சூப்பர் ஸ்டார் இந்த ஒரு பட்டத்திற்கு தான் இன்று தமிழ் சினிமாவே அடித்துக்கொள்கிறது. ஆறடி உயரமும் இல்லை, சிவந்த தேகமும் இல்லை ஆனால் பார்த்தவுடன் வசிகரிக்கும் ஒரு முகம், அது தான் ரஜினிகாந்த். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பேருந்து நடத்துனராக தன் வாழ்க்கையை தொடங்கினார்.
பின் சினிமா மீது கொண்ட ஆசையால் சென்னை வந்து நடிப்பு பயிற்சி பெற்றார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு இயக்குனர் பாலசந்தர் கண்ணில் பட்டு, அபூர்வராகங்களில் அறிமுகமானார்.
பின் மூன்று முடிச்சு, தப்பு தாளங்கள், அவள் அப்படிதான் போன்ற படங்களில் இரண்டா நாயகனாக வர, பைரவி படத்தில் முதன் முதலாக ஹீரோவானார்.
அன்றிலுருந்து இன்று வரை ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு எவரும் எட்ட முடியா இடத்தில் சூப்பர் ஸ்டாராக அமர்ந்துள்ளார். இதுவரை 170 படங்களில் நடித்து தன் 64 வயதிலும் இன்றைய இளம் நடிகர்கள் தொடாத உயரத்தில் இருந்து வருகிறார். இவை அனைத்திற்கும் அவரின் கடின உழைப்பே காரணம். இது புரியாமல் இன்றைய இளம் நடிகர்கள் இவர் பட்டத்திற்கு ஆசைப்படுவது எந்த விதத்தில் நியாயம்?
இன்று ஆகஸ்ட் 18ம் தேதி தான் ரஜினி முதன் முதலாக திரைப்பயணத்தை ஆரம்பித்த நாள். இன்றுடன் தன் 39 வருட திரைப்பயணத்தை எட்டியிருக்கும் இவர் இன்னும் பல வருடங்கள் பயணித்து இன்னும் பல சாதனைகள் படைத்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கவேண்டும் என்று நம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

0 comments:
Post a Comment