Tuesday, 2 September 2014

Tagged Under: , ,

ஒரு நாளில் 7 முதல் 10 மணி நேரம் தூங்கினால்...

By: Unknown On: 09:02
  • Share The Gag

  • ஓர் இரவு முழுவதும் உங்களால் தூங்காமல் இருக்க முடியுமா? யாராக இருந்தாலும் சான்சே இல்லை என்ற பதில்தான் வரும். ஆனால், உலகில் 7  முதல் 18 சதவீதம் பேர் தூங்க முடியாமல் தவிப்பதாகவும் இவர்களில் 3 முதல் 13 சதவீதம் பேர் தூக்கம் மற்றும் மன அமைதிக்கான  மாத்திரைகளை உட்கொண்டால்தான் உறங்க முடிகிறது என்றும் அறிவிக்கிறது மருத்துவ ஆய்வு.

    ஒரு நாளில் 7 முதல் 10 மணி நேரம் தூங்கினால், உடல் நல்ல நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். அது குறைந்தாலோ, கூடினாலோ ஏதோ ஒரு  நோய்க்கான அறிகுறியாக இது இருக்கலாம் என்பதை உணர்ந்து உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது. குழந்தைகள் அதிகம் தூங்குவதையோ,  முதியவர்கள் மிகக்குறைவாக தூங்குவதையோ பிரச்னையாக கருதத் தேவையில்லை.

    குழந்தைகள் 16 மணி நேரம் வரை கூட உறங்குவார்கள். முதியவர்கள் 4 மணி நேரம் ஆழ்ந்து தூங்கினாலே, அது அவர்கள் வயதுக்கு நல்ல  தூக்கம்தான்.

    0 comments:

    Post a Comment