Tuesday, 2 September 2014

Tagged Under: ,

அமிதாப்க்கு அடிக்கடி என்ன ஆகுது...?

By: Unknown On: 07:49
  • Share The Gag
  • பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, இர்பான்கான் நடிப்பில் உருவாகி வரும் 'பிக்கு' (Piku)என்ற திரைப்படத்தை சூஜித் சிர்கார் என்பவர் இயக்கி வருகிறார்.

    ரோனி லஹரி தயாரிக்கும் இந்த படத்தில் தந்தை - மகள் இடையே உள்ள அற்புதமான உறவின் பெருமையை குறிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. தந்தையாக அமிதாப்பும், மகளாக தீபிகாவும் நடித்து வருகின்றனர்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று மும்பையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடக்கவுள்ள நிலையில் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது. அமிதாப்பச்சன் அவர்கள் திடீரென வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

    71 வயதான அமிதாப் பச்சனுக்கு இதுவரை காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டதில்லை என்றும் அவருக்கு உயர்வகை மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள அமிதாப் அவர்கள் விரைவில் குணமாக நாமும் பிரார்த்திக்கின்றோம்.

    0 comments:

    Post a Comment