Saturday, 23 August 2014

பழங்களை கழுவாமல் சாப்பிடுவது நல்லதா? பழங்களைச் சாப்பிடும்..?

By: Unknown On: 22:03
  • Share The Gag
  • காய்கறிகளை வாங்கி வந்தவுடன் தண்ணீரில் நன்கு சுத்தம் செய்யுங்கள். நறுக்கியப் பின்பும் தண்ணீரில் அலசுங்கள்.

    * பழங்களைப் பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு, காப்பர் சல்பேட் பயன்படுத்தப்படுகிறது. சிலசமயம் திராட்சைப் பழங்களின் மீது வெள்ளைப் புள்ளிகளைப் பார்க்கலாம். இது காய்ந்து போன பூச்சி மருந்தின் எச்சங்கள் ஆகும். பழங்களைச் சாப்பிடும் முன் தண்ணீரில் நன்றாக அலசி சாப்பிடுங்கள்.

    * ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர் ஊற்றி கொஞ்சம் உப்பைப் போட்டு கலக்குங்கள். அதில் கொய்யா, மாம்பழம், உதிர்த்துப் போட்ட திராட்சைப் பழங்களைச் சில நிமிடங்களுக்கு ஊற விட்டு எடுத்து தண்ணீரில் நன்கு கழுவி பின் துணியால் துடைத்து விட்டுப் பயன்படுத்துங்கள்.

    * தோல் நீக்கி சாப்பிட வேண்டிய பழங்களைத் தண்ணீரில் கழுவி, துணியால் துடைத்துவிட்டுப் பின் தோல் உரித்துச் சாப்பிடுங்கள்.

    * ஆப்பிளின் மெழுகு பூச்சு போக, வெந்நீரில் சில வினாடிகள் ஆப்பிளைப் போட்டு வைத்து, பின் சொர சொரப்பான துணியால் அழுத்தத் துடைத்துவிட்டு (மெழுகு போன பின்) தோலுடன் சாப்பிடலாம்.

    முதுகு வலியை போக்கும் பயிற்சி!

    By: Unknown On: 20:42
  • Share The Gag

  •  சிலவகை உடற்பயிற்சிகள் விரைவில் பலன் தரக்கூடியவை. அந்த வகையில் இந்த பிலேட்ஸ் பயிற்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த பயிற்சி செய்ய ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும். ஆனால் செய்ய செய்ய விரைவில் நல்ல பலன் தரக்கூடியது.

    இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால்களை நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். பின்னர் இயல்பாக சுவாசத்தில் மெதுவாக கால்களை பாதி வரை மேலே தூக்கவும். அப்போது தலை, உடலை தோள்பட்டை வரை மெதுவாக தூக்கவும்.

    கைகளை சற்று மேலே படத்தில் உள்ளபடி தூக்க வேண்டும். இந்த நிலையில் 15 விநாடிகள் இருந்தபின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு இந்த பயிற்சியை 20 முறை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்து சற்று கடினமாக இருக்கும்.

    அதனால் 10 முறை செய்தால் போதுமானது. பின்னர் நன்கு பழகிய பின்னர் 20 முறையும் அதற்கு மேலும் செய்யலாம். இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் முதுகு வலி பிரச்சனைகள் தீரும். மேலும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் தொப்பை மற்றும் தொடையில் உள்ள அதிகப்படியான சதை குறையும்.

    குறட்டைவிடுபவர்களுக்கு தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்படும்.

    By: Unknown On: 20:38
  • Share The Gag

  • குறட்டை என்பது மற்றவர்களால் கேலி செய்யப்படும் விஷயம் அல்ல. அது ஒரு நோய். தூங்கும் போது மூச்சுப் பாதை சிறிதளவோ அல்லது முழுவதுமாகவோ அடைத்துக் கொள்வதால்தான் குறட்டை தோன்றுகிறது. உடல் எடை அதிகரித்தால், அதிக கொழுப்பு சேரும்.

    அப்போது நுரையீரலால் தேவையான அளவுக்கு விரிவடைய இயலாது. அதனால் மூச்சை உள்ளே இழுப்பதிலும், வெளியேற்றுவதிலும் சிக்கல் ஏற்பட்டு குறட்டை என்னும் முரட்டுச் சத்தமாக வெளியேறும். குறட்டையால் அருகில் தூங்குபவர்களுக்கு மட்டும்தான் தொந்தரவு என்பதில்லை.

    குறட்டைவிடுபவர்களுக்கு தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்படும். குறட்டையை கட்டுப்படுத்தாவிட்டால் இதய பாதிப்பு, ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பல நோய்கள் ஏற்படக்கூடும். குறட்டையை கட்டுப்படுத்துவதற்கு குறட்டை விடுபவரை தூக்கத்தில் ஆழ்த்தி, ஆய்வு செய்யவேண்டும்.

    அதன் மூலம் தூக்கத்தில் குறட்டை எந்த அளவுக்கு, எந்த நேரத்தில் வருகிறது என்பதை முழுமையாக ஆய்வு செய்யமுடியும். இதற்கென இருக்கும் சிறப்பு ஆய்வுக்கூடத்தில், சிறந்த பரிசோதனை கருவிகளோடு அதை செய்யவேண்டும்.

    பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் சிகிச்சை நடக்கும். மேல் தாடை மற்றும் கீழ் தாடைகளை சரியான முறையில் பொருத்துவதன் மூலம் பெரும்பாலான குறட்டை பிரச்சினையை தீர்த்துவிட முடியும்.

    குறட்டையை சரிசெய்வதற்காக தாடை, நாக்கு, கன்னப்பகுதிகள், அண்ணப்பகுதிகள் மற்றும் சுவாச பகுதியுடன் இணைத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். குறட்டை இல்லாத நிம்மதியான தூக்கம்தான் ஆரோக்கியமானது.

    கைதாகுமா அஞ்சான் படக்குழு? அதிர்ச்சியில் திரையுலகம்..!

    By: Unknown On: 17:00
  • Share The Gag
  • சுதந்திர தினத்தை முன்னிட்டு அஞ்சான் படம் திரைக்கு வந்தது. தற்போதைய சூழ்நிலையில் ஒரு படத்திற்கு யூ சான்றிதல் கிடைப்பது அரிது. இந்நிலையில் அதிக சண்டைக்காட்சிகள் இருந்தும் இப்படத்திற்கு யூ சான்றிதல் கொடுத்துள்ளனர்.

    இது எப்படி என்று விசாரித்த போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. தமிழில் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘அஞ்சான்’ படத்துக்கு சான்றிதழ் வழங்க ராகேஷ் குமார் ஒரு மடிக்கணினி மற்றும் ஐ-பேடு பரிசாக வாங்கி இருக்கிறார். இவர் மத்திய சினிமா தணிக்கை வாரிய தலைவர் ஆவார்.

    இவரை கைது செய்து விசாரித்த போது இதை கூறியுள்ளார். இது மட்டுமில்லாமல் அஞ்சான் தெலுங்கு பதிப்பிற்கு ரூ. 50 லட்சம் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதை தொடர்ந்து லஞ்சம் கொடுத்தவர்களும் கைது ஆவர்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

    சத்துவ, ரஜோ, தமோ - குணங்கள் ஒரு பார்வை...!

    By: Unknown On: 16:34
  • Share The Gag

  • மூன்று வகையன குணங்கள்
     

    1. சத்துவ குணத்தின் இலட்சணங்கள்.

    2. ரஜோ குணத்தின் இலட்சணங்கள் .

    3.  தமோ குணத்தின் இலட்சங்கள்



    சத்துவ குணத்தின் இலட்சணங்கள்.

    எப்போது இந்த மனித சரீரத்தில் எல்லாப் புலன்களிலும் அந்தக்கணமெனும் உள்ளத்திலும் தூய்மையும் பகுத்தறிவும் வளர்கின்றனவோ, அந்நிலையில் சத்துவ குனப் வளர்வதை உனர்ந்துகொள்ள வேண்டும்.

    ரஜோ குணத்தின் இலட்சணங்கள்:

     மனிதரின் அந்தக்கரணத்தில் ( உள்மனம்) பண  ஆசையும், செயலாற்றும் முனைப்பும், சுக போகங்களுக்காகவும் சொத்துக்கள் சேர்க்கவும்.புதுப்புதுக் காரியங்களைத் தொடங்குவதும், மன அமைதி இன்மையும், தீவிர ஆசையும் எப்போது அதிகரிக்கின்றனவோ, அப்போது ரஜோ குணம் தலை தூக்குவதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

    தமோ குணத்தின் இலட்சங்கள் :


    எப்போது புலன்களிலும் அந்தக்கரணத்திலும் உணர்வுத் தூய்மை இல்லாதிருக்கிறதோ, எக்காரியத்தையும் முறையாகச் செய்ய மனம் ஈடுபடுவதில்லையோ, செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமலும் செய்யக்கூடாத காரியத்தைச் செய்வதும் அதிகரிக்கிறதோ, உள் மனதில் மோக மயக்கம் பரவியுள்ளதோ, அப்போது தெரிந்து கொள்ளலாம்.தமோ குணம் மேலோங்கியுள்ளது.

     இம்மூன்று குணங்களும் மாறி மாறித் தற்காலிகமாக மேலெழும் நிலையில் மனிதன் மரித்து விட்டால் , அவனுக்கு என்ன கதி கிடைக்கும்?
    சத்துவ குணம் மேலோங்கியிருக்கும் போது மனிதன் மரித்தானானால் புன்ணியாத்மாக்கள் மட்டுமே எட்டத்தக்க நிர்மலமான உத்தம லோகங்களுக்குப் போய் சேருகிறான்.

    ரஜோ குணம் மேலோங்கியிருக்கும் தருணத்தில் இறந்தால் மனித குலத்தின் மறு பிறவி பெறுகிறான்.

    தமோ குணம் மிகுந்திருக்கும் நிலையில் மரித்தால் பிராணிகளாக மிருகம், பறவை முதலியவைகளாகப் பகுத்தறிவு இல்லாத இனத்தில் பிறக்கிறான்.

    கார்த்தி சின்ன வயசுல எப்படி இருந்திருப்பார்? - ஜாலி கற்பனை!

    By: Unknown On: 16:31
  • Share The Gag

  • யார் கண் பட்டுச்சோ, தொடர்ந்து மொக்கைப் படங்களாக் கொடுத்திட்டு இருக்கிற கார்த்தி சின்ன வயசுல எப்படி இருந்திருப்பார்?


    ஸ்கூலுக்கு டவுசர் பாக்கெட்டுக்குள் ரெண்டு கையையும் விட்டுக்கொண்டு ஸ்டைலாகத் தலையை ஆட்டியபடிதான் நடந்து போயிருப்பார்.

    அப்பாவை விட சித்தப்பா ரொம்ப பெஸ்ட் ஃப்ரெண்டு. 'வா சித்தப்பு, ஸ்கூலுக்குப் போகலாம்’ என இழுத்துட்டுப் போயிருப்பார். 

    வகுப்பறை பெஞ்ச்சில் அடிக்கடி 'ஜிந்தாக்கு ஜிந்தா ஜிந்தா ஜிந்தாக்குத் தா’ சவுண்டைக் கொடுத்து பட்டையைக் கிளப்பியதால் ஒருநாள் முச்சூடும் முட்டிக்கால் போட்டிருந்தார்.

    அப்பாவின் டார்ச்சரால் அநியாயத்துக்கு அவதிப்பட்டிருப்பார். கம்பராமாயணத்தை அப்பாவிடம் ஒப்பிக்கும் அசைன்மென்ட்டில் அண்ணன் சூர்யா தப்பித்தாலும் பொறுப்புத் தம்பியாய் மனப்பாடம் செய்து ஒப்பித்திருப்பார்.

    கொஞ்சம் பூசினாற்போல இருந்ததற்காக, ஸ்கூல் ஃபேன்சி டிரெஸ் காம்பெடீஷனில் அண்ணன் சூர்யாவுக்கு முருகர் வேடத்தைக் கொடுத்தவர்கள் இவருக்கு எப்போதும் உல்ட்டாவாய் பிள்ளையார் வேடம்தான் கொடுப்பார்களாம். இதனாலேயே ஏகக் கடுப்பில் இருந்திருப்பார். 

    மழை அலர்ஜி. ஆனால் ஸ்கூல் கேர்ள்ஸை அட்ராக்ட் பண்ண, நனைந்து ஆட்டம் போட்டிருப்பார்.

    அப்பா நல்ல பிராண்டட் சட்டை, பேன்ட் எடுத்துக் கொடுத்தாலும் அழுக்குச் சட்டையையும் அப்பாவின் கைலியும்தான் சாருக்கு ஃபேவரைட் டிரெஸ். அதைப் போட்டுக்கொண்டு நடந்து செல்வதைப் பெருமையாக நினைப்பார்.

    அப்பா ஸ்டைலில் அடிக்கடி விரதம் இருப்பார். 'பிரியாணி’ சாப்பிட்டு விரதத்தை முடிப்பார்.

    பிரபு ரசிகராக இருந்திருப்பார். 'வெள்ளைரோஜா’ படத்தின் 'ஓ மானே மானே...’ பாட்டுதான் கார்த்தியின் ஆல் டைம் ஃபேவரைட்.

    காலை எழுந்ததும் வீட்டில் களேபரம்தான். அண்ணன் சூர்யா, 'சன்ரைஸ் வேணும்’ என அடம்பிடிக்க... தம்பி கார்த்தியோ, 'எனக்கு ப்ரூதான் வேணும்’ என அடம் பிடித்திருப்பார். பொறுத்துப்பார்த்த அப்பா சிவக்குமார், 'கண்ணுகளா....நிலவேம்புக் கஷாயம் குடிங்க. ரொம்ப நல்லதுப்பா’ எனச் சொல்லி வாயில் ஊற்றிவிட்டதால், டரியலோ டரியல் ஆகி இருப்பார்கள்!

    பாராசிடமால் மாத்திரையின் மறுபக்கம் ...தெரியுமா உங்களுக்கு?

    By: Unknown On: 16:29
  • Share The Gag

  • 1. குறுந்தகடு(சி.டி) செயல்படும் விதம்:

    சிடிக்கள் என அழைக்கப்படும் காம்பாக்ட் டிஸ்க்குகள் அதில் பதிந்துள்ள தகவல்களை நடு மையத்திலிருந்து படிக்கத் தொடங்கி விளிம்பில் முடிக்கின்றன. இது மியூசிக் ரெகார்டுகளுக்கு எதிரான வழியாகும். மியூசிக் ரெகார்டுகள் விளிம்பிலிருந்து தொடங்கி நடுப்பாகம் செல்கின்றன.


     2. பாராசிடமால் மாத்திரையின் மறுபக்கம்:

    மழை, குளிர் காலங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சலினால் உடலின் வெப்ப நிலை சராசரிக்கும் மிக அதிகமாகும் போது, "இழுப்பு' போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.காய்ச்சல் வெப்ப நிலையை உடனடியாகக் குறைக்க, பாராசிட்டமால் உதவுகிறது. ஆனால் 18 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, அடிக்கடி பாராசிட்டமால் கொடுத்தால் ஆஸ்துமா, அலர்ஜி போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது என, லண்டனில் நடந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 6 வயது குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராயும் போது, அவர்களுக்கு ஒன்றரை வயதுக்குள் அதிகளவில் பாராசிட்டமால் கொடுத்திருந்தது தெரிய வந்துள்ளது. குழந்தைகள் நல மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, பாராசிட்டமாலைப் பயன் படுத்த வேண்டும். அவர்கள் நிர்ணயித்த அளவு மட்டுமே தர வேண்டும். பெற்றோர்கள் தன்னிச்சையாக பாராசிட்டமாலை குழந்தை களுக்கு தரக்கூடாது.



     3. கைபேசி தொலைந்தால் கண்டுபிடிக்க:

    ஒரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம். 



    4.குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள்:


    இந்தியாவில் ஓராண்டில் பிறக்கும் குழந்தைகளில் 2.5 கோடி பேர் ஏதாவது ஒரு குறையுடன் பிறக்கின்றனர். தமிழகத்தில் ஆண்டுக்கு 11.5 லட்சம் குழந்தைகள் எடைக்குறைவு உட்பட பல்வேறு குறைபாடுகளுடன் பிறக்கிறது. இந்தியாவில் 5 சதவிகிதம் பேர் டிஸ்லெக்சியா, ஆட்டிசம் போன்ற அரிய வகையிலான குறைகளுடன் பிறக்கின்றனர்.


    5. 'ஆண்டி பயாடிக்’ மாத்திரை ஆபத்து!:

    'ஆண்டி பயாடிக்’ மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவதால் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறது. இதனால் உடலில் உள்ள `பி காம்ப்ளக்ஸ்’ குறைகிறது. அதைத்தொடர்ந்து வாய் நாற்றம், தொண்டையில் அல்சர், நாக்கு வறண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. தலைவலியிலும், காய்ச்சலிலும் பல வகைகள் இருக்கின்றன. இதில் ஏதேனும் ஒன்றால் பாதிக்கப்பட்டு, அது எந்த வகை என்று தெரியாமல் ஒரே மாத்திரையை தொடர்ந்து சாப்பிடுவது தவறு. இந்த பழக்கம் அதிகமானால் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகிவிடலாம்.


    6. அழிவின் விளிம்பில் தேசிய விலங்கு புலி:

    இந்தியாவில் 1988 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை, தினமும் ஒரு புலி வீதம் எங்கோ ஒரு மூலையில் கொல்லப்பட்டது. இந்த வனவிலங்கு கழகம் ஒருமுறை கூட, கூடி சிந்திக்காததால் இதை தடுக்க முடியவில்லை. இவற்றின் தோல் சீனர்களின் வீடுகளை அலங்கரிக்கிறது. எலும்புகள் சீன மருந்துவத்தில் முக்கிய இடத்தை பெறுகின்றன. சீனர்கள் அதிகம் விலை கொடுப்பதால், இந்தியாவில் புலிகளை கொன்று ஏற்றுமதி செய்வது அதிகரித்தது. இப்படி புலிகளின் எண்ணிக்கை மிக குறைந்து போய் கொண்டிருப்பது, இந்திய அரசின் கவனத்திற்கு வந்தது. பின் போர் கால அடிப்படையில் புலிகளை காப்பதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.

    காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எப்படி?

    By: Unknown On: 09:18
  • Share The Gag
  •  காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும்.

    காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும்.


    தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும்.

    பூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின் காலையோ உடம்பையோ பிடித்து இழுக்கக் கூடாது. ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது. இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்புதான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும். அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப் பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்து விடும்.

    ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும். பிறகு அப்புறப்படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு.

    ஜாக்கிரதையாகக் கையாளா விட்டல் ஆபரேஷன் வரை போய் முடியும். எனவே மேற்சொன்னவாறு செயல்படவும்.

    சக்கரை நோயாளிக்கு வரும் தொற்று நோய்கள்!- தடுக்க 14 குறிப்புகள்!!

    By: Unknown On: 08:24
  • Share The Gag
  • சக்கரை நோயாளிகளுக்கு சக்கரைநோய் தவிர வேறு தொற்றுநோய்களும் வருகின்றன. அவற்றை அறிந்துகொள்வது அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் நோய்கள் வருவதற்குமுன் தடுத்துக் கொள்ளவும் உதவும்.

    சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருத்தலே மிக நல்லது. கட்டுப்பாட்டில் இல்லாத சக்கரையினாலேயே உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து நோயாளிகள் பல இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள். 1.கால்கள்:சக்கரை நோயாளிகளுக்கு கால்களில் பாதத்தில் உணர்ச்சிக் குறைவு, மதமதப்பு ஆகியவை ஏற்படும். அதனால் காலில் அடிபட்டால் அதனை உணரும் தன்மை குறைந்து இருக்கும். இதனால் காலில் ஏற்படும் காயத்தில் நோய்க்கிருமிகள் பெருகி ஆறாத புண் ஏற்படுகிறது. இதனால் விரல்களையும் பல நேரங்களில் காலையும் எடுக்க நேரிடுகிறது.

    2.சிறுநீரகம்: சிறுநீர் கழிக்கும் பகுதியில் வெடிப்பு, சிறுசிறு புண்கள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன.

    3.வயிறு, குடல்:அசுத்தமான தண்ணீர், சுகாதாரமற்ற உணவுகளால் வயிற்று வலி,வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படுகின்றன.

    4.மூக்கு: சளி அடிக்கடி பிடித்தல், தொண்டைவலி, காய்ச்சல் ஆகியவை சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் சக்கரை நோயாளிகளுக்கு விரைவில் குணமாகாமல் நாள்பட இருக்கும். அதுபோல் அடிக்கடி சளி,காய்ச்சல் ஏற்படும்.

    5.பல்,ஈறுகள்: பற்கள்,ஈறுகளில் வீக்கம், சீழ்வடிதல் ஆகியவை ஏர்படலாம். ஆகையால் பற்கள்,ஈறுகளில் கவனம் வைப்பது அவசியம்.

    6.கண்கள்: கண்களில் கட்ட்டிகள், கண்ணின் வெண்ணிறப் பகுதியில் வைரஸ் தொற்றால் ஏற்படும் (கஞ்சங்டிவைடிஸ்) ஆகியவை ஏற்படலாம்.

    7.காது: காதில் நுண்கிருமிகள் தொற்று ஏற்பட்டால் காதில் சீழ்பிடித்தல் ஏற்படும்.

    இவை நுண் கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள்தான். சக்கரை வியாதியின் பின்விளைவுகள் என்பவை வேறு.

    தொற்றுக்களை தடுக்க:

    1.சக்கரை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.

    2.ஊட்டச்சத்து, நுண்ணுயிச்சத்துக்கள்  நிறைந்த உணவுகள் சாப்பிடுவது.

    3.ஆரஞ்சு,எலுமிச்சை ஆகிய விட்டமின் சி நிறைந்த உணவு சாப்பிடுதல்.

    4. உடற்பயிற்சி,மூச்சுப் பயிற்சி

    5.தினமும் 2 முறை பல் விளக்க வேண்டும்.

    6.தினமும் 1 அல்லது 2 முறை குளிக்கவேண்டும்.

    7.வெளியில் சுகாதாரமற்ற உணவுகள் சாப்பிடக்கூடாது.

    8.சுத்திகரிக்கப்பட்ட நீரானாலும் 3 நிமிடம் கொதிக்கவைத்து குடிக்க வேண்டும்.

    9.சிறுநீர் கழிக்குமிடத்தில் புண் உள்ளவர்கள் சிறுநீர் கழித்தவுடன் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.

    10.வெளியில் சாப்பிட்டால் சாலட், சட்னி, தண்ணீர் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

    11.சாப்பிடும் முன் கைகளை 5 நிமிடம் சோப்பால் கழுவவும்.

    12.பிரிஜ்ஜில் வைத்த உணவை தவிர்க்கவும். மூன்று வேளையும் புதிய உணவே உண்ணவும்.

    13.கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

    14.மீறி தொற்றுநோய் ஏற்பட்டால் உடன் மருத்துவரை அனுகவும்.

    இந்தியாவின் 6 முன்னணி இயக்குனர்களுடன் இணையும் தனுஷ்!

    By: Unknown On: 07:54
  • Share The Gag
  • கோலிவுட்டை தாண்டி தனுஷுன் வெற்றி பாலிவுட்டிலும் அனல் பறக்கிறது. ஹிந்தியில் நடித்த முதல் படத்திலேயே ரூ.100 கோடி வசூல் செய்த முதல் ஹீரோ இவர் தான்.

    தற்போது இவர் ஷமிதாப் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் இவருடன் இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இப்படத்தில் கூடுதலாக இந்திய சினிமாவின் 6 முன்னணி இயக்குனர்களான கௌரி, அனுராக பாஸு, மகேஷ் பட், ராஜ்குமார் ஹிரானி, ராகேஷ் ஓம்பிரகாஷ், கரண் ஜோகர் ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளனர்.

    வெற்றிக்கு முன்னால் நடிகர் சிம்ஹாவிற்கு நடந்த சோக கதை!

    By: Unknown On: 07:24
  • Share The Gag
  • ஜிகர்தண்டா, சூதுகவ்வும் படங்களின் மூலம் நம் எல்லோரையும் கவர்ந்தவர் பாபி சிம்ஹா. இன்று சமூக வலைத்தளத்திலிருந்து அவர் வீட்டு வாசல் வரை பாராட்டுகள் குவிகின்றது.

    ஆனால் இவர் சினிமாவிற்கு வர முயற்சி செய்த காலத்தில் அவர் அடைந்த கஷ்டங்கள் எத்தனை பேருக்கு தெரியும். கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் மார்க்கெட்டிங் வேலையில் ரோட்டில் அலைந்துள்ளார்.

    அப்போது இவர் பேசுவதை யாரும் கண்டுகொள்ள மாட்டார்களாம். இதனால் மனமுடைந்து நிறைய நாள் தனிமையில் அழுதுள்ளார். அதனால் தற்போது யார் இவரை அடையாளம் கண்டு பேசினாலும் 1 நிமிடம் நின்று பேசிவிட்டு தான் செல்வாராம்.

    பருக்கள் மற்றும் கொப்புளங்கள் நீங்கி முகம் பளிச்சிடும்....!

    By: Unknown On: 07:04
  • Share The Gag

  •  வீட்டு வாசலில் வேம்பு – நிழலுக்காகவும் குளிர்ச்சியான காற்றுக்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழக்கம் இது. கிராமங்களில் வழிபாடு தொடங்கி பல் துலக்குவது வரை வேப்ப மரம்தான் வரம்!வேம்பின் தாவரவியல் பெயர் ‘அஸாடிராக்டா இண்டிகா’ (Azadirachta indica). அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்தி என்பவை இதன் வேறு பெயர்கள். இது கடுமையான வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கி வளரும் இயல்புடையது.

    வேப்ப மரக் காற்று நோய்களை அண்ட விடாது என்பது கிராமப்புற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனாலேயே, கோயில்களில் புனித மரமாகப் போற்றப்படுகிறது. பச்சை வேப்பன் இலைகளைச் சுடு தணலில் வாட்டும்போது வெளிவரும் புகை, கொசுக்களை ஓட ஓட விரட்டும். வேப்ப மரத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ‘அஸாடிராக்டின்’(Azadirachtin) என்னும் வேதிப் பொருளில் இருந்து பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப்படுகின்றன. வேப்ப மரத்தின் தண்டுப் பகுதி கட்டுமானப் பணிகளுக்கு உதவுகிறது. அதன் பிசின், கோந்து தயாரிக்கும் மூலப் பொருள் ஆகும்.


    வேப்ப மரத்தின் எண்ணற்ற பலன்களின் காரணமாக, இதைக் ‘கற்பக விருட்சம்’ என்றே சொல்வார்கள். இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் அதிகமான பயன்களைக்கொண்டது.

    இலை:

    வேப்பங்கொழுந்துடன் ஓமம், மிளகு, பூண்டு, சுக்கு, நொச்சிக் கறிவேப்பிலை, சோம்பு, சிற்றரத்தை ஆகியவற்றைத் தனித் தனியாக நெய்விட்டு வதக்கி, உப்புப் போட்டு, நீர் விடாமல் மைபோல் அரைத்து எடுத்துத் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். குழந்தைகளுக்கு உண்டாகும் மந்தம், வயிற்றுப் பொருமல், மார்புச் சளி போன்ற பிரச்னைகளுக்கு இந்தக் கரைசலைக் கொடுத்துவந்தால் நல்ல குணம் கிடைக்கும். இது, குடற்புழுக்களையும் நீக்கும். புண்களைக் கழுவவும், வேப்ப இலைகள் போட்டு ஊற வைத்த நீரைப் பயன்படுத்தலாம்.

    வேப்பங்கொழுந்துடன் குன்றிமணி அளவுக்கு வேர்ச் சூரணத்தைச் சேர்த்து அரைத்து தினம் மூன்று முறை கொடுத்தால், அம்மை நோய் குணமாகும்.

    வேப்பிலையைத் தனியாகவோ அல்லது மஞ்சளுடன் சேர்த்தோ வெந்நீர்விட்டு அரைத்துப் பூசினால், சொறி சிரங்கு, வீக்கம் மற்றும் அம்மைப் புண் ஆகியன குணமாகும். வேப்பிலையை நீரில் நன்கு ஊறவைத்துப் பின் உலர்த்தி உப்பு சேர்த்துப் பல் துலக்கினால், பயோரியா நோய் கட்டுப்படும்.

    பூ:
    வேப்பம் பூக்களை நெய்விட்டு வதக்கி, உப்பு, புளி, வறுத்த மிளகாய், கறிவேப்பிலை இவற்றுடன் சேர்த்து அரைத்துத் துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், நா வறட்சி, ஏப்பம், சுவை இன்மை, வாந்தி ஆகியன குணமாகும். வயிற்றுப் புழு நீக்கியாகவும் இது செயல்படும். வேப்பம் பூவில் வடகம் மற்றும் ரசம் போன்றவையும் தயாரித்து உண்ணலாம். சுவையாக இருக்கும்.
    காய்: மிகவும் கசப்புச் சுவையை உடையது. காய்ச்சலைக் குணமாக்கும் தன்மை கொண்டது.

    விதை:


     புழு நீக்கியாகச் செயல்படும். கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. விதைகளை அரைத்துப் புழு உண்டாகிவிட்ட புண்களின் மேல் தடவினால், புண்களில் இருந்து புழுக்கள் வெளியேறுவதோடு புண்ணும் விரைவில் ஆறும்.

    வேப்ப எண்ணெய்:

    வேம்பின் விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயுடன் எருக்கு இலையைச் சேர்த்து ஒத்தடம் கொடுத்தால், பிடரி வலி போன்ற அனைத்து வலிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
    பட்டை: வேப்பன் பட்டையை நீரில் இட்டுச் சூடாக்கி 30 அல்லது 45 மி.லி. அளவில் குடித்துவந்தால், காய்ச்சல் குணமாகும். உடல் சோர்வையும் நீக்கும். வேப்ப மரப் பட்டையைப் பொடி செய்து, நான்கில் இருந்து எட்டு கிராம் வீதம் தினம் இருவேளை உட்கொண்டால், வாந்தி, சுவையின்மை ஆகியன நீங்கும்.

    பிசின்:

    உலர்த்தி சூரணம் செய்து இரண்டில் இருந்து ஆறு கிராம் அளவில் உட்கொண்டால், மேகரோகம் குறையும்.

    புண்ணாக்கு:

     வேப்பன் புண்ணாக்கு, பயிர்களுக்கு நல்ல உரமாகும். இதை இடித்துப் பொடி செய்து வறுத்துத் தலைவலிக்குப் பற்று போடலாம்.

    வேம்பின் மருத்துவ பயன்கள் இன்றியமையாதது. பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்கும் வேம்பின் குணநலன்களை அறிந்துகொள்வோமா?

    * வேப்ப எண்ணையுடன் தூய தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணையை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச்சிகள் மற்றும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம். மேலும், இந்த கலவை தோல் எரிச்சல், சிறு வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது.

    * வேப்ப இலைகளால் தயாரிக்கப்பட்ட தேனீரைப் பருகும்போது, தோலுக்கு பாதுகாப்பும், உறுதியும் கிடைக்கும்.

    * வேப்ப எண்ணையுடன், தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்து வந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்கி, ஆரோக்கியமான பளபளப்பான தலைமுடியை பெறலாம்.

    * 300 மில்லி நீருடன் 2 முதல் 3 வேப்ப இலைகளை சேர்த்து, கொதிக்க வைத்து ஆறவிடவும். இந்த வேப்ப இலை கஷாயத்துடன், சிறிதளவு தேன் கலந்து பருகி வர, தொண்டைப் புண் குணமாகும்.

    * வேப்ப இலையை உலரவைத்து பொடியாக்கி, சிறிதளவு நீர் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வர, பருக்கள் மற்றும் கொப்புளங்கள் நீங்கி முகம் பளிச்சிடும்.

    * வேப்ப எண்ணையை, காலை, மாலை இருவேளைகளிலும் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.

    * கொசு உற்பத்தியாகும் இடங்களில் வேப்ப விதை மற்றும் வேப்ப எண்ணையை தெளித்து வர, கொசுத்தொல்லை நீங்கி சுகாதாரமாக இருக்கலாம்.

    * 250 மில்லி அளவுள்ளநீரில், 40 முதல் 50 வேப்ப இலைகளைப் போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு ஆறவைத்து வடிகட்டி குடிக்க, உடலில் உள்ள தசைகள் மற்றும் திசுக்கள் பலம்பெறுகின்றன.

    * 2 அல்லது 3 வேப்ப இலைகளை தினமும் மென்று வர, ரத்தம் சுத்திகரிக்கப்படுவதுடன், அஜீரணக்கோளாறும் சரியாகும்.

    * வலி நிவாரணியாகவும், உடல் சூட்டை தணிக்கும் சிறந்த மருந்தாகவும் இது பயன்படுகிறது.

    கடவுளும் தூதுவர்களும் - குட்டிக்கதைகள்!

    By: Unknown On: 07:03
  • Share The Gag

  • கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதாகச் சொல்லப்படுகிறதே. தன்னுடைய தூதுவர்களை அனுப்பமல் ஏன் அவரே நேரடியாக வரவேண்டும்?”

    இது பேரரசர் அக்பர் பீர்பாலை பார்த்து கேட்ட சந்தேகம்

    பீர்பால் கூறினார் "இதற்கு உடனே விடை கூற முடியாது, சற்று அவகாசம் வேண்டும்"

    சில நாட்கள் கழித்து அக்பர் குடும்பத்தாரோடு கங்கையில் படகில் செல்ல
    வேண்டியிருந்தது. ஆழமான பகுதியில் செல்லும் போது அக்பரின் பேரனை தூக்கி பீர்பால் கங்கை நதியில் போட்டு விட்டார்.

    அக்பருக்கு ஆத்திரம் வந்தாலும், உடனே ஆற்றில் குதித்து தனது பேரனைக் காப்பாற்றினார்.

    பீர்பாலை பார்த்து “முட்டாளே! ஏன் இக்காரியத்தைச் செய்தாய்?” என கோபமாகக் கேட்டார்.

    அதற்கு பீர்பால், பேரரசே! உங்களை ஒரு
    கேள்வி கேட்கிறேன். குழந்தை தண்ணீரில் விழுந்த பொழுது,
    படைத்தளபதியை, என்னை மற்றும் வீரர்களை நோக்கி
    ‘குழந்தையைக் காப்பாற்று’ என்று ஆணையிடாமல் நீங்கள் குதித்தது ஏன்? என்று கேட்டார்.

    அதற்கு அக்பர் "குழந்தையைக் காப்பாற்றுவது
    என் கடமையா? அல்லது ஆணையிட்டுக் கொண்டிருப்பது
    பெருமையா?" எனப் பதிலுக்கு கேட்டார்.

    பீர்பால் அமைதியாக கூறினார், "சக்ரவர்த்தி அவர்களே! நீங்கள் என்னிடத்தில் கடவுள் தானே பக்தர்களைக் காக்க உலகிற்கு வருவது ஏன்?

    வேலையாட்கள் இல்லையா? என்று கேட்டீர்கள். எத்தனை பேர் இருந்தாலும், நீங்களே குழந்தையைக் காக்க நினைத்தது போல, ஆபத்தில் இறைவன் தானே வந்து மக்களைக் காப்பான்." என்றார்.