Wednesday, 30 July 2014

முடவாட்டுக்கால் என்ற காய கல்ப மூலிகை..!

By: Unknown On: 21:36
  • Share The Gag

  •           இந்த முடவாட்டுக்கால் மூலிகையை குறுக்கில் கால் இஞ்சு அளவிற்கு சிறு துண்டு வெட்டி தோலை சீவி நசுக்கி சிதைத்து தக்காளி சேர்க்காமல் , மிளகு ,சீரகம் மற்றும் ஆட்டுக்கால் சூப்பிற்கு சேர்க்கும் பொருட்களை சேர்த்து சூப்பாக வைத்துக் குடிக்க முழங்கால் வலி , கீழ் முதுகு வலி, கை மூட்டு வலி,கழுத்து வலிகள் இவைகள் தீரும். தினமும் இந்த சூப்பை பருகி வர உடலில் உள்ள எல்லா தொல்லைகளும் படிப்படியாகத் தீரும்.

    இது ஒரு காளான் வகையைச் சேர்ந்தது .எனவே இதற்கு இலைகள் கிடையாது . இது கொல்லி மலையிலும் , கஞ்ச மலையிலும் , சதுரகிரி மலையில் சில இடங்களிலும் கிடைக்கிறது . இதை மேற்குறிப்பிட்ட காலாங்கி நாதர் கொல்லி மலை ரகசியம் மரணம் மாற்றும் மூலிகைகள் நூலில் குறிப்பிட்ட முறையில் பூரச்செந்தூரம் செய்து 48 நாட்கள் சாப்பிட தேகம் மரணத்தால் அழியாது காயம் சித்தியாகும்

    ஆதளை மூலிகை.. மாயமாய் மறைய திலதம்..! சித்தர்கள் கூற்று..!

    By: Unknown On: 21:12
  • Share The Gag
  • சித்தர்கள் நூலில் சில இடங்களில் மாயமாய் மறைவதைப் பற்றி குறிப் பிடுகின்றனர்.இதில் மூலிகைகள்,விலங்குகள் போன்றவற்றின் மூலமாக மறையும் வித்தையை செயல் படுத்தும் முறைகள் உள்ளன.

    ஆனால் இவற்றை தக்கதொரு குருவின் துணையுடன் முயற்சி செய்து பார்க்க வேண்டுகிறோம்.இந்த முறை கருவூரார் பல திரட்டில் உள்ளவை.

    ஆமாப்பா வெண்ணையிலே தேனைத்தேய்த்து
    ஆதளையின் பால் கூட்டி அடைவாய்த் தேய்த்து
    ஓமப்பா திலதமிட தன்னைக் காணார்
    ஓங்கிநின்ற உருமாற்றம் ஒருவர் காணார்
    போமப்பா வெண்டிசையுங் கால் வேகங் கொண்டு
    பூமிதனில் மறைந்ததெல்லாம் பொலிவாய்க் காண்பர்
    வேமப்பா அண்டரண்டம் வழலை பட்டால்
    வேதாந்த பஞ்சகர்த்தா ளெனச்சொன்னாரே

    விளக்கம் :

    முன்பு கூறப்பட்ட வெண்ணையுடன் ,தேன் ,ஆதளை மூலிகையின் பால், இவைகளைக் கூட்டி மத்தித்து திலதமிட தன உருவம் மறைந்து விடும் . ஒருவரும் உருவத்தைக் காண முடியாது.

    எட்டு திசையும் காற்றின் வேகத்தில் சென்று வரலாம். மேலும் பூமியில் மறைந்துள்ள பொருட்களெல்லாம், புதையலெல்லாம் கண்ணில் தோன் றும். வழலைச் சுண்ணம் பட்டால் அண்டரண்டம் நீறிப் போகும்.

    மோதிரங்களை சுத்தம் செய்ய வேண்டுமா? இதோ சில அசத்தலான வழிகள்!

    By: Unknown On: 20:12
  • Share The Gag
  •            உங்களுடைய வாழ்வில் மிகவும் மதிப்பு மிக்க சொத்தாக இருக்கும், வைர மோதிரம், உங்களுடைய விரல்களில் மின்னிக் கொண்டிருக்கிறது! இந்த காட்சியை நீங்கள் மிகவும் விரும்புவீர்கள் மற்றும் ஒரு வைர மோதிரத்தை அணியும் உணர்வு பெருமிதம் தருவதாகவும் இருக்கும். ஆனால், அந்த வைர மோதிரத்தை உங்களால் சரியாகப் பராமரிக்க முடிகிறதா? அதனை நீங்கள் கழட்டி, சுத்தம் செய்தால் மட்டும் போதுமா?

    அதீதமான ஈரப்பதம் அல்லது இது போன்ற வேறு ஏதாவது விஷயங்களால் கூட மோதிரங்கள் பாதிக்கப்படலாம். ஏதாவது ஒரு நிகழ்வுக்கோ அல்லது தினமுமோ அந்த வைர மோதிரத்தை நீங்கள் அணிய வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட மோதிரத்தை சுத்தம் செய்ய மறந்து விட்டாலோ அல்லது எப்படி சுத்தம் செய்வது என்று தெரியாவிட்டாலோ அல்லது அசுத்தம் படிந்த மோதிரத்தை அணிந்து செல்வதோ சங்கோஜமான சூழலையே முன்நிறுத்தும்.

    வைர மோதிரம் போன்றவற்றை நீங்கள் நன்றாக கவனித்து வந்தாலும், சாதாரணமாக அணியக் கூடிய வெள்ளி மோதிரங்கள் பாத்திரங்களை கழுவும் போதும் அல்லது வேறு சூழல்களில் தினசரி வேலைகளை செய்யும் போதும் துருப்பிடித்தப் போனால் என்ன செய்வது?

    எனவே, நீங்கள் விரல்களில் அணியும் மோதிரத்தை துருப்பிடிக்காமல் பாதுகாப்பதும் மற்றும் சுத்தம் செய்வதும் எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமல்லவா? வைர மோதிரங்கள் மட்டுல்லாமல், அதே போன்று தோற்றமளிக்கும் பிற மோதிரங்களைப் பற்றியும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த மோதிரங்களை சுத்தம் செய்யும் வழிமுறைகள் பற்றி இங்கே காண்போம்.
           
    மோதிரத்தை முழுக வைத்தல்

    நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை மோதிரத்தை முழுகி இருக்கச் செய்வது தான். மென்மையான சோப்புக் கலவையை தயார் செய்து, மோதிரத்தை சுத்தம் செய்யும் வகையில் மூழ்கியிருக்கச் செய்ய வேண்டும். இதற்காக ஐவரி டிஷ்வாஷிங் திரவத்தை நீங்கள் பயன்படுத்தலாம். இது மிகவும் மென்மையானதாக இருப்பதால், உங்களுடைய மோதிரத்தை பாதிக்காது. ஆனால், இந்த திரவம் கிடைக்காத போது, வேறு ஏதாவது மென்மையான சோப்பைக் கூட தயங்காமல் பயன்படுத்தலாம். இந்த திரவத்தை தயார் செய்யும் போது, தண்ணீரும், ஐவரி டிஷ்வாஷிங் திரவமும் சமமான அளவில் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    அழுக்கைத் துடைத்தல்

    மோதிரத்தை சிறிது நேரத்திற்கு மென்மையான சோப் திரவத்திற்குள் மூழ்கியிருக்கச் செய்யத பிறகு, அதனை சுத்தம் செய்யத் தொடங்குங்கள். மோதிரங்களை சுத்தம் செய்ய ஏற்ற மென்மையான பிரஷ் ஒன்றைத் தயாராக வைத்திருங்கள். மென்மையான பிரஷ் பயன்படுத்துவதை எக்காரணம் கொண்டும் மறந்து விட வேண்டாம். தடிப்பான கால்களை கொண்ட எந்தவொரு பிரஷ்-ம் உங்களுடைய மோதிரத்தின் அழகைப் பாழாக்கி விடும். மோதிரத்தின் மேல், மென்மையாகத் தேய்த்து, அதில் படிந்துள்ள அழுக்கை நீங்கள் நீக்கிவிட முடியும்.
           
    மோதிரத்தை அலசுதல்

    மோதிரத்தை மென்மையான முடிக்கால்களைக் கொண்ட பிரஷ் கொண்டு தேய்த்து சுத்தப்படுத்தும் வேளையில், அதனை நன்றாக மூழ்கியிருக்கச் செய்யவும் வேண்டும். ஒருமுறை நீங்கள் அதனை சுத்தம் செய்த பின்னர், இதனை தண்ணீருக்குள் மீண்டும் மூழ்க வைக்கவும். இப்பொழுது, மோதிரத்தை வெளியே எடுத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் மூழ்க வைக்கவும். இதை செய்யும் போது, உங்களுடைய சாக்கடை மூடியிருப்பதை உறுதி செய்யவும். ஏனெனில், மோதிரம் சாக்கடைக்குள் விழுந்து விடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மாறாக, முறையானதொரு வடிகட்டியைப் பயன்படுத்தியும் கூட மோதிரத்தை காப்பாற்றிட முடியும்.

    மோதிரத்தை உலர வைத்தல்

    ஒருமுறை நீங்கள் அலசி விட்டால், மோதிரத்தை வெளியே எடுத்து வைத்து விடவும். ஈரத்தை உறிஞ்சக் கூடிய துணியைக் கொண்டு, மோதிரத்தை உலர வைக்கலாம். வைர மோதிரங்கள் விலைமதிப்பு மிக்கiவாகவும் மற்றும் எளிதில் உடையக்கூடியதாகவும் இருக்கும். இந்த வகை மோதிரங்களை நீங்கள் தேய்த்த சுத்தம் செய்யும் போது, அவை வெளியே வந்து விழும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, துணியைக் கொண்டு எளிதாகத் துடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் சுத்தம் செய்யக் கூடிய வைர மோதிரத்தில் பிளவுகள் எதுவும் இல்லையென்றால், அம்மோனியா கரைசலைக் கொண்டும் கூட சுத்தம் செய்யலாம். இவ்வாறாக பிளவுகள் உள்ள மோதிரங்களுக்கு, மென்மையான கரைசலைப் பயன்படுத்துவது நல்லதாகும்.

    கீழா நெல்லி சூப் - சமையல்!

    By: Unknown On: 19:36
  • Share The Gag


  •  என்னென்ன தேவை?

    கீழாநெல்லி - 1 கட்டு (தண்டோடு),

    தக்காளி - 2,

    சின்ன வெங்காயம் - 5,

    பூண்டு - 6 பல்,

    மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கேற்ப,

    சீரகத் தூள் - அரை டீஸ்பூன்,

    இஞ்சி - ஒரு துண்டு,

    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை.

    எப்படிச் செய்வது?


    கீழாநெல்லிக் கீரையை தண்டோடு நன்கு அலசி, நன்கு இடித்து, அதோடு பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு இடிக்கவும். அதோடு சின்ன வெங்காயத்தை நசுக்கிச் சேர்த்து, மிளகுத் தூள், சீரகத் தூள், உப்புப் போட்டு இரு மடங்கு தண்ணீர் ஊற்றி, நான்கு, ஐந்து விசில் வரும் வரை குக்கரில் வைக்கவும்.

    பிறகு அதை எடுத்து நன்கு மசித்து, வடிகட்டி அதன் சாற்றைக் குடிக்கவும். தொட்டாலே கையோடு வரும் முடி உதிர்வுப் பிரச்னைக்கு இது மருந்து. உடலும் குளிர்ச்சி அடையும்.

    பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்!

    By: Unknown On: 18:05
  • Share The Gag

  • 1. டிவி, குளிர்சாதனப்பெட்டி, ட்யூப் லைட் இவற்றை உபயோகத்திற்குப்பின் அணைத்து விட்டு மீண்டும் உடனே போடக்கூடாது. ரெஃப்ரிஜிரேட்டரில் கம்ப்ரெஸ்ஸரும், டிவியில் பிக்சர் ட்யூபும் ட்யூப் லைட்டில் பாலண்டும் பழுதாகி விடும். நிறுத்திய பின் உள்ளே மாற்றங்கள் நிகழ்ந்து பூர்த்தியாக சில நிமிடங்கள் பிடிக்கும். சில நிமிடங்கள் விட்டு மறுபடியும் போடுவது நல்லது.

    2. குளிர்சாதனப்பெட்டியைத் துடைக்கும்போது பச்சைக்கற்பூரம் கலந்த நீரினால் துடைத்தால் பூச்சிகள், சிறு வன்டுகள் உள்ளே நுழையாது.

    3. கறுத்துப்போன வெள்ளி சாமான்களை தாம்பூல சுண்ணாம்பு கொண்டு தேய்த்தால் பளபளவென்று ஆகி விடும்.

    4. சர்க்கரை வைத்திருக்கும் பாட்டிலில் சில ஏலக்காய்களைப் போட்டு வைத்தால் எறும்புகள் சீனியை மொய்க்காது.

    5. சில வகை தண்ணீரில் துணிகள் துவைக்கும்போது துணிகள் பழுப்பாகி விடுகின்றன. இதற்கு அவற்றை சோப் பவுடரில் ஊறவைக்கும்போது 2 மேசைக்கரண்டி கல் உப்பும் சேர்த்து ஊறவைத்தால் துணிகள் பழுப்பு நிறம் நீங்கி பளிச்சென்றாகி விடும்.

    6. ம‌ர‌ச்சாமான்க‌ளை பாலீஷ் செய்வ‌த‌ற்கு, முத‌லில் அவற்றை வினீகர் கலந்த நீரால் கழுவி, துடைத்து காய வைத்து பிற‌குதான் பாலீஷ் பூச வேண்டும்.

    7. மூட்டைப்பூச்சி தொந்தரவிற்கு, கட்டிலின் நான்கு கால்களிலும் சூடம் அல்லது புரசம் பூவை வைத்து கட்டி வைக்க வேண்டும். தலையணை, மெத்தை இவற்றில் கற்பூரத்தைத் தூள் செய்து தூவலாம்.

    8. தோல் பொருள்க‌ளின் நிற‌ம் ம‌ங்காதிருக்க‌, அவ‌ற்றின் மீது லின்ஸிட் ஆயில் என‌ப்ப‌டும் ஆளி விதை எண்ணையைப் பூசி துடைக்க‌ வேண்டும்.

    9. ஈக்க‌ள் அதிக‌ம் உள்ள‌‌ இட‌த்தில் தூவக்காலில் நெருப்பிட்டு கிராம்புத்தூளைத் தூவினால் ஈக்கள் பறந்து விடும்.


    10. மெழுகுவ‌ர்த்தி அதிக‌ வெளிச்ச்ச‌ம் த‌ர‌, அதை ஒரு பாத்திரத்தில் நிற்க வைத்து அதன் அடியில் தண்ணீர் ஊற்றி எரிய விடவும். உப்பில் புதைத்து வைத்தும் எரிய விடலாம்.

    அஜித்தை ஒதுக்கிவிட்டு ஜெயம் ரவிக்கு தலையாட்டிய அரவிந்த்சாமி!

    By: Unknown On: 17:36
  • Share The Gag
  • தமிழ் திரையுலகின் 90களின் சாக்லேட் பாய் என்றால் கண்டிப்பாக அரவிந்த் சாமி தான். இவர் நீண்ட நாட்களாக சினிமாவில் தலைக்காட்டாமல், தன் நண்பர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் மட்டும் நடித்தார்.

    தற்போது ஜெயம் ராஜா தன் தம்பியை வைத்து தனி ஒருவன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முக்கிய வில்லனாக நடிக்க, ஆர்யா மற்றும் ஜீவாவிடம் நடிக்க பேச்சு வார்த்தை நடந்தது. இறுதியில் இந்த கதாபாத்திரத்தை செய்ய அரவிந்த சாமியே சம்மதித்துள்ளாராம்.

    இதற்கு முன்பு ஆரம்பம் படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தபோது இவர் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


    வீட்டில் கற்றாழை ஜெல் தயாரிக்கும் முறை!

    By: Unknown On: 16:38
  • Share The Gag
  •                 நன்கு வளர்ந்த கற்றாழையை தேர்வு செய்து கவனமாக மென்மையாக மற்றும் மிக அகலமான கற்றாலைகளை பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். 15 நிமிடங்களுக்கு கற்றாலையை நேராக வைத்து அதிலிருந்து வெளியாகும் மஞ்சள் நிற திரவத்தை முழுவதுமாக நீக்கிவிடவேண்டும். பின்னர் கற்றாலையை நன்கு கழுகி முடித்தவுடன் கற்றாலையில் உள்ள ஜெல்லை எடுத்து ஒரு க்யூப்ல போட்டு அடைத்து வைக்க வேண்டும்.
    aloe-vera
    அலோ வேரா ஃபேஸ் பேக்

    தேவையான பொருட்கள்:

    கற்றாழை

    மஞ்சள்

    தேன்

    பால்

    ரோஸ் வாட்டர்

    செய்முறை:


    மஞ்சள், தேன், பால், ரோஸ்வாட்டர் என அனைத்திலும் ஒரு தேக்கரண்டி சேர்த்து பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் தயாரித்து வைத்துள்ள அலோ வேரா ஜெல்லைப் போட்டு கலந்தால் பேஸ்ட் தயாராகிவிடும். சுமார் 20 நிமிடங்கள் முகம், கழுத்தில் தேய்த்துக்கொள்ளலாம். பின்னர் முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுகி தூய்மையான முகம் துடைக்கும் டவல் கொண்டு முகத்தை ஒத்தி எடுக்கலாம்.

    சன்லெஸ் நீக்க கற்றாழை ஃபேஸ் மாஸ்க்

    தேவையான பொருட்கள்:

    கற்றாழை

    எலுமிச்சை சாறு

    செய்முறை:


    வெயிலில் அலைந்து விட்டு வீட்டிற்கு வந்தால் முகம் கருப்பாகி விடும். இதை போக்க கற்றாழை ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாம்.

    கற்றாலை ஜெல், எலுமிச்சை சாறு கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி 10 நிமிடங்களுக்கு பின்னர் முகம் கழுவ வேண்டும்.

    அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம்!

    By: Unknown On: 08:03
  • Share The Gag
  • பகிர்ந்து கொள்ளுதல் ஒரு நல்ல பண்பு. நல்ல நட்பிற்கு இலக்கணமே பகிர்ந்து கொள்ளுதல் தான். இருந்தாலும் அந்தப் பகிர்தலால் உங்களுக்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்வதில் தான் இருக்கிறது, உங்கள் சாமர்த்தியம். 'எல்லாரும் நல்லவரே' என்பது நம்மில் பலரின் எண்ணம். இதுவும் ஒருவிதத்தில் வெகுளித்தனம் தான்.

    வெளியூர் பஸ் ஸ்டாண்டில் சுற்றிலும் இருக்கிற புதியவர்கள் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் சிலர் தங்களைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் ஆதியோடந்தமாக சொல்லிக் கொண்டிருப்பார்கள். தங்கள் குடும்ப விஷயத்தை அப்போது தான் டீக்கடையில் அரை கிளாஸ் டீயுடன் அறிமுகமான சந்தித்த நபரிடம் வெளியரங்கமாய் பேசிக்கொண்டிருப்பார்கள்.

    இதில் பெண் திருமணத்திற்காக நகை வாங்கிப் போகும் விஷயம் வரை அப்பாவியாய் அள்ளிக் கொட்டுவார்கள். இப்போது கேட்ட நபர் நல்லவராகவே இருக்கட்டும். கொஞ்சம் தொலைதூரத்தில் இருந்தபடி இதை காதில் வாங்கிய அரை பிளேடு பக்கிரியின் காதில் விழுந்தாலே போதுமே! பெரியவரும் ஒழுங்காய் ஊர் போய்ச் சேரமாட்டார்.

    நகையும் ஸ்வாகா. அப்புறம் பெண் கல்யாணத்தை எப்படி நடத்துவது? நமக்குள் இருக்கும் பண்பு நம் வாழ்க்கை ஓட்டத்தில் நம்மோடு இணைந்து கொண்டது. எதற்காகவும் அதை இழக்கத் துணிய மாட்டோம். நல்ல பண்புகளை அணிகலன்களாகக் கொண்டிருக்கும் நாம் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியது அவசியம் அல்லவா!

    நம்மைச் சுற்றியிருப்பவர்கள் அத்தனை பேரும் நமக்கு நல்லது செய்பவர்கள் என்று எப்படி நம்புவது? நாம் விட்டுக்கொடுக்கும் போதும், மனதைத் திறந்து உள்ள(த்)தை சொல்ல முற்படும் போதும் மற்றவர்கள் அதை தவறாக பயன்படுத்திக் கொண்டு நம்மை ஏமாளியாக்க முற்படலாம். அவர்களை இனம் கண்டு எந்த ரீதியிலும் அவர்களிடம் நெருங்காமல் இருப்பது நல்லது.

    அணுகவிடாமல் பார்த்துக் கொள்வது கட்டாயம். அதற்கு நமக்குத் தேவை, பகிர்ந்து கொள்ளும் பண்பு. இந்த மாதிரியான பகிர்தல் ஆண் நண்பர்கள், பெண் தோழிகள் இருபாலருக்கும் அவசியமானதே. நம்மை குழப்பிக்கொண்டிருக்கும் சில விஷயங்களை மனம் விட்டுப் பேசும்போது தான் அதற்கான தீர்வு கிடைக்கும்.

    எதையுமே பகிர்ந்து கொள்ளாதவர்கள் எத்தனை உயரிய ஸ்தானத்தில் இருந்தாலும் கடைசியில் பித்துப்பிடித்த நிலைக்குத்தான் ஆளாகிறார்கள். அதனால் இந்த சிக்கலை என்னால் சீரமைக்க முடியாது என்ற எண்ணம் உங்களுக்குள் எழத்தொடங்கி விட்டால், அப்போதே அதை உங்களுக்கு நம்பிக்கையானவர்களிடம் பகிர்ந்து பாருங்கள்.

    நிச்சயம் உரிய நேரத்தில் உரிய தீர்வு கிடைக்கும். அதேநேரம் 'ஆயுளுக்கும் இது ரகசியம்' என்று நீங்கள் எண்ணுகிற அந்தரங்க விஷயங்களை மட்டும் எப்போதும் போல் உங்களுக்குள்ளே பூட்டி வைத்துக் கொள்ளுங்கள். பகிர்ந்து கொள்வது நல்ல வழக்கம் தான். இருப்பினும் மற்றவர்கள் நம்மை ஏமாற்றும் அளவு நம் அந்தரங்க விஷயங்களை சொல்வது பாதுகாப்பற்றது.

    நம்மை நாமே மற்றவரிடம் அடமானம் வைப்பது போல ஆகும். நம் பாதுகாப்பு நம் கையில் தான் உள்ளது. மிகவும் முக்கியமான விஷயங்களை குறிப்பாக எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது தேவையற்றது. அதனால் நமக்கு என்ன வேண்டுமானாலும் நிகழலாம். நம்முடைய செயல்கள் அனைத்திற்கும் நாம் தான் பொறுப்பாளி.

    இதை மற்றவரிடம் சொல்லி என்ன ஆகப்போகிறது? இதையெல்லாம் நட்பின் இலக்கணம் என்று சொல்லிக் கொள்ள முடியாது. இதனால் பல நேரங்களில் நல்ல நட்பு கெடும். சில நேரங்களில் நெருங்கிய நண்பர்கள் கூட 'உன் காதோடு மட்டும் ஒரு ரகசியம்' என்று சொல்ல முன்வருவார்கள். தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.

    'எப்போது இதை ரகசியம் என்று சொன்னாயோ, கடைசிவரை அது உன்னோடு இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்று சொல்லி விடுங்கள். சிலர் இம்மாதிரி முக்கிய ரகசிய விஷயங் களைக் கூட நண்பர்கள் சிலரிடம் தனித் தனி சந்தர்ப்பங்களில் சொல்லி விடுவார்கள்.

    இதற்குப் பிறகு அது ரகசியம் என்றால் தானே அதிசயம். ரகசியம் வெளிப்பட்ட பிறகு ஒவ்வொரு நண்பனையும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பார்கள். 'சொன்னது இவனாக இருக்குமோ' என்ற ரீதியில் ஒவ்வொருவரையும் பார்த்துப் பார்த்து கடைசியில் நட்பு கெட்டது தான் மிச்சம் என்றாகி விடும். சிலருக்கு யாரைப் பார்த்தாலும் அவர்கள் நல்லவர்களாகவே தெரிவார்கள்.

    வேறுசிலருக்கோ பார்க்கிற எல்லாரிடமும் ஏதாவது ஒரு குறை கண்ணில் பட்டு விடும். மகாபாரதத்தில் ஒருமுறை கிருஷ்ணர் தருமரை அழைத்து 'நகரெங்கும் போய் உன் கண்ணில் படுகிற ஒரு கெட்டவனை அழைத்துக் கொண்டு வா' என்றார். அதேவேளையில் துரியோதனை அழைத்தவர், 'நகர வீதிகளில் பயணப்பட்டு உன் பார்வையில் படுகிற ஒரு நல்லவனை அழைத்துக் கொண்டு வந்து சேர்' என்றார். இருவரும் போனார்கள்.

    தருமர் கண்ணில் படுகிற எல்லாருமே ஏதாவது ஒரு விதத்தில் அவர் பார்வைக்கு நல்லவராகவே தெரிந்தார்கள். நகர் முழுக்க சுற்றித் திரிந்தும் ஒரு கெட்டவன் கூட அவர் கண்ணில் படாமல் போனதால் வெறுங்கையுடன் அரண்மனைக்கு திரும்பினார்.

    துரியோதனன் கதை வேறு மாதிரி இருந்தது. அவன் யாரைப் பார்த்தாலும் அவரிடத்தில் ஒரு குறையை கண்டு பிடித்தான். இத்தனை கெட்டவர்களுக்கு மத்தியில் ஒரு நல்லவனை என்னால் எப்படி கண்டு பிடிக்க முடியும் என்ற கவலையுடன் அவனும் அரண்மனைக்கு திரும்பினான்.

    இருவரும் வெறுங்கையுடன் வந்து நிற்பதை பார்த்த கிருஷ்ணர், புன்னகைத்துக் கொண்டார். நல்லவன் பார்வைக்கு கெட்டவன் என்று யாருமில்லை. அதுமாதிரி கெட்டவன் பார்வையில் நல்லவன் தெரியவே இல்லை என்பது தெரிந்து தானே அவர்களை அனுப்பி இப்படியரு பரீட்சை மேற்கொண்டார்..!

    நம்முடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல நட்பு வேண்டும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் அப்படி ஒரு நட்பு கிடைப்பது அரிது. 'புற' விஷயங்களை பகிர்ந்து கொள்வது போல நமக்கே நமக்கான அந்தரங்கத்தை ஒருபோதும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இதில் நீங்கள் தெளிவாக இருந்தால் மட்டுமே நட்பு நிலைக்கும். நீடிக்கும்.

    மனைவியை வசீகரிக்கும் பரிசு! என்னங்க அது..?

    By: Unknown On: 07:38
  • Share The Gag
  • மனைவிக்கு, கணவர் பரிசுகள் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். மனைவிக்கு மனப்பூர்வமாக தரும் பரிசுகள் மரியாதைக்குரியதாகவும், நேசிப்பின் சின்னமாகவும் என்றும் அவள் நினைவில் நிறைந்திருக்கும்.

    அந்த பரிசு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்?
    - உபயோகப்படுத்தக்கூடிய பொருளாக இருக்கலாம்.

    - நேரடியாக உபயோகம் இல்லாவிட்டாலும், அழகான பொருளாகவும் இருக்கலாம்.

    மனைவிக்கு தேவையான உபயோகப் பொருளை வாங்கிக்கொடுத்தால், அதை உபயோகப் படுத்தும்போதும் கணவரின் நினைவுவரும். அதனால் மனைவி எப்போதும் தன்னை நினைவில் வைத்திருக்கவேண்டும் என்று விரும்பும் கணவர்கள், அவள் அடிக்கடி பயன்படுத்தும் செல்போனை பரிசாக வாங்கிக்கொடுத்துவிடுவார்கள். ஆனால் அடிக்கடி உபயோகப் படுத்தும் பொருட்கள் சீக்கிரமே பழையதாகி, நாளடைவில் செயலற்றதாக ஆகி விடும். அதனால் தான் வாங்கிக்கொடுக் கும் பரிசு, செயலற்றதாகவே ஆகக்கூடாது என்று கருதும் கணவர்கள், கலைப் பொருட்களை வாங்கி பரிசாக வழங்கி விடுகிறார்கள். அழகான அந்த பொருட்கள் எப்போதும் கணவரை பளிச்சென நினைவில் வைத்துக் கொள்ள உதவும்.

    மனைவியை மகிழ்வித்துப் பார்ப்பதுதான் தங்கள் கொள்கை என்று நினைக்கும் கணவர் கள் அழகிய புடவையோ, நகையோ பரிச ளித்து நல்ல பெயர் வாங்கி விடுகிறார்கள்.

    பரிசுகள், திருமண பந்தத்தை கவுரவித்து மரி யாதை செலுத்துவதாக இருக்கிறது. மனைவிக்கு முதன் முதலாக கொடுக்கப்படும் பரிசுகள் இன்ப அதிர்ச்சிகளை கொடுத்து, நீண்ட நாட்கள் மகிழ்விக்கும் தன்மை கொண்டது. இந்த பரிசுகளை சம்பிரதாயமானது, சராசரி யானது என்று இரண்டு வகையாகப் பிரிக் கலாம்.

    சம்பிரதாய ரீதியாக தரப்படும் பரிசுகள் விலை உயர்ந்ததாகவும், குடும்ப கவுரவத்தை வெளிப் படுத்தும் அம்சமாகவும் இருக்கும். அந்த பரிசுகள் தொடக்கத்தில் அதிக ஆச்சரியத் தையும், மகிழ்ச்சியையும் தந்தாலும், அந்த பரம்பரை பரிசுகளை பாதுகாக்கும் பெட்டகம் மாதிரியே அந்த பெண் ஆகிப்போவாள். அந்த பரிசுகளும் பெரும்பாலும் அந்த பெண்ணால் தனிப்பட்ட முறையில் எல்லா இடங்களிலும் பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்காது. சம்பிர தாய பரிசுகள் பெரும்பாலும் பெட்டகத்தில் வைத்து பூட்டக் கூடியதாகத்தான் இருக்கும். சம்பிரதாயம் இல்லாமல் தனிப்பட்ட முறையில் தரப்படும் பரிசுகள், பயன்பாட்டு அடிப் படையில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. சம்பிரதாய பரிசு எப்போதாவது ஒருசில முறை தான் கிடைக்கும். தனிப்பட்ட பரிசுகள் அடிக்கடி கிடைக்கும். அதனால் இந்த தனிப்பட்ட பரிசுகள் மீது பெண்களுக்கு ஆர்வம் அதிகம். அடிக்கடி அவர்களை சிரிக்கவைக்க இந்த பரிசுகள் உதவும்.

    வாழ்க்கையின் வெகுதூரத்தை கடந்த பிறகும் மலரும் நினைவுகளாக, பல பரிசு பொருட்கள் நிலைத்து நிற்கின்றன. பெரும்பாலான நேரங்களில் சாதாரண பரிசு பொருட்கள் கூட, காலங்கடந்து நின்று பெண்களை மகிழ்ச்சியடையச் செய்யும். மிகப்பெரிய பரிசுகள் கிடைத்தபின்பும், அந்த சாதாரண பரிசுகள் பெண்கள் மனதில் நிலைத்து நிற்பதும் உண்டு.

    சில பரிசுகள் என்ன பரிசு என்பதைவிட, யார் கொடுத்தது என்பதைவைத்து சிறப்பு பெறும். பிற்காலத்தில் ஏற்படும் சில கசப்பான நினைவுகளை மாற்றியமைக்கும் ஆற்றல்கூட அந்த பரிசுகளுக்கு உண்டு.

    முன்பெல்லாம் ஆண்கள் மட்டுமே பெண்களுக்கு பரிசுகளை கொடுத்துக்கொண்டிருந் தார்கள். பெண்கள் உழைப்பதில்லை என்பதால் அந்த நிலை. இப்போது பெண்கள், ஆண்களைவிட அதிகம் சம்பாதிக்கும் நிலை இருந்துகொண்டிருக்கிறது. அதனால் ஆண் களுக்கு நிகராக பெண்களும் அன்புப் பரிசுகளை அள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

    பழைய காலத்தில் பெரிய பெரிய சமஸ்தானங்களில்கூட மனைவிக்கு பரிசு கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. மன்னர் ஒருவர் தன் மனைவிக்கு அன்னப்பறவையின் இறகை பரிசாக கொடுத்தார். வியந்து போன அரசி, அவரை ஆச்சர்யத்துடன் பார்க்கையில், “இதை நீ எத்தனை காலம் பத்திரமாக வைத்திருக்கிறாய் என்பதைப் பொறுத்துத்தான் என் மீது நீ வைத்திருக்கும் அன்பை நான் புரிந்து கொள்வேன்” என்றார். அரசி அதனை வாழ்நாள் முழுவதும் தங்கப் பேழையில் வைத்துப் பாதுகாத்தார். அன்னப் பறவையின் இறகு என்பது அந்த காலத்தில் பெரிய விஷயம் இல்லை. ஆனால் அந்த மெல்லிய இறகில் அந்த மன்னர் தன் அன்பையும் கலந்துவிட்டதால் அது தங்க பேழைக்கு செல்லும் உயர்ந்த பரிசாகிவிட்டது. நீங்கள் உங்கள் மனைவிக்கு வழங்கும் பரிசும் அன்பு கலந்ததாக இருக்கட்டும். அவள் அதை தங்க பேழை போன்ற தன் மனதுக்குள் வைத்து பாது காப்பாள். அதன் மூலம் உங்கள் ஆத்மார்த்த உறவு மேம்படும்.

    வங்காளதேசத்து மீனவர் ஒருவர் தன் மனைவிக்கு வெண் சங்கு ஒன்றை அன்பு பரிசாக அளித்தார். அதை பத்திரமாக வெகுகாலம் பாதுகாத்து வந்தாள் மனைவி. மனைவி இறக்கும் தருவாயில் மீனவர் அந்த வெண் சங்கை வீடு முழுவதும் தேடினார். எங்கும் கிடைக்காமல் போகவே, மனைவியிடம் வந்து நான் கொடுத்த அன்பு பரிசை தொலைத்து விட்டாயா என்று கேட்டார். அவளோ தொலைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அதில் வளையல் செய்து கைகளில் அணிந்திருக்கிறேன் இதோ பாருங்கள் என்றாள்.

    அன்றிலிருந்து வங்காளதேசத்தில் மணமகளுக்கு மணமகன் வெண் சங்கு வளையல் அணிவிக்கும் வழக்கம் உருவானது. இன்றும் அது தொடர்கிறது!

    கிரைண்டர் பராமரிப்பு முறைகள்!

    By: Unknown On: 00:45
  • Share The Gag

  • • தானியங்கள் எதுவும் போடாமலோ, சிறிதளவு தானியங்கள் போட்டோ அரைப்பதால் கிரைண்டர் வீணாக தேய்வு அடையும்.

    • கிரைண்டர் வாங்கும் போது கல் வெள்ளையாக இல்லாமல் கருப்புக் கல்லாக வாங்க வேண்டும்.

    • கிரைண்டரில் உளுந்து அரைத்த பிறகு அரிசியை அரைத்தால் வழவழப்பு நீங்கும். உளுந்தும் கணிசமாக இருக்கும். இட்லியும் பூப்போல இருக்கும்.

    • முதலில் சிறிதளவு தானியங்களைப் போட்டு
     கிரைண்டரை சில வினாடிகள் ஓடவிட வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீதமிருக்கும் தானியங்களைச் சேர்க்க வேண்டும்.

    • கிரைண்டரில் உட்பகுதியில் மாவு தள்ளும் பலகை டிரம்மில் ஒட்டாதபடியும், வட்டையில் உள்ள கல்லிலும் படாதபடியும் சிறிதளவு இடைவெளி விட்டு மாட்டி இருக்க வேண்டும். இல்லையெல் பலகை விரைவில் தேய்ந்துவிடும்.

    • குழவியல் உள்ள கட்டை தண்ணீரில் ஊறி இற்றுப் போய்விட்டால் உடனே மாற்ற வேண்டும்.

    • கிரைண்டர் வீட்டின் மூலையில் இருந்தால், எலி சில சமயங்களில் ஒயர்களைக் கடித்துவிடும். இதனால் சமயங்களில் கிரைண்டர் ஷாக் அடிக்கும் அபாயமுள்ளது. ஆகையால் கிரைண்டர் இருக்குமிடம் தனியாக இருக்க வேண்டும்.

    • கிரைண்டரில் உள்ள தள்ளு பலகை இறுக்கமாக மாட்டப்பட்டு இருக்க வேண்டும். லூசாக இருந்தால் மாவு சரியாக அரைபடாது.

    • கிரைண்டரில் உள்ள கல்லும், குழவியும் வழ வழ என்று இருந்தால் மாவு அரைக்க அதிக நேரமாகும். இதைத் தவிர்க்க இரண்டுக் கல்லையும் கொத்திக் கொள்ள வேண்டும்.

    • கொர, கொர என்ற சத்தம் அதிகம் வந்தால் பேரிங் பழுதடைந்து இருக்கும். உடனே பேரிங்க்கை மாற்ற வேண்டும்.

    • மோட்டார் சுழன்று டிரம் சுழவில்லை எனில் பெல்ட் பழுது அடைந்து இருக்கும். இதற்கு புதிய பெல்ட் மாற்ற வேண்டும்.

    • கிரைண்டர் குழவி மாட்டும் ஸ்டாண்டில் இன்சுலேஷன் டேப்பைச் சுற்றி விட்டால் துருப்பிடிக்காமல் இருக்கும்.