Friday, 20 September 2013

அரிய வகை மேஜிக் ட்ரிக்ஸ் ( Magic Tricks ) வீடியோவுடன் சொல்லி கொடுக்கும் தளம்!

By: Unknown On: 21:49
  • Share The Gag

  • சில நிகழ்ச்சிகள் நடக்கும் போது இடையிடையே நடக்கும் மேஜிக்
    ட்ரிக்ஸ் நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும், இது போல் செய்வது
    எப்படி என்ற கேள்வி நம்மில் பல பேருக்கும் இருக்கும் எப்படி
    இது போல் மேஜிக் ட்ரிக்ஸ்  செய்கின்றனர் என்பதை வீடியோவுடன்
    சொல்லிக்கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்
    இந்தப்பதிவு.




    பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருந்தாலும் மேஜிக் செய்வதில்
    பயிற்சி தான் முக்கியம் சிறிய ட்ரிக்ஸ் தான் என்றாலும் அதைப்
    பயன்படுத்துவதில் உள்ள நெளிவு சுழிவு முக்கியம் அந்த வகையில்
    ஒளிவு மறைவு இல்லாமல் மேஜிக் ட்ரிக்ஸ் எப்படி செய்கின்றனர்
    என்பதை வீடியோவுடன் சொல்லிக்கொடுக்க ஒரு தளம் உள்ளது.



    இணையதள முகவரி : http://easybartricks.com


    இந்தத்தளத்திற்கு சென்று பலவகையான மேஜிக் ட்ரிக்ஸ் எப்படி
    செய்கின்றனர் என்பதை வீடியோவுடன் சொல்லிக்கொடுக்கின்றனர்
    இதில் எந்த வகையான ட்ரிக்ஸ் நமக்கு தெரிய வேண்டுமோ
    அதற்கான வீடியோவை சொடுக்கி நாம் தெரிந்து கொள்ளலாம்.
    Magic Tricks, Bottle Tricks , Coin Tricks ,Bill Tricks,Lighter Tricks
    Cigarette Tricks, Easy Magic Tricks, All Bar Tricks போன்ற அனைத்தும்
    தனித்தனி வகையாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. மேஜிக் ட்ரிக்ஸ்
    பற்றி அறிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு
    பயனுள்ளதாக இருக்கும்.


    உங்கள் பிறந்த தேதியை வைத்து, உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

    By: Unknown On: 21:37
  • Share The Gag




  • நிறம் என்பது ஒருவித மாஜை. நீங்கள் எந்த உடை அணிகிறீர்கள், அதன் விலை என்ன என்பதல்ல முக்கியம். அது பிறரைக் கவர்வதுமில்லை. அணிகிற உடையின் நிறம் தான் மற்றவர்களை ஈர்க்கிறது. ஆயிரக்கணக்கில் கொட்டிக் கொடுத்து வாங்கிய உடையானாலும், அது உங்களுக்கேற்ற நிறமாக இல்லாவிட்டால், யாருமே உங்களைத் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். யார் யாருக்கு என்ன நிறம் பொருந்தும், எந்த மாதிரி சந்தர்ப்பங்களுக்கு என்ன நிறம் உடுத்தலாம்? இதோ சில குறிப்புகள்!
    நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நிற ஈர்ப்பு உண்டு என்பது தெரியுமா? உங்கள் பிறந்த தேதியை வைத்து, உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
    உதாரணத்துக்கு உங்கள் பிறந்த நாள் 04.03.1981 என வைத்துக் கொள்ளுங்கள்.
    04.03.1981= 0+4+0+3+1+9+8+1
    =26 (2+6)
    =8
    8 என்பது வெள்ளி நிறத்துக்கான எண். இப்படி 1 முதல் 9 வரையிலான எண்களுக்கு ஒவ்வொரு நிறம் உண்டு. (1- சிகப்பு, 2- ஆரஞ்சு, 3-மஞ்சள், 4- பச்சை, 5- நீலம், 6- இண்டிகோ, 7- ஊதா, 8- வெள்ளி நிறம், 9- பிங்க்)
    உங்கள் பிறந்த நாளைக்கான நிறம் உங்களுக்கு அதிர்ஷமானது மட்டுமில்லை, உங்கள் நடத்தையையும் சொல்லிவிடுமாம்.
    அதன் படி....
    1. சிகப்பு- தன்னிச்சையானவர்கள், ஆதிக்க குணம் உடையவர்கள். சவால் விரும்பிகள், எதிலும் சுயமான முடிவையே எடுப்பவர்கள்.
    2. ஆரஞ்சு- சுறுசுறுப்புத் திலகங்கள். வெற்றி இவர்களை விடாது விரட்டும். புதிய சிந்தனை உடையவர்கள்.
    3. மஞ்சள்- தோழமையானவர்கள். சந்தோஷமானவர்கள். பாசிட்டிவ் குணமுடையவர்கள்.
    4. பச்சை - பழமைவாதிகள், புத்திசாலிகள், நேர்மையானவர்கள்.
    5. நீலம்- எடுக்கிற முடிவில் உறுதியான வர்கள். மிஸ் ஒழுக்கம் எனப் பெயரெடுக்க விரும்புவார்கள். பொறுமையும், அமைதியும் வாய்க்கப் பெற்றவர்கள்.
    6. இண்டிகோ- திருப்தியானவர்கள். பக்குவமானவர்கள், கடின உழைப்பாளிகள்.
    7. ஊதா- பிறரைக் கவர்பவர்கள், தாராள குணமுள்ளவர்கள், கிரகிப்புத் திறன் அதிகம் இருக்கும்.
    8. வெள்ளி நிறம்- மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும், ரொம்பவும் சாதாரணமாகவே இருப்பார்கள். பழக இனிமையானவர்கள்.
    9. பிங்க்- மென்மையானவர்கள், அப்பாவி, இளகிய மனம் படைத்தவர்கள்.

    தென்னையும் நாணலும் - நீதிக்கதை!

    By: Unknown On: 21:02
  • Share The Gag

  •  
     
    ஒரு ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒரு தென்னை மரமும்.நாணலும் இருந்தன.
    தென்னை மரத்துக்கு தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் இருந்தது.ஆகவே அவ்வப்போது நாணலை அது கேலி செய்து வந்தது.
     

    'நீ மிகவும் சிறியவன்..மழை,காற்று,வெயில் இவற்றை உன்னால் தாங்க முடியாது.நானோ உயர்ந்தவன் ...நான் எல்லாவற்றையும் தாங்குவேன்...
     
     
    எனக்கு  கவலை இல்லை' என்றது தென்னை நாணலைப் பார்த்து.....
     

    சில நாட்கள் கழிந்தன....
     

    மழைகாலம் வர... ஒரு நாள் புயல் ஏற்பட்டது...
     

    புயல் காற்றில் நாணல் தலை வணங்கியது..
     
     
    தென்னையோ புயலை எதிர்த்தது..
     

    தென்னை வேரோடு சாய்ந்தது....

    நாணல் எந்த சேதமும் அடையவில்லை....
     

    நாமும் தென்னையைப்போல கர்வமாய் இல்லாமல் நாணலைப்போல அனைவரிடமும் பணிவாக இருக்கவேண்டும்.
     
     

    காது வலி தீர்க்க வீட்டில் இருக்கு மருந்து!

    By: Unknown On: 20:58
  • Share The Gag


  •  Ear pain is a common thing for everyone to adult children.
    காது வலி பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் வரும் பொதுவான ஒன்று. இந்த காது வலி பெரும்பாலும் சளி  பிடிப்பதால் வரும்.  மேலும் அதிக இரைச்சல் மற்றும் சிலருக்கு தொண்டையில் ஏற்படும் அழற்சி காரணமாகவும் வரலாம். அப்படி  காதுவலி வந்தால் உடனே காதுக்குள்  எதையாவது போட்டு நுழைக்க கூடாது. 


    இதனால் காதுக்குள் கிருமித்தொற்று தான் ஏற்படுமே தவிர சரியாகாது. மேலும் இந்த காதுவலி இரவிலேயே வருவதால் என்ன  செய்வதென்று  தெரியாமல் விழிக்கும் நேரத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய வீட்டு மருத்துவம் நமக்கு கைக்கொடுக்கும். காது  வலி வந்தால் தேங்காய்  எண்ணெயை சூடேற்றி அதில் சிறிது உப்பு போட்டு மிதமான சூட்டில் காதில் விட்டால் காதில் இருக்கும்  புண் ஆறி வலி குறையும். 



    தூதுவளையை நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரைக்குடித்தால் காது வலி குறையும். தாழம்பூவை நெருப்புத் தணலில் காட்டி கசக்கி  சாறு பிழிந்து  அதில் சில துளிகளை காதில் விட்டால் காது வலி காதில் தோன்றும் கட்டி ஆகியவை குணமாகும். கொஞ்சம் நல் லெண்ணெயில் ஒரு கிராம்பை  போட்டு சூடு செய்து பின் அந்த எணணெயை வலி உள்ள காதில் விட்டால் விரைவில் வலி கு றையும். 



    சுக்கு, மிளகு, பெருங்காயம் ஆகியவைகளை அரைத்து சிறிதளவு நல்லெண்ணெயுடன் காய்ச்சி அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து  குளித்து  வந்தால் காது இரைச்சலும் அகலும். கரிசலாங்கண்ணி சாறு, நெல்லிக்காய் சாறு இரண்டையும் பால் மற்றும் அதிமது ரப்பொடி சேர்த்து தைலம் செய்து  தலைக்கு தேய்த்து குளித்து வர காது நோய் குணமாகும். 

    பல் வலிக்கு என்ன செய்தால் நிவாரணம் கிடைக்கும்!

    By: Unknown On: 20:53
  • Share The Gag


  •  If you have toothache, it is better to seek immediate advice from a dentist before the problem becomes worse.

    உங்களுக்கு பல் வலி இருந்தால் அது அதிக விளைவுகளை தருவதற்கு முன்பு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது சிறந்தது.. சிலருக்கு இரவு நேரங்களில் தான் பல் வலி பாடாய்படுத்தும். அந்த சமயத்தில் வீட்டில் இருக்கும் சில இயற்கை நிவாரணிகளைக் கொண்டு பல் வலியை போக்க முயற்சி செய்யலாம். இந்த பொருட்கள் பல் வலியை போக்கி பற்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. பல் வலியை போக்க சிறந்த ஆறு நிவாரணிகளை பார்க்கலாம்.


    கிராம்பு

    பல்வலியை போக்குவதில் சிறந்து விளங்கும் கிராம்பு அனைவரின் வீட்டிலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று. கிராம்பு பல் வலியை போக்க கூடிய எதிர்ப்பு அழற்சி, எதிப்பு பாக்டீரியா, ஆக்ஸிஜனேற்ற மற்றும் உணர்ச்சி நீக்கும் பொருட்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. ஆகவே இது பல் வலிக்கு நிவாரணம் அளிக்கும் முக்கிய பண்புகளை பெற்றுள்ளதால் கிராம்பை பல்வலிக்கு பயன்படுத்தலாம்.

    எப்படி பயன்படுத்தலாம்: கிராம்பு எண்ணெய்யை ஒரு காட்டன் துணி கொண்டு நனைத்து பல் வலி ஏற்படும் இடத்தில் சிறிது நேரத்திற்கு வைக்க வேண்டும். இப்படி செய்தால் பல் வலி குணம் பெறும். பல் வலியால் அவதி படுபவர்கள் அரை தம்ளர் தண்ணீரில் சிறிதளவு கிராம்பு எண்ணெய்யை ஒரு சில துளிகள் கலந்து வாயில் ஊற்றி கொப்பளிக்கலாம். மேலும் முழு கிராம்பை அரைத்து சிறிது கிராம்பு எண்ணெய் சேர்த்து பாதிக்கப்பட்ட பல்லின் மேல் தடவி வைத்தால் பல் வலி தீரும்.

    பூண்டு

    பூண்டை பயன்படுத்தினாலும் பல் வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.பூண்டு ஆண்டிபயாடிக் பண்புகள் மற்றும் பிறமருத்துவ குணங்களைகொண்டுள்ளது. இது பாக்டீரியா பாதிப்பில் உள்ள பகுதிகளை பாதிப்பிலிருந்து குறைக்கும் ஆற்றல் கொண்டது..

    எப்படி பயன்படுத்தலாம்: வெறுமனே பூண்டையும், கிராம்பையும் சேர்த்து நசுக்கி சில துளிகள் உப்பு சேர்த்து பல் வலி உள்ள இடத்தில் தடவினால் பல் வலி குணம் பெறும். மேலும் பூண்டையும் கிராம்பையும் வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.. இப்படி செய்வது பற்களுக்கு தரும் இயற்கை சிகிச்சையாகும்.

    கோதுமை புல் செடி(wheatgrass)

    பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டு செயல்படுவது கோதுமை புல். இது பல்வலிக்கு தீர்வு தர தேவையான பாக்டீரியா எதிர்ப்பு சக்திகளை கொண்டு செயல்படுகிற-து. கோதுமைபுல் பல் வலியை சரிபடுத்தி பற்களில் சிதைவு ஏற்படுவதை தடுப்பதற்கும் தீர்வு வழங்குகிறது.

    எப்படி பயன்படுத்தலாம்: கோதுமைபுல்லில் இருந்து சாறு எடுத்து அவற்றை வாய் கழுவ பயன்படுத்தலாம். இது ஈறுகளில் உள்ள நச்சுகளை பிரித்தெடுத்து பாக்டீரியா வளர்ச்சியை குறைத்து நோய் தொற்றை கட்டுபாட்டின் கீழ் வைத்துக்கொள்கிறது. மேலும் கோதுமைபுல் செடியை வாயிலிட்டு மென்று பல் வலியை போக்கலாம்.

    வெங்காயம்

    வெங்காயம் பல் வலியை குணப்படுத்தக்கூடிய கிருமி நாசினிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளது. பல் வலி வரப்போகிறது என அறிந்ததும் ஒரு முழு வெங்காயத்தை எடுத்து வாயிலிட்டு சுவைக்க தொடங்குங்கள். உங்களால் மெல்ல முடியவில்லையெனில் வெங்காயத்தை பசை போல அரைத்து பற்களின் மேல் தடவி வைக்க வேண்டும். இப்படி செய்தால் பற்களில் உள்ள கிருமிகளை கொன்று சில நிமிடங்களில் பற்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.

    கொய்யா இலைகள்

    கொய்யா இலைகளும் பல் வலியை தீர்க்கும். பாதிக்கப்பட்ட பல் வேலை செய்ய தொடங்குவதற்கு முன்பு வலி வரப்போவது என அறிந்ததும் ப்ரெஷ்சான ஒன்று இரண்டு கொய்யா இலைகளை வாயில் விட்டு மென்று விடலாம். மேலும் ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றி கொய்யா இலைகளை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பானதும் சில துளி உப்பு சேர்த்து வாய்களை சுத்தம் செய்யலாம். கொய்யா இலைகள் இல்லையெனில் பச்சை கீரைகளை பயன்படுத்தலாம். இவை இரண்டுமே பல் வலியை குணப்படுத்தும் சிறந்த மருந்து.

    மிளகு மற்றும் உப்பு

    மிளகு கலந்த உப்பு கூட வீட்டில் பல் வலியை கையாள சிறந்த மருந்தாகும். இது பல் வலிக்கு பயன் பெறக்கூடிய மிகச்சிறந்த மருந்தாகும். சம அளவு மிளகு, உப்பு எடுத்து சிறிது தண்ணீர் கலந்து பசை போல அரைத்து பாதிக்கப்பட்ட பற்களின் மேல் சில நிமிடங்கள் வைக்கலாம். இந்தமுறையை தினமும் சில நாட்களுக்கு செய்து வந்தால் பல் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.மேலும் பல் வலியை போக்க பெருங்காயம், ஐஸ் கியூப், பே பெர்ரி, சூடான உப்பு நீர் ஆகியவற்றைக் கொண்டும் பல்வலியை போக்கிகொள்ளலாம். 


    வீரமிகு செஞ்சிக்கோட்டை - சுற்றுலாத்தலங்கள்!

    By: Unknown On: 20:46
  • Share The Gag

  •    வீரமிகு செஞ்சிக்கோட்டை
     

     
    வீரமிகு செஞ்சிக்கோட்டை.
     
    தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி. விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த ஊர் , சென்னையில் இருந்து 160 கிமீ  தொலைவில் அமைந்துள்ள யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது.
    மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது.

    பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்கள் பாதுஷாபாத் என்றார்கள்  ,சோழர்கள் சிங்கபுர நாடு என்று கொண்டாடினார்கள் 
    இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை.
    பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.
     
    செஞ்சிக் கோட்டையை, 13ம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்ட துவங்கினர். அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை பலம் பொருந்திய கோட்டையாக மாற்றினர். குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர்.
     
    செஞ்சியின் வரலாறு பற்றி அதில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் அடிப்படையில் ஆராய்ந்தால்.. கி.மு. முதல் கி.பி 6 முதல்இங்கு ஜைனர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
    அதன்பிறகு, பல்லவர் காலத்தில் கிபி 600முதல் 900 முதல் சிங்கபுரத்தில் ஒரு குகைகோவில் கட்டப்பட்டது, செஞ்சிக்குத் தெற்கே பனமலைப் பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது. அதன் பின்னர் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட குகை கோயில் உருவாக்கப்பட்டது. இந்த இடம் செஞ்சியில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

    கி.பி.580 முதல் 630 வரை விசித்ரசித்தன் என அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் ஆளுகையில் செஞ்சி இருந்தது. மேலும் செஞ்சி கிழக்கு பகுதியில் காணப்படும் கல்வெட்டுகள், செஞ்சி பல்லவர்களின் காலத்திற்கு பின் சோழர்கள் ஆண்டதாகச் சொல்கிறது. தொடக்கத்தில், சோழர் ஆட்சிக்காலத்தில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறிய கோட்டை ஒன்று இங்கே இருந்தது. 1014-1190 களில், செஞ்சி பாண்டியர்களின் கையில் இருந்தததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
     
    இங்கிருந்த சிறிய நகரமான செஞ்சியைப் பாதுகாப்பதற்காக, விஜயநகரப் பேரரசுக் காலத்தில், 13 ஆம் நூற்றாண்டில் விரிவாக்கப்பட்டது. அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை வலிமை பொருந்திய கோட்டையாக மாற்றினர். 13 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர் என்கிறது கல் வெட்டுக்குறிப்பு.  அதுமட்டுமல்ல தமிழ் நாட்டில் நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் செஞ்சி நாயக்கர்களின் தலைமையிடமாகவும் செஞ்சி விளங்கியதாக கல்வெட்டு செய்தி தெரிவிக்கின்றது
     
    புராணப்படி பார்த்தால் செஞ்சி வந்ததிற்கான தெய்வீக தகவல் நம்மை ஆச்சர்யமூட்டுகின்றது
    அனுமன் பர்வத மலையை இலங்கைக்கு தன் கையால் தூக்கிச் சென்றபோது அதிலிருந்து பிரிந்து விழுந்த சிறிய பகுதிதான் சிரஞ்சீவி மலை என்றும், அதுதான் காலப்போக்கில் செஞ்சி என்று மாறியதாகவும் புராணக்கதை  சொல்கின்றது
    .
    தேசிங்குராஜாவும் செஞ்சிக் கோட்டையும் 
     
    ஷாஆலம் வாங்கிய ஒரு புதிய முரட்டு குதிரையை யாராலும் அடக்க முடியவில்லை அதனால் குதிரை ஓட்டுவதில் வல்லவர் ஆன சொரூப்சிங்கை தில்லிக்கு வர சொன்னார் சுல்தான், அவருக்கு துணையாக 18 வயதே ஆன ராஜாதேசிங்கும் சென்றான். தந்தையால் குதிரையை அடக்க இயலவில்லை எனவே தனக்கொரு  வாய்ப்பளிக்கும்படி   தேசிங்கு சுல்தானிடம் முறை இட்டான், வாய்ப்பளிக்கப்பட்டது .அனைவரும் வியக்கும் வண்ணம் அக்குதிரையை அடக்கி சவாரி செய்து எல்லோரையும் ஆச்சர்யமூட்டினான்
    அக்குதிரையின் பெயர் பரிகாரி. தேசிங்கின் வீரத்தைப் பாராட்டி அக்குதிரையையே பரிசளித்தார்  சுல்தான். அது மட்டும் அல்ல.. இன்னொரு ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த தளபதி தனது மகளையும் தேசிங்கிற்கு மணமுடித்து வைத்தார். தேசிங்கின் மனைவி பெயர் ராணிபாய். இவர் பெயரால் உருவான ஊர்தான் ராணிப்பேட்டை..
    செஞ்சி அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிங்கவரம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது. அந்த ஆலயத்தில் பள்ளிக்கொண்டிருக்கும்
    ஸ்ரீ அரங்கன் தான் தேசிங்கு ராஜாவின் தெய்வம், எந்த வேலைச்செய்தாலும் இந்த அரங்கனிடம் சொல்லிவிட்டு தான் செய்வாராம். அதேப் போன்று எந்தப்போருக்குச்சென்றாலும்  அரங்கனிடம் உத்தரவு பெற்ற பின்பு தான் போருக்கு புறப்படுவாராம் ஒரு முறை ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட நேர்ந்தபோது... தன் குல தெய்வமான இந்த ஸ்ரீஅரங்கநாதரிடம் அனுமதி கேட்டாராம். அதற்கு ஸ்ரீஅரங்கன், "இன்று போருக்குச் செல்ல வேண்டாம். நாளை செல்" என்று கூறினாராம். தேசிங்கோ, "எதிரியின் படைகள் எல்லையை அடைந்துவிட்டது அதனால் ... முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன். இன்றே செல்லட்டுமா?" என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் ஸ்ரீரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணும் போது இது உண்மை சம்பவமே என்பது புலப்படும்
     

    செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளடங்கியுள்ளது. 240 மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டிருந்தது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க், ராஜகிரி ஆகிய குன்றுகள் இருந்தன. இடையேயிருந்த வெளிகள் 20 மீட்டர்கள் அகலம் கொண்ட சுவர்களினால் மூடப்பட்டிருந்தன..
     
    செஞ்சிக் கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

    கோட்டையுள் அமைந்துள்ள கல்யாண மண்டபம் பிரமிப்பூட்டும் விதத்தில் அமைந்துள்ளது வெளியார் படையெடுப்பை முறியடிப்பதற்கு உகந்த இடமொன்றாகக் கருதியே இவ்விடத்தில் இக்கோட்டை கட்டப்பட்டது. மராட்டியர்களிடம் இருந்த இக் கோட்டையை பீஜப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின. இக் கோட்டையை கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய(மீட்ட) மராட்டிய மன்னர் சிவாஜி இதனை மேலும் பலப்படுத்தினார்.
     
    ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டான். முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டான். பின்னர் இக் கோட்டை கர்நாடக நவாப்புக்களில் கைக்கு வந்தது. அவர்கள், 1750 இல் இதனை பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும் சிறிதுகாலம் இதனை ஹைதர் அலியும் கைப்பற்றி வைத்திருந்தான் என்கிறது கல்வெட்டு செய்தி
     
    பல்வேறு படையெடுப்புகளை முறியடித்து காலத்தாலும் அழிக்கமுடியாத பொக்கிஷமாக காட்சி தருகிறது செஞ்சிக்கோட்டை. கடைசி மன்னராக செஞ்சிக்கோட்டையை ஆண்ட ராஜா தேசிங்கு வாழ்ந்த இடம், போரிட்ட இடம், மரணம் தழுவிய இடம், தேசிங்கின் மனைவி ராணிபாய் உடன்கட்டை ஏறிய இடம் என பார்த்து பரவசம் அடையும் வண்ணம் உள்ளது.
    வியப்பில் ஆழ்த்தும் கட்டட கலைக்கு எடுத்தக்காட்டாக கலைநயத்துடன் கல்லில் கட்டப்பட்ட கம்பீரமான கட்டுமானத்தை கண்டு வியப்படையாதவர்களே இல்லை.
    தேசிங்குராஜன் ஆட்சி செய்த 17-ம் நூற்றாண்டின் வரலாற்றின் காலத்திற்கே நம்மை அழைத்து செல்லும் இடமாக விளங்கி வருகிறது இந்த செஞ்சிக் கோட்டை.
    கோட்டையைப் பார்த்து விட்டு வெளியே வந்த பின்பு தான் நாம் மீண்டும் இந்த நூற்றாண்டுக்கு திரும்பிவந்த உணர்வு ஏற்படும்

    ராஜா கோட்டையின் கீழே பார்க்க வேண்டிய இடங்கள்
     
    சிவன் கோயில், அம்மன் ஆலயம், வேலூர் வாயில், சாதத்துல்லாகான் மசூதி, பாண்டிச்சேரி வாயில், வெங்கடரமணர் ஆலயம், சுழலும் பீரங்கிமேடை, உளி வளிக்கும் கல் பட்டறை, கல்யாண மஹால், முகமதுகான் மசூதி, அரண்மணை வளாகம், பணியாளர்கள் தங்கும் அறை, கல்யாண மஹால், குதிரை லாயம், யானைக்குளம், ஆயுதக் கிடங்கு, உடற்பயிற்சி அரங்கம், வெடி மருந்துக் கிடங்கு, நெல் களஞ்சியம், வேணுகோபாலசுவாமி கோயில், ஜும்மா மசூதியின் கலை பாணி, தேசிங்குராஜன் உடல் எரியூட்டப்பட்ட இடம், ஏழு கன்னிமார் கோயில், சர்க்கரை குளம், செட்டிக்குளம், ஆஞ்சநேயர் கோயில், மரணக்கிணறு ஆகியவை பார்க்க வேண்டிய முக்கிய இடங்களாகும்.

    இந்த விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க செஞ்சிக்கோட்டை கொத்தலங்களைப் பார்த்து, வரலாற்றை நேரில் பார்த்த அனுபவத்தை பெற்றிடுங்கள் .
    இந்திய தொல்லியல்துறையின் முழு கட்டுப்பாட்டின்கீழ் உள்ள செஞ்சிக் கோட்டையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் சிலவற்றை செய்து பராமரித்து வருகிறது.

    பிரபுதேவா வேகத்தைக் கண்டு வியக்கும் பாலிவுட்!

    By: Unknown On: 20:35
  • Share The Gag


  • 'ராம்போ ராஜ்குமார்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஓர் அதிரடி படத்தை இயக்கி வருகிறார் பிரபுதேவா.


    'ராமையா வஸ்தாவையா' படத்தைத் தொடர்ந்து ஷாகித் கபூர் - சோனாக்ஷி சின்கா நடிக்கும் 'ராம்போ ராஜ்குமார்' படத்தினை இயக்கி வந்தார் பிரபுதேவா. இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுற்றது. தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.


    தற்போது மீண்டும் ஓர் அதிரடி படத்தை இயக்கத் தொடங்கிவிட்டார். இதில் அஜய் தேவ்கான் நாயகனாக நடித்து வருகிறார். படத்தில் மொத்தம் 3 நாயகிகள். சோனாக்ஷி சின்கா, யாமி கெளதம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். மூன்றாவது நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.
    அஜய் தேவ்கான் நடிக்கும் படத்திற்கு 'ஆக்ஷன் ஜாக்சன்' என்று தலைப்பிட்டு இருக்கிறார் பிரபுதேவா. முழுக்க அதிரடி, காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கி வருகிறார். இப்படத்தில் அதிரடி, நடனம் என இதுவரை பார்க்காத அஜய் தேவ்கானை காட்ட திட்டமிட்டு இருக்கிறாராம்.


    'ராம்போ ராஜ்குமார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் வெளியாகாத நிலையில், பிரபுதேவா தனது அடுத்த படத்தை இயக்கி வருவதை மிகவும் ஆச்சர்யமாக பார்க்கிறார்கள் இந்தி திரையுலகில். இவ்வளவு வேகமாக எப்படி இயக்குகிறார் என்பதுதான் அனைவரது கேள்வியும்.

    குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே நய்யாண்டி: தனுஷ்!

    By: Unknown On: 20:29
  • Share The Gag






  • குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே நய்யாண்டி வெளியாகலாம் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.


    ‘களவாணி’, ‘வாகை சூடவா’ ஆகிய படங்களை அடுத்து சற்குணம் இயக்கும் நய்யாண்டி. இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நஸ்ரியா நசீம் நடிக்கிறார். இவர்கள் தவிர சரண்யா பொன்வண்ணன், சூரி, சத்யன், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் சற்குனத்தின் நண்பரான ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். ஏற்கெனவே இவர் ”களவாணி”, ”வாகை சூட வா” ஆகிய படங்களில் சற்குனத்துடன் இணைந்து பணியாற்றியவர்.


    இந்தப் படத்துக்கு முதலில் சொட்ட வாளக்குடி என்றுதான் பெயர் வைத்திருந்தனர். படத்தின் பெயரை உச்சரித்த பலரின் நாக்கு சுளுக்கிக் கொண்டதால் பொதுமக்களின் நலன் கருதி பெயர் நய்யாண்டியாக மாற்றப்பட்டது. குத்துவிளக்கு செய்யும் கடை வைத்திருக்கும் ஹீரோவிற்கும், பல் மருத்துவம் படிக்கும் ஹீரோயினுக்கும் இடையில் ஏற்படும் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் படம்தான் ‘நய்யாண்டி’.  பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.


    அக்டோபர் 11-ம் தேதி நய்யாண்டி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே படம் வெளியாகலாம் என்று நடிகர் தனுஷ் தனது இணையதளத் தகவலில் தெரிவித்துள்ளார். படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    சினிமா நூற்றாண்டு விழா: கலை நிகழ்ச்சியில், ரஜினிகாந்த்–கமல்ஹாசன்!

    By: Unknown On: 19:27
  • Share The Gag


  •  
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    சினிமா நூற்றாண்டு விழா கலைநிகழ்ச்சியில், ரஜினிகாந்த்–கமல்ஹாசன் ஆகிய இருவரும் கலந்து கொள்கிறார்கள். டைரக்டர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகிய இருவரின் கேள்விகளுக்கு ரஜினிகாந்த்–கமல்ஹாசன் பதில் அளிக்கிறார்கள்.
     
    நூற்றாண்டு விழா
     
    இந்திய சினிமா நூற்றாண்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. விழாவை, முதல்–அமைச்சர் ஜெயலலிதா குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். 
     
    அதைத்தொடர்ந்து, தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தலைவர் கல்யாண் வரவேற்று பேசுகிறார்.
     
    50 பேருக்கு விருது
     
    இந்திய சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்த பட அதிபர் ஏவி.எம்.சரவணன், நடிகைகள் சரோஜாதேவி, வைஜயந்திமாலா, சாரதா, ஜெயந்தி, குட்டி பத்மினி உள்பட 50 கலைஞர்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா விருது வழங்கி பேசுகிறார்.
     
    மாலை 6 மணிக்கு நடிகர்–நடிகைகளின் கலைநிகழ்ச்சிகள் தொடங்குகிறது.
     
    ரஜினிகாந்த்–கமல்ஹாசன்
     
    கலைநிகழ்ச்சிகளில், ரஜினிகாந்த்–கமல்ஹாசன் கலந்து கொள்கிறார்கள். டைரக்டர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகிய இருவரின் கேள்விகளுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் இரண்டு பேரும் பதில் அளிக்கிறார்கள். அதைத்தொடர்ந்து நடிகர்–நடிகைகளின் நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
     

    மனித ரத்தம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்!

    By: Unknown On: 18:20
  • Share The Gag

  • விபத்து, இயற்கை பேரழிவு, தீவிரவாதிகள் தாக்குதல் மற்றும் போர்க்காலங்களில் ஏராளமானவர்கள் தங்கள் உயிரையும் உடைமைகளையும் இழக்கின்றனர். ஏராளமானவர்கள் உயிருக்கு பேராடுகின்றனர். சிலர் தங்கள் உறுப்புகளை இழக்கின்றனர். 


    இப்படிபட்ட சூழ்நிலைகளில் அவர்களின் உயிரைக் காப்பாற்ற ரத்தம் அதிக அளவில் தேவைப்படுகிறது. சிலசமயம் தேவைக்கு ஏற்ப ரத்தம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ரத்த பிரிவு நோயாளிகளுக்கு பொருந்துவதில்லை. இதனாலும் அவர்களிள் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது. இதனால்தான் ரத்த தானம் உயிர்தானத்துக்கு இணையாக வர்ணிக்கப்படுகிறது.அப்பேர்பட்ட ரத்தம் பற்றிய அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வோமா?


    ரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?


    ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.

    sep 21 - health blood.MINI

     


    ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?


    ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது.


    ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?


    ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.


    ரத்தத்தில் உள்ள “பிளேட்லட்’ அணுக்களின் வேலை என்ன?


    உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி “பிளேட்லட்’ அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “கார்க்’ போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.


    பிளாஸ்மா என்றால் என்ன?


    ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.


    ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?


    ரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது.


    ரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன?


    உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் “பம்ப்’ செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.


    உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா?


    ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! – மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம்.


    உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?


    எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.


    ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?


    நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.

    +2, டிப்ளமோ தகுதிக்கு AIRPORTS AUTHORITY OF INDIA-வில் பணி வாய்ப்பு!

    By: Unknown On: 18:15
  • Share The Gag


  • இந்திய விமான நிலையங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவும், அவற்றின் செயல்பாடுகளை துரிதப்படுத்தும் விதமாக கொண்டுவரப்பட்டதுதான் ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா. இந்த நிறுவனத்தின் பயர் சர்வீஸஸ் பிரிவில் காலியாக உள்ள 100 ஜூனியர் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


    பணி: ஜூனியர் அசிஸ்டன்ட்


    மொத்த காலியிடங்கள்:
    100

    வயது வரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.

    sep 21 Airports-Authority-India.
    சம்பளம்: ரூ.12,500 – 28,500

    கல்வித்தகுதி:

    பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிகல், ஆட்டோமொபைல் அல்லது பயர் பிரிவில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். மேலும் 50 சதவீத மதிப்பெண்களுடன் +2 முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

    தேர்வு செய்யப்படும் முறை:


    எழுத்துத் தேர்வு, பிஸிக்கல் மெஷர்மெண்ட், டிரைவிங் டெஸ்ட், எண்டியூரன்ஸ் டெஸ்ட் மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பக் கட்டணம்
    :

    ரூ.400. இதனை Airports Authority of India என்ற பெயரில் புது டில்லியில் மாற்றத்தக்கதாக வகையில் வங்கி வரைவோலையாக எடுத்தல் வேண்டும்.

    விண்ணப்பிக்கும் முறை
    :

    www.airportsindia.org.in,  www.aai.aero  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.


    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

    The Regional Executive Director, Airports Authority of India, Northern Region, Operational Office, Rangpuri, Gurgaon Road, New Delhi – 110037

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:    

    15.10.2013 மேலும் உடற்தகுதி உள்ளிட்ட முழு விபரங்கள் அறிய www.airportsindia.org.in/employment_news/Advertisement_fire.pdf  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

    தங்க கலவையினால் ஆன ‘டீ’ ஒரு கப் ரூ.925 மட்டுமே!

    By: Unknown On: 18:09
  • Share The Gag

  • இந்தியா, சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளில் தங்க கலவையினால் ஆன ‘டீ’ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் துபாயில் முதன் முறையாக இந்த ‘தங்க டீ’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இங்குள்ள ’‘மொக்கா ஆர்ட் கபே’ ஓட்டலில் இந்த ‘டீ’ விற்கப்படுகிறது. இது 22 கேரட் தங்கத்தை கலந்து தயாரிக்கப்படுகிறது.இதன் விலை ஒரு கப் ரூ.925 (55 தினார்) மட்டும்.


    sep  21 coffee-Gold

     



    ‘மொக்கா ஆர்ட் கபே’யின் நிறுவனர் அஷ்ரப்மக்ரான் (32) எகிப்தை சேர்ந்தவர். ‘தங்க டீ’ குறித்து அவரிடம் கேட்டபோது,”இந்த டீயை இங்கிலாந்தில் உள்ள ஒரு ஓட்டலில் குடித்தேன். அதன் சுவை எனக்கு பிடித்து விட்டது. அதைத் தொடர்ந்து இந்த ‘டீ’யை துபாயில் அறிமுகம் செய்தேன்.


    இலங்கையில் இருந்து தேயிலை இறக்குமதி செய்யப்பட்டு ஜெர்மனிக்கு அனுப்பப்படுகிறது. அங்கு அவை 22 கேரட் தங்க பிளேட்டுகளாக தயாரிக்கப்படுகிறது. பின்னர் மொராக்கோ அனுப்பப்பட்டு டீயின் சுவை அளிக்கப்படுகிறது.இந்த டீ அரபு நாட்டினர், மேற்கத்தியர்கள் என அனைத்து தரப்பினரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது உடல் நலத்துக்கும் நல்லது’’ என்று அவர் கூறினார்.


    Dubai café serves 22-carat gold tea

    *************************************************
     

    Believe it or not, you can now drink gold in Dubai. Costing just Dh55 a cup, gold tea is available at a promotional price at Mocca Art Cafe, Downtown Dubai.“We introduced it around two weeks ago,” cafe founder and partner Ashraf Mahran told XPRESS. The 32-year-old Egyptian was inspired to bring the concept here after tasting it in a UK hotel.

    தண்ணீர்ப் பஞ்சத்தை சமாளிக்க தீர்வு சொல்லும் மாணவர்கள்!

    By: Unknown On: 18:04
  • Share The Gag

  • நிலத்தடி நீரை சேமித்து தண்ணீர்ப் பஞ்சத்தைச் சமாளிக்க வழி சொல்கிறார்கள் சென்னைக் கல்லூரி மாணவர்கள்.

    வீணாக சாக்கடையில் கலக்கும் மழைநீரை, பாதுகாத்து பத்திரப்படுத்தி பல்வேறு உபயோகங்களுக்குப் பயன்படுத்தினால் எப்படி இருக்கும்? கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. அதற்கான முயற்சிகளை யார் எடுப்பது?

    சென்னை ஸ்ரீ சாராம் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். (சிவில்) படிப்பை சமீபத்தில் முடித்த மாணவர்கள் விக்னேஷ் சந்திரமௌலி, வி.வினோத், எஸ்.நவீன் குமார், ஜி.பிரபு ஆகியோர் ஒருங்கிணைந்து இதற்கான தீர்வைக் கண்டறிந்துள்ளனர்.

    சென்னை நகர மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையிலான புராஜக்ட்டை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வறட்சியால், மாநிலம் முழுவதுமே நிலத்தடி நீர் வரத்து குறைந்தது. சென்னையில் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த ஆண்டு பெய்த மழையால், நீர் வரத்து அதிகரித்தபோதிலும், மழை நீர் சாலைகளில் வீணாக வழிந்தோடியதையும் பார்க்க முடிந்தது. அவ்வாறு வீணாகும் மழை நீர்  இறுதியில் கடலில் கலக்கிறது. தூய்மையான மழை நீரில், 70 சதவீதம் நீர் சாக்கடைகளிலும், சாலைகளிலும் வீணாகிறது. இவ்வாறு வீணாகும் நீரை சேமிக்க வழியுண்டா என்பது பற்றி யோசித்ததன் விளைவே, எங்கள் புராஜக்ட்டுக்கு அடித்தளமாக அமைந்தது" என்று விவரிக்கிறார் வினோத்.

    மழை நீரை வீணாக்காமல், பயனுள்ள முறையில் சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் எங்கள் புராஜக்ட்டை உருவாக்கத் திட்டமிட்டோம். ரெய்ன் சென்டர் அமைப்பின் சேகர் ராகவனைச் சந்தித்தோம். அவரது ஆலோசனைப்படி, சென்னையில் நிலத்தடி நீர் மட்டத்தின் அளவை ஆராய்ந்தோம். இதற்காக பல்வேறு இடங்களைத் தேர்வு செய்தோம். வீடுகளில் மழை நீர் சேமிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு  முன்பு, நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு என்று இரண்டு கோணங்களில் எங்கள் ஆராய்ச்சியைத் துவக்கினோம். பெசன்ட் நகர், வேளச்சேரி, தி.நகர் போன்ற இடங்களில் மழை அளவையும், வடிகால் வசதிகளையும் ஆராய்ந்தோம். அப்போது எங்களுக்கு சில முடிவுகள் தெரியவந்தன..." என்று விவரிக்கின்றனர் வினோத்தும், பிரபுவும்.

    எங்கள் ஆராய்ச்சியின்படி, கடுமையான பாறைகள் உள்ள பகுதி, களிமண் பகுதி, மணற்பாங்கான பகுதி என்று மூன்று வித்தியாசமான பிரிவுகள் இருப்பதை அறிந்தோம். பெசன்ட் நகர் பகுதி, மணல் அதிகமுள்ள பகுதியாகும், வேளச்சேரி, கடினமான பாறைகளாலான பகுதி. தி.நகர், களிமண் அதிகமுள்ள பகுதி. இப்படி, ஒவ்வொரு பகுதியிலும் அந்தப் பகுதி மண்ணின் தன்மைக்கேற்ப, நிலத்தடியை சீரமைத்து தண்ணீரைத் தேக்கி வைக்கும் வசதிகள் செய்யவேண்டும். எங்கள் புராஜக்ட்டின்போது வேளச்சேரியில் ஒரு தெப்பக்குளத்தைப் பார்த்தோம். 10 லட்சம் லிட்டர் நீரைத் தேக்கி வைக்கும் தன்மை கொண்ட அந்தக் குளத்தில் தேவையற்ற செடி, கொடிகள் பரவியிருந்தன. குளமே தெரியாத அளவுக்கு புதர் மண்டிக் கிடந்தது. இதுபோன்ற குளங்களையும், தண்ணீர் அமைப்புகளையும் கண்டறிந்து தூர் வாரும் பணியை அரசு மேற்கொள்ள வேண்டும்" என்கிறார்கள் நவீன்குமாரும், விக்னேஷ் சந்திரமௌலியும்.

    களிமண் பகுதியான தி.நகர் போன்ற பகுதியில், விளையாட்டு மைதானம் போன்ற ஒரு பொது இடத்தில் சுமார் 6 அடி ஆழத்திற்கு ஒரு சிறிய கிணற்றைத் தோண்டி, அதில் ஒரு பைப்பை நிலத்தடியைத் தொடும்படி இணைக்க வேண்டும். வீணாகும் மழை நீரை இந்த கிணற்றை நோக்கித் திருப்பிவிடவேண்டும். மழை நீருடன் குப்பைகள், கண்ணுக்குத் தெரியாத துகள்கள் கலந்துவிடாமல் இருப்பதற்காக இந்த கிணற்றை, துளைகள் நிறைந்த ஒரு கான்கிரீட் ஸ்லாப்பால் மூடி விடவேண்டும். சாலைகளில் வீணாகும் மழை நீர் இந்த கிணற்றில் விழுவதால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். பெசன்ட் நகர் போன்ற மணற்பாங்கான பகுதிகளில், சாலையின் ஒரு ஓரத்தில் சிறிய அளவில் தண்ணீர் சேகரிப்புத் தொட்டியை அமைத்து, வீணாகும் நீரைச் சேமிக்கலாம். வேளச்சேரி போன்ற பாறைகள் நிறைந்த நிலத்தடியைக் கொண்ட பகுதியில், கோயில் குளம், தெப்பக்குளம் போன்ற குளங்களை தூர்வாரி, மழை நீர் சேகரிப்புத் தொட்டிகளாகப் பயன்படுத்தலாம்" என்கிறார்கள் வினோத்தும் அவரது நண்பர்களும்.

     

    குலைகுலையாய்க் காய்க்கும் குட்டைத் தென்னை!

    By: Unknown On: 18:01
  • Share The Gag

  • தென்னையில், நெட்டை ரகம் தேங்காய்களுக்காகவும், குட்டை ரகம் இளநீருக்காகவும் சாகுபடி செய்யப்படுகின்றன. சமீப காலமாக, குட்டை தென்னை ரகங்களை விவசாயிகள் விரும்பிப் பயிரிட்டு வருகின்றனர். குறுகிய காலத்திலேயே மகசூல், எளிய பராமரிப்பு, இளநீருக்கு ஏற்பட்டுள்ள மவுசு, நிலையான கொள்முதல் விலை போன்ற காரணங்களால், தமிழகத்தில் குட்டை தென்னந்தோப்புகள் அதிகரித்து வருகின்றன. நெல்லை மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த அந்தோணிச்சாமி, 4 ஹெக்டேர் பரப்பளவில், குட்டை தென்னை மரங்களைப் பயிரிட்டு, நல்ல லாபமடைந்து வருகிறார். அவரது வழிகாட்டல்கள் இங்கே...

    சமீப காலமாக, கார்பானிக் அமில குளிர்பானங்களை விட, இளநீர் போன்ற இயற்கை பானங்களை மக்கள் விரும்பி அருந்தத் தொடங்கியுள்ளனர். எதிர்வரும் காலத்தில் இளநீர் பானத்திற்கு உள்ள கிராக்கி மேலும் அதிகரிக்கும் என்பதால், வணிக ரீதியாக குட்டை ரக தென்னை மரங்களைப் பயிரிடத் தொடங்கினேன். பச்சை, மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறங்களில் சுமார் 800 தென்னை மரங்களை இயற்கை விவசாய முறையில் வளர்த்து வருகிறேன்.

    நடவு முறை

    நல்ல வடிகால் வசதியுடைய வண்டல் மற்றும் செம்பொறை மண் வகைகள் தென்னை சாகுபடிக்கு ஏற்றவை. சவ்காட் ஆரஞ்சு, சவ்காட் பச்சை, மலேசிய மஞ்சள் போன்ற குட்டை தென்னை ரகங்கள் தமிழக தட்பவெப்பநிலைக்கு உகந்தவை. சதுரம் அல்லது முக்கோண நடவு முறையைப் பின்பற்றலாம். நடவு வயலில் 3 அங்குலம் நீள ஆழ அகல அளவில் குழிகள் தோண்டி, ஏக்கருக்கு 70 கன்றுகள் நட வேண்டும். கன்றினை சுற்றியுள்ள மண்ணை நன்கு அழுத்திவிட்டு, தென்னங்கீற்றுகளைப் பயன்படுத்தி நிழல் ஏற்படுத்த வேண்டும். காற்று பலமாக வீசினால் குச்சியை ஊன்றி கன்றினை சேர்த்துக் கட்ட வேண்டும்.

    நீர் மற்றும் உர நிர்வாகம்

    தென்னைக்கு சொட்டுநீர்ப் பாசனமே உகந்தது. களைக் கட்டுப்பாட்டுக்கும், நீர் சிக்கனத்திற்கும் இது உதவும். நடவு செய்த ஓராண்டு வரை, வாரத்திற்கு 3 முறையும், இரண்டாவது ஆண்டு முதல், வாரத்திற்கு 2 முறையும் நீர் பாய்ச்ச வேண்டும். கோடைக்காலங்களில் ஒரு கன்றுக்கு 45  லிட்டர் வீதம், 4 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். தென்னை ஓலைகள், நார்க்கழிவுகளை மரத்தின் அடியில் பரப்புவதன் மூலம் நீர்ப்பற்றாக்குறையை சமாளிக்கலாம்.

    மக்கும் குப்பை, களைச்செடிகள், கரம்பை மண் ஆகியவற்றை கலந்து, 60 நாட்கள் ஊற வைத்து, பின்பு ஒவ்வொரு கன்றுக்கும் அக்கலவையை தேவையான அளவு இட வேண்டும். சிபாரிசு செய்யப்பட்ட ரசாயன உரங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    பயிர்ப் பாதுகாப்பு

    தென்னை சாகுபடியைப் பொருத்தவரையில், காண்டாமிருக வண்டுகள் பெரும் இடையூறாக இருக்கின்றன. இவ்வண்டுகள் விரிவடையாத குருத்துப்பாகம் மற்றும் மொட்டுப்பகுதியை மென்று விடுகின்றன. இதனால் 10-லிருந்து 12 சதவிகித மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இனக்கவர்ச்சிப் பொறி அமைத்தும், முட்டைகளைப் பொறுக்கியும் காண்டாமிருக வண்டுகளை அழித்திடலாம். பென்சில் முனை குறைபாடு காரணமாக, மரம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தால், அவற்றை அப்புறப்படுத்தி விட வேண்டும். வேர் அழுகல் நோயைத் தவிர்க்க, தோப்பில் நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.  குரும்பைகள் மற்றும் பூக்கள் உதிர்வதைத் தடுக்க, மரத்திற்கு 2 கிலோ வீதம்,  உப்பை பூ நுனியிலும், வேர்ப்பகுதியிலும் போட்டு, நீர் பாய்ச்ச வேண்டும். மரத்தண்டை கரையான் தாக்கத்திலிருந்து கட்டுப்படுத்த, மரத்தின் 2 அடி உயரத்திற்கு சுண்ணாம்பு அடிக்கலாம்.

    தோப்புப் பராமரிப்பு

    பருவமழை துவங்கும் போதும், முடியும் போதும் தோப்பை உழ வேண்டும். இதன் மூலம் வேர்களுக்கு ஈரத்தன்மை கிடைப்பதுடன், களைகளும் நீக்கப்படுகின்றன. பூச்சி மற்றும் பூஞ்சாணங்கள் தாக்கப்பட்டு இறந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி விடவேண்டும். அடிமரங்களில் அரிவாள் கொண்டு கொத்தி காயம் ஏற்படுத்தக்கூடாது. ஒவ்வொரு தென்னைமரத்தைச் சுற்றியும் 2 மீட்டர் சுற்றளவில், 11 அங்குல ஆழத்திற்கு உரிமட்டைகளை நார்ப்பகுதி மேலே இருக்கும்படி மண்ணில் புதைத்து வைத்தால் மழை நீரும், பாய்ச்சப்படும் நீரும் தக்க வைக்கப்பட்டு மரத்திற்கு கிடைக்கும். மண்ணரிப்பைத் தடுக்க, தோப்பின் 4 ஓரங்களிலும் தடுப்பு வரப்பு அமைக்கலாம்.

    மகசூல்

    நடவு செய்த 3 வருடத்திலிருந்தே காய்ப்பிடிப்பு தொடங்கிவிடும். ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 200 இளநீர் கிடைக்கும். ஒரு குலையில் குறைந்தது 20 காய்கள் விளையும். 25 நாட்களுக்கு ஒரு முறை காய் பறிக்கலாம்.  4 ஹெக்டேரையும் சேர்த்து ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் காய்கள் கிடைக்கின்றன. ஓர் இளநீர் தற்போது 12 ரூபாய்க்கு விலை போகிறது. கோடைக்காலங்களில் இதன் விலை மேலும் அதிகரிக்கும். குட்டை தென்னை மரங்களை 30 முதல் 40 ஆண்டுகள் வரை பராமரிக்கலாம்" என்கிறார் அந்தோணிச்சாமி.

    கிணற்று நீரை இறைக்கும் சோலார்!

    By: Unknown On: 17:58
  • Share The Gag

  • நான் மூன்று ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். கத்திரி, வெண்டை, கீரை போன்ற பயிர்களைப் பயிரிட்டு வருகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஆற்றிலும் தண்ணீர் வரவில்லை, மின்சாரத்தை நம்பியும் பயிர் செய்ய முடியாத சூழல். மின்சாரம் விட்டு விட்டு வருவதனால் தொடர்ச்சியாக நீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகி அழிந்தன. டீசல் மூலமாக என்ஜினை இயக்கினால் டீசல் விலை உயர்வால் முதலுக்கே மோசம் வரும் நிலை உருவானது.

     

    விவசாயத்தை மட்டுமே நம்பி நான் குடும்பத்தை நகர்த்தி வருகிறேன். எனக்கு வேறு எந்த வருமானமும் கிடையாது. எனவே நித்தம் காவிரியையும், கரண்ட்டையும் எதிர்பார்த்துக் காத்திருந்தது போதும், வேறு என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் எனது கவனம் சோலார் மின்சாரத்தை நோக்கித் திரும்பியது.



    கருகிக்கொண்டிருந்த பயிர்களைக் கண்டு வருந்தினேன். கடன் வாங்கியாவது சோலார் மின்சாரம் அமைப்பது என முடிவு செய்தேன். 2 கே.வி. அளவுள்ள சோலார் தகடுகளைப் பொருத்தி 2 ஹெச்.பி. அளவுள்ள மோட்டார் பொருத்தினேன். இந்த அளவுள்ள சோலார் தகடுகளை வைத்து 5 ஏக்கர் வரை விவசாயம் செய்யலாம். மேலும் தண்ணீர் வீணாவதைத் தடுக்க தெளிப்புநீர்ப் பாசனத்தைப் பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்ச ஆரம்பித்தேன். இதன் மூலமாக தண்ணீர் மிகவும் சிக்கனமாக செலவானது.



    இப்போது நான் கத்திரி பயிரிட்டுள்ளேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடிப் போயிருந்த எனது செடிகளின் முகத்தில் இப்போதுதான் சிரிப்பைப் பார்க்க முடிகிறது. பகல் நேரங்களில் நமது ஊரில் நல்ல வெயில் அடிப்பதால் கரண்ட்டுக்கு சமமான அளவு வேகத்துடன் சோலார் மோட்டார் இயங்குகிறது. இந்த மோட்டார் அமைக்க இரண்டரை லட்ச ரூபாய் செலவானது. என்றாலும் தொடர்ச்சியாக எந்தப் பராமரிப்புச் செலவும் கிடையாது. மேலும் இந்த வகையான சோலார் மோட்டார்களை ஒருமுறை அமைக்கும்போது பின்னர்  வேறு எந்த செலவீனமோ, சிக்கலான பயன்பாட்டு முறையோ கிடையாது. என்னைப் போன்ற விவசாயிகளும் புரிந்துகொள்ளும் வகையில் மிகவும் எளிமையாக உள்ளது.



    இந்த ஆண்டு சோலார் மின்சாரத்தைப் பயன்படுத்தி, விவசாயம்செய்ததால் கத்திரி நல்ல விளைச்சல் கண்டுள்ளது. மேலும் கீரை, வெண்டை போன்ற பயிர்களையும் நடவு செய்துள்ளேன்.



    அரசாங்கத்தின் சார்பில் சோலார் மின்சாரத்தை ஊக்குவிக்கும் அறிவிப்புகள் மட்டுமே வெளிவருகிறதே ஒழிய, எனக்கு இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட 80% மானியம் இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை. சோலார் மின்சாரத்திற்கு செலவிட்ட இரண்டரை லட்ச ரூபாயும் வட்டிக்குதான் கடன் வாங்கி உள்ளேன்.



    நமது ஊரில் ஆண்டு முழுவதுமே சூரிய வெளிச்சம் கிடைப்பதால் அதைப் பயன்படுத்தி  விவசாயம்செய்யும்போது, விவசாயமும்  செழிப்படையும். நாட்டின் மின்சாரத் தேவையும் குறையும். அதற்கு அரசின் ஒத்துழைப்பு தேவை. சோலார் மின்சாரத்தைப் பொருத்தவரை முதன் முறையாகப் பொருத்தும் செலவு அதிகமாக உள்ளது. இது எல்லா விவசாயிகளாலும் செய்ய இயலாது. எனவே அரசு விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்து இதனை ஊக்குவிக்கும்போது கண்டிப்பாக இங்கு மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி நடக்கும்" என்கிறார் செந்தில்.



    தொடர்புக்கு:99442 98638

    புழுக்களை அழிக்கும் ஒட்டுண்ணி!

    By: Unknown On: 17:37
  • Share The Gag

  • தென்னை சாகுபடியில் ஏற்படும் மகசூல் குறைவிற்கு பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பொதுவாக, தென்னை மரங்களை கருந்தலைப்புழு, காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன்வண்டு, மரப்பட்டைத் துளைப்பான் என 14-க்கும் மேற்பட்ட பூச்சியினங்கள் தாக்குகின்றன. இவற்றில் கருந்தலைப் புழுக்கள் அதிக சேதத்தை விளைவிக்கின்றன. தென்னையின் அனைத்து வயதுடைய மரங்களையும் இந்தப் புழுக்கள் தாக்குகின்றன. வருடம் முழுக்க இதன் தாக்குதல் இருந்தாலும், கோடைக்கலங்களில் தாக்குதல் அதிகமாக இருக்கும்.



    தென்னைமரக் கொண்டையின் கீழ்ப்புற இலைப்பரப்பில், காய்ந்த திட்டுக்கள் காணப்படுவது கருந்தலைப்புழு தாக்குதலின் அறிகுறிகளாகும். கருந்தலைப் புழுக்கள், தென்னை ஓலைகளின் அடிப்பரப்பில் நூலாம்படையினை உருவாக்கி, அதனுள் இருந்துகொண்டே, பச்சையத்தைச் சுரண்டி உண்ணும். மரத்தின் கொண்டை மேற்பகுதியில் உள்ள 3-4 ஓலைகளைத் தவிர, மற்ற ஓலைகள் அனைத்தும் காய்ந்து போய்விடும்.  அதிகமாகத் தாக்கப்பட்ட மரங்கள், எரிந்து தீய்ந்து போனது போன்று காட்சியளிக்கும். இதனால், தென்னை மரங்களில் ஒளிச்சேர்க்கை தடைப்பட்டு, மகசூல் குறைந்து விடுகிறது. தகுந்த நேரத்தில் கவனிக்காமல் விட்டால்,  நாளடைவில் மரம் பட்டுப்போய் விடும்.




    பொதுவாக, கருந்தலைப் புழுக்களை அழிக்க, ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது வழக்கம். இதனால், மண் வளம் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், மண்புழு, நத்தை, ஊசித்தட்டான் போன்ற நன்மை தரும் பூச்சியினங்களும் அழிந்து விடுகின்றன.




    கருந்தலைப் புழுக்களை அழிக்க, பிரிக்கானிட் எனும் ஒட்டுண்ணிகளைக் கண்டுபிடித்துள்ளது, கோவை மாவட்டம் ஆழியார் நகரில் உள்ள, தென்னை ஆராய்ச்சி நிலையம். இது குறித்து, தென்னை ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் முனைவர். ந.ஷோபா கூறியதாவது:




    சேமிப்புக் கிடங்குகளில் உள்ள அரிசி, நெல் மணிகளைச் சாப்பிட்டு உயிர் வாழும் புழுக்களைச் சேகரித்து, அதைப் பல்வேறு நிலைகளுக்கு உட்படுத்தி, அதிலிருந்து பிரிக்கானிட் ஒட்டுண்ணிகளை உருவாக்கி, தென்னை விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறோம். பழுப்பு நிறத்தில் காணப்படும் இந்த ஒட்டுண்ணிகள், மனிதனை துன்புறுத்தாது. பிரிக்கானிட் ஒட்டுண்ணிகளை, 21 நாட்களுக்கு ஒருமுறை, ஏக்கருக்கு 2,100 ஒட்டுண்ணிகள் வீதம் (ஒரு மரத்திற்கு 30 ஒட்டுண்ணிகள்) தென்னந்தோப்புகளில் புழக்கத்தில் விட்டு, கருந்தலைப்புழுவின் தாக்கத்தைக் கணிசமாகக் கட்டுப்படுத்தலாம்.




    மேலும், பிரிக்கானிட் ஒட்டுண்ணிகள், கருந்தழைப் புழுக்களைக் கொன்று, அதன் மீது 15-20 முட்டையிடுகின்றன. அதிலிருந்து வெளியேறும் புழுக்கள், 7-11 நாட்களில் ஒட்டுண்ணியாக மாறிவிடுகின்றன. நாளடைவில் தோப்பில் ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கை அதிகரித்து, கருந்தலைப் புழுக்களின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்து விடும்.




    100 பிரிக்கானிக் ஒட்டுண்ணிகள் கொண்ட ஒரு பாக்கெட்,  50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டுண்ணிகள் தேவைப்படும் விவசாயிகள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்" என்கிறார்.



    தொடர்புக்கு: 04253 288722


    குடிநீர் கொடுக்கும் வாட்டர் ஏ.டி.எம்கள்! - கலக்கும் சுரேஷ் எம்.பி.!

    By: Unknown On: 17:31
  • Share The Gag

  • ஒரு ரூபாய் நாணயம் செலுத்தினால் பத்து லிட்டர் குடிநீர் கொடுக்கும் வாட்டர் ஏ.டி.எம்கள் பெங்களூரு அருகே அமைக்கப்பட்டுள்ளன.



    ஏ.டி.எம்மில் பணம் கிடைக்கும், தண்ணீர் கிடைக்குமா? கிடைக்கிறது. பெங்களூரு அருகே அமைக்கப்பட்டுள்ள வாட்டர் ஏ.டி.எம்மில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கிறது. ஒரு ரூபாய்க்கு பத்து லிட்டர் குடிநீர் இந்த ஏ.டி.எம்மில் வழங்கப்படுகின்றது.



    பெங்களூரு அருகே உள்ள கனகபுரா பகுதியில்தான் இந்த வாட்டர் ஏ.டி.எம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் இப்பகுதியில் உள்ள பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாதாரணமாக சந்தையில் 20 லிட்டர் குடிநீர் 40 ரூபாய் முதல் 50 ருபாய் விற்கப்படுகின்றது. ஆனால் இங்குள்ள மெஷினில் ஒரு ரூபாய் நாணயத்தைச் செலுத்தினால்  அடுத்த ஒரு நிமிஷத்தில் 10 லிட்டர் குடிநீர் கேனில் நிரம்பியிருக்கும்.



    இங்கு ஒருவருக்கு தண்ணீர் கிடைத்தது, இன்னொருவருக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்னும் பிரச்சினைக்கே இடம் இல்லை. குடிநீருக்காக வரும் அனைத்து மக்களுக்கும் நிச்சயம் இங்கு தண்ணீர் உண்டு.



    பாதுகாக்கப்பட்ட பத்து லிட்டர் குடிநீர் ஒரு ரூபாய்க்கும், இருபது லிட்டர் குடிநீர் இரண்டு ரூபாய்க்கும் வாட்டர் ஏ.டி.எம்களில் வழங்கப்படுகின்றன. இந்தப் பகுதியில் தற்போது 33 வாட்டர் ஏ.டி.எம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் தலா 13 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன.



    கனகபுரா நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியாளராக நின்றுள்ளார் சுரேஷ். தன்னை வெற்றிபெறச் செய்தால் வாட்டர் ஏ.டி.எம்கள் அமைக்கப்படும் என்று மக்களுக்கு வாக்குறுதியை அளித்தார். மக்களும் அவரை நம்பி ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்திருக்கிறார்கள்.



    சுரேஷ் எம்.பி.யான பிறகு கொடுத்த வாக்குறுதியை தற்போது மக்களுக்காக நிறைவேற்றியுள்ளார். மக்களும் தற்போது நிம்மதியாக குறைந்த விலையில் வாட்டர் ஏ.டி.எம்களில் குடிதண்ணீர் பிடித்துக்கொண்டு சந்தோஷமாக வீடு திரும்புகின்றனர்.



    தேர்தல் நேரத்தில் கொடுக்கப்படும் வாக்குறுதி காற்றில் பறக்க விடப்படும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், வாக்குறுதியை நிறைவேற்றி அனைத்து அரசியல்வாதிகளையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்திருக்கிறார் சுரேஷ்.


    உங்கள் பணம் உங்களுக்கு வந்து சேர...

    By: Unknown On: 17:04
  • Share The Gag


  • அக்டோபர் மாதத்திலிருந்து  உங்கள் சிலிண்டருக்கான  மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுவதற்கான வழிகாட்டல்கள் இங்கே...



    ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயுவிற்கு பெட்ரோலிய நிறுவனங்கள் விதித்துள்ள விலை (சென்னையில்) 930 ரூபாய். அதை இப்போது நாம் 398 ரூபாய் செலுத்தி வாங்கி வருகிறோம். துண்டு விழும் 532 ரூபாயை அரசு, பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மானியமாக அளித்து வருகிறது.  ஆனால் வரவிருக்கும் அக்டோபர் மாதத்திலிருந்து நீங்கள் விற்பனையாளரிடம் முழுத் தொகையையும் கொடுத்துத்தான் சிலிண்டரை வாங்க முடியும். இதுவரை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியம் இனி நேரடியாக உங்களிடமே கொடுக்கப்படும். ஆனால் அது உங்கள் கையில் ரொக்கமாகக் கொடுக்கப்பட மாட்டாது. உங்கள் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.


    அதைப் பெற இரண்டு விஷயங்கள் முக்கியமாகத் தேவை. 1. ஆதார் எண். 2. வங்கிக் கணக்கு.


    இந்தத் திட்டம் முதற்கட்டமாக அக்டோபர் 1 முதல் அரியலூர் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட இருக்கிறது. பின் படிப்படியாக தமிழகத்தின் 25 மாவட்டங்களில் நான்கு கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.


    எந்தெந்த மாவட்டங்களில் எப்போது?
    அக்டோபர் 2013      -     அரியலூர்


    நவம்பர் 2013   -    திருச்சி, மதுரை, புதுகோட்டை, நாகப்பட்டினம்.


    டிசம்பர் 2013  -    கடலூர், பெரம்பலூர், கரூர், சேலம், தர்மபுரி, ஈரோடு.


    ஜனவரி 2014 -  தஞ்சாவூர், திண்டுக்கல், திருவாரூர், நாமக்கல், வேலூர், இராமநாதபுரம், விழுப்புரம், தேனி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி.



    தேதி அறிவிக்கப்படாத மாவட்டங்கள்
    சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கோவை , திருப்பூர், நீலகிரி, விருதுநகர், சிவகங்கை.


    இத்திட்டத்தின்கீழ் மானியம் பெற என்ன செய்ய வேண்டும்?


    1.மானியத்தைப் பெற முதலில் உங்களுக்கு ஆதார் எண் இருக்க வேண்டும். இதுவரை ஆதார் எண்ணிற்கு நீங்கள் விண்ணப்பிக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தையோ,அருகிலுள்ள ஆதார் பதிவு மையங்களையோ தொடர்புகொள்ளுங்கள்.


    ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்து இன்னும் எண் கிடைக்கப்பெறாதவர்கள், https://eaadhaar.uidai.gov.in/eDetails.aspx  இத்தளத்திற்குச் சென்று பின்கோடு, தேதி, என்ரோல்மெண்ட் நம்பர் ஆகிய விவரங்களைப் பதிவிட்டால் உங்களுக்கான ஆதார் எண் வந்துவிடும் அல்லது விண்ணப்பத்தின் நிலை என்னவென்று அறிந்துகொள்ளலாம் அல்லது 1800 300 1947 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விவரங்கள் அறியலாம்.


    2.வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். யார் பெயரில் எரிவாயு இணைப்பு உள்ளதோ அவர்கள் பெயரில் அந்த  வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். இதுவரை வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் புதிதாக கணக்கு துவக்கிக்கொள்ள வேண்டும்.


    3.ஆதார் எண், வங்கிக் கணக்கு இரண்டும் இருப்பவர்கள் இரண்டு படிவங்களை நிரப்ப வேண்டும். ஒன்று வங்கிக்கு (படிவம் எண் 1) மற்றொன்று சிலிண்டர் விநியோகஸ்தருக்கு (படிவம் 2.)


    வங்கிக்கான படிவங்களை வங்கிக் கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம்.. அல்லது . http://www.petroleum.nic.in/dbtl/bankacc.pdf என்ற தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


    படிவம் 2ல் உங்கள் ஆதார் அட்டையை குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் வைத்து போட்டோ காப்பி எடுத்துக் கொள்ள வேண்டும். போட்டோ காப்பி எடுத்த படிவத்தில் மற்ற விவரங்களை நிரப்பி, கடைசியாக காஸ் சிலிண்டர் வாங்கிய பில்லை இணைத்து விநியோகஸ்தரிடம் அளிக்க வேண்டும்.


    விநியோகஸ்தருக்கான படிவத்தை அவர்களிடமே பெற்றுக்கொள்ளலாம் அல்லது http://www.petroleum.nic.in/dbtl/leaflet.pdf என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஏஜென்சியில் கொடுக்கலாம்.

    கால அவகாசம்

    ஆதார் எண் இல்லாதவர்கள் நேரடி மானியம் தொடங்கப்பட்டு மூன்று மாதங்கள் வரை மானிய விலையில் சிலிண்டரை பெற்றுக்கொள்ளலாம். இம்மூன்று மாதங்களுக்குள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடனும், எரிவாயு இணைப்புடனும் இணைத்துவிட வேண்டும். கால அவகாசம் முடிந்த பிறகும் ஆதார் எண்ணை இணைக்காத பட்சத்தில் சந்தை விலையிலேயே சிலிண்டர் விநியோகிக்கப்படும். எப்போது ஆதார் எண்ணைக் குறிப்பிடுகிறார்களோ அப்போதிலிருந்து மானியத் தொகையை வங்கிக் கணக்கில் பெற்றுக் கொள்ளலாம்.


    மானியம் எவ்வளவு?


    இத்திட்டத்தின்படி அனைத்து சான்றுகளும் சரிபார்க்கப்பட்ட பின் முதல் தவணையாக 435 ரூபாய் நமது வங்கிக் கணக்கில் வரவாகும். பின்னர் முதல் சிலிண்டர் பெறும்போது சந்தை நிலவரத்திற்கேற்ப மீதித் தொகையைக் கொடுத்து சிலிண்டர் பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னர் அடுத்த சிலிண்டர் புக் செய்து வினியோகிக்கப்பட்டு 6 நாட்களுக்குள் நமது வங்கிக் கணக்கிற்கு அப்போதைய சந்தை நிலவரத்தின்படி 420 ரூபாயைக் கழித்துவிட்டு மீதித் தொகையை நமது கணக்கில் அரசு செலுத்திவிடும். ஆண்டுக்கு 9 சிலிண்டர் மட்டுமே மானியத்தில் பெறலாம்.


    மேலதிக விரங்களை  http://www.petroleum.nic.in/dbtl என்ற இணையத்திலோ 1800 2333 555 என்ற வாடிக்கையாளர் சேவை மையத்திலோ பெறலாம்.
     
     

    பழுத்த இலையும் பள்ளமும்! - (நீதிக்கதை)

    By: Unknown On: 16:52
  • Share The Gag


  • ஒரு பெரிய மரம் ஒன்று இருந்தது..அம்மரத்தின் வேரருகே ஒரு பள்ளம் ஒன்றும் இருந்தது..


    இலையுதிர் காலம் வந்தது...



    மரத்தில் இருந்த இலைகள் பழுத்து கீழே விழ ஆரம்பித்தன.



    அப்போது ஒரு பழுத்த இலை கீழே பள்ளத்தில் விழுந்தது...


    அந்த இலை பள்ளத்தைப் பார்த்து ...என்னை உன் பள்ளத்தில் ஏற்றுக்கொள் இல்லாவிடில்...
    அடிக்கும் காற்றில் நான் எங்கே போவேன் என தெரியாமல் அல்லாடுவேன் என்றது..




    அந்த பழுத்த இலையால் தனக்கு என்ன லாபம் என்று கருதிய பள்ளம்"காப்பாற்ற முடியாது" என்று கூறி பழுத்த இலையை வெளியே தள்ளியது.



    பெரும் காற்று அடிக்க இலை பறந்து எங்கோ சென்று விட்டது.



    மற்றுமொரு நாள்..வேறொரு இலை பள்ளத்தில் விழுந்தது..மழை வேறு பெய்ய ஆரம்பித்தது..



    உடனே பள்ளம்..      இலயைப் பார்த்து ..

    'என்னை மூடிக்கொள்.. இல்லாவிடில் இந்த மழை நீர் என்னுள் நிரம்பி என்னை மூழ்கடித்துவிடும்..


    மண் சரிந்து என்னை நீக்கிவிடும்' என்று கெஞ்சியது.

    அதற்கு அந்த இலை

    'அன்று என் சகோதர இலை உன்னை உதவி வேண்டிய போது நீ உதவவில்லை...
    அதுவும் காற்றில் எங்கோ சென்று மறைந்துவிட்டது..
    ஆனால் நீ உதவி கேட்கும்போது நான் உன்னைப்போல இருக்கமாட்டேன்'. 
    என்று சொல்லிவிட்டு ..அந்த பள்ளத்தின் மேல்..அதை முழுவதுமாக மறைத்தது இலை.

    மழை பெய்து ஓய ..பள்ளமும் காப்பாற்றப்பட்டது.பின் இலை பள்ளத்தைப்பார்த்து 'இனியும் உதவி என நம்மை நாடிவருபவருக்கு..
    நம்மால் ஆன உதவியை செய்யவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்'என்றது.

    நாமும் பிறருக்கு உதவி செய்வதை ஒரு குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்.

    கமலின் 'உத்தம வில்லன்'

    By: Unknown On: 08:03
  • Share The Gag

  • நடிகர் கமல்ஹாசன்


    நடிகர் ரமேஷ் அரவிந்த்




    ’விஸ்வரூபம் 2’ படத்தினைத் தொடர்ந்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல். 


    ‘விஸ்வரூபம் 2’ படத்தினைத் தொடர்ந்து கமல் நடிக்கவிருக்கும் படத்தினை யார் தயாரிக்கிறார், இயக்குநர் யார் என்ற கேள்வி நிலவி வந்தது. தற்போது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்கள்.


    ‘விஸ்வரூபம் 2’ படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்துமே படமாக்கப்பட்டு முடிந்துவிட்டன. 2 பாடல்களை மட்டுமே காட்சிப்படுத்த வேண்டும். ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு ’வாகை சூட வா’ கிப்ரான் இசையமைத்து வருகிறார் என்பது குறிபிடத்தக்கது. 


    இந்நிலையில், ‘விஸ்வரூபம் 2’ படத்தினைத் தொடர்ந்து கமல், லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்திற்கு கிரேஸி மோகன் வசனம் எழுத ஒப்பந்தமாகி இருக்கிறார்.


    ‘சதிலீவாவதி’, ’பஞ்ச தந்திரம்’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’, ‘மன்மதன் அம்பு’ போன்ற படங்களில் கமலுடன் இணைந்து நடித்த, கமலுக்கு நெருங்கிய நண்பரான ரமேஷ் அரவிந்த் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். கன்னடத்தில் ‘சதிலீலாவதி’ படத்தின் ரீமேக்கை இவர் தான் இயக்கினார். இப்படத்தின் படப்பிடிப்பு ‘விஸ்வரூபம் 2’ படம் வெளியானவுடன் தொடங்கவிருக்கிறது.



    ’உத்தம வில்லன்’ படம் சமூகத்தில் தற்போது நடைபெறும் பிரச்சினையை, காமெடி கலந்து சொல்ல இருக்கிறார்களாம். விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.


    குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் விதிமுறை..

    By: Unknown On: 07:59
  • Share The Gag



  • பிரசவம் முடிந்துவிட்டால், நிம்மதி அடைந்துவிட வேண்டாம். ஏனெனில் இனிமேல் தான் வேலையே இருக்கிறது. என்ன புரியலையா? அது தான் குழந்தையை நன்கு பராமரிப்பது. ஏனெனில் பிரசவத்திற்கு பின் சிறிது நாட்கள், அம்மா, உறவினர்கள் என்று வீட்டில் இருப்பார்கள். அப்போது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் குழந்தை பிறந்த பின்பு, அந்த குழந்தைக்கு எந்த அளவு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், மேலும் வளர வளர எவ்வளவு உணவு கொடுத்தால், குழந்தை நன்கு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
      
    ஏனெனில் தற்போதுள்ள குழந்தைகள் விரைவில் குண்டாக மாறிவிடுகின்றனர். எனவே அவர்களின் உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது ஒரு தாயின் கடமை. இப்போது குழந்தை பிறந்த பின்னர், ஒரு வயது ஆகும் வரை எவ்வளவு உணவானது தேவைப்படும் என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
    0-4 மாதம்
    நிறைய ஆய்வுகள், குழந்தை பிறந்த பின்னர், அவர்களுக்கு தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும் என்று சொல்கிறது. ஏனெனில் தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது. மேலும் அந்த தாய்ப்பால், அவர்களின் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றுவதோடு, பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் பிலிரூபின் என்னும் நிறமியை வெளியேற்றிவிடும். அதிலும் அந்த தாய்ப்பாலை குறைந்தது நான்கு மாதங்களுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அவர்களது உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.
    4-6 மாதம்
    நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உணவை சாப்பிடுவதில் கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும். அதிலும் இவர்களது ஆர்வத்தை எவ்வாறு தெரிந்து கொள்வதென்றால், ஒரு நாளைக்கு 8-10 முறை தாய்ப்பால் கொடுத்தும் அவர்கள் பசிக்கு அழுதால், அப்போது இந்த உணவுகளையும், தாய்ப்பால் கொடுத்து சிறிது நேரத்திற்குப் பின் கொடுக்கலாம். அதுவும் ஒரு டேபிள் ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.
    6-8 மாதம்
    இந்த மாதங்களல் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதோ, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள், சிக்கன் போன்ற அனைத்தையும் கொடுக்கலாம். அதிலும் அவ்வாறு கொடுக்கும் போது, அவர்களுக்கு 3-9 டேபிள் ஸ்பூன் செர்லாக், 2-3 முறை தாய்ப்பால் மற்றும் 1/4 அல்லது 1/2 கப் வேக வைத்து மசித்த காய்கறிகள் என்று கொடுக்க ஆரம்பிக்கலாம். மேலும் அவ்வாறு இவற்றையெல்லாம் கொடுக்கும் போது, குழந்தைகளுக்கு அந்த உணவுகளால் ஏதாவது அலர்ஜி போன்று வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர மற்றவற்றை கொடுக்கலாம்.
    8-10 மாதம்
    இந்த வயதில், சீஸ், தயிர் மற்றும் இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம். மேலும் அத்துடன் 1/4 கப் புரோட்டீன் உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றையும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
    10-12 மாதம்
    இந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். ஆனால் அது அளவாக இருக்க வேண்டும். மேலும் இந்த வயதில் உணவுகள் கொடுக்கும் போது மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும். அதாவது 1/3 கப் பால் பொருட்கள் அல்லது 1/2 கப் சீஸ் உடன் 1/4 அல்லது 1/2 கப் சாதத்துடன், காய்கறிகள் மற்றும் புரோட்டீன் உணவுகளை நிச்சயம் கொடுக்க வேண்டும்.

    கடல் நீரை குடிநீராக மாற்றும் அதிசய நதி!!

    By: Unknown On: 07:55
  • Share The Gag



  • நமது அன்றாட வாழ்வில் நாம் தினம்தோறும் பயன்படுத்தும் தண்ணீரையே நம்மால் சுத்தமாக பார்த்துக்கொள்வதற்கு பல போராட்டங்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறோம் . ஆனால் ஒரு இயற்கையான நிகழ்வு கடல்நீரையே சுத்தம் செய்கிறது என்றால் சற்று வியப்பாககத்தான் உள்ளது .நம் அனைவருக்கும் இதுநாள் வரை கடல் நீர் என்றாலே உப்பு நீர்தான் என்று மட்டும்தான் அறிந்து இருக்கிறோம் .
      
    ஆனால் அந்த கடலிலும் நாம் தினம்தோரும் அருந்துவதுபோல் நீர் உள்ளது என்றால் நம்புவீர்களா ? கடல் நீரில் பொதுவாக உப்பின் அளவு மாறுப்படலாம் ஆனால் மொத்த நீரும் இயற்கையாக நல்ல நீராக மாறுவது என்பது ஒரு அதிசய நிகழ்வுதான் . இந்த அதிசய நிகழ்விற்கு முக்கிய காரணம் ஒரு நதி.
    ஒரு நதியின் நீர் பாய்ந்தா கடல் நல்ல நீராக மாறுகிறது என்பது அனைவருக்கும் ஏற்படும் சந்தேகம்தான் எனலாம் . ஆனால் இந்த நிகழ்வு உண்மையான ஒன்றுதான் என்று சொல்கிறது பல ஆய்வுகள் . அந்த நதிதான் அமேசான் நதி 6000 கி. மீ நீளம் விரிந்து பல அதிசயங்களையும் பல மர்மங்களையும் கொண்டு உலகத்தில் மிகப்பெரும் நதியாக ஓடிக்கொண்டிருக்கும் . இந்த நதியில் மட்டும்தான் உலகத்தில் நல்ல நீரில் ( fresh water ) மூன்றில் இரண்டு பங்கு நீர் ஓடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . இந்த நதி அட்லாண்டிக் கடலுக்குள் கலந்த பின்பும் இதன் தன்மை மாறாமல் 280 கி. மீ தொலைவிற்கு மொத்த கடல் நீரையும் தூய்மையான நீராக மாற்றிக்கொண்டு இருக்கிறதாம்.
    இந்த நதி அட்லாண்டிக் கடலுக்குள் 280 கி.மீ தொலைவைக் கடந்தபிறகுதான் உப்பு நீரிடம் போராடி தோற்றுப்போவதாக ஆய்வு கூறுகிறது .அமேசான் அமேஸ் என்றாலே ஆச்சர்யம் என்று அர்த்தம் . இப்பொழுதுதான் தெரிகிறது இந்த நதிக்கு அப்படி ஒரு பெயர் வைத்தது பொருத்தமான ஒன்றுதான்.

    பூச்சிகளை கட்டுப்படுத்தும் இயற்கையின் கொடை வேம்பு!

    By: Unknown On: 07:41
  • Share The Gag





  •                இயற்கை வழியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் இயற்கையின் கொடையான வேம்பின் பயன்பாடு குறித்து நெல் ஆராய்ச்சி மையம் விளக்கம் அளித்துள்ளது.


    திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி மைய பூச்சியியல்துறை உதவி பேராசிரியர் கு. இளஞ்செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 


    விவசாயிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பெரும்பாலும் பூச்சிக் கொல்லி மருந்துகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். பூச்சிக் கொல்லி மருந்துகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் நன்மை செய்யும் பூச்சிகளான தட்டான், ஊசித் தட்டான், பொறி வண்டு, தரை வண்டு, சிலந்திகள், குளவிகள், தேனீக்கள் போன்றவை பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், சுற்றுச் சூல்நிலைகளையும் பாதிக்கிறது.


    பூச்சிக் கொல்லி மருந்துகளை திரும்பத் திரும்ப தெளிப்பதனால் பூச்சிகளானது பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு எதிர்ப்புத் தன்மையை உருவாக்கி கொள்கின்றன. 



    இது மட்டுமல்லாமல், நாம் உண்ணும் உணவு தானியங்களிலும் காய்கறிகள் மற்றும் பழங்களிலும் எஞ்சிய நஞ்சானது தேங்கி விடுகிறது. இதனால் மனிதர்களுக்கும், அவர்களைச் சார்ந்த விலங்கினங்களும், பறவைகளும் பல்வேறு வகையான நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் இயற்கை முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டு ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.



    உலகில் மிக அதிகமாக ஆராய்ச்சி செய்யப்பட்ட மரங்களில் வேம்பு முதன்மையானது. இதன் பாகங்களான இலை, பூ, விதை, பட்டை போன்றவை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகித்தாலும் வேப்பங்கொட்டையானது ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வேம்பு 350 வகையான பூச்சிகளையும், 15 வகையான பூஞ்சாணங்களையும், 12 வகையான நூற்புழுக்களையும், 2 வைரஸ் கிருமிகள் மற்றும் 2 வகையான நத்தைகளையும் கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.



    வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுவதால் இதை மக்கள் சர்வலோக நிவாரணி, இயற்கை கொடை, அதிசய மரம் மற்றும் கிராம மருந்தகம் என அழைக்கின்றனர். வேம்பின் கசப்புத் தன்மைக்கு காரணம் அசாடிராக்டின் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அசாடிராக்டின் சுமார் 550 வகையான பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. இவை பூச்சிகள் பயிர்களை உண்பதைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் பூச்சிகள் முட்டையிடுவதையும், முட்டையில் இருந்து இளம் பூச்சிகள் வெளியே வருவதையும் தடுக்கின்றன. பூச்சிகளின் வளர்ச்சியையும் பாதிக்கிறது.



    இவை அந்துப் பூச்சிகள், வண்ணத்துப் பூச்சிகள், வண்டுகள், கூன் வண்டுகள், ஈக்கள், எறும்புகள், குளவிகள் நாவாய்
    பூச்சிகள், வெட்டுக் கிளிகள், கரப்பான் பூச்சிகள் மற்றும் கரையான்கள் போன்ற பூச்சிகளின் வளர்ச்சி மாற்றத்தைப் பாதிக்கின்றன. மேலும் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு நோய்களைப் பரப்பக்கூடிய ஈக்கள், உண்ணிகள், பேன்கள் மற்றும் சிலந்திகளைக் கட்டுப்படுத்துவதில் அசாடிராக்டின் பயன்படுத்தப்படுகிறது.



    விவசாயப் பயிர்கள்: நெற்பயிரில் வேப்பெண்ணெய் 1 சதம் (10 மிலி-லிட்டர்) அல்லது வேப்பங் கொட்டைச் சாறு 5 சத கரைசலை தெளிக்கும்போது இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் குறைகிறது. வேப்பங் கொட்டைச்சாறு 5 சத கரைசலைத் தெளிப்பதால் புகையானின் வளர்ச்சி பருவமானது பாதிக்கப்படுகிறது. மேலும் அதன் உருவம் மற்றும் எடையிலும் மாற்றம் ஏற்படுகிறது. வேப்பெண்ணெய் (3 சதம்) நெற்பயிரை கதிர் நாவாய்ப் பூச்சிகள் தாக்குதல் இருந்து பாதுகாக்கிறது.



    கொண்டைக் கடலையில் வேப்பங்கொட்டைச்சாறு அல்லது வேப்பெண்ணெய் (5 சதம்) தெளிப்பதால் காய்த் துளைப்பானின் தாக்குதல் வெகுவாகக் குறைகிறது. அசாடிராக்டின் கலந்த மருந்தை தெளிக்கும்போது காய்த்துளைப்பானின் தாக்குதலாவது 90 சதவீதம் வரை குறைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வேப்பங்கொட்டைச்சாறு துவரையில் காய்த் துளைப்பான்களையும், தட்டைப் பயிரில் அசுவினியின் தாக்குதலையும் குறைக்கிறது. 


    நிலக்கடலையில் இலைத் துளைப்பானைக் கட்டுப்படுத்துவதில் வேம்பு சார்ந்த மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வேப்பெண்ணெய் மற்றும் வேப்பங்கொட்டைச்சாறு தெளிக்கப்பட்ட இலைகளை தொடர்ந்து உண்பதால் நிலக்கடலையில் சிவப்பு கம்பளி புழுவானது குறைந்து விடுவதாக ஆராய்ச்சியில் தெரிவிக்கின்றன.


    நன்மைகள்: வேம்பு மற்றும் வேம்பு சார்ந்த பொருட்களால் சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. வேம்பானது பூச்சிகளை கொல்வதில்லை. மாறாக பூச்சிகளின் வளர்ச்சி பருவத்தைப் பாதிக்கின்றன. இவை நன்மை செய்யும் பூச்சிகள், விலங்குகள், பறவைகள், மீன்கள் மற்றும் தேனீக்களை எதுவும் செய்வதில்லை. வேம்பு சார்ந்த பொருள்களுக்கு பூச்சிகள் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கிக் கொல்வதில்லை. இதனை செயற்கையாகத் தயாரிக்கப்படும் மருந்துகளுடன் கலந்தும் தெளிக்கலாம்.
    வேம்பானது எளிதில் கிடைக்கக் கூடியது மற்றும் வேம்பு சார்ந்த மருந்துகளின் விலையும் மிகவும் குறைவு.


    எனவே ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் வேம்பு மற்றும் அதனைச் சார்ந்த மருந்துகளைப் பயன்படுத்தி இயற்கைக்கு எவ்வித சேதாரமும் இல்லாமல், நன்மை செய்யும் பூச்சிகளையும் பாதிக்காமல் இயற்கையுடன் ஒருங்கிணைந்து பூச்சிகளை கட்டுப்படுத்தி அதிக லாபம் ஈட்டலாம் என்றார் அவர்.

    வியக்கவைக்கும் பூம்புகார்..! - சுற்றுலாத்தலம்!

    By: Unknown On: 07:29
  • Share The Gag

  • வியக்கவைக்கும் பூம்புகார்..!
     
    வியக்கவைக்கும் பூம்புகார்..!
     
    பூம்புகார் சிலப்பதிகாரத்தின் நாயகன் - நாயகி வாழ்ந்த ஊர்
    சோழப்பேரரசின் தலைநகராக இருந்த இந்த ஊருக்கு காவிரிப்பூம்பட்டினம் என்றும் இன்னொரு பெயரும் உண்டு.
    சோழர்களின் தலைநகமான பூம்புகார் தமிழகத்தின் தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் கருவி என்னும் இடத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

    நம் தமிழ் மண்ணில் 11500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்நகரம் இருந்ததாக ஆய்வில் தெரியவருகிறது. மிகப்பெரிய துறைமுகமாகவும், உலக வர்த்தகத்திற்க்கான சந்தையாகவும் பூம்புகார் இருந்திருக்கிறது. சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, மணிமேகலை உள்ளிட்ட நூல்களில் இந்நகரத்தின் பெருமையை போற்றுகின்றன.

    தமிழ் இலக்கியங்களில் மட்டுமன்றி, பிராகிருத மொழியில் உள்ள புத்த ஜாதகக் கதைகளும் புத்தவம்சகதாவும், தாலமியின் பூகோளநூல் போன்ற வெளிநாட்டார் நூல்களும் பூம்புகாரைக் குறிப்பிடுகின்றன.

    மகதம், அவந்தி, மராட்டா நாட்டுக் கைவினைக் கலைஞர்களின் தொழிற்கூடமாகவும் பூம்புகார் இருந்திருக்கிறது. இலக்கியச் சான்றுகளை உறுதிப்படுத்தும் தொல்லியல் ஆதாரங்களும் பூம்புகாரில் கிடைத்துள்ளன. மத்திய தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை ஆகியவை ஆய்வு மேற்கொண்டு சங்ககாலப் படகுத்துறை, புத்தர்விகாரை, உறைகிணறுகள், அரிய மணிகள், கட்டடங்கள், காசுகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்துத் தந்துள்ளன.
     
     
    இன்று ஒவ்வொரு தமிழரும் காண வேண்டிய அற்புதச் சுற்றுலாத் தளமாக பூம்புகார் விளங்குகிறது
    சிலப்பதிகாரத்தின் நினைவாக இங்கு வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்களை காணும்போதுகண்ணகி வாழ்ந்த காலத்துக்கே நாம் சென்றுவிட்ட உணர்வு ஏற்படும். பூம்புகாரின் இன்னொரு முக்கியமான சிறப்பாக காவிரி நதி இங்குதான் கடலில் சங்கமிக்கிறது.

    கடற்கரை நகரமான பூம்புகாரில் பிரமிப்பூட்டும் வகையில் விளக்குத்தூண், கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது.
    கண்ணகி கோட்டத்தில் கண்ணகி சிலை அமைந்துள்ளது.
    இலஞ்சி மன்றத்தில் தான் பண்டைய கால வரலாற்றின் படி குளம் அமைந்திருந்ததாம். அதனை நினைவு கூறும் வகையில் தமிழக அரசின் மூலம் குளம் அமைக்கப்பட்டுள்ளது.
    இங்கே மூன்று கட்டிட அமைப்புகள் ஒருங்கே சிறப்புடன் அமைந்துள்ளது. இக்கட்டிடத்தின் இருமருங்கிலும் குளம் அமைக்கப்பட்டுள்ளது.
    இடதுபுறத்தில் சிலப்பதிகாரக் கலைக்கூடம் அமைந்துள்ளது. அதன் வாயில் கதவுகள் சிலம்ப வடிவை ஒத்ததாய் அமைந்துள்ளன. அத்துடன் கலைக்கூட கட்டிடமும், வாயில் தோரணமும் அழகுற அமைக்கப் பட்டுள்ளது
    .
    3 மீட்டர் உயரமுள்ள கண்ணகி சிலை, 2.75 மீட்டர் வடிவ மாதவியின் சிலை, சிலப்பதிகாரக் கலைக்கூடத்தில் சிலம்பு வடிவ குளம், சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகளின் சிலை, சோழ ஆட்சி புரிந்த கரிகால் சோழனின் சிலை மற்றும் சிலப்பதிகாரக் கதையில் வரும் 49 நிகழ்ச்சிகள் இங்கே பிரமிப்பூட்டும் வகையில் கற்சிற்பமாக வடிவமைக்கப்படுள்ளன
    .
    பூம்புகாரின் கடலடியில் அருங்காட்சியகம் உள்ளது. இது தமிழக தொல்லியல் ஆய்வுத்துறையின் அருங்காட்சியகம் ஆகும். 1997ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் இந்தியாவிலுள்ள ஒரே கடலடி அருங்காட்சியகம் என்ற தனிச்சிறப்பு பெற்றுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் சிரட்டைச் சில்லிகள், புத்தர் தலை மற்றும் புத்தர் பாதஉருவாரம், பெருங்கல் மணிகள், ரோமானிய மற்றும் சீன பானை ஓடுகள், அழகன்குளம் ஆய்வில் கண்டறியப்பட்ட முத்திரைப் பானை ஓடுகள், மரக்கலைப் பொருட்கள், வட்டக்கிணறு, பெருங்கற்கால சேர்ப்பொருட்கள், சீன ஜாடிகள், பிரித்தானிய குளிர் ஜாடிகள், ஈயக்கட்டிகள், புத்தர் சிலை, சிலம்பு, ஐயனார் கற்சிலை, கப்பல் மாதிரி பொம்மைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    தொல்லியல் ஆய்வுகள் கூறும் அற்புத தகவல்கள்
     
    ந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள ”தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்’ என்ற நிறுவனம். கடந்த 1990ஆம் ஆண்டு வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது. இந்த ஆய்வுகள் 1993ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. இந்த ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
     
    இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு, மார்ச் 7, 1991 ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் சோனோகிராப் எனப்படும் கருவியை பயன்படுத்தி ஆய்வு செய்தனர்.
    இந்தக் கருவி கடலில் மிதக்கும்போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. இந்த ஆய்வில் கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்ச், 8,9ல் ஆய்வாளர்கள் கடலுக்குள் மூழ்கி,, இரும்பு பீரங்கி, ஈயக்குண்டைக் கண்டுபிடித்தார்கள். 1991 மார்ச் 23ல் முதன்முறையாக பூம்புகார் கடல் பகுதியில் குதிரை லாடம் வடிவத்தில் கட்டுமானம் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள் . அதன் இரண்டு முனைகளுக்குமிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலா அல்லது கோட்டை மதில் சுவரா என்பது குறித்து பின்னர் ஆய்வு செய்யலாம் என்று திரும்பி விட்டனர்.
    இதையடுத்து 2001 ஆம் ஆண்டு பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்டகிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு வியக்கவைக்கும் செய்திகளை வெளியிட்டார்.

    பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிரமாண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்பதை இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்தார். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சியின் மூலம் வரலாற்று ஆய்வாளர்கள் சொல்வது போல் தற்போதைய ஈராக்கிலுள்ள ''மெசபடோமியா'' பகுதியில் சுமேரியர்களால் தோற்றுவிக்கப்பட்ட சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய
    நாகரீகத்தை விட இன்னும் பல நூற்றாண்டுகள் பழமையானது
    பூம்புகார் நாகரீகம் என்பது தெளிவாகிறது

    இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ''ஐஸ் ஏஜ்'' எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்ப வெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.இத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு கிலன்மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.

    சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுகால பழமை வாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார். மேலும் பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம் ஹாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில். ”அண்டர்வேர்ல்ட்” என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    சென்னையிலிருந்து காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் கருவி என்னும் இடத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் பூம்புகார் அமைந்துள்ளது. சிதம்பரம், சீர்காழியிலிருந்தும் நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து 220 கிலோ மீட்டர் தொலைவில் பூம்புகார் அமைந்துள்ளது.