Monday, 25 August 2014

படுத்த படுக்கையில் முன்னாள் காட்ஃபாதர்! அஞ்சலி என்ன செய்யப் போறீங்க?

By: Unknown On: 23:17
  • Share The Gag
  • காற்று அஞ்சலி பக்கம் அடிக்கும் நேரம் போலிருக்கிறது. சித்தியால் விரட்டப்பட்ட அஞ்சலி, டைரக்டர் மு.களஞ்சியத்தால் மிரட்டப்பட்டதையும் நாடறியும். எப்படியோ தப்பித்து ஆந்திராவில் தஞ்சமடைந்து, அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் சென்னைக்கு பர்தா அணிந்து மறைந்து மறைந்து வந்த நாட்களுக்கும் ஒரு முடிவு கட்டியது கடந்த சில வாரங்கள். சுராஜ் இயக்கத்தில் அவர் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ‘படப்பிடிப்பை ஆந்திராவில் வச்சுகிட்டா எனக்கு பாதுகாப்பா இருக்கும்’ என்று அஞ்சலி விரும்ப, ‘அதே பாதுகாப்பு உங்களுக்கு இங்கேயும் கிடைக்கும். அதுக்கு நாங்க உத்தரவாதம் தர்றோம்’ என்று அழைத்து வந்தார்கள்.

    சொன்னபடியே, ‘அவர் நின்றால், நடந்தால், படுத்தால், பல் விளக்க போனால்’ என்று சுற்றி சுற்றி ஆட்கள் நிறுத்தப்பட்டார்கள். இந்த நவீன சிறைவாசத்தை பொறுக்க முடியாமல் அனுபவித்து வந்த அஞ்சலிக்கு மு.களஞ்சியம் விபத்தில் படு காயமுற்ற செய்தி என்ன மாதிரியான மன நிலையை ஏற்படுத்தியிருக்கும் என்பதை வெளிப்படையாக சொல்லிவிட முடியாது. இத்தனைக்கும் அதே சித்தி மகனின் கல்யாணத்திற்குதான் ஆந்திராவுக்கு காரில் சென்றார் மு.களஞ்சியம். போன இடத்தில்தான் படுகாயம் ஏற்படுத்துகிற அளவுக்கு இந்த விபத்து.

    நிற்க… இப்போதைய நிலவரம்? மு.களஞ்சியத்திற்கு உடல் நிலை படு மோசமாக இருக்கிறதாம். அவர் உயிர் பிழைப்பாரா என்கிற அளவுக்கு சந்தேகம் கிளப்புகிறார்கள் அவரை சுற்றியிருப்பவர்கள். தற்போது அவசர சிகிச்சை பிரிவில்தான் இருக்கிறார் அவர். லட்சம் லட்சமாக செலவாகும் போலிருக்கிறது. எல்லா பணத்தையும் அவர் எடுத்து வரும் ‘ஊர் சுற்றி புராணம்’ படத்தில்தான் போட்டிருக்கிறாராம். நிறைய கடன் வாங்கியும் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. அஞ்சலியுடன் நல்ல நட்பில் இருந்தபோது துவங்கப்பட்ட படம் இது. அந்த நேரத்தில் அஞ்சலியின் காட் ஃபாதரே இவர்தான் என்று பலராலும் நம்பப்பட்ட அஞ்சலி, மு.களஞ்சியத்திடம் பணம் வாங்கிக் கொண்டா நடித்திருப்பார் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள் கோடம்பாக்கத்தில்.

    ‘அஞ்சலி… நீங்க வாங்கிய அட்வான்சையாவது திருப்பி கொடுங்க. அது மு.களஞ்சியத்தின் சிகிச்சைக்கு பயன்படும்’ என்று சென்ட்டிமென்ட் கிளப்புகிறார்கள் அவரை சுற்றியிருப்பவர்கள். உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது.

    ‘அஞ்சலி… என்ன செய்யப் போறீங்க?’

    தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!

    By: Unknown On: 22:00
  • Share The Gag
  • இரவில் நிம்மதியான உறக்கம் வேண்டும் என்பவர்கள் சில உணவுகளை தவிர்க்கவேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கண்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உறக்கம் தொலைந்துவிடும். ஜீரணமாகாத உணவு நெஞ்செரிச்சல்,வயிற்றுப் பொருமல் போன்றவற்றையும் ஏற்படுத்தி இரவு முழுவதும் தூங்கவிடாமல் செய்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

    எந்தமாதிரியான உணவுகளை சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

    பழங்கள் வேண்டாம்

    இரவில் பழங்கள் சாப்பிடுவதனால் வாயுத்தொல்லை ஏற்படும் என்கின்றனர். பழங்களில் உள்ள அமிலங்கள் தொந்தரவுகளை ஏற்படுத்திவிடும். ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, பெர்ரீ ஆகிய பழங்களை இரவு நேரத்தில் சாப்பிடுவதை விட பகல்நேரத்தில்தான் சாப்பிடவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

    பீட்ஸா தொடக்கூடாது

    பீட்ஸா என்பது இரவு உணவுக்கு ஏற்றதல்ல. சாஸ், தக்காளி, சீஸ், மைதா போன்றவைகள் கலந்த இத்தாலிய உணவுவகையான பீட்ஸாவை இரவில் சாப்பிட்டால் அது எளிதில் ஜீரணமாகாது. இரவு நேரத்தில் உணவு ஜீரணமாகாத காரணத்தினால்தான் தொப்பை போடும் உடல் குண்டாகும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் கான்ப்ளக்ஸ் போன்ற காலையில் டிபன் உணவுக்கு சாப்பிடுபவைகளை இரவில் சாப்பிடக்கூடாது என்பது நிபுணர்களின் அறிவுரையாகும். தானியங்கள் நிறைந்த அந்த உணவுகளில் தேன் கலந்திருக்கும். அதேபோல் கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிட்டால் உடனே உறங்கப் போகக்கூடாது நடைப்பயிற்சியோ, ஓட்டப்பயிற்சியோ மேற்கொள்ளவேண்டும் இல்லையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.

    மாமிசஉணவுகள்

    இரவுநேரங்களில் அதிக கொழுப்புள்ள மாமிச உணவுகளை உட்கொள்ளக்கூடாது என்பது நிபுணர்களின் அறிவுரையாகும். ரெட்மீட் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் அதிக கொழுப்பு சேர்ந்துவிடும். காலையில் சாப்பிடுதற்கு ஏற்ற அந்த உணவுகளை இரவில் சாப்பிடுவது உகந்ததல்ல. எனவே இரவில் மாமிசம் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.

    சாக்லேட் கேண்டி

    இரவில் படுக்கைக்குப் போகும்முன் அதிகம் கேண்டி சாப்பிடவேண்டாம். ஏனேனில் அதில் உள்ள சர்க்கரை அப்படியே ரத்தத்தில் கலக்க வாய்ப்புள்ளது. இதனால் இரவில் தூக்கமிழக்க நேரிடலாம்.
    எனவே இரவு நேரத்தில் நிம்மதியான உறக்கம் வேண்டும் என்பவர்கள். உடல் குண்டாகாமல் டயட்டில் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் மேற்கூறிய உணவுகளை இரவில் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். முயற்சி செய்து பாருங்களேன். ஆழ்ந்த அமைதியான உறக்கம் உங்களுக்கு கிடைக்கும்.

    கமலுடன் மோதும் அஜித்!

    By: Unknown On: 20:31
  • Share The Gag
  • தென்னிந்திய சினிமாவில் அதிக ரசிகர் பலங்களை கொண்டவர்கள் அஜித், கமல். இவர்கள் படங்கள் வருகிறது என்றாலே ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்.

    இந்நிலையில் ஒரே நாளில் இவர்கள் படம் வெளிவந்தால் சொல்லவே தேவையில்லை, தற்போது அஜித், கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு தான் வெளிவரும் என படக்குழு தெரிவித்திருந்தது.

    அதேபோல் கமல் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம்-2 எப்போது வரும் என்று தெரியாத நிலையில், இப்படமும் பொங்கலுக்கு தான் வரும் என கமல் தரப்பில் கூறப்பட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    பார்த்திபனின் உப்புமா கம்பெனி!

    By: Unknown On: 19:39
  • Share The Gag
  • தமிழ் சினிமா ரசிகர்கள் என்றும் புதுமையை விரும்புவார்கள் என்று மீண்டும் நிருபித்துவிட்டார்கள். அஞ்சான் போன்ற பெரிய படத்தின் ரிலிஸ்காக பல படங்கள் தள்ளி போன நிலையில், மக்கள் மீது மட்டும் கொண்ட நம்பிக்கையால் தைரியமாக தன் படத்தை ரிலிஸ் செயதார் பார்த்திபன்.

    படமும் எதிர்பார்த்தது போலவே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கும் முயற்சியில் தற்போது பிஸியாக உள்ளார்.

    தற்போது படத்திற்கு பெயர் மட்டும் ‘உப்புமா கம்பெனி’ என்று வைக்கப்பட்டுள்ளது, கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விஜய், முருகதாஸை மிரட்டிய லைகா?

    By: Unknown On: 18:47
  • Share The Gag
  • கத்தி பிரச்சனையில் விஜய் மிகவும் மௌனம் காட்டி வருகிறார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் ஒரு தலைவலி வந்துவிட்டது.

    இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்ததால் படத்தை தமிழகத்தில் வெளியிட விடமாட்டோம் என்று பல அமைப்புகள் கூறிவந்த நிலையில், படம் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்திற்கு கை மாறுகிறது என்று தெரிவித்தனர்.

    ஆனால் கடைசியாக வந்த போஸ்டரில் கூட லைகா பெயர் உள்ளது. இதுகுறித்து விஜய் மற்றும் முருகதாஸும் லைகா நிறுவனத்திடம் பேசிய போது, லைகா தங்களுடன் போட்டுள்ள ஒப்பந்தங்களைக் காட்டி மிரட்டினார்களாம். படத்தில் யார் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது நாங்கள்தான். உங்களுக்கு கேட்ட சம்பளம் கொடுக்கப்பட்டுவிட்டது என்று திமிராக பதில் அளித்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    பற்களை வெண்மையாக்கும் வீட்டுப் பொருட்கள்!

    By: Unknown On: 17:28
  • Share The Gag


  •                 அழகான புன்னகையால் ஆயிரம் இதயங்களை கவர முடியும். ஆகவே அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அத்தகைய வெள்ளையான பற்களை பெறுவதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதிலும் பற்களை பொலிவோடு வைப்பதற்கு அனைவரும் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இருப்பினும் ஏதாவது உணவுகளை சாப்பிட்டுவிட்டால், பற்களில் உணவுக் கறைகள் படிந்து மற்றும் ஆங்காங்கு சிக்கிக் கொண்டு, பற்களின் நிறத்தை மஞ்சள் நிறமாக்குகின்றன.


                     மேலும் சில நேரங்களில் அத்தகைய கறைகளால் வாய் துர்நாற்றம் அதிகம் இருக்கும். எனவே இத்தகைய பிரச்சனைகளைப் போக்கி, பற்களின் இருக்குகளில் சிக்கிக் கொள்ளும் பொருட்களை தவிர்க்கவும், வாய் துர்நாற்றத்தையும் நீக்கவும், அத்தகைய உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து, பற்களுக்கு நன்மை தரும் உணவுகளான ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், கேரட் போன்றவற்றை சாப்பிட்டால், பற்கள் வெண்மையுடன் இருக்கும். மேலும் ஒருசில வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி, பற்களை துலக்கினாலும், பற்களை நன்கு ஆரோக்கியமாகவும், பளிச்சென்று வெண்மையுடனும் இருக்கும். சரி, இப்போது அத்தகைய பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

    எலுமிச்சை

    எலுமிச்சை துண்டை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் இயற்கையாக வெண்மையாக இருக்கும். அதிலும் எலுமிச்சையை உப்பில் தொட்டு தேய்க்க வேண்டும்.

    கடுகு எண்ணெய்

    பற்களை வெள்ளையாக்கும் பராம்பரிய வீட்டு வைத்திய பொருட்களில் கடுகு எண்ணெயும் ஒன்று. அதற்கு கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் கலந்து பேஸ்ட் போல் செய்து துலக்க வேண்டும்.

    பேக்கிங் சோடா

    பேக்கிங் சோடாவை உப்புடன் சேர்த்து பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையோடு ஜொலிக்கும்.

    சாம்பல்

    அக்காலத்தில் பேஸ்ட் கிடைக்காத நேரத்தில் வாழ்ந்த மக்கள், வீட்டில் விறகு அடுப்பில் சமைக்கும் போது கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்தி பற்களை துலக்கினார்கள். இதனால் பற்கள் வலுவோடு இருப்பதோடு, வெள்ளையாகவும் இருக்கும்.

    உப்பு

    அனைவருக்குமே உப்பு பற்களை வெள்ளையாக்கும் பொருட்களில் மிகவும் சிறந்தது என்று. இவற்றை வைத்து பற்களை துலக்கினால் பற்களை வெள்ளையாக மட்டும் மாறாமல், பளிச்சென்றும் மின்னும்.

    ஆரஞ்சு தோல்

    ஆரஞ்சு தோல் பற்களுக்கு மிகவும் நல்லது. பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், ஆரஞ்சு பழத்தின் தோல் அல்லது அதன் கூழை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் மின்னுவதோடு, வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.

    வினிகர்

    தினமும் வினிகரை நீருடன் சேர்த்து கலந்து வாயில் விட்டு, கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்கி, பற்களில் உள்ள மஞ்சள் நிறக் கறையும் நீங்கும்.

    கிராம்பு எண்ணெய்

    ஈறுகளில் வலி அல்லது சொத்தை பற்கள் இருப்பவர்களுக்கு கிராம்பு ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதிலும் தினமும் பற்களை துலக்கும் போது, பிரஷ்ஷில் சிறிது கிராம்பு எண்ணெய் ஊற்றி, பின் பேஸ்ட் சேர்த்து தேய்க்க, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

    வேப்பங்குச்சி

    பற்களை வெண்மையாக்கும் பொருட்களில் இதுவும் ஒன்று. இதனை வைத்து தினமும் பற்களை தேய்த்து வந்தால், பற்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, பளிச்சென்றும் மின்னும்.

    பிரியாணி இலை

    பிரியாணி இலையை பொடி செய்து, அதனை எலுமிச்சை சாற்றில் கலந்து, பற்களை துலக்க, பற்கள் வெள்ளையாகும்.

    மலிவு விலை விமான டிகெட்டை தேட உதவும் இணையதளம்.

    By: Unknown On: 17:18
  • Share The Gag

  • இண்டெர்நெட்டின் அருங்குணங்களில் ஒன்று சில நேரங்களில் அது உங்களை ராஜா
    போல உணர வைக்கும் என்பது தான்.அதாவது நீங்கள் ஒரு கட்டளையிட்டால் போதும்
    அதனை செய்து முடிக்க ஆயிரம் பேரை அது தேடித்தரும்.

    இந்த விசுவாசத்திற்கு பதிலாக நீங்கள் சிறு தொகையை செலுத்த
    வேண்டியிருக்கும் என்றாலும் உங்கள் சார்பில் ஒரு வேலையை சிறப்பாக முடித்து
    தர பலர் தயாராக இருப்பது உங்கள் கையில் அதிகாரம் தரப்பட்டிருப்பது போன்ற
    உணர்வைத்தரும்.

    இத்தகைய உணர்வைத்தரும் பல இணையதளங்கள் இருக்கின்றன.இப்போதைக்கு பிளைட்பாக்ஸ் இணையதளத்தை மட்டும் பார்க்கலாம்.



    பிளைட்பாக்ஸ் விமான சேவை தளங்களில் அடுத்த புதுமையாக
    அறிமுகமாகியிருக்கும் தளம்.நீங்கள் செல்லும் இடத்திற்கான மிக குறைந்த
    விலையிலான விமான டிக்கெட்டை தேடித்தருவது தான் இந்த தளத்தின்
    நோக்கம்.இதற்காக நூற்றுக்கணக்கான விமான டிக்கெட் நிபுணர்களை உங்களுக்கு
    சேவை செய்யவும் வைக்கிறது.

    அதிலும் எப்படி?உங்களுக்கு சிறந்த முடிவை தேடித்தர இந்த நிபுணர்களை நான் நீ என போட்டி போடவும் வைக்கிறது.

    சுவாரஸ்யமாக இருக்கிறது அல்லவா?

    பயனுள்ள சேவையும் கூட!

    விமான பயணத்திற்கான டிக்கெட்டை இருந்த இடத்திலிருந்தே பதிவு செய்து
    கொள்ள எத்தனையோ தளங்கள் இருக்கின்றன.இவற்றில் பல தளங்கள் மலிவு விலை
    டிக்கெட்டையும் தேடித்தருகின்றன.

    பல் வேறு விமான சேவைகளின் கட்டண் பட்டியலை முன்வைத்து ஒப்பிட்டு
    பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்வதில் துவங்கி மலிவு விலை டிக்கெட்டை கண்டு
    பிடித்து தருவதற்கான சூத்திரத்தை கண்டு பிடித்து வைத்திருக்கிறோம் என்று
    சொல்வது வரை பல் வேறு வழிகளை இந்த தளங்கள் பின்பற்றி வருகின்றன.

    கொஞ்சம் மெனக்கெட்டால் நீங்கள் குறைந்த விலையிலான விமான டிக்கெட்டை
    கண்டு பிடித்து விடலாம்.இணையத்தில் அதற்கான வழிகள் அநேகம்
    இருக்கின்றன.இதில் கில்லாடிகளும் இருக்கின்றனர்.

    நிற்க எல்லோருக்குமே இதில் அனுபவமோ நிபுணத்துவமோ இருக்கும் என்று
    சொல்வதற்கில்லை.அது மட்டும் அல்ல,இந்த வகையான தேடலுக்கு நேரமும் பொருமையும்
    இருக்கும் என்றும் சொல்வதற்கில்லை.

    இந்த இடத்தில் தான் பிளைட் பாக்ஸ் தளம் வருகிறது.

    விமான பயணம் மேற்கொள்ள இருப்பவர்களுக்கு குறைந்த விலையிலான விமான
    டிக்கெட்டை அதற்கான நிபுணர்கள் மூலம் தேடித்தருவதாக இந்த தளம்
    சொல்கிறது.அதாவது உங்கள் சார்பில் விமான டிக்கெட் தேடல் நிபுணர்கள்
    இணையத்தில் உலாவி மிக குறைந்த விலையிலான டிக்கெட்டை எந்த விமான நிறுவனம்
    வழங்குகிறது என கண்டு பிடித்து தருகின்றனர்.

    இந்த சேவைக்காக ஒரு கட்டணத்தை மட்டும் நீங்கள் குறிப்பிட்டால் போதுமானது நிபுணர்கள் உங்களுக்காக களத்தில் இறங்கி விடுவார்கள்.

    எந்த ஊரில் இருந்து எந்த ஊருக்கு செல்கிறீர்கள் என்பதை குறிப்பிட்டு
    எந்த வகையான விமான பயணத்திற்கு தயாராக இருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டு
    இதற்கான பதிலுக்கு நீங்கள் தரத்தயாராக உள்ள கட்டணத்தை குறிப்பிட்டால்
    நிபுணர்கள் உங்கள் சார்பில் போட்டி போட்டுக்கொண்டு தேடலில் ஈடுபட்டு மலிவான
    டிக்கெட் வழங்கும் விமான சேவையை பரிந்துரைக்கின்றனர்.

    அந்த பதில் திருப்தி அளித்தால் மட்டுமே நீங்கள் குறிப்பிட்ட கட்டணத்தை
    தந்தால் போதுமானது.இல்லை என்றால் கட்டணம் திரும்ப வழஙக்ப்படும்.ஆனால்
    அநேகமாக தேடல் முடிவுகள் உங்கள் பயண செலவை கணிசமாக குறைக்கும் வகையில்
    குறைந்த விலையிலான டிக்கெட்டை க்ண்டு பிடித்து தரக்கூடியது என்பதால்
    கட்டணம் ஒரு பொருட்டல்ல தான்.

    யோசித்து பாருங்கள் ஊருக்கு போகிறேன் என்று சொன்னவுடன் யார் யாரோ
    உங்களுக்காக மெனக்கெட்டு குறைந்த விலையிலான டிக்கெட்டை தேடித்தருவது சிறந்த
    விஷயம் தானே.

    ஒரு விதத்தில் பார்த்தால் கூட்டத்தின் திறமையை பயன்படுத்தி கொள்ளும்
    கிரவுட் சோர்சிங் வகை தளம் தான் இதுவும்.ஆனால் இந்த வகை தளங்களில் சேவையை
    பயன்படுத்தி கொள்ளவோ அல்லது சேவையை வழக்கவோ எல்லோருக்கும் பொதுவாக வாய்ப்பு
    வழங்கப்படும்.நீங்கள் வாடிக்கையாளராகவும் பதிவு செய்து கொள்ளலாம்.அல்லது
    நிபுணராகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

    ஆனால் பீளைட் பாக்ஸ் தளத்தை பொருத்த வரை நிபுணர்களாகும் வாய்ப்பு அத்தனை
    வெளீப்படையாக இல்லை.உங்களுக்கான நிபுணர்கள் தேடித்தருவார்கள் என்று
    சொல்கிறதே தவிர அந்த நிபுணர்கள் யார்,அவர்கள் எப்ப்டி தேர்வு
    செய்யப்படுகின்றனர் என்று இந்த தளம் சொல்லவில்லை.

    அதனால் என்ன ,நாம் சொன்னால் குறைந்த விலையிலான விமான பயண டிக்கெட்டை
    கண்டு பிடித்து தர தயாராக இருக்கின்றனர்.அதில் திறமையும்
    பெற்றுருக்கின்றனர்.அது போதுமே.

    சர்வதேச விமான பயணங்களின் போது இந்த சேவையை பயன்படுத்தி
    பாருங்கள்.அல்லது உங்கள் நண்பர்கள் வெளிநாடு செல்லும் போது
    பரிந்துரையுங்கள் .

    இணையதள முகவரி;http://flightfox.com/

    விஷ உயிரினங்கள் கடித்து விட்டதா...?!

    By: Unknown On: 17:02
  • Share The Gag
  • விஷ உயிரினங்கள் கடித்து விட்டதா...?!

    அதற்கான முதல் உதவி:

    மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே, கீழ்க்கண்ட அவசர மருத்துவத்தை பின்பற்றவும்.

    பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்.

    கண்ணாடி விரியன்:- பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.

    நல்ல பாம்பு:- வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.

    தேள்:- கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.

    வண்டு:- கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர்.

    சிலந்தி:- ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும்.

    வெறிநாய்:- மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.

    எலி:- வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.

    பூனை:- தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.

    பூரான்:- பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.

    நட்டுவாக்காலி:- கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்.

    இது அவசர உதவி மட்டுமே பின் வைத்தியரை நாடவும்.
    விஷ உயிரினங்கள் கடித்து விட்டதா...?!  அதற்கான முதல் உதவி:  மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே, கீழ்க்கண்ட அவசர மருத்துவத்தை பின்பற்றவும்.  பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்.  கண்ணாடி விரியன்:- பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.  நல்ல பாம்பு:- வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.  தேள்:- கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.  வண்டு:- கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர்.  சிலந்தி:- ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும்.  வெறிநாய்:- மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.  எலி:- வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.  பூனை:- தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.  பூரான்:- பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.  நட்டுவாக்காலி:- கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்.  இது அவசர உதவி மட்டுமே பின் வைத்தியரை நாடவும்.

    தகவல் சுரங்கம் - திலகரின் "விநாயகர் சதுர்த்தி'

    By: Unknown On: 16:54
  • Share The Gag

  • சமய விழாவான விநாயக சதுர்த்தியை, சமூக விழாவாக மாற்றியவர் பாலகங்காதர திலகர். 


    முதன்முதலில் புனேயில் தான் விநாயகர் சதுர்த்தி, சமூக விழாவாக கொண்டாடப்படும் வழக்கம் தோன்றியது. 

    பின் இந்த வழக்கம் மும்பைக்கு பரவியது. சிவாஜியின் சாம்ராஜ்யத்தில் விநாயகர் சதுர்த்தி, அரச விழாவாக கொண்டாடப்பட்டது. 


    பேஷ்வாக்களின் குல தெய்வமாக விநாயகர் இருந்தார். பேஷ்வாக்களின் வீழ்ச்சிக்குப் பிறகு விநாயகர் சதுர்த்தி, வீட்டிற்குள் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகையாக மாறி விட்டது. 


    பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், திலகர் இதனை மீண்டும் சமூக விழாவாக மாற்றினார். ஜாதி வேறுபாடுகளை களைய இந்த விழா உதவும் என எண்ணினார். 

    பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக மாற்றினார். 

    விநாயகர் சதுர்த்தியை போன்றே, சிவாஜி ஜெயந்தியையும் மகாராஷ்டிராவில் சமூகவிழாவாக திலகர் மாற்றினார்.

    குடலில் புண் - அறிகுறிகள் என்ன?

    By: Unknown On: 16:41
  • Share The Gag

  • பொதுவாக முன் குடலில் ஏற்படும் புண் (Duodenal Ulcer) காரணமாக பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றனர்.

    வெறும் வயிற்றில் எரிச்சல், அதிக பசி, சாப்பிட்டவுடன் வலி நின்று விடுதல், மசாலா - காரம் அதிக உள்ள உணவுகளைச் சாப்பிட்டவுடன் எரிச்சல் ஆகியவை முன் குடல் புண்ணின் முக்கிய அறிகுறிகளாகும்.

    காற்றுடன் புட்டிகளில் அடைக்கப்பட்ட பானங்களை (Aerated Drinks) தொடர்ந்து சாப்பிடும் நிலையில் எரிச்சல் அதிகக்கும். பழச் சாறுகள் சாப்பிடலாம்.

    இரைப்பையில் புண் - அறிகுறிகள் என்ன?


    இரைப்பையில் புண் (Gastric Ulcer) இருந்தால் பசி குறைவாக இருக்கும். அதாவது இரண்டு இட்லி சாப்பிட்ட உடனேயே பசி அடங்கி விடும். சாப்பிடுவதற்கு முன்போ அல்லது சாப்பிட்ட பிறகோ இரைப்பை புண் காரணமாக வலி ஏற்படலாம்.

    கண்டுபிடிப்பது எப்படி?

    வயிற்றில் வலி ஏற்பட்ட உடனேயே சுயமாக "அல்சர்' என அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. ஏனெனில் மேலே சொன்ன வயிற்றுப் புண் பிரச்னைகளில், இரைப்பையில் புண் ஏற்பட்டிருந்தால், ஆபத்தாக முடிய வாய்ப்பு உண்டு.

    ஏனெனில் இரைப்பையில் ஏற்பட்டுள்ள ஆரம்ப நிலைப் புற்று நோய் காரணமாகக் கூட வலி ஏற்படலாம். எனவே எண்டாஸ்கோப்பி பசோதனை மூலம் உணவுக் குழாய் முதல் சிறு குடல் வரை எந்த இடத்தில் புண் உள்ளது, புண்ணின் தீவிரத் தன்மை, புண்ணுக்கான உண்மையான காரணம் ஆகியவற்றைத் தெந்து கொள்வது அவசியம்.

    குறிப்பாக இரைப்பையில் புற்று நோய் காரணமாக புண் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்வது மிகவும் அவசியம்.

    பாக்டீயாவைக் கண்டுபிடிப்பது எப்படி?


    எண்டோஸ்கோப்பி பசோதனை செய்யும்போதே தேவைப்படும் நிலையில் சதையைக் கிள்ளி எடுத்து சதைப் பசோதனையையும் ("பயாப்ஸி') செய்துவிட முடியும். இதிலிருந்து வயிற்றுப் புண் பிரச்சினைக்கு எச் பைலோ பாக்டீயா காரணமா எனக் கண்டுபிடித்துவிட முடியும்.
    புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே...:

    உணவு விழுங்க முடியாத பிரச்னை - புரையேறுதல் - குரலில் மாற்றம் ஆகிய அறிகுறிகள் ஒருங்கிணைந்து இருத்தல், உணவு விழுங்குதல் பிரச்னையுடன் முதுகில் வலி, வயிற்றுப் புண் உள்ளிட்டவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக எண்டோஸ்கோப்பி பசோதனை செய்யும் நிலையில் புற்று நோய் பாதிப்பை உடனடியாகக் கண்டுபிடித்துவிட முடியும்.

    உணவுக் குழாயில் உள்ள புற்று நோய் பாதிப்பு, உடலின் பிற பகுதிகளுக்குப் பரவாமல் உள்ள நிலையில் அறுவைச் சிகிச்சை மூலம் குணப்படுத்தி விட முடியும். எனவே ஆரம்ப நிலை பசோதனையே சிறந்தது.

    உணவுக் குழாய் புற்று நோய் தீவிரமாகி இருந்தால், பாதித்த உணவுக் குழாயை அகற்றி விட்டு, இரைப்பையை உணவுக் குழாயாக மாற்றும் அறுவைச் சிகிச்சை செய்யப்படும். இதன் மூலம் நோயாளியால் ஓரளவு மீண்டும் சாப்பிடத் தொடங்க முடியும்.

    குறைவாகத்தான் சாப்பிட முடியும் என்றாலும்கூட, பசிக்கும் போதெல்லாம் நோயாளி சாப்பிடலாம்.

    இரைப்பை புற்று நோய்:


    முன்பே சொன்னது போல், வயிற்றுப் புண்ணுக்கு சோதனை செய்யும்போது இரைப்பையில் புற்று நோய் காரணமாக புண் இல்லை என்பதை உறுதி செய்வது அவசியம். இரைப்பையில் புற்று நோய் பாதிப்பு ஆரம்ப நிலையில் இருந்தால், பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி குணப்படுத்தி விடலாம்.

    ஆனால், இரைப்பை முழுவதும் புற்று நோய் பரவியிருந்தால், முழு இரைப்பையையும் அகற்றி விட்டு, உணவுக் குழாயை சிறு குடலுடன் சேர்க்கும் அறுவைச் சிகிச்சை செய்யப்படும். இதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.

    மது வேண்டவே வேண்டாம்:


    தொடர்ந்து சிறிது அளவு மது குடிக்கும் நிலையில் இதய நலன் பாதுகாக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இது சயானது அல்ல. ஏனெனில் எந்த அளவு மது குடித்தால் இதயத்துக்கு நல்லது.

    எந்த அளவு குடித்தால் கெடுதல் என்றோ இதுவரை நிரூபணங்கள் எதுவும் இல்லை. எனவே இதய நலனைக் குறிப்பிட்டு மதுப் பழக்கத்தை மேற்கொள்வதை இரைப்பை-குடல் மருத்துவம் ஏற்றுக் கொள்ளாது.

    இதேபோன்று உடல் முழுவதுக்கும் தீங்கு விளைவிக்கும் புகைப் பழக்கம் கூடவே கூடாது. யானை சாப்பிடுவது போன்று நார்ச் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு சாப்பிடும் நிலையில், மலச்சிக்கல் இருக்கவே இருக்காது.

    மலச்சிக்கல் இல்லாத நிலையில் ஜீரண உறுப்புகள் தொடர்பான நோய்கள் வராமல் பெருமளவுக்குத் தவிர்த்துக் கொள்ள முடியும்.

    பிரபல இயக்குனருடன் முதன் முறையாக இணைந்த யுவன்!

    By: Unknown On: 07:30
  • Share The Gag
  • தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன். இவர் தற்போது 8 படங்களுக்கு மேல் இசையமைத்து வருகிறார்.

    தற்போது அவருக்கு பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. இயக்குனர் இமயம் என்று அனைவராலும் பாராட்டப்படும் பாரதிராஜா தன் அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டார்.

    இப்படம் தாத்தா, பேரன் பாசத்தை மையமாக கொண்ட கதையாம், இப்படத்திற்கு இசையமைக்க யுவன் சம்மதித்துள்ளார்

    நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய்

    By: Unknown On: 06:59
  • Share The Gag
  • நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

    இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன.
    முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

    செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் உள்ள வைட்டமின்கள், குளுக்கோசைடுகள் போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் ஏ, டார்வோனின் பி, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின் போன்றவை காணப்படுகின்றன.

    சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.

    சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

    சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது.

    வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள் இவற்றை போக்கும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும்.

    சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது நல்லது.

    முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.

    சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.

    சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.


    இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

    இளநரை போக்க மூலிகை எண்ணெய்..!

    By: Unknown On: 01:11
  • Share The Gag

  •  இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே.


    இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது.


     இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும். பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.


    வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது. உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும். முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.

    இளநரை போக்க மூலிகை எண்ணெய்

     தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.

    சீரகம் – 1 ஸ்பூன்

     சோம்பு – 1/2 ஸ்பூன்

     சின்ன வெங்காயம் – 3

    கறிவேப்பிலை – 2 இணுக்கு

     கொத்தமல்லலி – சிறிதளவு


     நெல்லி வற்றல் – 10 கிராம்

     வெட்டிவேர் – 5 கிராம்

     இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.

    கடுகை பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும்...!

    By: Unknown On: 01:07
  • Share The Gag

  • பாதுகாப்பு முறை:

    சளி பிடித் திருந்தால் நோய்த் தொற்றைத் தடுக்க திறந்த வெளிகளில் விற்கும் உணவு மற்றும் பழ வகைகள், பழச்சாறுகள் சாப்பிடக் கூடாது. பனியால் ஏற்படும் தோல் வறட்சியை விரட்ட வெளியில் சென்று வந்த பின்னர் தண்ணீரில் முகம் கழுவவும். மாய்சரைசிங் சோப்பை மட்டுமே பயன்படுத்தவும்.


    வெயில் மற்றும் பனியால் தோலுக்கு ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க தரமான கிரீம்களை பயன்படுத்தலாம். பனிக்காலத்தில் முடி கொட்டும். இதைத் தடுக்க முடி வறட்சியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். குளிர் காலத்தில் அடிக்கடி நாக்கு வறட்சி ஏற்படும். தாகம் தீர நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பிரிட்ஜில் வைத்த உணவுப் பொருட்களை அப்படியே சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அவற்றை சூடுபடுத்தி சாப்பிட வேண்டும். தலைவலி மற்றும் சளித் தொல்லையின் போது டீ, காபி தவிர்க்கவும்.


    சில தீர்வுகள் :

     * எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடித்தால் சளியால் ஏற்படும் வாந்தி நிற்கும்.

     * எலுமிச்சை பழச்சாற்றை காபியில் கலந்து குடிப்பதன் மூலம் தலைவலி தீரும். எலுமிச்சை இலைகளை தேநீரில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

     * கடல் அழிஞ்சில் பட்டை, திப்பிலி, தாளிசபத்திரி மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் பொடியை தினமும் இரண்டு வேளை தேனில் குழைத்து சாப்பிடலாம். சளி, இருமல், தும்மல் மற்றும் அலர்ஜியில் இருந்து தீர்வு கிடைக்கும்.

     * கடுகை பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும்.

     * அரைக் கீரை தண்டுடன் மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து தினமும் அதிகாலையில் குடித்தால் சளி, இருமல் மற்றும் நுரையீரல்
     தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

     * அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மார்பு சளி குணமாகும்.

     * ஆடாதொடா இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் சளித் தொல்லை தீரும்.

     * ஆலமர விழுதை பொடி செய்து காலை, மாலையில் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

    இதுதான் தாம்பூலம்!

    By: Unknown On: 01:03
  • Share The Gag

  • “இதுதான் தாம்பூலம்”…


    வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மட்டும் தாம்பூலம்

     அல்ல…


    தரமான தாம்பூலம் என்பது


     -ஒரு பாக்கு


    ஐந்து வெற்றிலை



    சிறிது கஸ்தூரி



    பச்சைக் கற்பூரம்



    சங்கச் சூரணம்



    இரண்டு கிராம்பு



    சிறிது ஜாதிக்காய்



    மூன்று வால் மிளகு


    இந்தக் கலவை முறையில் சேர்த்துப் போட்டுக்

     கொள்வதுதான் தரமான தாம்பூலம் ஆகும்.

    இதையெல்லாம் சாப்பிட்டா உங்க உடல் குச்சியாயிடும்...!

    By: Unknown On: 00:59
  • Share The Gag

  •  எப்போதும் உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் ஈஸியான விஷயம் அல்ல.

    யாருக்கு உடல் மிகவும் அழகாக ஸிலிம்மாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ, அவர்கள் கண்டிப்பாக தங்கள் உணவுகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

    அதற்காக சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்றில்லை. அனைத்தையும் சாப்பிடலாம் ஆனால் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும்.

    அதிலும் சரியான டயட்டை மேற்கொள்ளாமல் இருந்தால், முகம் வாடி உடலில் செரிமானம் குறைந்து குடலானது சுருங்கிவிடும்.

    ஆகவே ஆரோக்கியமான உடலை அழகான சருமத்தை பெற வேண்டுமென்றால், நல்ல ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உண்ண வேண்டும்.

    மேலும் ஒரு சில உணவுகள் மிகவும் குறைந்த கொழுப்புகள் நிறைந்திருப்பதோடு, அதைச் சாப்பிட்டால் உடல் அழகாக ஒல்லியாக இருக்கும்.

    பெர்ரிஸ்: உடல் எடையை குறைக்க பெர்ரிப் பழங்கள் மிகவும் சிறந்தவை. ஏனெனில் அந்த பழத்தில் சுவையைத் தரும் ஆன்தோசையனின்கள், உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்கிறது.

    இதற்காக ஒரு எலியின் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அந்த எலி எவ்வளவு தான் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்டாலும், இந்த பழத்தை சாப்பிட்டதால் அதன் எடை கூடவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு காரணம் ஆன்தோசையனின்கள் தான். ஆகவே எத்தகைய உணவுகளை உண்டாலும், இந்த பெர்ரி வகையைச் சேர்ந்த ஸ்ட்ராபெர்ரி, க்ரான் பெர்ரி மற்றும் திராட்சை போன்றவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். அதிலும் இதனை ஜூஸ் அல்லது சாலட் போன்றும் செய்து சாப்பிடலாம்.

    ஆப்பிள்: ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை. ஏனெனில் ஆப்பிளில் அதிகமான அளவு நார்ச்சத்துக்கள் இருப்பதால், அடிக்கடி பசி ஏற்படுவதை கட்டுப்படுத்தும்.

    மேலும் உடலில் இரத்தம் நன்கு ஊறும். அதிலும் ஆப்பிளில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆப்பிள் உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு செரிமானத்தையும் அதிகரிக்கிறது. இதனால் உடலில் அதிகமான அளவு கொழுப்புகள் சேராமல் இருக்கும்.

    தக்காளி: சமையலில் பயன்படுத்தும் தக்காளி உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு உடலை சுத்தம் செய்கிறது.

    அதிலும் தக்காளியில் அதிகமான அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் குறைந்த அளவு கொழுப்பு, கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால்கள் இருக்கிறது.

    ஆகவே உடல் ஸ்லிம்மாக தினமும் ஒரு தக்காளி சாப்பிட வேண்டும். ஆனால் இந்த தக்காளியை சமையலில் சேர்த்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடுவதே மிகவும் சிறந்தது. ஏனெனில் சமைத்து சாப்பிட்டால் தக்காளியில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் குறைந்துவிடும்.

    சொக்லேட்: சொக்லேட் என்று சொன்னதுமே அனைவருக்குமே ஒரு ஆசை ஏற்படும். அத்தகைய சொக்லேட்டில் டார்க் சொக்லேட் சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு, சருமமும் மென்மையாக மின்னும்.

    நிறைய ஆராய்ச்சியில் டார்க் சொக்லேட் சாப்பிட்டால், அதில் இருக்கும் கொக்கோ உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு உடலை பிட்டாகவும் வைக்கும்.

    அதுமட்டுமல்லாமல் சொக்லேட் இதய நோயைத் தடுப்பதோடு பசியையும் கட்டுப்படுத்தும். வேண்டுமென்றால் பசி ஏற்படும் போது சிறிது டார்க் சொக்லேட் சாப்பிட்டுப் பாருங்கள், சுவையாக இருப்பதோடு, பசி கட்டுப்பட்டு உடல் எடையும் கூடாமல் இருக்கும்.

    ஆகவே இத்தகைய உணவுகளையெல்லாம் தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை அதிகமாகாமல் உடலும் பிட்டாக, சருமமும் மென்மையாக அழகாக இருக்கும்.

    ஒபிசிட்டி பாதிப்பும் கலோரி பற்றிய தகவலும்! யாருக்கு சர்ஜரி அவசியம்?

    By: Unknown On: 00:54
  • Share The Gag


  • உலக நாடுகளை பாடாய் படுத்தி வரும் நீரிழிவு, ஹார்ட் அட்டாக் நோய்களுக்கு உடல்பருமன் பிரச்னை முக்கிய காரணமாக, உடல் ரீதியான டாப் 10 பிரச்னைகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. உலகளவில் பார்க்கும்போது 100 கோடிக்கும் அதிகமானவர்கள், தங்களுக்கு பொருந்தாத எடையுடன் இருக்கிறார்களாம். கடந்த 30 ஆண்டுகளில் ஒபிசிட்டி பாதிப்பு 3 மடங்கு உயர்ந்திருக்கிறது எனும் தகவல் நம்மிடம் சரியான விழிப்புணர்வு இல்லை என்பதையே காட்டுகிறது.


    என்ன காரணங்கள்

    ஒரு நாளைக்கு சராசரியாக 1600 கலோரி ஆற்றல் தேவைப்படுகிறது. இது உடலுக்குள் செல்லும் போது சக்தியாக மாற்றப்படுகிறது. உடல் செயல்பாடுகளுக்கு மிஞ்சி சக்தி உள்ளே சென்றால், அதாவது அதிகமான கலோரிகளை எடுத்துக்கொண்டால் அது உடலிலேயே கொழுப்பாக படிந்து விடுகிறது. அவை செலவழிக்கப்படாமல் சேர்ந்து உடல் பெருக்க தொடங்கி விடுகிறது. நார்மல் எடைக்கும் அதிகமாக கூடும்போது உடல்பருமன் பிரச்னையாகி பல வியாதிகளுக்கு வாசலாகி விடுகிறது.

    பொதுவாக மாறிவரும் நமது சாப்பாட்டு முறைகளும், உடலுழைப்போ, உடற்பயிற்சியோ இல்லாததும் தான் முக்கிய காரணமாக இருக்கிறது. சிலருக்கு மரபியலும் காரணமாக அமைந்து விடுகிறதாம். சில ஜீன்கள் ஒபிசிட்டி பிரச்னைக்கு காரணமாகி விடுகின்றன என்கிறார்கள் டாக்டர்கள்.


    உயரத்திற்கேற்ற எடையை கண்டுபிடிப்பது எப்படி?


    பொதுவாக உடல் எடையை, உடல் திண்ம குறியீடு (பிஎம்ஐ) மூலம் அளவிடுகிறார்கள். இது உடலின் எடை, உயரத்தை ஒப்பிட்டு கணக்கிடப்படுகிறது. இந்த பிஎம்ஐ 25 முதல் 30 வரை இருப்பவர்கள் (அதாவது ஒரு சதுர மீட்டருக்கு 25 முதல் 30 கிலோ) அதிக பருமன் கொண்டவர்கள் என்ற பிரிவில் வருகிறார்கள். இந்த பிஎம்ஐ 30 கிலோவுக்கு அதிகமாக செல்லும் போது அது சிவியர் ஒபிசிட்டி எனும் நிலையாகி விடுகிறது. பிஎம்ஐ 18.5 முதல் 24.9 வரை இருக்கும் நபர்கள் தான் நார்மலான உடல் எடைக்காரர்கள். 40ஐ தாண்டும் போது நோயாளி ஆகிறார்கள்.


    ஒருவரின் உயரத்திற்கேற்ற எடையை கணித்து கொள்ள சிம்பிளான வழி இருக்கிறது. ஒருவர் 150 செமீ உயரம் இருக்கிறார் என்று வைத்து கொள்வோம். 150 என்பதில் 100ஐ கழித்து விட்டால் வரும் எண் 50. இதுதான் அவரது உயரத்திற்கேற்ற நார்மல் எடை. அந்த நபர் 50 கிலோ எடை இருக்கலாம். இது போல 160 செமீ உயரம் உள்ள ஒருவர், நார்மலாக 60 கிலோ வரை இருக்கலாம். இதற்கு அதிகப்படியாக எடை இருப்பவர்கள் உஷாராகி கொள்வது நல்லது.


    நோய்களின் ‘அம்மா’ பல நோய்களுக்கு ஒபிசிட்டி தான் அம்மா. உடல் பருமன் ஆகிவிட்டால் பல நோய்கள் அழையா விருந்தாளியாக நுழைந்து விடுகின்றன. இதய சம்பந்தப்பட்ட நோய்கள், டைப் 2 டயாபடீஸ், தூங்கும் போது சுவாச கோளாறு, மூட்டுகளில் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், செரிமான கோளாறுகள், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகமாவது, கல்லீரல் பாதிப்புகள், சிறுநீர் பையில் கல், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு, மலட்டுத் தன்மை, குழந்தைப்பேறின் போது சிரமம், கருச்சிதைவு, மனஅழுத்தம்.. என நோய்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன.


     ஒபிசிட்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேன்சர் பாதிப்பு 30 சதவீதம் அதிகம். வயதுக்கு மீறிய எடையுடன் குண்டாக இருக்கும் குழந்தைகள் சீக்கிரமே நோயாளி ஆகி விடுகிறார்கள். இன்னும் விறுவிறுவென நடக்க முடியாது, அவசரத்துக்கு ஓட முடியாது, தொப்பைகாரர்களுக்கு குனிந்து எந்த வேலையும் செய்ய முடியாது என வேறு டைப்பான பிரச்னைகளும் இருக்கின்றன.

    சாப்பிடாதீங்க..

    உடல் பருமன் பிரச்னையிலிருந்து தப்பிக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்:
    எண்ணெயில் வறுத்த கறி, உணவுகள், ஸ்வீட்ஸ், சாக்லேட்ஸ், யோகர்ட், முட்டை, பீட்ஸா, பர்கர், சமோசா, பிரைடு ரைஸ், நூடுல்ஸ் உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த பாஸ்ட் புட் உணவுகள். அரிசியில், கிழங்கு வகைகளில் கார்போஹைட்ரேட் அதிகம் இருக்கும். எனவே அரிசி, அரிசியால் செய்யப்படும் பதார்த்தங்களை குறைப்பது நல்லது என்பது மருத்துவர்களின் ஆலோசனை.

    சாப்பிடுங்க..

    நார்சத்துள்ள காய்கறிகள், பழங்கள், புரதம் அதிகமுள்ள உணவுகள், கொழுப்பு குறைவாக உள்ள பால் பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

    யாருக்கு சர்ஜரி அவசியம்?

    உடல்பருமன் பிரச்னைக்கு இரைப்பையின் அளவை குறைக்கும் அறுவை சிகிச்சையும் ஒரு வழியாக இருக்கிறது. அளவுக்கு அதிகமான உடல் எடையால் வரும் பிரச்னைகளான நீரிழிவு, ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு, கல்லீரல் பாதிப்பு, மூட்டு வலி போன்ற பல நோய்களுக்கு ஆட்பட்டவர்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். இது ஒரு எபெக்டிவ்வான வழி.

    இந்த அறுவை சிகிச்சை இரு பிரிவாக உள்ளது. ஒன்று ஊட்டச் சத்துக்கள் உடல் எடுத்து கொள்வதை குறைப்பது, மற்றொன்று உணவை எடுத்து கொள்வதை குறைப்பது. சில நேரங்களில் இரண்டும் முறைகளும் பயன்படுத்தப்படும். லேப்ராஸ்கோப்பிக் முறையில் செய்யப்படுவதால் வலியோ, தழும்புகளோ இருக்காது. அதோடு அறுவை சிகிச்சைக்கு பிறகு நீரிழிவு நோயும் கட்டுக்குள் வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரைப்பையின்அளவை குறைப்பதால் உணவு எடுக்கப்படும் அளவு இயற்கையாகவே குறைகிறது. உடல் பருமனும் வெகுவாக குறைந்து விடுகிறது. ஆபரேஷனுக்கு பிறகு ரெகுலர் செக்அப் அவசியமானதாக இருக்கிறது. உடல் பருமன் பிரச்னையில் வருமுன் காப்பதே சிறந்தது.

    கலோரி

    நாம் எடுத்து கொள்ளும் கலோரிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். வயது, எடை, பாலினம், வேலை போன்றவற்றை பொறுத்து ஒருவருக்கு தேவையான கலோரிகள் அமைகிறது. சிறுவர்கள்: சராசரியாக 1500-1800 கலோரிகள்

    பெண்கள்: மிதமான வேலை பார்ப்பவர்களுக்கு 1100-1300, ஆக்டிவான வேலை பார்க்கும் பெண்களுக்கு 1400 -1600 கலோரிகள்.

    ஆண்கள்: மிதமான வேலை பார்க்கும் ஆண்களுக்கு 1600-1800, கடின வேலை பார்ப்பவர்களுக்கு 1800-2000.

    ஒவ்வொருவரும் கலோரி அட்டையை வைத்துக் கொண்டு உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட முடியாது. ஆனால் அறிந்து வைத்திருப்பது அவசியம்.

    கலோரி அட்டவணை

    உணவு கலோரி
    சப்பாத்தி(30 கிராம்) 100
    மசாலாதோசை 200
    சமோசா 150
    பூரி(1) 350
    உப்புமா(சின்ன கிண்ணம்) 100
    சாதம் (ஒரு கப்) 280
    சிக்கன்(70 கிராம்) 100
    முட்டை(1) 80
    குலோப் ஜாமூன்(2) 250
    ரசகுல்லா(2) 150
    டீ, காபி (1 கப்) 70-80

    டாக்டர். ரவீந்திரன் குமரன், அறுவை சிகிச்சை நிபுணர் சென்னை.