Wednesday, 20 August 2014

Tagged Under: ,

களை கட்ட ஆரம்பித்துள்ள தீபாவளி ரேஸ்!

By: Unknown On: 18:58
  • Share The Gag
  • சக ஹீரோக்களுடன் போட்டிபோட்டு ஜெயிக்க வேண்டும் என்ற மனோபாவம் இன்றைய ஹீரோக்களிடம் குறைந்துவிட்டது. அதனால்தான் யாருடைய படமும் வெளிவராத நாளாகப் பார்த்து அந்த நாளில் தன்னுடைய படத்தை வெளியிட ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி தனியாக களத்தில் குதித்தால்தான் தன் படம் ஓரளவுக்கு வசூலை குவிக்கும் என்று கணக்குப்போட்டு செயல்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தெரிந்தோ தெரியாமலோ தீபாவளி அன்று மற்ற படங்களுடன் போட்டிபோட்டு வெற்றிபெற வேண்டிய நிலை உருவாகி உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் சமந்தா நடிக்கும் கத்தி, விஷால் நடிப்பில் ஹரி இயக்கும் பூஜை ஆகிய படங்களுடன் தனுஷின் அனேகன் படமும் தீபாவளி ரேசில் குத்திக்கவிருக்கிறதாம்.

    கே.வி.ஆனந்த் இயக்கி வரும் அனேகன் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. தனுஷ், அமீரா தஸ்தர் சம்பந்தப்பட்ட ஒரு டூயட் பாடல் மட்டுமே பாக்கி உள்ளதாம். இந்தப் பாடலை அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னையில் படமாக்க திட்டமிட்டுள்ளாராம் கே.வி.ஆனந்த். இத்துடன் அனேகன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடுமாம்.

    மிகப் பெரிய பட்ஜெட்டில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து வருகிறார். தனுஷின் வேலியில்லா பட்டதாரி பாக்ஸ் ஆஃபீசில் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ள நிலையில், தனுஷின் அடுத்த படமாக வரவிருக்கும் அனேகன் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.

    விஜய்யின் கத்தி, விஷாலின் பூஜை படங்களுடன் தனுஷின் அனேகன் படமும் தீபாவளியன்று மோதவிருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இரு மடங்காகி உள்ளது. இந்தப் படங்களுடன் கமல் நடிக்கும் உத்தமவில்லன், சிவகார்த்திகேயன் நடிக்கும் டாணா ஆகிய படங்களும் கூட தீபாவளிக்கு வரவிருக்கும் படங்களின் பட்டியலில் உள்ளன.

    0 comments:

    Post a Comment