள். ஆனால் இந்த நேரம் சாதாரண நேரம் கிடையாது. உங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவிட வேண்டிய முக்கியமான தருணம் இது.

    10. குழந்தையுடன் நீங்கள் இருக்கும் போது, எல்லாமே உங்களுக்கு இனிமையாக தோன்றும் உங்கள் குழந்தையுடன் நீங்கள் செலவிட்ட நேரங்கள் அனைத்தும் நீங்காத நினைவுகளாக இருக்கும். அதிலும் அது அவர்களை பார்த்து நீங்கள் கத்தியதாக கூட இருக்கலாம். ஒவ்வொரு பெற்றோருக்கும் இவை அனைத்தும் பசுமையான மறக்க முடியாத நினைவலைகளாகும். குறிப்பாக குழந்தையுடன் ஏதாவது சண்டையிட்டால், சிறிது நேரத்தில் உங்களிடம் ஓடி வந்து உங்களை ஆற தழுவி கொண்டு, உங்கள் முகத்தில் முத்தமிட்டு உங்களுடன் "ஐ லவ் யூ" என்று சொன்னால் எப்படி உணர்வீர்கள்? என்று யோசித்து பாருங்கள்.

    ரஜினி சூப்பர் ஸ்டாராகிய பின்னணி...!

    By: Unknown On: 17:08
  • Share The Gag
  • சூப்பர் ஸ்டார் இந்த ஒரு பட்டத்திற்கு தான் இன்று தமிழ் சினிமாவே அடித்துக்கொள்கிறது. ஆறடி உயரமும் இல்லை, சிவந்த தேகமும் இல்லை ஆனால் பார்த்தவுடன் வசிகரிக்கும் ஒரு முகம், அது தான் ரஜினிகாந்த். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பேருந்து நடத்துனராக தன் வாழ்க்கையை தொடங்கினார்.

    பின் சினிமா மீது கொண்ட ஆசையால் சென்னை வந்து நடிப்பு பயிற்சி பெற்றார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு இயக்குனர் பாலசந்தர் கண்ணில் பட்டு, அபூர்வராகங்களில் அறிமுகமானார்.

    பின் மூன்று முடிச்சு, தப்பு தாளங்கள், அவள் அப்படிதான் போன்ற படங்களில் இரண்டா நாயகனாக வர, பைரவி படத்தில் முதன் முதலாக ஹீரோவானார்.

    அன்றிலுருந்து இன்று வரை ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு எவரும் எட்ட முடியா இடத்தில் சூப்பர் ஸ்டாராக அமர்ந்துள்ளார். இதுவரை 170 படங்களில் நடித்து தன் 64 வயதிலும் இன்றைய இளம் நடிகர்கள் தொடாத உயரத்தில் இருந்து வருகிறார். இவை அனைத்திற்கும் அவரின் கடின உழைப்பே காரணம். இது புரியாமல் இன்றைய இளம் நடிகர்கள் இவர் பட்டத்திற்கு ஆசைப்படுவது எந்த விதத்தில் நியாயம்?

    இன்று ஆகஸ்ட் 18ம் தேதி தான் ரஜினி முதன் முதலாக திரைப்பயணத்தை ஆரம்பித்த நாள். இன்றுடன் தன் 39 வருட திரைப்பயணத்தை எட்டியிருக்கும் இவர் இன்னும் பல வருடங்கள் பயணித்து இன்னும் பல சாதனைகள் படைத்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கவேண்டும் என்று நம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

    விஜய், அஜித், தனுஷ் அனைவரையும் ஓரங்கட்டிய அஞ்சான் வசூல்!

    By: Unknown On: 16:51
  • Share The Gag
  • இந்த வருடம் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தங்கள் நாயகர்கள் படம் அனைத்தும் திரைக்கு வரயிருக்கிறது. இதில் ரஜினி, அஜித், விஜய், தனுஷ் படங்கள் திரைக்கு வந்த நிலையில் கடந்த வாரம் சூர்யா நடித்த அஞ்சான் வெளிவந்தது.

    இப்படம் மிகவும் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனால் படத்தின் எதிர்பார்ப்பு காரணமாகவே முதல் 3 நாட்கள் அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ் ஃபுல் ஆகின.

    தற்போது இப்படத்தின் வசூல் சென்னையில் மட்டும் ரூ. 2.3 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த படம் இது தான். ஆனால் வரும் வாரங்களில் வசூல் நிலைமையை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    கணவருக்கு பயப்படலாமா?

    By: Unknown On: 16:41
  • Share The Gag

  • `என் கணவரை நினைச்சாலே பயமாக இருக்கிறது…’ என்று சில பெண்கள் சொல்வார்கள். பயம் என்பது திருடனுக்கு போலீஸ் மீது ஏற்படலாம். கணவன்_மனைவி உறவென்பது போலீஸ் திருடன் போன்றதல்ல.


    கணவன் மீது மரியாதை இருக்க வேண்டும். அதையும் மீறி இருவருக்கும்ளும் இருக்க வேண்டியது நட்பு.


    நட்பு மீது வாழ்க்கை நடத்தும் ஜோடிகள் அதிக மகிழ்ச்சியாக இருப்பார்கள். பிரச்சினைகளை தைரியமாக சமாளிப்பார்கள். இவர்கள் `இல்லற’ வாழ்க்கையும் ரொம்ப ஜாலியாக இருக்குமாம்.


    சில குடும்பங்களில் கணவன்_மனைவி உறவு வாத்தியார் மாணவி என்ற நிலையில் அமைந்து விடுகிறது. சமையலில் பெயர் வாங்க வேண்டும். நடை, உடை, பாவனையில் அவர் பாராட்ட வேண்டும். விழுந்து விழுந்து உபசரித்து `சபாஷ்’ வாங்க வேண்டும் என்ற ரீதியில் அத்தகைய மனைவிகள் நடந்து கொள்கிறார்கள்.


    இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளும் வாழ்க்கை சிறக்க உதவுவதில்லை. கடுமையாக மனைவி உழைத்தும், கணவருக்காக தன்னை மாற்றிக் கொண்டும் அதற்குரிய பிரதிபலனை கணவன் வழங்காதபோது அவள் மனதொடிந்து எதிர்மறையாக நடக்கத் தொடங்கி விடுவாள்.


    உங்க வீட்டில் நீங்க எப்படி? பயப்படவோ, எப்போதும் பாராட்டுக்காக உழைக்கவோ செய்யாதீர்கள். அன்பை, நட்பை வெளிப்படுத்துங்கள் அது போதும்… ஆயிரம் விதத்தில் உங்களுக்கும் பிரிக்க முடியாத இறுக்கத்தை ஏற்படுத்தி விடும்.

    சமையலில் செய்யக்கூடாதவை… செய்ய வேண்டியவை….

    By: Unknown On: 08:02
  • Share The Gag

  • சமையலில் செய்யக்கூடாதவை…

    * ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

    * காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

    * மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

    * கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

    * காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

    * சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

    * தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

    * பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

    * பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

    * தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

    * குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

    * குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.


    செய்ய வேண்டியவை….

    * மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

    * புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

    * ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

    * போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

    *குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

    * பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

    * குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

    * வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

    * கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.

    *வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்

    வீட்டு குறிப்புகள்....? அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது..!

    By: Unknown On: 08:00
  • Share The Gag

  • * ஊதுவத்திகளை ஏற்றுவதற்கு முன் நீரில் நனைத்து பின்பு காற்றில் உலரவிட்டு ஏற்றினால், அதிக மணமாகவும் இருக்கும் நன்றாகவும் எரியும்.

    * பட்டுச் சேலைகளைத் துவைக்கும்போது அலசும் நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் சாயம் போகாது; மங்காது. பட்டுச் சேலையும் பளிச்சிடும்.

    * வெள்ளிப்பாத்திரங்களில் கருமை படராமல் தடுக்க, அவற்றை அடுக்கி வைக்கும்போது இடையிடையே கற்பூர வில்லைகளையும் போட்டு வைக்க வேண்டும்.

    * மருதாணியால் ஆடையில் ஏற்படும் கறைபோக, அதை வெதுவெதுப்பான பாலில் அரை மணி நேரம் ஊற வைத்து, பின் சோப் போட்டு அலசினால் கறை போய்விடும்.

    * மேஜை ட்ராயரின் இரு ஓரங்களிலும் சிறிது மெழுகு அல்லது சோப்பைத் தட வினால் எப்போதும் சிரமமில்லாமல் திறந்து மூடலாம்.

    * பூசணிக்காய் சாற்றில் தங்க நகைகளை ஊற வைத்து கழுவினால் அவை நன்றாகப் பளிச்சிடும்.

    * தரையைத் துடைக்கும் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு துடைக்க, ஈக்கள் பறந்தோடும். தொந்தரவில்லாமல் துடைக்கலாம்
       
       
    துணியில் உள்ள வெற்றிலைக் கறையை போக்க எலுமிச்சம் பழத்தின் தோல் அல்லது புளித்த மோரை வெற்றிலைக் கறையின் மீது தடவினால் கறை மாயமாகி விடும்.

    தோசைக் கல்லில் எண்ணெய் பிசுபிசுப்பு போக்க தோசைக்கல் அல்லது வாணலி மிதமான சூட்டில் இருக்கும் போது, அவற்றின் மேற்பரப்பில் சிறிது மோர் விட்டு தேங்காய் நாரினால் அழுத்தித் தேய்த்துக் கழுவினால் எண்ணெய் பிசுபிசுப்பு சட்டெனப் போய்விடும்.

    கறை இருந்த இடத்தில் ஒரு ஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெய் விட்டு அரை மணி நேரம் கழித்து சோப்பு நீரில் துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

    சமைக்கும் போது ஒரு ஸ்பூன் சிட்ரிக் அமிலத்தை விட்டு, தண்ணீர் ஊற்றி குக்கரை உபயோகித்தால் கறுப்புக்கறை நீங்கி குக்கர் புதிது போல் ஆகி விடும்.

    உரல், அம்மி, கிரைண்டர் போன்றவற்றை புதிதாக வாங்கியவுடன் தவிடு போட்டு அரைத்தால் அதில் உள்ள துளைகள் அடைபட்டு விடும். எனவே, தவிடுக்கு பதிலாக வெங்காயத்தைப் போட்டு அரைத்தால், சிறு சிறு மணல், கல் துகள் ஆகியவை வெங்காயத்துடன் ஒட்டிக் கொண்டு வந்துவிடும்.

    போரிங் பவுடரையும், கோதுமை மாவையும் சம அளவு எடுத்து நீரில் கரைத்து கொதிக்க விடுங்கள். அந்தக் கலவை பசை போல் மாறியதும் இறக்கி, ஆறிய பின்னர் அந்தப் பசையை சிறு சிறு உருண்டைகளாக்கி வெளியிலும் காய விடுங்கள். பின்னர் அந்த உருண்டைகளை சமையலறை அலமாரி மற்றும் கரப்பான் தொல்லை உள்ள இடங்களில் போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும்.

    2 தே‌க்கர‌ண்டி த‌ண்‌ணீ‌ர், 1 தே‌க்கர‌ண்டி ‌வி‌னிக‌ர், 2 தே‌க்கர‌ண்டி சோ‌ப்பு‌க் கரைச‌ல் இதனை‌க் கல‌ந்து எறு‌ம்பு வர‌ககூடாத இட‌ங்க‌ளி‌ல் தெ‌ளி‌த்து ‌விடு‌ங்க‌ள்.

    மூ‌ன்று நா‌ட்க‌ள் தொட‌ர்‌ந்து அ‌ந்த எலு‌மி‌ச்ச‌ம் தோ‌ல் கு‌க்க‌ரி‌ல் அடி‌யி‌ல் ஊ‌றிய ‌பிறகு அதனை எடு‌த்து தே‌ய்‌த்தா‌ல்கு‌க்கரை‌ப் ‌பிடி‌த்‌திரு‌ந்த கரை த‌னியாக வ‌ந்து ‌விடு‌ம்.

    குதிகால் வெடிப்பை போக்க சில டிப்ஸ்! எளிமையானது..!

    By: Unknown On: 07:51
  • Share The Gag

  • எலுமிச்சை மற்றும் உப்பு ஒரு அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் எலுமிச்சை சாறு, உப்பு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, அதில் பாதங்களை 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல்லைக் கொண்டு குதிகாலைத் தேய்க்க வேண்டும். இந்த முறையை தினமும் இரவில் தூங்கும் முன் செய்தால், குதிகால் வெடிப்பில் இருந்து விடுபடலாம்.


    வெஜிடேபிள் ஆயில் பாத வறட்சியால் ஏற்படும் குதிகால் வெடிப்புகளை நீக்க, கால்களை நன்கு சுத்தமாக கழுவி, பின் பாதத்தில் வெஜிடேபிள் எண்ணெய் கொண்டு சிறிது நேரம் மசாஜ் செய்து, கால்களுக்கு சாக்ஸ் போட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்து கால்களை கழுவ வேண்டும். இதனை தினமும் பின்பற்றி வந்தால், பாதங்கள் மென்மையாவதோடு, குதிகால் வெடிப்புகளும் நீங்கிவிடும்.


    வாழைப்பழம் வாழைப்பழத்தை நன்கு மென்மையாக அரைத்து, அதனை பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். அன்றாடம் இதனை செய்து வரை குதிகால் வெடிப்புகள் நீங்கும்.


    வேஸ்லின் மற்றும் எலுமிச்சை சாறு பாதங்களை வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின் உலர வைத்து, பாதங்களின் மேல் எலுமிச்சை சாறு மற்றும் வேஸ்லின் கலந்த கலவையை தேய்த்து, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் கழுவினால், குதிகால் வெடிப்பு வருவதை அறவே தவிர்க்கலாம்.


    தேன் தேனில் அதிகப்படியான ஆன்டி-பாக்டீரியல் பொருள் இருப்பதால், அதனை வெதுவெதுப்பான நீரில் ஊற்றி, அந்த நீரில் பாதங்களை 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் பாதங்களை ஸ்கரப் செய்தால், அழுக்குகள் நீங்கி, பாதங்கள் மென்மையாக இருக்கும்.


    அரிசி மாவு 2-3 டேபிள் ஸ்பூன் அரிசி மாவில், சிறிது தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கெட்டியான பேஸ்ட் செய்து, பாதங்களில் தடவி தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், பாதங்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, பாதங்கள் மென்மையாகவும் பொலிவுடனும் இருக்கும்.


    ஆலிவ் ஆயில் குதிகால் வெடிப்பை போக்க சிறந்த நிவாரணி என்றால் அது ஆலிவ் ஆயில் தான். அதற்கு ஆலிவ் ஆயிலை காட்டனில் நனைத்து, 10-15 நிமிடம் மசாஜ் செய்து, சாக்ஸ் போட்டு 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.


    ஓட்ஸ் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸில், சிறிது ஜிஜோபோ ஆயில் ஊற்றி பேஸ்ட் செய்து, அதனை பாதங்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை ஒருநாள் விட்டு ஒருநாள் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.


    நல்லெண்ணெய் தினமும் இரவில் படுக்கும் போது, நல்லெண்ணெயை குதிகால்களில் தடவி மசாஜ் செய்து படுத்தால், குதிகால் வெடிப்பில் இருந்து தப்பிக்கலாம். அதுமட்டுமல்லாமல், பாத வறட்சியையும் தவிர்க்கலாம்.
    அவகேடோ மற்றும் வாழைப்பழம் அவகேடோவை நன்கு மசித்து, அதில் சிறிது வாழைப்பழ கூழை ஊற்றி கலந்து, அந்த கலவையை பாதங்களில் தேய்த்து ஊற வைத்து கழுவினால், பாதங்களுக்கு அதிகப்படியான சத்துக்கள் கிடைத்து, பாதங்கள் மென்மையாகவும், வறட்சியின்றியும் இருக்கும்.

    சினேகாவின் காதலர்கள் - விமர்சனம்..சின்ன சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகள்..!

    By: Unknown On: 07:46
  • Share The Gag
  • ‘காதல், ஒருமுறைதான் பூக்கும்’ என்கிற ஒருதலை ராக சென்ட்டிமென்ட்டையெல்லாம் உடைத்து தள்ளியிருக்கிறார் அறிமுக இயக்குனர் முத்துராமலிங்கன். ‘அவனுக்கு முன்னாடி உன்னை பார்த்திருந்தேன்னா உன் லவ்வை ஏத்துகிட்டு இருந்திருப்பேன்’ என்று சினேகா சொல்லும்போது, ‘அடடா… அந்த அவன் யாருப்பா?’ என்ற கேள்வியோடு காத்திருக்கிறோம். அவனுக்கு முன்னால அவன் என்று இன்னொருத்தனும், இவனுக்கு பின்னால இவன் என்று வேறொருத்தனுமாக போகிறது சினேகாவின் காதல்கள். காதலில் அடிதடி இருக்கலாம். அடித்தல் திருத்தல் இருக்கலாமோ என்கிற அதிர்ச்சியை நிமிஷத்துக்கு நிமிஷம் ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறாள் இந்த சினேகா. தமிழ்சினிமாவை பொருத்தவரை இந்த கேரக்டர் ‘பெண்ணே புது மலரே’தான், சந்தேகமில்லை!

    தன்னை பெண் பார்க்க வருகிறவனையும் அழைத்துக் கொண்டு மருத்துவரிடம் போகிறாள் சினேகா. ‘90 நாளாயிருச்சு. இப்ப என்ன பண்றது?’ என்று மருத்துவரும் கைவிரிக்க, ‘எனக்கு ஒரு உதவி பண்றியா?’ என்று கேட்டு, 90 நாளுக்கு காரணமானவனை தேடிப் புதுசாக தன்னை காதலிக்க வந்தவனுடன் புறப்படுகிறாள் சினேகா. போகிற இடமெல்லாம் பிளாஷ்பேக்குகள் விரிய, ஒவ்வொன்றும் பிளாஷ்பேக் இல்லை. பிளாஷ்‘bad’. படிக்கும் போது வருகிற அடலசன்ட் லவ்! அந்த நேரத்தில் ‘திசைகள்’ பத்திரிகையில் வேலை கிடைக்க, ‘தம்பி ஆளை வுடு’ என்று முதல் லவ்விலிருந்து கழண்டு கொள்கிறாள். வேலைக்கு சேர்ந்து சில காஸ்ட்யூம் சேஞ்சுகளுக்குள் ஒரு அசிஸ்டென்ட் டைரக்டருடன் லவ். அந்த லவ்வின் ஸ்கிரிப்ட் காய்வதற்குள் அடுத்த லவ் என்று கதையின் போக்கையே கலவரப் போக்காக்குகிறாள் சினேகா! 100 கிலோ மீட்டர் தாண்டி வந்து ‘டிராப்’ பண்ணும் அந்த புது காதலன், கடைசியில் ஒரு ‘டிராப்’ கண்ணீரோடு கிளம்புவதுதான் முடிவு.

    இந்த படத்தின் ஆகப்பெரிய அம்சம் காட்சிகளில் கூட அல்ல, காதுகளை குளிர வைக்கும் வசனங்களில்தான்! பேனா முனையில் வித்தை காட்டியிருக்கிறார் முத்துராமலிங்கன். ‘நான் கிளையை நம்பி மரத்துல உட்காரல, என் சிறகை நம்பி’ என்று சில இடங்களில் கவிதையாகவும், பல இடங்களில் யதார்த்தமாகவும் முழங்குகிறது வசனங்கள்!

    படத்தின் முழு அஸ்திவாரமும் நான்தான் என்று நம்பி சுமக்கிறார் கீர்த்தி. லேசாக உதட்டை சுழித்து எதிரிலிருக்கும் இளைஞர்களை மடக்கிப் போட்டாலும், இவர் ‘காதல் வேம்ப்’ இல்லை என்பதுதான் ஆறுதலான சித்தரிப்பு. தன்னுடன் பழகும் போது அவர்கள் மீது சுய பரிதாபம் காரணமாக காதலிக்கிறார். பின்பு சந்தர்ப்ப சூழலால் அவர்களே விலகுகிறார்கள், அல்லது இவரே விலகுகிறார். இதுதான் அந்த பெண்ணின் முகத்தில் சேறு பூசாமல் காப்பாற்றவும் செய்கிறது. எதையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக் கொள்கிற சினேகாவை தன் பாடி லாங்குவேஜ் மூலம் மிக அழகாக்கி தந்திருக்கிறார் கீர்த்தி.

    சினேகாவை காதலிக்கும் இளைஞர்களில் அந்த உதவி இயக்குனர் கேரக்டர் மிக மிக நேர்த்தி. தனக்கு தரப்பட்ட புத்தகத்திற்குள்ளிருக்கும் ஆயிரங்களை சுய மரியாதையோடு சினேகாவிடம் திருப்பி தர முயல்வதும், பின்பு உரிமையோடு அதை ஏற்றுக் கொள்வதும் அழகு. அதுமட்டுமல்ல, லட்சியத்தை நோக்கி போகும் ஒருவனை காதல் ஒன்றும் செய்ய முடியாது என்பதையும் பளிச்சென்று சொல்லிவிட்டு காணாமல் போய்விடுகிறான். அந்த சிவன் பார்க் காட்சி, வழி தெரியாமல் தத்தளிக்கும் பல உதவி இயக்குனர்களுக்கான விசிட்டிங் கார்டாகவும் அமையக்கூடும், முத்துராமலிங்கனின் புண்ணியத்தால்!

    அதுவரை மேகம் தண்ணீர் தெளித்துவிட்டு போனதை போல நகர்ந்த படம், இளவரசன்- காதல்- சாதீ- கொலை என்று நகர்கிறபோது பேய் மழையாய் அடித்து ஊற்றுகிறது. செருப்பு தொழிலாளியாக நடித்திருக்கும் உதய்குமார், உணர்ந்து நடித்திருக்கிறார்.

    ‘திசைகள்’ பத்திரிகையில் வேலை என்பதை ஏதோ ‘இன்போசிஸ்’ வேலை என்பது போல சித்தரிப்பதெல்லாம் டூ மச் டைரக்டரே! தன்னால் கவிழ்க்கப்பட்ட காதல் லாரிகள் ஆங்காங்கே ஸ்தம்பித்து நிற்பதை கூட டேக் இட் ஈஸியாக ஒருத்தி கடக்கிறாள் என்பது சற்றே நெருடலாக இருப்பதையும் திரைக்கதையில் கவனித்திருக்கலாம். ஒரு காதலுக்கும் மறு காதலுக்குமான இடைவெளியில் ஒரு சின்ன ஃபீலிங் கொடுத்திருந்தால் அவளது அடுத்த காதல் கூட நியாயமாகியிருக்குமே? தன் காதலி உயிரோடு கொளுத்தப்பட்ட பின்பும், வேறொருத்தியோடு உறவு வைத்துக் கொள்கிறான் என்பது இளவரசனின் கேரக்டரையும் டேமேஜ் செய்துவிடுகிறதே…?

    க்ளைமாக்சில் சுமார் 20 நிமிடங்களுக்கு வசனங்களே இல்லை. தனது இசையால் நிரப்பியிருக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் இரா.ப்ரபாகர். கண்ணகியின் கால் சிலம்ப… பாடல் துள்ளல் என்றால் பிற பாடல்களும், வரிகளும் கவனத்தை ஈர்க்கிறது.

    சின்ன சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகள் இருந்தாலும், சினேகாவின் இந்த லவ் லெட்டர் ரசிகர்களையும் காதலாகி கசிந்துருக வைக்கும், சந்தேகமில்லை!

    மக்களே… தெருவில் இறங்கி போராடுங்க! இசைஞானி இளையராஜாவின் பேச்சால் குலுங்கிய ஆன்மீக நகரம்!

    By: Unknown On: 07:25
  • Share The Gag
  • அருணகிரி நாதர் அறக்கட்டளை சார்பில் ஆன்மீக இலக்கிய திருவிழா திருவண்ணாமலையில் நடந்தது. ஆறுபதாண்டுகளுக்கு முன் மழையில்லாமல் திருவண்ணாமலை வாடியதாகவும், அப்போது அருணகிரிநாதர் எழுதிய பாடல் இசைக்கப்பட்டு அதற்கப்புறம் மழை வந்து மக்கள் பிழைத்ததாகவும் ஒரு ஐதீகம் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அதே நாளில் இந்த விழா நடைபெறும். விழா முடிந்ததும் மழை பிய்த்துக் கொண்டு ஊற்றும். இந்த விந்தை கடந்த அறுபதாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறதாம் அங்கே.

    இந்த நிகழ்ச்சிக்கு இந்த வருடம், இசைஞானி இளையராஜா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். எப்போதும் மலையை சுற்றி வந்து வணங்கும் வழக்கம் கொண்டவர் அவர். இந்த முறை பேரதிர்ச்சி காத்திருந்தது அவருக்கு. அந்த ஆன்மீக மலையின் மீது வீடுகளை கட்ட மாநாகராட்சி அனுமதி வழங்கி விட்டதாம். உலகின் மிக முக்கியமான ஆன்மீக தலங்களில் திருவண்ணாமலையும் ஒன்று. சிவனே ஆனந்த சயனத்தில் இருப்பதை போன்ற தோற்றமுடைய அந்த மலையில் ஆங்காங்கே வீடுகள் முளைத்தால் எப்படியிருக்கும்? அதுவும் அந்த மலையை சிவனாக நினைத்து ஒவ்வொரு பவுர்ணமியும் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்று வழிபட்டுக் கொண்டிருக்கும் போது? அதிர்ச்சியடைந்த இளையராஜா தனது ஆன்மீக சொற்பொழிவுக்கு மத்தியில் இந்த விஷயத்தையும் கையில் எடுத்துக் கொண்டார்.

    உங்கள் ஊரில் இப்படியொரு அநியாயம் நடைபெறுகிறது. இதை யாரும் தட்டிக் கேட்க மாட்டீங்களா? சிவனை சுற்றுகிற பக்தர்கள் இவர்களையும் சுற்றி வணங்க வேண்டுமா? இதை கண்டித்து நீங்களெல்லாம் வீதியில் இறங்கி போராட வேண்டாமா? என்றெல்லாம் அந்த பெரும் கூட்டத்தில் கேள்வி எழுப்ப, ‘ஆமாம்… விட மாட்டோம்’ என்று இசைஞானியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தார்கள் மக்கள்.

    ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இல்லாத வழக்கம் இப்போது திடீரென தோன்றி புனிதமான ஸ்தலத்தையும் பொழுதுபோக்கு பூங்காவாக்கிவிடக் கூடாது என்பதுதான் பக்தர்களின் கவலை. பூனைக்கு யார் மணி கட்டுவது என்று காத்திருந்தவர்களுக்கு இளையராஜாவின் பேச்சு பெரும் வேகத்தை கொடுத்திருக்கக் கூடும். இசைஞானியின் குரல், இந்நேரம் அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் கேட்டிருந்தால், தானாகவே முன் வந்து சரி செய்துவிடுவதுதான் ஆன்மீகத்தின் மீது நம்பிக்கையுள்ள இந்த அரசுக்கும் நல்லது.