Wednesday, 20 August 2014

தெரியாம நடந்துடுச்சி.. அடிபட்ட மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்! - வேந்தர் மூவீஸ் மதன்!

By: Unknown On: 22:32
  • Share The Gag
  • புலிப்பார்வை பட விழாவில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் எங்களுக்குத் தெரியாமல் நடந்துவிட்டது. அதற்காக மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ் மதன் தெரிவித்துள்ளார்.

    புலிப்பார்வைக்கு எதிராக மாணவர் அமைப்புகளும், தமிழ் ஈழ ஆதரவுக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து இந்தப் படத்தில் ஏகப்பட்ட மாறுதல்களைச் செய்யப் போவதாக படத்தின் இயக்குநர் பிரவீண் காந்தி அறிக்கை விட்டுள்ளார்.

    தெரியாம நடந்துடுச்சி.. அடிபட்ட மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்! - வேந்தர் மூவீஸ் மதன்

    இன்னொரு பக்கம், படத்தின் இயக்குநரும், பிரபாகரன் வேடத்தில் நடித்துள்ளவருமான எஸ் மதன் செய்தியாளர்களைச் சந்தித்து, படத்தில் ஆட்சேபணைக்குரிய ஒரு காட்சி கூட இருக்காது என்று உறுதியளித்தார்.

    "புலிப்பார்வை படத்தைப் பார்த்துவிட்டு அய்யா பழ நெடுமாறனும் அண்ணன் சீமானும் சொன்ன திருத்தங்கள் அனைத்தையும் செய்து வருகிறோம்.

    அனைத்து வகையிலும் தலைவர் பிரபாகரனையும் அவர் மகன் பாலச்சந்திரனையும் இயக்கத்தையும் கவுரவப்படுத்தும் வகையில்தான் இந்தப் படத்தின் காட்சிகள் இருக்கும்.

    தோழர் வேல்முருகன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும் ஒரு உறுதி கூறுகிறன். நீங்கள் அனைவரும் பார்த்துவிட்டு திருப்தியடைந்த பிறகே இந்தப் படத்தை வெளியிடுவேன். இல்லாவிட்டால் எத்தனை கோடி நஷ்டமானாலும் படத்தை வெளியிட மாட்டேன்.

    புலிப்பார்வை நிகழ்ச்சியில் மாணவர்கள் தாக்கப்பட்டபோது, நாங்கள் மேடையில் இருந்தோம். என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனாலும் அடிபட்ட மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.

    ‘அரண்மனை ’ விவகாரம்… குஷ்புவின் கோபத்தில் நியாயம் உண்டா?

    By: Unknown On: 20:52
  • Share The Gag
  • அரசியல்தான் அப்படி என்றால் சினிமாவும் இப்படியா? குஷ்புவின் ட்விட் ஒன்று தயாரிப்பாளரை குறி வைத்து ‘டமால்’ ஏற்படுத்தியதால் இப்போது கோலிவுட்டிலும் பரபரப்பு. சுந்தர்சி யின் நாலெட்ஜ் இல்லாமலேயே அவர் இயக்கிய‘அரண்மனை’ படத்தின் ட்ரெய்லரை அப்படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டு விட்டார். இதனால் அப்செட் ஆன குஷ்பு, ‘சுந்தர்சி ரொம்ப அப்செட் ஆகிட்டாரு தெரியுமா? ஏன்தான் இப்படி செய்யுறாங்களோ?’ என்று கருத்து தெரிவிக்க, ‘தயாரிப்பாளரோட வலி அவருக்குதானேம்மா தெரியும்’ என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

    முதலில் ஏழு கோடிக்கு இந்த படத்தை முடித்து தருவதாக வாக்குறுதி கொடுத்த சுந்தர்சி, முடியும் போது 12 கோடிக்கு கொண்டு வந்துவிட்டாராம். அதுமட்டுமல்ல, படத்தில் விமல், ஓவியா, ஹன்சிகா என்று ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்தாராம். கடைசியில் பார்த்தால், வெறும் ஹன்சிகா மட்டும்தான் இருக்கிறார். சரி, போகட்டும்… பிரமோஷனை ஆரம்பிக்கலாம் என்று சுந்தர்சியை தொடர்பு கொள்ள நினைத்தால், லைனுக்கு வருவதேயில்லையாம்.

    பொறுத்து பொறுத்து பார்த்துதான் இப்படி அதிரடி முடிவெடுத்தாராம் தயாரிப்பாளர்.

    குறைபாடுடைய மார்பகங்களை எப்படி சரி செய்வது?

    By: Unknown On: 19:53
  • Share The Gag
  • குறையில்லாத மார்பகங்கள்

                    மார்பகங்கள் அழகாக இருக்கவேண்டும் என்றால் அவை உருண்டு இருக்கவேண்டும். திரட்சியாய் இருக்கவேண்டும், சதைப் பற்றுடன் இருக்கவேண்டும், கொழுத்து இருக்கவேண்டும், அதுமட்டுமல்ல நிமிர்ந்து தொய்வில்லாமல் விறைப்புடன் இருக்கவேண்டும்.

                    ஆனால் இன்று பலருக்கு கவலைக்குரிய உறுப்பாக இருக்கிறது. டீன் ஏஜ் பெண்கள் என்றால் சிறியதாக இருக்கிறது என்றும், ஒன்றுக் கொன்று அளவில் மாறுபாடு இருக்கிறதென்றும் நினைக்கிறார்கள். திருமணமான பெண்கள் என்றால் சரிந்து, தொங்கி காணப்படுகிறது என்று கவலைப்படுகிறார்கள். பெண்களின் இத்தகைய கவலைகள் நீங்க வேண்டுமானால் மார்பகங்கள் பற்றிய உடலியல் உண்மைகளை புரிந்து கொள்ளவேண்டும்.

    இரண்டு மார்பகமும் ஒரே மாதிரி இருக்குமா?

         இளம்பெண்களில் பலர் தங்களது மார்பகங்களில் ஒன்று சிறியதாகவும், இன்னொன்று பெரியதாகவும் இருப்பதாக கருதுகிறார்கள். அது உண்மைதான். அதற்கு காரணம் இரண்டு மார்பகமும் ஒரே நேரத்தில் சமமாக வளர் வதில்லை. ஒரு மார்பகம் வளரத் தொடங்கும் காலகட்டத்தில் இன்னொரு மார்பகம் வளர்ச்சியை நிறைவு செய்திருக்கும். அதனால்தான் இந்த சிறிய வித்தியாசம். இதற்கு கவலைப்பட வேண்டிய தில்லை.அளவு, வடிவத்தில் பெரிய அளவில் வித்தியாசம் இருந்தால் மட்டும் டாக்டரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.

    பாலூட்டினால் மார்பக அழகு கெட்டு விடுமா?

         பாலூட்டினால் பெண்களின் மார்பக அழகு கெட்டுவிடும் என்று பொதுவாக சொல்லப் படுகிறது. இது முற்றிலும் தவறானது. சொல்லப் போனால் குழந்தைக்கு தாய் பாலூட்டுவதால் அவள் உடல் பெரிதும நலமடைகிறது. இதுதவிர பிரசவம் ஏற்பட்டால் கர்ப்பபை சுருங்கிவிடுகிறது அல்லவா? பெரும்பாலும் அது நியதியான முறையில் சுருங்குவதில்லை. அப்படி சுருங்கிப் பழைய நிலையை அடைய பால் சேகரிப்பு பைகள் வேலைகள் செய்யவேண்டும்.

     தங்கள் மார்பு அழகு குன்றிவிடுமோ, உடல் வனப்பு மங்கிவிடுமோ என்று தவறாக கருதி, ஊறிவரும் அமுதத்தைத் தனக்குள் அமுக்கிவைத்தால் விளைவது நன்மை அல்ல, தீமைதான்.

    குறைபாடுடைய மார்பகங்களை எப்படி சரி செய்வது?

         பல பெண்கள் செழித்த மார்பகங்கள் அமைய மருந்து, மாத்திரைகள் உள்ளனவா என்று கேட்கிறார்கள். இருக்கத்தான் செய்கிறது. மார்பகங்கள் கொழுப்பு தசைகளால் ஆனவை என்பதால் நிறைய சத்துணவு சாப்பிட்டால் இயற்கையாகவே அவை பெரியதாக வாய்ப் பிருக்கிறது. ஒரு சில விசேஷ பயிற்சிகள் செய்தும் மார்பகங்களை பெரியதாக்கவோ, தொங்கிய மார்பகங்களை சரிசெய்யவோ முடியும்.

         ஹார்மோன் மருந்து மாத்திரைகளால் மார்பகங்களை பெரியதாக்க முடியும். ஆனால் அவை அளவுக்கு மீறி பெருத்துவிடும். வலி வரக்கூடும். சில பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்கிறார் கள். இந்த அறுவை சிகிச்சையின்போது மார்பகத்தின் அடிப்பகுதியில் திறப்பை உருவாக்கி, அதன் வழியாக சிலிக்கான் பையை செலுத்தி உள்ளே வைத்து தைத்துவிடுவார்கள். அதனால் மார்பகங்கள் தொய்வு இன்றியும், பெரியதாகவும் காணப்படும். ஆனால் குழந்தைக்கு பாலூட்ட முடியாது. மேலும் பல பின் விளைவுகளும் ஏற்படும்.

         இயற்கையாகவே மார்பகங்கள் பெரியதாக அமையப்பெற்ற பெண்கள் அதனால் பெரும் அவஸ்தைப் படுவதுண்டு. சிறியதாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கான மருந்துகள் ஹோமியோபதியில் உள்ளது.

    ஹோமியோபதி மூலம் முழுநிவாரணம்

         மார்பகங்களை எடுப்பாகவும், அழகாகவும், திரட்சியாகவும் மாற்றுவதற்கு ஆபத்து இல்லாத சுலபமான நிச்சயமான பலன் கிடைக்கக் கூடிய ஒரே முறை ஹோமியோபதிதான். தற்போது ஹோமியோபதியில் பல மருந்து கம்பெனிகள் தயாரிப்பில் வெளிவரும் கிரீம்களும் கிடைக்கிறது.

         எப்படிப்பட்ட குறைபாடு கொண்டு மார்பகமாய் இருந்தாலும், அதை உன்னத நிலை அடைந்துள்ள இன்றைய ஹோமியோபதி மற்றும் மாற்று மருத்துவங்கள் சரிசெய்துவிட முடியும். அறுவை சிகிச்சையின்றி குணப்படுத்த அருமை யான ஹோமியோபதி மருந்துகள் உள்ளன.அருகிலுள்ள தகுதியும், அனுபவமும் உள்ள ஹோமியோபதி மருத்துவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.

    எச்சரிக்கை - ஏமாற்றும் விளம்பரங்கள் :

         தற்போதைய நாட்களில் அனைத்து முன்னனி பத்திரிகை, புத்தகங்கள், இதழ்களிலும், எடுப்பான மார்பகம் வேண்டுமா? என பல்வேறு தலைப்புகளில் விளம்பரங்கள் வந்து கொண்டு இருக்கிறது. இவை அனைத்தும் வெளிமாநிலங் களை சார்ந்த நிறுவனங்கள் பெயர்கள், தொலைபேசி எண்கள் இருக்கும். தொடர்பு கொண்டால் உங்கள் முகவரியைப் பெற்றுக் கொண்டு, ஒருவாரத்தில் ஒரு பார்சல் வரும், அவர்கள் கூறிய தொகையை விட அதிக பணம் செலுத்தி பார்சலை வாங்கவேண்டும். அப்படி வாங்கி திறந்து பார்த்தால் உள்ளே ஒரு குப்பியில் ஏதோ ஒரு பவுடரும், டப்பாவில் ஏதோ ஒரு கிரீமும் இருக்கும். வேறு பலருக்கு மரப்பொடியும் வருகிறது. எனவே இந்த விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம்.

    களை கட்ட ஆரம்பித்துள்ள தீபாவளி ரேஸ்!

    By: Unknown On: 18:58
  • Share The Gag
  • சக ஹீரோக்களுடன் போட்டிபோட்டு ஜெயிக்க வேண்டும் என்ற மனோபாவம் இன்றைய ஹீரோக்களிடம் குறைந்துவிட்டது. அதனால்தான் யாருடைய படமும் வெளிவராத நாளாகப் பார்த்து அந்த நாளில் தன்னுடைய படத்தை வெளியிட ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி தனியாக களத்தில் குதித்தால்தான் தன் படம் ஓரளவுக்கு வசூலை குவிக்கும் என்று கணக்குப்போட்டு செயல்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தெரிந்தோ தெரியாமலோ தீபாவளி அன்று மற்ற படங்களுடன் போட்டிபோட்டு வெற்றிபெற வேண்டிய நிலை உருவாகி உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் சமந்தா நடிக்கும் கத்தி, விஷால் நடிப்பில் ஹரி இயக்கும் பூஜை ஆகிய படங்களுடன் தனுஷின் அனேகன் படமும் தீபாவளி ரேசில் குத்திக்கவிருக்கிறதாம்.

    கே.வி.ஆனந்த் இயக்கி வரும் அனேகன் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. தனுஷ், அமீரா தஸ்தர் சம்பந்தப்பட்ட ஒரு டூயட் பாடல் மட்டுமே பாக்கி உள்ளதாம். இந்தப் பாடலை அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னையில் படமாக்க திட்டமிட்டுள்ளாராம் கே.வி.ஆனந்த். இத்துடன் அனேகன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடுமாம்.

    மிகப் பெரிய பட்ஜெட்டில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து வருகிறார். தனுஷின் வேலியில்லா பட்டதாரி பாக்ஸ் ஆஃபீசில் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ள நிலையில், தனுஷின் அடுத்த படமாக வரவிருக்கும் அனேகன் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.

    விஜய்யின் கத்தி, விஷாலின் பூஜை படங்களுடன் தனுஷின் அனேகன் படமும் தீபாவளியன்று மோதவிருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இரு மடங்காகி உள்ளது. இந்தப் படங்களுடன் கமல் நடிக்கும் உத்தமவில்லன், சிவகார்த்திகேயன் நடிக்கும் டாணா ஆகிய படங்களும் கூட தீபாவளிக்கு வரவிருக்கும் படங்களின் பட்டியலில் உள்ளன.

    கத்தி படம் கை மாறியது! கண்டிப்பாக திரைக்கு வரும்! ரசிகர்கள் உற்சாகம்!

    By: Unknown On: 18:32
  • Share The Gag
  • கத்தி படத்தின் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது. லைக்கா நிறுவனம் ராஜபக்சேவின் நண்பர் என்பதால் இப்படத்தை வெளியிட விடமாட்டோம் என்று பல அமைப்புகள் கூறி வந்தன.

    தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கத்தி படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ வாங்கியுள்ளது.

    இனி படம் ரிலிஸில் எந்த தடையும் இருக்காது என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    புதினாக்கீ​ரையின் ம‌க‌(ரு)த்து​வ‌ம்..!

    By: Unknown On: 16:14
  • Share The Gag
  • அடிக்கடி புதினாக்கீரையைச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள இரத்தம் சுத்தமாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

    எக்காரணத்தினாலாவது வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருந்தால், அந்தச் சமயம் புதினாக்கீரைத் துகையலைச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

    சிறு குழந்தைகளின் வயிற்றுப் போக்கு, வாந்தி குணமாக . . .

    சிறு குழந்தைகளுக்கு ஆகார விகற்பத்தின் காரணமாக வயிற்றுப் போக்கு வாந்தி ஏற்படுவதுண்டு. இதற்குப் பல வகையான மருந்துகள் உண்டு என்றாலும் புதினாக்கீரைக் கஷாயம் கைகண்ட மருந்தாக இருக்கிறது. புதினாக்கீரை இலைகளை மட்டும் ஆய்ந்து எடுத்து ஒரு கைப்பிடியளவு அம்மியில் வைத்து லேசாக நைத்து, அதை ஒரு சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து, நன்றாக வதக்கி அதில் ஆழாக்களவு தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அரை ஆழாக்களவாகச் சுண்டியபின் சட்டியை இறக்கி வடிகட்டி, அதில் வேளைக்குச் சங்களவு வீதம் காலை மாலையாக மூன்று வேளை கொடுத்தால் போதும், வயிற்றுப் போக்கு, வாந்தி நின்று விடும்.

    கர்ப்பஸ்திரீகளுக்கு ஏற்படும் வாந்தியை நிறுத்த

    கருத்தரித்த இரண்டாவது மாதம் முதல் கருத்தரித்திருப்பதை மெய்ப்பிக்க, காலை வேளையில் வாந்தி உண்டாகும். சில சமயம் ஆகாரம் உண்டவுடன் வாந்தி வரும். தலைச் சுற்றல், சோம்பல், அரோசிகம் ஏற்படும். இதை மசக்கை வாந்தி என்று கூறுவார்கள். தினசரி இப்படி இருக்கும். 2, 3 வாரங்களுக்குப் பின் இது தானே மாறிவிடும். சில பெண்களுக்கு பிரசவிக்கும் வரை வாந்தி சாயந்திர வேளைகளில் ஏற்படும். இந்த மாதிரி வாந்தியை நிறுத்த புதினா நன்கு பயன்படுகிறது.

    புதினாக்கீரையைக் கொண்டு வந்து ஆய்ந்து எடுத்து, உரலில் போட்டு இடித்து அதை எடுத்துச் சாறு பிழிய வேண்டும். பிழிந்த சாறு இரண்டு ஆழாக்களவு எடுத்து அதைத் துணியில் வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, களிம்பு ஏறாத ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் இந்தச் சாற்றைவிட்டு அதில், ஒரு சீசா அளவு அதாவது சின்னபடிக்கு ஒரு படியளவு சீமைக் காடியை விட்டு நன்றாகக் கலந்து ஒரு மணி நேரம் வைத்திருந்து, பிறகு அத்துடன் அரை கிலோ பழுப்புச் சர்க்கரைச் சேர்த்து நன்றாகக் கரைத்து, இந்தச் சாற்றை வேறு ஒரு பாத்திரத்தின் மேல் துணி வேடு கட்டி அதன் மூலம் வடிகட்டி எடுத்து, முதல் பாத்திரத்தைக் கழுவி அதில் இதைவிட்டு, அடுப்பில் வைத்து, நன்றாகக் காய்ச்ச வேண்டும். இந்த சமயம் மருந்து சர்பத் போல பாகுபதமாகும். நன்றாக ஆறியபின் அதை ஒரு சுத்தமான சீசாவில் விட்டு பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாந்தி வரும் சமயம் இந்தப் பாகில் அரைத் தேக்கரண்டியளவு எடுத்து உள்ளங்கையில் விட்டு, நாவால் நக்கி அதை வாயில் வைத்துச் சுவைத்து விழுங்க வேண்டும். இந்த விதமாக ஒரு நாளைக்கு எத்தனை தரம் வேண்டுமானாலும் சுவைக்கலாம். எந்த விதமான கெடுதலும் ஏற்படாது.

    ரொட்டி, ஆப்பம், தோசை, இட்டிலி இவைகளை இந்தப் பாகில் தொட்டுத் தின்னலாம். ருசியாக இருக்கும். காலை வேளையில் இவ்விதம் சாப்பிடுவது நல்லது.

    புதினாக்கீரையை இரண்டு அவுன்ஸ் எடுத்து, ஆறு அவுன்ஸ் நீரில் போட்டு, மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை தெளிய வைத்து குடித்து வரவும். இக்குடிநீரை அருந்துவதால் வாந்தி, வாயுவு கோளாறுகள், வயிற்றுப் போக்கு, பொருமல் போன்ற நோய்கள் குணமாகும்.

    புதினாக்கீரையைத் துவையலாகவோ அல்லது அவித்து பிற உணவுகளுடன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் மாதவிலக்கு கோளாறுகள் சீர்படும். புதினாக்கீரையை கஷாயமாகவோ அல்லது சூப்பாகவோ தயாரித்து அருந்திவரின் இருதய சம்பந்தமான நோய்கள் நிவாரணம் பெறும். தொண்டைப்புண், மூச்சுத்திணறல் போன்ற கோளாறுகளுக்கு புதினாக்கீரையை நன்கு அரைத்து கழுத்தில் வலியுள்ள பகுதியில் பற்றுப் போட்டு வர குணம் தெரியும்.

    புதினாக்கீரையைக் கொண்டு ஒரு அருமையான பற்பொடி கூட தயார் செய்யலாம். இந்த புதினா பற்பொடியைக் கொண்டு தினசரி பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும். கஷ்டத்தைப் பாராமல் ஒவ்வொருவரும் புதினா பற்பொடி தயாரித்து பல்துலக்கி வந்தால், பற்கள் முத்தைப் போல வெண்மையாகவும், பிரகாசமாகவும் தோன்றும். பல் சம்பந்தமாக எந்த வியாதியும் வராது. இதைத் தயாரிப்பதும் சுலபம் தான்.

    புதினாக்கீரையை எடுத்து, சுத்தம் பார்த்து, அதை ஒரு பெரிய தட்டு அல்லது முறத்தில் போட்டு வெய்யிலில் நன்றாகக் காயவைக்க வேண்டும். புதினா காய்ந்து சருகான பின் உரலில் போட்டு இடிக்கவேடும். இந்த சமயம் இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு கறி உப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இடித்துச் சல்லடையில் சலித்து, கண்ணாடி அல்லது மங்கு ஜாடியில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்த வேண்டும். தகர டப்பா கூடாது.

    வளையல்களில் எத்தனை வகைகள் உள்ளது?

    By: Unknown On: 16:05
  • Share The Gag
  • 1, எனாமல் ஒர்க் இடம்பெற்றிருக்கும் டிசைனர் சிக்சாக் வளையல்கள்.

    2, எனாமல், ஒயிட் கோல்டு, பிரேசியஸ் ஸ்டோன் போன்றவைகள் கண்களைக் கவரும் விதத்தில் இடம் பெற்றுள்ள அலங்கார வளையல்.

    3, ரேடியம் கோட்டிங் கொடுத்துள்ள ஹெட் வளையல்.

    4, ரூபி ஸ்டோன் பொருத்தியுள்ள எத்னிக் வளையல்.

    5, சிங்கப்பூர் நெட் வளையல்.

    6, குந்தன் ஸ்டோன் வளையல்.

    7, ரூபி கற்கள் பதித்த செட்டி நாட்டு மாடல் வளையல்.

    8, எனாமல் ஒர்க் ஸ்டோன் வளையல்.

    9, ஒயிட் கோல்டு, எனாமல், பிரேசியஸ் ஸ்டோன் சேர்ந்த வளையல்.

    10, செட்டிநாட்டு ரூபி வளையல்.

    11, எனாமல் ஒர்க் இடம்பெற்றிருக்கும் ஆன்டிக் வளையல்.

    12, முத்து, ரூபி போன்றவைகளை பொருத்திய ஆன்டிக் வளையல்.

    13, ரேடியம் டிசைன் செய்யப்பட்டுள்ள சிக்சாக் வளையல்.

    14, பிரேசியஸ் ஸ்டோன் பொருத்தியுள்ள டபுள் டிசைன் வளையல்.

    15, ஒயிட் கோல்டு நெட் வளையல்.

    16, மேட் பினிஷ் வளையல்.

    தல-55ல் மீண்டும் ஜெஸ்ஸியாக த்ரிஷா! ருசிகர தகவல்..!

    By: Unknown On: 15:43
  • Share The Gag
  • தமிழ் சினிமாவின் என்றும் கனவுகன்னியாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் தற்போது கௌதம் இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

    இப்படத்தில் இதுவரை மற்ற படங்களில் அஜித்தை காதலித்து மட்டும் வந்த இவர் முதன் முறையாக இதில் மனைவியாக நடிக்கிறார்.

    மேலும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் எப்படி வருவாரோ, அதே தோற்றம் மற்றும் அழகுடன் தான் இந்த படத்திலும் தோன்றுவார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    தமிழ் சினிமாவின் என்றும் கனவுகன்னியாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் தற்போது கௌதம் இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
    இப்படத்தில் இதுவரை மற்ற படங்களில் அஜித்தை காதலித்து மட்டும் வந்த இவர் முதன் முறையாக இதில் மனைவியாக நடிக்கிறார்.
    மேலும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் எப்படி வருவாரோ, அதே தோற்றம் மற்றும் அழகுடன் தான் இந்த படத்திலும் தோன்றுவார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
    - See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/107558/#sthash.6LwuD7BI.dpuf

    குக்கரை பராமரிங்க! ஆயுள் நீடிக்கும்!!

    By: Unknown On: 14:53
  • Share The Gag
  • குக்கரை பராமரிங்க! ஆயுள் நீடிக்கும்!!

    இன்றைக்கு பெரும்பாலோனோர் வீடுகளில் குக்கர் சமையல்தான். எரிபொருளும் சிக்கனமாகிறது,சமையல் எளிதாக முடியும் என்பதால் கிராமங்களிலும் குக்கர்தான் உபயோகிக்கின்றனர். குக்கரை சரியாக பராமரித்தால் அதன் ஆயுள் நீடிக்கும், நமக்கும் பாதுகாப்பாக இருக்கும். ப்ரசர் குக்கர் பராமரிப்பது பற்றி நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

    சுகாதாரம் அவசியம்

    சமைத்து முடித்த உடன் குக்கரின் கேஸ்கட், விசில் போன்றவைகளை தனித்தனியாக கழுவி துடைக்க வேண்டும். ப்ரஸ் கொண்டு விசில் உள்ள உணவு துணுக்குகளை நன்றாக கழுவவேண்டும்.

    குக்கரின் அடிப்பகுதியில் விளக்கி கழுவ வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டிருப்பார்கள். நாம் அதிக அளவில் ஸ்க்ரப் கொண்டு தேய்க்காமல் மென்மையான ஸ்பாஞ்ச் வைத்து குக்கரின் அடிப்பகுதியை கழுவலாம்.

    குக்கரில் அடி பிடித்து விட்டாலோ, கரை படிந்து விட்டாலோ ஸ்க்ரப்பர் ப்ரஸ் கொண்டு கிளீன் செய்யலாம். ஒரு கப் குளிர்ந்த நீரில் சில துளிகள் சோப் நீர் விட்டு குக்கரில் ஊற்றவும். அதை லேசா சூடாக்கி பின்னர் கழுவினால் தீய்ந்து போன உணவுகள் ஈசியாக வந்து விடும்.

    கறுப்பு வெள்ளையாகும்

    குக்கரின் உட்புறம் கறுப்பாக இருக்கும். எலுமிச்சைத் தோல் அல்லது வினிகர் கொஞ்சம் போட்டுப் பின்பு அதில் வைக்கக் கூடிய பாத்திரங்களை அடுக்கிவைப்பதால் அதன் உட்புறம் கறுப்பாகாமல் இருக்கும். கறுப்பாக இருந்தாலும் இந்த முறையின் மூலம் கறுப்பு நீங்கி விடும்.

    குக்கரின் ரெகுலேட்டர், விசில் போன்றவைகளை குழாயில் காண்பித்து கழுவுவது பழைய முறை. தற்போது தனித்தனியாக கழுவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே விசில் பகுதியை தனித்தனியாக உரசி கழுவி நன்றாக உலர்ந்த துணி கொண்டு துடைத்து வைக்கலாம் நீண்ட நாட்களுக்கு வரும்.

    கேஸ்கட் பராமரிப்பு

    சிலர் குக்கர் மூடியைத் திறந்தபின்பு கேஸ்கெட்டை எடுக்காமல் அப்படியே வைத்துவிடுவார்கள். சிலர் கேஸ்கெட்டை இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒரு முறைதான் சுத்தம் செய்வார்கள். இது மிகவும் தவறு. சூட்டோடு அப்படியே போடுவதால் ரப்பர் அப்படியே இறுகிப்போய்விடும். இதனால் கேஸ்கெட் அதிக நாள் உழைக்காது.

    சமையல் முடிந்தவுடனேயே குக்கரின் மூடியைத் திறந்து ரப்பர் கேஸ்கட்டைக் கழற்றி அதை நன்கு சுத்தமாகக் கழுவி நன்கு இழுத்துவிட்டுப் பின்பு உரிய இடத்தில் மாட்டவேண்டும். இப்படிச் செய்தால் ரப்பர் கேஸ்கெட் அதன் ஒரிஜினல் சைஸில் இருக்கும். நீண்ட நாள் உழைக்கும்.

    நீண்ட ஆயுள் கிடைக்கும்

    தற்போது காப்பர் பாட்டம், நான் ஸ்டிக் சாண்ட்விட்ச் போன்ற வகைகளைப் பயன்படுத்துகிறார்கள். கேஸ் அடுப்பில் தீயை அதிகமாக வைத்து இவற்றைப் பயன்படுத்தக் கூடாது. தண்ணீர் அதிகம் இல்லாமல், தீயும் அதிகமாக இருந்தால் பாத்திரம் சீக்கிரம் கெட்டுவிடும். இவ்வகைப் பாத்திரங்களைப் பயன்படுத்தும்போது அடுப்பில் தீயை ரொம்பவும் குறைத்து "சிம்'மில் வைத்தாலே போதும். சமையலும் சீக்கிரம் முடியும், கேஸ் மிச்சப்படும்.

    நமக்கு பாதுகாப்பு

    வருடத்திற்கு ஒருமுறை குக்கரை அதற்குரிய கடைகளில் கொடுத்து இன்ஸ்பெக்சன் செய்யவேண்டும். கேஸ்கட், விசில், போன்றவைகள் சரியாக இருக்கின்றனவா என்பதை பார்க்கவேண்டும். சின்னதாக ஏதாவது பிரச்சினை என்றாலும் குக்கர் வெடித்து விடும் ஜாக்கிரதை. குக்கரின் மூடி சரியாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். லூசாக இருந்தால் உடனே மாற்றவேண்டும். அடிக்கடி எண்ணெய் ஊற்றி பராமரித்தால் நீண்ட நாட்களுக்கு வரும்.

    குக்கர் பராமரிப்பு குக்கரின் ஆயுளை மட்டும் நீட்டிப்பதில்லை. குக்கர் வெடிக்காமல் இருந்தால் நம் ஆயுளும் நீடிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இவைகளைப் பராமரிக்கும் விதத்தைப் புரிந்து கொண்டால் ஆரோக்கியமும் கிடைக்கும். சிக்கனமும் ஆகும்.

    விஜயுடன் சேர்ந்த இவர் என்ன ஆகப்போறாரோ...!

    By: Unknown On: 11:06
  • Share The Gag
  • 3, எதிர்நீச்சல், மான்கராத்தே படங்களில் வித்தியாசமான இசையை கொடுத்து குறுகிய காலத்தில் முன்னணி இசையமைப்பாளராகி விட்டவர் அனிருத். அதோடு, விஜய்யின் கத்தி படத்திற்கும் இசையமைத்து மேல்தட்டு இசையமைப்பாளர்களை ஒரு உலுக்கு உலுக்கி விட்டார் அனிருத்.

    மேலும், கத்தி படத்தைப் பொறுத்தவரை தனக்கு மிக முக்கியமான படமாக நினைக்கிறார் அனிருத். அதனால் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து வரும் அவர், இப்படத்திற்கு எதிர்ப்பாக மாணவர் அமைப்புகள் கொடி பிடித்திருப்பதால் மனதளவில் கலவரத்துடன் காணப்பட்டார். ஆனால், இப்போது படம் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதால், பாடல்களை தான் முடித்துக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், அந்த விசயங்களை மனதில் போட்டு குழப்பாமல் கடைசி பாடலை பதிவு செய்யும் வேலைகளில் இறங்கி விட்டார்.

    அந்த பாடலை பாடப்பேகிறவர் விஜய். அதனால் அவரும் ஏற்கனவே தனக்கு தரப்பட்ட டியூனை மைண்டில் ஏற்றி பயிற்சி செய்து கொண்டிருக்க, இன்னும் ஓரிரு தினங்களில் அந்த பாடலும் ரெக்கார்டிங் செய்யப்பட்டு, படப்பிடிப்பு நடக்கிறதாம். அதோடு கத்தி படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடுமாம்.

    விஜய் பாடப்போகும் இந்த பாடல் பற்றி அனிருத் கூறுகையில், எனது ஒவ்வொரு அவுட்புட்டுமே சிறப்பாக இருக்க வேண்டும் என்று நான் நினைப்பேன். அதிலும் இது விஜய் சார் படம் என்பதால் எனக்கு ரொம்ப ஸ்பெசல். அதனால் ரசிகர்கள் இதுவரை கேட்டிராத அற்புதமான டியூன் மற்றும் இசைக்கலவையை செய்திருக்கிறேன். அதனால் கத்தி படத்தின் பாடல்கள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆசசர்யத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும் என்கிறார் அனிருத்.

    வீட்டு உணவுகளே விஷமாகிறது - ஜாக்கிரதை !

    By: Unknown On: 10:33
  • Share The Gag
  • வித்தியாசமான உணவை, ருசியாக சாப்பிட எல்லோரும் விரும்பத்தான் செய்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் அந்த சுவை மிகுந்த உணவே விஷமாகி, உடலை கடுமையாக பாதித்துவிடுகிறது. பெரும்பாலும் வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகள் உடலுக்கு ஏற்புடையதாக இருக்கிறது.

    எந்தெந்த உணவுகள் நமது உடலுக்கு ஏற்றதாக இருக்குமோ, அதில் நமக்கு பிடித்த மசாலாக்கள் சேர்த்து சமைப்பதால் வீட்டு உணவுகள் பெரும்பாலும் உடலுக்கு பிரச்சினை தராததாக இருக்கிறது. வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகள் சிறந்ததாக இருந்தாலும், அது முழு ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும் என்றால், அதிலும் கவனிக்கவேண்டிய விஷயங்கள் சில உண்டு.

    * காய்கறிகளை நன்றாக கழுவவேண்டும். நன்றாக கழுவாவிட்டால் அதில் அழுக்கும், பயன்படுத்தப்பட்ட பூச்சி மருந்துகளின் தாக்கமும் இருக்கும். அதனால் பெயரளவுக்கு கழுவாமல் நன்றாக கழுவவேண்டும். காய்கறிகளை சிறிது நேரம் மஞ்சள் தூள், உப்பு கலந்த நீரில் போட்டுவைத்துவிட்டு பின்பு கழுவி, நறுக்குங்கள். அவ்வாறு செய்தால் பூச்சிக் கொல்லி மருந்துகளால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் அகன்றுவிடும்.

    * வேலைக்கு போகும் அவசரத்திலோ, பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் அவசரத்திலோ காய்கறிகளை சுத்தம் செய்து சமைக்காதீர்கள். அதை சாப்பிடும்போது குறிப்பாக உங்கள் குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்படலாம்.

    * பெரும்பாலான சாலையோரக் கடைகள் தூய்மையாக இருப்பதில்லை. அவர்கள் தரமான உணவுப் பொருட்களை வாங்கி, சுகாதாரமாக உணவுகள் தயாரிப்பதும் இல்லை. பழைய உணவுகளையும் வழங்கிவிடுகிறார்கள். அது விஷத்தன்மை கொண்டதாகிவிடுகிறது.

    * எண்ணெய்யில் பொரிக்கப்படும் உணவு வகைகள் வாய்க்கு ருசியாக இருந்தாலும் வயிற்றுக்கு தொந்தரவாகவும், ஆரோக்கியத்திற்கு கெடுதியாகவும் மாறிவிடுகிறது. ஏற்கனவே பொரித்த எண்ணெய்யில் மீண்டும் மீண்டும் சமைப்பதால் ஏற்படும் விளைவு மிக மோசமானது.

    * சாலையோர கடைகளில் பஜ்ஜி, பக்கோடா, சமோசா போன்றவை அமோகமாக விற்பனை யாகிறது. பொரித்துக்கொண்டே இருக்கும் போது, எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும்போது ஒருசில கடைகளில், பாலிதீன் கவரில் இருக்கும் எண்ணெய்யை, வெட்டி அதன் உள்ளே ஊற்றுவதற்கு பதில், ஏற்கனவே கொதித்துக்கொண்டிருக்கும் எண்ணெய்யில் பாக்கெட்டின் ஓரத்தை அப்படியே காட்டிவிடுகிறார்கள்.

    பாலிதீன் கவர் உருகி எண்ணெய் உள்ளே பாய்கிறது. பாலிதீன் எண்ணெய்யில் கலப்பதும், அதை மக்கள் வாங்கி சுவைப்பதும் திகிலான விஷயம். ஆபத்தான நோய்களை இது உருவாக்கும். இது மட்டுமல்ல, இதுபோன்ற ஆபத்தான அதிரடி வேலைகள் பலவற்றை சாலையோர கடைகளில் செய்கிறார்கள்.

    * உயர்ரக ஓட்டல்களில் மக்கள் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். வாடிக்கையாளர்களின் தேவைக்காக அங்கே கோழி, மீன் போன்றவைகளை பதப்படுத்திவைத்திருக்கிறார்கள். அவைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் சமைத்திடவேண்டும்.

    சமைத்ததை அதிகம் தாமதிக்காமல் வாடிக்கையாளர்கள் சாப்பிடவும் வேண்டும். ஒருசில ஓட்டல்களில் காலங் கடந்த உணவுகளில் வாசனைப் பொருட்களை கலந்து புதியதுபோல் வழங்கிவிடுகிறார்கள். அதுவும் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.

    * கீரை வகைகளை சமைக்கும்போது குறிப்பிட்ட நேரம் வரை அதை வேகவிட வேண்டும். குறைந்த நேரமே வேகவைத்து அவசரமாக சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல.

    கடும் சிக்கலில் கத்தி, புலிப்பார்வை… ஒன்று திரண்ட 65 தலைவர்கள்

    By: Unknown On: 09:12
  • Share The Gag
  • சர்ச்சைக்குரிய புலிப் பார்வை மற்றும் கத்தி திரைப்படங்களை வெளியிடக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் தனியரசு எம்.எல்.ஏ, புலவர் புலமைப்பித்தன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலர் கோவை ராமகிருட்டிணன் உட்பட 65க்கும் மேற்பட்ட இயக்கங்களின் தலைவர்கள் இணைந்து போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

    சென்னையில் தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் 65 பேர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, கொங்கு இளைஞர் பேரவையின் எம்.எல்.ஏ தனியரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, முன்னாள் எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலர் கோவை ராமகிருட்டிணன், கூடங்குளம் அணு உலை இயக்க எதிர்ப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன், தமிழ்த் தேசப் பேரியக்கத்தின் பெ. மணியரசன், தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் தியாகு, திராவிடர் விடுதலை கழகத்தின் தபசி குமரன், புதுச்சேரி மீனவர் வேங்கைகள் அமைப்பின் மங்கையர்செல்வன், தமிழ்ப் புலிகள் திருவள்ளுவன், திராவிட முன்னேற்ற மக்கள் கழகத்தின் ஞானசேகரன், மே 17 இயக்கத்தின் திருமுருகன், இளந்தமிழகம் இயக்கத்தின் செந்தில்குமார், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் பொழிலன் என மொத்தம் 65 அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    இந்தக் கூட்டத்தில் கத்தி, புலிப்பார்வை ஆகிய திரைப்படங்களை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று முதல் கட்டமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையும் மீறி கத்தி, புலிப்பார்வை திரைப்படத்தை வெளியிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 65 அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி ஆலோசித்து போராட்ட அறிவிப்பை வெளியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

    இதையடுத்து கத்தி புலிப்பார்வை திரைப்படம் சம்பந்தப்பட்டவர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள். எதிர்ப்பது வெறும் மாணவர் அமைப்புதானே என்று முன்பு அலட்சியம் காட்டிய அவ்விரு பட தயாரிப்பாளர்களும், இந்த 65 பேர் கொண்ட மாபெரும் போராட்டக்குழுவை எப்படி சமாளிப்பது என்று குழம்பி போயிருக்கிறார்களாம்.