Tuesday, 2 September 2014

ஆண்மை அதிகரிக்க திப்பிலி... விந்தைக் கெட்டிப்படுத்தும்...!

By: Unknown On: 23:55
  • Share The Gag
  • ஆங்கிலத்தில், "லான்க் பெப்பர்' என்பர். தமிழில் திப்பிலி எனப்படும். திப்பிலிக்கு சரம், சாடி, சவுண்டி, குடாரி, கோலி, அம்பு, ஆர்கதி, தண்டுலி, துளவி, வைதேகி, மாகதி என்று பல பெயர்களுண்டு. இது கொடிவகை, அரிசிச் திப்பிலி, யானைத் திப்பிலி என இருவகை உள்ளது. அதிக வீரியம் இதற்கு உண்டு. பச்சையாக உள்ள போது இனிக்கும். காய்ந்தபின் காரமாகும். உஷ்ணம் தரும். வாய்வகற்றும், பச்சைத் திப்பிலி பித்தம் நீக்கும். உலர்ந்த திப்பிலி இருமல், குன்மம், ஈளை, பாண்டு, தலைவலி, மயக்கம் ஜலதோஷம் முதலியவற்றை அடக்க நலம் தரும். மலப்பெருக்கைக் குறைக்கும். குளிர் காய்ச்சல், மகோதரம் மேகக்கட்டி, மூலம், தொண்டைப் புண், காது, மூக்கு, கண்களில் உண்டாகும் நோய்கள், கிருமி நோய் நீங்கும். விந்தைக் கெட்டிப்படுத்தும்.

    திப்பிலிச் சூரணத்தை, வெற்றிலை, தேனுடன் கலந்து உண்டால் கோழைநீங்கும். இருமல், காய்ச்சல் தீரும். இதே சூரணத்தைப் பசும்பாலுடன் உண்டால் மயக்கம், வாய்வு, ஜன்னி நீங்கும்; காச நோயும் தீரும்.

    அரிசித் திப்பிலியை சூரணமாக்கிச் சீனியுடன் சிறிதளவு ஒருவேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று உப்புசம், வாதக் காய்ச்சல், காசநோய் எல்லாம் தீரும்; விந்து காக்கப்படும்.

    திப்பிலி மூலத்தை கண்டந்திப்பிலி என்பர். அம்பினடி, வேர், மோடி, தேசாவரம், நறுக்குத் திப்பிலி என்றும் பலப்பல பெயர்களுண்டு. வெளுத்த மஞ்சள் நிறமான இது பசியை தூண்டும். இது பித்த உடல் உள்ளவர்களுக்கு உதவாது.

    சோகை, தூக்கம், பித்தம், இருமல், மேகம், உடல் வலி, குரல் கம்மல் நீக்கம். துர்நீரை வளரச் செய்யும். உடல் வலி தீர்க்கும். இதைப் பால்விட்டு அரைத்துப் பாலுடன் கொடுத்தால் குறுக்கு வலி, நாவறட்சி, வாதக் குற்றம் எல்லாம் போகும்.

    பொறியாளன் கதை வேலையில்லா பட்டதாரி படத்திலிருந்து எடுக்கப்பட்டதா?

    By: Unknown On: 23:14
  • Share The Gag
  • வேலையில்லா பட்டதாரி படத்துக்கு பிறகு சிவில் இன்ஜினியர் வைத்து இந்த வாரம் வெளியாக உள்ள படம் பொறியாளன். இப்படத்தை கிராஸ் ரூட் நிறுவனம் சார்பில் வெற்றிமாறன் தயாரிக்க வேந்தர் மூவீஸ் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது .

    'உதயம் NH4' என்ற படத்தை இயக்கிய மணிமாறன் கதை, திரைக்கதை, வசனம் எழுத படத்தை இயக்கியுள்ளார் தாணுகுமார்.

    ஹரிஷ் கல்யாண், ஆனந்தி நடித்த இப்படத்தின் கதை குறித்து சமீபத்தில் வெற்றிமாறன் பேசினார்.

    ஒரு சிவில் இன்ஜினீயர் தனது வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறான் என்பதே 'பொறியாளன்' கதை என வெற்றிமாறன் குறிப்பிட்டார்.

    இதே கதைக்களத்தில் சமீபத்தில் ஹிட்டடித்தது தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி'. தற்போது அதே பாணியிலான கதையா? என சினிமா வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தான் வேலையில்லா பட்டதாரி படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது

    இதற்கான பதில் செப்டம்பர் 5ம் தேதி தெரிந்துவிடும்.

    நாஸ்ட்ரடாமஸ் - இந்தியா மட்டும்தான் வல்லரசு நாடாகத் திகழும்!

    By: Unknown On: 22:49
  • Share The Gag

  • 21 ஆம் நூற்றாண்டில் உலகில் இந்தியா மட்டும்தான் வல்லரசு நாடாகத் திகழும்! அதிலும் தென்னாட்டிலிருந்தே மிகச்சக்தி வாய்ந்த ஆட்சி அமையும்!

    - நாஸ்ட்ரடாமஸ்(Nostradamus)

    இவருடைய 500 ஆண்டுகளுக்கு முன் எழுதி வைக்கப்பட்ட உலகப்புகழ் பெற்ற தீர்க்க தரிசனம் நிறைவேறுமா?!

    இவரைப் பற்றிச் சில தகவல்கள்.

    நாஸ்ட்ரடாமஸ் ஒரு புரியாத புதிர் ( Nostradamus )..!


    இந்தியர்களில் சித்தர்களும், ஞானிகளும், ரிஷிகளும், சோதிட நிபுணர்களும் வருங்காலத்தைக் கணித்து வைத்ததைப் போலவே மேல்நாட்டினரும் கணித்திருந்தனர்.

    அவர்களில் மிகவும் புராதனமானவர் இம்ஹோட்டெப் (Imhotep). இவர் நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் தோன்றியவர். எகிப்தியப் பேரரசன் ஜோஸரின் மதிமந்திரி; பொறியியல் வல்லுனர்; மருத்துவ நிபுணர்; சோதிட ஞானி. இப்படிப்பட்ட பேரறிஞர்தான் அவர். பெரும்பெரும் கற்களைக் கொண்டு பிரம்மாண்டமான பிரமிடுகளைக் கட்டும் முறையைக் கண்டுபிடித்தவர். தம்முடைய மருத்துவ ஆற்றலால் பெரும் வியாதிகளை நீக்கியவர். இறப்புக்குப் பின் மீண்டும் உயிர் பெறக்கூடிய ரகசியத்தை அறிந்தவர். இறந்தபின் உடலை பதனப்படுத்திப் பாதுக்காத்துவைக்கும் விதத்தைக் கண்டுபிடித்தவர். பிரமிடுகளும் அவற்றுள் வைக்கப்பட்ட மம்மி(Mummy) எனப்படும் சடலங்களும் இவருடைய ஆற்றலின் விளைவுகளே.

    மேலைநாட்டு தீர்க்கதரிசிகளில் மிகவும் பிரபலமானவர் 'மிஷெல் தெநாத்ருதாம்'(Michel de Notredame). ஆங்கிலத்தில் நாஸ்ட்ரடாமஸ் (Nostradamus) என்று கூறுவார்கள். வருங்காலத்தைப் பற்றி அவர் எழுதிவைத்தவற்றில் பல நிகழ்ச்சிகள் நடந்து விட்டிருக்கின்றன. சில நிகழ்ச்சிகளின் துவக்கம் ஏற்பட்டிருக்கிறது. சில நிகழ்ச்சிகள், சில வாரங்களிலோ சில மாதங்களிலோ உருவாகக்கூடும். தீராத நோய்களைத் தீர்த்தவர்.

    யார் இந்த நாஸ்ட்ரடாமஸ்?

    நாஸ்ட்ரடாமஸ் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். இவர்களது குடும்பம் வருங்காலம் உரைத்தலில் திறமை பெற்றிருந்தது. அதன் வழி இவருக்கும் அந்த ஆற்றல் வந்தது. பாரம்பரிய ஜோதிட முறையை தனது முன்னோர்களிடம் பயின்ற இவர், “கப்பாலா” முறை எனப்படும் ரகசிய ஆருட முறையையும் பயின்றார். ஆனாலும் அவற்றை எல்லாம் விடுத்து மருத்துவத்தை முறையாகப் பயின்று டாக்டர் ஆனார். தம்மை பிரச்சனை என்று நாடி வந்தவர்களது பிரச்சனைகளைப் போக்கினார். அவர்களது நோய்களைக் குணப்படுத்தினார். மனத் தெளிவை ஏற்படுத்தினார். வருங்காலத்தில் நிகழ இருக்கும் செயல்களை முன்னரே கூறி அவர்களை எச்சரிக்கை செய்தார். அதனால் மக்களுக்கு அவர் மீது பெரிய மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது

     நாஸ்ட்ரடமஸ்நாளடைவில் ரசவாதம், மாந்த்ரீகம், இறந்தவர்களுடன் பேசுதல், உடலை விடுத்து வெளியே சென்று வருதல் போன்ற பல ஆற்றல்கள் கை வரப் பெற்றார். ஆனால் மதவாதிகள் எதிர்த்ததால் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். பின் பிரான்ஸின் தெற்குப் பகுதிக்குக் குடியேறினார். ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார். நாளடைவில் தனது ஆரூடங்களினால் அவருக்கு புகழும் ஆதரவும் பெருகியது. மக்களிடையே செல்வாக்கு வளர்ந்தது.

    சைத்தானின் சீடரா?

    அதன்பின்னர் நாஸ்ட்ரடாமஸ் ஐரோப்பா முழுவதும் புகழ் பெற்றார். ஆனாலும்கூட அவரை சைத்தனின் சீடர் என்று கருதியவர்களும் பலர் இருந்தனர். மருத்துவர் என்ற ஹோதாவைவிட சோதிடர் என்ற முறையிலேயே பொன்னும் பொருளும் புகழும் பெற்றார்.

    இன்னும் இவருடைய புத்தகத்தை படித்தால் நிறைய புரியாத புதிர்கள் நிறைய இருக்கும்

     கறுப்பா, வெள்ளையா?

    ஒருமுறை ஒரு பெரிய பிரபுவின் வீட்ட்க்கு விருந்துக்குச் சென்றார். அவருடைய அரண்மனையின் பின்புறம் ஓரிடத்தில் இரண்டு பன்றிகள் இருந்தன. ஒன்று கறுப்பு; இன்னொன்று வெள்ளை. அவற்றைக் காட்டி, "இந்த இரண்டு பன்றிகளில் எதை நாம் இன்றிரவு விருந்தில் சாப்பிடப்போகிறோம்?", என்று அந்தப் பிரபு நாஸ்ட்ரடாமஸை வினவினார்.

     "கறுப்புப் பன்றியை நாம் சாப்பிடுவோம். வெள்ளைப் பன்றியை ஓநாய் சாப்பிட்டுவிடும்," என்றார் நாஸ்ட்ரடாமஸ்.

     "என்னுடைய அரண்மனை எல்லைக்குள் எங்கிருந்து ஐயா, ஓநாய் வரும்?" என்று எள்ளி நகையாடினார், பிரபு.

    அதன் பிறகு நாஸ்ட்ரடாமஸுக்கே தெரியாமல் சமையற்காரரை அழைத்து அந்த வெள்ளைப் பன்றியைக் கொன்று சமைக்கச் சொல்லிவிட்டுப் போனார் அந்தப பிரபு.

    அன்றிரவு விருந்தில் பன்றிக்கறி பரிமாறப்பட்டு உண்டுமுடிந்தபின், பிரபு மீண்டும் நாஸ்ட்ரடாமஸை வினவினார்.

     "நாம் சற்றுமுன்பு எந்தப் பன்றியைச் சாப்பிட்டோம்?"

     "கறுப்பு" என்று சற்றும் சளைக்காமல் கூறினார் நாஸ்ட்ரடாமஸ்.

    உடனே அப்பிரபு, சமையற்காரரை அழைத்து, விருந்தினர் முன்னிலையில் விசாரித்தார்.

     "எந்தப் பன்றியைப் பரிமாறியிருக்கிறாய், என்று இவர்கள் எல்லாரிடமும் சொல்"

     "கறுப்புப்பன்றி"

    பிரபு அதிர்ந்து போனார்.

     "வெள்ளைப் பன்றியை அல்லவா சமைக்கச் சொன்னேன்? என் கண் முன்னால்தானே அதைக் கொன்றாய்?"

     "ஆம்! பிரபோ. ஆனால் அடுப்பில் வைத்திருந்த பன்றியை உங்கள் வேட்டை நாய் கெளவி இழுத்துச்சென்று விட்டது. ஆகையால் வேறு வழியின்றி கறுப்புப் பன்றியைக் கொன்று சமைத்துப் பரிமாறினேன்", என்று கூறினார் சமையற்காரர்.

    அந்தப் பிரபுவின் வேட்டைநாய் உண்மையிலேயே ஒரு வளர்ப்பு ஓநாய்க்குப் பிறந்தது.

    நல்ல புகழின் உச்சியில் இருந்த நாஸ்ட்ரடாமஸ் கி.பி.1566-ஆம் ஆண்டு இறந்தார். அவரைப் புதைத்துவிட்டார்கள்.

    மண்டை ஓட்டில் மது ஊற்றினான்!

    நாஸ்ட்ரடாமஸான் இறப்புக்குப் பின்னர் அவருடைய மண்டையோட்டில் மதுவை ஊற்றி யார் அருந்துகிறார்களோ அவர்களுக்கு நாஸ்ட்ரடாமஸின் சக்திகள் அனைத்தும் வந்துவிடும் என்றும், ஆனால் அவ்வாறு செய்பவர்கள் உடனேயே இறந்துவிடுவார்கள் என்றும் நம்பப்பட்டது. நாஸ்ட்ரடாமஸ் இறந்து இருநூற்று இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் கி.பி. 1791-ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒருநாள் நள்ளிரவில் நாஸ்ட்ரடாமஸான் புதைகுழியைத் தோண்டி அவருடைய சவப்பெட்டியை மூன்றுபேர் திறந்தார்கள். அவர்கள் பிரெஞ்சுப் போர்வீரர்கள். அன்று அவர்கள் மிதமிஞ்சி குடிதிருந்தார்கள். போதை ஏறியநிலையில் அவர்கள் நாஸ்ட்ரடாமஸின் கல்லறையைத் தேடிச்சென்று திறந்தார்கள்.

    அந்த சமயத்தில் பிரெஞ்சுப்புரட்சியின் தொடர்பாகக் கலவரம் நடந்து கொண்டிருந்தது.

    சவப்பெட்டிக்குள் நாஸ்ட்ரடாமஸின் எலும்புக்கூடு இருந்தது. அதன் கழுத்தில் 'மே, 1791' என்று பொறிக்கப்பட்டிருந்த பித்தளைப்பட்டயம் ஒன்று விளங்கியது. நாஸ்ட்ரடாமஸை 225 ஆண்டுகளுக்கு முன்னர் அடக்கம் செய்யும்போது அந்தப் பட்டயம் அவருடைய கழுத்தில் மாட்டப்பட்டிருக்கவேண்டும்.

    அம்மூவரில் ஒருவன் நாஸ்ட்ரடாமஸான் மண்டையோட்டை எடுத்து அதில் மதுவை ஊற்றிக் குடித்தான். அப்போது எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் குண்டு ஒன்று அவனுடைய கழுத்தில் பாய்ந்தது. உடனே நாஸ்ட்ரடாமஸான் புதைகுழிக்குள்ளேயே அவன் விழுந்து மாண்டுபோனான்.

    சுற்றி நிகழ்ந்துகொண்டிருந்த கலவரத்தில் யாரோ யாரையோ நோக்கிச் சுட்ட குண்டு அவனுடைய கழுத்தில் பாய்ந்துவிட்டது!

    மற்ற இருவருக்கும் 'மே 1791' என்று பட்டயத்தில் எழுதியிருந்த காரணமும் அப்போதுதான் புலப்பட்டது. இன்ன ஆண்டு இன்ன மாதத்தில் தன்னுடைய புதைகுழியை யாராவது திறப்பார்கள் என்று நாஸ்ட்ரடாமஸுக்கு 225 ஆண்டுகளுக்கு முன்னமேயே தெரிந்திருந்திருக்கிறது. ஆகவேதான் தன்னுடைய கழுத்தில் அந்தப் பட்டயத்தைக் கட்டிக்கொண்டு இறந்திருக்கிறார்.

     "புதைகுழியை யார் திறக்கிறார்களோ, அவர்கள் உடனடியாக அதை மூடவில்லையென்றால் பெருங்கெடுதல் நேரிடும்" என்று அவருடைய தீர்க்கதரிசனங்களின் 907-ஆவது பாடலில் கூறியிருந்தார்.

    அவருடைய புதைகுழியைத் திறந்தவர்களில் மற்றவர்களும் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது எதிரிகளால் சுடப்பட்டு இறந்தார்கள்.

    பழைய நாடுகளும் அவறின் புதிய பெயர்களும்?

    By: Unknown On: 22:49
  • Share The Gag

  • 1.டச்சு கயானா --- சுரினாம்.

    2.அப்பர் வோல்டா --- புர்க்கினா ஃபாஸோ

    3.அபிசீனியா --- எத்தியோப்பியா

    4.கோல்டு கோஸ்ட் --- கானா

    5.பசுட்டோலாந்து --- லெசதொ

    6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா

    7.வட ரொடீஷியா --- ஜாம்பியா

    8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே

    9.டாங்கனீகாம,சன்ஸிபார் --- தான்சானியா

    10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட்

    11.சாயிர் --- காங்கோ

    13.சோவியத்யூனியன் --- ரஷ்யா

    14.பர்மா --- மியான்மர்

    15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ்

    16.சிலோன் --- ஸ்ரீலங்கா

    17.கம்பூச்சியா --- கம்போடியா

    18.பாரசீகம்,பெர்ஷியா --- ஈரான்

    19.மெஸமடோமியா --- ஈராக்

    20.சயாம் --- தாய்லாந்து

    21.பார்மோஸ --- தைவான்

    22.ஹாலந்து --- நெதர்லாந்து

    23.மலாவாய் --- நியூசிலாந்து

    24.மலகாஸி --- மடகாஸ்கர்

    25.பாலஸ்தீனம் --- இஸ்ரேல்

    26.டச் ஈஸ்ட் இண்டீஸ் --- இந்தோனேசியா

    27.சாண்ட்விச் தீவுகள் --- ஹாவாய்

    28.அப்பர் பெரு --- பொலிவியா

    29.பெக்குவானாலாந்து --- போட்ஸ்வானா

    இடுப்பு மடிப்பு பெண்களே உஷார்! அவசியம் படிக்கவும்..!

    By: Unknown On: 21:55
  • Share The Gag

  • "இடுப்பில் டயர் போட்டுவிட்டது' என்பார்கள். அதாவது இடுப்பில் சதைபோட்டு, மடிப்பு மடிப்பாகத் தெரியும்.

    இதுதான் பெண்களின் உடல் ரீதியான பல பிரச்னைகளுக்கு வெளிப்படையாகத் தெரியும் அறிகுறி என்றால் நம்புங்கள்.

    பல பெண்கள் இடுப்பில் கொஞ்சமாக சதை போட்டால் பார்க்க அழகாக இருப்பதாக நினைக்கிறார்கள். அதுதான் தவறு. உங்கள் உடலின் எடை கூடப்போகிறது. தொப்பை போடப்போகிறது. இதயம் உள்ளிட்ட பல நோய்களை நீங்கள் வலியப்போய் வரவழைத்து விட்டீர்கள் என்பதற்கு இது ஒரு அறிகுறி.

    இடுப்புப் பகுதியில் தோலுக்கு அடியில் "சப்ஜடேனியஸ்' என்னும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, இக்கொழுப்பானது கரையாமல் அங்கேயே தங்கிவிடும். இடுப்புப் சதைப் பகுதி பெருத்துப்போய், டயர் போட்டது போல் ஆவதற்கு இதுதான் காரணம்.

    சில பெண்களுக்கு, பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன் மாற்றங்களாலும் இடுப்பில் சதை போட்டு விடும்.

    இந்தக் காரணங்கள் எதுவுமே இல்லாமல், உடல் உழைப்பு எதுவும் இல்லாமல், வளைந்து குனிந்து பெருக்காமல், ஓடியாடி வேலை செய்யாமல், ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி, பல மணி நேரம் டிவி பார்ப்பவர்கள், நொறுக்குத் தீனி சாப்பிடுபவர்கள், கொஞ்சம்கூட உடற்பயிற்சியே செய்யாதவர்களுக்குக் கண்டிப்பாக இடுப்பு மடிப்பு விழும்.

    அதை அப்படியே விட்டால், முதலில் உடல் பருமன் அடையும், பிறகு தொப்பை விழும். எடை அதிகரிக்கும். மூச்சு வாங்கும். பி.பி. மெல்ல எட்டிப் பார்க்கும். சுகர் வந்து வந்து போகும். கடைசியில் ஹார்ட் அட்டாக்குக்கும் கிட்னி ஃபெயிலியருக்கும் வழிவகுத்தாலும் வகுக்கலாம் இந்த இம்சைகள் வேண்டுமா?

    கொஞ்சமே கொஞ்சமாக அக்கறை எடுத்துக் கொண்டாலே, போதும் இந்தப் பிரச்னைகள் வராமலே தடுத்துவிடலாம்.

    உங்களுக்குத் தெரியும்?

    உலகில் 100 கோடி பேர் அளவுக்கு அதிகமான இடுப்புச் சதையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது பலருக்குத் தெரிவதில்லை. இதனால் 40 கோடிப் பேர் ஒபிஸிட்டி எனும் உடற்பருமனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

    இன்னொரு அதிர்ச்சியான தகவல், உலகில் மொத்த இறப்புகளில் 3ல் ஒரு பங்கு இடுப்புச் சதை அதிகம் உள்ளவர்களுக்குத்தான் இதயநோய் சம்பந்தமான இறப்புகள் ஏற்படுகினறனவாம். இந்த ஆபத்துக்குக் காரணம் முறையற்ற உணவுப் பழக்கம்தான் என்கிறார்கள்.

    ஏன் இடுப்புச் சதை?

    நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் கலோரித்திறன் அதிகம் இருந்து, நம் உடல் செலவழிக்கும் கலோரித்திறன் குறைவாக இருந்தால், அதுதான் படிப்படியாக இடுப்பைச் சுற்றிலும் சதை போடக் காரணமாகிறது.

    சர்க்கரை, உப்பு, கொழுப்பு போன்றவற்றை அதிகம் உணவில் சேர்ப்பதும் இடுப்புச்சதைகூட மேலும் ஒரு காரணமாகும். அதாவது நாம் ருசிக்காக உண்பதுதான் அதிகம். சத்துக்காக உண்பது குறைவு.

    இளைய தலைமுறையினர்:

    வீட்டுச் சாப்பாட்டை புறக்கணித்து விட்டு, ஃபாஸ்ட்ஃபுட் வகைகள் நொறுக்குத்தீனிகள், குளிர்பானங்கள் அதிகம் உண்பது இன்றைய இளம் தலைமுறையினரிடடையே ஃபேஷனாகிவிட்டது. நண்பர்கள் அல்லது நண்பிகள் நான்கு பேர் ஒன்று சேர்ந்தால், இந்தவகை, உணவுகள்தான் அவர்களின் மெனுவில் இருக்கும். அரட்டைக் கச்சேரிக்கு நடுவே, இந்தவகை உணவுகள் எவ்வளவு உண்கிறோம் என்ற அளவே தெரியாமல் உண்கிறார்கள்.

    கூடவே உடல் உழைப்பு இல்லாத வேலைகளில்தான் அவர்கள் விரும்பி ஈடுபடுகிறார்கள். கம்ப்யூட்டர், டி.வி. முன் அதிக நேரம் செலவிடுவதும் இதற்கு முக்கிய காரணமாகிறது.

    ஒரே நாளில் இடுப்பில் மடிப்பு விழாது:

    யாருக்கும் ஒரே நாளில் திடீரென்று இடுப்பில் சதைப்போட்டுவிடாது. கொஞ்சம் கொஞ்சமாக பல வருடங்கள் கழித்துத்தான் இந்த இடுப்பு மடிப்பு வரும். கொஞ்சம் கொஞ்சமாக சதை கூடும்போது அது பற்றிய அக்கறையோ கவலையோ கொள்ளாதவர்கள், உடலுக்கு ஏதாவது பிரச்னை என்றால் மட்டுமே வருத்தப்படுகிறார்கள். இடுப்பில் அளவுக்கு மீறிய சதைபோட்டு டயர்போல் பெருத்த பின்னர்தான் அதைக் குறைக்க பலர் படாதபாடு படுகிறார்கள்.

    அதற்காக கடுமையான உணவுக் கட்டுப்பாடு, கடுமையான உடற்பயிற்சி, பல நாள் பட்டினி, அளவுக்கு அதிகமான மாத்திரைகள் எடுத்து உடனே இடுப்புச் சதையைக் குறைக்க பரபர என்று ஓடுவார்கள். அப்படியெல்லாம் நினைத்த உடன் இடுப்பு மடிப்பை நீக்கிவிட முடியாது.

    ஒரே வழிதான் உண்டு:

    அதற்கு ஒரே வழி, நீங்கள் எவ்வளவு கலோரியை உணவின் மூலம் உடலுக்குள் கொண்டு வருகிறீர்கள். அதில் எவ்வளவு கலோரித்திறனை செலவழிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் இடுப்பு மடிப்பு குறையும்.
    அதாவது, நாம் உட்கொள்ளும் உணவின் அளவு நமது உடல் செய்யும் வேலையின் அளவு இந்த இரண்டிற்கும் இடையே நடைபெறும் வரவு-செலவு கணக்கைப் பொறுத்துத்தான் உடல் எடை கூடும்-குறையும்.

    இடுப்புச் சதையைக் குறைக்க உதவும் உணவுப் பழக்கம்:

    1. எண்ணெயில் செய்த உணவுகள் எதுவும் கூடாது.
    2. மட்டம், முட்டை மஞ்சள்கரு, வெண்ணெய் போன்ற கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்த்து விடுங்கள்.
    3. ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் அதிகம் கூடாது.
    4. மது, புகை கூடவே கூடாது.
    5. குளிர்பானங்களை அடிக்கடி அருந்தக்கூடாது.
    6. நார்ச்சத்துள்ள காய்கறிகள் பழங்கள் அதிகம் உண்ண வேண்டும்.
    7. ஓட்ஸ் கஞ்சி நல்லது.
    8. உடல் உழைப்பு இல்லாத வேலையில் இருப்போர், அளவான உடற்பயிற்சி, 45 நிமிட நடைப்பயிற்சி அவசியம். இதைத் தொடர்ந்து செய்தாலே இடுப்பில் மடிப்பு விழாது.
    9. நடனம் ரொம்ப நல்லது. ஏதாவரு ஒரு நடனத்தை தொடர்ந்து ஆடுங்கள். கண்டிப்பாக இடுப்பில் சதை இருக்காது.

    கத்தி படத்துக்காக தன் விளக்கத்தை கோர்ட்டுக்கு அனுப்பிய ஏ.ஆர். முருகதாஸ் !!

    By: Unknown On: 20:49
  • Share The Gag
  • கத்தி படத்தை சுற்றி பல பிரச்சனை சூழந்து கொண்டாலும் மனம் தளராமல் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் ஏ.ஆர். முருகதாஸ்.

    இந்நிலையில் சமீபத்தில் மீஞ்சூர் கோபி என்ற உதவி இயக்குனர் கத்தி படத்தின் கதை என்னுடையது என்றும் இக்கதையை நான் ஏ.ஆர். முருகதாஸுடம் இரண்டு வருடத்துக்கு முன்பு சொல்லியிருந்தேன்.

    தற்போது எனக்கு தெரியாமல் என் கதையை படமாக எடுக்கின்றனர், எனவே எனக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு பதிந்துள்ளார். மீஞ்சூர் கோபி சார்பாக அவர் எழுதிய முழு கதையும் நீதிமன்றத்தில் தரப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் தன் விளக்கத்தை நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளார், அதில் தற்போது வழக்கு தொடர்ந்து இருக்கும் கத்தி படத்தின் கதை பற்றி எனக்கு எந்த வித பயமும் இல்லை.

    ஏனென்றால் எனக்கு மீஞ்சூர் கோபி என்பவரை யார் என்று தெரியாது என்றும் இதுக்கு முன்பு நான் அவரை பார்த்தது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    தற்போது இந்த வழக்கின் அடுத்த கட்ட விவாதம் வருகிற 16ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! அலட்சியம் வேண்டாம்..!

    By: Unknown On: 19:29
  • Share The Gag
  • அன்று யு.கே.ஜி. படிக்கும் அஸ்வினிக்கு திடீரென்று காய்ச்சல். அனலாய்க் கொதித்தது. டாக்டரிடம் அழைத்துச் சென்று காட்டி மாத்திரை மருந்து கொடுத்தும் சரியாகவில்லை. உடனே ரத்தம் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை செய்துவரும்படி பரிந்துரைத்தார் டாக்டர். பிறகுதான் அந்தப் குழந்தைக்கு சிறுநீரகப் பாதை தொற்று இருப்பது தெரியவந்தது. 

    ஏன் இந்த வயதிலேயே சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று? என்று விசாரித்தபோதுதான் தெரிந்தது,  பள்ளிக்கூடத்தில் டாய்லெட் செல்ல  விருப்பம் இல்லாமல் சிறுநீரை அடக்கியிருக்கிறாள் அஸ்வினி. ரொம்ப அவசரம் என்றால் மட்டுமே, பள்ளிக்கூட டாய்லெட்டைப் பயன்படுத்தியிருக்கிறாள். அஸ்வினியைப் போல ஏராளமான சிறுவர் சிறுமியர் சிறுநீர் கழிக்காமல் அடக்கிக்கொள்ளப் பழகிவிட்டனர். இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றி திருப்பூரைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் பிரியா விசுவாசத்திடம் கேட்டோம்.

    'சிறுநீரகப் பாதை நோய்த்தொற்று இருபாலாருக்குமே வரக்கூடிய பிரச்னைதான். ஆனால், ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகளுக்குதான் இந்தப் பிரச்னை அதிகம் வர வாய்ப்பு உண்டு. அதிலும், ஒரு வயது நிரம்பிய பெண் குழந்தைகளுக்குச் சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். சளி, இருமலைப் போன்று இந்தப் பாதிப்பு வெளிப்படையாகத் தெரியக்கூடியது அல்ல என்பதால், கவனமாக இருக்கவேண்டும்.

    தொடர் காய்ச்சல், வாந்தி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்கும்போது வலி, எரிச்சல் ஏற்படுதல், சிறுநீர் மஞ்சள் நிறமாக வெளியேறுதல், சிறுநீர் நாற்றம் வீசுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச்சென்று பரிசோதிக்க வேண்டும்.
    பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் வகுப்பு நேரங்களில் சிறுநீர் வரும்போது அடக்கிவைத்திருத்தல், இடைவேளை நேரங்களில்கூடச் சிறுநீர் கழிக்காமல் இருப்பது போன்ற காரணங்களும் சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதனால், ஆறு முதல் ஏழு வயது குழந்தைக்கும் சிறுநீரகத்தில் கல் உருவாகலாம். 

    இது தவிர, 'நெப்ரிடிக் சின்ட்ரோம்’ (Nephritic syndrome) எனப்படும் சிறுநீரகக் கோளாறு மற்றும் வீக்கம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இதன், அறிகுறிகளாக அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், சிறுநீரின் நிறம் மாறி இருத்தல், கால் மற்றும் முகத்தில் வீக்கம் போன்றவை ஏற்படலாம். இதுபோன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க கழிப்பறை சுகாதாரமாக இருப்பது மிகமிக அவசியம்.

    பெண் குழந்தை மலம் கழித்த பிறகு கழுவிவிடும்போது முதலில் முன் பக்கமாகத் தண்ணீரை ஊற்ற வேண்டும். பின்புறத்திலிருந்து கழுவிவிடும்போது பீய்ச்சி அடிக்கப்பட்ட தண்ணீரானது முன்னோக்கிச் சென்று, பெண்ணின் பிறப்பு உறுப்பில் படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.  இதனாலும், சிறுநீர்ப் பாதையில் நோய்த் தொற்று ஏற்படக்கூடும். குழந்தைகளுக்கு இறுக்கமான உள்ளாடை அணிவிப்பதைத் தவிர்க்க வேண்டும். பருத்தி ஆடைகளை அணிவித்தலே நலம்.

    ஒவ்வொரு முறை கழிப்பறைக்குப் போய்விட்டு வந்ததும், கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொள்ள குழந்தைகளுக்கு அறிவுறுத்தவேண்டும். ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைக்கு தினமும் இரண்டு லிட்டர் குடிநீரை குடிக்கப் பழக்கப்படுத்த வேண்டும். சிறுநீரக பாதை நோய்த்தொற்றோ, கல் பிரச்னையோ ஓரிரு நாட்களில் குணமாகிவிடக்கூடியவை அல்ல. தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது அவசியம்.  முழுவதுமாக குணமடைய ஒருசில வாரங்கள் தேவைப்படும். மருத்துவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து அவர்கள் தரக்கூடிய மருந்துகளை முழுமையாக முறைப்படி உட்கொண்டால், சிறுநீரகப் பிரச்னையைச் சீக்கிரத்திலே தீர்க்கலாம்' என்றார்.

    கவனம் கொள்ளுங்கள் பெற்றோர்களே!!

    சொன்ன மாதிரி கதை எடுங்கய்யா – இயக்குனர்கள் மீது நடிகர் பாய்ச்சல்

    By: Unknown On: 18:23
  • Share The Gag
  • விருமாண்டி, சுள்ளான், வெடிகுண்டு முருகேசன், குசேலன் என பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் பசுபதி. இப்போது இவர் மொசக்குட்டி என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படத்தை பற்றி இயக்குனர் என். ஜீவன் கூறுகையில், மைனா, சாட்டை போன்ற படங்களை தயாரித்த ஜான் மேக்ஸ் இப்படத்தை தயாரிக்கிறார்.

    பசுபதி இந்த படத்தில் உப்புதர காசி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரிடம் சென்று கதை சொன்னேன். கேட்டு முடித்ததும், ‘எல்லோரும் கதை நல்லா சொல்றாங்க ஆனா சொன்ன மாதிரி எடுக்க மாட்டேங்கறாங்க என்று ஒரு சில இயக்குனர் மீது புகார் கூறினார்.

    அதேபோல் என்னையும் சொல்லிவிடுவாரோ என்று பயந்தேன். ஆனால் முதல் நாள் ஷீட்டிங் முடிந்தது, பரவாயில்லை சொன்னதை விட நல்லாவே எடுக்கிறீர்கள் என்று கூறினார்.

    -::- அறிவியல் செய்திகள் - கேள்வியும் பதிலும் -::-

    By: Unknown On: 17:45
  • Share The Gag
  • 1)பெட்ரோலில் இயங்கும் பொறிகளை (engines) டீசலைப் (disel) பயன்படுத்தி இயக்க முடிவதில்லை ஏன்?
     
         பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களைக் (fuels) கொண்டு இயங்கும் இரு பொறிகளும் உட்கனற்பொறிகளே (internal combustion engines). ஆயின் இரண்டும் வெவ்வேறு வடிவ அமைப்புகளைக் கொண்டவை. ஒவ்வொரு எரிபொருளும் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் தான் எரியத் துவங்கும். இதனைப் பற்றல் வெப்பநிலை (ignition temperature) என்பர். இது பெட்ரோலுக்குக் குறைவாகவும், டீசலுக்கு மிகுதியாகவும் தேவைப்படும். அடுத்து பெட்ரோல் பொறியில் எரிபொருள்-காற்றுக் கலவையைப் பற்றவைக்கும் செயலை மேற்கொள்வது தீப்பொறிச்செருகி (spark plug) ஆகும். மேலும் இப்பொறியில் எரிபொருள்-காற்றுக் கலவையைப் பற்ற வைப்பதற்கு முன்னால் தேவைப்படும் அழுத்த அளவு அதாவது அழுத்த விகிதம் (compression ratio) குறைவு. இந்நிலையில் பெட்ரோல் பொறியில் டீசலை எரிபொருளாகப் பயன்படுத்தும்போது பற்ற வைக்கும் வெப்பநிலை போதுமான அளவு இல்லாத காரணத்தால் எரிபொருள் பற்றவே பற்றாது. அடுத்து டீசல் பொறிகளில் பெட்ரோல் பொறிகளில் இருப்பது போல் தீப்பொறிச்செருகி கிடையாது. இங்கு எரிபொருள் பற்றவைப்பு மிகுந்த அழுத்தத்தின் விளைவாக நடைபெறும். இவ்வாறு பெட்ரோல், டீசல் பொறிகளுக்கு இடையேயுள்ள வடிவமைப்பு வேறுபாட்டினாலும், பற்றவைப்பு வெப்பநிலை வேறுபாட்டினாலும் பெட்ரோலுக்குப் பதிலாக டீசலையோ, டீசலுக்குப் பதிலாகப் பெட்ரோலையோ பயன்படுத்த இயலாது.

    2)உயர் அழுத்த(EHT) மின்சாரத்தை எடுத்துச் செல்லும் கம்பிகளில் இருந்து ஒரு வகை ஒலி உண்டாவது ஏன்?
     
                 உயர் அழுத்த மின்சாரத்தைத் தாங்கிச் செல்லும் கம்பிகளை உடைய கோபுரக் கம்பங்களின் அருகே நின்றால் ஒரு வகை ஒலி கேட்பது உண்மையே. இவ்வொலி உண்டாவதற்கு கம்பியில் செல்லும் மின்னோட்டம் காரணமல்ல. நரம்பிசைக் கருவிகளில் உள்ள தந்திகளில் தடையுண்டாகும்போது ஒலி எழும்புவதை நாம் அறிவோம். கோபுரங்களுக்கு இடையே செல்லும் மின்கம்பிகள் மிக விரைந்து வீசும் காற்றின் காரணமாக ஒத்ததிர்வுக்கு (Resonant vibration) ஆட்படுகின்றன. இந்த நிலையில் மின்கம்பிகளில் ஒலி உண்டாகிறது. இவ்வொலியே வண்டுகள் ரீங்காரம் செய்யும் ஒலியைப் போல நமக்குக் கேட்கிறது.

    3)நீண்ட தூரம் செலுத்துவதற்கு மாறுதிசை மின்னோட்டத்தைப் (Alternating current-AC) பயன் படுத்துவது ஏன்?
                 நீண்ட தூரச் செலுத்துகைக்கு மாறுதிசை மின்னோட்டத்தைப் பயன்படுத்துவதற்கு இரு காரணங்கள் உள்ளன. முதலாவது மாறுதிசை மின்னோட்டத்தின் அழுத்தத்தை (Voltage) மின் மாற்றிகளைப் (Transformer) பயன்படுத்திக் கூட்டவோ, குறைக்கவோ இயலும். எடுத்துக்காட்டாக 400,000 வோல்ட் மின்னழுத்தமுள்ள மாறு மின்னோட்டத்தை 220 வோல்ட் அழுத்தமுள்ள மின்னோட்டமாக, இறக்கு மின்மாற்றியைப் (Step down transformer) பயன்படுத்தி, வீட்டுப் பயன்பாட்டிற்காகக் குறைத்திட இயலும். அடுத்து மாறு மின்னோட்டத்தை உயர் அழுத்தத்தில் நீண்டதூரம் செலுத்தும்போது ஏற்படும் இழப்பு மிகவும் குறைவு.

    4)விண்வெளிக் கலங்களை ஏவும்போது, இறங்குமுகமாக எண்களைக் கூறுவது ஏன் ?
         விண்வெளிக் கலங்களை ஏவுவதற்கு முன்னர் அதனுடைய எல்லா அமைப்புகளும் சரியாக உள்ளனவா என்பதை ஐயத்திற்கு இடமின்றி அறிந்திடுவது மிக முக்கியம்; ஏதேனும் ஒரு நிலையில் (stage) நிகழும் சிறு தவறும் பேரிழப்பை உண்டாக்கிவிடும். எனவே பொறியாளர்கள் விண்கலங்களைச் செலுத்தும் முறையைப் படிப்படியாக மேற்கொள்ளுகின்றனர். இந்தப் படிநிலைகளின் எண்ணிக்கையை 10, 9, ..................... 0 என இறங்குமுகமாக (count down) கணக்கிடுகின்றனர். இதில் ஒவ்வொரு எண்ணும் ஒரு படிநிலையைக் குறிப்பதாகும். கடைசி எண்ணான பூஜ்யத்தைக் குறிப்பிடும் போது கலம் விண்வெளியில் செலுத்தப்பட்டுவிட்டது எனப் பொருள்படும். இந்த இறங்குமுக எண்ணிக்கையின்போது கலத்தில் ஏதேனும் தவறு கண்டறியப்பட்டால் எண்ணுவது நிறுத்தப்பட்டு, தவறை நீக்கியபின் மீண்டும் எண்ணுவது தொடரும். ஒவ்வொரு படிநிலையிலும் விண்கலம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்வதற்கும், பூஜ்யத்தை அடைந்தபின் கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்பதை அறியவும் இறங்குமுகமாக எண்ணும் முறை மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. பூஜ்யம் என்பது ஒரு இறுதி நிலை. மாறாக பூஜ்யம் தொடங்கி வளர்முகமாக எண்ணத் தொடங்கினால் இறுதிநிலை என்று எந்த எண்ணைக் கூற இயலும்; எல்லாப் படிநிலைகளும் சரிபார்க்கப்பட்டனவா என்பதை அறுதியிட்டுக் கூற இயலாமல் குழப்பம்தான் மிஞ்சும்; எனவேதான் இறங்குமுக எண்ணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    5)கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் ஏன் வேகமாக ஓட முடிவதில்லை? 


                 கைகள், கால்கள் ஆகியவை முன்னும், பின்னும் ஒருங்கிணைந்து இயங்குவதால் நம்மால் நடக்கவும் ஓடவும் முடிகிறது. சாதாரணமாக நின்றுகொண்டிருக்கும் போது உடலின் ஈர்ப்பு மையம் (Centre of gravity) நமது காலடியில் விழும்; இதனால் நமது உடல் சமநிலையில் நிற்க முடிகிறது. நடக்கும்போதும், ஓடும்போதும் கால்கள் இயல்பு நிலையில் இருந்து மாற்றமுறுவதால் ஈர்ப்பு மையம் முன்னோக்கிச் செல்லும். இந்நிலையில் நமது கைகள் கட்டப்பட்டிருக்குமானால், உடலின் சமநிலை தடுமாறி கீழே விழ நேரிடும். இயல்பாக நடக்கும்போதோ, ஓடும்போதோ, இந்நிலை ஏற்படாதற்குக் காரணம், நமது கை கால்கள் முன்னும் பின்னும் மாறி மாறி இயங்குவதனால், ஈர்ப்பு மையம் உடலின் அடிப்பகுதியிலேயே நிலைபெற்றிருக்குமாறும், அதனால் உடலின் சமநிலை தடுமாறாதவாறும் பார்த்துக்கொள்ளப் படுகிறது. ஆனால் கைகள் கட்டப்பட்ட நிலையில் நடக்கும்போதும், ஓடும்போதும் மேற்கூறிய சமநிலை பராமரிக்கப்படுவதில்லை. எனவே அந்நிலையில் ஓடுவதோ அல்லது நடப்பதோ மிகவும் கடினமான செயலாகிவிடுகிறது. 



    6)சோப்பு பல நிறங்களில் இருப்பினும், அவற்றின் நுரை மட்டும் வெண்மையாகவே இருப்பது ஏன்? 

     
          சோப்பு நுரை என்பது நுண்ணிய சோப்புக் குமிழ்களின் கூட்டமே. சோப்புக் குமிழ் என்பதோ சிறு அளவு காற்றை உள்ளடக்கி அமைந்திருக்கும் சோப்புக் கரைசலின் மெல்லிய படலம். சோப்புக் கரைசலின் பரப்பு இழுவிசையின் (surface tension) காரணமாக, அதன் படலம் நீண்டு பரவிட முடிகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள நுரையினால் கவரப்படும் பரப்பு, அதே கன அளவுள்ள நீரினால் கவரப்படும் பரப்பைவிட மிகுதி எனலாம். சோப்பு நுரை இவ்வாறு பரவுவதன் காரணமாக அதில் ஏதேனும் சிறு அளவு வண்ணம் இருப்பினும் அது மங்கிப்போகிறது. மேலும் சோப்புப்படலம் ஒளி புகக்கூடியது; சோப்புக்குமிழ்களின் கூட்டமான நுரையை அடையும் ஒளி பல்வேறு திசைகளில் சிதறிப் பரவுவதால் நுரை வெண்மையாக மட்டுமே காட்சியளிக்கிறது. பல்வேறு நிறம் கொண்ட சோப்புகளின் நுரைக்கும் இது பொருந்தும். 



    7)ஓசோன் (ozone), காற்றைவிட கனமானதாக இருப்பினும், அது காற்று வெளிக்கு (atmosphere) மேலே இருப்பது ஏன்? 
            காற்று வெளியில் மேலே செல்லச் செல்ல, ஓசோன் பல்வேறு அளவுகளில் அமைந்துள்ளது. புவிக்கு அருகிலும் கூட மிகக் குறைந்த அளவில் அது உள்ளது. இருப்பினும் காற்று வெளியில் தரையிலிருந்து 25 கி.மீ. முதல் 45 கி.மீ. வரை உயரமுள்ள பகுதியில் ஓசோன் மிக அதிகமாகச் செறிந்திருக்கிறது. இப்பகுதிக்கு ஓசோன் படலம் என்று பெயர். மூன்று உயிர்வளி (oxygen) அணுக்கள் ஒருங்கிணையும் போது ஒரு ஓசோன் மூலக்கூறு உருவாகிறது. சாதாரணமாக உயிவளி அணுக்கள் இரண்டிரண்டாக இணைந்து உயிர்வளி மூலக்கூறுகளாக விளங்கும். காற்று வெளியின் மேற்பகுதியில் உயிர்வளி மூலக்கூறுகள் கதிரவனின் ஆற்றல் மிகுந்த கதிர்வீச்சினால் தாக்குறும் போது அவை பிளவுற்று ஓசோன் மூலக்கூறுகள் உண்டாகும் வாய்ப்பு ஏற்படுகிறது. அடுத்து ஓசோன் படலத்திற்குக் கீழே புவிக்கு அருகிலும் உயிர்வளி மிகுதியாக உள்ளது என்பது உண்மையே. கதிர் வீச்சினால் உயிர்வளி மூலக்கூறுகள் அணுக்களாகப் பிளவுறும் வாய்ப்பும் அதனால் இங்கும் ஓசோன் மூலக்கூறுகள் உருவாகும் நிலைமையும் ஏற்படாதா என ஐயம் எழலாம். கதிரவனின் கதிர்கள் காற்று வெளியில் நீண்ட தூரம் வரவேண்டியிருப்பதால் ஆற்றல் குறைந்து அதனால் உயிர்வளி மூலக்கூறுப் பிளவும் மிகக் குறைந்த அளவிலேயே நடைபெறும். இதனால் ஓசோன் மூலக்கூறுகளும் குறைவாகவே உருவாகின்றன. மேலும் ஓசோன் படலத்திலும் கூட உருவாகும் ஓசோன்கள் அவ்வாறே இருப்பதில்லை. கதிர்வீச்சின் காரணமாக ஓசோன் மூலக்கூறுகளும் அணுக்களாகப் பிளவுற்று உயிர்வளி மூலக்கூறுகளாக மாறுகின்றன. மீண்டும் உயிர்வளி மூலக்கூறுகள் பிளவுற்று ஓசோன் மூலக்கூறுகள் உருவாகின்றன. இவ்வாறு ஓசோன்/உயிர்வளி மூலக்கூறுகள் அணுக்களாக மாறிமாறிப் பிளவுற்று, ஒருங்கிணைவதால் ஓசோன் படலத்தில் ஓசோன் செறிவு ஏறக்குறைய சமமான அளவில் மாற்றமின்றி அமைவதுடன், அது ஓசோன் படலத்திற்குக் கீழே இறங்கிச் செல்வதும் தவிர்க்கப் படுகிறது.

    8)வளி அடுப்பைப் (gas stove) பற்றவைக்கும்போது உருளைகளில் (cylinders) அடைக்கப்பட்டுள்ள நீர்மப் பெட்ரோலிய வளி (liquefied petroleum gas-LPG) எவ்வாறு தீப்பற்றிக்கொள்ளாமல் இருக்கிறது? 
     
            ளி அடுப்பைப் பற்றவைத்தவுடனே, அதிலுள்ள வளிப்பொருள், உலையைச் (burner) சுற்றியுள்ள காற்றுடன் கலப்பதால் உடனே தீப்பிடித்து எரியத் தொடங்குகிறது. தேவையான அளவு காற்று கலக்காவிட்டால் தீப்பிடிப்பது தவிர்க்கப்பட்டு எரியும் நிகழ்ச்சியும் நடைபெறாது. உருளையின் வாய்ப்பகுதி மிகவும் குறுகி இருப்பதாலும், உருளையையும் அடுப்பையும் இணைக்கும் குழாயினுள் காற்று நுழையும் வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதாலும் நீர்மப் பெட்ரோலிய வளி தீப் பிடித்துக்கொள்வது பெருமளவு தவிர்க்கப்பட்டு விடுகிறது. அடுத்து உருளையின் வாய்ப்பகுதியில் உள்ள சீரியக்கி (regulator) நீர்மப் பெட்ரோலிய வளியை வெளியே செல்ல அனுமதிக்குமே ஒழிய வெளியே உள்ள காற்றை உருளையின் உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. இதனால்தான் உருளையில் அடைக்கப்பட்டுள்ள வளி தீப்பிடிக்காமல் பாதுகாப்பாக இருக்கமுடிகிறது. மேலும் வளி தீப்பிடிப்பதற்கு அதன் சில மூலக்கூறுகளின் வெப்ப நிலையை மிகுதிப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காகவே தீக்குச்சி அல்லது தீக்கொளுவியினால் (lighter) தீப்பொறிகளை உண்டாக்கி வளியை விரைந்து தீப்பிடிக்கச் செய்யவேண்டியுள்ளது. 

    மூலிகைகளும், அவை தீர்க்கும் நோய்களும்!

    By: Unknown On: 17:45
  • Share The Gag

  • முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம்.ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாம். சில மூலிகைகளும், அவை தீர்க்கும் நோய்களும் பற்றி கீழே காண்போம்.

    அருகம்புல் :
    மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்
    ஓரிதழ் தாமரை : வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்
    ஆடா தோடை : இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு
    தூதுவளை : சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு
    நில ஆவாரை : மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்
    நில வேம்பு : சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்
    முடக்கத்தான் : மூட்டுப்பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்
    வல்லாரை : ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை, மலச்சிக்கல்
    அஸ்வகந்தி : கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்
    வில்வம் : பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்
    நெல்லிக்காய் : பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்
    நாவல் கொட்டை : சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்
    சுக்கு : வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்
    திப்பிலி : சளி, காசம், பீனிசம், வாயு
    அதிமதுரம் : இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்
    சித்தரத்தை : இருமல், சனி, பீனிசம், கோழைக்கட்டு
    ஜாதிக்காய் : விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்
    வெந்தயம் : பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்
    வசம்பு : வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்
    ஆவாரம்பூ : அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்
    செம்பரத்தம்பூ : தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்
    ரோஜாப்பூ : இருதயம், ஈரல், நுரையீரல், கிட்னி நோய்கள் நீங்கும்
    முல்தானி மிட்டி : முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்)
    திருபலாசூரணம் : வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்
    திரி கடுகு சூரணம் : பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்
    வசம்பு : வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்
    கரிசலாங்கண்ணி : மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்
    கண்டங்கத்திரி : சளி, இருமல், ஆஸ்துமா, ஈசிலோபீலியா, பீனிசம் கருந்துளசி : இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்
    கறிவேப்பிலை : பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்
    காசினி கீரை : ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்
    கீழாநெல்லி : மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்

    கைபேசி நாகரீகத்தை நெறிப்படுத்தக் குறள்...?

    By: Unknown On: 09:02
  • Share The Gag

  • குறள் :

    1:

    நோக்கக் குழையா நுண்ணலைக் கைபேசி
    தாக்காதே தகவல் தரும்.

    பொருளுரை: நோக்கினாலும் குழையாத நுண்ணலைக் கைபேசி, நுண்ணலைகள் தாக்காதே தகவலைத் தரும்.


    2:

    காணாது தொலையும் கைபேசி; கண்டபின்னும்
    நாணாதே மெல்ல நகும்.

    பொருளுரை: எங்கோ தொலைத்து விட்ட கைபேசி கிட்டினாலும் அதற்கென நாணாதே ஒலிக்கும்.

    3:

    இனிதே மொழி இயம்பினும் நெடு அண்மை
    மெலிதே கொல்லும் செவி.
    பொருளுரை: எத்தனை தான் இனிய மொழியினைக் கொடுப்பினும் கைபேசியை காதிற்கு அண்மையில் நெடு நேரம் கொண்டு கேட்டால், நாளடைவில் செவி கெடாமல் என்ன செய்யும்?

    4:

    அன்புசால் மொழியே ஆயினும்; ஓட்டலில்
    இன்மை அது கைபேசி உரை.

    பொருளுரை: அன்பொடு பேசும் மொழிதானே என்று ஆகினும் வண்டி ஓட்டுகையில் கைபேசி உரையாடுதலால் நன்மை என்று ஏதுமில்லை; அனைவருக்கும் இன்மையைத் தான், கேட்டைத் தான் விளைவிக்கும்.

    5:

    தெவிட்டும் ஒலி தீதே கைபேசி உரை
    செவிட்டுக்கு வழி செயின்.

    பொருளுரை: கைபேசியால் வரும் அதீத ஒலி காதைச் செவிடாக்கும் வகையில்; தெவிட்டும் அளவில் கொள்ளுதல் காதுக்குச் செவிட்டை மாத்திரம் அல்ல உடல் நலத்தையும், உள நலத்தையும் பாதித்து விடும். அளவிற்கு மீறிய அமிர்தமும் நஞ்சுதானே.

    6:

    வாட்டும் வருத்தம் வகை அறியான்; நலம் தருமோ
    காட்டும் கைபேசிச் சினம்?

    பொருளுரை: வாட்டுகின்ற உரையின் வருத்தத்தின் வகையை, காரணத்தை அறியாதவன், கைபேசியின் மேல் காட்டும் சினம்தான் நலம் தருமோ? கைபேசியும், அவன் பாலுள்ள நலமும் தான் கெடும்.

    7:

    இறை இல்லத்து விசை நிறுத்தாக் கைபேசி
    நிறை அல்ல; வசை மிகுக்கும் குறை.

    பொருளுரை: இறை இல்லமாகிய தேவாலத்தில்; கோயிலில் நிறுத்தி வைக்கப் படாத கைபேசியால் ஒருவருக்கு எந்த நிறையும் வரப்போவதில்லை; உண்மையில் அஃது பிறரின் வசையைத்தான் மிகுந்து கொடுக்கும் மிகக் குறைபாடான செயல் ஆகும்.

    8:

    சபையிடைச் சலனம் சதுராடும் கைபேசி
    மிகை அல்ல; மேன்மைக்கு இழுக்கு.

    பொருளுரை: பலர் கூடியிருக்கும் முக்கியச் சபையினில் சலனப்படுத்திச் சதுராடும் கைபேசி குழுமியவரின் முன்னே மேன்மையல்ல; உண்மையில் அஃது ஒருவரின் மேன்மைக்கு இழுக்கு என்றால் அஃது மிகையல்ல. அஃது குழுமிய நேரத்தில் பிறருக்குத் தொந்தரவாக இருப்பதுடன் குழுமிய காரணத்திற்கும் இடைஞ்சலாக அமைந்துவிடும்.

    9:

    சங்கத்தே சமனித்துச் சாற்றாதே; கைபேசியுள்
    பங்கமிட்டே இரைவதா பண்பு?

    பொருளுரை: கைபேசியில் அமைதியாகப் பேசுதலே சமூகத்தில் உயரிய சிறந்த பண்பு. இரைந்து கத்துதல் அல்ல என்பதை உணர்வீர்களாக. அவ்வாறு காட்டுக் கத்தாய் கத்திப் பேசுவதா நாகரீகம்?

    10:

    சந்தையின் கூவலைக் கைபேசிப் பரப்பல்
    நிந்தையை நல்கும் அல்ல பிற.

    பொருளுரை: சந்தைப் படுத்தும் கூப்பாட்டை; விளம்பரத்தை, அறைகூவலை கைபேசியால் அனைவருக்கும் கூப்பிட்டுப் பரப்புதல் அவர்களின் நிந்தையையே நல்கும்; வேறல்ல. பயனாளிகளுக்குக் கைபேசி வழி சந்தைப் படுத்துதல் உண்மையில் எரிச்சலூட்டும் அணுகுமுறை.

    ஒரு நாளில் 7 முதல் 10 மணி நேரம் தூங்கினால்...

    By: Unknown On: 09:02
  • Share The Gag

  • ஓர் இரவு முழுவதும் உங்களால் தூங்காமல் இருக்க முடியுமா? யாராக இருந்தாலும் சான்சே இல்லை என்ற பதில்தான் வரும். ஆனால், உலகில் 7  முதல் 18 சதவீதம் பேர் தூங்க முடியாமல் தவிப்பதாகவும் இவர்களில் 3 முதல் 13 சதவீதம் பேர் தூக்கம் மற்றும் மன அமைதிக்கான  மாத்திரைகளை உட்கொண்டால்தான் உறங்க முடிகிறது என்றும் அறிவிக்கிறது மருத்துவ ஆய்வு.

    ஒரு நாளில் 7 முதல் 10 மணி நேரம் தூங்கினால், உடல் நல்ல நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். அது குறைந்தாலோ, கூடினாலோ ஏதோ ஒரு  நோய்க்கான அறிகுறியாக இது இருக்கலாம் என்பதை உணர்ந்து உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது. குழந்தைகள் அதிகம் தூங்குவதையோ,  முதியவர்கள் மிகக்குறைவாக தூங்குவதையோ பிரச்னையாக கருதத் தேவையில்லை.

    குழந்தைகள் 16 மணி நேரம் வரை கூட உறங்குவார்கள். முதியவர்கள் 4 மணி நேரம் ஆழ்ந்து தூங்கினாலே, அது அவர்கள் வயதுக்கு நல்ல  தூக்கம்தான்.

    அமிதாப்க்கு அடிக்கடி என்ன ஆகுது...?

    By: Unknown On: 07:49
  • Share The Gag
  • பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, இர்பான்கான் நடிப்பில் உருவாகி வரும் 'பிக்கு' (Piku)என்ற திரைப்படத்தை சூஜித் சிர்கார் என்பவர் இயக்கி வருகிறார்.

    ரோனி லஹரி தயாரிக்கும் இந்த படத்தில் தந்தை - மகள் இடையே உள்ள அற்புதமான உறவின் பெருமையை குறிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. தந்தையாக அமிதாப்பும், மகளாக தீபிகாவும் நடித்து வருகின்றனர்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று மும்பையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடக்கவுள்ள நிலையில் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது. அமிதாப்பச்சன் அவர்கள் திடீரென வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

    71 வயதான அமிதாப் பச்சனுக்கு இதுவரை காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டதில்லை என்றும் அவருக்கு உயர்வகை மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள அமிதாப் அவர்கள் விரைவில் குணமாக நாமும் பிரார்த்திக்கின்றோம்.

    உருளைக்கிழங்கு சாப்பிட மட்டுமல்ல, சுத்தப்படுத்தவும் யூஸ் பண்ணலாமாம்!!!

    By: Unknown On: 07:04
  • Share The Gag
  • உணவுப்பொருட்களில் ஒன்றான உருளைக்கிழங்கை சாப்பிட மட்டும் தான் பயன்படுத்தியிருப்போம். சிலர் உருளைக்கிழங்கு இல்லாமல் சாப்பிடவே மாட்டார்கள். ஏனெனில் உருளைக்கிழங்கிற்கு என்று நிறைய பிரியர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் அதன் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். மேலும் அந்த உருளைக்கிழங்கை நாம் குழம்பு, பொரியல், ஸ்நாக்ஸ் என்று பல வகைகளில் சமைத்து சாப்பிட்டிருப்போம். ஆனால் அத்தகைய உருளைக்கிழங்கு சாப்பிடுவதற்கு மட்டுமல்லாமல், வீட்டை சுத்தப்படுத்தவும் பயன்படுகிறது. அது எப்படியென்று பார்ப்போமா!!!

    * இரும்பு பொருட்கள் மற்றும் கத்திகள் போன்றவை விரைவில் துருப்பிடித்துவிடும். துருபிடிப்பதற்கு பெரும் காரணம், மெட்டல் பாத்திரங்களை நீரில் அலசி விட்டு, அதில் உள்ள நீர் சரியாக வெளியேறாமல் இருப்பதே ஆகும். ஆகவே அவ்வாறு துருபிடிக்கும் போது, அந்த பாத்திரத்தை உருளைக்கிழங்கு துண்டுகளை வைத்து தேய்த்தால், துரு நீங்கிவிடும். ஏனெனில் உருளைக்கிழங்கில் ஆக்ஸாலிக் ஆசிட் இருக்கிறது. அது துருவை எளிதில் நீக்கிவிடும். இல்லையெனில் உருளைக்கிழங்கு துண்டை சோப்பு நீரில் நனைத்தோ அல்லது பேக்கிங் சோடாவைத் தொட்டோ, துரு உள்ள இடத்தில் தேய்த்தால் எளிதில் போய்விடும்.

    * டம்ளர்களில் அழுக்குகள் எளிதில் வந்துவிடும். அவற்றை நீக்க நிறைய முறைகளை செய்திருப்போம். ஆனால் எதுவுமே அதில் உள்ள அழுக்குகளை நீக்கியிருக்காது. அத்தகைய அழுக்குகளை எளிதில் நீக்க உருளைக்கிழங்கு போதும். அதற்கு உருளைக்கிழங்கின் ஒரு துண்டை எடுத்து, அழுக்கு உள்ள இடத்தில் தேய்த்து, பின் சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். இதனால் அழுக்குகள் சீக்கிரம் நீங்கிவிடும்.

    * வீட்டில் கண்ணாடி பொருட்கள் உடைந்துவிட்டால், சிறிய துண்டுகளை எளிதில் எடுக்க முடியாது. அவ்வாறு இல்லை என்று நினைத்து, சாராதணமாக விட்டுவிட்டால், சிறிது நேரம் கழித்து கால்களில் அந்த கண்ணாடித்துண்டுகள் குத், இரத்தம் வரும். அவ்வாறு கண்ணாடிப் பொருட்கள் குத்திவிட்டால், சிலசமயங்களில் அது செப்டிக் ஆகிவிடும். ஆகவே அந்த நிலை ஏற்படாமல் இருக்க, கண்ணாடிப் பொருட்கள் உடைந்து இடத்தில் உருளைக்கிழங்கின் துண்டுகளை வைத்து துடைக்க வேண்டும். இதனால் அங்கு கண்ணாடி துகள்கள் இருந்தால், அவை உருளைக்கிழங்கில் வந்துவிடும்.

    * வீட்டில் பூ ஜாடி வைத்திருந்தால், அதில் பூக்களை வைக்கும் போது பூக்கள் நிற்காவிட்டால், அப்போது அந்த ஜாடியின் அடியில் உருளைக்கிழகை பாதியாக நறுக்கி அதில் பூக்களின் தண்டுகளை வைத்துவிட்டால், பூக்கள் கீழே விழாமல் அழகாக இருக்கும்.

    * வெள்ளிப் பொருட்கள் வீட்டில் இருந்தால், அவை சிறிது நாட்களில் நிறம் மாறுவது போல் இருக்கும். அப்போது அதில் உள்ள கறைகளை நீக்க, டூத் பேஸ்ட் அல்லது எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா வைத்து தான் கழுவுவோம். இப்போது உருளைக்கிழங்கை வைத்து தேய்த்தாலும், கறைகள் நீங்கி, பளிச்சென்று பொலிவோடு காணப்படும். வேண்டுமென்றால் உருளைக்கிழங்கை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரில் வெள்ளிப் பொருட்களை ஊற வைத்தும் கழுவலாம். இதனால் வெள்ளிப் பொருட்கள் அழகாக காணப்படும்.

    ஆகவே உங்கள் வீட்டில் உள்ள பொருட்களில் ஏதேனும் அழுக்கு இருந்தால், மேற்கூறியவற்றையெல்லாம் நினைவில் கொண்டு உருளைக்கிழங்கை வைத்து சுத்தப்படுத்துங்கள்.